Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, May 16, 2015

கவிதை: வேட்கை / தாஜ்

கண்களுக்குப் புலப்படாத
வெற்றிக் கம்பம்
எல்லோரையும் ஈர்க்கிறது
பலரும் கூடங்கூட்டமாய் ஓடினார்கள்
ஒருவரை ஒருவர் முந்த
இடித்து தள்ளியப் படிக்கு
ஆவேசம் கொண்டு ஓடினார்கள்
நானும் ஓட ஆரம்பித்தேன்.

சிராய்ப்பு கொண்டவர்களின்
இரத்தக்கறை
வழிநெடுக இரைந்து கிடக்க
முதிர்ந்து களைத்தவர்களும்
கால் ஒடிந்தவர்களும்
பாதையோரங்களில்
ஒதுங்கிக் கிடந்தார்கள்.

Tuesday, March 31, 2015

குடை

மழை பெய்து கொண்டிருக்கிறது
துளை விழுந்த குடையொன்றுடன்
தெருவைக் கடக்கிறேன் நான்
சிவப்பு விளக்குக்குப் பின்னால்
எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
மழை வடிவம் கொண்டு
இந்தத் தெருவில் கரையக்கூடியது

தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
அந்தப் பெண்ணின் கரங்களில்
அதோ எனது குடை

-ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதை

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்






Saturday, January 10, 2015

ஆட்டுக்குட்டிகளின் தேவதை



ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது

கவிதை எழுதுவதை உயிர்ச் சிலிர்ப்பாய்க் கொண்டு எழுதிய கவிதை

தமிழ்க் கவிஞர்களே கொஞ்சம் இசைகூட்டிக் கவிதை எழுதிப் பாருங்கள். நெஞ்செல்லாம் தித்திக்கும் நினைவெல்லாம் நீங்காமல் நிலைக்கும் அதன் மயக்க வரிகள் அத்தனையும். வெறுமனே மொழியாக்கச் சொற்களைச் சுத்திச்சுத்தி எதைக் கட்டப் பார்க்கிறீர்கள்? கவிதைத் தமிழின் இயற்கையான செழுமைகளைக்கொண்டு கருத்துகளைக் கட்டி அதற்குச் சொல்லிறகுகள் பூட்டி கற்பனை வானில் பறக்கவிட்டுப் பாருங்கள்

Friday, January 2, 2015

கல்லறை மனங்கள்..!! -நிஷா மன்சூர்

 
பத்திகள்
புகைகின்றன

ஏழு வயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்,
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன.

தளர்ந்த
உள்ளிறங்கிய சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன.

உடன் கழித்த நாட்கள்
நினைவடுக்குகளில் ஊஞ்சலாட,
பிரார்த்தனைகள் பிரவாகமெடுக்கின்றன
மண்வாசிகளுக்காய்.

பத்திகள் புகைகின்றன,
கிளர்ந்து.

வெளிச்சத்தைப் புதைத்திருக்கும்
திசைகளை விழுங்கிய மூலைகளில்
எந்த மூலை தன்வசமாகும்
1முதல் மனிதனின் கருவுக்கு
தன்னுடல் எப்போது இரையாகுமென
2ஆறடியைப் பகிர்ந்துகொள்ளப் போகும்
லட்சக்கணக்கான தோழர்களை நினைத்து
வெறுமையில் திளைத்துக் கிறங்குகின்றன மனங்கள்.

மெளனகோஷம் எழுகிறது,
3“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்”

வாசம் அழித்து
வெளியெங்கும் பரப்பி
நுரையீரல் துடிப்பதிகரித்து
மூச்சடைக்க வைத்து
பத்திகள் புகைகின்றன..!!

நீங்கள் கவிதை எழுதுகிறவரா? - கவனம்.

கவிதை எழுதுவதால்...
நீங்களும்
உங்களது சிந்தையும்
நுட்பம் கூடி
உங்களது மொழியின் பரிமாணமும்
உங்களது வாழ்வியல் பரிமாணமும்
புதிய அழகியல் கொள்ளும் என்பது
எத்தனைக்கு திண்ணமோ
அத்தனைக்கு திண்ணம்...
கவிதை ஓர் லாகிரி என்பதும்!

கவிதையின் மீது ஈடுபாடு கொண்டுவிடும் பட்சம்
அத்தனைச் சீக்கிரம்
அதனிடமிருந்து மீள்வதென்பது நடவாது!

கவிதை சிந்தனை
உங்களை ஆளத் துவங்கிவிட்டால்
வாழ்வின் பெரும்பகுதியை
அதுவே எடுத்துக் கொள்ளும்.

பொதுவில்...
கவிதை ஈடுப்பாட்டை
பணம் கொண்டவர்களின் விளையாட்டு என்பார்கள்.
வாழ்விற்கு பொருள் தேடுபவர்கள்
இதனில் ஈடுபாடு கொள்வார்களேயானால்...
வாழ்வே பொய்த்து போகும் சங்கடமுண்டு.

