Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Saturday, November 30, 2013

யார் வீரர் !


ஒரு பாக்சிங் வீரர் சிறுநீர் கழிக்க ஒரு கழிப்பிட த்துக்குள் செல்லுமுன் தனது கோடை கழட்டி வெளி யில வைத்துவிட்டு
சிறுநீர் கழிக்க போனார்...!!!!!! அங்கு துப்புரவு செய்யும் தொழிலாளி சொன்னார் ......அய்யா இங்கே வைத்து விட்டு செல்லாதீர்கள்;;;; யாரவது திருடிசென்று விடுவார்கள் .......
அதற்க்கு அந்த வீரர் சொன்னார் நான் யார் தெரியுமா ...!!!!!
என்னிடம் எவனும் திருடிவிடுவானா ...!!!!!!
இப்ப பார் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து
தான் ஒரு மிகவும் பலம் பொருந்திய பலசாலி என்பதை குறிக்கும் வண்ணம்

அந்த கோட்டின் மேல் இப்படி எழுதி வைத்து விட்டு போனார்

நான் ஒரு பாக்ஸின் வீரர்
"""""""""""""""""""""""""""""""""""

Thursday, May 31, 2012

அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்
அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
Source : http://anbudanbuhari.blogspot.in/

Wednesday, April 25, 2012

உண்மையும் பொய்யும் கலந்த கலவை!


கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம்.  "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த
பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது. 
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு

Sunday, September 25, 2011

புன்னகையில் பலவிதம்! சிரிப்பில் சிலவிதம்!

முதியவர்கள் முன்பு காட்டும் புன்னகை
மரியாதை குறிக்கிறது

குழந்தைகளிடம்  காட்டு சிரிப்பு
குற்றமற்றதை குறிக்கிறது
...
நண்பர்
களிடம் புன்னகை
பராமரிப்பு குறிக்கிறது
 

தாய்லாந்து விலைமகள் இதழில் வாணிபப் புன்னகை

மொபைல் தொடர்புடன் வரும் புன்னகை உண்மையின்    வெளிப்பாடு.  


புன்னகை மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்


மகிழ்வு அதிகமாகி வாய்விட்டு  சிரிப்பதும் ஒரு சிறப்புதான் .

Monday, February 21, 2011

சிரிப்புதான் வருகின்றது!



சிரிப்புதான் எத்தனை வகை!
மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்
மகிழ்வான பிளந்த வாயுடன் சிரிப்பு
அரசியல் சிரிப்பு
சிந்தனையாளர் சிரிப்பு
சந்தர்ப்பவாதியின் சிரிப்பு
சிரிப்பதற்காகவே சிரிப்பு
நமுட்டுச் சிரிப்பு
அகம் மகிழ்ந்த சிரிப்பு
எப்படி வரும் நமக்கு சிரிப்பு! ஒட்டு போட்டவர் ஏமாந்த சிரிப்பு

Saturday, September 11, 2010

சிரிப்புதான் எத்தனை வகை!

சிரிப்புதான் எத்தனை வகை!

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்