Sunday, January 31, 2021

பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு பாடல்

 Nagore Rumi


கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு சகோதரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாஜன் படத்தில் வரும் பஹுத் ப்யார் கர்தே ஹை என்ற பாடல் மெட்டில் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு பாடல் எழுதிக்கொடுத்தேன் ஏனோ அவரால் அதைப் பாட முடியாமல் போய்விட்டது. நேற்று சகோதரர் அப்துல் காதர் அவர்கள் தன் ‘இரும்புத்தேன் குரலால் அதைப் பாடி எங்களை மகிழ்வித்தார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கும், ஏற்பாடு செய்த மாமா மகன் நாகூர் கவிக்கும் நன்றிகள். கேட்டுப் பாருங்கள்.

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே

 அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....

ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே....

ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...

அண்ணல் நபியை தந்தோனே..

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...

மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா....

மாண்பு மிகுந்தவன் நீயே....

மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா...

மாண்பு மிகுந்தவன் நீயே...

நிகரில்லாத தனியோன் நீயே...

நேர்மையாளனும் நீயே...

Thursday, January 21, 2021

தேரிழந்தூர் தாஜுதீன்.அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் (துவா)

தேரிழந்தூர் தாஜுதீன் மற்றும் முகம்மது அலி

 



இறைவனிடம் (அல்லாஹ்விடம்) ஈமானைக் (நம்பிக்கை ) இறையருள் கேட்டேன் !

 

இறைவனிடம் (அல்லாஹ்விடம்) ஈமானைக் (நம்பிக்கை ) இறையருள் கேட்டேன் !

கருணையாளன்  கேட்டதை கனிவுடன் கொடுத்தான் .


கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன்

கேட்டதையும் கொடுப்பான் ,

கேட்காததையும் கொடுப்பான்.

கொடுத்ததும் நன்மைக்கே

கொடுக்காததும் நன்மைக்கே .

கேடகவேண்டியதும் அவனிடமே

கேட்கவேண்டியது நம் செயல் .

கொடுப்பது அவன் அருள் .

திருக்குர்ஆன் பற்றிய பாடல்

 Yembal Thajammul Mohammad

"ஒரே நாளில் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்!"

*******************************************

மதிப்பிற்குரிய சகோதரர் மவ்லானா ஜமீல் பாஷா உமரி அவர்கள் அண்மையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் "ஒரே நாளில் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்" எனும் தலைப்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட ஒரு மாபெரும் முழுநாள் பயிலரங்கை நடத்தினார்.அதில்,

திருக்குர்ஆன் பற்றி அடியேன் எழுதிய பாடல் பாடப்பட்டது. இதை முழுவதுமாகக் கேட்டு, சகோதரர்கள் கருத்துக்களைத் தெரிவித்து உதவினால் நான் மிகவும் நன்றியுடையவன் ஆவேன்.

மதினாவில் பாடல்

 

பாடல்:

மதினாவில்....

 

 வரிகள்:

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது,

 

பாடியவர்:

தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி.

 

மெட்டமைப்பு:

மதுரை ராஜபார்ட் ராஜா முஹம்மது,

 

பின்னணி இசை: முரளிதரன்.

 

ஒருங்கிணைப்பு: கவிஞர் நாகூர் காதர்ஒலி

 

தயாரிப்பு:

நியூலைட் புக் சென்டர்,

9994405644..

சென்னை 68.

Tuesday, January 19, 2021

A.Mohamed Ali ./S.E.A.முகம்மது அலி


 

இறைவன் அருளால் இனிய நினைவுகளோடு....

Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.



இறைவன் அருளால் இனிய நினைவுகளோடு..இறைவன் அருளால் இனிய நினைவுகளோடு......


---------------------------------------------------------------

பழகிட வயது தடை இல்லை ,

பயன் அற்ற பழக்கம் பழகிட தேவை இல்லை ..!

முதுமையால் விலகிடாத

முக நூலில் முகம் மலரும் முக்கிய மா மனிதர் .

சர் பட்டம் வழங்கிட சகல தகுதியும்

சற்றும் குறையாதவர் ..

ஓய்வு நேரங்களில் மட்டுமல்ல ,

ஓயாது நான் படிக்கும் உயர்தர

உற்சாக புத்தகம் இவர் ... !

நான் (நாம் ) உங்களை விரும்பிட

நிறைய காரணம் இருக்கிறது ..

மறை அறிந்ததை விட வாழ்கையின்

நிறை , குறை அறிந்ததினால் ,

நான் நேசிக்கும் என் ஊரில்

எனக்கு முன்பே பிறந்ததினால் ..,

எங்கள் முன்னோர்களின் முகம் பார்த்த

கண்ணாடியாக இருப்பதினால் ..,’

இன்னும் பலஆண்டு எங்களோடு

பயணம் செய்ய

இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

Haja Maideen


வாரம் ஒரு முறை திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி - 4 | நீடூர் நெய்வாசல்

பெண்கள் பயான், உரை: சகோதரி நஸ்ரத், தலைப்பு: அன்றைய சஹாபிய பெண்களும், இன்...

Monday, January 18, 2021

முகமது நபியும் முதல் இனவெறி மறுப்பும்

 

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை

 Abrar Ahmed(Anbuman Abrar)

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை .மனிதர்களில் பாம்பு, தேள், கழுகு ,கழுதை ,குரங்கு ,குள்ளநரி, ஓநாய், செந்நாய் ,சிங்கம் ,புலி முதலை ..எல்லா வகையும்   தான் உண்டு .

இவர்கள் மத்தியில் தான் வாழ வேண்டியிருக்கிறது .கொஞ்சம் அசந்தாலும் நம் கதையை முடித்து விடுவார்கள் .

கவிஞர் யுகபாரதியுடன் தஞ்சை முதல் வத்தலக்குண்டு வரையிலான மகிழுந்து பயணத்தில் எவ்வளவோ பேசினோம் .ஆனால் என் மனதில் தைத்த கவிஞரின் இந்த யோசனையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

பிரச்சினைக்குரிய நபர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டால் அவர்களோடு வாதமோ சண்டையோ வெறுப்போ காட்டாமல் பக்குவமாக நழுவி விடுங்கள் என்றார் கவிஞர் .

வர்ணித்தது போதும்.

வலிமை கேட்டேன்

Sunday, January 17, 2021

Official Video: Humnava Mere Song | Jubin Nautiyal | Manoj Muntashir | R...

மனமே மனமே ஏ ஏ

மனமே மனமே பாவம் செய்வதேன்!

பாடியவர்: அதிரை ஜஃபருல்லாஹ்

வரிகள்: கவிஞர் மலிக்கா ஃபாரூக்

படத்தொகுப்பு: முஃப்தி இனாயத்

மனமே மனமே பாவம் செய்வதேன்

மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்

மரணசிந்தனை நினைவில் வரலையா!

இல்லை "மனிதா

Had a great meeting with Ramettan, an adivasi farmer.

I salute the indomitable spirit of the Tamil people / Rahul Gandhi

Thank you, Madurai, for a truly memorable Pongal. I am touched by your warmth and hospitality. I salute the indomitable spirit of the Tamil people and their enduring commitment to nurturing their rich heritage. I look forward to my next visit. Rahul Gandhi

 

Saturday, January 16, 2021

எங்கள் ஊர் பொங்கல் - கனடா கவிஞர் புகாரியின் முத்தமிழ்ப் பெருவிழா - கனடா ...

ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammad

 ஏம்பல் தஜம்முல் முகம்மது

அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்,இவர் ஒரு ஆசிரியரும், கவிஞருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் எமது நீடுர் சீசன்ஸ் வலைப்பதிவில் நிறைய உள்ளன
இவர் எழுதிய நூல்கள்
வீரம் செறிந்த இஸ்லாம்
நிழலில்லாத சூரியன்
தூது வந்த வீரர்
இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்
இன்னும் பல நூல்கள்
அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா
நீடூர் நெய்வாசல்

Vizhigal - Al-Masjithul Aqsa - Matthur -MMDA, முப்பெரும் விழா ஏம்பலாரின்...

விடியட்டும் ரஹ்மானே - ஏம்பல் தஜம்முல் முஹம்மது - அதிரை ஜஃபருல்லாஹ்

Pioneer - முன்னோடிகள், வரலாற்று ஆய்வாளர், பன்னூலாசியரிர் ஏம்பல் தஜம்முல்...

ரஹ்மத் பதிப்பகம் இஸ்லாமிய ஆங்கில புத்தக நிலையத்தை பற்றி ஏம்பல் தஜம்முல் ...

ஆதியும் நீ... அந்தமும் நீ.. பாடல் - அதிரை ஜாஃபர் - ஏம்பல் தஜம்முல் முஹம்...

Friday, January 15, 2021

பக்கத்தில் அமர்ந்த பெண்ணிடம் ராகுல் காந்தி என்ன சொன்னார் ? | Rahul

 

பள்ளிவாசல் / ஏம்பல் தஜம்முல் முஹம்மது

கஃபதுல்லாஹ் – அல்லாஹ்வின் இல்லம் / ஏம்பல் தஜம்முல் முஹம்மது

பள்ளிவாசல்

 

பள்ளிவாசல் 

Yembal  Thajammul Mohammad

ஏம்பல் தஜம்முல் முஹம்மது

 

எங்கெங்கு தேடினும் காணாத நிம்மதி

இருக்கும் இடமன்றோ அல்லாஹ்வின் சந்நிதி

பங்கம் இல்லாமலே பல்கும் பெருநிதி

படைத்தவன் கொடுக்கின்ற சாந்தியே வெகுமதி!’’

 

 சந்நிதி என்பது இறைவனின்திருமுன்’. எனினும் அதற்கு உகந்த இடமாக நம் மனதில் முதலில் தோன்றுவது பள்ளிவாசல் எனும் இறையில்லமே.

 

மனித குல வரலாற்றை யார் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளட்டும்.இறைநம்பிக்கையாளர்களுக்கு முதல் மனிதரும் முதல் இறைத் தூதரும் ஆன ஆதம்-அலைஹிஸ்ஸலாம்- அவர்களில் இருந்தே தொடங்குகிறது. ஆதம்-அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அன்னை ஹவ்வா(அலை) அவர்களும் உலகில் சந்தித்துக் கொள்ளும் வரையில் மட்டுமல்ல,அதற்குப் பின்னரும் கூட அவர்கள் தமக்கென்று ஓர் இல்லத்தை முதலில் கட்டிக் கொள்ளவில்லை. இறைவனின் ஆணைப்படி மக்காவில் இருந்த ஒரு மணல்மேட்டில் ஆதம்-(அலை) அவர்களால்- முதல் மனிதரால் உலகில் முதன்முதலாக எழுப்பப்பட்ட கட்டிடமே இறை இல்லமான கஃபாதான்!உலக வரலாற்றில் முதலில் கட்டப்பட்டது கஃபாதான்

 

கஃபா < கஃபதுல்லாஹ்அல்லாஹ்வின் இல்லமான இந்த இடம் உலகிலேயே ஆதம்-ஹவ்வா இணையருக்கு உவப்பான இடமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு இடையிலான காதலன்பு சிந்தாமல்,சிதறாமல் எப்படி முழுமையானதாக இருந்திருக்குமோ அதுபோல அவர்களுக்குக் கஃபதுல்லாஹ், பரிபூரணமான நிம்மதியை- மன இன்னமைதி (சாந்தி)யைத் தந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

Thursday, January 14, 2021

ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா வரலாறு

 

ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா

அரபு நாட்டிலே, ஈராக் மாகாணத்திலே, பஸ்ரா நகரிலே, ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ஆதி என்னும் கோத்திரத்திலே, ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்திலே, இஸ்மாயில் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் இறைநேசம் நிறைந்தவர். ஆண்டவன் மீது அளவு கடந்த நம்பிக்கை யுள்ளவர். ஆனால் அவர் மிகவும் ஏழை. நற்குடியில் பிறந்த மங்கையை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அந்த இல்லறச் சோலையிலே பூத்த நான்காம் பொன்மலர் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) ஆவார்கள்.

குழந்தை பிறந்தது. குடும்பத்தில் அது நான்காம் குழந்தை. ஆகையால், அதற்கு ராபியா (நான்காவது) என்று பெயரிடப்பட்டது. உண்ண உணவும், அணிய ஆடையும் இல்லத்திலே இல்லாத அளவுக்கு வறுமை. பிறந்த குழந்தையின் உடலை மறைத்து, அதைக் குளிரினின்றும் காப்பாற்ற வீட்டில் கந்தைத துணியும் இல்லை. இரவில் இருளை நீக்க விளக்கும் இல்லை. குழந்தையின் தொப்புளில் தடவ எண்ணையும்இல்லை. குழந்தை ராபியா பிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிந்தன. குழந்தையின் தாயும், தகப்பனும் இறையடி சேர்ந்தார்கள்.

பஸ்ரா நகரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அனாதைக் குழந்தைகளைக் காப்பாற்றுவார் ஒருவருமில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு திசையில் சென்றுவிட்டது. ராபியா என்கிற குழந்தையும் பஸ்ரா நகரை விட்டுப் புறப்பட்டது. வழியில் ஒரு மனிதன் ராபியாவைப் பிடித்தான். பிடித்து அந்த அனாதையை விற்றுவிட்டான். குழந்தை ராபியா அடிமை ராபியாவாக காலங்கழிக்கும் துயரமான நிலைமை ஏற்பட்டு விட்டது!

ராபியத்துல் பஸ்ரியா(ரஹ்)

 


ராபியத்துல் பஸ்ரியா(ரஹ்)

 

பஸ்ரா நகரைச்சேர்ந்த ராபியத்துல் பஸ்ரியா என்ற இறைபக்தி மிக்க பெண்மணி .இவர் கனவிலும்,நனவிலும் ஹக்கனைப்பற்றிய சிந்தனையில் மட்டும் காலம் கழித்த முஹாஜிர்.ஒரு நாள் இவரிடம் மற்று மொரு இறைநேசசெல்வரான ஹஸன் பஸ்ரி(ரஹ்) என்பவர் சந்தித்தார்.ஆன்மீக நெறி பற்றி இரு இறைநேசர்களும் அளவளாவினார்கள்.

 

பேச்சினூடே"பஸ்ரியா,நீ சைத்தானை விரும்புகின்றாயா?"என்று கேட்டார்.

"இல்லை"என்றார் பஸ்ரியா.

"நீ சைத்தானை வெறுக்கின்றாயா?" என்று ஹஸன் பஸ்ரி கேட்ட கேள்விக்கும் "இல்லை"என்ற பதிலையே அளித்தார் பஸ்ரியா.

 

"விரும்பவும் இல்லை,வெறுக்கவும் இல்லை.என்ன இது முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது உனது பதில்?விளக்கமாக சொல்"என்றார் ஹசன் பஸ்ரி.

 

"அல்லாஹ்வின் அன்பரே!என்னுள்ளம் இறைவன் வாழும் இல்லம்.அவ்வில்லம் முழுவதும் அல்லாஹ் மட்டுமே நிறைந்து இருக்கின்றான்.ஒரு சின்னஞ்சிறு இடைவெளி இன்றி அகம் முழுதும் அல்லாஹ் ஒருவனே என் அகத்தை ஆட்சி புரிகின்றான்.அப்படி இருக்க சைத்தானை விரும்பவோ,வெறுக்கவோ என் மனதில் எங்கே இடம் உள்ளது?"

பஸ்ரியாவின் பதில் கேட்டு மலைத்து நின்றார் ஹசன் பஸ்ரி(ரஹ்) அவர்கள்.

 

இறைநேச செல்வியான ராபியத்துல் பஸ்ரியா பஸ்ரியாவின் இறைபக்தியின் சிறப்பு