Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Tuesday, August 12, 2014

அப்பாவின் நினைவாக....

அந்த இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை.

எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.

எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.

தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.

Monday, April 21, 2014

எதிர்பார்க்கும் போது கிடைக்காத பாசம்

எதிர்பார்க்கும் போது
கிடைக்காத பாசம்
எப்பொழுதேனும்
கிடைத்திடுமா?

இருவேறு திசையில்
பயணிக்கும் நாமும்
எதிர் எதிர் காணும்
நாள் வருமா?

Friday, November 22, 2013

அம்மா இந்த உலகம் சிறியது உன் பாசம் மட்டுமே பெரியது

அம்மா

அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

Tuesday, November 19, 2013

பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயின் ஏக்கம்

பாலூட்டி சீராட்டி வளர்த்தேன்
பாடல் பாடி உறங்க வைத்தேன்
சிறகடித்து பறந்து இரையை சேர்த்து
குஞ்சின் வாயில் ஊட்டும் பறவைபோல்
கண்மணி மகனை பேணி வளர்த்தேன்.
கை பிடித்து நடக்க பழகிக் கொடுத்தேன்
கற்பதற்கு வேண்டியதை செய்துத் தந்தேன்
உறவுமுறை சொற்களை சொல்லிக் கொடுத்தேன்
உறவினரை அறிமுகம் செய்து வைத்தேன்
உயர்ந்து விட்டவனுக்கு மன முடித்து வைத்தேன்

வேண்டியதை சேர்த்துக் கொண்டான்
வேண்டிய உறவுகளை அறுத்து நிற்கின்றான்
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் நெருங்கி விடுமோ!
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் வந்தால்
பாசத் துடிப்போடு உயிர் என்னை விட்டு நீங்கும்

Wednesday, October 23, 2013

உமர் (ரழி)

இனிக்கும்
இஸ்லாத்தை ஏற்று;
வெடிக்கும் எரிமலையாகக்
கயவருக்கு மட்டும்!

வரலாற்றைப் படிக்கும்
போதே மினுமினுக்கும்
விழிகள்;
படித்தப் பின்னேப்
புடைக்கும் நரம்புகள்!

மாற்றுப் பாதைக்குத்
தோற்று ஓடுவான்
ஷைத்தானும்;
உங்கள் பாதைக் கண்டால்!

Sunday, September 15, 2013

சந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா!

அன்பே! என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்

ஒன்றுமில்லை ஆறுயிரே !

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் எனைவிடுத்து நான் வரும்போதெல்லாம் லாப்டாப்பில்தானே உலா வருகிறாய்

'ஓ' நீங்கள் வேறு ஏதோ மனதில் கொண்டு பேசுவதென்ன!

நான் என்ன அவ்வளவு அறியாதவனா ! உன்னை பல நாட்களாக பார்க்கிறேன் . உன் செயல்பாடை, உன்னை சிறு வயதிலிருந்து நான் அறிவேன் . நீ லாப்டாப்பில்தானே எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கிறாய்!

நான் பார்க்கும் தொழில் சம்பந்தமாக சிலவற்றை தேடியே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று நான் உங்களிடம் பல முறை சொல்லியுள்ளேன்

இல்லை! நான் நீ செய்வதை பார்க்க வேண்டும்.

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இத்தனை காலங்கள் நீங்கள் காட்டிய காதலும் ,பாசமும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் எவ்வாறு மறைந்து போனது

அன்பே!எனது பிரியமானவளே! உன் மீது நான் கொண்ட காதலும் ,பாசமும் உயர்வானது . வருத்தம் கொள்ளாதே. நான் வரும்போது உன் நினைவோடிருக்க நீ மற்றொன்றில் கவனம் செலுத்துவது என் மனம் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறது

Wednesday, November 28, 2012

அன்னையின் மடல் + Love Your Mother

அன்னையின் மடல்

என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி! பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.

என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!

என் செல்லமே!உன் தாயின் முகத்தைப் பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில் தெரிவதைப் பார் மகனே!


மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

என் செல்லமே! இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!

Wednesday, May 9, 2012

நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?

   நான் இந்த உலகத்திற்கு வந்தது இறைவன் அருளால் உங்கள் மூலமாக, நான் உங்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கப்பட்டேனா அல்லது விருப்பத்தின் காரணமாக உருவானேனா  என்பது நான் அறியேன், ஆனால் நீங்கள் நான் உலகில் வந்து விழுந்ததிலிருந்து என்னை அழிக்க முயலாமல் பாசம் காட்டி வளர்த்தது மட்டும் உண்மை என்பதனை நான் அறிவேன். நீங்கள் இருவரும் எனக்காக  செய்த தியாகங்களை மறக்க முடியுமா!

   அம்மா, நான் பிறந்த போது உன்னைத்தான்  முதலில் பார்த்தேன் அந்த 'அம்மா' என்ற தமிழ்  வார்த்தையை நீ சொல்லிக்  கொடுக்காமல் உன்னை 'ம்மா'  'அம்மா' என்று  அழைக்க இறைவன் சொல்லித் தந்துவிட்டான். நான் பிறந்தபோது  உங்கள் கண்களில் விழுந்தோடிய ஆனந்தக் கண்ணீர் மகிழ்வானது . அது காலமும் நிலைத்து எனது வாழ்வை செம்மை படுத்த நீங்கள் மேற் கொண்ட முயற்சி உயர்வானது.

