Saturday, June 27, 2015

இறைவனிடம் கையேந்துங்கள்!!

இறைவனிடம் கையேந்துங்கள்!!

சில ஆண்டுகளுக்கு முன்னால்....
மருத்துவ பணி நிமித்தமாக புனித மக்கா
நகரில் வாழ்ந்த காலம் அது.

ஒரு நாள் இரவு, நடுநிசி நேரம்...
வீட்டின் டெலபோன் மணி, கிணு கிணுத்தது.
போனில் பேசியவர், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெரிய இடத்து பெண்.

அவர் குரல் சற்று சோகத்துடன் ஒலித்தது. தன் தந்தை, மரணித்து விட்ட செய்தியை சொன்ன அவர், இறந்து போன தன் தந்தைக் காக, 'கஅபாவில்' இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இது போன்ற கோரிக்கைகள், நான் மக்கா மாநகரில் வாழ்ந்த போது, பல பேரிடம் இருந்து வருவதுண்டு.

இந்த பெண்மணியின் வேண்டுகோளை ஏற்று கஅபா ஆலயம் சென்று, அவருக்காக பிரார்த் தனைகளை நிகழ்த்தி விட்டு முஸ்லிம்களின் சடங்கான ஒரு "உம்ரா" வையும் முடித்து விட்டு, ஒரு வித மன நெகிழ்வுடன் இறை இல்லத்தில் இருந்து, என் இல்லம் சென்றேன்.

Tuesday, June 23, 2015

புலம் பெயர்தல் ....!

தொன்று தொட்டே புலம்பெயர்ந்து புதிய ஊர்களுக்கு சென்று வாழுதல் மானுட வரலாற்றில் தொடர்ந்து நிகழும் ஒரு இயற்க்கை நிகழ்வு.

தொடர் பயணங்களே இடப்பெயர்வு களுக்கு அடித்தளம்.

களைத்து போன குழு ஒரு இடத்தில் தங்கியதும் புதிய ஒரு ஊர் உருவாகிறது.
புது இடத்திலும் மனிதன் தனது பூர் வீகத்தை மறக்காது தொடர்பிலேயே வைத்துக் கொள்கிறான்.
இது ஒரு பாதுகாப்பு சார்ந்த சமூக உளவியல் உணர்வு.

நோன்பு-ஒரு ஆய்வுப்பார்வை


-Rafeeq Friend புதுசுரபி

அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள், நான் உத்தரவாதம். நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது நாளில் நடந்த அதிசயம்” என்றும். இதை அவர் மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றி வெற்றி பெற்றதாயும் மேற்கோளிட்டார்.

”ஒரே நாளில் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறேன் என்று சிலர் மாறிவிட்டு பிறகு சிலநாட்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். அதேவேளையில் மாற்றத்தினை சிறிது சிறிதாக தொடந்து 30 நாட்கள் முயற்சித்தால் 31ம் நாள் அந்த முயற்சி, அது தவிர்க்க வேண்டிய ஒரு கெட்ட பழக்கமோ அல்லது புதிதாய் பழகிக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல பழக்கமோ அதில் வெற்றி கண்டிருப்பீர்கள்” என்றும் 30 நாள் இரகசியத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன ? ஞானம் !

நாம் கேட்டுப் பெறவில்லை இந்த பிறப்பை, அது போலவே, நாம் விரும்பி பெறப்போவதுமில்லை இனி வரும் இறப்பை. ஆனாலும் பிறந்திருப்பதும், அதனால் இனி இறக்கப் போவதும் மெய்யான மெய்யே. அப்படியெனில், தன்னை வெளிப்படுத்தி தன் வல்லமை காண விரும்பிய ஆதி அவன்; விரித்ததில் விரிந்து பரந்த சிதறல்களே நம்மையும் சேர்த்த எல்லா உயிர்களின் பிறப்பும் இறப்பும் என்றடங்கிய தொடராய் நீட்சி பெறும் உலகின் எத்தனையோவான அத்தனை காட்சிகளும்.

Friday, June 19, 2015

ரஹ்மானே அன்பாளா ரமலானின் அருளாளா கையேந்திக் கேட்கின்றேன்..

 ரஹ்மானே அன்பாளா
ரமலானின் அருளாளா
கையேந்திக் கேட்கின்றேன்
கரம்நிறைப்பாய் பொறுப்பாளா!

கண்களில் மழைநீர் வழிகிறது--மனம்
கனத்தால் நொறுங்கிச் சரிகிறது
எண்ணம் நெருப்பாய் எரிகிறது--என்
இதயம் துயராய் வடிகிறது! (ரஹ்மானே...)

Wednesday, June 17, 2015

படித்ததில் பிடித்தது

ஒரு நாள-

ISIS தீவிரவாதிகள் காரில்
சென்றுகொண்டிருந்த ஒரு
குடும்பத்தை வழி மரித்தனர்.

ISIS தீவிரவாதி:" நீ எந்த மதம்?"

காரில் இருந்த மனிதர் :
"நாங்கள் முஸ்லிம்"
(உண்மையில் அவர்கள் கிருஸ்துவர்கள்்)

ISISதீவிரவாதி : "அப்படியானால்
குரானிலிருந்து சில வரிகளை
சொல்.

(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)

இஸ்லாம் - தொழுகை - யோகா...


யோகா...
உடல் பயிற்சியை ஒத்த இன்னொரு கலை!
இந்திய மண்ணின் பூர்வீக கலையில்
இதுவும் ஒன்று!

ஆனால் பாருங்கள்,
இக்கலைக்கு
ஓர் மதசாயமும் முத்திரையும் குத்த
சூரிய வழிப்பாடென -
அதற்கு முக்கியத்தும் தந்து குதிக்கிறார்கள்!

யோகாவை..,
அரசியலாக்கி
அதம்பண்ணுகிறார்கள்!

நிஜத்தில்...
யோக மீது இவர்களுக்கு மதிப்பெல்லாம் இல்லை.
எப்படியாவது
முஸ்லிமை வம்பிற்கு இழுக்க வேண்டும்
அந்தச் சச்சரவு சப்தத்தில்
தங்களது அரசியல் ஓட்டைகளை மறைக்க வேண்டும்...
பெரிய திறமைதான்!

Sunday, June 14, 2015

காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.

ஆனால் ஒரு நிபந்தனை.

"நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

Friday, June 12, 2015

யாருகிட்ட‬...

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்..!

அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..!

இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..!

சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?"

இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!"

Friday, June 5, 2015

இளவேனில் துவங்கிய ஒரு தருணத்தில்../ புதுகை அப்துல்லா

இளவேனில் துவங்கிய
ஒரு தருணத்தில்
முதலில் சந்தித்தது
நம் கண்கள்.

சந்தித்த தருணத்தில்
இருவருக்கும்
வெம்மைகூடி
கோடை நாட்களின்
காலத்தைச் சிறிது முன்கூட்டியது!

பின்பு வந்த கோடைநாட்கள்
நம் இருவருக்கும்
குளிர்காலமாகியது!

இலையுதிர் காலத்தில்
மனம் உதிராது
தொடர்ந்தது நம் உறவு!

பின்புக்கும் பின்பு வந்த
குளிர்காலத்தில்
அதே கோடைநாட்களை
அனுபவித்தபோது
ஆச்சர்யத்தில் நமக்கு
ஆசி கூறியது
எல்லாம் வல்ல இயற்கை!!

Wednesday, June 3, 2015

" எங்கிருந்து வந்ததோ அங்கே சென்று விட்டது!"- dr.habibullah

அந்த கலையரங்கம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மகான் ஒருவர், "கடவுள்" என்ற பொருள் பற்றி, மகா பிரசங்கம் ஒன்றை, நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் லயித்து, கரைந்து கொண்டிருந்தனர் ஊர் மக்கள்.

கொழுந்து விட்டெறியும் மெழுகுவர்த்தியை சுற்றி, சுழல்கின்ற ஒளி வட்டத்தை, உற்று நோக்கி, மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்ச்சிக்கு, அவர் மக்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

"ஒளி மயமானவன் இறைவன்." 'இறைவனை அறிய வேண்டுமானால், முதலில் இந்த ஒளி யைப் பற்றி, அறிய வேண்டும். இந்த ஒளி, இதற்கு முன் எங்கிருந்தது; இப்போது இங்கு எப்படி வந்தது?'

Monday, June 1, 2015

YOU CAN HAVE A CAN BUT AS BEER NOT AS SODA! - Rafeeq Friend

படத்தில் நீங்கள் பார்ப்பவர் ஒரு அமெரிக்க முஸ்லிம் பெண். அவர் பெயர் தாஹிரா அஹமது. இவர் அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Associate chaplain ஆக பணியிலிருக்கிறார். அமெரிக்கா மட்டுமன்றி ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்படும் இனக் கலவரங்களின் போது இருதரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார். இவரின் மனித நேயம் மிக்க சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்தளித்து "அமெரிக்காவின் மிகச் சிறந்த பெண்களில் ஒருவர்" என்று பெருமைபடுத்தியிருக்கிறார்.

சரி, இப்ப என்ன அதுக்கு???? அதானே.....

இவர் கடந்த மே மாதம் 29ம் தேதி,பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தணிக்கும் பொருட்டு பேச்சுவாத்தைக்காக வாஷிங்டன் நகருக்குப் புறப்படுகிறார்.

LinkWithin

Related Posts with Thumbnails