Wednesday, July 24, 2013

சொந்த மண்ணில் அன்னிய உணர்வு

அரபு மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்கள்.

இன்று நாங்கள் பணிபுரியும் இடத்துக்கு ஒரு அரபு யுவதி வந்தார். அவர் அரபி என்றாலும் ஆங்கிலத்தில்தான் உறையாடினார். அவருக்கான சேவையைப் பெருவதற்கு எழுத்து விண்ணப்பம் தரவேண்டும்.

நான் அதற்கான விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்தேன்,அது அரபு மொழியில் இருந்தது.

அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவம் இருக்கிறதா எனக் கேட்டார், அதற்கு நான் ஆங்கிலத்தில் படிவம் இல்லை என சொல்லிவிட்டு எதற்கு
ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள் என கேட்டேன்.

Tuesday, July 23, 2013

சுவர்களல்ல அறைகளல்ல

வசிப்போரின்
கூட்டுயிரே வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு

Sunday, July 21, 2013

பேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ரமதான் சொற்பொழிவு (பயான்)(பகுதி -2)

மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (12) -பேங்காக்

மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (ரமலான் நாள் 1-11) -பேங்காக்.கேட்க
கேட்க இங்கு சொடுக்குங்கள் பேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன்...
தகவல் தந்தவர் நீடூர்-நெய்வாசல்  Mohamed Marzuk
மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (13) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 13 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (14) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 14 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (15) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 15 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (16) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 16 B.M.Ziyaudeen

TAMIL NAMES FOR FRUITS (FOR MY TAMIL FRIENDS) தமிழில் பழங்களின் பெயர்கள்

A - வரிசை
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

B - வரிசை    
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

C - வரிசை
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

D - வரிசை
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

Saturday, July 20, 2013

தேடியதில் கிடைத்த முத்து

பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!

முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...


கற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!

சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!

எந்த விந்தணுவால்
உடைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!

எத்தனை விந்தணுவால்
சிதைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!

இச்சைக்கு பிறந்தாயோ
எச்சையென ஆனாயோ
பிச்சையெல்லாம் மறந்து
இம்சையெல்லாம் மீள்வாயோ
பிற்காலம் நீ ஆள்வாயோ!

Wednesday, July 17, 2013

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - "நம்ம ஆட்டோ"வில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் ! இந்த "நம்ம ஆட்டோ" பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்.

அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்  http://veeduthirumbal.blogspot.com/2013/07/blog-post_16.html

தகவல் தந்தவர்  ஆஷிக் அஹமத் அ

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே
விசாரிக்கப்படுவார்!

திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!

தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!

ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!

வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு

முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!

Monday, July 15, 2013

மரணங்கள் எப்போதுமே மனங்களை புரட்டிப் போட்டு விடுகின்றன.

முதன் முதலில் என் வாப்பாவின் மரணம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது நான் வியாபாரம் செய்து வந்தேன்.கடையை மூடிவிட்டு வந்து உணவு உண்ட பிறகு இரவு 11 மணி இருக்கும். தம்பி சைபுல்லாஹ் வந்து என்னை அழைத்தான். வாப்பாவுக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறது என்றான். உடனே பதறியடித்து வாப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். சிரித்துக் கொண்டேதான் வந்தார்கள். " ஒண்ணுமில்லே... லேசான வலிதான் ... ஒண்ணும் செய்யாது " என்றார்கள். " பரவாயில்லை.. போய் பார்த்துவிட்டு வந்துவிடுவோம் " என்று அழைத்துப் போனேன். எப்போதும்போல் சாதாரணமாக நடந்து வந்தே காரில் ஏறினார்கள். மருத்துவமனை சென்று பரிசோதிக்கும்போதே கடுமையான அட்டாக் வந்து மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். எப்படிச்சொல்வது என் தாயாரிடம் அந்த வேதனைச்செய்தியை ? எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் அந்த சீதேவியின் முகத்தை வாட விடும் நிலையை எண்ணிக் கலங்கினேன். அண்ணன் தம்பி ஆறுபேரில் நானும் தம்பி சைபுல்லாஹ்வும்தான் ஊரில் இருந்தோம். சின்னப்பிள்ளை அவன். இருவரும் கட்டிப்பிடித்து அழுதோம். அன்று மாலை சில்க் ஜுப்பாவோடு கம்பீரமாய் தெருவில் நடந்து வந்த வாப்பாவின் மரணம் மனசை அடித்து நொறுக்கி விட்டது. மறக்க முடியுமா அந்த 1992 டிசம்பர் 26 ஐ ?

வாப்பா மரணித்து 20 நாட்கள் கழித்து ஜனவரி 16 ல் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் ஹாஷிமா .

Friday, July 12, 2013

969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்! - இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.
ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...


 மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

பவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.

Wednesday, July 10, 2013

Sunday, July 7, 2013

நோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்


நோக்கத்தை வைத்தே செயலின் தேடல்
நோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்

நாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க
நாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர

தொடுத்த நோக்கம் தொலைந்து விட
யெடுத்த செயலில் தொய்வு விழுந்தது

கல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்
பொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்

மரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்
நோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்

காதல் கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்
காதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை

காமம் மிஞ்சியவனுக்கு காதல் வர வாய்பில்லை
காதல் அற்ற நிலையில் கன்னியை கலங்க வைப்பவன் காமுகன்

Thursday, July 4, 2013

சீஷேல்ஸ்சும் முருங்கையும் முருங்கையின் மருத்துவ மகிமை...
----------------------------------------------------


பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails