Tuesday, June 30, 2020

நட்புகளின் கூடல் மகிழ்வின் தேடல் ....


வயல் வெளிகள்
வாயல் திறக்க
ஜில்லென்ற காற்றடித்து
குமரியை போர்த்தும்
பச்சை பசேலென்ற
சேலை உடுத்திய சோலை ....

இடலாக்குடி குடும்பங்களின்
வாரிசோடும் பாரிசோடும்
அழகான இயற்கை
கைகள் குலுக்குகிறது ....

மனப்பை நிறைய
ஆனந்தம் நிரப்பி
பசுமையின் வனப்பை
ரசிக்கும் பண்பர்கள் ....

உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்

உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்

பிறப்பால் இஸ்லாமியரான  முகமது கபூர்  சமீபத்தில், ஆதரவின்றியும், அடக்கம் செய்யக்கூட வழியின்றியும் இறந்த இந்துக்கள் மூவரின் உடலை எடுத்து அடக்கம் செய்திருக்கிறார்.

நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த முகமது கபூர், உகாண்டாவில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார். அங்கு இருக்கும் கடையை இவரது பணியாளர்கள் கவனித்துக்கொள்ள, அதன் வருமானத்தில் பெரும்பகுதியை இங்கே சேவைக்காகச் செலவு செய்கிறார் முகமது கபூர்.

Saturday, June 27, 2020

முகநூல் நண்பர்கள்

முகநூல் நண்பர்கள்


முகநூல்  நண்பர்கள் தங்கள் பதிவுகளை நமது வலைப்பூ மற்றும்  வலைத்தளத்தில் பகிர்வதற்கு மகிழ்வுடன் அனுமதி, ஒப்புதல், சம்மதம், இசைவு.தந்துள்ளார்கள் .இன்னும் பலர் இருக்கின்றார்கள் அவர்களது படங்களையும் அவர்களது ஒப்புதலையும் பெற்று அவர்களையும் சேர்த்து காணொளி தயார் செய்ய  விழைகின்றேன் .
அவர்களுக்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.
 S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

திருமணமாகி போகும் தன் மக்களுக்கு சொல்லும் அறிவுரை


முதல் முஅத்தின் பிலால் சொன்னார்:

முதல் முஅத்தின் பிலால்

அபிசீனிய அடிமை பிலால்
அழகானது பாங்கு அவர் குரலால்

அபீசீனியா பிலால் தந்தை வாழ்ந்த ஊரின் பேராகும்
புனித மக்காதான் பிலால் பிறந்த ஊராகும்

அரபி உச்சரிப்பு பிலாலுக்கு கொஞ்சம் கொன்னல்தான்
ஆனால் அவர் குரலில் இருந்தது கன்னல்தான்

ஒரேயொருநாள் சொல்லவில்லை பிலால் ஃபஜ்ருக்கான பாங்கு
அண்ணலின் அனுமதியுடன் ஜியாத் இப்னு ஹாரிஸ் சொன்னார் ஆங்கு

அன்று ஏன் பாங்கொலி கேட்கவில்லை என்று கேட்டார் ஜிப்ரயீல் வானவர்
அர்ஷின் எல்லைவரை கேட்ட குரலுக்கு பிலால் சொந்தக்காரர் ஆனவர்

உமய்யா இப்னு கலஃப் என்று ஒரு பெரும் பணக்காரன்
அடிமைகளை வதைத்து மகிழ்ந்த குணக்காரன்

ஒட்டகம் மேய்ப்பது, கடவுளர் சிலைகளை கவனிப்பது
அடிமை பிலாலின் அன்றாட வேலைகள்

பிலால் இப்னு ரபாஹ்[ரழி]-1 Qaiyoom baqavi[TAMIL BAYAN]

போதை தரும் போதை



கொரோனா நேரம்
ஆல்கஹால் விற்பனை
அதிகம் என்றாலும்
ஒருபுறம் போதைப் பொருள்
விற்பனையும் சூடாகவே
தொடர்கிறது.
சென்னையைப் போலவே 
நாகர்கோவில்
நகரும் இப்போது
போதையில் மிதக்கிறது.
போதை மருந்து
விற்கும் தரகர்கள் தங்கள்
ரெகுலர் கஸ்டமர்களான
இளம் மாணவர்களை தேடிப்
பிடித்து நெருக்கடி நிலையிலும்
சிரமமின்றி சப்ளை செய்து
வருகிறார்கள்.சப்ளை இல்லாத
நேரத்தில் பணக்கார
மாணவர்கள் அதிக விலைக்கும்
வாங்க ரெடி
என்பதால் மார்க்கட்டில்
மருந்துக்கு நல்ல டிமாண்ட்
இருக்கிறது.

அனைத்தும் உடைக்கும்...!

அனைத்தும் உடைக்கும்...!

வந்தோம்  இருப்போம்   போவோம்
                                               மரணமில்லை!
வந்தது         போனது          இதுதான்
                                                 நடப்புஎல்லை!   
                                                    ( வந்தோம்...)
வானம்  படைத்தவன்  பூமி   படைத்தவன்
            வாழ்வையும்  தருவான்---மண்
ஆன மனிதனைக் கொத்துக் கொத்தாய்
               அழிக்கவா  செய்வான்?
                                                    ( வந்தோம்...)
ஓடும்    நதியில்     புரளும்      பரல்கள்
                  இடம்தான்  மாறும்---இதில்
போடும்  கணக்கில் தப்புகள்  இல்லை
                   கடந்தும்  போகும்! 
இருட்டறைச்  சுவற்றில்  ஒட்டிக்  கிடந்தது
                    உருவம்   ஆகும்---அது
விருட்டென மண்ணில் குதித்தே ஒருநாள்
                     பிணமென ஏகும்!
                                                    ( வந்தோம்...)

