யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?
யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.
// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr
'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts
Saturday, November 29, 2014
Tuesday, August 12, 2014
இதுதான் இஸ்லாம்
ஓ.... மன்னா!
நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்
சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்
நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்
சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்
Friday, July 18, 2014
எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி
இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:
எழுத்தால் போட முடியாத எடை .........
கவிஞர் வாலி
பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த
பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல்
புகுவாரோடு பழகி நின்றவன்!
அவர்களது அன்பை ஆரா
அமுதமாய் தின்றவன் !
என் ஒவ்வொரு பருவத்திலும்
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்
இஸ்லாமிய இனத்தவர்
அவரெலாம் - தண்ணீர் கலவா தாய்ப்பால் மனத்தவர் !

Friday, January 17, 2014
இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு!
சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான்
இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:
நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.
இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.
Thursday, December 12, 2013
ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்
ஓரினச்சேர்க்கை ஒரு அருவருப்பான செயல் என்றும் மானக்கேடான செயல் என்றும் இஸ்லாம் தெளிவாக சொல்வதுடன் அச்செயலில் ஈடுபட்ட ஒரு சமுதயத்தைக் கல்மாறி பொழிந்து அழித்தாக குர்ஆன்கூறுகிறது
குர் ஆன் “
27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்
29:28 وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ
Sunday, December 1, 2013
பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.
உடல் நன்றாக இருக்க இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் கோளாறு ஏற்படின் உடல் பாதிப்பு ஏற்படும் .ஊர் ஒற்றுமை உடலின் இதயம் போல் . உலகமே நம் கையில் கிடைத்தாலும் இதயம் கெட்ட பின் பயனில்லை.
ஒற்றுமை பற்றி நிறைய பேசி சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் எல்லா முயற்சிகளும் எடுத்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் .விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. '.ஊர் இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம் ' என்பது அனைவரும் அறிந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பதவிக்கு வருமுன்பு அந்த பதவிக்கு வருபவர் தான் அந்த பதவிக்கு தகுதியானவரா! என சிந்திக்க வேண்டும் . அவர் சேவை செய்யும் மனமுடையவராகவும் அதனை திறம்பட செயல்படுத்தக் கூ டியவராகவும் இருக்க வேண்டும் . பதிவியினை ஒருவருக்கு கொடுத்த பின் அவருக்கு மதிப்பளித்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.
Tuesday, November 12, 2013

Sunday, October 20, 2013
நமது கோளாறு
அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்து லில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?
இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
Tuesday, August 13, 2013
ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?
எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.
அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.
இதில் பாய் எங்கிருந்து வந்தது?
ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.
விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.
என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
பாய் பாய் என்றா?
இல்லை.
அது தவறாக அழைப்பு.
சரியான அழைப்பு ”சகோ” என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.
பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?
இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.
உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.
பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.
Tuesday, December 25, 2012
இஸ்லாம் என்ன போதிக்கின்றது?(காணொளியில் ஆங்கிலத்தில் காண்க)
இறைவனை புகழும் நேரத்தில்
இதயத்தில் ஒளி பிரகாசிக்கின்றது
மனம் மகிழ்வால் பொங்குகின்றது
விழிகளில் கண்ணீர் வடிகின்றது
இறைவனது அருளை நாடி நிற்கின்றது
இறைவன் அருள் அளவில் அடங்காது நிற்கின்றது
இறைவனை நினைத்து வேண்டிய கை நிறைகின்றது
இறைவனை நினைத்து வேண்டி மனதோடு உடல் தொழுகின்றது
இறைவனை இறைஞ்சுவனின் நெஞ்சம் நிறைகின்றது
இறைஞ்ச வேண்டிய இறைவன் நீயன்றி வேறு இறைவனில்லையே
இறைவனின் இறுதி இறைத் தூதர் முகம்மது நபியே(ஸ .அ)
இஸ்லாத்தின் அடிபடைக் கொள்கை இதுதானே! Quran 13:11 says: Verily, God does not change men's condition unless they change their inner selves...
....எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.- Quran 13:11

