Friday, April 29, 2016

ராஜ்ஜியம் ஆளும் கலை

Vavar F Habibullah
 
ஒரு நாட்டை எப்படி ஆட்சி செய்வது. ஒரு சிறந்த ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும். அவன் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற விதிமுறைகளை வகுத்து அதை அரசனுக்கு பயிற்றுவிக்க உலக நாடுகளில் அமைந்த ஆலோசனைக் குழுக்கள் ஏராளம்.

அரிஸ்டாடிலை தனது ஆசிரியராக அமர்த்தி கொண்டான் மகா அலெக்சாண்டர். அரிஸ்டாடில் பிளாட்டோவிடம் கல்வி கற்றான். பிளாட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸ். ஆளும் கலைகளை அன்றைய கிரேக்க உலகுக்கு கற்று தந்தவர்கள் இந்த மேதைகள் தான்.சைனாவுக்கு ஒரு கான்பூசியஸ் என்றால் இந்தியாவுக்கு ஒரு சாணக்கியன் இருந்தான்.
மோசஸ் என்ற மூசாவும் ஒரு போர்ப்படை தளபதி தான . முகமது நபியும் ஒரு போர்ப்படை தளபதி தான்.இவர்களின் போர் நுணுக்கங்களே அவர்கள் கால வெற்றிக்கு வழி வகு த்தன.

அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று 'பிரின்ஸ்' அதாவது இளவரசன் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி வைத்து விட்டு மறைந்து போனவன் நிகோலஸ் மார் கியவல்லி. இத்தாலியை சார்ந்த இவன் இறந்த பின்னரே இந்த புத்தகம் 15 ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியாகி உலக நாடுகளின் தலைவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது. சிறிய புத்தகம் ஆயினும் இவனது கருத்துக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் விரும்பி படிக்கப்பட்டது.

உலக புரட்சிகளுக்கெல்லாம் வித்திட்டதே இவன் எழுதிய இந்த சிறிய கையேடுதான்.
ஐரோப்பிய புரட்சிகளுக்கும், ஆங்கில புரட்சிக்கும், அமெரிக்க புரட்சிக்கும் பிரெஞ்சு புரட்சிக்கும், ரஷிய புரட்சி வெடிக்கவும் காரணமாக அமைந்தது இவன் எழுதிய இந்த சிறு நூல் தான்.

இந்த புத்தகத்தை பல நூறு முறை படித்ததாக மாவீரன் நெப்போலியன் குறிப்பிடுகிறான். தன் தலையணையின் கீழ் வைத்து இந்த புத்தகத்தை பாதுகாத்ததாக அவன் குறிப்பிடுகிறான். அடால்ப் ஹிட்லரும் படித்தான், முசோலினியும் படித்தான்.சர்ச்சிலும் படித்தான். பெஞ்சமின் பிராங்க்ளினும் படித்தான். ஜபர்செனும் படித்தான்.ஏன் ரஷியாவின் லெனினும், ஸ்டாலினும் படித்தனர்.துருக்கியின் அடாடர்க்கும் படித்தான். அரபகத்தின் அரசர்களும், இளவரசர்களும் இதை படித்துணர போ ட்டியிட்டனர்.

16 ம் நூற்றாண்டுக்கு பிறகு உலகை ஆண்ட அத்தனை ஆட்சியாளர்களையும் மார்கியவல்லியின் இந்த சிறிய புத்தகம் கட்டி போட்டது. இதில் ஒழிந்து கிடக்கும் பேருண் மைகள் கண்டு மன்னர்கள் வியந்து போயினர் உலக ஆட்சியாளர்களின் அரசியல் மதிநுட்ப பைபிளாகவே இது விளங்கியது.

Wednesday, April 27, 2016

நலம் நலமறிய ஆவல்-1 / 01 – எது ஆரோக்கியம்

 நாகூர் ரூமி
01 – எது ஆரோக்கியம்    
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகச்சிறந்தவழி ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதுதான்

– கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி)

கடவுளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார். டாக்டருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களைக் கடவுளிடம் அனுப்புவார்!

வாட்ஸப்பில் வந்த இந்த ஜோக்கில் சொல்லப்படாத இன்னொரு உண்மையென்னவெனில், மருத்துவருக்கு உங்களைப் பிடித்திருந்தாலும் அவர் உங்களை கடவுளிடம் அனுப்புவதற்குத்தான் முயற்சி செய்வார்! ஒருவேளை இது அவருக்கேகூட தெரியாமல் நடக்கலாம்!

உடம்புசரியில்லையா, மருத்துவரைப் பாருங்கள்.

அவர் பிழைக்கவேண்டாமா?

அவர் தரும் மருந்துகளை அவசியம் வாங்கிக்கொள்ளுங்கள்,

மருந்துக்கடைக்காரர் பிழைக்க வேண்டாமா?

ஆனால், அந்த மருந்துகளில் எதையும் சாப்பிட்டுவிடாதீர்கள்,

நீங்கள் பிழைக்கவேண்டாமா? !

Friday, April 22, 2016

நமது மேதகு அரசியல் தலைவர்கள்


Vavar F Habibullah


நமது மேதகு அரசியல் தலைவர்கள்
நாடு போற்றும் நமது இந்திய திருநாட்டின்
உத்தம தேசத்தலைவர்களை அல்லது அரசியல் தலைவர்களை இந்தியா சுதந்திரம் பெற்ற நேரம்..........
இங்கிலாந்தின், அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தரக்குறைவாக பேசினார் என்ற செய்தி, உலகெங்கும் உள்ள பத்திரிகையாளர்களின், அரசியல் ஆய்வாளர்களின், அரசியல் விமர்சகர்களின், சரித்திர பேராசிரியர்களின் பெரும் விவாதங்களுக்கும்,
சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உட்பட்டு போன ஒரு சரித்திர சம்பவம் ஆகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்னரும் இது குறித்த விவாதம் இன்றும் தொடர்கிறது.இந்த கருத்தை வெட்டியும், ஒட்டியும் ஏராளமான கருத்துரைகள் பதிவுகளாகி இன்றும் தொடர்கின்றன.இந்த கருத்தை சர்ச்சில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது கூறினாரா அல்லது இங்கிலாந்தின் 'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' அவையில், உரை நிகழ்த்தும் போது வெளியிட்டாரா என்பதிலும் வரலாற்று ஆசிரிரியர்கள் வேறுபடுகிறார்கள். காரணம் இந்திய சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர் புதிய பிரதமர் அட்லி ஆவார்.

Wednesday, April 20, 2016

மறந்தான் மனிதன் ....

- அப்துல் கபூர்
மறந்தான் மனிதன் ....
தாயோடு உரைடினான்
கிட்டிய பாசத்தை
உணர்ந்திட மறந்தான் ...
மழலையோடு கொஞ்சினான்
தித்திக்கும் மொழிதனை
ரசித்திட மறந்தான் ...
சோலைக்குள் நுழைந்தான்
இதமான தென்றலை
சுவாசிக்க மறந்தான் ....

Tuesday, April 19, 2016

அரைத்த மாவையே அரைத்தெடுத்து

அரைத்த மாவையே அரைத்தெடுத்து
அவலை நினைத்து உரலை இடித்து
ஆளில்லா டீக்கடையில் அஸ்கா டீ ஆத்தி
அதோ பார் வெள்ளை காக்கா என அபாரமாய் கூவி
அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமுதமுமாய்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறி
சுயபுத்தி இழந்து சொற்புத்தியும் களைந்து
கூரைமேலே சோறு போட்டால்
ஆயிரம் காகமென வாய்ச்சவடால் பேசி
போகாத ஊருக்கு பொறுமையாய் வழி சொல்லி
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்
கொட்டை பாக்குக்கு விலை கூறித் திரிந்து
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
கொடிபிடிக்கும் தொண்டர்கள் துதிபாட

Monday, April 18, 2016

கிப்ரானின் அமர காவியமான முறிந்த சிறகுகள் (the broken wings)


நிஷா மன்சூர்

கிப்ரானின் அமர காவியமான முறிந்த சிறகுகள் (the broken wings) நூலில் தன் காதலி 'செல்மா கராமி'யை இப்படி வர்ணிக்கிறார்....
"செல்மா கராமியிடம் உடல் அழகும் ஆத்ம அழகும் இருந்தது.
ஆனால் அவளை அறிந்தேயிராத ஒருவருக்கு அவளை நான் எப்படி வர்ணிப்பேன்..?
செல்மாவின் அழகு அவளுடைய பொன் கூந்தலில் இல்லை.
ஆனால் அதனைச் சூழ்ந்திருக்கும் தூய்மையில் இருந்தது.
அவளின் நீண்ட கண்களில் இல்லை.

சென்னை கோட்டை


Vavar F Habibullah






டெல்லியில் செங்கோட்டையை கட்டியவன் பெயரை கேட்டால் எந்த மாணவனும் முகலாய மன்னன் ஷாஜஹான் என்று தெளிவாக பதில் சொல்வான்.
ஆனால் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியவன் யார் என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். நமதூர் அரசியல் தலைவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. IQ வில் சிறந்தவர்கள் நம் தலைவர்கள்.
சென்னை பட்டனம், ஒரு காலத்தில் தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதி என்றும், அதை ஆட்சி செய்தவன் தொண்டைமான் என்றும் அவனுக்கு பிறகு, அது சோழன் இளங்கிள்ளியின் கைக்கு வந்தது என்பதும் சரித்திரம் சொல்லும் கதை.

நாகை தொழிலதிபருக்குச் சிங்கப்பூர் விருது!

சிங்கப்பூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழிலதிபர் சலாஹுத்தீன் சிங்கப்பூர் வர்த்தகத் துறையால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களித்து வரும் உள்ளூர் இந்தியர்களுக்கு சிங்கப்பூர் வர்த்தக தொழில் துறை விருதுகள் வழங்கி கவுரவித்தது.

ஆண்டுக்கு ஒரு மில்லியன் சிங்கப்பூர் வெள்ளிகள் வருவாய் ஈட்டிய, சுமார் ஐந்தாண்டுகளாக நன்மதிப்பைப் பெற்றுள்ள நூறுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இன்பமும் துன்பமும்



     உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும்  இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

    எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.

Monday, April 11, 2016

அயல்நாட்டு அகதிகள்

Malikka Farook


தாய்நாடு தன்வீடு
தன்மக்களென இருந்தும் துறந்த
அனாதைகள் - இவர்கள் 
அயல்தேசம்தேடிப்போன
அடிமாட்டு அகதிகள்...
ஒற்றை அறையில்
ஓரடிக்கு ஈரடிநெருக்கி
ஒண்டுகுடித்தனங்கள் நடத்தும்
தாமரையிலைகள்...
கந்தலும் கம்பையும் 
காந்தலும் கடும்வாடையுடனும்
அரக்கபறக்க 
ஆறியாரா ஆகாரமுண்டு வாழும்
அன்றாடாங்காய்சிகள்...

Sunday, April 10, 2016

மதம் கடந்த மனிதநேயம்...


கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கேரளாவைச சேர்ந்த லூலூ குழுமத்தின் அதிபர் MA. YUSUFALI தனது வருதத்தை பகிர்ந்து கொண்டதோடு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிட்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்..
மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்...
மதம் பார்க்காமல் மனித நேயம் சார்ந்து உதவும் யூசுபலியின் செயல் நெகிழ வைக்கிறது...
நன்றி

Colachel Azheem

Saturday, April 9, 2016

வெளிநாட்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஊருக்கு வந்தாகி விட்டது...

அஹமது கண்ணு வெளிநாட்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஊருக்கு வந்தாகி விட்டது...
ஆரம்பத்தில் அவருக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை..நாளாக நாளாக அவருக்கு இந்த வாழ்க்கை போரடித்தது..
வேலை பார்த்த இடத்தில் எல்லோரையும் அதட்டியும்,ஆணவமாய் கத்தியும் வேலை பார்த்த அவருக்கு வீட்டில் அமைதியாக இருக்க பிடிக்கவில்லை...
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் எல்லோரிடமும் தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார்..

வாழ்வில்

வாழ்வில்
எல்லா நிலைகளிலும்
வரும் துன்பங்களின்
வலி பொறுத்தவனே
பிறர் வாழ்வதற்கான
வழிக்காட்டும்....
தகுதியினையடைகின்றான்
இருந்தும்.......
அகவலியின் வேதனைகளை
தம் முகப்புன்னகைத்
தலைப்போரம்
மறைத்து......
சரி செய்து கொள்கின்றான்!...
----------------------------

Thursday, April 7, 2016

ஸ்மார்ட் சிட்டி எங்க ஊரு – அப்துல் கையூம்

  – அப்துல் கையூம் 

இந்தியாவில் 100 Smart Cities உருவாக்குவதுதான் பாரதப் பிரதமர் மோடியின் கனவாம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதுபோன்ற ஸ்மார்ட் நகரத்தை எத்தனையோ ஆண்டுகட்கு முன்னரே பார்த்தவர்கள் நாம் என்ற உண்மையை   நாகையின் சரித்திர வரலாற்றை சிறிது சிறிதாக ஆராய முற்பட்ட பின்தான் அதன் மகத்துவத்தை முழுதாக  நான் அறிந்துக் கொண்டேன்.

பூம்புகார், நாகை போன்ற தன்னிறைவு பெற்ற தன்னிகரில்லா நகரங்களை விடவா தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டு வேண்டும்? விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் நகரெங்கும் WIFI கனெக்ஷனைத் தவிர, அத்தனை அடிப்படை வசதிகளும் கொண்ட பேரூராக திகழ்ந்தது எங்களூர் என்று மார்தட்டிக் கொள்வதற்கு முழுமையான அருகதை நாகை மற்றும் நாகூர்வாசிகளுக்கு  இருக்கிறது.

அன்று “ஸ்மார்ட் சிட்டி”யாக இருந்த நாகையை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். இனி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.