லாக் டவுன் தொடர்வதால்... உன்னப்பனின் விண்ணப்பம்


ஆக்கம்: சபீர்
//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு...

வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே…

நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,

மொத்தக் கனவுகளின்
ஒற்றைப் பலன்!

Friday, June 26, 2020

அபாபீல் பறவை மற்றும் யானை(ப் படை / ஸூரத்துல் ஃபீல்


டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
105. ஸூரத்துல் ஃபீல் (யானை)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
PlayCopyWordByWord105:1
105:1 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏
105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
PlayCopyWordByWord105:2
105:2 اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ‏
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
PlayCopyWordByWord105:3
105:3 وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ‏
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
PlayCopyWordByWord105:4
105:4 تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ‏
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
PlayCopyWordByWord105:5
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ‏
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=105

In the Name of God, Most Gracious, Most Merciful Quran Inspector/ External Links Introduction Appendices:

வெள்ளிப் பதிவு...

சூரியன் ஒளியைப் போலும்
சுடர்விடும் மதியைப்போலும்
கடலிடை அலைகள் போலும்
கனிகளின் சுவையைப்போலும்
புவியினில் மணலைப்போலும்
பூத்திடும்  மலர்கள் போலும்
நடந்திடும் நதிகள் போலும்
நடமிடும் தென்றல் போலும்
மலைவிழும் அருவி போலும்
மழலையர் மொழிகள் போலும்
வானத்து மழையைப் போலும்
வளர் நிலாக் காலம்போலும்
பெருகிடும் பகலிரவெல்லாம்
பேரிறை ஓதும் ஸலவாத்
அருளெனப் பெருகிப் பரவும்
அற்புதர்ப்  பெருமான்  நபிகள்.....

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

- கவிஞர் அதாவுல்லாஹ் -

அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்
=========================

ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்


ஆட்டுப்பால் தரமுடியுமா என்று
அபூபக்கர் கேட்டார்

அவை அமானிதம் என்று மறுத்துவிட்டார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

கன்னி ஆட்டின் மடியில் நான்
கறந்துகொள்ளவா என்று கேட்டனர்

அற்புதங்கள் செய்யவல்ல
அண்ணல் நபிகளார்

ஆர்வத்தில் சரியென்றார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

மந்திரக்கரத்தால் மடுவைத் தொட்டு
மந்திரம் சொன்னார்கள் மாநபிகளார்

மடு சுரந்து கனத்தது
மூவரும் அருந்தி மகிழ்ந்தனர்

அம்மந்திரச் சொற்களை கற்றுத்தருவீர்களா என்றார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

Thursday, June 25, 2020

Chunky Chicken-Vegetable Soup


Category: Soup - (140)
Origin: USA
Source: IslamiCity

Healthy

Ingredients:
• 4 cups Chicken broth
• 1/2 cup Diced onions
• 1/2 cup Diced celery
• 1/4 cup Diced sweet green peppers
• 1 cup Canned whole tomatoes, chopped
• 1 tbsp Snipped fresh parsley or 2t dried
• 1 tsp Snipped fresh dill or 1/2 t dried
• 1/2 cup Corn
• 1 cup Small pasta shells
• 1/2 cup Peas
• 1 cup Diced zucchini
• 1 cup Diced cooked chicken breasts
• Grated Parmesan cheese (garnish)
• Fresh dill (garnish)
Preparation:
Combine the broth, onions, celery, peppers, tomatoes, parsley and dill in 4-quart pot and bring to a boil. Reduce the heat and simmer for 20 minutes. Add corn and pasta. Cover and simmer for 15 minutes. Stir in the peas, zucchini and chicken. Simmer for 10 minutes.
Garnish with parmesan and dill.

https://www.islamicity.org

The Reason French Rapper Diam's Converted to Islam!

*லியோ டால்ஸ்டாய் & மகாத்மா காந்தியின் லட்சிய வாழ்வுக்கு வித்திட்ட டுகோபார்ஸ் சமுதாய மக்களின் வாழ்க்கை பற்றிய கட்டுரை இது.....*

பதினேழாம் நூற்றாணடில இருந்து ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ், இவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் தேவாலயம். மதச்சடங்குகள் பாதிரிகளின் கட்டுபாடுகள் யாவற்றையும் எதிர்த்தனர், மனிதனின் மனதே ஆலயம், மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆத்மாவை பலமாகவும். எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாக்க் கொண்டிருக்க வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் வன்முறை. கொலை கூடாது,  மனிதர்களில் எவரும் உயர்வும் தாழ்வும் கிடையாது, ஆகவே தங்களை ஆத்ம போராளிகள் என்று அழைத்துக் கொண்ட இவர்கள் எலிஸ்தவ்போல். டிப்லிவஸ் போன்ற பகுதிகளில் விவசாயப் பண்ணை அமைத்துக் கொண்டு சிறுசிறு கிராமங்களாக வாழ்ந்தனர்

காந்தி டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்ட பல விஷயங்கள் டுகோபார்ஸ்  மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த வந்த பழக்கங்களே,

டால்ஸ்டாயின் படைப்புகள் எந்த அறத்தை வலியுறுத்தியதோ அதே விசயங்களை தங்களது வாழ்வில் கடைபிடித்தவர்கள் டுகோபார்ஸ், அதனால் டால்ஸ்டாய் அவர்களை தனது எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் முன்னோடிகளாகக் கருதினார், டுகோபார்ஸ்சின் வாழ்க்கை இயற்கையோடு இணந்த்து மகத்தானதாக உள்ளதை கண்டு டால்ஸ்டாய் வியந்து போற்றியிருக்கிறார்

உயிரணுக்களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா?

Mohamed Rafee  நாகூர் ரூமி:
உயிரணுக்களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா? இல்லை. அவைகள் உருவாகும்போதே தான்செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அறிவுடனும், கடமையை நிறைவேற்றும் தகுதியுடனும்தான் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு செல்லும் ஒரு ஞானியாகவே பிறக்கிறது. வாழும் காலமெல்லாம் ஞானியாகவே வாழ்கிறது. கோடிக்கணக்கான ஞானிகளின் கூட்டமைப்புதான் மனித உடல் என்று சொன்னால் அது மிகையில்லை. -- நாகூர் ரூமி (நலம் நலமறிய ஆவல் நூலில்)
 நாகூர் ரூமி: என் நலம் நலமறிய ஆவல் நூலின் முடிவுரை ----பல ஆராய்ச்சி நூல்களில் இருந்தும், மனசாட்சியுள்ள பல டாக்டர்கள், ஹீலர்கள், நண்பர்கள் ஆகியோரின் ஆடியோ, வீடியோக்கள், புத்தகங்களில் இருந்தும், என் சொந்த அனுபவத்திலிருந்தும் எனக்குப் புரிந்ததை உங்களுக்கும் புரிய வைக்க என்னால் ஆன விதத்தில் முயன்றுள்ளேன். அந்த மனிதர்களுக்கும், நூல்களுக்கும் நன்றிகள்.

நான் கொடுத்த விஞ்ஞானப்பூர்வமான தகவல்களில் தவறு இருந்தால் அதை திருத்திக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் எந்த தவறும் இல்லை. உடலே உடலைப் பார்த்துக்கொள்ளும் என்ற ஞானமே அடிப்படையானது. மருந்துகளும், மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சைகளும் நம்மை ஆரோக்கியமானவர்களாக ஆக்குவதற்கு பதிலாக நோயாளிகளாகவே வைத்து கஷ்டப்படுத்திக்கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

Wednesday, June 24, 2020

வரலாற்று பெண்மணி உம்முசுலைம் ரலியல்லாஹு அன்ஹா

இஸ்லாமிய வரலாற்றில் நீக்கமற நிறைந்துவிட்ட இஸ்லாமிய வரலாற்றுப் பெண்மணி


வரலாற்று பெண்மணி உம்முசுலைம் ரலியல்லாஹு அன்ஹா 
ஷுஐப் மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு 
நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான்

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

வனப்பாய் தருவாய் வரங்கள் யாவுமே!

💞இறைசிந்தனை

வனப்பாய் தருவாய்
வரங்கள் யாவுமே!
வாழ்த்து மழையென
வந்து குவிந்திடவே!
வஞ்சக நெஞ்சங்கள்
வாஞ்சை ஹபீபாலே!

வஞ்சனை நீங்கியே
வருடிய ❤️ இதயமாகியே!
வல்லோன்ருளாலே
வந்ததே குடும்பம்!
வாகாய் ஒன்று சேர்ந்ததே!
வாழ்வின் வசந்த
காலமே!
வையகத்தில் நிம்மதி
காணுதே!

மகிழ்ச்சிக்கான தேடலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே நிராகரிப்பு – போ. பென்னெட்

dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்



  நிராகரிப்பு

மீண்டும் ஒரு முறை அவன் தான் எழுதிய கதையை எடுத்து வாசித்துப் பார்க்கிறான் அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுதியது தான்தானா என வியப்பாக கூட இருக்கிறது. மிக அருமையாக வந்திருக்கிறது. நிச்சயம் இது பல பரிசுகளை தனக்கு பெற்றுத் தரக் கூடும் அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மிக்க தன்னம்பிக்கையோடு அந்த பிரசுரத்திடம் தன்னுடைய கதையை கொடுக்கிறான். ஆனால் அது சுவற்றில் அடித்த பந்து போல பல விமர்சனங்களோடு பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளாமல் அவர்களால் நிராகரிக்கப் படுகிறது. அவன் சோர்ந்து போகிறான். அவன் நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைவதை அவனால் உணர முடிகிறது.

வீட்டில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள்

 `வீட்டில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள், தயவுசெய்து கீழே உள்ளதைத் கிளிக் செய்யவும்

இங்கு >👉🏼 Pschool.in

`` `உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்```

Tuesday, June 23, 2020

இளமை எண்ணம்




ஓருவன் எவ்வித எண்ணங்களை கொண்டுள்ளானோ அவற்றிற்குத் தக்கபடியே அவன் தோற்றமளிப்பான். அவன் இளமை எண்ணங்களைக் கொண்டிருப்பானாயின் இளமைப் பொலிவுடன் காட்சியளிப்பான். முதுமை எண்ணங்களை கொண்டிருப்பானாயின் முதுமைத் தன்மையுடன் தோற்றம் வழங்குவான்.

இதற்கு காந்தியடிகள், பண்டித நேரு ஆகிய  இருவரின் வாழ்க்கையும் சிறந்த சான்றுகளாகும்.

காந்தியடிகள் தம்முடைய வாணாளின் ஐம்பதாவது மைல்கல்லை தாண்டியதுமே தம்மை கிழவரென்று கருதத் தொடங்கிவிட்டார். எனவே மக்களும் அவரை அப்பொழுதே ‘காந்தி தாத்தா’ என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். அவரும் அப்பொழுதே பல்லெல்லாம் விழப்பெற்று பொக்கை வாயில் புன்னகை மிளிர காட்சி வழங்கலானார்.