  அந்த உங்களது ஆனந்த கண்ணீரும், மகிழ்வும்  இப்பொழுது குறைந்து  வந்தாலும் அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதனை நான் அறிகின்றேன். இது யார் செய்த குற்றம்! நிச்சயமாக நான் இல்லை. நான் திருமணம் செய்து வையுங்கள் என்று   உங்களைக் கேட்டேனா? நீங்கள்தான் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினீர்கள். உங்கள் விருப்பப் படியே நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து வைத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கும் என் மனைவியுமான  உங்கள் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து உங்கள் மகிழ்வில் குறைவு வந்து விட்டதனை நான் அறிகின்றேன். பெற்றோர்களே சிறுது பொறுமையை கடைப்பிடியுங்கள்,  உங்கள் மகிழ்வுக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்காகவே நாங்கள் உங்களுக்கு பேரக் குழந்தையை பெற்று தருகின்றோம். அது போதும் உங்கள் மகிழ்வின் தொடர்ச்சிக்கு. நீங்களும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவீர்கள். குழந்தை மனது குறை காணாத மனது,அதனால் இழந்த மகிழ்வு தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  .

Friday, May 4, 2012

உங்கள் பெயர் என்ன? இதற்கு என்ன பதில்?

உங்கள் பெயர் கேட்டால் பல நாடுகளில் நம் பெயருடன் ஆணாக இருந்தால் தகப்பனார் பெயரும் இணைத்து சொல்ல வேண்டும் அதுவே பெண்ணாகவே இருந்தால் கணவன் பெயரை இணைக்க வேண்டும். அனைத்துக்கும் தகப்பனார் பெயர் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அல்லது இரண்டாவது பெயர் கேட்பார்கள். (Someone's second name is their family name, or the name that comes after their first name and before their family name.) 

தாய் எங்கே போனால்! அவள் பெறுவதும் வளர்ப்பதும் தான்  பெற்ற குழந்தைக்காக தன்னை அற்பணித்துக் கொள்வதோடு முடிந்து விடுகின்றதா!
குழந்தையை  வளர்க்க தந்தையின் பங்கும் இருக்கலாம் ஆனால் தாயல்லவா ஒன்பது மாதங்கள் சுமந்து நம்மை உருவாக்கினாள்.ஒரு தாய் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். தாய் பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து  அக மகிழ்ந்து ஆனந்தம் அடைவாள்   தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைகின்றது. அதனால் தாயோடு தந்தையும் இணைத்து பெயர் சொல்வதே பொருத்தம்.

 “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

Tuesday, November 2, 2010

மனத்தினை நேசியுங்கள்

 நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளதால் .அகத்தின் அழகு முகத்தில். .உள்ளத்தில் இருந்து நேசம்  வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும்  பெருபவருக்கும்  மகிழ்வு மலரும்.  மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான். தோல்வி வெற்றிக்கு வழி காட்டி.  நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில், செயல்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. .உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட முடியும் . வாழ்வு ஒரு முறைதான் அதனை சோகமாக்கிக் கொள்ளாதீர்கள். மகிழ்வு விலை கொடுத்து வாங்குவதல்ல. அது மனதினைச் சார்ந்தது . பணம் பெற்றவர்கள் எல்லாம் மகிழ்வில் மூழ்கி உள்ளார்கள் என்பது தவறான கற்பனை . பணம் வாழ்வின் வசதிகளை  ஏற்படுத்தி தரலாம்   அதனால் மகிழ்வினை தந்துவிட முடியாது .
 நேசம் ,அன்பு ,பாசம் அறியாதவற்கு குடும்பம் ஒரு பாரமாகும். உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை இருந்து கொண்டு இருக்கும்பொழுது உங்கள் உள்ளத்தில் உற்சாகம் பிறந்து வாழ்வில் மகிழ்வு தானே வரும் .

நோய்பட்ட ஒருவருக்கு மருத்துவர் வாழ்வின் காலக்கெடு கொடுக்க வீடு திரும்புகின்றார் . அங்கே வீட்டில் தொலைகாட்சியல் சார்லி சாப்ளின்  சிரிப்பு படம் பார்த்துகொண்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க இவருக்கு கோபம் வந்தாலும் தன்னை அறியாமல் தானும் அப்படத்தினை பார்க்கின்றார் . மருத்துவர் சொன்னதனை மறந்து படத்துடன் ஒன்றி வாய் விட்டு  சிரித்து மகிழ்கின்றார் . ("வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.") இதனை தினமும் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து சில நாட்கள் கழித்து மருத்துவரை பார்க்க செல்கின்றார் . அந்த  மருத்துவருக்கே ஒன்றும் புரியாமல் அதிசயப்பட்டு என்ன மருந்து சாபிட்டாய்! உடலில் நல்ல மாற்றம் தெரிகின்றதே! என்று  வினவ .
இவர் "நீங்க கொடுத்த மருந்து தான் சாபிடுகின்றேன்."
" சரி ,சரி இப்ப உன் உடம்பு நன்றாக இருக்கு கவலைப்படாதே" டாக்டர்
"நான் இப்ப கவலைப் படாமல் இருக்கத்தான்  என்னுடன் சார்லி சாப்ளின் இருக்காங்களே"
அப்பொழுதுதான் தான் மருத்துவருக்கே புலப்படுகின்றது  இவரின் உடலின் நல்ல மாற்றத்திற்கு காரணம் இவரின் மன மகிழ்வுதான் என.
எது வந்தாலும் சிரித்து மகிழு.வளமான வாழ்வுக்கு மனம்தான் முக்கியம் .