Friday, December 7, 2012
படித்ததோ மார்க்க மகிமை அறிய சொல்வதோ மந்திர மகிமை !
'அதிசியம் ஆனால் உண்மை அவரிடம் போனேன்'
தொலைந்தது கிடைத்ததென்பார்
அற்புதம் தடவினார் ஊதினார் மற்றும் ஒதினார் உடல் நலம்
அற்புதம் தடவினார் ஊதினார் மற்றும் ஒதினார் உடல் நலம்
நலமுற்றேனென்பார்
அற்புதமும் அதிசியமும் அவரைக் கொண்டு நிகழுமென்பார்
அற்புத அதிசிய மனிதரை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதும்
அற்புத அதிசிய மனிதர் தன் நலம் பார்க்க மருத்துவரை நோக்கி ஓட்டம்
ஆயிரம் இருக்க இஸ்லாத்தின் மகிமையப் பற்றிச் சொல்ல
பாயிரம் பாடுவார் இஸ்லாத்தில் இல்லாததை இட்டுக் கட்டி
படித்ததோ மார்க்க மகிமை அறிய சொல்வதோ மந்திர மகிமை
வேதம் படித்து விளக்கம் பெற்று தன் பை நிரப்ப திட்டம் போடுகிறார்
சூன்யம் மந்திரம் அற்புதம் அதிசியம் இதன் மேல் ஈடுபாடு
காந்தம் போல் மக்களை அதை சொல்லி இழுக்கும் நிலைப்பாடு
சிக்கலை தவிர்க்க இவரிடம் சென்றால் மற்றொரு சிக்கலில் மாட்டிவிடுவார்
நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது
இவர் கொண்ட நம்பிக்கை அதிசியத்தின் மீது
விண்மீன்கள் நகர்வது இறைவனின் நாட்டம்
விண்மீன்களை வைத்து இவர் பணம் பண்ணுவது அதிர்ஸ்டத்தை சொல்லி
கிரகணங்கள் நிகழ்வதால் மனிதனின் நிகழ்வுகள் மாறுமோ!
வைரத்தை வகையாகப் பிரித்து அதில் அதிர்ஸ்டத்தை புகுத்துவார்
அமைதியும் ஆற்றலும் நம்மிடமிருக்க நட்டாற்றில் விடுபவரை நாடுவது ஏன்?
அறிவின் ஆற்றல், உழைப்பின் உயர்வு உம்மோடு உயர்ந்து நிற்க மாயைகள் மீது பிடிப்பு ஏன்?
தாங்காத உள்ளம் தளர்ச்சியைத் தூண்டும்! தற்காலிகமானதை நிலையாக்கிக் கொள்ளும் முடிவு ஏன்?
தவறு தற்காலிகமானதாகப் போகட்டும் நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்
சோதனைகள் செயல்படுத்த துடிக்கின்றன
வேண்டாதவரை வேண்டி நிற்கின்றன
வேதனைகள் கொப்பளிக்கின்றன தகாதவரை தேடியதால்
ஏகத்துவம் என்பதனை அறியவில்லையா?
மனமே மறந்து விட துடிக்காதே! மாட்சிமை மிக்க வல்லோனை
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
எழுதியவர் முகம்மது அலி
இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்

Monday, November 12, 2012
கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள்.
பேஸ் புக்கில் சில முஸ்லீம்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக எழுதுவதோடு தங்களது கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள். படமோ அதிகம் . இஸ்லாத்தின் உள்ள சிறப்புகளை சொல்வதில் சிறப்பு .சிந்தனை நமக்கும் நல்வழி காட்டுவதோடு மற்றவருக்கும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும். கடையில் உயர்ந்த, நிறைவாக சரக்கு இருப்பினும் சரியான முறையில் விற்பனை செய்யும் திறன் அற்றோர் இருப்பின் சரக்கு விற்பனை ஆகாது தங்கி விடும்.
இஸ்லாம் உயர்வானது என்று சொல்லும் நாம் அதனை முதலில் முறையாக தொடந்து செயல் படுத்துகிறோமா என்ற சுய சிந்தனை தன்னாய்வு வேண்டும் . வார்த்தைகள் விளையாடி பயன்தரா. செயல்பாடு சிறப்பு தரும் . அன்பு வழி நாடி செயலில் ஈடுபட முயல்வதே உயர்வு.
வார்படம்கொண்டு அச்சடிக்கும் வகையாக இல்லாமல் சொல்வதை சிறப்பாக மனதை தடவி விடுவதுபோல் ஒரு ஔடதமாக அமைய வேண்டும் .கவர்ச்சி வேண்டாம் கனிவு வேண்டும். சுவனம் மற்றும் நரகத்தையே பேசி இறைவன் தந்த இனிய கருத்துகள் எடுத்தாளப் படாமல் விடுபட்டுப் போகின்றன.
Tuesday, October 2, 2012
ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூ
அ . ஆஷிக் அஹ்மத் அவர்களின் எதிர்க்குரல் தளத்தை பற்றி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...
இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.
தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூவின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்
இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்...
பதிவுகளின் பட்டியல்:

