Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Saturday, May 30, 2015

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதிநான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்பதற்கான வாய்ப்புதான் இந்த சட்டம்.

இச் சட்டம் நமது தேசத்திற்கு புதிதான ஒன்றல்ல. கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத் மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இணைந்து கடந்த 1950-ஆம் ஆண்டு முன்வைத்த சட்டம்தான் இது. சமூகத்தில் அனைத்து தரப்பினரும் கல்வி பெற்று எங்கே உயர்ந்து விடுவார்களோ என்றெண்ணி சில சதிகாரர்களால் இந்த சட்டம் நிறைவேறாமலே போய்விட்டது. இன்றளவும் அந்த “சமூக அநீதி” நடைமுறையில்தான் உள்ளது.

Sunday, October 26, 2014

ஆசை....! சுமைகள்....!

ஆசை....!

கடலலையில் கலந்து
கரையைத் தொட்டுவிட ஆசை....

காற்றில் மிதந்து
மேகத்தை தொட்டுவிட ஆசை....

நதியில் நீந்தி
கடலில் கலந்துவிட ஆசை....

மழையில் நடந்து
முழுவதும் நனைந்து விட ஆசை....

அன்பைப் பகிர்ந்து
நட்புகளில் நிலைத்துவிட ஆசை....

ஏகஇறையை வணங்கி
அவனருளில் அடங்கிவிட ஆசை...
 

Friday, January 17, 2014

பொருளீட்டும் போதினிலே

பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!


சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!

Wednesday, December 4, 2013

'மாற்றம் வெளியில் இருந்து வராது' - சூர்யா (நேர்காணல்)

சரவணன் எனும் சாதாரணன்!


புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ  ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம்- ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள் தங்கள் திறமைகளின் மூலம் வளர நினைப்பவர்களாக இருப்பார்கள். பழம் பெருமைகளைவிட புதிய முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மாற்றம் வேண்டும் என நம்புவார்கள். ஆனால் அந்த மாற்றத்தை மந்திரத்தால் கொண்டு வர முடியாது, கல்வியின் மூலம்தான் நிகழத்த முடியும் என்றும் எண்ணுவார்கள். அந்தக் கல்வியைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வார்கள். சமூக விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு இரண்டும் அவர்களின் அடையாளங்கள்.
இந்த மாதிரியான புதிய தலைமுறை இளைஞர்களில் ஒருவர் சூர்யா. இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் இந்த இளைஞர் வாழ்வில் இருந்து என்ன கற்றார்? அவரின் வெற்றியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 

Tuesday, November 12, 2013

பெண்ணின் பெருமை

ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.

 தெளிவான  வழிகாட்டி   நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண்  செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது

Monday, December 3, 2012

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு இருந்தாலும் கேஸ்  இல்லை
திரி அடுப்பு இருந்தாலும் மன்னன்னை இல்லை
அடுப்பு இருந்தாலும் விறகு இல்லை .
ஆக இந்த தலைப்பே சரியில்லை!

பெண்களுக்கு படிப்பு தேவையா?  இது கேள்வியா?
பெண்கள் எதுவரை படிக்கலாம் ! இது சரியா ?
படிப்பென்றால் 'ஆணென்ன பெண்ணென்ன' இதுவும் சரியில்லை
'படிப்பென்றால் நீயென்ன நானென்ன'இப்படி பெண்கள் கேட்டால் !
படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டே !
படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
ஆண்களால்தானே  பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
சினிமாவில் அசிங்கமாக ஆடுகின்றார்களே !
ஆட வைப்பது யார் ? மற்றும் ஆட்டி வைப்பது யார் ?

மார்க்கம் போதிப்பவர்கள் மார்க்கப் படிப்பும் போதும் என்கிரார்களே ! அப்படி படித்தாலும் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட வேண்டும் என்று அழுத்தமாக சொல்கின்றார்களே அதுவும் ஆண்களோடு சேர்ந்து படிக்க கூடாது என்றும் கட்டாயப்படுத்துகிரார்களே!

" சீனா தேசம் சென்றாயினும்  கல்வியை கற்றுக்கொள்" நபிகள் நாயகம் ஆண்களுக்கு மட்டுமா சொன்னார்கள் ?

Wednesday, November 28, 2012

ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம்!


