Tuesday, January 31, 2017

உம்மா ....(அம்மா)

உம்மா ....
மனம் இசைய
நாடி அசைய
கோடி வார்த்தைகள்
உதட்டோரம் தவழ்ந்தாலும்
இதய நிலத்தில்
பயிரூட்டும் விதைகளாய்
உம்மாவென்று உச்சரித்து
உயிரூட்டும் சொல்லுக்கு
ஒப்பானது உலகிலில்லை ....

மசக்கை என்றதும் முதலில் பறந்தாய்;

Yasar Arafat

மசக்கை என்றதும் முதலில் பறந்தாய்;
பின்புதான் தரையில் நடந்தாய்;
உண்டபின் குமட்டிக்கொண்டிருப்பாய்
ஆனாலும் எனக்காகதான் உண்டுக்கொண்டிருப்பாய்;
மெல்லமாய் நடப்பாய்;
ஒருக்கழித்துதான் படுப்பாய்;
உன் அழகெல்லாம் குலைந்திருக்கும்;
ஆனாலும் முகமெல்லாம் பூரித்திருக்கும்;
உயிர்போகும் வலியென்று உனக்கும் தெரியும்;
உயிர்வர போகுதென்ற மகிழ்வு உனக்கு மட்டுமே புரியும்;

Sunday, January 29, 2017

நைல்நதியின் சொந்தங்கள் ....!

ராஜா வாவுபிள்ளை
நீர்யானைகள் ....
ஆப்ரிக்காவிற்கே நைல்நதி சொந்தமென்றால் நைல்நதியின் சொந்தங்களும் ஏராளம் உண்டு.
அவற்றில் மிகவும் பெரியது நீர்யானை. இயற்கையின் வனப்பில் நைல்நதியின் வெள்ளச்செழிப்பில் கண்ணைக் கவர்ந்து சிந்தையை கொள்ளைகொள்ளும் ஒரு சாதுவான மிருகம்.
எண்பதுகளின் தொடக்கத்தில் நாங்கள் வாழும் உகாண்டாவில் தலைநகரம் கம்பாலாவை தொட்டுக்கிடக்கும் நைல்நதியின் பிறப்பிடமான விக்டோரியா ஏரியில் கூட்டம்கூட்டமாக நீர்யானைகள் காணக் கிடைத்தன. நைல்நதியில் அவற்றில் ஒரு குடும்பத்தின் மிக அருகில் சென்று கண்டோம். இப்போது வடக்கே 500Km பயணித்து வந்து நைல்நதியில் படகுப் பயணத்தின்போது கண்டுவியந்த காணொளிக்காட்சியை நட்புகள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்

மனதிற்கு ரொம்பப் பிடித்திருக்கின்றது

கவி அமுதன்
வானில்
தூண்டில்போட்டு
ஒரு விண்மீனையாவது
பிடிக்கலாம் என்று
முயற்சிக்கிறேன்
பனித்துளிகள்
ஒவ்வொன்றிலும்
முகம் பார்க்க
முனைகிறேன்
மரணத்தாகம் கொண்டு
ஒரு முழுநதியையாவது
குடிக்கப் பார்க்கிறேன்

காட்சியும் கற்பனையும் ...

Abdul Gafoor

இறைவன் படைத்த
ஆகாய புறங்களை
ஓயாமல் வட்டமிட்டு
உருளும் மேகங்களின்
வனப்பு மேனிகளில்
சுருளும் நிறங்களை
சாயாமல் பார்க்கும்
விழிகள் பிரமிக்குது ....
வண்ணங்களின் தூவலாய்
காற்றினில் அசைந்தாடும்
சிங்கார மலர்கள்
வானை நோக்கி
ஆவலாய் சிரிக்குது ....
தேனை உறிஞ்சிட
தாவலாய் புறப்படும்
ரீங்கார வண்டுகள்

