உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அபுல் கலாம் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
-----------------
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் என்ற ஊரின் பிரபல கவிஞர் அபுல் கலாம். இவர் யாப்பு வடிப்பதில் மூத்த கவிகளில் ஒருவராக இந்த அதிரையில் திகழ்ந்து வருபவர். இவருக்கு இணையத்தோடு தொடர்புடைய நட்பு வட்டம் ஏராளம். குறிப்பாக இவர் எழுதும் கவிதையை ரசிக்கும் பெண் வாசகர்கள் அதிகம். வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். தான் பெற்ற கவி புலமையை பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற உயரிய பண்புடையவர். எந்தவொரு தலைப்பை கொடுத்தாலும் உடனுக்குடன் கவிதை எழுதுவதில் வல்லவர். 'கவியன்பன்' என்றும் 'கவிக்குறள்' என்றும் இணையத்தோடு தொடர்புடைய அவர்களின் நண்பர்களால் அன்புடன் பாராட்டப்படுபவர்.
இலண்டன் வானொலி இவரின் கவிதையை வாரமொருவரை தொடர்ந்து வாசித்து வருகின்றன. சமீபத்தில் இவருக்கு இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து 'கவித்தீபம்' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
சமீபத்தில் இவர் எழுதிய கவிதை 'பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!' இந்தக் கவிதையை தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரைச்சேர்ந்த பிரபல பதிவர் ஜாஃபர் அவர்கள் தனது இனிய குரலில் பதிவு செய்து காணொளியாக வடிவமைத்துள்ளார்.
---------------------------------------
Abulkalam bin Shaick Abdul Kader
“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம்
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
வலைப்பூந் தோட்டம்:http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
தயவு செய்து அவசியம் கீழ் உள்ள லிங்க்குகளை சொடுக்கிப்(கிளிக்) செய்து பாருங்கள்( படியுங்கள்)
கவிஞர் அபுல் கலாம் வலைப்பூக்கள்
1 comment:
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா
Post a Comment