"நான் டாக்டர் முர்சி. எகிப்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர். நான் நிற்கும் இந்த நீதிமன்றம் சட்ட விரோதமானது. ராணுவ புரட்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்" - டிசம்பர் 2012ல் அதிபர் மாளிகைக்கு வெளியே நடந்த கலவரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அதிபர் முர்சி நேற்று எகிப்திய உச்ச நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள் இவை. ராணுவ கிளர்ச்சிக்கு பிறகு முதன் முதலாக வெளி உலகிற்கு அவர் கொண்டுவரப்பட்டதும் நேற்று தான்.
வழக்கு நடைபெற்ற போது பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முர்சியின் படத்தை ராணுவ டாங்கிகள் மீது பெண்கள் ஒட்டியிருந்த படத்தை தான் நீங்கள் காணுகின்றீர்கள்.
இது ஒரு புறம் இருக்க, கலவரத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் அடங்கிய அமைப்பு (IMFA) முர்சிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. கொலைகளுக்கு தாங்கள் முர்சியை குற்றம் சாட்டவே இல்லை என்றும், தாங்கள் குற்றம் சாட்டியதெல்லாம் எதிர்கட்சியான NSF மீதும், ரவுடிகள் மீதும் தான் என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். குற்றம் சாட்டவர்களை கண்டுக்கொள்ளாமல் முர்சி மீது வழக்கு தொடுத்திருப்பது உண்மைக்கு மாறானது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வழக்கின் மீதான விசாரணை ஜனவரி 2014-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆதார சுட்டி/சுட்டிகள்: http://live.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment