Sunday, July 31, 2016

கற்றலும் நிற்றலும் ....!

காசு பணம் சம்பாதிப்பதற்காவே கல்வி கற்பது என்றாகிப்போன பொருள்சார் உலகில் எங்கிருந்து நிற்பது? எல்லாரும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
இயற்கையே மனிதனுக்கு நல்ல ஒரு ஆசான். காலையில் வீட்டினுள்ளே போடப்படும் செய்தித்தாளை அப்பாவிடம் கொண்டு கொடுக்கவும், காய்கறி விற்கும் பாட்டி வந்ததும் அம்மாவிடம் போய்ச்சொல்வதும் மழலையர் இயற்கையாக செய்கின்றனர். யாராவது சொல்லிக் கொடுத்தார்களா என்ன ?

Saturday, July 30, 2016

முஸ்லிம்கள் கோவில்களை இடிக்கவில்லை..Muslims did not Demolish Temples. They gave Land and Money to Built Temples

TSR_அய்யூப் அவர்கள் (வஃபாத்தானார்.) இறந்துவிட்டார்

 மதிப்புக்குரிய நீடூர் டி .எஸ். ஆர்.அப்துல் மஜீது அவர்கள் மகனார்  TSR_அய்யூப் அவர்கள் பேங்காகில் (ஜூலை 29)வெள்ளிக்கிழமை (வஃபாத்தானார்.)
இறைவனைடி சேர்ந்து விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அய்யூப் அவர்கள் பத்திரிக்கை ஆசிரியர், நூலாசிரியர். பெஸ்ட் கல்லூரி நிறுவனர் தொழிலதிபர்.ஜெம்மாலஜிஸ்ட்
சேவை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டு அதற்காக நிறைய செலவழித்தவர் .கல்வி சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மற்றும் .மனித நேயம் கொண்டவராக வாழ்ந்தார்
இருக்கும் வரை உயர்வான வாழ்வை பெற்றிருந்தார்

Thursday, July 28, 2016

எனக்கு பிடித்த சினிமா! / Rafeeq Sulaiman

"டாக்டர் கலாம் சொன்ன மாதிரியே உள்ள ஆசிரியரை அந்தத் திரைப்படத்தில் பார்த்தேன்...."
எனக்கு பிடித்த சினிமா!
மாணவரின் வாழ்க்கையில், ஒரு ஆசிரியர் எவ்வளவு முக்கியமானவர் எனபதை சுட்டும் திரைப்படம் பற்றியது.
(couldn't make a thumbnail of Dr. APJ ABDUL KALAM as mentioned in this video)


Rafeeq Sulaiman

Wednesday, July 27, 2016

Is Kabali A Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith - News18 Tamil Nadu/ நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் ஆசிரியர் குணசேகரன், ரஞ்சித்திடம் நடத்திய நேர்காணலின் முழுமையான வீடியோ

கபாலி... கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என கபாலி என்ற திரைப்படம் மொத்த தமிழ் அறிவுலகின் பேசுபொருளாக மாறிவிட்டது.
இதற்கு ஒரு காரணம், இது ரஜினி படம். அடுத்த காரணம் கபாலியின் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெகுமக்கள் கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு அவரது திரைப்பயணத்தில் இது ஒரு பாய்ச்சல். அதேநேரம் வணிகப் படத்துக்குள் அரசியல் பேசும் தனக்குரிய பாணியையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து இன்னும் ஆழமாகவும் அரசியல் வலிமையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சித். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் ஆசிரியர் குணசேகரன், ரஞ்சித்திடம் நடத்திய நேர்காணலின் முழுமையான வீடியோ

ஒன்னுமே புரியலே உலகத்திலே...