இஸ்லாம் என்ற வார்த்தை "சலிமா" ( "Salema") என்றஅரபி  வார்த்தையிலிருந்து வந்தது.
இஸ்லாம் என்றால் அமைதி, கீழ்படிதல், தூய்மை என பொருள்படும்.
இஸ்லாம் மார்க்க முறைப்படி இஸ்லாம் என்பது இறைவனது (அல்லாஹ்வின்) ஆணைக்கு  கட்டுப்பட்டு அவனது வழிகாட்டுதலின்  கோட்பாடுகளுக்கு இணைந்து  நடப்பதே. இதில் சமரசத்திற்கோ  மாற்றி அமைப்பதிற்கோ இடமில்லை . இஸ்லாமிய சட்டங்கள் இறைவனால் அருளப்பட்டது . மனிதனால் உறுவாக்கப்பட்ட சட்டமாக இருப்பின் தவறுகள் வரலாம் அதனை திருத்திக் கொள்ளலாம்

 இஸ்லாம் மார்க்கம் பற்றி பேசும்போது மிக்க கவனம் அவசியமாகின்றது . இதில் சர்சை செய்வது கூ டாது .
இஸ்லாம் மார்க்கம் பற்றி நல்ல நோக்கத்தோடு ஆய்வு செய்வது . விளக்கம் கொடுப்பதும் உயர்வானதே! .
நான் பார்த்த  'தூத்துக்குடி விவாத வெற்றி விழா' அறிக்கை எதில் வருகின்றது!?
"யூத நச்சுக் கருத்துகளை விதைத்து வந்த" என்ற இந்த வார்த்தைகள் சரியா! கீழ்  உள்ள அறிக்கையைப் பாருங்கள்





Monday, September 24, 2012

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார் ?


ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்? 
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்? 

பேதமை எம் மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று
சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்
அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
 செயலானின்    ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்
'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க
நக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
இறைவனைத்  தொழுது  நிறைவு கொள்வோம்  

வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்


கவிதை வேண்டுமென்று கவிஞர்  வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்

பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில்  சொல்லாமல் நகர்ந்து போனார்

கல்  வெட்டி  பணம் சேர்த்த  செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில்  போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார் 

'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன் 
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்

வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு  ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்

கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப்  போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'

Saturday, July 7, 2012

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)

(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)

  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின்  பொற்காலமான 1945 முதல் 1955 வரை  நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத்  துறையிலும் அப்பெருந்தொகை  ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும்  பாடுபட்டார்கள் என்று  சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும்    மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும்  ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்துணரத்தக்கது. அவர்களது செயலும், செந்நெறியும்  எல்லோருக்கும்  வழி காட்டக் கூடியன. தலைவனுக்கேற்ற பெருந்தன்மையும் ஒரு சமூகத்தை நடத்திச் செல்லத் தக்க நிர்வாகத் திறமையும், தீயவைகளை துணிந்தெதிர்க்கும்  தறுகண்மையும் அல்லவை துடைத்து நல்லவை செய்யும்   நற்பண்பும், வரையாது வழங்கும் அக் வள்ளற்றன்மையும், ஒருங்கே பெற்றவர்களாதலால், இன்றைய தலைமுறையினருக்கு  அவர்களது வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்களது வாழ்க்கை வரலாற்றினைக் காண்போம். இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்.
தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள்

Wednesday, June 20, 2012

இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது

   இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
ஆய்வின்படி செடியின் நல்ல வளர்ச்சிக்கு நல்ல இசையை கேட்கச் செய்கின்றனர்.இசையைக் கேட்டு மரம் செடி கொடிகள் கூட   நன்கு வளர்கின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மென்மையான இசையைக்  கேட்டு மகிழ்வதாகவும் அதனால் அந்த பிறக்கப் போகும்  குழந்தைக்கு இசை ஓரளவு உதவி செய்வதாகவும் சொல்கின்றனர். கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

மென்மையான  நல்ல இசையை கேட்கும்போது நமது மூளையின் பல பகுதிகள்  தூண்டப்பட்டு உற்பத்தி அதிகரிக்க   நினைவுகளை நிறுத்தி வைக்க  உதவுகின்றது .அதற்கு இந்த விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.

Wednesday, April 4, 2012

கல்வி மற்றும் அறிவியலில் இஸ்லாத்தின் பங்கு!

 நாகரீக உலகில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நாம் கல்வி மற்றும் அறிவியலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமாக உள்ளது. தற்பொழுது இஸ்லாமிய நாடுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இது இஸ்லாத்திற்கு புதிதல்ல.  குரானை நாம் ஆராய்ச்சி செய்தால்  அனைவற்றையும் நாம் பெறலாம். பல விஞ்ஞானினிகளுக்கு அது வழிகாட்டியாக இருந்துள்ளது. ஏற்கனவே 19 ஆம் நூற்றாண்டில்,  எகிப்து, ஓட்டோமேன் துருக்கி மற்றும் பாரசீக சில முஸ்லீம் நாடுகளில்  அறிவியல் மற்றும் குறிப்பாக மருத்துவம் கற்று தரப்பட்டு அங்கு உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC   
அனைத்து மட்டங்களிலும் இந்த நூற்றாண்டின் கல்வி நிறுவனங்கள்  இஸ்லாமிய உலகம் முழுவதும் இக்கல்வி முறை பல்கி பெருகி வருகின்ற
 கணிதத்தின் உயிரியல், நவீன தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில்  பெரும்பாலும் மேற்கு பயிற்சி கல்வி நிலையங்களில் இணைந்து கொண்ட குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள் ஆண்கள், பெண்கள் ஒத்துழைப்புடன்  தயாரிக்கப்பட்டவைகளும் இதில் அடக்கம்.  
 இஸ்லாமிய உலகின் முன்னணி சிந்தனையாளர்கள் தற்பொழுது உலகளவில் ஒன்று கூடி மாநாடு நடத்தி  நவீன அறிவியல் முக்கியத்துவத்தை  யோசித்து இணைந்து செயல்பட முனைவது மகிழ்வினைத் தருகின்றது

Thursday, February 2, 2012

தேர்வுகளில் முழு வெற்றி பெறும் வழிகள்!


by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,  

தேர்வுகளில் சாதனை செய்!

ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்:
  1. நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.
  2. தொடர்ந்து ஒரேயடியாக மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்(ஒரு 20 நிமிடங்கள்).
  3. எல்லா பாடங்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள்.இடம் மாற்றி மாற்றிப் படித்தால்தான் மனதில் நன்றாகப் பதியும்.
  4. தொடர்ந்து ஒரே Subject பாடங்களை படிக்காதீர்கள். ஒரு Subject-ல் ஒரு பாடம் படித்ததும் வேறு Subject-ல் உள்ள பாடங்களை எடுத்துப் படியுங்கள்.
  5. பாடங்களைப் புரிந்து படியுங்கள்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
  6. பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது –Revision பார்ப்பது அவசியம். Revision தேர்வுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
  7. ஆசிரியர் திருத்திக் கொடுக்கும் உங்கள் விடைத்தாள்களை திரும்பவும் பார்வையிடுங்கள்.நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள்.

Monday, July 25, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2





அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எனது தாய்மாமன் மகன் மன்சூர். நாங்கள் படித்த காலத்தில் கோடைவிடுமுறையில் ஊர்ஊராக உறவினர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி வருவோம்; இன்று அவனிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு பிஸியாக இருப்பது காற்று உள்ள போதே தூற்றிக் கொள் பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.

அதிகாலையிலிருந்து இரவு வரையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் மச்சான் மன்சூரைப் பார்க்க மனம் மகிழ்கிறது. பல கஸ்டங்களை சந்தித்தவன் குடும்ப நபர்களே ஒரு மாதிரியாக பார்த்த காலம் இருந்தது அவர்கள் இன்று வேறு மாதரியாக பார்க்கிறார்கள். என்ன வித்தியாசம் பைக்கில் சுற்றியவன் இன்று இண்டு இடுக்குகளில் இனோவாவில் சுற்றுகிறான். பைக்கில் சுற்றியபோது பொருள் இல்லை இப்போது பொருளோடு இனோவாவில்.

Wednesday, June 15, 2011

வாழ்வு முற்றுப் பெறுவதற்கு முன் மகிழ்வாக இருக்க வழி

உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள் இறைத்தூதர் (ஸல்).
வாழ்வு முற்றுப் பெறுவதற்கு  முன் நாம் ஏதாவது நற்காரியங்களை செய்தாக வேண்டும் . அதற்கு பல வழிகள் இருப்பினும் நாம் பெற்ற அறிவினை, அனுபவத்தை மற்றவர்க்கு  கொடுத்துச் செல்வது சிறப்பானதாகும். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த தற்காலத்தில் ஒரு சிறந்த வழி இணைவழியாக (கம்யூட்டர்) தற்பொழுது உள்ளது.
அதிலும் முதியோர்கள்  மிகவும் பயன் பெறலாம் . வயது வந்த பின் கல்வி கற்றோர் தம் காலத்தினை தமக்கும் மற்றோருக்கும் பயன் பெறும் வகையில் இதனை பயன்படுத்தி மன நிறைவு அடையலாம்.
அதற்கு உங்களுக்கென்று ஒரு வலைப்பூவினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு உற்சாகத்தினைத் தரும். பின்பு உங்களுக்கு காலம் போகாமல் தவித்த எண்ணம் போய் காலம் மகிழ்வாகக் கழியும்.உள்ளம் மகிழ்வடையும்.நாம் நல்ல காரியத்தில் செயல் படுகின்றோம் என்ற ஆத்ம திருப்தியடையும்.
இணையதளம் தொடங்க பணம் செலவு செய்ய தேவையில்லை.   ப்ளாக்கர்

Blogger: Create your free Blog

www.blogger.com   மற்றும் வோர்ட்பிரஸ் இவைகள் உங்களுக்கு உதவும். செயல்பட   சில வீ டியோ பாருங்கள் , மற்றும் இதற்கு உதவியாக பல வலைப்பூக்கள் இருகின்றன. அதில் ஒன்று  ப்ளாக்கர் நண்பன்


 பாஸித்தின் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ பூத்த விதம் ...






Saturday, May 28, 2011

சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் !

வா.. வின் ஓவியம்

கல்வி அமைச்சகம் கீழ்
பல பாடத் திட்டங்கள்;
‘மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!’
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!

எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன.
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!

மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!

Sunday, May 15, 2011

நீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு

 இன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development).
ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்….. கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.
“மனிதர்கள் சுரங்கங்கள்! – தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் “உள்ளாற்றல்கள் – மனித வளங்கள் – மறைந்து கிடக்கின்றன!
சுரங்கங்களின் தாதுப் பொருட்களிலிருந்து “தங்கத்தை” வெளிக் கொணர்வது போன்று தான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப் பட்டு மெருகேற்றப் பட வேண்டும்.
   அப்படிச் செய்திடும் போது தான் – மனிதன் – தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்போது தான் அவனுக்கு தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படுகின்றது. அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.

Tuesday, March 1, 2011

“இவரே நல்லாசிரியர்” – 1


இவரே நல்லாசிரியர்!
காரைக்கால் இக்ரா நர்ஸரி & பிரைமரி பள்ளியில் 26 – 02 – 2011 அன்று நடைபெற்ற “இவரே நல்லாசிரியர்” என்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்துக்கள்:
இந்த பயிற்சி வகுப்பு எனக்கு முதலில் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைத்தது. பிறகு குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்வது என்பதையும் தெரிந்து கொண்டோம். – ஆசிரியை D.Akila
இந்த பயிற்சி வகுப்பின் மூலம், எவ்வாறு குழந்தைகளின் திறமையை பிரித்தறிந்து அதற்கேற்ப ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அன்பின் மூலம் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். – ஆசிரியை K. Kalpana

 --------------------------------------------------------------------------------------------
SA மன்சூர் அலி M.A., B.Ed.,
எஸ்.ஏ.மன்சூர் அலி. நீடூர் (மயிலாடுதுறை)சேர்ந்தவர். கவுன்சிலிங் படித்தவர் .கடந்த பத்து வருஷமாக இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு, மனித வள மேம்பாடு பற்றி ஆலோசனை,கருத்து பரிமாற்றம்  செய்கின்றார்.இது மூலமாக நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்றுவருகின்றார்கள் ."

Please visit his sites:
http://meemacademy.com/
http://www.meemeducation.com/ 
http://counselormansoor.blogspot.com/
மன்சூர் பற்றி அன்வர் சதாத்

சமூகத்தில் நீங்களும் நானும் அங்கமே.
இறைவன் எங்களுக்கு கொடுத்த பெரும் கொடை.அண்ணன் மன்சூர்.
அவர்களை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம்.

...வழக்குரைஞர் அலி அண்ணன் அவர்களே,
மன்சூர் அண்ணன் அவர்கள் சென்னை கிரசென்ட் பள்ளியில் சேரும் போது நடந்த நிகழ்வு குறித்து,
மயிலாடுத்துறையின் அடையாளம் மறைந்த மதிப்பிற்குரிய அல்ஹாஜ் செய்து அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
கிரசென்ட் பள்ளி யில் சேரும்போது நேர்காணல் நிகழ்ச்சியில் இவரின் ஊர் நிடூர் என தெரிந்ததும் வழக்குரைஞர் செய்து வை தெரியுமா என கேட்டார்களாம்.
அதற்கு இவர் ஆமாம் தெரியும் எங்கள் தெருவுதான் என்று கூறினாராம்.
பிறகு ஒரு நிகழ்ச்சியில் வழக்குரைஞர் செய்து அவர்கள் கிரசென்ட் பள்ளி சென்றபோது அங்கே அதன் முக்கியஸ்தர் கேட்டாராம்.
உங்கள் ஊர் காரர் மன்சூர் இங்குதான் வேலை செய்கிறார் உங்களுக்கு தெர்யுமா என.
வழக்குரைஞர் செய்து அவர்கள் அவர் என் மருமகன்தான் அவர் ஆனால் எங்கேயும் பரிந்துரைகளை அவர் விரும்புவது இல்லைஎன்று பதில் கூறினார்களாம்.
இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் அண்ணன் மன்சூர் அவர்கள்.
அவர்களை உங்களின் உறவினராக பெற்றது பெரும் பாக்கியம்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

மன்சூர் பற்றி டாக்டர் ஹிமானா சையத்
பல அதீத திறமை சாலிகளை சரியாக உபயோகிக்காமல் நம் சமுதாயம் வீணடித்திருக்கிறது.

அந்த வகையில் இப்போதும் கூட பலர் திறமையிருந்தும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பரிதாபச் சூழல்.

இன்று நம்மிடையே இருக்கும் மிகச் சில கல்வி- சமய - நலவாழ்வியல் பயிற்சியாளர்களில் சகோதரர் மன்சூர் தலைசிறந்தவர்.

அவரை சமுதாயம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

- டாக்டர் ஹிமானா சையத்

Friday, December 17, 2010

சரியான போட்டி! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !

போட்டி போட்டு ஆண்கள் ஏமாந்துவிட்டார்கள் !
மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி பெண்கள் முன்னிலை .
பாவம் காதலில் ஆண் ரொம்ப ஏமாந்துவிட்டார்
தீர்மானிக்கும் முடிவு கை நழுவி பெண்கள் கை ஓங்கி நிற்கின்றது ,
குடியால் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் .இனி இனாம் சாராயமும் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய தேர்தல் வாக்குறுதி வரலாம் . அதற்கும் பெண்கள் போட்டி போடலாம் . வளர்ந்த பட்டினத்தில் ஒரு சில பெண்கள் பீர் குடிப்பதனை இப்பொழுது காண முடிகின்றது .
ஒன்றும் பிரச்சனை இல்லைதான் ஆனால், நாம் தான் கொஞ்சம் ஏமாந்து விட்டோம்  ..... ஆண்களின் முடிவே இறுதி முடிவாக இல்லாமல் போய்விட்டதனால் .
முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தனது குரலுக்கு பெண் செவி சாய்க்கும் என்று நம்பி ஏமாந்துவிட்டார்கள். 
வரதட்சிணைக் கேட்க தூண்டுவது யார் ? "எனக்கு  வரதட்சிணை வாங்கித்தானே நீங்கள் திருமணம் செய்தீர்கள் அதனை என் மகனுக்கு கேட்கின்றேன் மகளுக்கும் வரதட்சிணை கொடுத்ததனை எப்படி  சரி செய்வது நான் ஒன்றும்  ஏமாளி அல்ல" என்று துண்டும்பொழுது சரி போட்டது யார் ?
 
நிறைய மதிப்பெண்கள் பெற்று ...கல்வியில் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முதல் இடம் .  பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.
படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான் என்ற காலம் போய் படித்த ஆணையே ஒரு பெண் விரும்பும்  காலம் வந்து மணப்பெண் கிடைக்காமல் அலையும் நிலையாக மாறிவிட்டது . எந்த நாடு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்லும் மணமகன்தான் வேண்டும் என்ற காலம் வந்துவிட்டது.
மார்க்கம் போதிக்கும் வித்தகர் "அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு" "மார்க்க கல்வி போதும்" "சமைக்க தெரிந்தால் சரி"    மேல் படிப்பு கல்லூரி சென்று  படிக்க வேண்டாம் என்று சொன்ன காலம் போய் அவர்கள் வீட்டில் அனைவரும் இன்ஜினியரிங்  கல்லூரி மாணவியாக மாறி  நல்ல மதிப்பெண்கள்  வாங்கி வேலைக்கு செல்கின்றனர் .
ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் ஏமாற்றம்.
பாவம் ! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !