இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது.
அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். அசிங்கமாக பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது.
அதனால்தான், பொறுத்தது போதும் என்று துணிந்து விட்டேன். இந்த முறை இதை இப்படியே விடுவதாக இல்லை. இத்தனை பேர் கண் முன்னால் இப்படி நடந்து கொள்ளும் அசட்டு துணிச்சலுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நானும் துணிந்து விட்டேன்.
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts
Saturday, June 14, 2014
Wednesday, November 20, 2013
பெண்களுக்குள் பிரச்சனையா!
பெண்களுக்குள் பிரச்சனையா!
முடிவுக்கு வராது.
பெண்களால் பிரச்சனையா!
முடிவுக்கு வர முயற்சி பண்ணலாம் .
பெண்களுக்கு பிரச்சனை வந்த காரணம் அறிய
பெண்ணின் தாய் முயல வேண்டும்
பெண்ணின் தாய்க்கே பெண்ணால்(மகளால்) பிரச்சனை வந்தால் !
பெண்ணின் தாய்க்கு மருத்துவம் பார்க்கும் நிலை வரும்.

Tuesday, November 12, 2013
பெண்ணின் பெருமை
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள் மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர் நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
தெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது

Thursday, April 25, 2013
அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
பெண்கள் மனதை கவரும் அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
picture source

Monday, January 7, 2013
நீயா ! நானா !
ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற தொல்லைகளும் அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும். hypocrite இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்
பெண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும்.
பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் .
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்( தமிழ்நாடு அரசியல் இதற்கு விதிவிலக்கு)

Monday, December 3, 2012
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு இருந்தாலும் கேஸ் இல்லை
திரி அடுப்பு இருந்தாலும் மன்னன்னை இல்லை
அடுப்பு இருந்தாலும் விறகு இல்லை .
ஆக இந்த தலைப்பே சரியில்லை!
பெண்களுக்கு படிப்பு தேவையா? இது கேள்வியா?
பெண்கள் எதுவரை படிக்கலாம் ! இது சரியா ?
படிப்பென்றால் 'ஆணென்ன பெண்ணென்ன' இதுவும் சரியில்லை
'படிப்பென்றால் நீயென்ன நானென்ன'இப்படி பெண்கள் கேட்டால் !
படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டே !
படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
ஆண்களால்தானே பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
சினிமாவில் அசிங்கமாக ஆடுகின்றார்களே !
ஆட வைப்பது யார் ? மற்றும் ஆட்டி வைப்பது யார் ?
மார்க்கம் போதிப்பவர்கள் மார்க்கப் படிப்பும் போதும் என்கிரார்களே ! அப்படி படித்தாலும் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட வேண்டும் என்று அழுத்தமாக சொல்கின்றார்களே அதுவும் ஆண்களோடு சேர்ந்து படிக்க கூடாது என்றும் கட்டாயப்படுத்துகிரார்களே!
" சீனா தேசம் சென்றாயினும் கல்வியை கற்றுக்கொள்" நபிகள் நாயகம் ஆண்களுக்கு மட்டுமா சொன்னார்கள் ?

Wednesday, September 12, 2012
பேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்!
ஒலி எழுப்புவத்தின் வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப் போல் சிறப்பான பேசும் ஆற்றலும், சிந்திக்கும் திறனும் கிடையாது .
நாம் பேசுவதால் நன்மையும் தீமையும் விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை
உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42
Monday, June 25, 2012
பெண்கள் ஏன் அழுகின்றனர்
Picture source
பெண்கள் ஏன் அழுகின்றனர்
கவலை கவ்வியதாலும் அல்லது நினைத்த காரியம் சாதிக்க வேண்டியும் இருக்கலாம்
உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!
அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!
தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!
தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா
அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா
ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றதா?
தான் எதிபார்த்த வாழ்வு கிடைக்க வில்லையே என நினைத்து அழுகிறார்களா.
தான் பாசம் காட்டி அன்போடு வளர்த்த பிள்ளைகள் அவர்கள் மனைவி வந்த பின் நம்மை மத்க்கவில்லையே என்பதனை நினைத்து அழுகின்றார்களா மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கமா
"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" - நபி மொழி

Saturday, May 12, 2012
அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)
சுடிதார் செக்ஷனில் நின்னுக்கே அந்த செக்ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.
2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.
Wednesday, May 9, 2012
பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!
தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப் படுகின்றது. அனைத்துக்கும் மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்
Thursday, April 26, 2012
ஆடை வாழ்வின் ஒரு பகுதி
அரபிய மணப்பெண்ணின் ஆடை
ஆடை வாழ்வின் ஒரு பகுதி. தன்னைத்தானே சுத்தமான அழகிய ஆடைகளால் அழகு படுத்திக் கொள்வது மனித இயல்பு அதிலும் பெண்களுக்கு இதில் தனி ஆர்வம் உண்டு. ஆண்கள் உடைக்காக செலவு செய்யும் பணம் குறைவுதான். பெண்கள் உடுத்தும் ஆடை விலை உயர்வாகவே இருந்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான உடையும் தேவைப்படுகின்றது.
ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது.
"தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை ஆடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, 'இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் பிரிந்தது'' என்றார்கள். (நூல்: புகாரி)
சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!”
'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7:26)
கருப்பு ஆடை இஸ்லாமியர் ஆடையா?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen
ஆடை நனையும் போது ஒரு சிலருக்கு ஏற்படும் மகிழ்வு.யாருக்கு? பாருங்கள்
ருமேனியாவில் உலகின் மிக நீளமான திருமண ஆடையை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.

தனது திருமணத்தில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்று விரும்பிய Li Kuo(வயது 25) என்ற பெண், திருமணத்தின் போது மிக நீளமான ஆடையை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இவரது கணவர் Xie Tao(வயது 27) கலை அருங்காட்சியகத்தில் பணிபுரிகிறார்.
இந்த ஆடை 520 மீற்றர் நீளமும், 50 கிலோ கிராம் எடையும் கொண்டது. இதனை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆனது. மேலும் இதன் விலை 5000 பவுண்ட்டுகள் ஆகும்.
இதுகுறித்து Li Kuo கூறுகையில், எனது திருமணத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும் என்று கருதினேன், அதன்படி நிகழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Source
ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க வீடியோ காட்சி.
ஆடை வாழ்வின் ஒரு பகுதி. தன்னைத்தானே சுத்தமான அழகிய ஆடைகளால் அழகு படுத்திக் கொள்வது மனித இயல்பு அதிலும் பெண்களுக்கு இதில் தனி ஆர்வம் உண்டு. ஆண்கள் உடைக்காக செலவு செய்யும் பணம் குறைவுதான். பெண்கள் உடுத்தும் ஆடை விலை உயர்வாகவே இருந்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான உடையும் தேவைப்படுகின்றது.
ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது.
"தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை ஆடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, 'இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் பிரிந்தது'' என்றார்கள். (நூல்: புகாரி)
சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!”
'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7:26)
ருமேனியாவில் உலகின் மிக நீளமான திருமண ஆடையை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.
முன்னைய 2 488 மீட்டர் நீளம் கொண்ட ஆடையின் சாதனையை முறியடித்து 2 750 மீட்டர் நீளம் கொண்ட ஆடையாக தைத்து சாதனை படைத்துள்ளனர்.
ருமேனியா Bucharest எனும் இடத்தில் இவ் ஆடையை அணிந்த மாடல் அழகி வெப்ப காற்று பலூனில் பறக்கவிடப்பட்டார். மொத்தம் 100 நாட்களில் 1,857 ஊசிகள் பயன்படுத்தப்பட்டு தைத்து முடித்திருக்கிறது Andree Salon எனும் நிறுவனம்.

Source
உலகின் மிக நீளமான திருமண ஆடை - கின்னஸ் சாதனை - படங்கள்
Source
ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க வீடியோ காட்சி.
Sunday, November 27, 2011
பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே
பெண்கள் ஏன் அழுகின்றனர் என்று உலகில்ஒரு பிரபலமான நிறுவனம் நடத்திய சர்வேயில் கிடைக்கபெற்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . ஏன் என கேட்கின்றீர்களா அந்த முடிவுகளை நீங்களே பாருங்கள் .
ஒருவர் அழுகின்றார் என்றால் அதற்கு ஏதோ ஒரு துக்க காரணம் இருக்கும் அல்லது சந்தோஷ மிகுதியால் ஆனந்த கண்ணீராக கூட இருக்கலாம் ஆனால் இந்த பெண்கள் அழுகின்றமைக்கு காரணம் இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது .
************** இந்த சர்வேயை நடத்திய பிரபல நிறுவனம் வேறு எதுவுமில்ல எனது முக புத்தக பக்கத்தில் மேற்கொண்ட சர்வே முடிவே இது .
பிளாகர் நண்பர்களுக்காக இந்த சர்வேயினை எனது தலத்தில் வலது பக்கத்தில் Please click hereவைத்துள்ளேன். உங்கள் வாக்குகளை இட்டு பெண்கள் ஏன் அழுகின்றார்கள் என எனது சந்தேகத்தினை தீர்த்துவைக்கவும் .
Source : http://qaruppan.blogspot.com

Wednesday, December 1, 2010
தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்

பதிவர் பராரி அவர்கள் பின்னூட்டத்தில் தங்கத்தைப்பற்றி எழுதுங்களேன் என்று கூறியிருந்தார். நான் தங்கக் கடையில் பணிப்புரிவதை அறிந்தவர் என்றே நினைக்கிறேன். இதற்கு முன் பதிவிட்டுக் கொண்டிருந்த கவிவனம் என்ற எனது வலைப்பூ வைரஸ் தாக்குதலினால் முடங்கிப்போனது. அதில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் சில யோசனைகளை எழுதியிருந்தேன். அதை மீள்பதிவாக இங்கு எழுதவில்லை யென்றாலும் தங்கத்தைப்பற்றிய நிகழ்காலத்தின் நிலைகளை எனக்கு தெரிந்த விசயங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எழுதத்தூண்டிய நண்பர் பராரி அவர்களுக்கு நன்றி.
(0)
தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.
(0)
பல ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருப்பது இந்தத்தங்கம்.
வரதட்சணை என்பது பணமாக கொடுக்கப்படும் கைக்கூலி. ஆனால் இன்று வரதட்சணை பணமாக அல்லாமல் பல இடங்களில் தங்கமாக வாங்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது.100 சவரண் 200 சவரண் என்று வசதிக்கேற்ப கேட்கப்படுகிறது.
(0)
ஆசியா கண்டத்தில் அதிகமான தங்கம் இறக்குமதியும் விற்பனையும் நம் இந்தியாவில்தான் நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலோர் தங்கத்தை சேமிப்பு நோக்கம் கருதியே வாங்குகிறார்கள்.
இப்படி சேமிப்பின் நோக்கத்தில் வாங்கக்கூடிய தங்கம் தரமானது தானா.? நாம் கொடுக்கக்கூடிய பணத்திற்கு தகுந்த மதிப்பு அந்ததங்கத்தில் இருக்கிறதா.? என்ற பல சந்தேகக்கேள்விகள் நம்பலரிடையே இருந்து வருகிறது.
(0)
காய்கறி கடைகளில் நம்பெண்கள் காய்களை ஒடித்துப்பார்த்து அழுத்திப்பார்த்து நசுக்கிப்பார்த்து முகர்ந்துப்பார்த்து வாங்குவார்கள்.
புடவைக்கடைகளில் தரம் நிறம் துணியின் தன்மை என்று பார்த்து பார்த்து பல கடைகளில் ஏறி இறங்கி வாங்குவார்கள்.
ஆனால் தங்கக்கடையில் மட்டும் நம்பெண்களும் ஆண்களும் எளிமையாக ஏமாந்துவிடுகிறார்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.காரணம் தங்கத்தை உரசிப்பார்க்க அதன் தரத்தை அலசிப்பார்க்க ‘லேப்;’ வசதி எல்லா ஊர்களிலும் இல்லை.
(0)
இன்று பல நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கத்தை இயந்திரத்தில் வைத்து சோதனை செய்து கொடுப்பதாக நிறைய விளம்பரங்கள் பார்க்க முடிகிறது. இதுவும் ஒருவகையான ஏமாற்றல்தான்.
இன்றைய பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருப்பதினால் தங்கத்தைப்பற்றி பலவிதமான கேள்விகள் கேட்பதினால் அதே விழிப்புணர்வுக்கு தங்கவியாபாரிகளும் இயந்திரங்களின் மூலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எல்லா நகைக்கடைக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறவில்லை. அதிகமானோர் ஏமாற்றுகிறார்கள் என்றே சொல்கிறேன்.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதை விற்கும் போது இன்னொரு கடைக்காரர் வாங்குவதில்லை அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். காரணம் என்ன.? அதன் தரம் அவர்களுக்கு தெரியும்.இது இந்தியாவில் செய்து இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு மட்டும்தான்.இதே வெளிநாட்டிலிருந்து குறிப்பாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய நகைகளுக்கு எந்தக்கடைக்கு போனாலும் நல்ல தொகை கிடைக்கும்.காரணம் தரம்தான்.
(0)
ஏன் நம்மவர்கள் அந்தத்தரத்தை கொடுக்கக்கூடாது.?
(0)
அப்படிக்கொடுத்தால் அவர்களால் அதிகமான லாபம் ஈட்டமுடியாது. உல்லாசமான வாழ்க்கை வாழமுடியாது. பல நகைக்கடைக்கார்களின் வாழ்க்கையைப் பாருங்கள். எனக்கு தெரிந்த பத்தர்கள் சிலர் இன்று பெரிய நகைக்கடை அதிபராகத் திகழ்கிறார்கள்.
(0)
சாதாரனமாக துவங்கிய கடைகள் நாளடைவில் அழங்காரமாக வடிவமைத்து விஸ்திரப்படுத்தி குளிர்சாதனங்கள் வைத்து மக்களை கவரக்கூடிய அளவிற்கு வளர்ந்திருப்பார்கள். நேர்மையான வியாபாரத்தில் எளிதில் இப்படியானதொரு வாழ்க்கைக்கு வரமுடியாது என்பது உண்மை. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அப்பாவிமக்களின் உழைப்பை வேர்வையை சுவைப்பது எந்த வியாபாரிக்கும் நியாயமானதல்ல.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்.நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நம் பணத்தை நாம் வாங்கக்கூடிய பொருளை தரமாக நியாயமாக வாங்கலாம்.
(0)
இந்தியாவில் வாங்கிய 22கேரட் நகையை துபாயில் விற்பனை செய்தால் அல்லது நகைமாற்றம் செய்தால் அதற்கான மதிப்பு என்னத் தெரியுமா.?
18kt மதிப்புபோட்டு எடுப்பார்கள் அதாவது ஒரு கிராம் 22கேரட் இந்திய ரூபாய்படி 1500 க்கு வாங்கி இருப்பீர்கள். அதை விற்கும் போது 1200 க்கு வாங்குகிறார்கள்.இந்த 1200- 18kt விலை.300ரூபாயை நாம் ஒரு கிராமுக்கு இழக்கிறோம்.
இதே துபாயில் வாங்கப்பட்ட 22kt தங்கத்தை துபாயிலேயே நகைமாற்றம் செய்தால் 30 ரூபாய் மட்டும் (3திரஹம்)ஒரு கிராமுக்கு குறைத்து எடுத்துக் கொள்வார்கள்.இந்தியாவில் அதேவிலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் 270 ரூபாய் ஒரு கிராமுக்கு இந்திய நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அதிகமாக வாங்குகிறார்கள்.
ஒரு கிராமுக்கு 270 என்றால் 10 சவரண் நகை (80 கிராம்) வாங்கப்படும்போது 21600 ரூபாயை நாம் ஏமாறுகிறோம்.இது தரமில்லாத நாம் 22kt என்று நம்பி வாங்கப்படும் நகைக்கு இந்த நிலை.
(0)
22kt, 21kt, 18kt - என்று தரம் வைத்துள்ளார்கள் அது எதன் அடிப்படையில் என்று பார்க்கலாம்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிதாக வரும்போல இருக்கிறது ஆதலால் தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைப்பற்றி உங்கள் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்வோம்…
தங்கத்தைப் பற்றி மொத்தம் ஏழு தொடராக எழுத இருக்கிறேன்
Source : http://kismath.blogspot.com/2009/10/blog-post_31.html
Wednesday, November 24, 2010
பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)

பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்
ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது. 
மெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன? - கோபால்
அமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது. கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
தீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை? -கார்த்திக் - தூத்துக்குடி
இந்தியாவில்தான் இல்லை. காவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.
மற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே? - சந்திரன்
'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே? எல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.

ஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து? - ரவி, அட்லாண்டா
அமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.
ஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? - ஜான்சன் செபாஸ்டியன்
அமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு?
"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா? - வசீகரன், பட்டுக்கோட்டை
உண்டு. சாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அப்துல் ரஹ்மான்
இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்பு
புதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன். Tuesday, November 23, 2010
ஆண்களும் போகப் பொருள் தான்!
பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.
அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.
பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.
'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை' என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.
ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.
இல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள்.
திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.
திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.
இந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.
மேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
பகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.
கணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.
இந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.
உதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.
ஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.
ஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.
அந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.
அது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.
இத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.
மேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.
உங்கள் கணவர்களிடம் - உங்கள் மனைவியரிடம் - உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.
வெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.
மனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.
ஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.
அதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.
அந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.
எந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.
பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.
குடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.
அணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.
புத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
அவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.
ஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.
அந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.
எந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.
கணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.
இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
அவர்கள் உங்களுக்கு ஆடை! நீங்கள் அவர்களுக்கு ஆடை! என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.
மறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.
இவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.
நன்றி இஸ்லாம் தளம்
Source : http://www.islamiyadawa.com/thafsir/2_187.htm
Subscribe to:
Posts (Atom)