அந்தக் காலத்து புலவர் பெரும் மக்கள்
அரசர்களையும் ஜமீன்களையும்
புரவலர்களாக நம்பி வாழ்ந்த வாழ்வையும்
பொருளாதாரத்தில்
பாரதி கொண்ட சங்கடங்களையும்
நீங்கள் அறியவந்தாலே போதும்.

# கவிதை எழுதுபவர்கள்
இது குறித்தும்
கவனம் கொள்ள வேண்டும்.
 

Wednesday, December 24, 2014

நான்..... -கிருஷ்ணன்பாலா

உலகக் கல்வியில் ஊறி மகிழ்பவன்;
உதவாக் கல்வியைக் காறி உமிழ்பவன்!
கலகப் பதர்களைக் கண்டு வெறுப்பவன்;
காணும் நிகழ்வெலாம் கவிதை வடிப்பவன்!

நேர்மையும் புத்திக் கூர்மையும் கொண்டு
நிதமும் வாழும் தவநெறி கொண்டவன்;
வேர்வையும் விளைச்சலும் விரோதமான
வினோதம் கண்டதை ஆய்வு செய்பவன்!

குற்ற உறவுகள் முற்றும் பிரிந்தபின்;
கூடா உறவெனக் கண்டு தெளிந்தவன்:
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள்
ஆனபின் அவற்றால் ஞானம் உற்றவன்!

Wednesday, December 17, 2014

கவிதை எழுத... பரப்பரப்பவரா நீங்கள்?- தாஜ் தீன்

கவிதை எழுத...
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!

'வைரமுத்துவை வாசித்திருக்கிறேனே!'
'கவிக்கோவை வாசித்திருக்கிறேனே!!'
என்பதெல்லாம் போதாது.
போதவே போதாது.

குளத்தில் முழுகியெழுவதற்கும்
கடலில் முழுகி எழுவதற்கும்
நிறம்ப வித்தியாசம் உண்டு.

இன்றைய
தமிழ்க் கவிதையின்
நீள, அகலம் + ஆழமும்
ஏகத்துக்கும் அபரிமிதமானது.
உலக கவிதைகளோடு
போட்டிப் போடக் கூடியது.

தீர்க்கமான கவிஞர்களின்
கவிதைத் தொகுப்புகள் எனும்
கடலில் முழுகி
முத்தெடுங்கள்!

பின்னர்...
கவிதை தானே கைகூடி
உங்களை பின் தொடரும்!
நீங்கள் எழுதும் வரிகளெல்லாமும் கூட
கவிதையாய் பரிணமிக்கும்!
 

Friday, December 12, 2014

துயர் துடைக்கும் விரல்கள் கொடு !

 
இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...

அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !

Wednesday, November 26, 2014

ஆற்றுப ்படுத்து..

காலைக் கதிரொளியில்
மஞ்சள் நீராடி
கண்ணாடி மேனி மறைக்க
முகிலாடை தனையுடுத்தி

நாணல் நுழைந்து
நற்கூந்தல் சிகை முடிந்து
ஆதவப் பூதனையே
அழகழகாய் தலைச்சூடி

Monday, November 24, 2014

நிகழ்வுகளில் பரவும் விஷம் -நிஷா/ நிஷா மன்சூரின் கவிதையும் தாஜின் விமர்சனமும்::

மிகுந்த தீர்மானத்துடன்
பாரபட்சமற்றிருக்கும் சாவு
தன் தடயங்களை
இச் சகதியுள் பதிந்திருக்கும்
கூர்முட்களின் வடிவில் வெளிப்படுத்துகிறது

என் விரலிடுக்குக் காயங்களின்
சீழ்வடிந்து
அலுவலக வெண்லெட்ஜர்கள்
அசுத்தமாகிக் கொண்டிருக்கின்றன

என் தயக்கமான பேச்சின்போது
தொடர்ச்சியான கட்டுப்படுத்தல்கள்
எவற்றிற்கும் சிக்காமல்
ரத்தத்துளிகள் பீறிட்டுத் தெறிக்கின்றன….
(அப்போது பரவும் கெட்டுப்போன மாமிசவாடை
உங்களை மிகவும் சிரமப்படுத்துகிறது)

இச்சிவந்த கண்கள்
எந்த நேரத்திலும் வெடித்துப்பிதுங்கி
வெளிவரக்கூடும்
(தூக்கமிழந்த நாட்களின் எண்ணிக்கை
ஒரு முழு டைரியை விழுங்கிவிட்டது)

நீண்ட நீண்ட பயணங்களின் விளைவாய்
நைந்துபோயிருக்கும் பிருஷ்டங்களை
பட்டுத்துணி போர்த்தி
அமர வைத்திருக்கிறேன்

எந்தப் படிகாரங்களாலும் களையமுடியாத
தீவிரமான அழுக்கு படிந்து
என் இதயம்
மேலும் மேலும் துருவேறிக் கொண்டிருக்கிறது.

எனினும்
கடந்த மூன்று நாட்களாய்
இப்பாறையைப் புரட்டிப்போட
முயன்று கொண்டிருக்கிறேன்….
சூரியக் கதிர்கள் உட்புகா அடிப்புறத்திலிருந்து
ஈர வாசனையுடனும்
தனிமை குலைக்கப்பட்ட சீற்றத்துடனும்
ஒரு தேளோ,பூராணோ வெளிப்பட்டால்
மிகுந்த மகிழ்ச்சியடைவேன்…!!
நிஷா மன்சூர்

-கணையாழி-1995
*

Monday, November 3, 2014

பெயர் சொல்லும் கவிதை / தாஜ்

யாரும் எழுதாத
கவிதை யொன்றை
கண்டுதரும் எண்ணமுண்டு.
உன்னத தரிசனத்திற்கு
பக்திச் சிரத்தை அவசியம்.
எழுதிக் கொள்ளுங்கள்
யாரும் பேசாதப் பேச்சை
எழுதாத எழுத்தை
பார்க்காதப் பார்வையை.

உங்கள் உள்ளறைகளில்
மண்டிக் கிடக்கும்
குப்பைகளின் மக்கிய வீச்சம்
மண்டையைப் பிராண்டும் முன்
கூட்டி பெருக்கி முதலில்
ஸ்தலம் பேணுங்கள்.

தட்டுப்படும் நேர்த்தியான
கலாச்சார வட்டங்களை
துடைத்தெடுத்து
உயரத்தில் மாட்டுங்கள்.
நீதி போதித்தப்
புத்தகங்களையெல்லாம்
தூசுத் தட்டி
பத்திரப் படுத்திவிடுங்கள்.
பாசத்தையும் பிரியத்தையும்
விசேச காலங்களில் பேணுங்கள்.
.
பொக்கிஷ வார்த்தைகளின்
விரயம் தவிர்க்க
இருப்பை திறக்காதீர்கள்.
கொள்கை முழக்கங்களையும்
லட்சிய வேட்கைகளையும்
கண் இழந்து
யாசிப்பவர்களிடம்
மனமுவந்து தந்துவிடுங்கள்.

எட்டி நடைபோடும் நாளில்
இடிப்படும் வண்ணப் பூச்சு
மேவும் அழகே அழகு.
கதவுகள் திறந்தே இருக்கட்டும்
ஒளிக்கீற்று மினுக்கும்
சாளரங்களில் தட்டாது
பக்ஷிகள் படபடக்கும் நித்தம்.
Taj Deen
ஆக்கம்:  தாஜ் தீன் 
***

Tuesday, September 16, 2014

பிச்சைப் பாத்திரம் [ காணொளி ]

பிச்சைப் பாத்திரம்
பிச்சைக்காரன் என்கிற முத்திரையை
குத்தும் பாத்திரம்

உதவாக்கரைகளுக்கும் உணவளிக்கும்
உன்னதப் பாத்திரம்

இக்கதாபாத்திரத்தில்
சதாஅழுது புலம்பி
கண்கலங்கி நிற்கும் பாத்திரம்

Monday, August 18, 2014

பொய் சொல்லலாம்.....


என்ன சமைக்க?
கோழியா மீனா?
சாம்பாரா தாழ்ச்சாவா?
பொரியலா அவியலா?
முறுக்கா அப்பளமா?
சுண்டைக்காவா வெண்டைக்காவா?
பச்சடியா ஊறுகாவா?

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்


சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி
               
ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை
கிளையில்லை ; ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை

Saturday, July 19, 2014

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

Sunday, March 9, 2014

சில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது

வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவர்த்தியை அணைத்துவிடு,
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது..!!

-மெளலானா ரூமி

உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறது
-மெளலானா ரூமி

பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு...!!

Wednesday, February 26, 2014

நீந்தும் மீன்களை வரைபவள்


அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக
வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

'முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா'
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது

Tuesday, February 25, 2014

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !


சொல்லக்  கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!

ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!

மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழித் தேயும்

Tuesday, February 18, 2014

அகம் நீயே யுகம் நீயே


அகம் நீயே
யுகம் நீயே

வரம் நீயே
சுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்
சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்

ஃ

மனசும் மனசும் சேருமா
மௌன மாகப் பேசுமா
பனியில் பூசும் வண்ணமாய்
அழியுமா ?

இரவு பகலைத் தின்னுமா
விழிகள் கனவில் மின்னுமா
உறக்கம் போன பின்னுமா
மயக்கமா ?