Wednesday, November 6, 2013

தெரிந்தும் தெரியாதவனாய் !

எல்லாம் தெரியும் என்பார்
சாட்சி சொல்ல வர மாட்டார்

எல்லாம் தெரியாது என்பார்
சாட்சி சொல்ல வருவார்

தெரியாமல் இருக்க எப்படி சாட்சி சொல்வீர்
நிகழ்வு நடந்த இடத்தில் இருந்தேன்
அழைத்தால் எல்லாம் தெரியாது என்பேன்

தெரிந்ததை தெரியாதது போல் இருக்க வேண்டும்
தெரியாததை தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ள வேண்டும்

தெரிந்ததை சொன்னால் அடுத்தவரை பாதிக்கும்
தெரிந்ததை சொன்னால் அடுத்தவர் பயனடைந்து விடுவார்
அதனால் எல்லாம் தெரியும் ஆனால் எல்லாம் தெரியாது என்பேன்

நாக்கு ருசியைக் காணும்
நாக்கு சொல்வதும் ருசிக்காகவும் பேசும்

நல்லது கெட்டது அறிந்தது மனம்
நல்லது கெட்டது தெரிந்து பேசும் நாக்கு

பேசும் பேச்சில் பொய் கலந்திருக்கும்
பொய் பேசும் நாக்கு கலங்காது

No comments: