Wednesday, November 6, 2013

இப்போதே ஒரு கானாப் பாட்டு அல்லது நாட்டார் பாட்டு, இல்லையென்றால், ஒரு நகைத்துளிப் பாட்டு பாடியே தீருவேன்!

 இராஜ. தியாகராஜன் சந்தக் கவிமணி கிருஷ்ணன்பாலா, உங்களின் அன்பிழியும் வாழ்த்தினுக்கு என்றன் உளமார்ந்த நன்றிகள்.

உள்ளாரும் ஒண்டமிழால் உளமே பொங்க
.....உயர்ந்தழகாய் ஒளிர்கின்ற வரிக ளிட்டு
துள்ளாட்டம் போடுகின்ற விருத்தம் போல
.....சுண்டுகின்ற சொல்லதனின் மணங்கள் வீசும்
கள்ளாரும் அலங்கலென பாட்டின் மாலை
.....கச்சிதமாய்க் கன்னலதன் சாறாய்த் தந்த
தெள்ளுதமிழ்ச் சந்தப்பா மணியே; நீவிர்
....சீர்த்தியுடன் வாழ்கவெனத் தந்தேன் வாழ்த்தே!
---------------------------------------------------------------------------------
Mohamed Ali
நீங்கள் ஒருவர்தான் சங்ககால தமிழை நினைவு படுத்துகிறீர்கள்
---------------------------------

@ தமிழார்வலர் முகமது அலி அவர்களே! பள்ளியில் படித்த யாப்பினை நினைவுறுக்கிறீர்கள்; செய்யுளியலை நினைவுறுத்துகிறீர்கள் என்றாவது சொல்லுங்கள்! இன்றைக்கிருக்கும் தமிழ்ச் சமுதாயம், நம்முடைய ஈராயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட செல்வங்களான சங்க இலக்கியங்களை ஏற்றி (தூரமாக) பேழையில் வைத்தது போல நீங்களுமா சங்கத் தமிழென்று சொல்லி, இந்தச் சின்னவனின் எழுத்தை ஏற்றி (தூரமாக) ஒரு பேழையில் வைக்கப் பார்க்கின்றீர்! விடமாட்டேன் (!!!!) இப்போதே ஒரு கானாப் பாட்டு அல்லது நாட்டார் பாட்டு, இல்லையென்றால், ஒரு நகைத்துளிப் பாட்டு பாடியே தீருவேன்! (சும்மா ஒரு பகடிக்காகச் சொன்னேன் அய்யா; உங்களின் அன்பினுக்கு என்றன் உளமார்ந்த நன்றிகள்!)

-------------------------------------------------------------------------------------------   
  

 இராஜ. தியாகராஜன்
    பணம், பதவி, செல்வம், சீர்த்தி(புகழ்), சிறப்பு, இவை யாவும் தாண்டி, மற்றவரை இயன்றவரை வாழ்த்துவது என்பது மிகவும் மேலான பண்பு. நானும் இயன்றவரைச் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், செய்யும் பணியே என்னுடைய இறையென்ற குறிக்கோளால், முகநூலில் நீண்ட இடைவெளியாகிப் போய்விடுகின்றது. பணி நெருக்கம்; தோழமைகள் என்னை தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன். காலம் தாண்டிகூடப் பலருக்கும் பிறந்தநாள்/ மணநாள் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறேன். எவரையும் நான் வாழ்த்த விடுபட்டிருப்பின், எனை மன்னித்து, என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகளை ஏற்க வேண்டுகிறேன். தாமதம் என்றாலும், பிறந்தநாளின் இனிமையென்பது ஆண்டு முழுமைக்கும் என்பதால், இந்த மறதிக்காரனின் தாமதமான வாழ்த்துகளை ஏற்க வேண்டுகிறேன்.
-------------------------------------------------


About  இராஜ. தியாகராஜன்
Work and education

    புதுச்சேரி அரசு (Govt.of Puducherry)
    கண்காணிப்பாளர் (அரசிதழ் அலுவலன்-Gazetted Official) · January 1981 to present

    சென்னை பல்கலைக் கழகம் (University of Madras)
    Chennai, Tamil Nadu

    நகராட்சி உயர்நிலைப் பள்ளி (Municipal High School)

Contact Information
Address   

    புதுச்சேரி
    Puduvai, India 605001

Neighbourhood    புதுச்சேரி/கடலூர்/சென்னை

Website   

No comments: