Saturday, November 30, 2013
இதென்ன இப்படிக் கனக்கிறது!
எண்ணங்களுக்கு எடையுள்ளதா
எனும் கேள்விக்கு விடையுள்ளதா?
கண்டெத்திய பாவங்களின்
கணக்கொரு கனம் - நாவால்
சொல்லிச் சேர்த்த பாவச்
சுமையொரு கனம்
செயல்களால் சேர்ந்ததும் - செய்ய
முயல்தலால் சேர்த்ததும்
நனவினில் சேர்த்ததும் - கண்ட
கனவினில் சேர்ந்ததும்
யார் வீரர் !
சிறுநீர் கழிக்க போனார்...!!!!!! அங்கு துப்புரவு செய்யும் தொழிலாளி சொன்னார் ......அய்யா இங்கே வைத்து விட்டு செல்லாதீர்கள்;;;; யாரவது திருடிசென்று விடுவார்கள் .......
அதற்க்கு அந்த வீரர் சொன்னார் நான் யார் தெரியுமா ...!!!!!
என்னிடம் எவனும் திருடிவிடுவானா ...!!!!!!
இப்ப பார் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து
தான் ஒரு மிகவும் பலம் பொருந்திய பலசாலி என்பதை குறிக்கும் வண்ணம்
அந்த கோட்டின் மேல் இப்படி எழுதி வைத்து விட்டு போனார்
நான் ஒரு பாக்ஸின் வீரர்
"""""""""""""""""""""""""""""""""""
Friday, November 29, 2013
அந்த பெண் ஓடிப் போயிட்டாள் !
அந்த பெண் ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் யாரோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் அவளுக்கு தெரிந்தவனோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண்ணுக்கு அவனை எப்படி தெரியும் !
அதுதான் தெரியலே !
அந்த பெண் அவனை ஏன் விரும்பினாள்?
அதுவும் தெரியலே !
அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
திருமணம் ஆகி விட்டது
திருமணம் ஆகியுமா ஓடிப்போனால் !
ஆமாம் .
அவளது கணவன் எங்கே ?
கணவன் பல ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கார் .
கணவன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறார் .
கடைசியா எப்போ வந்தார்?
கடைசியா ஊருக்கு வந்து ஏழு அல்லது எட்டு வருடம் ஆகி இருக்கும் .
அப்படியா !
ஓடிப்போனது குற்றம்தான் .
எது சிறப்பு!
மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே
நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.
சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!
by இப்னு ஹம்துன்
நன்றி: http://www.ezuthovian.blogspot.in/
தேடியதில் கிடைத்த முத்து
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
காற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
கூகுளின் யுடியூபில் பாடல் வரிகள் காட்ட
யுடியூபில் பாடல் வரிகள் காட்ட
கூகுளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ பாடல்கள் அதிக
அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம்.
ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

இது ஒரு மந்திரமா !
நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!
ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது
விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்

எல்லைகள் கடந்த மனித நேயம்
இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !
மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் ! ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !
Wednesday, November 27, 2013
ஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்...
நாங்க ஒரு டீ குடிச்சா கூட அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒரு ஆண் தான் அந்த டீக்கு காசு குடுக்கணும்... எல்லா கணவனையும் போல எங்க கணவரும் எங்களுக்கு டிரைவர் வேலை பார்க்கணும்.. ஆனா பதிலுக்கு நாங்க ஒருவேளை சாப்பாடு பண்ணித் தரணும்னு அவர் எதிரபார்த்தா, செம டென்ஷன் ஆயிடுவோம்... பெண்ணியவாதிகள் சாம்பார் வைக்கிறதா? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? குழந்தைப் பேறு என்கிற இயல்பான இயற்கை நிகழ்வுக்கான ஆசை மனதில் இருக்கும், ஆனால் அது அபத்தம் என்கிற கருத்து மண்டைக்குள்ள ஏறி படுத்துற பாடு இருக்கே? ஐயையோ...
அவன் நம்மளை டாமினேட் பண்ண விடக்கூடாது.. ஸோ, நாம அவனை டாமினேட் பண்ணிடணும்... ஓ மை காட்.. அரைகுறையாக பெண்ணியம், பெரியார் எல்லாம் படித்து விட்டு நானும் இப்படி கொஞ்ச நாட்கள் திரிந்திருக்கிறேன்.. பட் இப்ப திருந்திட்டேன்.. நிறைய பேர் அப்படியே இருக்காங்க... டிங்... டிங்.. டிங்
பொழுதுகளின் எல்லையற்ற நீட்சிகளில் ...
பொழுதுகளின்
எல்லையற்ற நீட்சிகளில்
நீந்திச் செல்லும்
எண்ணற்ற காட்சிகளிலும்
வந்து வந்து
கலைந்து செல்கிறது
அது !
குதூகலிக்கும் தருணங்களிலும்
கூடிக்கூடி குலாவி
கும்மாளமிடும்
குடும்ப சங்கமங்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அது !
Tuesday, November 26, 2013
முன்னாள் முதலாளியும் முதல் முதலாளியும்.....
விதவிதமான மனிதர்களை கையாளவேண்டியுள்ள சிரமமான வேலை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் வேலை.அதனால் அவர்களுக்கு பொறுமை மிக முக்கியம்,
நானும் என் வாழ்க்கையை ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் உத்யோகத்தில்தான் ஆரம்பித்தேன்,மாதம் 300 ரூபாய் சம்பளம்.
ஆனால் நான் பணிபுரிந்த கடையில் நான் சாப்பிடவோ அல்லது வேறு வேலையாகவோ வெளியில் சென்றிருந்தால் வாடிக்கையாளர்கள் மன்சூர்தான் அட்டண்ட் பண்ணனும் என்று காத்திருந்து என்னிடமிருந்து வாங்கிச்செல்வர்.
"நீ எந்த வேலை செய்தாலும் உன்னைவிட அந்த வேலையை யாராலும் சிறப்பாகச் செய்யமுடியாத அளவு உன் முத்திரை அதில் இருக்கவேண்டும்" என்கிற என் முதல் முதலாளியின் அறிவுரை என்னை இன்னும் வழிநடத்துகிறது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகை அனுஷ்கா பேசும்போது,
"சினிமா காட்சிகளால்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி, எய்ட்ஸ் நோயாளிகள் பெருகுகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எச்.ஐ.வி. பாதிப்பு என்பது அவரவர் நடத்தையைப் பொறுத்தது. சினிமாவில் எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பான கதைகள் வராததற்கு எனக்கு காரணம் தெரியாது. திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை" என்று நடிகை அனுஷ்கா தெரிவித்தார்.

Monday, November 25, 2013
சிறந்த எழுதுகோல் !
ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை எழுத வேண்டும்
ஒவ்வொரு நாளும் படித்த பக்கங்களை எழுத வேண்டும்
நிகழ்வுகள் நடக்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்
புத்தகங்கள் படிக்க நிறைய புத்தகங்கள் பார்க்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் படித்தவைகளையும், பார்த்தவைகளையும் ,நிகழ்வுகளையும் எழுத முடியாது .
காதலித்தால் , நேசித்தால் , விரும்பினால் , மனம் ஒன்றினால் நீங்கள் அறியாமலேயே உங்கள் மூளை அதை சேகரித்து எழுதி வைத்து விடும் . தேவைப்படும்போது தானே தெரியப்படுத்தும் .
மூளையை விட சிறந்த எழுதுகோல் எதுவுமில்லை!
3D விகடன்
அந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.
உலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழிலை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.

அ" அதி காலையில போன கரண்டு
அ" அதி காலையில போன கரண்டு
ஆ" ஆறு மணிக்கு தான் சொல்லுராங்கோ வரும்ண்டு
இ" இல்லன்னா ஆகலாம் கொஞ்சம் கூட மணி
ஈ " ஈ பிக்கு மின்சாரத்தை துண்டிப்பதுதான் இப்போ பணி
உ" உச்ச நீதி மன்றம் வரை போனோம்
ஊ " ஊருக்குள இன்னும் கரண்ட காணோம்
எ "என்னத்த கத்தினாலும் கரண்டு விட போறதில்ல
ஏ"ஏழை துன்பம் ஏட்டில் ஏற போவது இல்ல

Sunday, November 24, 2013
வாழ்கை என்னும் பாடம்
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை

டேட்டிங் பற்றி ஒரு நீயா நானா - தீதும் நன்றும்
தீதும் நன்றும்
டேட்டிங் பற்றி ஒரு நீயா நானா வகை நிகழ்ச்சி டொராண்டோவில் நிகழ்ந்தது. நானும் கலந்துகொண்டேன். டேட்டிங் என்பதை எப்படியேனும் அங்கே வரையறுக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே நான் இருந்தேன். அது வரையறுக்கப்பட்டுவிட்டால், அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம் ஆகிவிடுமல்லவா? நான் டேட்டிங்கை ஆதரிப்பவனும் அல்ல வெறுப்பவனும் அல்ல. தேவை கருதித்தான் எல்லாம். ஒவ்வொருவரின் நோக்கம் கருதிதான் அதன் செயல்பாடு. துரதிர்ஷ்டவசமாக அதன் நோக்கம் பாழ்பட்டே கிடக்கிறது என்றுதான் நான் ஐயப்படுகிறேன்.
அன்புடன் புகாரி

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
ஓய்விலாச் சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!
'கவியன்பன்' கலாம்
கவியன்பன் கலாமின் கவிதை
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
ஓய்விலாச் சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!
'கவியன்பன்' கலாம்
கவியன்பன் கலாமின் கவிதை
Saturday, November 23, 2013
கருவுறுதல் சக்தியை தரவல்ல சில உணவுகள் மற்றும் சில ஆரோக்கியமான பழக்கங்கள்
பெற்றோர் ஆவது தாய்மை அடைவது மிகவும் மகிழ்வைத் தரக் கூடியது.
கருவுறுதல் சக்தியை தரவல்ல சில ஊட்ட சக்தி தரும் உணவுகள் உட்கொள்வதால் கருவுறுதலுக்கு வாய்ப்பு அதிகமாகின்றது . கொழுப்பு சத்துகள் அடங்கிய உணவு பொருகளை குறைக்க வேண்டும் அதே நேரத்தில் தேவையான உணவு பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஆல்கஹால்( மது )சிகரெட், கபைன் கலந்த பானங்களையும் நீக்கி விட வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில நல்ல பழக்கவழக்கங்கள் கருவுறுதல் சக்தியை தரும் . இது இரு பாலரும் கடைபிடிக்க வேண்டும். சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சினை ஏற்படும். சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இருக்காது. அதனால் அவர்களால் உறவில் சரியாக ஈடுபட முடியாது.

’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா?’’
ஃபோட்டோ லேமினேட் செய்வதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன்... ஒரு பெண்மணி வேகமாக உள்ளே வந்தார்... ‘’நல்ல வேளையா இங்க ஸ்டுடியோ ஆரம்பிச்சேள்... ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவும், மாவு மில்லும் தான் இந்த ஏரியாவில இல்லாம இருந்தது... நீங்க அப்படியே ஒரு மாவுமில்லும் பக்கத்துல போட்டுருங்கோளேன்’’.. ஸ்டுடியோகாரர் திருதிருவென முழித்தார்...
’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா?’’
‘’நான் என்னிக்கு ஃபோட்டோ எடுத்தேன்.. சும்மா சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.. சொன்னதை யோசிங்கோ’’ என சொல்லி விட்டு வேகமாக போய் விட்டார்... அந்தப் பெண் வந்ததையும், அந்த மாடுலேஷனையும் நினைத்து இப்போதுவரை சிரித்துக் கொண்டிருக்கிறேன்..

Friday, November 22, 2013
அம்மா இந்த உலகம் சிறியது உன் பாசம் மட்டுமே பெரியது
அம்மா
அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது
என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை
உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது
அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது
என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை
உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது
‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி
பார் புகழும் பெண் கணித மேதை “மனித கணினி” திருமதி.சகுந்தலா தேவி(kanitha methai sagunthala) பெங்களூரில் பிறந்தவர்.சாதாரண குடும்பத்தில் 04-11-1939 பிறந்தவர்
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.
1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி.
தன் திறமையை உலகுகலளித்த சகுந்தலா தேவி அனைவருக்கும் ஏற்ற வகையில் படித்து பயன் பெற கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

ஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.
ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது .
ஒன்றிலிருந்து ஒன்று உருவாகுவது உயர்வானதாகவும் இருக்கலாம் .
சுழிக்கு (பூஜ்யம் 0) மதிப்பு இருப்பதனால்தான் சுழியை கண்டு பிடித்தார்கள். ஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.
எதனையும் ஒதுக்க வேண்டாம். ஆய்வு ,சேர்ப்பு ,மெருகு தர மதிப்பு தானே உயரும்
பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள்
அல்ஜிப்ரா என்ற கணித வழக்கு அராபியர்களால் உருவாக்கப் பட்டதாக சொல்வதுண்டு .
அரேபிய புகழ்பெற்ற கணித மேதை அல்-குவரிழ்மி (790 கி.பி. - 850 AD) இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து
"ஹிஸாப் -அல் ஜாபர், வ -அல்முகாபிலா " (“Hisab-al-jabr-wa-al-muqabilah”)என்ற .பிரபலமான புத்தகம் எழுத இந்திய எண் முறை இயற்கணிதம் பிரபலமானது.

மின்சாரம் திடீரென்று நின்றதால் விரும்பியதை சேர்த்து வைக்க முடிவதில்லை
ஓரிடத்தில் அமர்ந்து உலகமெல்லாம் அலைகிறேன்
ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியவில்லை
அதைப் பார்க்க அங்கே ஓட
இதைப் பார்க்க இங்கே வர
வேண்டியது எங்கும் நிரம்பி கிடைகின்றது
வேண்டியதை இங்கு நிரப்பி வர மனம் நாடுகிறது
ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதற்குள்
அரசாட்சி செய்வோர் அடைய விடுவதில்லை
தேடியதில் கிடைத்த முத்துக்கள் சேர்பதற்குள்
தேடியது கிடைத்த முத்துக்கள் இருள் கவ்வியதால் கை நழுவி போயின
சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை
மின்சாரம் மட்டும் திடீர் திடீரென்று நின்று போகின்றது

வண்ணத்துப் பூச்சியாக வெளிவந்து உலவிக்கொண்டிருக்கிறேன்.
புதுக்கல்லுரி வைரவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது அறிந்தேன், மனம் மகிழ்ந்தேன்.
சிறந்த மாணவர்களால் அவர்கள் படித்தக் கல்லூரிக்கு பெருமை.
எனக்கோ அந்தக் கல்லூரியில் படித்தோம் என்ற சந்தோசம்.
சென்னை புதுக்கல்லுரி - எனக்கு இந்தக் கல்லூரியில் சேருவதற்கு முன் சென்னை என் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது விமான நிலையம் வரை வந்துப்போகும் அளவுக்கு மட்டுமே பரிச்சம்.
வயல்வெளிகளை மட்டுமே பார்த்துப் பழகியவனுக்கு கோளரங்கம் சென்று
ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி வியப்பு வரும் அப்படித்தான் இருந்தன என் ஆரம்ப நாட்கள்.

Thursday, November 21, 2013
மின்சாரம் – அப்படீன்னா என்னங்க !?
மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?
இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

Wednesday, November 20, 2013
விலகாமல் விலகி...!
மனதினாழ விடத்துச்சென்று
அன்பு சொரிகின்றாய்,
என்நாசித்துளை வழியே
யுன்வாசம் பொழிகிறாய்,
கண்ணுறங்கு வேளையிலுமென்
இதல்களில் புன்னகைத்தெளிக்கிறாய்,
பெண்களுக்குள் பிரச்சனையா!
பெண்களுக்குள் பிரச்சனையா!
முடிவுக்கு வராது.
பெண்களால் பிரச்சனையா!
முடிவுக்கு வர முயற்சி பண்ணலாம் .
பெண்களுக்கு பிரச்சனை வந்த காரணம் அறிய
பெண்ணின் தாய் முயல வேண்டும்
பெண்ணின் தாய்க்கே பெண்ணால்(மகளால்) பிரச்சனை வந்தால் !
பெண்ணின் தாய்க்கு மருத்துவம் பார்க்கும் நிலை வரும்.

தன் முயற்சி முறை தாமதிக்கத் தான் செய்யும்
சிறகடித்து பறந்து இரையை சேர்த்து
குஞ்சின் வாயில் ஊட்டும் பறவைபோல்
கண்மணி மகனை பேணி வளர்த்தேன்
வளர்ந்த குஞ்சு தானே தன் இரையைத் தேடி பறந்தது
வளர்த்த மகன் தன் இரைத் தேட போகாமல்
வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறான் என் ஆதரவு நாடி
பெற்ற பிள்ளையையும் பேணி வளர்க்க
பெற்ற பிள்ளையின் பிள்ளையையும் வளர்க்க
உறவு முறை இறுகி நிற்கும் நம் நாட்டில்
தன் முயற்சி முறை தாமதிக்கத் தான் செய்யும்
இஸ்மாயிலை, இஸ்மாயில் நாஜி ஆக்கிய நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா
என் மீது அன்புக்கொண்டவர்கள் 'நாஜி' என்றால் என்ன நீங்கள் வாங்கிய பட்டமா! என்று கேட்கின்றனர்.
'நாஜி' என்பது என்னுடைய புனைப் பெயர்.
என்னுடைய தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார்(எங்கள் ஊர் மக்கள் அவ்வாறு தான் அழைப்பார்கள்).அவர் ஒரு கவிஞர்.ஆனந்த விகடன் என்ற இதழ் வெளியாவதற்கு முன்னால் ஆனந்த போதினி என்ற இதழ் வந்துக் கொண்டிருந்தது. அதிலே தன்னுடைய 17ஆவது வயதிலிருந்தே கவிதை எழுதி வந்தார்.எனவே, எனக்கும் சிறு வயதிலிருந்தே கவிதையின் மீது ஆர்வம் இருந்தது.குறிப்பாக, கண்ணதாசன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
1960ஆம் ஆண்டு ஈ.வே.கி.சம்பத் தி.மு.க.வை விட்டு வெளியேறிய பொழுது கவிஞர் கண்ணதாசனும் அவருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சி என்று ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பில் என்னுடைய உறவினர் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த கட்சியின் மாநாடு நடக்கும் இடமெல்லாம் என்னை அவர் அழைத்து செல்வார்.கண்ணதாசன் இருக்கும் அறைக்கு சென்று அவரது அருகில் நின்று அவரது நகைச்சுவை மிக்க பேச்சை நான் ரசித்துக் கொண்டிருப்பேன்.அப்பொழுது எனக்கு வயது 13.கோவையில் நடைப் பெற்ற மாநாட்டின் போது மதியம் 3 மணிக்கு கவிஞரின் தலைமையில் கவியரங்கம்.மதிய உணவிற்கு பின்னால் கவிஞர் மாநாட்டு பந்தலின் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த சம்பத் அவர்கள் என்ன கவிஞரே! நேரம் ஆகிவிட்டதே. கவியரங்கத்திற்கு தயார் ஆகவில்லையா? என்று கேட்டார்.இதோ தயார் ஆகிவிட்டேன் என்று மேடைக்கு சென்றார்.அங்கே அமர்ந்துக் கொண்டு பேப்பரில் கவிதை எழுத ஆரம்பித்தார்.அந்தக் கவிதையின் முதல் வரி “கன்னியரின் இதழ் இரண்டை கோவை என்பார்” என தொடங்கி கோவை மாவட்டத்தின் மக்களை கவிதையிலே புகழ்ந்து தள்ளினார். அப்பொழுதிலிருந்து எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்று ஆசை வந்தது.

அழகு..!
பார் அழகு
பார்க்கும் விழியழகு
இருளழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு
மலையழகு - ஆங்கே
பொழியும் மழையழகு
சிலையழகு - சிற்பியின்
சீர்மிகு கலையழகு
ஆணழகு - அவன்
கொண்ட ஆண்மை அழகு
புனிதமானது
நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
Tuesday, November 19, 2013
ஆயூள் வரை தொடர்கதை தொடரும்
ஒன்றுமில்லை ஆனால் எல்லாம் உண்டு செயற்கையாக
ஒன்று இருக்கிறது உயர்வாக பூமியின் அடியில் இயற்கையாக
தோண்டுமிடமெல்லாம் பெற்றோல் வளம்
தோண்டியெடுத்து கிடைத்த வளத்தை விரயமாக செலவு செய்யும் இடம் அமெரிக்கா
தோண்டும் தொழிலாளி துண்டோடு தன் நாடு திரும்புவான்
('சோடா விற்றால் பாட்டல் மிச்சம்
சிகரெட் விற்றால் சிகரட் வைக்கும் டப்பா மிச்சம்' அக்கால மொழி
அரபு நாடு போன தொழிலாளியின் நிலை இப்பொழுது)
மண் வெளிநாட்டிலிருந்து வரும்
செடிகள் வெளிநாட்டிலிருந்து வரும்
தண்ணீர் கடல் நீரை மாற்றப்பட்டு வரும்
மேகங்கள் இருக்கும் மழை பெய்யாது
காற்று வீசும் மணல் காற்றாக வீசும்
வெயில் சுட்டரிக்கும்