Saturday, January 28, 2017

ஒன்பதாவது அறிவு

Dr.Vavar F Habibullah

டீன்ஏஜ் பருவ மானவ மாணவியர் பிரட்சி னைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவு
நாகர்கோவில் - வெள்ளமடம் அகத்தியமுனி குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் இளம் தலை முறை மாணவ மாணவியர் சற்று அதிகம் பேர் கன்சல்டிங் பிரிவில் காத்திருந்தனர்.
ஒரு ஒன்பது வயது மதிக்கத் தக்க மாணவன் ஒருவனை அழைத்து வந்தார் அவனது தாய்.
அவனது நோய் தன்மை குறித்து ஒவ்வொன் றாக சொல்ல தொடங்கினார்.
திடீர் என்று வலிப்பு நோய் வந்தவன் போல் கைகால்களை முறுக்கிக் கொள்வதாகவும் சில நேரங்களில் மயக்கமாக சாய்ந்து விடுவ தாகவும், அவ்வப்போது வயிற்று வலியால் துடிப்பதாகவும் சில நேரங்களில், நெஞ்சை பிடித்து கொண்டு வலிதாளாமல் அழுது ஒப்பாரி வைப்பதாகவும்..... அவனின் இந்த அவலங் களைக் காண சகிக்க முடியவில்லை என்றும் கூறி கண் கலங்கினார்.

Thursday, January 26, 2017

ஒரு துரோகியின் உண்மைக் கதை ..

.By. Abu Haashima


ரோமாபுரியின் பேரரசன் ஜூலியஸ் சீசர் .
சென்ற இடமெல்லாம் வெற்றிகளை மட்டுமே
அறுவடை செய்தவன்.
நிஜமாகவே அஞ்சா நெஞ்சன்.
போர் முடித்து வெளிநாட்டிலிருந்து வந்த சீசர்
கம்பீரமாய் அரசவைக்கு வந்தான்.
ரோமாபுரியின் நாடாளும் உறுப்பினர்களெல்லாம் சீசரின் நண்பர்களே .
அதில் முதன்மையானவன்
#புரூட்டஸ் .
நண்பர்கள் எதிரிகளாக மாறி அதையும் கடந்து
துரோகிகளாக உருவெடுத்த பயங்கரம் சீசருக்குத் தெரியாது.
சீசரை வளரவிட்டால்
நமக்கும் ஆபத்து
நாட்டுக்கும் ஆபத்தென்று
துரோக நண்பர்கள் நினைத்தார்கள்.

கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் உகாண்டா அதிபர் ....


Abdul Gafoor


NRM Day (Non Resistant Movement)
சுருக்கமாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்கிறேன் ...
இனியவர்களே ...
இறைவன் போர்த்திய பசுமை போர்வையின் சுமை தாங்கும் உகாண்டாவை வதைத்து சீரழித்த சூழல்களுக்கு நல் விதைகள் விதைத்து அராஜக ஆட்சியினை அகற்றி ராஜ நடை போடும் அதிபர் மாண்புமிகு யுவேரி ககுட்டா முசெவேனி அவர்கள் இன்று 33 வது ஆட்சியாண்டில் (26.01.1986) அடியெடுத்து வைக்கிறார் .... அல்ஹம்துலில்லாஹ் ...
தம்மை எதிர்த்து வால் ஆட்டும் எதிரிகளுக்கு சவால் விட்டு நாட்டின் தலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமை ஆகியவைகளை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் கெட்டிக்கார மனிதர் ...

Wednesday, January 25, 2017

என்னோடு நீயும் ....!

என்னோடு நீயும் ....!
என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
கவலைகள் இல்லை
கனவுகள் உண்டு
இலக்குகள் இல்லை
இனிமைகள் உண்டு
என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
இரவுபகல் இல்லை
காலங்கள் உண்டு
கடினங்கள் இல்லை
காரியங்கள் உண்டு

இப்பிரபஞ்த்தில் குழந்தையாய் தரித்தாய்

என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்
இப்பிரபஞ்த்தில்
குழந்தையாய் தரித்தாய்
குமரியாய் நடந்து
இல்லத்தை நிறைத்தாய் நீ
மணமகன் கண்டு
மணப்பெண்ணாகி
மனைவியாய் மாறி
பணிவிடை செய்தாய் நீ
மயக்கம் தலைசுற்றல் குமட்டல்
அனைத்தையும் தனதாக்கிக்கொண்டு
கரு வளரவளர பூரிப்படைந்தாய் நீ
சரிந்து படுத்தால்
கொடி சுற்றுமென்று
நிமிர்ந்தே படுத்து
விட்டத்தைப் பார்த்தாய்

