Wednesday, October 31, 2018

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள்-(4)

அண்ணல் நபி(ஸல்) அவர்களைத் தொடக்க காலத்திலேயே நம்பி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள்,அந்த அடிப்படையில் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்,அவர்களுடைய அன்றாட வாழ்விலும் பணியிலும் தொடர்புடையவர்கள், அபிஸீனியாவுக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்ச்சியில்(ஹிஜ்ரத்தில்) இடம்பெற்றவர்கள், அகபா’வில் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்;

வரலாறு_சொல்லும் உண்மைகள்..


கலீபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியில் நடந்த பல சம்பவங்கள் விழிப்பையும், வியப்பையும் நமக்குக் கற்றுத் தருகிறது..

அதில் ஒரு சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு அறிய தருவதில் மகிழ்கிறேன்..

அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிகழ்வுகள்..

உமர்(ரலி) ஆட்சி காலத்தில் அரசாங்கப் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் அனைவரும் ‌ஹஜ்ஜுடைய பருவத்தில் வரவழைக்கப் படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது..

அப்படி ஒரு முறை அவர்கள் அழைக்கப்பட்ட போது,

"இவர்களில் யாரைப் பற்றியாவது ஏதாவது முறையீடு யாருக்காவது இருந்தால் பகிரங்கமாக தெரிவிக்கலாம்"

நாளும் ஒரு நபிமொழி சகிப்புத் தன்மை,

நாளும்  ஒரு  நபிமொழி  ★🌹*‌‌

    ஹிஜ்ரி:1440, ஸஃபர் 🌙 21
     31-10-2018,  புதன்கிழமை

*⏬" சகிப்புத் தன்மை, மிகப்*
  *பெரிய, அருட்கொடைகளில்*
  *ஒன்று - التسامح هو نعمة "*
*" Tolerance is a Blessing "*⏬

(ஸஹீஹ் முஸ்லிம்: 1902)
(சூரா: பகரா 2:177 *سورة البقرة*)
             ⏬ ⏱  04:36  ⏱ ⏬

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர்


பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!


குளச்சல் அஸீம்

by .dr.habibullah
குளச்சல் அஸீம்
தங்களை சந்திக்க வேண்டும்
சற்று நேரம் ஒதுக்கித் தர
முடியுமா!
மிகவும் பொலைட்டான
ஒரு மெசேஜ்....தான்

இன்று மாலை வீட்டிற்கு வந்தார்.
உண்மையில் அஸீம் பேச்சில் நான்
முழுக்க லயித்து விட்டேன் என்று
தான் சொல்ல வேண்டும்.நேரம்
போனதே தெரியவில்லை.

Tuesday, October 30, 2018

டாக்டர் அன்சாரி


எனது நண்பரும் உறவினருமான
டாக்டர் அன்சாரி, நேற்று மாலை
தன் குடும்பத்துடன் எனது
நாகர்கோவில் வீட்டிற்கு
வருகை புரிந்தார்.
அமெரிக்காவின்
சவுத் கரோலினா மாநிலத்தில்
புகழ் பெற்ற
Gastro enterologist
ஆக இவர் திகழ்கிறார்.

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

Monday, October 29, 2018

இது வேற 96!

“அய்யா நீங்கள் மிகப்பெரிய உலக சாதனை புரிந்திருக்கிறீர்கள். அதற்காக உலகளவிலான அங்கீகாரமும் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, உங்களை நாங்கள் நேர்காணல் செய்யவேண்டும்.........”

“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”

செய்தியாளர்களின் கோரிக்கைக்கு இவ்வாறு மறுப்பு சொன்னவர் படத்தில் நீங்கள் காணும் விஞ்ஞானி ஆர்தர் ஆஷ்கின் எனும் 96 வயது இளைஞர்!

அப்படியென்ன செய்துவிட்டார்?

சிறந்த விழிப்புணர்வு காணொளி

Lks Meeran Mohideen

அப்ஸல் பாத்திமா B.com BL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி

என் மகள் அப்ஸல் பாத்திமா B.com BL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்ச்சி பெற்ற 230 நீதிபதிகளில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளா என்பது கூடுதல் சிறப்பு. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....
Rafiyudeen Rafeek

Sunday, October 28, 2018

சிபிஐ சர்ச்சை: அலோக் வர்மாவும் 7 முக்கிய கோப்புகளும் | 7 important cases under Alok verma

இலங்கை அரசியலில் பரபரப்பு யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன?

பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்புவிலங்குகளை கொல்லாமல் இறைச்சி தயாரிக்க முடியும் என்பதை கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். கோழி இறகுகளை பறித்து, உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தில் கோழி இறைச்சியை உருவாக்குகிறார்கள்.

கானாவின் வடக்கே உள்ள தொலைதூர கிராமத்தில் செல்போன் சிக்னல்களை பெற ஒரு மரம் எப்படி உதவுகிறது போன்ற செய்திகளை இங்கே காணலாம்.

Saudi journalist killed in planned operation | BBC Tamil Latest News

உயிரிழந்த ஜமால் கசோஜி : யார் இவர்? என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?

பயமுறுத்தும் மழைக்கால குழந்தை நோய்கள்!

Vavar F Habibullah
எங்களது அகத்திய முனி
குழந்தைகள் மருத்துவமனை
இப்போது குழந்தை
நோயாளிகளால்
நிரம்பி வழிகிறது.
மதியம் 2 மணி வரை
ஒபி யில் 75 குழந்தைகளை
பரிசோதித்தத நான், ஐந்து
குழந்தைகளை மட்டுமே ரிஸ்க்
என்பதால் அட்மிட் செய்தேன்.

காய்ச்சல், இருமல் சளி
ஜலதோஷம், தலைவலி
மூச்சுத் திணறல், வயிற்று
போக்கு, வாந்தி,வயிற்று வலி
உடல் வலி,சோர்வு.....

Friday, October 26, 2018

அரங்கை கலகலப்பாக்கும் இவர்கள்.

முதியோர் இல்லம்

இரத்த பந்தம்

dr.habibullah
ஹிந்து உயர்க்குல பிராமண
பெண்மணிக்கு ஒரு முஸ்லிம்
எப்படி சகோதரனாக முடியும்!
எனது வாழ்வில் நிகழ்ந்த மிகவும்
நெகிழ்ச்சியான சம்பவம் இது.

அப்போது நான் மதுரை மருத்துவ
கல்லூரியில் குழந்தை மருத்துவ
துறையில் பிஜி படித்து கொண்டு
இருந்த நேரம்.எனது பேராசிரியர்
டாக்டர் ஜெ.விஸ்வநாதன்
அவர்களின் மனைவி தான்
அந்த பெண்மணி ஆவார்.

எது கெடும்

பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்

*சாந்த நபியின் சிறு பிராயம்*

*சாந்த நபியின் சிறு பிராயம்*

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் முன்பே தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்கள்

அவர்களுக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள்

 *மகனே* *மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா?*

எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்கள்.
     
அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்.

அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பராக்கா..

Thursday, October 25, 2018

அறியாத அறிவு

dr habibullah
dr habibullah

அறிவு - அறியாமை
இது பற்றி சற்று விளக்கமாக
சொல்லுங்ககள் குருவே
சூபி ஞானி
இமாம் கஸ்ஸாலியிடம்
அவரது சீடர்கள் கேட்டனர்.

இமாம் கஸ்ஸாலி
நிதானமாக சீடர்களிடம்
பேச துவங்கினார்....
அறிவையும் அறியாமையையும்
நான்காக வகைப் படுத்தலாம்

சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

Mohamed Rafee  நாகூர் ரூமி:
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

*கோபம் இறைவன் தந்த வரம்*


கோபம் கொள்ளுதல் வேண்டும் 
இல்லாவிட்டால்
கற்சிலைக்கும் மனிதருக்கும்
வித்தியாசமில்லை

கோபம் கொள்பவனைவிட
கோபப்பட வைப்பவனிடமே
கோபம் கொள்ளுதல் வேண்டும்

சித்தார்த்தர் கோபப்பட்டார்
அன்பு வளர்த்தார்
காந்தி கோபப்பட்டார்
சுதந்திரம் பெற்றுத்தந்தார்
பாரதி கோபப்பட்டார்
புரட்சிக் கவிதை எழுதினார்

Wednesday, October 24, 2018

#MeToo A.R.ரகுமான் அதிர்ச்சி அடைந்தார் :A.R ரைஹானா(A.R.ரகுமான் சகோதரி) | சிறப்பு நேர்காணல்

நம்பிக்கை /ஊக்கமூட்டும் பேச்சு


மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லதா கெட்டதா/ பன்றி இறைச்சியை உண்ண இஸ்லாத்தில் ஏன் தடை ?

ஸஹாபாக்கள் என்றால் யார்?


அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -1
---------------------------------------------------------------------------------
“கண்ணுடைய மாந்தர்களே! உங்கட்(கு) இந்தக்
காசினியில் இரவிருட்டில் பாதை காட்டும்
விண்மீன்கள் போன்றவராம் என்றன் தோழர்!
வெற்றிகளைப் பெற்றிலங்க வேண்டும் என்றால்
அன்னவரைப் பின்பற்றி வாழ வேண்டும்;
அவர்களிலே அனைவருமே வெற்றி யாளர்!’’
என்(று)உவந்த இறுதிநபித் தோழர் கொண்ட
ஏற்றம்,முன் னேற்றமெலாம் யாவை? காண்போம்:-

நேர்மறையான எண்ணங்களை உங்கள் ஆழ்மனதின் மூலம் இயக்குங்கள்

நான் சென்னைக்கு இரயிலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கும்போது அங்கே பல எண்ணங்கள், நிலைகள் கொண்ட அதாவது என்னையும் சேர்த்து மனிதர்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு எதிரில் இருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் தனது நிறுவனத்தை நடத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் மூலம் வரக்கூடிய பல ஆயிரக்கணக்கான பணத்தையும் நிறுவகைத்துக் கொண்டு இருந்தார், இன்னொருவர் தனது வாழ்விற்காக யாசகம் கேட்டு கொண்டு இருந்தார். இன்னொருவர் தனது நோயினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். சிலர்கள் சந்தோஷமாகவும் சிலர்கள் கவலையுடனும் இப்படி பல விதமான மனிதர்களுடன் இரயில் தன்னுள் வைத்துக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது.

டெங்குவைத் தடுப்பது எப்படி? மருத்துவர் விளக்கம்

Double Heaven by Anbudan Buhari Canada

நோயில்லாமல் வாழ இவற்றை கடைபிடித்தாலே போதும்

Muslims in China | Islam in China | Muslim Population in China

Tuesday, October 23, 2018

காக்கை சிறகினிலே நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
-பாரதியார்

’ரூமிக் கவிதை’ தந்து உங்களை வரவேற்கிறேன்.


மீண்டும், கழுநீர் சாய்கிறது ஆம்பலிடம்
மீண்டும், ரோஜா தன் ஆடை களைகிறது

வேறொரு உலகத்தில் இருந்து வந்துள்ளனர்
பச்சைக்காரர்கள்!
இலக்கற்ற தென்றலினும் போதையாய்

மீண்டும், மலைச்சாரல் எங்கும்
குறிஞ்சியின் அழகு விரிகின்றது

முல்லை மலர் சொல்கிறது மல்லிகைக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும்
உன் மீது சாந்தி உண்டாகட்டும்

உன் மீதும் பையா,
என்னுடன் இந்தப் புல்வெளியில் நட

மீண்டும், எங்கும் சூஃபிகள்

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் சிறப்பு பேட்டி

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள கிரசன்ட்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வகையை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் முன்னேறுவது எப்படி என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

கில்லாடி மருத்துவர்கள்


டாக்டர்கள் பலவகை
புத்தக மேதைகளாக சிலர் 
பிராக்டிகல் ஸ்கில்ஸில் 
நிபுணர்களாக சிலர் 
டேலண்ட்டில் மிகைத்தவர் சிலர் 
டெக்னிக்ஸில் வல்லவர் சிலர் 
டிரிக்ஸ் கலை வல்லுநர் சிலர் 
டேக்டிக்ஸில் சிறந்தவர் சிலர்

படிக்கும் காலங்களில்....
லைப்ரரியிலேயே வாழ்வார் சிலர் 
வார்டிலேயே குடியிருப்பார் சிலர் 
தியேட்டரே கதி என்பார் சிலர். 
பின்னாளில்...
பேராசிரியர் ஆவதும்
தேர்ந்த மருத்துவர் ஆவதும் 
சகல கலா வல்லவர் ஆவதும் 
கற்ற அல்லது பெற்ற திறமைகள் 
அடிப்படையில் தான் நிகழ்கிறது.

Monday, October 22, 2018

பெரிய மகான் ஒருவர்

பெரிய மகான் ஒருவர்
அந்த ஆற்றங்கரையோர கிராமத்திற்கு வந்திருந்தார்.
மக்களெல்லாம் அவரைத் தேடி வந்து
தங்கள் குறைகளைச் சொல்லி நிவாரணம் தேடிக் கொண்டிருந்தார்கள்.
மகான் கொடுத்த ஆன்மீக சிகிச்சையில்
அவர்கள் நலம் பெற்றார்கள்.
வளம் பெற்றார்கள்.
மகானின் மகாத்மியம் பல ஊர்களுக்கும் பரவியது.
பல செல்வந்தர்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து ஏராளமான காணிக்கைகளோடு பெரியவரை தரிசித்து தங்கள் பேராசைகள்
நிறைவேற ஆசிபெற்றுச் சென்றார்கள்.
அந்த ஊரிலேயே ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தார்.
தினமும் காட்டுக்குள் சென்று விறகுகளை வெட்டி எடுத்து வந்து அன்றாட வாழ்வை கழித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு மகானை சென்று சந்திக்க நேரம் வாய்க்கவில்லை.
ஒருநாள் உடல் நலமில்லாத காரணத்தால் விறகு வெட்டி காட்டிற்கு செல்லவில்லை.
சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை.
காலாற சற்று நடந்துவரச் சென்றவர்
பெரியவரின் வீட்டிற்கு முன்னால் கூடி நின்ற கூட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

மருத்துவத் தொழில்

dr habibullah

மருத்துவம் சேவையா
இல்லை வியாபாரமா!
இந்த கேள்வியை இப்போது
எல்லோரும் எழுப்பி வருகிறார்கள்.

அவசர உலகில்
ஆக்சிடெண்ட்,எமெர்ஜென்ஸி
என்பதெல்லாம் நவீன மனித
இனத்துக்கு இயற்கை அளித்த
தண்டனையாகும்.

பிரான்ஸ் ஏவிரியில உள்ள பிரமாண்ட பள்ளிவாசல்

1961,ம் வருடம் #நீடூ்ர்நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

#அரபிக்கல்லூரியில் மிஸ்பாஹி பட்டம் பெற்ற பான்டிச்சேரி முஹம்மது
#ஹனீஃபா_மிஸ்பாஹியை_பிரான்ஸ்_எவிரியில்

#ஹஜ்ரத்அவர்கள்பல வருடங்களாக #பிரான்ஸில்மார்க்க சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்

அவர்களின் #மகனார்களும் AbuAyman Nidur அவர்களுக்கு நல்ல பழக்கம் அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்து இன்னும் மார்க்க சேவையில் ஈடுபட அருள் புரிவானாக

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4


மன்ஸிகர்த் யுத்தம்

ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன.

கி.பி. 1071ஆம் ஆண்டில், ‘இந்த அமைதி நன்றாக இருக்கிறது. மேலும் இப்படியே தொடர்வோமே’ என்று பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV (Romanus Diogenes) சமாதான ஒப்பந்தத்தை நீட்டித்து அல்ப் அர்ஸலானுக்குத் தூது அனுப்பினார். அது சுல்தானுக்கு உடனே பிடித்துவிட்டது. ‘நல்லது. அப்படியே ஆகட்டும்’ என்று அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். காரணம் இருந்தது.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3

ஸெல்ஜுக் காதை

நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார்.

இராக்கிலுள்ள மோஸூல் பகுதிகளை ஆளும் இவருக்கு சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மீது ஏன் மோகம்? காரணம் எகிப்து! எகிப்தா? மிஸ்ரு எனும் அந்த நாடு இன்னும் தொலைவே தெற்கில் அல்லவா இருக்கிறது! அதற்கும் டமாஸ்கஸுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதல்லவா? நேரடித் தொடர்பும் இல்லை; ஆட்சித் தொடர்பும் இல்லை. ஆனால் எகிப்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதை நோக்கி நகர வேண்டுமென்றால் டமாஸ்கஸ் அவர் வசமாவது அவசியமானதாக இருந்தது. புரியவில்லை அல்லவா? அந்த நுண்ணரசியல் மிக விரிவாய்ப் பின்னர் வரும். முடிச்சுகள் தாமே அவிழும். இப்போதைக்கு நமக்குத் தேவையான தகவல் இந்த டமாஸ்கஸ் படையெடுப்பும் அதன் வினைப்பயனும்.

Sunday, October 21, 2018

#மனித_நேயத்திற்கு_மிகச்_சிறந்த_எடுத்துக்காட்டு


நீடூர் பகுதியின் தமுமுக மருத்துவரணி செயலாளராக இருப்பவர் சகோதரர் அசாருதீன்.

நேற்றைய தினம் இவருக்கு ஒரு போன் வந்தது.அதில் பேசியவர் தங்கள் உறவினர் ஒருவர் தீக்காயத்துடன் பெரியார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும்,மேற் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினர்.

மற்ற மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கேட்கும் வாடகையை விட மிக குறைந்த வாடகையை அசாருதீன் கேட்டார்.ஆனால் அவரை தொடர்புகொண்டவரோ பிறகு பேசுகிறேன் என கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரமாகியும் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.வேறொரு வேலையாக பெரியார் மருத்துவமனைக்கு சென்ற அசாருதீனுக்கு அவர்களுடைய நியாபகம் வந்தது.

சட்டென அவர்களுக்கு கால் செய்து அந்த குடும்பத்தை நேரில் சந்தித்தார்.அப்போதுதான் புரிந்தது அவர்கள் வறுமையில் வாடுபவர்கள் என்றும் கையில் ரூபாய் 100 கூட இல்லாத நிலையில் உள்ளனர் என்றும்.

நாம் போவோம் மதீனா புகழ்பாடியே

போவோம் மதீனா புகழ்பாடியே நாம்
மதினா நகருக்கு போக வேணும்.
எங்கள் மன்னர் முஹம்மதை காண வேண்டும்.
இந்தக் கொடுப்பினைக்கு மேல் வேறென்ன வேண்டும்.

மகிழ்வான தருணம்
சறுக்காத தெவிட்டாத தருணங்கள்

அண்ணல் நபி பொன்முகத்தைக் கண்கள் தேடுதே
நிஷா மன்சூர்

இடைவெளி நிகழ்காலம் ஓஷோ,,

இடைவெளி
நிகழ்காலம்
ஓஷோ,,

தியான யுக்திகள்,,,

இடைவெளியை உணர்ந்து பார்,,,,

பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில் தான் உள்ளது.

இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில் தான் உள்ளது.

தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்ட வேளையில் உள்ளது.

உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது.

அன்பு வெறுப்பாக மாறும் போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை.

Saturday, October 20, 2018

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (பகுதி 1)


மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்


பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களும் அதற்கப்பாலுள்ள ஒரு காரணத்தைத் தேடுகின்றது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மைக்கும் மனிதன் காரண்தைத் தேடுகின்றான். அணுமுதல் நட்சத்திர மண்டலங்கள் வரை உள்ள எல்லா சிறிய பெரிய வஸ்துக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொன்றினதும் காரணத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும்போது அந்தக் காரணத்தின் காரணத்தைத் தேடி சிந்தனை நீளுகின்றது. இது சங்கிலித் தொடர் போன்று நீண்டு செல்வதில்லை. அது காரணங்கள் தேவைப்படாத ஒருவனில் சென்றடைகின்றது. அவன் எல்லாத் தேடுதல்களினதும் இறுதியாக இருக்கின்றான். எல்லா வகையான தேட்டங்களும் விசாரணைகளும் இந்த பரமமான எல்லையில் முடிவடைகின்றன. பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் காரணங்களற்றது என்று நம்மால் கூற இயலாது. சிறிதாகட்டும் பெரிதாகட்டும் எல்லா வஸ்துக்களுமே காரணங்களைத் தேடுகின்றன. ஆக காரணங்கள் அவசியமற்ற பராசக்தி பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். பதார்த்தத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தையே இஸ்லாம் அல்லாஹ் என்றழைக்கின்றது.

மனம் வருந்தித் திருந்தினால் மன்னிக்கும் இறைவன்!

Yembal Thajammul Mohammad

உலகில் கடந்த 1400-ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கோடி மக்கள் சத்திய மார்க்கத்தைத் தேடிக் கண்டறிந்து நிம்மதி அடைந்து வருகின்றனர்.

அப்படி அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள் கூறும் பல்வேறு காரணங்கள் அறிவுக்கு இன்பம் தருவதாக இருக்கும்.

எலும்புகள் வெயில் காயட்டும்!

டாக்டர் கு.கணேசன்
அக்டோபர் 20 - உலக எலும்பு வலுவிழப்பு நோய் நாள்

உடலுக்குள் ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இந்த வேகம் குறையும். பொதுவாக, 35 வயதுக்குப் பிறகு புதிய செல்கள் உருவாவது தாமதமாகும்.

பழைய செல்கள் இறந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகலாம். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) முதலில் குறையும். இந்த நிலைமைக்கு ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’ (Osteopenia) என்று பெயர். 50 வயதுக்கு மேல், எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். அப்போது நம்மால் தொடர்ந்து நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும்.

நாளடைவில் அந்த எலும்பில் முறிவு ஏற்படவும் அதிக சாத்தியம் உண்டு. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) என்கிறோம். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இப்படிச் சொல்லலாம்: இது எலும்புகள் பலவீனம் அடையும் நோய்!

Friday, October 19, 2018

பாலினப் பாகுபாடு


ஆண் மாணவர்கள் என்றாலே
தவறு செய்பவர்கள் அல்லது
தவறான நோக்கத்துடன் தவறான
துறையை தேர்வு செய்பவர்கள்
என்ற எண்ணம் மருத்துவக்
கல்வித் துறையை சார்ந்த
சில பெண் பேராசிரியைகளிடம்
இன்றும் உண்டு.

மருத்துவம் படிக்கும் மாணவர்
ஒவ்வொரும் தங்கள் ரோல்
மாடல்களாக சிலரை தேர்வு
செய்வதுண்டு.

Thursday, October 18, 2018

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2


இரவில் ஓர் உதயம்

டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது.

உடனே ஆளுநருக்குத் தகவல் பறந்தது. ஆளுநரும் அவருடைய சகோதரரும் விரைந்து வந்தனர்.

அந்தப் படையினர் மோஸூல் நகரைச் சேர்ந்தவர்கள், டிக்ரித்துக்கு அருகிலுள்ள ஸெல்ஜுக் நகரின் மன்னர் முஹம்மது இப்னு மாலிக் ஷாவின் பக்தாத் படையினருக்கு எதிராக அவர்கள் போரிட்டிருந்தனர். அப்போரில் மன்னரின் படை வெற்றியைத் தழுவியது. பின்வாங்கிய மோஸூல் தளபதி தம் குதிரைப் படையினருடன் டிக்ரித் நகரை வந்தடைந்திருந்தார். காயங்களுடன் வந்திருந்தவர்களைத் தம் கண்களால் ஆராய்ந்தார் ஆளுநர் நஜ்முத்தீன் ஐயூப். ஸெல்ஜுக் மன்னரால் டிக்ரித் நகருக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் அவர்.

Tuesday, October 16, 2018

மதமா இல்லை மார்க்கமா

by. dr. habibullah


அருள் தந்தை
குரூஸ் ஹிரோனிமஸ்
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியின்
முகவரி.தத்துவ மேதையான இவர்
ஒரு தேர்ந்த தமிழ் அறிஞர்.
அகத்திய முனி குரூப்
மருத்துவமனைகளின் தலைவர்.
கம்பேரேடிவ் ரிலிஜியன் பற்றிய
தெளிந்த ஞானம் கொண்டவர்.
என்னிடம் தனிப்பட்ட முறையில்
மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்.

ஒரு முறை என்னை அழைத்த
அவர், இஸ்லாம் மதம் பற்றி சற்று
சொல்லுங்க டாக்டர்...என்றார்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்
பற்றி எனக்கு தெரியும். அந்த
மதத்தின் குறிக்கோள்..அது
பற்றி சற்று சொல்லுங்கள்...


அது_ஒரு_கல்லூரிக்_காலம் ..வருஷம் 1973
நாகர்கோயில் இந்துக் கல்லூரியில்
படிச்சிட்டிருந்தேன்.
சின்ன வயசிலேயே பளுதூக்குவது
பார் விளையாடுவது
கர்லாக்கட்டை சுத்துவதுன்னு
என் வாழ்க்கை சுத்திகிட்டு இருந்துது.
வீட்டில மாட்டுக்கு கொடுக்குற பருத்திக் கொட்டையில் எனக்கும் ஒரு கப் பருத்திப் பால் கிடைக்கும்.
பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவேன்.
ஆணழகன் போட்டியில் ஜெயிக்கணும்.
வெயிட் லிப்டிங் சாம்பியன் ஆகணும் என்பது லட்சியம்.
காலேஜ்ல வெயிட் லிப்டிங் டீம்ல
நானும் ஒருத்தன்.
வருஷா வருஷம் மதுரையில் நடக்கும்
யூனிவர்சிட்டி போட்டியில கலந்துகிட்டு
வெற்றியோ தோல்வியோ அடைவதுண்டு.
அப்போ மதுரை மருத்துவக் கல்லூரியில்
என் அண்ணன் ஹபிபுல்லாஹ் டாக்டருக்கு படிச்சிட்டுஇருந்தாரு.
நான் மதுரைக்கு போகும்போது வீட்டில் ஏதாவது பண்டம் தருவாங்க.
அதை அண்ணன்கிட்ட கொண்டு கொடுத்து விட்டு அவரது ஹாஸ்டல்லயே
தங்குறது உண்டு.

அண்ணனோட ரூம்மேட்ஸ்க்கு என்னை பார்த்து ஆச்சரியமா இருக்கும்.
" டேய் ... இங்க பாருடா ..
ஹபிபுல்லாக்கு பிரதர் வெயிட் லிப்டர்டா ... யூனிவர்சிட்டி காம்பொடீசனுக்கு வந்திருக்காருடா .."
அப்படின்னு ஒருத்தரோட ஒருத்தர்
சொல்லி சந்தோஷப்படுவாங்க.

அண்ணன் ஹபிபுல்லாஹ் அவங்க வட்டத்தில அப்பவே ஹீரோதான்.

Sīra Series: A Journey of Transformation – Trailer

பாலியல்

Rsdvideo Darvis 


பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம்.

பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன.

Monday, October 15, 2018

பரங்கிப்பேட்டையை சுற்றலாம் வாங்க

ரோவர் விண்கலம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் Robotic rover sent to mars

 ரோவர் விண்கலம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் செல்லும் வரையும் சென்று இறங்கும் வரை ஓவ்வொரு காட்சிகளையும் தத்ரூபமாக...

சளி,இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நீடூர் நெய்வாசல்.டாக்டர் dr.மன்சூர்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  நீடூர் நெய்வாசல்.டாக்டர் dr.மன்சூர்


மருத்துவர்  dr.மன்சூர் அவர்கள்  இறைவன் அருளால் தனது சேவையை  அன்புடன் ,மகிழ்வுடன் தருவதில்  நிறைவு கொள்கின்றார்
.dr.மன்சூர் அவர்களது சொந்த ஊர் நீடூர் நெய்வாசல்
தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார்

dr.மன்சூர் அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .


எங்கள் ஊர் நீடுர் dr.மன்சூர் மருத்துவர் அவர்கள் . கொடுக்கும் ஆலோசனைகள் மிகவும் பலன் தருபவை .வெளிநாட்டில் படித்தவர் .நீடுர் சொந்த ஊராக இருப்பினும் ஹாங்காங் பிரஜை பெற்றவர் .வெளிநாட்டில் படித்து நம் ஊரில் சேவை செய்யும் இளைஞர்.இவர் முஹளத்தீவிலும் சேவை செய்துள்ளார்
தற்பொழுது  மணல்மேடு அரசு மருத்துவ மனையில் தலமை மருந்துவராக உள்ளார் . .
இவர் எனது நண்பர் மர்ஹும் முகம்மது ஹாளித் அவர்கள் மகன் .இவரது சகோதரர் சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார் .
அறியப்பட வேண்டியவர்..டாக்டர் இவர்
இவரது இல்லம் நீடூர் ரயிலடி தெருவில் உள்ளது.

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்

அன்புடன் வாழ்த்துக்கள்
Mohamed Ali

Sunday, October 14, 2018

மிஸ்டர் மெடிக்கோ

by dr.Vavar F Habibullah


மதுரை மருத்துவக் கல்லூரியில்
ஆண் அழகன் போட்டி என்பது
அந்த நாட்களில் நட்சத்திர
அந்தஸ்து பெற்ற நிகழ்ச்சி என்றே
சொல்ல வேண்டும்.

நாகர்கோவிலை சார்ந்தவர்களே
பல வருடங்களாக தொடர்ந்து
மிஸ்டர் மெடிக்கோ டைட்டிலை
தக்க வைத்து இருந்தது என்பது
கல்லூரி பெற்ற பெருமையாகும்.

”நான் பெண்மக்களின் தந்தை!”


”நான் பெண்மக்களின் தந்தை!”
---------------------------------------------------
(இந்த 2018 ஜனவரியில் ஆஸ்திரியா நாட்டில் முதலாவதாகப் பிறந்த பெண்குழந்தையின் மீது அளவு கடந்த பொறாமையும் வெறுப்பும் முகநூல் மூலம் வீசப்பட்டன.

பின்னர் அந்தக் குழந்தையின் படம் முகநூலில் இருந்து நீக்கவும்பட்டது.(கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்)

செய்தித்தாள்களோ (”Austria: First Female Baby Born in 2018 was a Moslem Subhuman”) 2018-இல்
ஆஸ்த்ரியாவில் முதலாவதாகப் பிறந்த குழந்தை முஸ்லிம் பெண்குழந்தை என்றும் -அதுவும் ”மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட (Subhuman) குழந்தை" என்றும் - இரட்டை வெறுப்பைத் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டன.

இவற்றை கவனத்தில் கொண்டு இந்தக் கவிதையைப் படிப்பீர்களாக.

********************************************
“நான் பெண்மக்களின் தந்தை என்பதில் பெருமைகொள்கிறேன்” என்பது அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பெருமிதப் பிரகடனம்.
***********************************************************************
”நான் பெண்மக்களின் தந்தை!”

Wednesday, October 10, 2018

மதபோதகரிடம் ஒரு மாணவன் கேட்டான்

மதபோதகரிடம் ஒரு மாணவன் கேட்டான் ஏன் முந்தி காலத்தில் வாழ்ந்த மக்கள் ஏன் நம்மை விட அதிக காலம் உயிர் வாழ்ந்தனர் ?. அதற்கு அந்த மதபோதகர் பதில் சொன்னார் அவர்கள் அவ்வளவு காலம் வாழக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியாது அதனால்தான் என்றார் மதபோதகர்.

இந்த கேள்வியை உள் வாங்கி கொண்டு உங்கள் வாழ்க்கையே நினைத்து பாருங்கள். அறுபதுக்கும் எழுபதற்க்கும் மத்தியில் உள்ள வயதுதான் உங்கள் வாழ்க்கை. இதில் அதி சீக்கிரத்தில் வாழவேண்டிய நீங்கள் ஏன் வாழவில்லை ?.

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்


மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

சொல்கிறார் கபீர்:
'உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது'.

Tuesday, October 9, 2018

பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?

கணினி உபயோகிப்பாளர்கள்

வீட்டு மருத்துவம்இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொருவரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

Monday, October 8, 2018

சந்தன தமிழறிஞர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத்


ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் என்னும் இயற்பெயர் கொண்ட தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) ஜெய்னப் பீவி தம்பதியினருக்கு மகனாக 4-10-1926-ல் காரைக்காலில் பிறந்தார்.

அரபி, தமிழ் , உர்தூ மொழி களில் புலமை மிக்க வராகவும், இஸ்லாமிய மார்க்க அறிஞரா கவும் விளங்கிய அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் அருள்மறையாம் திருக்குர் ஆனை தமிழில் மொழி பெயர்த்து புகழ் பெற்றவர்.

