Friday, April 30, 2010

ஆடிட்டர் ஆக ஆசையா?


ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.

ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant) தேர்வு எழுதியிருக்க வேண்டும். நம் நாட்டில் இத்தேர்வினை நடத்தும் அமைப்பு ஐசிஏஐ என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா. சார்ட்டர்ட் அக்கவுண்ட் சட்டம் 1949ன் படி இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. தேர்வுகள் நடத்தவும், ஆடிட்டர் லைசென்ஸ்கள் வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுமட்டுமே. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்முறை கணக்குப் பணியாளர்களை வைத்திருக்கும் அமைப்புகளில் இதற்கு இரண்டாவது இடம்.

கம்பெனி சட்டம் 1956 மற்றும் வருமானவரிச் சட்டம் 1961ன் படி நிறுவனங்களின் கணக்கு வழக்கு ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடிட்டர் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகள் அரசால் அங்கீகரிக்கப்படாது. எனவே ‘ஆடிட்டர்’ என்பவரின் பணி இந்தியாவின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. இவ்வளவு முக்கியமான பணி அது என்பதால்தான் சி.ஏ., தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

சரி. ஒருவர் ஆடிட்டர் ஆக என்ன தகுதி? என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும்? தோராயமாக எவ்வளவு செலவாகும்?

சென்னை மயிலாப்பூரில் முப்பது வருடங்களாக இத்தேர்வுக்கு பயிற்சி வழங்கிவரும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஆர்.நாகராஜன் விளக்கமளிக்கிறார். இவர் ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல தலைவராகவும் இருந்தவர்.

நீங்கள் ஆடிட்டர் ஆக முடிவெடுத்துவிட்டால் மூன்று கட்டங்களை கடந்தாக வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே ஒருவர் ஐசிஏஐ அமைப்பில் தனது பெயரை தேர்வுகளுக்காக பதிந்துவிடலாம். ஆனாலும் முதல்கட்டத் தேர்வினை எழுத பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தனது மேல்நிலைக் கல்வியை தொடர்ந்துகொண்டே முதல்கட்டத் தேர்வுக்கும் தன்னை தயார் செய்துக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வு பொதுவானது. மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான அறிவோடு இருக்கிறார்களா என்று அறிவதற்காக நடத்தப்படுவது. சி.பி.டி. என்று அழைக்கப்படும் Common Proficiency Test இது. ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இது நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகள். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவரே அடுத்தக்கட்டத்துக்கு நகர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

அடுத்தகட்டமாக நடைபெறும் தேர்வு ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் Integrated professional competence course. முதல்கட்டத் தேர்வு ஒரு வாசல் என்று எடுத்துக் கொண்டோமானால், இந்த இரண்டாம் கட்டம்தான் உண்மையில் ஒரு ஆடிட்டரை உருவாக்கக்கூடிய காலக்கட்ட்த்தினை கொண்டிருக்கிறது. சி.பி.டி. முடிந்து ஒன்பதுமாத காலம் இத்தேர்வுக்காக தயார் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நூறு மணி நேரம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும், முப்பத்தைந்து மணிநேர முனைப்புப் பயிற்சியும் (Orientation programme) ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஐ.பி.சி.சி. தேர்வில் மொத்தம் ஏழு பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சியடைந்தவர்களாக மதிப்பிடப் படுவார்கள். ஏழு பாடங்களும், இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 40 மதிப்பெண் எடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் இலக்கை எடுத்திருக்க வேண்டும்.

இத்தேர்வில் தேறிவிட்டதுமே, நேரடி களப்பயிற்சிக்கு யாராவது ஆடிட்டர்களிடம் பணிக்கு சேரவேண்டும். அல்லது நிறுவனங்களிலும் கணக்கியல் தொடர்பான பணிகளில் சேரலாம். இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எவ்வளவு வழங்கவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்டத்தேர்வு மற்றும் மூன்று வருட நேரடிப் பணிப்பயிற்சி முடிந்தவர்களே இறுதித் தேர்வு எழுதலாம். பணிப் பயிற்சியில் இருக்கும் கடைசி ஆறு மாதங்களிலேயே இறுதித் தேர்வினை எழுதமுடியும். இறுதித் தேர்வின் ஒரு கட்டமாக பொது நிர்வாகம் மற்றும் திறன் வெளிப்படுத்தும் பயிற்சி ஒன்றையும் முடித்தாக வேண்டும்.

அதன் பின்னரே சி.ஏ. என்று அழைக்கப்படும் Chartered Accountant தேர்வு. இதுவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். ஒரு பிரிவுக்கு நான்கு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு பாடங்கள். 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றாலே தனிப்பாடத்தில் தேர்ச்சி என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.

ஓக்கே. இப்போது நீங்களும் ஆடிட்டர்தான்.

மிகச்சுலபமாக ‘ஆடிட்டர்’ என்று சொல்லிவிட்டாலும், இந்த நான்கு வருடக் காலம் என்பது ஒவ்வொரு சி.ஏ. மாணவனுக்கும் மிகக்கடுமையானது. இன்றியமையாத ஒரு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படப் போகும் மாணவன் என்பதால் பாடத்திட்டம் மிக நுணுக்கமானதாகவும், சிரமமானதாகவும் இருக்கும். கவனச்சிதறல் இன்றி கற்பவர்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். ஆடிட்டர் ஆகிவிட்டால் அதன்பிறகு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு, வருமானம் இவற்றைப் பற்றியெல்லாம் நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஏற்கனவே எல்லோருக்குமே தெரியும்.

சி.ஏ. வரை போகமுடியாது. கணக்காளனாக வேலை பார்க்க ஏதாவது படிப்பு ஐ.சி.ஏ.ஐ.யில் இருக்கிறதா என்று கேட்டீர்களேயானால், அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. முதல்கட்டத் தேர்வினை முடித்தவர்கள், இரண்டாம் கட்டத்தில் ஐ.பி.சி.சி. தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அக்கவுண்டிங் டெக்னிஷியன் கோர்ஸ் (ஏடிசி) என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

+2வுக்குப் பிறகு, கல்லூரியில் வேறு ஏதாவது படித்துக்கொண்டே சி.ஏ., தேர்வு எழுதலாம் என்று சிலர் நினைக்கலாம். அதுபோல எழுதமுடியாது. இரண்டாம் கட்டத்தில் மூன்றுவருட நேரிடைப் பயிற்சி இருக்கிறது இல்லையா? அந்த மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் அலுவலக நேரம் முழுவதிலும், சம்பந்தப்பட்ட மாணவர் பணியாற்ற வேண்டும் என்பது ஐ.சி.ஏ.ஐ.யின் விதி.

எனவே ஏதேனும் பட்டம் படித்துக் கொண்டே சி.ஏ., தேர்வினையும் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள், தபால் வழியில் பட்டம் பெறுவதே சரியான முறையாக இருக்கும். இல்லையெனில் பட்டம் முடித்தபிறகு சி.ஏ., தேர்வுக்கு படிக்கலாம். +2 முடித்த ஒருவர் வழக்கமான வழியில் தேர்வுகளையும், பயிற்சிகளையும் முடித்தால் 21 வயதில் ஐ.சி.ஏ.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்ட ஆடிட்டர் ஆகிவிடலாம்.

சரி, செலவு எவ்வளவு ஆகும்?

மொத்தமாக இந்த நான்கு வருட காலத்தில் தேர்வுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம் எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் நாற்பத்தைந்து ஆயிரம் வரை செலவாகும். இதையும் கூட நேரடிப் பயிற்சிக் காலத்தில் பெறும் ஊக்கத்தொகை மூலமாக சரிகட்டி விடலாம். தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிப்பவர்கள் கூடுதலாக எழுபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இக்கல்வி பற்றிய மேலதிகத் தகவல்களை http://www.icai.org என்கிற ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நீங்களும் ஆடிட்டராக வாழ்த்துகள்!

(நன்றி : புதிய தலைமுறை)

Source : http://www.luckylookonline.comஆடிட்டர் ஆக ஆசையா?

அந்திநேரம்

இந்த அந்திநேரம் எவ்வளவு இதமானதாக இருக்கிறது ரிஷான். இன்று விடுமுறை நாள். நீச்சல்,வாசிப்பு,எழுத்து என்று இதுவரைக்கும் பயனுள்ளதாகவே கழிந்துகொண்டிருக்கிறது. நீண்டுயர்ந்து வளருமென நினைத்த ஒரு செடி இன்று தானாகவே செத்துப்போனது. எவ்வளவு தண்ணீரிட்டும், பசளையிட்டும், அன்பிட்டும் பயனற்றுப் போனது. கவலையில்லை. அதற்காகக் கவலைப்பட்டுப் பொழுதை வீணாக்கும் நேரத்தில் இன்னும் பல பயனுள்ள
செடிகள் நடலாம்.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை
1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?

2. தந்தையும் மகனும் விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். தந்தை இறந்தார். மகனுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவரிடம் கொண்டு போனார்கள். மருத்துவர் மறுத்துவிட்டார். “என் மகனுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்” என்று சொல்விட்டார்… இது எப்ப..?

3. உணவகத்திற்குள் நுழைந்த அந்த மனிதர் ஒரு குவளை தண்ணீர் கேட்டார். சர்வர் கோபத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்மேல் பாயவந்தார். தண்ணீர் கேட்ட மனிதரோ நன்றி சொல்லி விடைபெற்றார். ஏன்…?


(பல சர்வதேச நிறுவனங்களில், நேர்காணலின் போது சமயோசிதத்தைப் பரிசோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள் இவை. நிச்சயம் இந்நேரம் விடை கண்டுபிடித்திருப்பிர்கள். உங்கள் விடைகளை உறுதிசெய்து கொள்ள கீழே வாருங்கள்.)

புத்திக்குள்ளே புதையல் வேட்டை ( விடை)
1. பலமாடிக் கட்டிடத்தில் இயங்கும் அந்த லிஃப்டில், உச்சித் தளத்துக்கான பட்டன் அவருக்கு எட்டாது. கீழ்த்தளத்துக்கான பட்டனை இறங்கும்போது எளிதில் அழுத்திவிடுவார். மழைநாளில் குடைகொண்டு வருவதால், குடையை நீட்டி தன் தளத்துக்கான பட்டனை அழுத்த முடியும். குடை இல்லாவிட்டால் நடைதான்…… பாவம்!!
2. அந்த மனிதர், அடிபட்ட இளைஞனின் அன்னை.
3. தண்ணீர் கேட்ட மனிதருக்கு விக்கல் வந்திருந்தது. அதற்காகத்தான் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சி ஏற்பட்டால் விக்கல் நிற்கும். சர்வர் அதைத்தான் செய்தார். தண்ணீர் பருகாமலேயே விக்கல் நின்றுவிட்டது. எனவே நன்றி சொல்லி விடைபெற்றார்

.
Source : http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_23.html

Thursday, April 29, 2010

மயக்கம்.....!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!
தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!
விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!
தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!
தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!
வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

ஆசையின் ஆளுகையில் காண்பதெல்லாம் ஒரு மயக்கம்!
காலமெல்லாம்  குடும்பத்தை  சுமப்பதுவும் ஒரு மயக்கம்!