Tuesday, January 24, 2017

இன்று பலருக்கும் உயிர் நாடியாய் இருப்பது

Kalaimahel Hidaya Risvi
கணவன்-மனைவி
மகன்-மகள்
அம்மா-அப்பா
தம்பி- தங்கை
அண்ணன்-அக்கா
எந்த உற்ற உறவானாலும் சரி
ரத்தப் பாசமானாலும் சரி
இருப்பவர்களது வரிசையில்
விட்டுச் செல்லாதுதன்னோடுஒட்டிக் கொண்டு
உறவாடிக் கொண்டிருப்பது
இன்று
பலருக்கும் உயிர் நாடியாய் இருப்பது

26 - ஜனவரி 1965

Dr.Vavar F Habibullah
26 - ஜனவரி 1965
மாணவர்கள் திரண்டனர்.திட்டமிட்ட மாணவர் அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவானது.
மாணவர்களின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அதை செயல்படுத்த மாணவர்களில் இருந்தே அருமையான இளம் மாணவ தலைவர்கள் உருவாயினர்.
பா.சீனிவாசன், காளிமுத்து, துரைமுருகன்,
நா.காமராசன், எல் கணேசன், ரவிச்சந்திரன் என்று இந்த மாணவ தலைவர்கள் பட்டியல் நீளும்.

Sunday, January 22, 2017

பார்வையாளன்


Vavar F Habibullah

THE NEW AGE TAMIL GENERATION
சினிமா, அரசியல் சாயம் சிறிதும் கலக்காத தமிழனின் கலாச்சாரப் புரட்சிக்குரல் தமிழக வீதிகளையும் தாண்டி அகில உலகிலும்
எதிரொலிக்கிறது.
ஜல்லிக் கட்டுக்கும் பீட்டாவுக்கும் உள்ள கிராமிய பொருளாதரத்தின் ஏகாதிபத்திய சுரண்டலை தமிழ் மாணவன் தெளிவாக உணர்ந்ததன் விளைவே இந்த உயிர்த்
துடிப்பான போராட்டம்.
அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை விட இன்றைய இளைய தலைமுறை அதிகமாக சிந்திக்க தலைப்பட்டதன் விளைவே இந்த அறிவியல் புரட்சி.
ரஷிய புரட்சியையும், பிரஞ்சு புரட்சியையும் புரட்டிப் போடும் அளவிற்கு வீறு கொண்டு எழுகிறது தமிழ் இளம் மாணவர்களின் கலாச்சார புரட்சி.
இந்த இளம் தலைமுறையை நிச்சயம்
நம்பலாம். இன-மானம் காத்திட கிளர்ந்தெழும் இந்த இளம் தமிழ் காளைகளின் கரங்களில் தமிழகத்தை துணிந்து ஒப்படைக்கலாம்.
தமிழ் இன மக்கள் இதற்கு ஆதரவு அளித்தால் வரும் காலங்களில் புதிய தமிழ் சமூக
அரசியலில் பெரும் மாற்றங்களை கொண்டு
வர இயலும்.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
THE EMOTIONAL WORDS

Wednesday, January 18, 2017

தாடி வளர்த்தால்…..

இரண்டு நாள் ‘ஷேவ்’ செய்யவில்லையென்றால், “என்னப்பா சோகம்? தேவதாஸ் மாதிரி தாடிவிட்டுட்ட…” என்று துக்கம் விசாரித்துவிடுவார்கள்..

அப்படிப் பார்த்தால் இந்தப் படத்திலுள்ள யாரும் தேவதாஸ்கள் கிடையாதே! எல்லோரும் மெத்தப்படித்த மேதாவிகள்.. என்று சொன்னால்.. ஆங்.. அந்த வயதில் தாடி வைப்பதொன்றும் பெரிய காரியமில்லை…. அந்த வயது வந்தவுடன் நாங்களும் தாடி வைக்கிறோம் என்றுதான் சொல்லுவோம்… இல்லையா?!