Sunday, June 21, 2020

இஸ்லாமிய பாடசாலைக்கு தாளாளராக இருந்த என் தந்தை முஹம்மது யாகூப்

------கணியூர் இஸ்மாயீல் நாஜி
என் கண்களை கசிய வைத்த ஒரு பின்னோட்டம்......
------------------------------------------
என்னுடைய ஐந்து ஆண்டு கால முகநூல் பயணத்தில் முகநூல் எவ்வளவு பயனுள்ளது என்பதை நேற்று முழுமையாக உணர்ந்துக் கொண்டேன்.
என் குடும்ப திருமண விழாவில் என் சகோதரர்களுடன் பிடித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன்.
அதை பார்த்த என்னுடன் தொடர்பில் இல்லாத என் ஊரை சேர்ந்த Hajee Hajee Muhammad Ismayil என்ற சகோதரர் தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
அவருடைய நட்பு வட்டாரத்தில் இருந்த என்னுடன் தொடர்பில் இல்லாத கணியூர் ஹமீத் Kaniyur Hameedஎன்ற சகோதரர் எழுதிய பின்னோட்டம் தான் என் கண்களை கலங்க வைத்தது.

அதில் அவர், என் தந்தை என் மீது வைத்திருந்த பாசத்தை தான் அறிவதாகவும், நான் தேவ்பந்த் மதரசாவில் பட்டம் பெற்று ஊர் திரும்பிய உடன் முதல் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் பயான் செய்து விட்டு குத்பா மேடையில் ஏறி அஸா கோலை கையில் பிடித்து குத்பா ஓத ஆரம்பித்த பொழுது வழக்கம் போல் மிம்பரின் அருகே அமர்ந்திருந்த என் தந்தை ஒரு கணம் தலையை நிமிர்த்தி என்னை பார்த்து விட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்ட பொழுது அவர் முகத்தில் புன்னகையையும் நல்ல ஒரு ஆலிமை நாம் மகனாக பெற்று இருக்கிறோம் என்று பெருமிதம் கொண்டதை தான் அருகே இருந்து பார்த்ததாகவும் உங்களுக்கு, உங்களின் தந்தையின் துஆ இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக வாழ்வீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது எனக்கு புதிய தகவலாக தெரிந்தது. அதை படித்த உடன், என் தந்தையை நினைத்து என் கண்கள் கலங்கியதை என் குழந்தைகளும் கவனித்தார்கள்.

விடியலில் சிரிக்கும்...!

Hilal Musthafa

இறைவன் வழங்கிய ஆனந்தத் தோட்டம்
எங்கெங்கும் காந்த இசையின் ஆட்டம்!

உலகம் முழுவதும் வண்ண ஒளி
ஒவ்வொரு இடமும் அழகின் துளி
உலவும் காற்றில் நிலவின் மொழி
உள்ளொளி போதை மனத்தின் வெளி!
(இறைவன்...)

காலை உதயம் தோரணம் கட்டும்
கலகலப் பென்னும் விந்தை சுற்றம்
மாலை வானில் மேகத்தீ பற்றும்
மதியப் பொழுதோ அனல்புயல் கொட்டும்
(இறைவன்...)

Friday, June 19, 2020

Emaan Fashion Shop / Mayiladuthurai


ஒருகூரைக்குக் கீழே--கடும்

Hilal Musthafa

ஒருகூரைக்குக் கீழே--கடும்
உழைப்போர்தம் வாழ்கை!
ஓட்டைகள் உடைசல்கள்---பிடி
சோற்றுக்கும் அலைச்சல்கள்!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!

வருமானம் குறையவில்லை
வரவுவகைக்குத் தடைமுமில்லை
தருகின்ற இலவசமோ
தட்டில்லை பட்டில்லை!

Thursday, June 18, 2020

உப்புக் காற்றும் கருவேலங் காடும் !

உப்புக் காற்றும் கருவேலங் காடும் !




கதவைச் சாத்திவிட்டு
கலைந்து போக
காலைக் கருக்கலாகிவிடும்

‘இரவு 10 மணிக்கு மேல்’
என்றழைக்கப்பட்ட திருமணங்கள்
நள்ளிரவைத் தாண்டியே
கைகோத்து விடப்படும்

விளக்கனைக்கப்பட்ட
தனியறையில்
தொட்டும் தொடர்ந்துமென
இளமை இளைப்பாறும்

மாமியார் வீட்டுச் சாப்பாட்டில்
மஸ்த்து கூடிப் போக
கட்டில் பிடித்துப் போகும் !

Wednesday, June 17, 2020

பார்க்க மற்றும் கேட்க படங்கள் ,காணொளி


அப்பா கோபத்தோடு தலையில் குட்டி வைக்கிறார்..

அப்பா கோபத்தோடு
தலையில் குட்டி வைக்கிறார்..

அவனுக்கு
கோபம்
இல்லை..
அழுகை
வருகிறது..

அம்மா முகத்தில் கோபத்தை காட்டி வார்த்தையால்
வெட்டி வைக்கிறார்.

அவனுக்கு
கோபம்
எள்ளளவும்
வரவில்லை..
வெப்ராளம்
வருகிறது..

அருள் கெடுபிடி...!

Hilal Musthafa

வானக் கடலில்--மேகம்
வக்கணை செய்கிறது!
(வானக்...)
வெளுத்துத் திரண்டு---பஞ்சுப்
பொதியாய்ப் படர்கிறது!
(வானக்...)

மண்ணில் வெக்கை மனிதன் உச்சி
மண்டையில் நரக நெருப்பை வரைகிறது
கண்ணில் சூடோ நிறைகிறது!
( வானக்...)

சொட்டுத் தண்ணீர் பட்டுத் தெரித்து
சுகம்தர மறுத்து முரண்டு பிடிக்கிறது
விட்டுத் தொலைத்து கடக்கிறது!
(வானக்...)

ஜாதி வழி கோட்டையிலே


ஜாதி வழி கோட்டையிலே
தண்டாக்கறேன் பேட்டையிலே
ஏக ஜன கூட்டமடி தங்கமே
எமன் வந்தால் ஓட்டமடி தங்கமே

எத்தனையோ கோடி ஜென்மம்
இருக்கும் உலகத்துண்மை
அறிந்தவன் ஞானியடி தங்கமே
அதையறிந்து தேறுமடி தங்கமே

Tuesday, June 16, 2020

யாரடா...!