by Vavar F Habibullah

வரலாறு பேசும் சில உண்மைகள் சற்று விசித்திரமாகத்தான் இருக்கிறது.அரசியல் கட்சி தாவல்கள் போலவே மத தாவல்களும் சரித்திரத்தின் பக்கங்களை சுவாரசியமாக நிரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.
மதங்களை கடந்தவர்களே மதச்சாயம் பூசி மக்களைக் கவரும் கதாநாயகர்களாக அரசியல் வானில் உலா வருகிறார்கள்.
முகமது அலி ஜின்னா - இவர் தான் பாகிஸ்தான் ஸ்தாபகர்.இவரின் முன்னோர் ஹிந்து மரபினர்.இவரது மனைவி ரத்தன் ஒரு பார்சி.மகள் டைனா ஒரு கிருத்துவ பார்சி.பேரன் நுஸ்லி வாடியா இந்தியாவின் பெரும் தொழிலதிபர்.பிரிட்டானியா மற்றும் பாம்பே டையிங் குரூப் தலைவர்.ஒரே மகள் கூட தன் தந்தையுடன் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டார்.இந்தியாவிலேயே ஒரு இந்தியராக வாழ்ந்து மறைந்தார்.சொந்த மகளையே முஸ்லிமாக மாற்ற இயலாத ஜின்னா எப்படி முஸ்லிம்களின் தலைவராக மாறினார்.பாகி ஸ்தான் என்ற முஸ்லிம் நாட்டை யாருக்காக உருவாக்கினார்...இன்றும் புரியவில்லை.

Tuesday, July 26, 2016

நெஞ்சை நடுநடுங்க வைத்த ஒரு உண்மை சம்பவம்...


இருபத்தைந்து வருட உழைப்பில் தெரிந்து கொள்ளும் அனுபவத்தை கூடிப் போனால் பதினைந்து நிமிடங்களில் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்...

உகாண்டா தலை நகரம் கம்பாலாவில் இருந்து மேற்கு திசையில் கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் அது, பெயர் மஸாக்கா.

விவசாயத் தொழில் மிகுந்த ஒரு பகுதி, காபி, தேயிலை, இரப்பர், புகையிலை, வாழை, இப்படியானவை முக்கிய தொழில்கள்,

குறிப்பிட்ட சில கனிம வளங்களினால் குறைந்த அளவில் நாட்டுக்கு அந்நிய செலாவணி, இது போக ஓரளவுக்கு மீன்பிடி தொழில்,

இவைகளுடன் இணைந்த சில சொற்பமான ஏற்றுமதிகள், நகரசபை கைச்செலவுக்கு தேறும் சுற்றுலா வருமானம் என்று இப்படித்தான் இன்னமும் இருக்கிறது அந்த பூமி.

கடந்த காலங்களில் ஏற்படிருந்த பக்கத்து நாடுகளின் போர் படையெடுப்பால், இன்னமும் நகரில் அங்குமிங்குமாய் சிதிலமடைந்து காட்சி அளிக்கும் இடிபாடான கட்டடங்களின் பராமரிப்பற்ற சோகங்கள்.

Sunday, July 24, 2016

இருப்பு ....!

இருப்பு என்பதற்கு இருப்பது (Sitting) என்பது மட்டுமே பொருளல்ல.
'இருப்பு சரியாக இருந்தால் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்' என்பது எங்கள் தந்தையார் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் கணக்கு எழுதும் கணக்காப் பிள்ளைகள் ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து காலில்லாத மேஜையில் பெரிய பேரேடுகளை வைத்து சம்மணமிட்டு அமர்ந்து கணக்கு எழுதுவார்கள்.
இங்கும் இருப்பு மிக முக்கியம். அவர்களது தொழில் தனிப்பட்ட கணக்காளராக இருந்ததால் இருப்பு கணக்கு மிகமுக்கியமாகப் பட்டிருக்கலாம். லாப நஷ்ட கணக்கு சரியாக வரவேண்டுமானால் சரக்கு இருப்புக் கணக்கு மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பது கணக்குப்பதிவியலின் அடிமட்ட அத்தியாவசியங்களுள் முதன்மையானதாகும்.

இயல் எனப் பலவகை

ஹார்டாருந்தா சப்பாத்தி
நைஸாருந்தா ஃபுல்கா
சுருண்டிடுந்தா பரோட்டா..
நீளமா சுட்டிருந்தா நானு..
வட்டமா சுட்டிர்ந்தா ரொட்டி..
.
எல்லாமே துன்னலாம்
பட்- சைட் டிஷ் வேணும்..
.
..
பிரியாணின்னா
டென்ஷன் ஃப்ரீ..!
சிங்கிள் ஷாட்..
.
‪#‎விளக்கவியல்
--------------------

Saturday, July 23, 2016

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய, கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.


உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?

ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?

மலர்களின் மகரந்தப் புன்னகையை, மழலையரின் பேதமற்ற உலகை, காதலின் யெளவனத்தை, பால்திரியா பொதுமையின் இலக்கணத்தை, இனம் பிரியா மானுட இலட்சணத்தை, பேதங்களின் அவலட்சணத்தை, உரிமைக்குரல்களின் முழக்கத்தை, நியாயத்தின் தர்மாவேசத்தை மொழிபெயர்க்க அறிந்தவரா நீங்கள்?

அப்படியானால் இந்தப் போட்டி உங்களுக்குத் தான்..

ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி - 2016 நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெல்வோருக்குக் கீழ்க்காணும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

முதல் பரிசு - 10,000 இந்திய உரூபாய்கள்

இரண்டாம் பரிசு - 5000 இந்திய உரூபாய்கள்

மூன்றாம் பரிசுகள் (இருவருக்கு) - தலா 2500 இந்திய உரூபாய்கள்

உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்.

Wednesday, July 20, 2016

நாணமில்லையோ .... நாணயமே ....!


தேடும்போது தூரத்தில் நின்று
ஏமாற்றம் காட்டுவாய்
தேவை இல்லாதபோது
பையவந்து பம்மாத்து காட்டுவாய்

உறக்கத்தை உருக்குலைத்து
உள்ளத்தை உடைத்துவிட எத்தனிப்பாய்
அதிருப்தியை ஏத்திவிட்டு
ஆசைகளை அதிகரிப்பாய்

கண்டதை எல்லாம் கொண்டுவிட
வித்தைகள் காட்டுவாய்
உழைப்பிற்கேற்ற ஊதியம் தராமல்
உணர்வுகளை வேதனிப்பாய்

ஜாமத்துப் பால் - II / தாஜ்

பாதை நெறிகளைப் பின்பற்றும்
பாதசாரிகளின் கண்களில்
உத்திரத்தில் மாட்டிவிடப்பட்ட
ஊனக் கிளிகளின் காட்சிகள்
ஒட்டிக் கொண்டு தொங்கும்.

மேற்படிப்பு தொடங்க
கிளிகளின் படபடப்பு
அவாவின் பாடமானது.

ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் .திருச்சி-7.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார்.

ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் .திருச்சி-7.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார்.

Monday, July 18, 2016

சின்னச் சின்ன எண்ணங்கள்

மனிதனின் கேவலமான மனதுதான் எல்லாத் துயரங்களுக்கும் காரணம்.
அந்த மனதை எப்படி சரியாக்குவது என்ற சிந்தனைதான் காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது நல்ல மனதுக்காரர்களிடம்.
அதன் பயனாய்த்தான் கடவுள் மார்க்கம் எல்லாம் தோன்றின.
அவற்றையும் அழித்துச் செழித்துவிட்டான் மனிதன்.
இனி என்ன மீதம்?
மனிதனை பயங்காட்ட இன்று ஒன்றுமே இல்லை.
ஆகவே, யார் பெரிய பலசாலி என்று குறைந்த பலசாலிகள் விழுங்கப்படுகிறார்கள்.
இறுதியாக எல்லாம் விழுங்கப்பட்டு எதுவுமில்லாமல் போகும்!
இதற்கென்ன மருந்து?
மனிதநேயம் என்ற உணர்வை எப்படி எல்லோருக்கும் ஊட்டுவது?
*

Friday, July 15, 2016

அழகனின் பிரிண்ட்டட் சட்டைகளும் சங்கீத ஸ்வரங்களில் சங்கமித்த நானும்..!!

‪by நிஷா மன்சூர்

மம்மூட்டியின் அழகன் படம் வெளியான 1991-ல் நான் ஒரு ஜவுளிக்கடையின் சேல்ஸ்மேனாக பணியில் இருந்தேன்.பள்ளியிறுதி முடித்து உலகை தனியாகவும் சுதந்திரமாகவும் அணுகக்கிடைத்த அற்புதமான வாய்ப்பு அது.

இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு முதலாளிக்கு குட்நைட் சார் சொல்லிவிட்டு ஓட்டமாய் ஓடி நண்பர்களுடன் குழம்பு இல்லாமல் வெறும் பரோட்டா பார்சல் வாங்கிவிட்டு(அம்பிகா மெஸ்ஸில் பஞ்சுபோல சூப்பராக போட்டுக் கொடுப்பார்கள் அப்போது) ஓட்டமும் நடையுமாக செகண்ட் ஷோ சினிமாவுக்குச் சென்றுவிடுவோம்.வாரத்தில் மூன்றல்லது நான்கு படங்கள் கண்டிப்பாக பார்த்துவிடுவோம்.படம் பார்த்துக்கொண்டே பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு விசிலடித்துக் கூச்சலிட்டும் சமயங்களில் ஆட்டம்போட்டும் கிண்டலடித்தும் ஆர்ப்பாட்டமாக படம் பார்ப்போம்.அப்படித்தான் வாசன் தியேட்டரில் அழகன் படத்தையும் பார்த்தோம். வாசன் தியேட்டர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பூட்டப்பட்டுக் கிடக்கிறது. ஏதோ பங்குதாரர்களுக்கிடையே தகராறு என்று பேசிக்கொள்கின்றனர்.

Tuesday, July 12, 2016

" டாடி, கதை சொல்லுங்க டாடி"

" டாடி, கதை சொல்லுங்க டாடி"
" கதை சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லவா? "
" சொல்லுங்க டாடி"
" காயிதேமில்லத் காயிதேமில்லத்னு ஒருத்தர் இருந்தாராம்"
" எங்க ஹிஸ்ட்ரி புக்ல இருக்காரே! அவரா டாடி?"
" ஆமான்டா..அவரேதான்"
" சொல்லுங்க டாடி"
" அவருக்கு தமிழ்னா ரொம்ம்ம்ம்ப உசுரு!"
" அவர் மதர் டங்னாலயா டாடி?"
" டேய் இப்பவாவது தாய்மொழினு சொல்லுடா"
" செரி டாடி. நீங்க சொல்லுங்க"
" அவரு உன்னைய மாதிரி டாடினு எல்லாம் கூப்பிட மாட்டாராம். அத்தானு தமிழ்லதான் அவங்க அத்தாவை கூப்பிடுவாறாம்!"
" டாடி சீக்கிரம் சொல்லுங்க டாடி. இன்னும் எதுவுமே ஆரமிக்கலை நீங்க"

பாதை ….!


ஆசையின் பாதை அலைக்கழிக்கும்
குற்றத்தின் பாதை குறுகுறுக்கும்
பொறாமையின் பாதை அழிவாகும்
வெறுப்பின் பாதை பகையாகும்

அன்பின் பாதை அறமாகும்
பண்பின் பாதை குணமாகும்
முயற்சியின் பாதை வெற்றியாகும்
அறிவின் பாதை ஞானமாகும்

ஆடி விளையாடு பாப்பா!

by  Rafeeq Sulaiman

அண்மையில் சகோ.  Jiyavudeen Mohamed ஒரு நிலைத்தகவல் எழுதியிருந்தார்.
//"விடுமுறையில் ஊர் வந்ததும் செருப்பில்லாமல் வாசலைவிட்டு இறங்கவே தயக்கம் காட்டிய (ரியாத் சிட்டியில் வாழ்க்கையை ஓட்டிய) பிள்ளைகள் இரண்டு நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு, ஆசை ஆசையாய் மண்ணில் உருண்டு பிறண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்."// என்று சொல்லியிருந்தார்.
இதிலென்ன வியப்பு என்கிறீர்களா?

தெற்கு சூடான் ....

தெற்கு சூடான் ....


 Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
உகாண்டா எல்லைப் பரப்பு முடியும் பகுதிகளின் கதவுகளை திறந்தால் தென்படும் சில ஆப்பிரிக்க நாடுகளின் பாதைகளில் தெற்கு சூடானும் உள்ளடங்கும் ...
சில ஆண்டுகளுக்கு முன்னர் சூடானிலிருந்து தனி நாடாக பிரகடணம் செய்யப்பட்டு இரு பெரும் கட்சிகளின் அதிகாரப் பங்கீட்டில் ஆட்சி நடைபெறும் தேசம் தெற்கு சூடான் என்பதை பெரும்பாலோர் அறிவோம் ....
ஓரளவு சீரமைப்பும் புழுதியும் பரவும் ஜூபா மற்றும் ஏயீ நகரங்களில் கோட்டாறு இடலாக்குடியிலிருந்து வாழும் 25 சகோதரர்களையும் சேர்த்து 220 இந்தியர்கள் தொழில் செய்தும் பணியாற்றியும் சகஜமாக வாழ்ந்து வருகிறார்கள் ...
நமது குடும்பங்களை முன்னேற்றும் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு இறைவன் வரங்கள் வழங்கிய ஆப்பிரிக்க தேசங்களில் கலவரங்கள் துவங்கும் தருணங்களை யாரும் கணிக்க இயலாது ....

Monday, July 11, 2016

புரிதல்கள்.


Saif Saif
 
குழந்தையின் பசியறிந்து பால் புகட்டும் தாய்...♥

வயிறு நிறைந்ததும் தாயை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் குழந்தை..♥

மகனின் மன வாட்டம் கண்டு தலையை கோதி மார்போடு அணைக்கும் தந்தை..♥

பரிவோடு தந்தையை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தும் தனயன்..♥

கணவனின் குணம் அறிந்து நயமாகப் பேசும் மனைவி..♥,

முத்து குளிக்கிறோமா, மூச்சை அடக்குகிறோமா?


Raheemullah Mohamed Vavar 
to
 

to எண்ணமும் எழுத்தும்......
கடலின் அடியில் கிடந்து மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவன் மூங்கில் போல் ஏதாவது ஒன்று தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறான் என்கிற உண்மையை சொல்ல வந்தால் அதில் நகைப்பிற்கிடமேது. தண்ணீருக்குள் நடக்கும் காட்சிகளும் அவன் படும் மரண வேதனையும் நம் கண்களுக்கு தெரியாமல் போவதால், கையில் அமர்ந்த கொசுவை தட்டி விட்டு வேலையில்லா நம் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது போல..நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

Sunday, July 10, 2016

தனது மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும் முன் தனது மகளுக்கு வழங்கிய உயர்வான அறிவுரை (காணொளி )

தனது மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும் முன் தனது மகளுக்கு வழங்கிய உயர்வான அறிவுரைSaturday, July 9, 2016

தாம்பத்யம்

அன்புடன் புகாரி

எவ்வளவு ஆழம் சென்றாலும் அவ்வளவு ஆழமும் தெரிஞ்சுக்க முடியுமா? அப்படியே தெரிஞ்சிக்கிட்டாலும் அது அப்படியே மாறாம இருக்குமா?
காதல் திருமணம் ஆழம் பார்த்துத்தான் கால் ஊன்றுகிறது.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பெற்றோர்களால் மட்டுமே ஆழம்பார்த்துக் கால் ஊன்றுகிறது.
பின்னது வென்று முன்னது தோற்பதற்கு முக்கியமான காரணங்களுள் முதன்மையானதென்று நான் நினைப்பது இதுதான்:
இரண்டுமனம் சாகும்வரை ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் ஒருவர் இன்னொருவரை மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பரவாயில்லை விட்டுத்தள்ளு பாலிசி ;-)

Sunday, July 3, 2016

ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்.- Rk Rudhran

ஜூலை நான்கு என் வாழ்வின் முக்கியமான நாள்.
Rk Rudhran
அன்றுதான் என் மனநல மருத்துவமனை ஆரம்பித்தேன். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றி அங்கே தொடர பிடிக்காமல், நானே சொந்தமாய் மருத்துவ மனையும் சேவை மையமும் தொடங்குவதென்று முடிவெடுத்தபோது என் கையிருப்பு ஏழாயிரம் ரூபாய். பூர்விக சொத்து சம்பாதித்த சொத்து எதுவும் கிடையாது. படம் வரைந்து தந்ததால் கிடைத்த ஒரு டிவியெஸ்50 மட்டுமே சொந்தம். க்ளினிக்கிலும் பெரிய கூட்டம் கிடையாது....
வங்கிவங்கியாய் ஏறி தெரிந்து கொண்டது கடன் வாங்கும் வழிமுறை பற்றிய முழுமையான புரிதல். 20% என்னிடம் இருந்தால் மீதி கடனாய் கிடைக்கும்..அந்த 20%?

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *மனிதர்களுள் வெறியர்கள் உண்டு.
வக்கிரக் காரர்கள் உண்டு.
அவர்கள் எல்லா மதங்களிலும் இருப்பார்கள்.

ஆகவே வெறியர்களை மதங்களின் பெயரால் அழைத்து பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி நாச வேலையில் ஈடுபடாதீர்கள் தயவு செய்து என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

வேறு எப்படித்தான் சொல்வது என்றே புரியவில்லை எனக்கு!
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

அறம் இல்லாத அறிவு பணம் சம்பாதிக்கும் வழியைத்தானே பார்க்கும்?

அறம் சொல்லித் தர இங்கே ஏதாவது ஓர் அமைப்பு உண்டா?

அறம் சொல்ல வந்த மார்க்கங்களையும் அவதூறு சொல்லித் தீவிரவாதக்கணக்கில் சேர்த்தாகிவிட்டது.

இனி அறம் இல்லாத அறிவு சுதந்திரமாக இயங்கும்தானே?

பிள்ளைகளுக்கு அறம் ஊட்டி வளர்க்க அரசு எந்த முயற்சியும் செய்யாது.

ஏனெனில் அறம் ஊட்டி வளர்க்கப்பட்டால் ஊழலை எதிர்த்து உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள் அறத்தில் வலுவானவர்கள்.

அறமற்ற தேள்களின் கூடாரத்தில் அன்பு எங்கே வாழப்போகிறது அமைதி எங்கே வாழப் போகிறது நேர்மை எங்கே வாழப்போகிறது சுதந்திரம் எங்கே வாழப்போகிறது?
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

சொல் வன்முறை
செயல் வன்முறை
இரண்டும் வன்முறைதான்
அளவில் சிறிது பெரிது என்றில்லை

சொல் வன்முறை
சற்றே ஆபத்தானதும்கூட
ஏனெனில்
ஒரு சொல் வன்முறைதான்
பல செயல் வன்முறைகளைத்
தூண்டிவிடுகிறது
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

ஆடுகளுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
ஓநாய்களுக்குக் கொண்டாட்டம்தானே

ஒழுக்கமுடையவர்களுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
வெறியர்களுக்குக் கொண்டாட்டம்தானே

ஜாதிகளால் பிரியாதீர்கள்
மதங்களால் பிரியாதீர்கள்
மனித நேயத்தால் ஒன்றுபடுங்கள்
ஓநாய்களை விரட்டுங்கள்

பெண்ணுரிமை பெறலாம்
தனிமனிதன் சுதந்திரம் பெறலாம்
மனிதநேயம் உச்சத்தைத் தொடலாம்

சொர்க்கம் மண்ணில் உறுதி!
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

வன்முறையற்ற உலகமே 
வரமாக வரவேண்டும்

கைகட்டித் தவமிருக்காமல்
கண்டதும் தவறுகளைத் திருத்திக்கொள்வோம்

கரம்பற்றி உறவு பாராட்டித்
தரமான வாழ்வைப் பெறுவோம்

அசைக்கவியலா அறிவுகொண்டு
அத்துமீறல்களைத் துடைத்தெறிவோம்

அறம்கொண்ட அறிவுக்குமுன்
அணுகுண்டும் வெங்காயவெடிதான்
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *


http://anbudanbuhari.blogspot.in

Saturday, July 2, 2016

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27   

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

"ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவருக்குச் சமமாவார்". (ஆதாரம்: முஸ்லிம்)

LinkWithin

Related Posts with Thumbnails