Tuesday, November 19, 2013

பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயின் ஏக்கம்

பாலூட்டி சீராட்டி வளர்த்தேன்
பாடல் பாடி உறங்க வைத்தேன்
சிறகடித்து பறந்து இரையை சேர்த்து
குஞ்சின் வாயில் ஊட்டும் பறவைபோல்
கண்மணி மகனை பேணி வளர்த்தேன்.
கை பிடித்து நடக்க பழகிக் கொடுத்தேன்
கற்பதற்கு வேண்டியதை செய்துத் தந்தேன்
உறவுமுறை சொற்களை சொல்லிக் கொடுத்தேன்
உறவினரை அறிமுகம் செய்து வைத்தேன்
உயர்ந்து விட்டவனுக்கு மன முடித்து வைத்தேன்

வேண்டியதை சேர்த்துக் கொண்டான்
வேண்டிய உறவுகளை அறுத்து நிற்கின்றான்
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் நெருங்கி விடுமோ!
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் வந்தால்
பாசத் துடிப்போடு உயிர் என்னை விட்டு நீங்கும்


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
- புகாரி ஹதீஸ் : 6138.

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”  
- குர்ஆன் :  2:215.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏக்கம் புரிகிறது ஐயா...