Showing posts with label பெயர். Show all posts
Showing posts with label பெயர். Show all posts

Tuesday, November 12, 2013

பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச

பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச
பெயரோடு இன்னொரு பெயர் இணைந்தால்தான் பெருமை

எழுதுகோல் எடுத்து எழுதாத இடமில்லை பெயரை
எழுதி அனுப்பித்தவைகள் பெயரோடு வந்து விளம்பரம் தந்தன

பார்த்தவன் படித்தவன் பாராமுகமாய் போகிறான்
பார்த்து பார்த்து பாராமுகமாய் போனதால் பசுமை முகம் சோர்ந்து போனது

நிறைவோடு எழுதி நிறைவற்ற மனமானது
நிறைவோடு இல்லை இல்லான் இல்லாதததால்

என் பெயரும் இல்லானின் பெயரோடு இணைந்து விட
எங்கள் பெயர் சொல்ல மக்களை பெற்றுத் தருவேன்

பூக்காத மரமாய் நிற்கிறேன்
பூத்த பின் மகரந்த சேர்க்கை கிடைக்கும்

பூத்த பின் மணம் வீசி நிற்ப்பேன்
பூத்த பின் வண்டுகள் நாடி வரும்

Friday, May 4, 2012

உங்கள் பெயர் என்ன? இதற்கு என்ன பதில்?

உங்கள் பெயர் கேட்டால் பல நாடுகளில் நம் பெயருடன் ஆணாக இருந்தால் தகப்பனார் பெயரும் இணைத்து சொல்ல வேண்டும் அதுவே பெண்ணாகவே இருந்தால் கணவன் பெயரை இணைக்க வேண்டும். அனைத்துக்கும் தகப்பனார் பெயர் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அல்லது இரண்டாவது பெயர் கேட்பார்கள். (Someone's second name is their family name, or the name that comes after their first name and before their family name.) 

தாய் எங்கே போனால்! அவள் பெறுவதும் வளர்ப்பதும் தான்  பெற்ற குழந்தைக்காக தன்னை அற்பணித்துக் கொள்வதோடு முடிந்து விடுகின்றதா!
குழந்தையை  வளர்க்க தந்தையின் பங்கும் இருக்கலாம் ஆனால் தாயல்லவா ஒன்பது மாதங்கள் சுமந்து நம்மை உருவாக்கினாள்.ஒரு தாய் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். தாய் பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து  அக மகிழ்ந்து ஆனந்தம் அடைவாள்   தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைகின்றது. அதனால் தாயோடு தந்தையும் இணைத்து பெயர் சொல்வதே பொருத்தம்.

 “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)