அரபு நாட்டில் வசிக்கும் நம்மவர்களின் மனநிலை...
நமது மனதுக்குள்
இனம் தெரியாத இடியை
மின்னலை
இறக்கி வைக்கிறது !
ரியாதிலும்
கத்தாரிலும்
பகரைனிலும்
மழை மேகங்கள் சூழ்ந்தால்
இவர்களின் உள்ளங்களை
இன்ப மேகங்கள் சூழ்கின்றன !
ஏதோ ...
தங்கள் சொந்த மண்ணில்
இருப்பதை போன்ற
ஒரு மகிழ்வு ..
குடும்பத்தோடு
மனைவி மக்களோடு
மழையை
கொண்டாடுவது போல்
ஒரு நினைவு.!
பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயின் ஏக்கம்
பாடல் பாடி உறங்க வைத்தேன்
சிறகடித்து பறந்து இரையை சேர்த்து
குஞ்சின் வாயில் ஊட்டும் பறவைபோல்
கண்மணி மகனை பேணி வளர்த்தேன்.
கை பிடித்து நடக்க பழகிக் கொடுத்தேன்
கற்பதற்கு வேண்டியதை செய்துத் தந்தேன்
உறவுமுறை சொற்களை சொல்லிக் கொடுத்தேன்
உறவினரை அறிமுகம் செய்து வைத்தேன்
உயர்ந்து விட்டவனுக்கு மன முடித்து வைத்தேன்
வேண்டியதை சேர்த்துக் கொண்டான்
வேண்டிய உறவுகளை அறுத்து நிற்கின்றான்
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் நெருங்கி விடுமோ!
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் வந்தால்
பாசத் துடிப்போடு உயிர் என்னை விட்டு நீங்கும்
வரவேற்பறைக் காட்சிகள்
வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.
சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.
Monday, November 18, 2013
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-5]
பார்க்கவரும் விழிகளெல்லாம்
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை
ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்
யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை
ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்
யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-4]
வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்
அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்
கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்
அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்
கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-3]
பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது
எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது
எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]
பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக
மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு
காதலெனும் புயல் ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக
மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு
காதலெனும் புயல் ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
எழுதியதை எங்கே தூவுவது
எழுதியெழுதி வரிகளை
எனக்குள் இருத்தி வைத்தேன்
வைக்குமிடம் நிரம்பிப் போனது
எழுதியதை சொல்லிக் கேட்பதற்கும் ஆளில்லை
எழுதியதை பெற்றுச் செல்வதற்கும் ஆளில்லை
எழுதியதை கிழித்து தூவவும் மனமில்லை
எழுதியதை நிறுத்தி சிந்தித்தேன்
எழுதியதை நிரப்பி வைக்க இடம் கிடைத்தது
எழுதுவதையெல்லாம் குறை காணாமல்
பெருமனதோடு பெற்றுக் கொள்ளுமிடம் கண்டு கொண்டேன்
பெருமனதோடு முகநூல் பெற்றுக் கொண்டது
முன்னால் போ, பின்னால் வருகிறேன்.
மேகங்கள் மோதின
இடி இடித்தது
ஒலியை உண்டாக்கியது
இடி இடித்ததால்
மின்னல் ஒளியை தந்தது
இடியின் ஒலி தாமதிக்க
மின்னல் ஒளி முந்திக் கொண்டது
இடிபோன்று ஒலித்த கடஞ் சொற்கள் வேகமாய் தாக்க
இமைகள் துடிக்க விழிகளின் ஒளியை மறைக்க தாமதித்து கண்ணீர் வழிந்தன
சொல்லிய சொற்கள் கடுமை
சொல்லியவரின் மனம் சிந்திக்கவில்லை
சொல்லை கேட்டவரின் மனம் சிந்தித்து
சொல்லை கேட்டதால் மனம் வாடியது
வார்த்தையை கொட்டிய மனம் கொதித்தது
வார்த்தையை கேட்டு வாடிய மனம் விழிகள் நீரை கொட்டின
எண்ணங்கள் முந்திக் கொள்கின்றன
எண்ணங்களால் வந்த செயலின் விளைவுகள் பிந்திக் கொள்கின்றன .
சிந்தனைகள் செயலை தூண்டுகின்றன
செயலின் ஆக்கங்கள் முடிவாகின்றன
தத்துவம் வித்திடுகின்றது
தத்துவம் தந்த வித்து விஞ்ஞானக் கனியை தருகின்றது

Sunday, November 17, 2013
பேய் என்றால்...
பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்
பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்
வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

பேய் - ஓர் விளக்கம்
பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள்.
இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார்:
"டே மச்சான், பேய் இருக்குன்னு நம்புறியா?"
"என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா."
"எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்."
"என்னடா சொல்ற? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?"
"இல்லை உண்மையாத் தான் சொல்கிறேன் மச்சி. பல வாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்."

மிரட்ட வரும் பேய் !? திகில் தொடர் !
இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம்.
நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க போகவேண்டும். தூக்கம் கண்களில் நிறைந்தபடியே முழு நினைவு வருமுன்பாகவே எழுந்து வீட்டுப் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நடந்தான் அவன். வீட்டு பாத் ரூம் வீட்டுப்பின்பகுதியில் குட்டையான மதில்சுவற்றை ஒட்டியுள்ளது. அதன் வெளிப்புறப்பகுதி முழுதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த கருவேலன்காடு. ஜில்லென்ற காற்று மட்டும் தேகத்தை வந்து தீண்டிக்கொண்டிருந்தன. எதையும் உணராதவனாக தூக்கக் கரக்கத்திலேயே பாத் ரூமுக்கு சென்று விட்டு வெளியே வந்தபோது...
வீட்டுப் பாடம் (home work)
அரிச்சுவடி வகுப்புப் பாடம்;
ஆத்திச்சூடி வீட்டுப் பாடம்
இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்
வசதியாக
வாய்ப்பாடம் வகுப்பில்;
மெனக்கெடும்
மனப்பாடம் வீட்டில்
ஆத்திச்சூடி வீட்டுப் பாடம்
இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்
வசதியாக
வாய்ப்பாடம் வகுப்பில்;
மெனக்கெடும்
மனப்பாடம் வீட்டில்
"அவனுக்கு நிகராக எவரும் இல்லை."
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை
இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது
மறைந்து செயல்படும் பொய்யான வாழ்க்கையை போக்குகின்றது
இடையூறுகளை நினைத்து செயலில் தொய்வு விழ வைக்காமல் தொடர்கின்றது
நேர்மையான செயலில் ஈடுபடும் உறுதியான கொள்கையை உருவாக்குகின்றது
ஆன்மாவின் கோட்டை உறுதிப்பாட்டோடு நிலைத்து நிற்கின்றது
Saturday, November 16, 2013
நேருவின் ரோஜா
கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.
நட்பின் வகைகள்
நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது. அதாவது உண்மையான நட்பிற்கு என்று ஓர் இலக்கணம் உண்டு இல்லையா, அது கைநழுவுகிறது. அது ஏற்படுத்தும் அதிர்ச்சியில் உடனே அவர்களைக் கடிந்துகொள்ளவோ குற்றம் காணவோ துவங்குகிறோம்.
அப்படிக் கடிந்து கொள்வதிலோ, குற்றம் காண்பதிலோ என்ன பயன் இருக்க முடியும்?
எத்தனை முறை சென்றாலும் திரும்பவும் செல்ல மனம் நாடுதே!
போய் வந்தவர் சொல்கிறார் மீண்டும் போகவேண்டுமென்று
போகாதவர் சொல்கிறார் போய் வரவேண்டுமேன்று
ஒரு முறை வசதியிருந்தால் போவது கடமையானது
அடுத்த முறை போவது அவர்கள் விருப்பமானது
ஏன் இத்தனை முறை செல்ல வேண்டுமென்பார்
ஏன் இத்தனை முறை பொருள் சேர்க்க ஒரே நாடு செல்கின்றார்

Friday, November 15, 2013
விலகல்
இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை
எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கவிஞர் அபுல் கலாம்.
கவிஞர் அபுல் கலாம் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அபுல் கலாம் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
-----------------
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அபுல் கலாம் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
-----------------
பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
Thursday, November 14, 2013
வில்லும் அம்பும் – கலீல் ஜிப்ரான்
உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல
உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.
பெருகுகிறதா ‘மால்’ கலாச்சாரம்?
பெருகுகிறதா ‘மால்’ கலாச்சாரம்?
‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி காட்சி அபூர்வம். பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு நகரின் ஏதோ ஒரு தெருதான் பரபரப்படையும். அத்தெருவில் வரிசையாக கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி நமக்குத் தேவையானதை, திருப்திப்படும் விலையில் கறாராக பேரம் பேசி வாங்குவோம்.

பள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்மையை வெறுப்பை வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
Abu Haashima Vaver
Wednesday, November 13, 2013
அமெரிக்காவின் பிடியில் மற்ற நாடுகள்
அடுத்த நாடுகளின் அனுமதியின்றி ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் கை வந்த கலையாக மாறிவருகின்றது .இதனால் அந்த நாடுகளில் உள்நாட்டு குழப்பத்தையும் பிரச்சனையும் உண்டாக்குகிறது .
அடுத்த நாடுகளின் உள்நாட்டு விசங்களை அந்த நாடுகளுக்கே தெரியாமல் பல முக்கிய செய்திகளை கண்டறிகின்றது .இதற்கு பல நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றன. ஒருங்கிணைத்த ரஷ்ய குடியரசை பல நாடுகளாக பிரித்து தானே உலக நாயகனாக ஆக்கிக் கொண்டு உலகத்தில் ஒரு போலிஸ் ஸ்டேட்போல் இருக்க முயலுகின்றது. அமெரிக்காவின் ஆவணப் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 'இதேநிலை தொடருமானால் வருங்காலத்தில் அமெரிக்காவை யாருமே மதிக்க மாட்டார்கள் ' என்று அமெரிக்காவை இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடத்தை வெகு சீக்கிரம் மறந்து விட்டது
பல அரபு நாடுகள் அமெரிக்காவின் கை பொம்மையாக செயல்படுகின்றன. அமெரிக்காவுக்கு கொள்கைக்கு மாற்றாக யாரும் செயல்பட்டால் ஈராக் , லிபியா ஆப்கானிஸ்தான் நாடுகளின் நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள் .
தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் சந்தையை அகலத் திறந்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் . அரபு நாட்டிலிருந்து கணக்கில்லாமல் பெற்றோலை வாங்கி அந்த நாடுகளுக்கு காலம் கடந்து போன ஆயுதத்தினை விற்று சரி செய்துவிடும் சாமார்த்திய நாடு அமெரிக்கா.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் ஒன்று சேர்ந்து அடுத்த நாட்டினை அழிப்பதில் ஒற்றுமை காட்டும் அளவுக்கு நம்மிடம் தனி மனித ஒற்றுமை கூட கிடையாது.
ஞாபக மறதி குறைய நினைவு சக்தி வளர!
அறிவு தொடர்ந்து கற்பதின் வழியாகவே அறிவின் ஆற்றல் மேன்படும் .கற்பதை நிறுத்த நினைவு ஆற்றல் குறையும். குழந்தைகளுக்கு மனனம் செய்யும் பயிற்சி நினைவு ஆற்றலை வளர்க்கிறது .வயதானவர்களுக்கு நினைவு சக்தி குறைவது இயல்பு .
உடல் நலம் பேணுவதும் ,ஆரோக்கியமான உணவு( மீன் உணவு நல்லது ) தொடர் உடற் பயிற்சியும், 'எதையும் நினைவில் வைத்துக் கொள்வேன்' என்ற மன உறுதியும் இருத்தல் வேண்டும். சிலர் ஒன்றை வைத்து ஒன்றை நினைவு படுத்திக் கொள்வர் .
உடற் பயிற்சி உடலுக்கும் நினைவு ஆற்றல் சக்திக்கும் உதவும்.
சிறு வயதில் மனனம் செய்வது உதவி இருக்கலாம் வளர்ந்தவர்களுக்கு தானே ஆக்கப் பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் .கவனக் குறைவு ,தவறான எண்ணங்கள், கவலையான நினைவுகள் ஞாபக மறதியை உண்டாக்கும்
Tuesday, November 12, 2013
தேதலில் கூட்டணி காண முயற்சிகள்
தேர்தலில் கூட்டணி காண முயற்சிகள் செய்யும் கட்சிகளுக்குள் கருத்து, கொள்கை உடன்பாடு கிடையாது . தேர்தல் முடிந்த பின் இவர்கள் சொல்வது தேர்தலுக்காக எதிரியை வீழ்த்த செய்துக் கொண்ட உடன்பாடுதான் இந்த கூட்டணி என்பார்கள் . தேர்தல் முடிந்த பின் ஆதாயம் தேடி ஆட்சியில் அமர தேர்தல் கூட்டணி போய் ஆட்சி கூட்டணி ஒன்று அமையும்.
யாருக்கு வாக்களிப்பது?
கட்சிகளை பார்க்காதீர்கள் .தேர்தல் அறிக்கை பார்க்காதீர்கள், அறிக்கை பார்த்து படிக்கத்தான். உண்மையிலேயே தொண்டு ஆற்றும் எண்ணம் கொண்டவர்க்கு வாக்களித்து பயனடையுங்கள். நல்லவராகவும் செயல் ஆற்றுவதில் வல்லவராகவும் இருக்க வேண்டும் இரவு , பகல் எந்நேரமும் பொது சேவைக்கு அவரை அழைத்தால் வருபவரா? கையழுத்து போட பணம் கேட்பவரா? லஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் சேர்ப்பதற்கே தேர்தலில் போட்டி போடுபவரா ? கவணித்து செயல்படுங்கள்.
போட்டி போடும் எண்ணிக்கை கூடியது ஏன் ? பணம் சேர்ப்பதற்கே ! சேவை செய்யும் மனிதர்கள் போட்டி போட விரும்புவதில்லை.போட்டி இல்லாமல் மக்களால் விரும்பி தேர்ந்தேடுக்கும் காலம் வரவேண்டும்.
பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச
பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச
பெயரோடு இன்னொரு பெயர் இணைந்தால்தான் பெருமை
எழுதுகோல் எடுத்து எழுதாத இடமில்லை பெயரை
எழுதி அனுப்பித்தவைகள் பெயரோடு வந்து விளம்பரம் தந்தன
பார்த்தவன் படித்தவன் பாராமுகமாய் போகிறான்
பார்த்து பார்த்து பாராமுகமாய் போனதால் பசுமை முகம் சோர்ந்து போனது
நிறைவோடு எழுதி நிறைவற்ற மனமானது
நிறைவோடு இல்லை இல்லான் இல்லாதததால்
என் பெயரும் இல்லானின் பெயரோடு இணைந்து விட
எங்கள் பெயர் சொல்ல மக்களை பெற்றுத் தருவேன்
பூக்காத மரமாய் நிற்கிறேன்
பூத்த பின் மகரந்த சேர்க்கை கிடைக்கும்
பூத்த பின் மணம் வீசி நிற்ப்பேன்
பூத்த பின் வண்டுகள் நாடி வரும்