உலகத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்,ஃபார்ஸி, யூதர் இன்னும் எந்த மதத்திலும் நம்பிக்கையற்றோர் வரையிலும் தாடி விரும்பியே வளர்க்கின்றனர்.

இஸ்லாமைப் பொறுத்தவரையில் தாடி கட்டாயமாக்கப்படவில்லை என்றபோதும் நபிவழி என்பதால் விரும்பி வளர்க்கப்படுகிறது.

எதிரிகள் விரட்டும்போது தமது படையிலிருந்த வீரர்களின் தாடியைப் பிடித்துக்கூட எதிரிகளிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தமது படைவீர்கள் தாடி வைப்பதற்குத் தடைவிதித்திருந்தான் மாவீரன் அலெக்ஸ்சாண்டர்.

Tuesday, January 17, 2017

தலைவன்

Vavar F Habibullah

மனிதனை 'சூழ்நிலைக் கைதி' என்று தத்துவ வாதிகள் விமர்சிப்பர்.ஆனால் கார்ல் மார்க்ஸ் ஒரு படி மேலே போய்..
'மனிதன் அவன் வாழும் சூழலின் உருவகம்' MAN IS THE PRODUCT OF HIS ENVIRONMENT என்று சற்று புதுமையான விளக்கத்தை முன் வைத்தார்.
அமெரிக்காவில் ஆளுமைத் திறன் பெற்ற அனைவருமே குறிப்பாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவோர் பெரும்பாலோர் அமெரிக்காவின் தலை சிறந்த "ஐ.வி லீக்"
(Ivy League) எனப்படும் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களாகவே உள்ளனர்
ஜார்ஜ்W.புஷ், அவரதுதந்தை சீனியர்புஷ்,
கிளிண்டன், ஒபாமா, புதிய அதிபர் டிரம்ப் அனைவருமே இந்த ஐ.வி லீக் பலகலை கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர் ஆவர்.
ஹார்வேர்ட், ஏல் யூனிவர்சிடிகள் இதில் அடங்கும்.தலைசிறந்த நோபல் பரிசை இந்த பல்கலை கழகங்களே அதிக அளவில் தட்டி செல்கின்றன.பில் கேட்ஸ், ஆப்பிள் ஜாப்ஸ் எல்லாம் இந்த கல்விச் சாலைகளில் படித்து வந்தவர்கள் தான்.
நமது நாட்டின் கல்வி முறை இதற்கு
முற்றிலும் மாறானது.நமது தமிழ் நாட்டில், கல்வித் தகுதி என்பது அரசியல் வாதிகளுக்கு தேவையற்ற ஒன்றாகி விட்டது.
நாட்டின் ஜனாதிபதிக்கும், பிதமருக்கும், ஆளுனர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.எ போன்ற மக்களை ஆளும் ஆளவந்தார் எவருக்கும் நமது பொன்னாட்டில் கல்வி தகுதி என்பது அறவே தேவையில்லாத ஒன்று.இந்திய குடிமகன் என்ற தகுதி ஒன்றே போதும்.எழுத படிக்க தெரியாதவர் கூட நமது நாட்டில் எளிதாக முதல்வர் ஆகலாம்.
தமிழ் நாட்டின் கழக அரசியல் வரலாற்றில் அறிஞர் அண்ணா இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தார்.டபுள் எம்.ஏ பட்டங்களுடன்
அரசியலில் நுழைந்த அவர் பேச்சிலும், எழுத்திலும் தன்னிகரற்று விளங்கினார்.

Friday, January 13, 2017

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்
சொர்க்கத்தை
மண்ணில் காணவும்
நரகத்தை
நாட்களிலிருந்தும்
நெஞ்சினின்றும்
விலக்கிவைக்கவும்
திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

எப்படி சொல்வது..


மாதம் தள்ளிப்போனது;
மனமோ குதுகலித்தது;
புன்னகையாலும் சிரிப்பாலும்
உள்ளம் தத்தளிக்குது;
முதல் முறை இப்படி
வயிறை தடவிப்பார்த்தேன்;
உதட்டை புன்னகையால்
கடித்துக்கொண்டேன்;
ஊர்ஜிதம் செய்யப்பட்ட
ஒர் செய்தியை..
உன்னிடம் சேர்க்க
வெட்கப்பட்டேன்;
முதல் முறை காதல்
சொன்னதைப்போல..
ஆழமாய் மூச்சு வாங்கினேன்;
எப்படி சொல்வது..

Thursday, January 12, 2017

ஆணென்பவன்

Malikka Farook
ஆணென்பவன்
##########
அன்பைக்குழைத்து
உணர்வுக்குள் பூசத்தெரிந்தவன்...
ஆதரவுக் கரத்தை
அன்போடு நீட்டுபவன்....
இன்பதுன்பத்தில்
இணக்கமுடன் இருப்பவன்..
ஈர்ப்பின் நுண்ணறிவை
என்னவென்று அறிந்தவன்....
உள்ளத்து ஊர்தலை
விளங்க முயல்பவன்....

புவிசார் அரசியல் (Geopolitics) ....!

எல்லாம் இருந்தும் துன்பப் படுபவன் நல்லெண்ணம் இல்லாதவன். நல்லவை அல்லாதவற்றை சகமனித மனதில் விதைப்பவன் அதிக்க சக்திகொண்டு மறைமுக அரசாங்கம் செய்து மக்களை அடிமையாக்கி நாட்டின் தலைவர்களை பொம்மையாக்கி ஆட்டிப் படைக்கின்றனர்.
நான் வசிக்கும் உகாண்டாவின் பக்கத்து நாடு காங்கோ. இயற்கையின் அத்தனை அழகையும் செல்வங்களையும் அளக்காமல் அள்ளி வழங்கி இருக்கிறான் இறைவன்.

மனிதன் அப்படித்தான்; அவ்வளவுதான்...!

காரியம் முடிந்ததும் கழட்டி விடும் ஒர் மனித கூட்டத்திற்கு நடுவில்தான் நாமும் வாழுகிறோம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்; உங்களின் முதுகிற்குப் பின்னே ஏராளமான துரோக ஆயுதத்துடன் சிரித்தப்படி சிலரும்; கோபத்துடன் எதிரியாக சிலரும்; வாஞ்சையுடன் அருகில் சிலரும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்;
இயற்கையான இயல்புகளை குற்றம் பிடித்து என்செய்ய; மனிதர்களை குற்றம் பிடித்து என்செய்ய; அவர் மாற வேண்டும் இவர் மாற வேண்டும் அது மாற வேண்டும் இது மாற வேண்டுமென்று மாறாத ஒன்றுக்காக அவலாசை கொள்கிறோம்;
சின்ன சின்ன துளைகள் உங்கள் வீட்டின் மேற்கூரைகளில் விழுந்து; எத்தனை பாத்திரங்களுடன் நீரை பிடித்துவைக்கப்போகிறீர்கள் மழை பொழியும் போது; பொய்யும் அப்படித்தான்; ஒரளவிற்கு மேல் மன்னிப்புகளின் பாத்திரங்கள் சரிவராது;

Wednesday, January 11, 2017

பிறந்தநாள் நீ மலர்ந்த நாள்


பிறந்தநாள்
நீ மலர்ந்த நாள்
அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள்
உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய்
ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே

எல்லோரிடமும் ஒரு கதை இருக்கிறது

எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது
வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது
எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

Tuesday, January 10, 2017

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்

அன்புடன் புகாரி
முடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   முடிந்துபோவதில்லை
உடைந்ததென்று நினைப்பதெல்லாம்
   உடைந்துபோவதில்லை
வடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   வடிந்துபோவதில்லை
மடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   மடிந்துபோவதில்லை
நடித்ததென்று நினைத்ததெல்லாம்
   நடித்ததின்றிப் போகலாம்

இந்திய ரூபாயின் சுவையான வரலாறு

பேராசிரியர் கே. ராஜு
     இந்திய ரூபாய் பல நூற்றாண்டுகால சுவையான வரலாற்றினை உடையது. உங்கள் பாக்கெட்டிலோ பர்சிலோ உள்ள ரூபாயின் (மோடியின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு உங்கள் பாக்கெட்டில் ரூபாய் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்) கடந்த காலம் பல திருப்பங்கள் கொண்டது. ரூபாய் நோட்டில் பிரபலாகிவிட்ட மகாத்மா காந்தியின் சிரிப்புக்குப் பின்னால் நீண்ட போராட்டம், தேடல், செல்வம் கொண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு பண்டைக்கால இந்தியாவில் கி.மு. 6வது நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றில் சில முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்.