தீன் திருத்தென்றல் தமது தந்தைக்கு துணை புரிந்த தனையனாக நின்றவர் தான் நமது அருமைத் தலைவராக திகழ்ந்த சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத்.

கல்வியும் - இதழியல் துறையும்

1950-ம் ஆண்டு திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு பணி முழுமை பெற்றவுடன் ஏழ்மை சூழலில் தனது இளமை கல்வி சிறகை விரித்தார்.

Sunday, October 7, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்/ சாதனைப் பெண்மணி - Dr.A.சபியா

நமது முற்றத்து முல்லை, அன்பு தங்கை Dr.A.சபியா,சுமார் பதினான்ங்கு வருடங்களாக திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரே மகளான அன்பு தங்கை, வாழ்வில் பல்வேறு சோதனைகளை கடந்து கல்வியின் பால் மிகுந்த நாட்டம் கொண்டவராக விளங்கினார்.தனது வயதான தாய் தந்தையரோ கல்விக்காக ஓயாது ஓடிக்கொண்டே இருந்தனர்.சமீப காலத்திலே Er. அப்துல் சமது இவருடன் கைகோர்து துணைநிற்க,வணிக இயல் துறையிலே முனைவர் பட்டம் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.

Saturday, October 6, 2018

பழம்;-


மரத்தின் பூக்களில் இருந்துதான் காயும், பழமும்,
உண்டாகின்றது.

பூக்களாக இருக்கும் போது, மூக்குக்கும்,
பழமாக இருக்கும் போது நாக்குக்கும்,
ருசியாக இருக்கின்றது.

அந்த இனிப்பு வருவதற்கு முன்
எப்படி இருந்தது....?

பூவில் கசப்பாகவும்,பிஞ்சில் துவர்ப்பாகவும்,
காயில் புளிப்பாகவும், பின்பு மதுரமாகவும்,
ஆகின்றது.

Friday, October 5, 2018

Islamic TV Channels Live/Online


Islamic TV Channels Live/Online
Here you can watch islamic channels live online from all over the world.
Makkah Live
Medina Live
Iqraa
Quran TV Channels

4shbab Quran Al-Karem TV Live
4shbab Quran

Al Afasy Quran Channel Online
Al-Afasy Quran

Al Majd Hadith TV Online
Al-Majd Hadith

Al-Majd Quran TV Live Online
Almajd Quran

Thursday, October 4, 2018

இறைநேசர்கள் ஒரு சகாப்தம்!!!!

இறைநேசர்கள் ஒரு சகாப்தம்!!!!

பல்க் நாட்டில் அரசாட்சி செய்து கொண்டிருந்த அந்த அரசர் அரசு வேலையை முடித்துக்கொண்டு ஓய்வெடுப்பதற்காக தன் அறையை நோக்கி சென்ற அப்பொழுது அந்த அறையை பராமரித்துக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண் சற்று அயர்ந்து அந்த கட்டிலில் தூங்கி விட்டார் .இதனை பார்த்த அந்த அரசர் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய கட்டிலில் படுத்து உறங்குவாய் என்று சவுக்கால் அந்தப் பெண்ணை அடித்தார்.
வலி தாங்கமுடியாமல் அந்தப் பணிப்பெண் நான் சற்று நேரம் தூங்கியதற்கு எனக்கு இப்படி தண்டனை தருகிறீர்களே!

நீங்கள் தினந்தோறும் இந்த கட்டிலில் தான் படுத்து உறங்குகிறார்கள் அப்படியென்றால் உங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கிறது.என்று அந்தப் பணிப்பெண் கூறினார்.

பெரிய ஆச்சரியத்தில் வாய்மூடி நின்றிருக்க

நான் ஆலிம் மூன்றாம் ஆண்டு (ஓதி) படித்துக் கொண்டு இருக்கும் போது படித்த ஞாபகம். இறைநேசர்களில் ஒருவர் பெயர் ஞாபகம் இல்லை. அந்த இறைநேசர் நிதமும் கடைமாயான கூட்டு தொழுகைக்கும் மட்டும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்து தனிமையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வந்து இருந்து விடுவார்.

ஒருநாள் மக்களில் சிலர் அவர்களை அழைத்து கேட்டார்கள். நீங்கள் எங்களுடன் பேசுவது, பழகுவது இல்லை. கடமையான கூட்டுத் தொழுகையில் மட்டும் கலந்து விட்டு உங்கள் வீட்டில் தனிமையில் இருக்கிறீர்கள் நீங்கள் யாருடன் பேச மாட்டீர்களா ? உங்களுக்கு இப்படி யாருடனும் பேசாமல் இருப்பது சலிப்பை ஏற்படுத்தாதா ? என மக்கள் கேட்டதற்கு அவர்களின் பதில் கேட்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது

LinkWithin

Related Posts with Thumbnails