Sunday, September 23, 2012
இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்
by நீடூர் A.M.சயீத்
இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்
கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது. ஒரு முறை கற்பை இழந்தால் திரும்ப பெற முடியாத இழப்புதான். ''கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை'' என்று சொல்வர் ஆன்றோர்கள். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் கற்பு என்ற தத்துவமே மறு பரிசீலனைக்கு உரியதாகிவிட்டது. பொருளாதாரப் பிரச்சினையால் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும், திருமணமாகாத பெண்கள் இருப்பதாலும், பத்திரிகைகளிலும், படங்களிலும், காமஉணர்வைத் தவறுதலாக புரிந்து கொண்டு கல்வி கூடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகும் நிலையினாலும், கற்பழிப்பு குற்றங்கள் கணக்கிலடங்காமல் வந்து கொண்டிருக்கின்றன.
குற்றங்கள் மலிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சினிமா என்னும் ''ஆக்டோபஸ்'' ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும் பாவங்களில் ஒன்றான சினிமா சமூகத்தின் வாழ்வை, அதன் பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பல முனைகளிலும் தாக்கி சீரழித்து வருகிறது.''காட்டும் திரைப்படத்தில் கற்பில்லை பொறுப்பில்லை. கல்லூரி பாடத்தில் வாழ்க்கை நம்பிக்கையில்லை. நாட்டில் ஒருமைபாடில்லை. எனவேதான் நாம் விழாக்கள் கொண்டாடல் சரியில்லை'' என்று பாடினான் ஒரு கவிஞன். காம உணர்வைத் தூண்டும் காட்சிகள் போதாதென்று பொருந்தாக் காமம், முறைதவறிய காமம், வக்கரித்துப் போன காமம் ஆகியவற்றையும் கட்டுரைகளிலும், கதைகளிலும் நவீனங்களிலும் இடம் பெறச் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக கோபத்தினால் செய்யும் பாவங்களை விட, ஆசையினாலும், காமத்தினாலும் செய்யும் பாவங்கள் அதிகமாக வருகின்றன என்பதே கசப்பான உண்மை.

Tuesday, September 18, 2012
"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்"
எங்கள் அன்புக்குரிய இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களை எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கின்றோம் அவர் மீது இருக்கும் மீது உள்ள பாசமும் , நேசமும் உலகம் உள்ள அளவும் மாறாது குறையாது அது கூடிக் கொண்டே இருக்கும். "ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்" கொடுத்தாலும் இஸ்லாம் போதித்த ஓர் இறைக் கொள்கையையும் குர்ஆன் போதித்த கொள்கைகளையும், இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் மீறி நடக்க மாட்டோம் .
"ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன்" என்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)
நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)
நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)

Sunday, September 2, 2012
இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.
சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......
முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....
இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.
அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).
பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................
"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.
இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,
என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.
என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.
என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,
"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது"
இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.
ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.
"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"
அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

Friday, August 31, 2012
முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?
இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.
இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.
இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.
தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.
அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.
ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.
பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.
அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.
இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.
Wednesday, July 25, 2012
இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?
இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?
டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.
இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.
இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.
இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.
உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

Saturday, June 30, 2012
இசை - ஓர் இஸ்லாமியப் பார்வை !
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரைநிருபர் தளத்தில், ‘அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதும், இதன்
தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களில், இஸ்லாத்தில் இசை கூடும் என்று அன்பு சகோதரர் ஒருவரால் ஒரு சில வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை, இருப்பினும், அறிவைத் தேடும் முயற்சியில், இசை வெறுக்கப்பட வேண்டியதா? என்ற கேள்வியுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். மனிதன் என்ற முறையில் இந்தப் பதிவில் தவறு இருப்பின், அதற்குப் பொறுப்பு நானே. இந்த ஆய்வு சரியாக இருந்தால், அதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே.
அதிரைநிருபர் தளத்தில், ‘அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதும், இதன்
தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களில், இஸ்லாத்தில் இசை கூடும் என்று அன்பு சகோதரர் ஒருவரால் ஒரு சில வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை, இருப்பினும், அறிவைத் தேடும் முயற்சியில், இசை வெறுக்கப்பட வேண்டியதா? என்ற கேள்வியுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். மனிதன் என்ற முறையில் இந்தப் பதிவில் தவறு இருப்பின், அதற்குப் பொறுப்பு நானே. இந்த ஆய்வு சரியாக இருந்தால், அதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே.Wednesday, June 13, 2012
இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6
”தடுக்கப்பட்டிருந்தால்” என்ற ஒரு சொல்லை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது நாகரிகமான செயல். பலரும் ஐயமே அற்றவர்களைப்போல தடாலடியாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை அடுத்தவர்களின்மீது ராணுவத்தனமாகப் புகுத்தப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இஸ்லாத்தில் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பிழை அவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அவர்களின் பிழை அழகாகத்தெரியும் அவர்களும் மிக அழகாக ஓர் நகைப்பை அள்ளித் தெளிப்பார்கள்.
குரல் வழி இசையும், கருவி வழி இசையும் தடுக்கப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் குர்-ஆனில் இல்லை. உறுதியற்ற ஹதீசுகள், அவற்றை புரிந்துகொள்ளும் நிலை ஆகியவற்றில் தடுமாற்றம் அவ்வளவுதான்.
குர்-ஆனில் தெளிவாக எவை தடுக்கப்படவில்லையோ அவற்றை நாம் செய்யலாம் அல்லது அனுபவிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)