அற்புதமான தொழில்நுட்பம் / AMAZING TECHNOLOGY

வாட்ஸ்அப் வழியே வானொலிகள் கேட்க
whatsapp பயன்கள்
உலகில் உள்ள வானொலிகள் (radio ரேடியோ )
கேட்க
http://radio.garden/live/boca-raton/fau/
http://radio.garden/live/boca-raton/fau/

Sunday, January 8, 2017

நெருக்கம் ....!

வாழ்க்கைப் பயிருக்கும்
விவசாயப் பயிருக்கும்
இடைவெளி நல்லது
செழித்து வளர்ந்து
நற்பலன் தரும்
வயலில்
நாற்றின் நெருக்கம்
விளைச்சலில்
பலனைக் குறைக்கும்
உற்றாரோடு நெருங்கிப்பழக
உறவில் இடைவெளி குறையும்

Saturday, January 7, 2017

உடல்நலம் /பார்த்ததில் பிடித்த படங்கள்

புயலடித்து ஓய்ந்து விட்டது..

Saif Saif

என்மனதில் காதல் புயல் இப்போது தானே மையம் கொண்டுள்ளது..
என்னவளே தெரியுமா உனக்கு..!!??
உன் விழிகளை பார்த்து தான் இறைவன் மீன்களை படைத்தானோ என்னவோ அதனால் தான் நான் மீன்களே சாப்பிடுவதில்லை என்னவளே தெரியுமா உனக்கு..!!??
உன் பற்களை பார்த்து தான் இறைவன் முத்துக்களை தந்தானோ என்னவோ அதனால் தான் முத்துக்கள் விலையுயர்ந்து போகிறதோ என்னவளே தெரியுமா உனக்கு...!!??
உன் பாதம் பட்ட மணற் பரப்பில் என் பாதம் பதிக்க ஆசைப் பட்டு எங்கே சுவடு அழிந்து விடுமோ என பதிக்காமல் திரும்பி சென்றது என்னவளே தெரியுமா உனக்கு..!!??

Friday, January 6, 2017

பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா இம்முறை பாரீசு பெரு நகர மையத்தில


தகவல் பரிமாற்றம் – பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017.
இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது.
புலம்பெயர்ந்து தொடரும் வாழ்வின் நீட்சி ‘நான் யார்?’ என்ற கேள்வியினை எழுப்பி  ‘நாங்கள் யாராக இருக்கலாம்?” என்னும் உணர்வுடன் கூட்டுநினைவாக பீறிட்டெழுகின்றது. இது ‘நாங்கள்’ தொடர்பான ஒருங்கிணைதலை வலியுறுத்துகிறது. இந்த ஒன்றிணைவுக்கு ‘பொங்கல்’ பொருத்தமான பண்பாட்டு நிகழ்வாக அமைகிறது. இது தமிழர் வாழ்வியலுடன் பிணைந்த மரபாகவும், சடங்காகவும், பண்பாடாகவும், கொண்டாட்டமாகவும் இன்றளவும் தொடர்கின்றது.

வாட்ஸப் – பகிரி

வாட்ஸப் – பகிரி (புலனம்)

நெஞ்சில் நிறைந்து நினைவில் நின்ற

தொடர்பில்லாமல் தொலைந்த
பால்யகால நட்பூக்கள் துளிர்க்க
தண்ணீர்த் தெளித்து
பழைய ஞாபகங்களைப்
பாசத்துடன் பகிரச்செய்த பகிரியே!
நண்பர்கள்குழுவில் நீளும்
முடிவில்லா அரட்டைகளை
அடக்கி அரட்ட ஆசான்கள்
யாருமில்லையே!