வயதான காலத்தில் இளமையின் நினைவு ஒரு மயக்கம்!
வாட்டும் மூப்பு நோய் வந்தபின் ஒரு மயக்கம்!

காடு விரும்பி அழைக்கும் போது ஒரு மயக்கம்!
கண்மூடி மறையும் போது மீளாத ஒரு மயக்கம்!

பிறந்தது முதல் பிரியும் வரை தீராது இந்த மயக்கம்!
பேரறிஞன் இறை படைப்பை அறிவதற்கு ஏன் இன்னும் தயக்கம்?

ஆக்கம்: அபுயாசின்

மயக்கம்.....!  Source :  http://www.satyamargam.com

Wednesday, April 28, 2010

நீ எப்போது வருவாய்,,,,,,

From : Faizur Hadi

மாதத்திற்க்குள்ளே
மணம் முடித்து இப்போது
எங்கோ  நீங்கள்;
குரல் மட்டுமே
தின தரிசனமாய்
கரிசனமாய்!!
 
கொடுத்த பதவிக்கு பொருத்தமாய்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டீர்கள்
குழந்தையை!!
 
எல்லோரும் சந்தோஷத்தில்
நான் மட்டும் சங்கடத்தில்;
உரைக்க வேண்டும்
உன்னிடத்தில்தான் முதன்முதலில்
எண்ணியிருந்த எனக்கு;
உன் சந்தோஷதைக் காணமுடிந்ததோ  
கைப்பேசி வாயிலாக!!
 
ஆர்பாட்டமில்லாமல்
அழுது அழுது
பொழுதுதான் போனது;
நீ இன்னும் வரவில்லை!!
 
கலங்கிய
கண்களுடன்
கனத்தத் தனிமையுடன்
கேட்டுக் கொண்டே இருந்தேன்
நீ எப்போது வருவாய் என!!
 
முட்டிய வயிறை
தொட்டுப் பார்க்க
நீ வேண்டும் என  நான் நினைக்க;
நீயோ குழந்தைக்கு பெயர் அனுப்பி
பெருமிதப்பட்டாய்!!
 
துடிக்கின்ற
இடுப்பு வலியில்
உன் கரத்தினைத் தேடும்
என் கண்கள்!
 
வெறுத்தேப் போனேன்
மசக்கையானதை எண்ணி;
 
விழித்துப் பார்க்கும் போதாவது
நீ இருப்பாய் 
என நான் எண்ண;
குழந்தையின் புகைப்படம் 
அனுப்பியாயிற்று
 உன் கணவனுக்கு என
கொல்லென்று சிரிப்பு
என்னைச் சுற்றி!!
 
வழிந்தக் கண்ணீரை
துடைக்கக் கூட 
வழியில்லாமல்
இல்லை இல்லை
பலமில்லாமல்!!
 
எப்படியும் பார்த்திடலாம் 
எண்ணிய எனக்கு;
கம்மிய குரலில்
விம்மிய பேச்சுடன்
உன் குரல் கைப்பேசியில்!!
 
மாற்றம் தெரிந்தது 
மறு முனையில்;
அழுகையுடன் சேர்ந்த சிரிப்பு;
அதிர்ந்தப் போன நான்;
ஆறுதல் கூறினேன்
உனக்கு!!!
 
இறுதியாக
துண்டித்துவிட்டாய்
தொடர்பை
நான் தைரியமாக உள்ளதாய்
என நீ எண்ணி!!!!
 
- யாசர் அரஃபாத்

Tuesday, April 27, 2010

வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

வளைகுடாவில் வேலை வாய்ப்புகள் : வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

- ஓர் ஷ்பெஷல் ரிப்போர்ட்

2009 இறுதி காலாண்டில் வளைகுடாவில் உள்ள நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, எந்தெந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று கடந்த மார்ச் மாதத்தில் வளைகுடாவின் பிரபல வேலை வாய்ப்பு நிறுவனம் சர்வே எடுத்தது. அதில் கிடைத்த சுவையான தகவல்கள் இந்நேரம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தமிழில் அளித்துள்ளோம்.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சில்லறை வணிகத் துறையும் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வேலை இழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமாக இருந்த போதிலும் அது தான் வேலை தேடும் வெளிநாட்டவர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேலை கிடைப்பது வளைகுடாவின் எந்த நாட்டையும் விட சவூதியில் தான் எளிதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் சவூதியில் 2.4%, கத்தரில் 2.2%  வேலைவாய்ப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓமனில் கூட 0.3% வேலைகள் அதிகரித்துள்ளன. இதே காலாண்டில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் முறையே 2.8%, 4.2%, 7.7% வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் அடிப்படை கட்டுமாணப் பணிகளுக்கு சவூதி அரசாங்கம் செலவழிக்கும் தொகையும் தன் நாட்டில் அதிகமாக கிடைக்கும் இயற்கை வாயுவை கத்தர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதுமே புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதற்கான காரணம். அது போல் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலையே ஐக்கிய அரபு அமீரகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. வங்கித் துறை, முதலீட்டு துறையில் ஏற்பட்ட சரிவு குவைத், பஹ்ரைனின் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் சவூதியிலிருந்து வெளியே சென்ற அன்னிய செலவாணி 12% அதிகமாக உள்ளதும், அமீரகத்திலிருந்து வெளியே சென்ற அன்னிய செல்வாணி 15% குறைவாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

துறை வாரியாக பார்த்தோமென்றால் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 3%,சில்லறை வணிகத்தில் 2.6% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளை ரியல் எஸ்டேட்டும் எண்ணைய் துறையிலும் முறையே 7.8%, 4.7% வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புடன் வளைகுடாவில் விற்பனை துறையில் 3.5% வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நிதி மற்றும் நிர்வாக துறைகளில் முறையே 3.1%, 2.2% வேலை இழந்துள்ளனர். இஞ்சினியரிங் துறையிலும் 2.6% வேலை இழப்புகள் திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ளது.

2010 வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 2009 இறுதியிலும் வளைகுடாவில் பல நாடுகள் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அப்படி வேலை இழந்தவர்கள் ஏறக்குறைய 50 சதவிகிதம் நபர்கள் வளைகுடாவிற்குள்ளேயே வேறு வேலைக்கு மாறியுள்ளனர். மூன்றில் ஒரு பகுதி நபர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளோர் மேற்படிப்பு, தொழில் தொடங்குதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்றவற்றை செய்துள்ளனர்.

கத்தரில் தான் அதிகபட்சமாக வேலை இழந்தவர்களில் சுமார் 54 சதவிகிதம் நபர்கள் விசா மாற்றி கொள்ளுவதில் உள்ள சட்ட பிரச்னைகள் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். வளைகுடாவிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் வேலை இழந்தவர்களில் பெரும்பான்மையினோர் வேறு நாட்டுக்கு செல்ல விரும்பாமல் அங்கேயே வேலை தேடிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமீரகத்தில் உள்ள சிக்கலான நிலைமையையும் அச்சிக்கலுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டவர்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கையும் எடுத்துக் காட்டுகின்றது.
Source : http://muthupet.org/
வேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் முண்ணணியில்

Saturday, April 24, 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.


Source : http://www.inneram.com

370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டண‌ம். வரலாறு

மதரசா பட்டண‌ம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.

13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...

அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.

அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.

உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.

இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கு நல்ல சான்றாகும்.

இவையெல்லாம் நமது நாட்டின் அருமையான மத நல்லிணக்கத்திற்கு சான்றுகள் ஆகும் என்றனர்.

THANKS TO: http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-post_2425.html
********************
இவைகளையும் க்ளிக் செய்து படியுங்கள்.

நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370


மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

Source : http://ilayangudikural.blogspot.com

Friday, April 23, 2010

விதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தீர்வு - விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் கருத்து!


உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி செய்யப் படுவதால் இந்திய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.  விவசாயத்தில் நட்டமடைந்ததாலும் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததாலும் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்தப் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தகுந்த தீர்வாக அமையலாம் என இயற்கை வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 'கருணா ரத்னா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய எம்எஸ் சுவாமிநாதன், விதர்பா பிரதேச விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு கடன்காரர்கள் அளவிற்கதிகமான வட்டி விதித்ததாலேயே கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்னை முற்றிப்போனதாகக் குறிப்பிட்டார்.  'நேற்று கூட 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன' என்று சொன்ன அவர், 'இப்பிரச்னையைத் தீர்க்கும் சாவி, வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கியியலில் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

சுவாமிநாதன் சிறுவயதினராய் இருக்கும்போது ஒருமுறை அவரது பெற்றோர் அவர் அணிந்திருந்த வளையல், சங்கிலி போன்ற நகைகளை காந்திஜியின் நிவாரண நிதிக்கு வழங்கிவிடும்படி அறிவுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.  அவ்வாறு வசூலிக்கப்பட்ட விலை மதிப்புள்ள பொருள்களை காந்திஜி ஏலமிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை ஹரிஜன மக்களின் நலனுக்காக செலவிட்டு வந்தார்.  சுதந்திரப் போராட்ட வீரரான சுவாமிநாதனின் தந்தை, அவரது தேவைக்கு மிகுதியான பொருள்களை தேவையுடையோருக்காக செலவிடும்படி தன் மகனுக்கு அறிவுறுத்தினார்.

இஸ்லாமிய ஷரியா சட்டம் வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அடியோடு தடை செய்திருக்கிறது.  இதன் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் கடனுக்கு வட்டி வசூலிப்பதில்லை.  மாறாக, தொழில், விவசாயம் போன்ற காரணங்களுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு அதன் மூலம் பெறப்படும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்கின்றன.  உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய வங்கியியல் அறிமுகப் படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடந்துக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதை சுப்ரமணியன் சாமி போன்ற சில அரசியல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர்.
Source : http://www.inneram.com/
விதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல் தீர்வு -

Thursday, April 22, 2010

''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்தனை காலத்திற்கு?!

''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்தனை காலத்திற்கு?!     

[ கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள். படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும். எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகல துறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களால் அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடி நாளில் அவர்கள் மனங்களில் ''எங்களாலும் முடியும்'' என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!.]

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தைப் பொறுத்தே அமையும். மனித சக்தி வளர்ந்த நாட்டிலும், வளர்ந்து வருகின்ற நாட்டிலும் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது? வளர்ந்த நாட்டில் இல்லாத மனித இனப் பாகுபாடு வளர்ந்து வருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். மனித இனத்தில் பாகுபாடு காட்டுவதென்பது மனித சக்திக்குத் தடையாக அமையும். அத்துடன் அது சமூக வளர்ச்சியையும் பாதிக்கும். ஆண் இனத்தவர்கள் பெண் இனத்தின் ஆற்றலையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்காமல் இருத்தல், நசுக்குதல், போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு இனத்தின் சுய முகமே நசுங்கிப் போயிற்று.
''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?'' என்று ''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' என முகவரி சொல்லி வைத்தோம். ஆண்கள் துணையில்லாமல் பெண்களால் நிமிர முடியாது என முடக்கி வைத்தோம். இது இன்று நேற்று நடப்பதல்ல; பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்ற அவலம் இது!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இதர தீங்கிழைப்புகளுமான குற்றங்கள் இந்தியக் காவல் துறைப் பதிவேடுகளில் வருடம் தோறும் சராசரியாக பதிவாவது மட்டும் எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 695 ஆகும். சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அறிவு வளர்ந்திருக்கிறது; அறிவியல் வளர்ந்திருக்கிறது; தாயாய், தாரமாய், சகோதரியாய் பெண்களை பகுத்தறிந்து போற்றும் பண்பு மட்டும் இன்னும்.. .நம்மிடம்?!
இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகல துறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களால் அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடி நாளில் அவர்கள் மனங்களில் ''எங்களாலும் முடியும்'' என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!

பெண்களுக்கு எதிரி பெண்களே!

"சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்று விடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்து விட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்க வேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்ற கொடூரம்- இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன.

நாட்காட்டிகள் கிழிபடுகிற ஒவ்வொருநாளும் பெண்கள் கிழிபடுகிற, வதைபடுகிற, சிதைபடுகிற, சின்னா பின்னப்படுகிற செய்திகள் நாளிதழ்களில் இடம் பெறாத நாளுண்டா? ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்; சம ஊதியம் உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கும் கூட கிடையாது.
"இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் காந்திஜி.

இஸ்லாமியப்பார்வை:

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்பது இஸ்லாமியக் கொள்கையல்ல. இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
''மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர்.
இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ -97)

இதில் மூன்றாவதாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை மறுபடியும் பாருங்கள்;
''தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து,

அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து,

அவளுக்குக் கல்வியைக் கற்பித்து,

அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து

அவளை மணந்து கொண்டவர்.''

அடிமைப்பெண்ணுக்கு ஒழுக்கப்பயிற்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் - அதுவும் அந்த பயிற்சியை அழகுறச் செய்து,

அத்துடன் அப்பெண்ணுக்கு கல்வியையும் கற்பித்துக்கொடுத்து; அதையும் கூட அழகுற கற்பித்துக்கொடுத்து...

அத்துடன் விட்டார்களா...! அடிமைத்தனத்திலிருந்து அப்பெண்ணை விடுவித்து...

மணந்து கொள்ளவும் சொல்கின்றார்களே!

ஸுப்ஹானல்லாஹ்!
இந்த நூற்றாண்டில் கூட பெண்களுக்கு- அதுவும் அடிமைப்பெண்களுக்கு, இது போன்று ஆதரவாக சொல்லக்கூடிய ஒருவரைக் காணமுடியுமா? சொல்லுங்கள்!

கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள். படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும். எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.
''கணவனுக்கு சமைத்துப்போடுவது மனைவியின் கடமை'' என்று இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை நினைவில் கொள்க. ஆகவே ''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' என்பது இஸ்லாமிய கண்ணோட்டம் அல்ல. ஆனால் அதனை முஸ்லீம்கள் கெட்டியாக பிடித்திருப்பது அவர்களது அறியாமையே!

நன்றி : www.nidur.info

கப்பலில் வேலை – முல்லா கதைகள்

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “
நன்றிhttp://azeezahmed.wordpress.com/

கப்பலில் வேலை – முல்லா கதைகள்

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

    மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன.

இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.

பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டு வ‌லி வருவத‌ற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளம் வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.

மூ‌ட்டு வ‌லி வ‌ந்த ‌பிறகு அத‌ற்கு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வராம‌ல் தடு‌க்க மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ப்பதே ‌சிற‌ந்தது.

உ‌ண்மை‌யிலேயே மூ‌ட்டு வ‌லியா?

மு‌ட்டி வ‌லி‌த்தாலே அது மூ‌ட்டு வ‌லி எ‌ன்று‌ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

மூட்டுகளில் கடுமையான வலியு‌ம் வீக்கமும் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும். மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடல் சோ‌ர்வு அசதி, கா‌ய்‌ச்ச‌ல் போன்ற அறிகுறிகளு‌ம் காணப்படும்.

மூ‌ட்டு வ‌லிகளு‌க்கு உடனடியாக ‌‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல் மூ‌ட்டு வ‌லி ‌தீ‌விரமடையு‌ம். ‌பிறகு கா‌ல்களை ‌நீ‌ட்ட‌க் கூட முடியாத ‌நிலை ஏ‌ற்படலாம்.

மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், நமது அ‌ன்றாட பழ‌க்க வழ‌க்க‌ங்களை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டாலே‌ப் போ‌து‌ம். அதாவது, நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். இ‌ந்த தவறை‌த்தா‌ன் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் செ‌‌ய்‌கிறா‌ர்க‌ள். அதாவது, கூ‌ன் போ‌ட்டபடி அம‌ர்‌வதாலேயே பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டுக‌ள் பல‌மிழ‌க்‌கி‌ன்றன.

நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கு‌திகா‌ல் செரு‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌ பெ‌ண்க‌ள் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.

எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். அ‌திக நேர‌ம் உ‌ட்கா‌ர்‌ந்தபடி ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ள், அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து காலார நட‌ந்து‌வி‌ட்டு வ‌ந்து உ‌ட்கா‌ர்‌ந்து வேலைகளை‌ச் செ‌ய்யலா‌ம்.

பெ‌ண்க‌ள் எ‌ந்த‌ப் பொருளையு‌ம் கு‌னி‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து தூ‌க்க‌க் கூடாது. காலை மட‌க்‌கி உ‌ட்கா‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் பொருளை‌த் தூ‌‌க்க வே‌ண்டு‌ம். தரை‌யி‌ல் உ‌ட்கா‌ர்‌ந்து வேலை செ‌ய்பவ‌ர்க‌ள், தா‌ங்க‌ள் அமரும‌் இரு‌க்கையை ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மூ‌ட்டு வ‌லி வ‌ந்தவ‌ர்க‌ள்..

வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.

நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.

அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது ‌மிகவு‌ம் நல்லது.

மூ‌ட்டு வ‌லி உடையவ‌ர்க‌ள் செ‌ய்ய வே‌ண்டிய உடற்பயிற்சிகளை செ‌ய்யலா‌ம். உட‌ற்ப‌யி‌ற்‌சிக‌ள் தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

கார‌ட், ‌பீ‌ட்ரூ‌ட் போ‌ன்ற கா‌ய்களை ப‌ச்சையாக சா‌ப்‌பிடலா‌ம், ‌சூ‌ப் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழை‌ப் பழ‌ங்களை அ‌திகமாக உ‌ண்ணு‌ங்க‌ள்.

கா‌பி, டீ போ‌ன்றவ‌ற்றையு‌ம், பொ‌ரி‌த்த உணவுகளையு‌ம் த‌வி‌ர்‌த்து‌விடுவது ந‌ல்லது.

நடை‌ப்ப‌‌யி‌ற்‌சி, உட‌ற்ப‌யி‌ற்‌சி எதுவாக இரு‌ந்தாலு‌ம் அளவோடு இரு‌க்க வே‌ண்டு‌ம்.

வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதை எ‌ப்போது‌ம் லேசாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌‌ம் அவ‌சிய‌ம். வலியைப் பற்றியே நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது‌ம் ந‌ல்லத‌ல்ல‌
நன்றி : http://www.mudukulathur.com
மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

Wednesday, April 21, 2010

வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

  நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ நன்றாக உடுத்துவது மனதிற்கு சந்தோஷம் தருகிறது என்பார். பிறர்படும் துன்பத்தைப் பார்த்து கூட சந்தோஷப்படும் ஒரு சிலர் இருக்கும் இவ்வுலகில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை ஐந்தைந்தாக பட்டியலிட்டுள்ளேன்.
வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்தல்
2. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்
3. நடப்பவை அனைத்தையும் நல்லதற்கே என்ற எண்ணத்துடன் கவலை கொள்ளாமல் இருத்தல்
4. தினமும் குறைந்தது ஒருவருக்காவது உதவி செய்தல்
5. அளவுகடந்த அதிக ஆசை கொள்ளாமல் இருத்தல்

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து மீண்டுவிடுதல்
2. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்) பல் துலக்குதல்
3. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடத்தல்
4. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழவகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு முடிந்தவரை சீக்கிரமாகப் படுக்கைக்கு செல்லுதல்
வாழ்வில் பேணப்பட வேண்டியவைகளில் சில:
1. மனதை ஒருமுகப்படுத்தி இறைதியானம் புரிதல்
2. சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இன்முகத்துடன் முகமன் கூறல்
3. யாரையும் துச்சமென கருதாமல் பிறர் கூறும் கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்டல்
4. எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அதனால் விளையும் பயன் மற்றும் கெடுதலைக் குறித்து சிந்தித்தல்
5. முடிந்தவரை தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து மவுனம் கடைபிடித்தல்
வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவைகளில் சில:
1. ஒருவர் இல்லாதபோது அவரின் தவறுகளை மற்றவரிடம் கூறுதல்
2. அனுமதியின்றி மற்றவரின் வீடுகளினுள் நுழைதல்
3. எதிர்பாலருடன் அவசியமின்றி உரையாடுதல்
4. மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றி உபயோகித்தல்
5. தவறு செய்பவர்கள் எனத் தெரிந்தபின்பும் அதை அவர்களுக்கு உணர்த்தாமல் அவர்களோடு நட்பு கொண்டாடுதல்

இத்துடன் நின்று விடாமல் உங்களுக்குத் தெரிந்த சிலவற்றையும் ஐந்தைந்தாக இங்கே பின்னூட்டத்தில் பட்டியலிடலாமே?

- இப்னுஜமால்
நன்றி: http://www.satyamargam.com
வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

குடல் புண் (ULSER) – Dr.அம்புஜவல்லி

குடல் புண் (ULSER) – Dr.அம்புஜவல்லி‘அல்சர்’ – சில உண்மைகள்
வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா?  மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு  உள்ளதா?  வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா?  இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.  இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு.  இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது?
குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.  சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது. செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொருத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .  2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.  இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதரியானவை.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.  இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.  சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது.  அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும்.  சட்டத்துக்கு உட்பட்டதுபோல் இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை.  இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.
சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு.  குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை.   வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும்.  இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை.  ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.  இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.  ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார்.  என்பதைப் பொறுத்து  இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.  சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.  பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம்.  அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம்.  அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.  ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
குடல் புண்ணுக்க மருத்துவம் செய்யாவிட்டால்…
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும்.  ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும்.  அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.  அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது.  இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.
சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.  இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.
வயிற்றுத் தடையையும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும்.  ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும்.  எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவர் குடல்புண் இருப்பதைக் கண்டறிந்தால், சில மருந்துகளை சிபரிசு செய்வார்.  அப்போது எதைச் செய்ய வேண்டும்.  எதைச் செய்யக் கூடாது என்பதையும் கூறுவார்.  அவைகள் பின்வருமாறு.
செய்யக்கூடாதவை 1. புகைபிடிக்கக் கூடாது.
2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.  பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
4. சாப்பிட  வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது.  அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும்.  இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
7. மனநிலையை தடுமாற விடக் கூடாது.
8. அவசரப்படக் கூடாது.
9. கவலைப்படக் கூடாது.
10. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை 1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.  அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.  தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
3. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
4. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இருக்கமாக உடை அணியக் கூடாது.
5. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்திதிக் கொள்ளலாம்.
6. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
7. எப்போதும் சந்தோஷமான பேச்சுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.
8. அலுவலக வேலைகளை அலுவலகத் தோடேயே விட்டுவிட வேண்டும்.
9. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
10. சுகாதார முறைகளைப் பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள்.  தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.  எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.  அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.  தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.  இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது.  எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உ¡¢ய ஆகாரம் என்ன?
மென்மையான உணவு தேவை என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.  பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.  அனேக நோயாளிகள் இப்படிப்பட்ட உணவு வகைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள்.  இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
1. சத்தான சரிவிகித உணவு.
2. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
3. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.  டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல.  இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது.  தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
4. வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும்.  இவ்வுணவானது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமானதாக இருக்கும்.  ஆகவே அவரவர் அனுபவத்தால் தீமை  செய்பவை எவை எனத் தெரிந்து ஒதுக்கிவிட வேண்டும்.
5. சாப்பிடும் உணவின் சூடு கூட முக்கியமானதாகும்.  மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.  குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.
6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.  ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.
7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.  வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.  பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.
Thanks:- Attur

Categories: Dr.அம்புஜவல்லி, குடல் புண் (ULSER), மருத்துவம்
Source : http://azeezahmed.wordpress.com

Tuesday, April 20, 2010

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

By M.RISHAN SHAREEF


அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி: http://mrishanshareef.blogspot.com/

Monday, April 19, 2010

பதின் வயதினருக்கானது ….


முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

Sunday, April 18, 2010

அந்த உத்தமி எங்கே?


ஆயிஷா! என்னருமை ஆயிஷா!

அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாய்! இந்த இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

``ஆயிஷா இவ்வுலகத்தில் இல்லை `` என நினைக்கும் பொழுது எங்கள் மனம் துடிக்கின்றது, கண்கள் குளமாகின்றன.

தேனியைப்போல் சுறுசுறுப்பாக ஓடி ஆடி இயங்கும் ஆயிஷா, இவ்வளவு விரைவில் மீளாத்துயில் கொள்வாய் என கனவிலும் நினைக்கவில்லை.

"ஆயிஷா!, ஆயிஷா!" என எங்கள் மனம் கதறுகிறது. இனி எப்போது நாங்கள் உன்னை காண்போம்.

ஆயிஷா! என் தங்க ஆயிஷா!
இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்த நீ நற்குணம் நிறைந்த பெண்ணாக, எங்கள் அனைவருக்கும் ஓர் இனிய சகோதரியாக, நல்ல சிநேகிதியாக திகழ்ந்தாய். அமைதியாக, மிக மிக அடக்கமாக எங்கள் அனைவருக்கும் உதவி செய்தாய். உன்னைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதலாம். உன் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பாக இருக்கின்றது. மனம் கலங்குகிறது, கண்கள் கசிகின்றது.

ஆயிஷா! என் இனிய ஆயிஷா!

உனக்கு ஆயுள் குறைவு என தெரிந்திருந்தால் எங்கள் வயதை குறைத்து உனக்கு தந்தருள அல்லாஹ்விடம் இறைஞ்சியிருப்போம். "தெரியவில்லையே" என கண்ணீர் வடிக்கின்றோம். உன் மறைவு எங்களுக்கு பேரிழப்பாக உள்ளது.

என் செல்லக்கிழியே, ஆயிஷா! துன்பம் நிறைந்த இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என பறந்து சென்றுவிட்டாயோ?

யா அல்லாஹ்! மர்ஹூமா ஆயிஷாவின் பாவங்களை மன்னித்து, ஆயிஷாவின் மண்ணறையை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி இறுதிநாள் வரை ஆயிஷா நிம்மதியாக சுகமாக துயில் கொள்ளவும், சொர்க்கத்தின் காற்று கப்ரில் (மண்ணறையில்) வீசும்படியாகவும் கிருபை செய்வாயாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

-நீடூர் பாத்திமுத்து ஜொஹரா சர்புதீன்

முஸ்லிம் தேடும் மனைவி

முஸ்லிம் தேடும் மனைவி
 
  பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.

       நபி அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


       (வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)

        மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.

       முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)

       அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி அவர்களிடம் வந்தார். நபி அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை' என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸயி)

       ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.

       இதனால்தான் நபி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

       (இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)

       அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்களிடம் 'பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள், 'கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)

       கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.

       உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.

நன்றி  :  http://www.readislam.net

Saturday, April 17, 2010

கொடுக்குறதை கொடுத்தாதான்...


ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.

”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.

ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.

விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.

”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.

கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.

மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.

ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.

மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.

மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.

உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.

நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.

கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.

Thursday, April 15, 2010

தொப்பை குறைக்க அன்னாசி

தொப்பை குறைக்க அன்னாசி

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம்

புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம்

தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி

நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை

அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்

Source : http://www.mudukulathur.com
தொப்பை குறைக்க அன்னாசி

அறிய புகைப்படம்

by abul bazar/அபுல் பசர் விளக்கம் தேவை இல்லை.விளங்கி கொள்வீர்கள்.
Source : http://abulbazar.blogspot.com
, ,

Wednesday, April 14, 2010

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

                     மனைவியை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம்

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)

அழகிய வரவேற்பு

- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

- மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. - அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா" செய்யலாம்.

- வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

- நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.

- உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

- தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
- மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

- மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

- நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும்பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட...)

விளையாட்டும் கவன ஈர்ப்பும்

- நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

- ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

- இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.

- இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ

- வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.

- கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை

- குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். ஹ{தைபியா உடன்படிக்கையின் பொழுது நபியவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நல்ல ஆலோசனை வழங்கியது அவர்களின் மனைவிதான்.

- அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

- மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

- மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

- ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

பிறரை காணச் செல்லும்பொழுது

- மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள்).

- அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

- அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது

- மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.

- உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

- நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

- குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.

- நீங்கள் வெளிய+ரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

- முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

- திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

- எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

- பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

பொருளாதார உதவி

- கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும் மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)

- அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

- அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும

- நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

- எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

- அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம்

- மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவிர).

- பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

- அதற்கெனவே உள்ள முன்பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

- காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

- அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

- அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

- மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

- பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

- அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி சுவாசத்திற்கு கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்.

- அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்

- படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது

- தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

- உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

- காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ர் (இறைநினைவுகளை) அவளுக்கு போதியுங்கள். (நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்)

- இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

- ஹஜ் மற்றும் உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்

- அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

- உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

- அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

- பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

- உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.

இஸ்லாமியப் பயிற்சி
- கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

- இஸ்லாத்தின் அடிப்படை

- அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்

- படித்தல் மற்றும் எழுதுதல்

- இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது

- பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்

- வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

மேன்மையான அக்கறை

- வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
- மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

அதிகப்படியான அக்கறையைத் தவிர்ந்து கொள்வது. உதாரணமாக :

- அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்ப+ர்வமாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம். -

அவசர விஷயத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

- தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

பொறுமையும் சாந்தமும்

- மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சினைகளை பெரிதாக்குவதும் போன்றவைதான் திருமண பந்தத்தை முறித்துவிடுகின்றது.

- இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

- உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

தவறுகளை திருத்துதல்

- முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

- அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
- அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

- மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் கணவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.

- குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

- காயம் உண்டாகும் படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.

- செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும்

- பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

- உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

- தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

- எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவைகளின் மன உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு)

- சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்படுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள் தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

- தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறுவழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

- அவமரியாதை செய்யக்கூடிய வகையில் திட்டுவதை தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

- பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும் வரை பொருத்திருங்கள்.

- உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும் வரை சற்று பொறுமை கொள்ளுங்கள்.

www.nidur.info

நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...

அன்புடன் புகாரிதாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!

Tuesday, April 13, 2010

முரண்பாடுகள்

                                                                          முரண்பாடுகள்இருப்பவனிடம் நிராகரிப்பும்
இல்லாதவனிடம் எதிர்பார்ப்பும்
கண்முன் இறைந்து கிடக்கிறது
சமூக புள்ளியில் இரண்டும்
ஒன்றினைதாலும்
அவரவர் கவலை அவருக்கு

அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!

நன்றி  http://valpaiyan.blogspot.com

Sunday, April 11, 2010

இஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை

கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கு அனுமதியளித்துள்ளது, ஆனால் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் அதில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி இந்நிறுவனத்தின் ஆதரி (Promoter) டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் வரும் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை கேரள நீதிமன்றம்.
அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.
இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
   சசி
கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கு அனுமதியளித்துள்ளது, ஆனால் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் அதில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் அந்த மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

இந்நிறுவனம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி இந்நிறுவனத்தின் ஆதரி (Promoter) டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் வரும் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை கேரள நீதிமன்றம். இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை


Source : http://www.inneram.com 

LinkWithin

Related Posts with Thumbnails