எழுதியவர் Hilal Musthafa

யாரடா...!

யாரடா ! அங்கே எழுந்துநிற்பவன்--நல்ல
இலக்கணம் தப்பிய பழுதுடையவன்?
( யாரடா...)

எழுச்சி ஒன்று எழுந்திட வேண்டும்
இளைய காற்று நிகழ்த்திட வேண்டும்!
பழியினை அள்ளி வீசிடும் போதும்
பாவச் சேற்றைப் பூசிடும் போதும்...!

பல்லினை இளித்துக்
கரத்தினைக் குவித்துப்
பணிந்திட மாட்டோம்!
உள்ளினில் தயக்கம்
உடலினில் நடுக்கம்
அணிந்திட மாட்டோம்!
(யாரடா...)

இது_இன்றைய_புதிய_செய்தி

Suhaina Mazhar
12 hrs ·
#இது_இன்றைய_புதிய_செய்தி

முதன்முறையாக கொரோனா வைரஸுக்கு எதிரான உயிர்காக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார்கள். இதை முன்பே கண்டறிந்திருந்தால் லட்சக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றி இருக்கலாமே என்று இங்கிலாந்து மருத்துவ வல்லுனர்கள் கவலைப்படுகிறார்களாம்.

இத்தனைக்கும் இது ஒன்றும் புதிய மருந்தல்ல. 1960ம் ஆண்டு முதல் பரவலாக உலகமெங்கும் பயன்படுத்தப்படும் மிக மிக விலை மலிவான மருந்து தான். Dexamethasone என்று சொல்லக் கூடிய இந்த ஸ்டீராய்டு பயன்படுத்தும் போது...

கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் "இவர்களைக் காப்பாற்றவே முடியாது, உறுதியாக இறந்து விடுவார்கள்..." என்று கைவிட்ட கேஸ்களில் ஐந்து பேரில் நான்கு பேரின் உயிரைக் காப்பாற்றி விடலாமாம்... அதாவது இப்போது இருக்கும் இறப்பு எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காக இது குறைத்து விடுமாம்...

பழகிட வயது தடை இல்லை ,

Haja Maideen


பழகிட வயது தடை இல்லை ,
பயன் அற்ற பழக்கம் பழகிட தேவை இல்லை ..!

முதுமையால் விலகிடாத
முக நூலில் முகம் மலரும் முக்கிய மா மனிதர் .

சர் பட்டம் வழங்கிட சகல தகுதியும்
சற்றும் குறையாதவர் ..

ஓய்வு நேரங்களில் மட்டுமல்ல ,
ஓயாது நான் படிக்கும் உயர்தர
உற்சாக புத்தகம் இவர் ... !

Monday, June 15, 2020

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் . ..

Yembal Thajammul Mohammad

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் . ..

வாழ்த்த வேண்டியதுதானே ?

இல்லை ... அதில ஒருத்தர் - மாப்பிள்ளை -முஸ்லிம் ...

உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஃபேஸ்புக் எங்கும் இதே பேச்சா இருக்கு ...

அதனால ...

இது இஸ்லாத்தின் பார்வையில கூடுமா?

நீங்கதான் அந்த மாப்பிள்ளையா?

ஐயையோ ... நான் இல்லைங்க ...

அப்போ உங்களுக்கு என்ன பிரசனை?

அதுதான் சொன்னேனே ...இது இஸ்லாத்தின் பார்வையில கூடுமா?

பொதுவாக ஒரு கருத்து இருக்குமானால்

Saif Saif
பொதுவாக ஒரு கருத்து இருக்குமானால் அதை சார்ந்த பல கருத்துக்கள் அதனூடே காணப்படும்..

அருள்மறை குர்ஆனிலும் கூட இப்படி தான்.. இறைவன் ஒரு தீர்வை சொல்லி விடுவான்.. ஆனால் அதை அடையும் வழிமுறையை அதன் ஊடாக தான் சொல்லி வைப்பான்..

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்”(9:51)

"அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால்
அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை."
(10:107)

THE PSYCHOLOGY OF CORONA

·
Vavar F Habibullah

பெரிய திட்டங்கள் சிந்தனைகள்
இப்போது தேவை இல்லை.
ஒரு வருடம்(short term)
ஆரோக்கியமாக வாழ
முயற்சி மேற்கொள்ளுங்கள்.
சொந்த மாநிலம் அல்லது சொந்த
ஊர் வசதி என்று எண்ணாதீர்கள்.
இருக்கும் இடம்,ஒரளவுக்கு வசதி
என்றால் அங்கிருந்து வேறு இடம்
தாவாதீர்கள். பயணம் மேற்கொள்
வோர் இப்போது சூழ்நிலை கைதி
கள் போல், ‘குவாரண்டைன் தனி
மையில்’ வாழ வேண்டும். இது
மேலும் மன அழுத்தம் தரும்.

Sunday, June 14, 2020

சுபஹ் தொழுகையின் அருமை

இக்ரர பேசன் கடையின் காட்சி

ஒரு சிறிய கதை...படித்ததில் மனதை கவர்ந்தது:

ஒரு சிறிய கதை...படித்ததில் மனதை கவர்ந்தது:
★★★★★★★★★★★★★★★

ஓர் வார இறுதி விடுமுறைக்குபின்
திங்கட்கிழமை  காலை
வகுப்பினுள் நுழைகிறார்
ஆசிரியை சுமதி.
.
அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.
.
அது ...
வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து
'Love you all!' என்று சொல்வது.
.
தான் சொல்வது பொய்யென்று
அவருக்கே தெரியும்.
.
ஆம்!
அந்த வகுப்பிலுள்ள
ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.

என் பார்வையில் அழகிய இஸ்லாம்

வணக்கம்
(என் பார்வையில் அழகிய இஸ்லாம்)

சிறப்பு கட்டுரை..........
பிறந்த மண்ணில் வாழமுடியாத சூழ்நிலையில்

அந்நிய தேசத்தில் அகதிகளாய் அடைக்கலம் ஆகி, இன்று அழகிய முக நூல் தளத்தில் என் தமிழ் உறவுகள் (இந்துக்கள்-கிருஸ்தவர்கள்-இஸ்லாமியர்கள்) பல ஆயிரம் பேர் படிக்கும் என் முக நூல் தளம்.......

இறைவனால் உலக மானிட சமூகத்துக்கு இறுதியாக சொல்லப்பட்ட வேதம் திருக்குர் ஆன்.

இஸ்லாத்தின் மீதும் -இஸ்லாமியர்களின் மீதும் மத வெறியர்களுக்கு (மாற்று மத சகோதர -சகோதரிகளுக்கு அல்ல, தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவை)

மத வெறியர்களுக்கு மட்டும்.

இந்த வேதத்தை 5ஆண்டுகள் (திருக்குர் ஆன்னை)

ஆய்வு செய்து 10செமஸ்டர் எழுதி 100% வெற்றி பெற்று கோல்ட் மெடல் வாங்கினேன் PhD.

Saturday, June 13, 2020

படிக்கிற வயசுல தான் படிக்கனும்டா தம்பி || E.M.HANIFA || ISLAMIC SONGS

கண்ணான கண்மணியே! யா ரஸூல்லலாஹ்!

Abdul Kaiyoom Baqavi

உதவிகள் இறைவனுக்காக இருக்கட்டும்!!

Abdul Kaiyoom Baqavi

மன கஷ்டங்களுக்கு நபி(ஸல்)கூறிய மருந்து | Tamil Muslim Tv | Tamil Bayan |...

கொரோனாவை நீக்கி - எம்மை காப்பாற்று அல்லாஹ்

எழுதிப் படித்தவர் M.S. Abdul Kaiyoom Baqavi Singapore
Abdul Kaiyoom Baqavi

 

தமிழ் முஸ்லிம்கள்

தமிழ் முஸ்லிம்கள் (Tamil Muslim) எனப்படுவோர் இஸ்லாமிய சமயத்தை சார்ந்த தமிழர்கள் ஆவர்.

பொருளடக்கம்
1 பெயர் காரணம்
2 வரலாறு
3 நபிதோழர்களின் வருகை
4 குதிரை வணிகர்கள்
5 இந்து முஸ்லிம்களின் பரஸ்பர தானங்கள்
6 அரபு வணிகர்களது குடியிருப்புகள்
7 இஸ்லாமிய ஞானிகளின் செயல்பாடுகள்
8 இலக்கியங்களில்
9 அமைச்சரவையில்
10 பாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்
11 இஸ்லாமும் தமிழர்களும்
12 மக்கள் தொகை
13 தமிழ் இலக்கியப் பங்களிப்பு
14 இவற்றையும்பார்க்க
15 மேற்கோள்கள்
பெயர் காரணம்
சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.[1] மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி, பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட, அதுவே லப்பை என்றானது.

தமிழ்முஸ்லிம்



இறைசிந்தனை தன்னை அறிதல்!

Noor Saffiya

காணும் சொரூபமெலாம்!
கத்தன் மழ்ஹரென்றே!
பேணி ஷுஹுது செய்தே!
படைத்தோன்முன்னே
பாசநபியுடனே கரம்
பற்றிருப்போம்! நாம்.

சிந்தையில் எந்நேரமும்
சர்தாரின் நினைவே!
சிகரம் காண்பதற்கு
ஷெய்கின் வரமே!
சங்கையுடனே முதலில்
பெறும் வாக்கே!
சிறிய இவ்வுலகினிலேயே
பெறும் பேரின்பம் காணுமே!

இது ஒருவகைக் காதல்....!

Hilal Musthafa

ஆஹாஹா அவள்பொழியும்
அருளுக்கு இங்கேதான் எல்லை ஏதம்மா!

அந்தப்புரம் மிஞ்சும்லீலா
அருவிதரும் ஆனந்த போதை தானம்மா!
(ஆஹாஹா)

விண்முகட்டில் மண்புறத்தில்
பொன்னெழிலைச் சிந்திசிந்தி
மின்ன வைக்கின்றாள்!
வண்ணம்கொட்டி ஒன்றையொன்று
வாரித்தழுவி இன்பவெறியில்
பின்ன வைக்கின்றாள்!
(ஆஹாஹா)

Friday, June 12, 2020

This Is All You Need To Know About Chettinadu Sculpture

PHYSIOTHERAPY CLINIC பிசியோதெரபி கிளினிக்

PHYSIOTHERAPY CLINIC
பிசியோதெரபி கிளினிக்
Dr. MOHAMED KASSIM (PT)
BPT, GCOMT (Aus), Dip.SportsPT (UK)
PHYSIOTHERAPIST
Dr. முகம்மது காசிம் (PT)
BPT, GCOMT (Aus), Dip.SportsPT (UK)
பிஸியோதெரபிஸ்ட்
20 வருடம் முன் அனுபவம் உள்ளவர்
https://www.mayilai360.online/physiotherapy-clinic
New Physiotherapy Clinic 🏥 by a 20 years experienced Physiotherapist

opening from Monday , 15th June 2020 in Mayiladuthurai

அபுதாபியில் தற்போது புதிய மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 அபுதாபியில்  தற்போது புதிய மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.    இது கலீஃபா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி.  இதில் சேரக்கூடிய முதல் பேட்ச் மாணவர்கள் அனைவருக்கும் 5 ஆண்டுகளுக்கும் இருப்பிடத்துடன் கூடிய கல்வி இலவசம்.  மெடிக்கல் துறையில் படிக்க விருப்பம் உள்ள நம் சமுதாய மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 ஜசாக்கல்லாஹ்


அப்துல் லத்தீப்
ஆலியா பாத்திமா மக்தப் மதரஸா S.N.M நகர் தஞ்சாவூர்


விபரங்களுக்கு
https://www.ku.ac.ae/academics/college-of-medicine-and-health-sciences/

ஷாக்கைக் குறைப்போம்


ஷாக்கைக் குறைப்போம் 
Shahjahan R

அரசு அலுவலகங்களுக்குப் போகும்போது, ஆள் இல்லாத அறையிலும் பேன் ஓடிக்கொண்டிருக்கும், லைட்டுகள் எல்லாமே எரிந்து கொண்டிருக்கும். நீங்கள் பொது விஷயங்களில் அக்கறை உள்ளவர் என்றால், மனதுக்குள் கோபம் பொங்கும். ஒவ்வொரு மாதமும் வீட்டு மின்சாரக் கட்டண பில் வந்ததும் ஷாக் அடித்ததுபோல உணர்ந்தது ஞாபகம் வரும். எல்லாம் நம்முடைய பணம்... இவனுக வீட்டுப்பணமா இருந்தா இப்படி வீணடிப்பாங்களா என்று கோபத்தில் மனதுக்குள் திட்டுவீர்கள்.

உங்களுடைய தார்மீகக் கோபம் மிகச்சரியானதே. சரி, உங்களுடைய வீட்டுப் பணத்தை நீங்கள் வீணடிக்கவில்லையா என்ன? எங்கே நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள், நீங்களும் வீணடிக்கிறீர்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? சொல்கிறேன்.

நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹூதாவில் தேரிழந்தூர் தாஜூதீன்

பாடகர் மாலிக்கின் வாழ்த்துப்பா

எதையும் இழக்கலாம் ஆனால் ஈமானை மட்டும் இழக்கக் கூடாது

94. இதய விசாலம்!

94. இதய விசாலம்!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94: அஷ் ஷர்ஹூ)


அழுக்கு எண்ணங்கள் புகுந்து
சறுக்கி விடாமலும்
அன்பு உள்ளத்தில் நலிந்து
வெறுப்பு மிகாமலும்

விளக்கு ஒளிரும் சுடரென
வெளிச்ச மயமாக்கும்
ஆன்ம அறிவால் உள்ளம்
விரித்தளித்தோம், அன்றோ?

கனத்தச் சுமையாய் முதுகை
முறித்த எடையை
இறக்கி வைத்துமக்கு
இலக்கை இலேசாக்கினோம்!

ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்காவின் #அடிமைகளாக_மாற்றப்பட்ட_வரலாறு அத்தியாயம் - ஆறு

Abu Haashima





கோழி ஜார்ஜ் கோழிச் சண்டைகளின் நுட்பங்களை மிக நன்றாகவே தெரிந்து கொண்டான். வயதான மிங்கோ மாமா ஒருநாள் இறந்துபோனார். அதன் பிறகு ஜார்ஜ்தான் கோழிப் பண்ணையின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.
பல பந்தயங்களுக்கு மாசா டாம்லீயுடன் சென்று நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தான்.

இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாசா வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த #மாடில்டா என்ற அடிமைப் பெண்ணைக் காதலித்தான். பிறகு ஒருநாள் டாம்லீயின் அனுமதியோடு அவளை திருமணமும் செய்து கொண்டான்.

குழந்தைகள் மனஅழுத்தம்

குழந்தைகள் மனஅழுத்தம்
Vavar F Habibullah

மனஅழுத்தம் குழந்தைகளுக்கு
வருமா என்று நிறைய பெற்றோர்
இப்போது கேள்வி கேட்கிறார்கள்

இரவில் தூக்கம் இல்லை
காலையில் தூங்கி எழுந்ததும்
அதிக சோர்வு. படிப்பதில்
ஆர்வம் இல்லை. ஜங்க் ஃபுட்
களில் அதிக ஆர்வம். வீட்டில்
எல்லோருடனும் சண்டை
கோபம், கடைசியில் அழுகை
இதுவே தாய்மார்கள் தங்கள்
குழந்தைகள் பற்றி தரும் ஒரு
ஜெனரல் அவுட்லைன்

Thursday, June 11, 2020

தமிழ்முஸ்லிம் என்று சொல்வதேன்?


அண்ணா, நான் தமிழ்ஹிந்து என்று என்னை என்றும் சொல்லிக் கொண்டது கிடையாது. தமிழ்முஸ்லிம் என்று ஒரு முகநூல் பக்கம் தொடங்கி ஒரு தமிழ் ஆர்வலர் பிரகடனம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. வெல்வது மனிதநேயமாகட்டும். நன்றி.

நீங்கள் தமிழ்ஹிந்து என்று உங்களைச் சொல்லிக்கொள்வதும் சொல்லாமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஆனால், அப்படிச் சொன்னால் அது சரியானதுதான், அதில் பிழை என்று ஏதும் இல்லை.

தமிழ் எங்கள் மொழி இஸ்லாம் எங்கள் வழி அதுவே தமிழ்முஸ்லிம்.

இது யாரையும் நோகடிப்பதற்காக அல்ல. எந்த ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிப்பதற்காகவும் அல்ல.

Wednesday, June 10, 2020

பெருமானாருக்குப் பிறகு

என் வலைத்தளம் சென்று பார்க்கத் முடியாதவர்களுக்காக இங்கே 
=========================


ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருக்கும் சகோதரர், நண்பர் ரமீஸ் எனக்கு சமீபத்தில் பிடிஎஃப் வடிவில் ஒரு ஆங்கில நூலை அனுப்பியிருந்தார். நான் படிப்பேன் என்று அவருக்குத் தெரியும். 269 பக்கங்கள். AFTER THE PROPHET என்று தலைப்பு. Lesley Hazleton என்ற பெண் எழுத்தாளர் எழுதியது. மூன்று நாட்களாகப் படித்துக்கொண்டிருந்தேன். நேற்று முடித்துவிட்டேன். 
பெருமானாருக்குப் பிறகு ஷியா, ஸுன்னி என்று சமுதாயம் பிரிந்த வரலாறு. பெருமானாரின் மறைவில் தொடங்கி கர்பலாவில் முடிகிறது. பேரர் ஹுஸைனும் அவரது குடும்பத்தினர் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டதுவரை சொல்லப்படுகிறது. 
இது ஒரு ஷியா சார்பான நூல் என்று சொல்ல முடியாது. ஆசிரியை யார் பக்கமும் சாயவில்லை. 
முதலில் என்னைக் கவர்ந்தது அவரது அழகிய ஆங்கிலம். விஷயங்களை அவர் சொல்லிச் சென்ற விதம். வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நேரிலேயே பார்த்த மாதிரி எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பு என்று சொல்லுவேன்.

Emaan Fashion Shop ஈமான் ஃபேசன் கடை

நீடூர்-நெய்வாசலில் புதிய உதயம் இக்ரா பேஷன்

நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹூதாவில் தேரிழந்தூர் தாஜூதீன்

அன்பே என் அன்பே

Nagore Rumi Books in Tamil and English

Nagore Rumi on Fear Segment 5

இறைசிந்தனை அங்கம் ஓர் அழகிய அற்புத ப்ரபஞ்சமே!


Noor Saffiya


அல்லாஹ் அங்கத்தினை
அழகாக்கியே தந்தான்!
அது,தலை,முகம்,கை,
நெஞ்சு,வயிறு,கால்! என
அன்றி, இன்னுமிருக்கு! என
அது நம் யாவருமறிந்ததே!

மண்டையின் கவசமென
தந்தானே!
மூளையின் வேலையை
மறைக்கவே!
முன்னோன் கைவைத்தே
முழுமையாய்!
முழுமனதோடு உலகில் அனுப்பினானே!

அங்கத்தின் செயல்பாடு
யாவற்றையுமே!
அதன் தன்மையின்
அடிபணிய வைத்தானே!
அதிலே சிந்திக்கும்
சிந்தை பொதித்தானே!
சுபுஹானல்லாஹ்!

Sunday, June 7, 2020

உலகத்தில் சிறந்த ஒன்று! / காயம்பட்ட முல்லா.


Samsul Hameed Saleem Mohamed 

உலகத்தில் சிறந்த ஒன்று!
முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். அவர் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் மன்னர் உணவருந்தும் போதெல்லாம் தன்னுடன் முல்லாவையும் அமர வைத்துக் கொண்டு இருவரும் உரையாடி மகிழ்ந்த படியே உணவருந்துவார்கள்!
ஒருநாள் இருவரும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.
மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்காவின் #அடிமைகளாக_மாற்றப்பட்ட_வரலாறு அத்தியாயம் - ஐந்து

Abu Haashima

·







#லூதர் ....
மாசா வாலரின் வண்டி ஓட்டியாக இருந்த கறுப்பு அடிமை.
ஒரு அடிமைப்பெண் தப்பியோட உதவி செய்தான் என்பதற்காக
அவனை போலீசில் பிடித்துக் கொடுத்து அடிமைச் சந்தையில் விற்கச் சொன்னார்மாசா வாலர் .
கதறக் கதற ஷெரீப் அவனை இழுத்துச் சென்று அடிமை வியாபாரியிடம் விற்று விடுவான்.

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்க #அடிமைகளாக்கப்பட்ட_வரலாறு ... அத்தியாயம் - நான்கு

Abu Haashima is with M S Abdul Hameed.



#பிடிலிஸ்ட் ...
#வேர்கள் நாவலின் ஒரு முக்கிய கதாபாத்திரம் பிடிலர்.
( பிடில் வாசிக்கக் கூடிய ஒருவருக்கு M.S.அப்துல் ஹமீது அவர்கள் சூட்டியிருக்கும் அழகான தமிழ் வார்த்தை பிடிலர்.)

பிடிலர் ஒரு கருப்பு அடிமை.
அவர் பெயர் தெரியாது.
அவர் நெடுநாட்களாக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்கிறார்.
அவரும் கை அடிபட்டு வில்லியம் வாலரால்
காப்பாற்றப்பட்டு அவரிடமே வேலை செய்கிறார்.

பிடிலருக்கு வயதாகிவிட்டது. ஆனாலும் அவருக்கு விடுதலைக் கிடைக்கவில்லை.
பிடிலர் நன்றாக பிடில் வாசிப்பார்.
அதனால் அவரை பிடிலர் என்றே எல்லோரும் அழைத்தார்கள்.
ஒருநாள் மாலை உணவை உண்டுவிட்டு வழக்கம்போல் குண்டா குடிசையின் வெளியே வந்தான்.
அப்போது குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியிலிருந்து ஒரு கிழவனை வண்டியோட்டும் கருப்பன்
இறக்கி விடுவதைக் கண்டான்.
கிழவனின் கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
வண்டியிலிருந்து இறங்கிய கிழவன் தன்னோடு ஒரு பெட்டியையும் எடுத்துக் கொண்டு தன குடிசைக்குச் சென்றான்.
குன்டாவுக்கு அந்தக் கிழவன் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
நொண்டிக் கொண்டே கிழவனின் குடிசைக்குச் சென்றான். இவனைக் கண்டதும் கிழவன் கோபத்தோடு
" போ போ ... நீ ஒரு ஆப்பிரிக்க நீக்ரோ " என்று விரட்டினான்.