பெருமிதம் பூரிப்பு பொலிவு பேராண்மை பாரம்பரியம் கம்பீரம்

பெருமிதம்
பூரிப்பு
பொலிவு
பேராண்மை
பாரம்பரியம்
கம்பீரம்
#இனிய வேட்டிதின நல்வாழ்த்துகள்

Thursday, January 5, 2017

உலகையே வென்றிடுவோம் !

மூத்தோர் சொல்லில்
-----இருக்கும் முழுநெல்லி
முன்னே கசக்கும்
-----பின்னே இனிக்கும்
மரமேறி பறிக்கனும்
-----விழுந்தால் பழுத்துவிடும்
அறிவுரையை கேட்கணும்
-----அதன்படி நடக்கணும்
மூத்தோர் மொழிந்திட்ட
-----பலமொழிகள் யாவும்
பாடுபட்டுப் படித்ததேயாம்
-----பாங்கான பழமொழியாம்

Wednesday, January 4, 2017

தி.மு,க. செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

தி.மு,க. செயல் தலைவராக மு.க. ஸ்டாலின்

Durai Murugan's Emotional Speech - தி.மு,க. செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு | Sun News

துரை முருகன் அழுததைப் பார்த்து பொதுக்குழுவே ../ Abu Haashima


துரை முருகன் அழுததைப் பார்த்து பொதுக்குழுவே
கண்கலங்கிப் போச்சு.
பார்த்திட்டிருந்த எனக்கும்
லேசா கண்கலங்க ...
இதல்லவா பாசம்...!

எண்ணங்களின் கலவை ...


முகப் பாத்திரமது
புன்னகையை சமைக்கிறது ....
அகப் புத்தகமது
அன்பை அச்சிடுகிறது ....
கற்பனை ஓலையது
எண்ணங்களை முடைகிறது ....
விற்பனை ஆலையது
உழைப்பை குடைகிறது ....
பறித்த பூக்களதில்
வாசமும் விரிகிறது ....
குறித்த நொடியதில்
சுவாசமும் பிரிகிறது ....
மடியமர்ந்த மழலையது
பாசத்தோடு சிரிக்கிறது ....

தமிழன் பண்பாடு / Vavar F Habibullahதலைவிகளின் கால்களில் விழுந்து... விழுந்து எழும் எண்ணிக்கையை வைத்தே, பதவியும் பதவி உயர்வும் பெறும் நம் சுந்தர தமிழ்நாட்டில்
தமிழன் பண்பாட்டையும், நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் அன்றே உலகுக்கு காட்டி தந்த கர்ம வீரர் காமராஜர்.
கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, உடல் வளைந்து நெளிந்து புரளும், புது ஈன ஜந்துக்கள் வாழும் தமிழகத்தில் தமிழினத்தின் பிரதி நிதியாய்... தலைவர்கள் முன்பும் தலை
சாய்க்காமல், கை கட்டாமல், கை காட்டி நிற்கும் கம்பீரத் தமிழன் காமராஜர்.

இந்த ரேவதியைப் பற்றியும் சற்று தெரிந்துக் கொள்வோமே..?

இந்த ரேவதியைப் பற்றியும் சற்று தெரிந்துக் கொள்வோமே..?
நாகைப் பகுதியிலுள்ள விவசாயத்திற்கு பயனற்றுப்போன 1,200 ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாய முறையில் பழைய நிலைக்கு விளைநிலங்களாக மாற்றியவர்.
இவரது இயற்கை தொழில்நுட்பத்தைக் கேள்விப்பட்டு இவரை அழைத்த பில் கிளிண்டன்,கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தோனேஷியாவில் 7 லட்சம் ஏக்கர் நிலங்களையும் சீர் செய்து கொடுத்தவர்

அப்துல் கையூம்
அப்துல் கையூம்

அரிதார முகமூடிகளின் மனவிகாரங்கள்..! # நிஷாமன்சூர்

ஐந்தாம் வகுப்பு அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும்போது மூலனூரில்தான் முதன்முறையாக அதிரடியான ஆட்டமும் பாட்டமும் கூத்தும் கும்மாளமுமான ஒரு கோவில் திருவிழாவை நேரில் பார்த்ததாக நினைவெனக்கு. அதுவரை முழுக்க முழுக்க இஸ்லாமியச் சூழலில் வாழ்ந்துவந்ததால் இதுபோன்ற விழாக்களைக் கண்டதில்லை.
வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு சீனியம்மா(சீனிவாசனுடைய அம்மாவை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) சுரேஷம்மா மற்றும் பொன்னாத்தாக்காவுடன் அம்மாவும் நானும் தங்கை தம்பிகள் சகிதம் வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் முகமெல்லாம் சாயத்தை அப்பிக்கொண்டு ஒருவனும் கோமாளி வேஷம் போட்டிருந்த இன்னொருவனும் பெண்களை நோக்கி பல்லிளித்தபடியே கைகளில் வைத்திருந்த நீண்ட ரப்பர் தடிகளை ஆணுருப்புகளின் மீது வைத்து ஆட்டினார்கள். அதைக்கண்ட பெண்கள்

Tuesday, January 3, 2017

நான் ரசித்த புத்தாண்டு வாழ்த்து

By.Vavar F Habibullah
'மோடி போல் உலகை சுற்றி வரவும்
ராகுல் காந்தி போல் குழந்தை தனத்துடனும்
ஸ்டாலின் போல் பொறுமையுடனும்
பன்னீர் செல்வம் போல் அதிர்ஷ்டம் பெறவும்
சின்னம்மா போல் செல்வம் குவிக்கவும்
சுஸ்மிதா சுவராஜ் போல் பீடு நடை போடவும்
விஜயகாந்த் போல் சிரிப்பு காட்டவும்
அன்பு மணி போல் லட்சியத்தை எட்டவும்
கலைஞர் போல் நீடுழி வாழவும்
இந்த புத்தாண்டில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.'
இந்த வாழ்த்து செய்தியை எனக்கு
அனுப்பியவர் எனது மரியாதைக்குரிய மெடிக்கல் டைரக்டர் டாக்டர் சுதா பொன்னு அவர்கள்.
ஒரு காலத்தில்..
'பெர்சனாலடி டெவலவப்மெண்ட்' பயிலரங்க நிகழ்ச்சிகளை இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் அதிக அளவில் நடத்திய அநுபவம் எனக்கு நிறைய உண்டு.

Sunday, January 1, 2017

மோடியும், கேஷ்லெஸ் எக்கனாமியும், பின்னே ஞானும்..

Priya Thambi
இந்தியப் பிரதமர் மோடி ‘Cashless economy' அறிவித்த நாளில் இருந்தே, அதை சின்சியராக பின்பற்றி வருகிறேன்.. பணம் கொடுத்தால் தான் பொருள் தருவேன் என அடம்பிடிக்கும் பால்கடைக்காரர், பேப்பர்காரர், மின்னுவின் பள்ளி வாசலில் பலூன் விற்பவர் போன்ற தேச விரோதிகளுக்கு கொடுப்பதற்கு மாத்திரம் அவ்வப்போது பெரும்பாலும் இரவு பலகிலோமீட்டர் பயணித்து ஏடிஎம்மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வேன்..
கடந்த திங்கட்கிழமையன்று வர்தா புயல் வரப்போவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெதர்மேன் மூலம் அறிந்தேன். அத்தியாவசியப் பொருட்களான மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்துவிட்டேன். கையில் பணம் வைத்திருப்பது அத்தியாவசியம் இல்லை என்கிற முடிவை நவம்பர் எட்டு முதல் எடுத்திருப்பதால், அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே....!/ ராஜா வாவுபிள்ளை

விதியான வாழ்க்கையை
மதிகொண்டு நடத்திப்பார்
சதினடந்தாலும் தெரியும்
சாதனைகள் பிறக்கும்
சோதனைகள் வரலாம்
வேதனைகள் இருக்கும்
நற்போதனைகள் ஏற்று
நேர்வழி வாழலாம்
உடலில் உயிரிருக்கும்
உறவில் அன்பிருக்கும்
கையில் பணமிருந்தால்
உலகமே தேடிவரும்
அழியாத செல்வமாம்
இறை வணக்கத்தை
கடைபிடித்து இருக்க
எல்லாமே கூடிவரும்

LinkWithin

Related Posts with Thumbnails