Friday, November 29, 2013

அந்த பெண் ஓடிப் போயிட்டாள் !


 அந்த பெண் ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் யாரோடு ஓடிப் போயிட்டாள்

அந்த பெண் அவளுக்கு தெரிந்தவனோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண்ணுக்கு அவனை எப்படி தெரியும் !
அதுதான் தெரியலே !

அந்த பெண் அவனை ஏன் விரும்பினாள்?
அதுவும் தெரியலே !

அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
திருமணம் ஆகி விட்டது
திருமணம் ஆகியுமா ஓடிப்போனால் !
ஆமாம் .
அவளது கணவன் எங்கே ?
கணவன் பல ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கார் .
கணவன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறார் .
கடைசியா எப்போ வந்தார்?
கடைசியா ஊருக்கு வந்து ஏழு அல்லது எட்டு வருடம் ஆகி இருக்கும் .
அப்படியா !
ஓடிப்போனது குற்றம்தான் .


அதற்கு பதில் அவள் விருப்பப் படி கணவனிடமிருந்து விடுதலை வாங்கி
ஓடிபோகாமல் (குடும்ப கவுரத்தை காப்பாற்ற, பாவம் செய்யாமல் இருக்க )அவள் மகிழ்வாக இருக்க ஓடிபோகாமல் முறையாக ஓடிப்போனவனையே மறுமணம் செய்து வாழலாமே !

அவளுக்கு அந்த அளவுக்கு அறிவு சொல்பவர்களும் ,நல்லவர்களும் உடன் இருக்கும் பெறோர்களும் மனம் விட்டு அவளிடம் பேசாமல் போனதும் ஒரு குற்றமாக தெரியவில்லையா !

ஓடிபோவதைப் பற்றியே பேசுகிறோம் .

வளர்க்கும் முறை ,வாழும் முறையைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்கு உதவாதது ஆண்களிடமும் குற்றம் உள்ளது என்பதனை நாம் எப்போது அறிவது!

குற்றம் இருவரிடமும் உள்ளது.

தண்டனை கொடுப்பதைப் பற்றி நாம் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால் வாழும் முறை ,வளர்க்கும் முறை பற்றி மார்க்கம் போதித்ததனை நாம் சரியாக அறிந்துக் கொள்வதில்லை

No comments: