
அடுத்த நாடுகளின் உள்நாட்டு விசங்களை அந்த நாடுகளுக்கே தெரியாமல் பல முக்கிய செய்திகளை கண்டறிகின்றது .இதற்கு பல நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றன. ஒருங்கிணைத்த ரஷ்ய குடியரசை பல நாடுகளாக பிரித்து தானே உலக நாயகனாக ஆக்கிக் கொண்டு உலகத்தில் ஒரு போலிஸ் ஸ்டேட்போல் இருக்க முயலுகின்றது. அமெரிக்காவின் ஆவணப் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 'இதேநிலை தொடருமானால் வருங்காலத்தில் அமெரிக்காவை யாருமே மதிக்க மாட்டார்கள் ' என்று அமெரிக்காவை இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடத்தை வெகு சீக்கிரம் மறந்து விட்டது
பல அரபு நாடுகள் அமெரிக்காவின் கை பொம்மையாக செயல்படுகின்றன. அமெரிக்காவுக்கு கொள்கைக்கு மாற்றாக யாரும் செயல்பட்டால் ஈராக் , லிபியா ஆப்கானிஸ்தான் நாடுகளின் நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள் .
தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் சந்தையை அகலத் திறந்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் . அரபு நாட்டிலிருந்து கணக்கில்லாமல் பெற்றோலை வாங்கி அந்த நாடுகளுக்கு காலம் கடந்து போன ஆயுதத்தினை விற்று சரி செய்துவிடும் சாமார்த்திய நாடு அமெரிக்கா.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் ஒன்று சேர்ந்து அடுத்த நாட்டினை அழிப்பதில் ஒற்றுமை காட்டும் அளவுக்கு நம்மிடம் தனி மனித ஒற்றுமை கூட கிடையாது.
No comments:
Post a Comment