Wednesday, July 23, 2014

போர் வெறுப்போம்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

*

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள்
என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த
நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது எது

பசுமை உலகில் படர்


பாருடல் பெண்ணாள் பசும்பட் டுடுத்தி...
பனியுண்டு பாலொளியில் பாங்காய் வாய்துடைத்து....
காருடல் வேர்வை மழையில் உடல்கிடத்தி...
காணி உடைநுழைந்து மேனி செழித்திடுவாள்...!

நீருடலாம் நான்கு நிலம்திரியா நல்லியல்பை...
பேருடல் பூண்ட புடவி மிளிர்ந்திடவே...
பூச்சூட்டி மெல்ல புதுவழகு பார்த்திடுவாள்...!

Tuesday, July 22, 2014

உங்களுக்கு இதயம் இருக்கிறதா?


உங்களுக்கு இதயம் இருக்கிறதா? ஒபாமாவிற்கு காசாவில் பணிபுரியும் நோர்வே மருத்துவர் கடிதம்!

காஸா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கருப்பு கண்டத்தின் கலங்கரை விளக்கம்!

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு வந்தார். ஏனெனில் இது காந்தி பிறந்த தேசம்.
ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918ல் பிறந்தார். தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் ம்பாஸே நதி வளப்பத்திய பகுதியில் ம்வெஸோ என்கிற குக்கிராமம். பழங்குடியின பரம்பரை. ‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில் ‘கிளையை பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது ‘பிரச்சினையை உருவாக்குபவன்’.
மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார். வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தினை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். இதனால் குழந்தையாக இருந்த மண்டேலாவை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர வேண்டியதானது.

Monday, July 21, 2014

விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்: 
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
 
ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது? என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

Saturday, July 19, 2014

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

Friday, July 18, 2014

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி

 இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:
எழுத்தால் போட முடியாத எடை .........

கவிஞர் வாலி

பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த

பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல்

புகுவாரோடு பழகி நின்றவன்!

அவர்களது அன்பை ஆரா

அமுதமாய் தின்றவன் !

என் ஒவ்வொரு பருவத்திலும்

எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்

இஸ்லாமிய இனத்தவர்

அவரெலாம் - தண்ணீர் கலவா தாய்ப்பால் மனத்தவர் !

LinkWithin

Related Posts with Thumbnails