எக்காலத்திலும் என்னோடு இருப்பேன் என்றாய்
முக்காலமும் அறியும் திறன் பெற்றாயோ!
என்னோடு போராடும் திறன் பெற்றாய்
போர் செய்ய போர்தளம் புறப்பட்டால்
போராட்ட மனம் கொண்டு தடை செய்யும் மனமேன்
போர் களத்திலும் உடனிருந்து போர் செய்ய விருப்பமோ!
வரும் விருந்தினரை கவணித்து
காலம் கடத்தாமல் அனுப்பி வைக்கின்றாய்
காலம் கடந்து நான் வந்தால்
கடுஞ் சினம் கொண்டு அகன்றுச் செல்கின்றாய்
எக்காலமும் என்னுடன் இருப்பேன் என்று சொன்னதனை மறந்ததேன்!
சூடான சட்டியில் சமைத்த கறிகளை
ருசித்து உண்ணாமல் சென்றால்
சுட்டெரிக்கும் சூரியனைப் போல்
உன் முகம் மாறுவதேன்
எக்கலாமும் அறிந்த உன்னால்
என் மனதை அறியத் தெரியாமல் போனதேன்
காலங்கள் பல இருப்பினும்
காலத்தில் பசுமையான பருவகாலம்
பலனற்று போகாமல் பார்த்துக் கொள்
காலத்தே பயிர் செய்ய பழகிக் கொள்
அதுவே எக்காலத்தையும் சிறப்பாக்கி வைக்கும்
No comments:
Post a Comment