பெண்ணின் பெருமை
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள் மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர் நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
தெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது

பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.
உடல் நன்றாக இருக்க இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் கோளாறு ஏற்படின் உடல் பாதிப்பு ஏற்படும் .ஊர் ஒற்றுமை உடலின் இதயம் போல் . உலகமே நம் கையில் கிடைத்தாலும் இதயம் கெட்ட பின் பயனில்லை.
ஒற்றுமை பற்றி நிறைய பேசி சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் எல்லா முயற்சிகளும் எடுத்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் .விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. '.ஊர் இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம் ' என்பது அனைவரும் அறிந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பதவிக்கு வருமுன்பு அந்த பதவிக்கு வருபவர் தான் அந்த பதவிக்கு தகுதியானவரா! என சிந்திக்க வேண்டும் . அவர் சேவை செய்யும் மனமுடையவராகவும் அதனை திறம்பட செயல்படுத்தக் கூ டியவராகவும் இருக்க வேண்டும் . பதிவியினை ஒருவருக்கு கொடுத்த பின் அவருக்கு மதிப்பளித்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.
Monday, November 11, 2013
மங்கையருக்கு ஒப்பான மலர்கள்!
''பூமி முளைக்கச் செய்வதில் இருந்தும், அவர்களிருந்தும், அவர்கள் அறியாதவற்றிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன் 36:36)
இந்த வசனத்தை, ஸுப்ஹானல்லதீ.... என்ற சொற்றொடருடன் திருக்குர்ஆன் துவக்குகின்றது. மிக மகத்தான அற்புதத்திற்கும், அதிசயத்திற்கும் தான் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கின்றான். இதே வார்த்தையை கீழ்க்கண்ட வசனத்திலும் உபயோகிக்கின்றான்.
''மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:1)

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
மட்டன் - 11/2 கிலோ
நெய் 250 கிராம்
தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 50 கிராம்
எலுமிச்சை - 1
பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு
கேசரிப்பவுடர் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
சமையல் குறிப்பு விபரம்
செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)
சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)
புலால்
புலால் உணவு என்றாலே ஹோட்டல் பிலால்தான் நினைவுக்கு வருகிறது. “ஹலால்” “ஜலால்” “ஹிலால்” போன்று “புலால்” என்ற வார்த்தையும் தமிழ் மொழி அல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
“கசாப்” என்ற அரபு வார்த்தை உருமாறி தமிழில் “கசாப்பு” என்று ஆனதுபோல் புலால் என்ற வார்த்தையும் அரபு மொழியிலிருந்து இறக்குமதியானது என்று நினைத்திருந்தேன்.
“புலால்; என்றால் மாமிசம் மட்டும் தான் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. தாவரங்களில் கூட புலால் உள்ளது. கீரை புலால் வகையை சேர்ந்தது. ஏனெனில் அதை நாம் பறித்த பின்பு அதனால் உயிரணுக்களை உற்பத்தி செய்யமுடிவதில்லை. பறித்த பின் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடிந்தால், அது புலால் அல்ல” என்று புலாலுக்கு அருமையான விளக்கம் தருகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
புலால் என்னும் வார்த்தை தூய தமிழ் வார்த்தை. சங்க கால முதலே இலக்கியத்தில் கையாளப்பட்டு வரும் சொல்.
பூக்களில் உறங்கும் மெளனம்
பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!
வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்

ஏற்றுமதி உலகம் வெற்றிப்படிக்கட்டா? கற்றுத்தருகின்றது ஒரு வலைப்பூ !
ஏற்றுமதி உலகத்தில்
நடப்புகளை தெரிந்து கொள்வது
மிகவும் முக்கியம்.
அந்த உலகத்தை
உங்களுக்கு
எளிதான தமிழில்
உங்களுக்கு வாரா வாரம்
எடுத்து கூறவே இந்த வலைப்பூ.
http://sethuramansathappan.blogspot.com
SETHURAMAN SATHAPPAN , AGM Operations, Scotiabank, Mumbai, India
இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் நடைபெறுகிறது. இதில் மஹாராஷ்டிராவின் பங்கு 55 சதவீதம் ஆகும். என்பதே இவரது முதல் பதிவு.
பெயர்!
தனது தந்தையார் பெயரையும் தன் பெயரின் முன்பு இணைத்துக் கொண்டிருக்கும் சேதுராமன் சாத்தப்பன் அவர்களை யாரிடமும் அறிமுகப்படுத்தும் போது சாத்தப்பன் என்று கூறினால் உடனடியாகத் பலருக்கும் தெரியாது. ஆனால் சேதுராமன் சாத்தப்பன் என்றால் உடனடியாகத் தெரியும். ஏனெனில் அந்தப் பெயரில் தான் தமிழ்நாட்டில் அவர் பிரபலம்.

மகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்
பார்க்கும் இடம் புதிதாக இருத்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல்
விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி
இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்
ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்
அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்
செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்
செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்

மரணம் வரை ஏமாறும் பரிதாபம்!
இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் மார்க்கப்பணியை இந்தப் புரோகிதரர்கள் வருமானத்திற்குரிய வழியாக ஆக்கிக்கொண்டதே. எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும் நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப் போதிக்கவே முடியும். மண்ணறையை சந்திக்கும்வரை மனிதனுக்கிருக்கும் பொருளாசை, அந்தப் பொருளை அடைவதற்காக எல்லா பாதகங்களையும் செய்ய வைத்து விடுகிறது.
பொருளாசையின் விபரீதங்கள்:
பொருளாசை காரணமாக வியாபாரிகள் கலப்படங்கள் செய்கிறார்கள். டாக்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள் பொருளாசையால் மனித உயிருடன் விளையாடுகிறார்கள். சாதாரண சளி காய்ச்சலுக்குச் சென்றாலும் பயமுறுத்தி பல சோதனைகளை செய்து காசை பிடுங்கி விடுவார்கள். பெரும்பாலான சுகப்பிரசவங்கள் இந்த டாக்டர்களினால் அறுவை சிகிச்சையாக ஆக்கப்படுகின்றன. மருந்தினால் குணப்படுத்த முடிந்த நோய்களும் இன்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. எந்தத் துறையை தொழிலாக கொண்டர்வகளும் பொருளாசை காரணமாக தில்லுமுல்லுகள் செய்யாமலில்லை.

சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவோம்!
தேவை என்றால் மறைந்து விடுகிறது சோம்பல். (laziness, lethargy or sluggishness)
உற்சாகம் குறைவதால் வருவது சோர்வு
சோர்வின் முடிவு சோம்பல்
சரியான தூக்கமின்மை சோர்வைத் தரும்
ஆர்வம் வர சோம்பலுக்கு தீர்வு கிடைக்கும்
வாழ்வின் முன்னேற்றத்திர்க்கு தடை செய்யும் சோம்பல்!
முயற்சி சோம்பலை சிதறடிக்கும்
சென்னை செல்வதற்கும் சோம்பி நின்ற மனநிலை சென்னை செல்லும் பயணத்தை தடுத்தது . தொலைபேசியில் அழைப்பு வந்தது
'நீங்கள் சென்னை வந்தால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் ,பொருளும் தருகிறேன் 'என்று.
மனதில் ஒரு வேகம் வந்தது சோம்பல் முறிந்தது .உடன் சென்னை புறப்பட்டேன் .

Sunday, November 10, 2013
துபாயில் ஈமான் 38 ஆம் ஆண்டு விழா
அமீரக 42 வது தேசிய தின விழா
மற்றும்
ஈமான் 38 ஆம் ஆண்டு விழா
நாள் : 02.12.2013 திங்கட்கிழமை காலை சரியாக 9.30 மணி
இடம் : பட்ஸ் பப்ளிக் ஸ்கூல், அல் முஹைஸ்னாஹ் 1, துபாய்
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் சங்கத்தின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் 42 வது தேசிய தினத்தன்று நடைபெற இருக்கிறது. அதுசமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. எனவே அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு
அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேய்ரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும்.

Subscribe to:
Posts (Atom)