Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Sunday, July 13, 2014

வேடிக்கை பார்க்கும் உலகம்


குழந்தைகள் குதிகாலால் தரையில் உதைத்து விளையாடி மகிழும்
குழந்தைகள் தொட்டிலில் படுக்க வைத்திருந்தபோது பல காரணங்களுக்காக உதைத்துக் கொள்ளும் .தாய் அதன் காரணத்தை அறிந்துக் கொள்வாள்
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருப்பையில் வளர்ந்த நிலையில் உதைப்பதை அறிந்து தாய் மகிழ்வாள்

Saturday, February 15, 2014

குடும்பம் மகிழ்வாய் இருக்க


மனைவி  மீது  மென்மையான புரிதல் மற்றும்  நட்பு இருக்க வேண்டும் .

பண்பட்ட, மென்மையான முறையில் இனிய வார்த்தைகளைக் கொண்டு    மனைவியுடன் பேச வேண்டும் .

மனைவி  சோகமாக கவலையாக  இருக்கும்  போது அவளது கவலையை நீக்க முயற்சிக்க மனைவியுடன் நேசம் காட்ட வேண்டும்.   இரக்கம் கொண்டு அவளை சந்தோஷப்படுத்த  வேண்டும் .  சிறந்த நண்பராக  மனிவியின்  பிரச்சனைகளை தீர்க்க  மனைவிக்கு  ஆதரவாக  இருக்க வேண்டும் .

 குழந்தைகள் கல்வி கற்க அவளுக்கு உதவ வேண்டும் .
மனைவி செய்த தவறுகள் பற்றி முரட்டுத்தனமாக கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக் கூடாது.   அவளுக்கு  அமைதியாக சிகிச்சை செய்வது போல் செயல்பட வேண்டும். 

அவள்  கோபப் படும்போது  அமைதியாக இருக்க வேண்டும் .
நாம் தவறு செய்திருந்தால்  மன்னிப்பு கேட்க வேண்டும் . மனைவியிடம் மன்னிப்பு கேட்பதை மரியாதை குறைவாக கருதக் கூடாது. அன்பை அதிகப் படுத்துவது ஒரு உயர்ந்த செயல்தான் .அது ஒரு  பாக்கியமாகும் .
 " என் கணவர்  யாரையும் விட என்னை நேசிக்கிறார் . " என்று சொல்லும்படி ,நினைக்கும்படி வாழ்வது உயர்வானதே

Tuesday, November 19, 2013

வரவேற்பறைக் காட்சிகள்


வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.

சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.

Thursday, November 14, 2013

வில்லும் அம்பும் – கலீல் ஜிப்ரான்


உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.

அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல

உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.

Tuesday, November 12, 2013

பெண்ணின் பெருமை

ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.

 தெளிவான  வழிகாட்டி   நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண்  செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது

Wednesday, October 23, 2013

வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் !

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.

என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும் எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில் எல்லாம் மறைந்துபோயின

Thursday, June 20, 2013

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 !


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை விட முக்கியமானது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். உங்களுக்காக My Top 6 !

1 குழந்தைகளை நீங்கள் அன்பு செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைக் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். உர்ரென்று இருந்தால் தான் குழந்தை பயப்படும், ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களின் நிபந்தனையற்ற அன்பு அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு முதல் தேவை.

2. சின்னக் குழந்தைகள் எப்போ பார்த்தாலும் எதையாவது திறந்து, எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் கிச்சன் கபோட்களும், கரண்டிகளும் அவர்களுடைய பேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள். இதை ஆங்கிலத்தில் பேபி புரூஃபிங் (baby proofing ) என்பார்கள். அவர்களை அனுமதியுங்கள். ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.

3. வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவுவது, வீட்டை சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என எதுவானாலும் பரவாயில்லை. இவையெல்லாம் குழந்தையின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

Wednesday, June 19, 2013

தாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை !

'அய்யையோ !' என்ற மனைவியின்  அலறல் கேட்டு கணவன் கத்துகிறார்
'ஏன் இப்படி கத்துகிறாய்' என்று
இங்கே வந்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் ( அப்பவும் நம்ம பிள்ளைகள் என்ற வார்த்தை வருவதில்லை) பண்ற அநியாயத்தை ! என்று கதறுகிறாள்
( அரசியல் குற்றவியல் சட்டப் பிரிவு தண்டிக்கப் படும் குற்றத்தைப் போல் )
கணவன்  மனைவியின்  அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்து
'இதற்கா இவ்வளவு கூக்குரல்' என மனைவியை கண்டிக்கிறார்
'ஆமா உங்களுக்கு என்னைத்தான் கண்டிக்கத் தெரியும். பெத்தவளுக்குத்தானே பிள்ளையின் அருமைத் தெரியும் ' என்று முனங்கிக் கொண்டு பிள்ளைகளை கண்டிக்கிறாள் தாய் .

அப்படி என்னதான் குழந்தைகள் குற்றம் செய்து விட்டார்கள்!
படங்களைப் பாருங்கள்



Monday, June 18, 2012

மனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression.
இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope.
தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம்.
அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…
இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை!
நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” - அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)
நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!
கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை,
அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்;
வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை.
இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை.
மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல்.
மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை.
இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.
கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம்.
சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே.
ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.
சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும்.
அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

Tuesday, May 22, 2012

பாதுகாப்பு வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்.

  நீரை விசிறியாக்கி நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். எத்தனை அற்புதம் இயற்கையோடு விளையாடுவதில். சிறு வயது விஞ்ஜானிகள் நமக்குள் இருக்க நாம் திகைத்து பார்ப்பதோடு இருந்து விடுகின்றோம். விளையாட்டிலும் எத்தனை அறிய புதிய கண்டுபிடிப்புகள்! குழந்தைகளின் அறிவின் வளர்ச்சி விளையாட்டாகவே குழந்தைகள் பருவத்தில் ஆரம்பித்து விடுகின்றன. நாம்தான் அவர்களை உற்சாகப் படுத்தாமல் 'என்னடா இந்த வீண் விளையாட்டு' என்றும் 'விளையாடாதே ஜுரம்(காய்ச்சல்) வந்துவிடும்'  இன்னும் பலவித தடைகள் விதித்து அவர்களின் அறிவை வளர்க்க விடாமல் தடை விதித்து விடுகின்றோம்.

விளையாட்டு உடல்நலத்திற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது. விளயாடும்போது சில காயங்கள் ஏற்படுவது இயல்பு. பயம் காட்டியே வளர்ந்த குழந்தை தன் வாழ்நாளின் பெரும் பகுதி பயத்திலேயே வாழ்நாளை ஓட்டும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சின்ன, சின்ன விபத்து ஏற்படும்போது இயல்பாகவே அது தனக்கு பெரிய ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொள்ளும் மற்றும் தனது திறமையையும்   வளர்த்துக் கொள்கின்றது. விடுங்கள்.. அது இயற்கையின் அருமையினை அறிந்து தன அறிவினை வளர்த்துக் கொள்ளட்டும்.  பாதுகாப்பு  வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்        
எதில் என்ன இறைவன் மறைத்து வைத்துள்ளானோ! முயன்றால் பயன்தர இறைவனது அருளும் கிட்டும். இயற்கையை கண்டு ரசிப்பதோடு இல்லாமல் அதனை நம் வயப்படுத்திக்கொள்வதே இறைவனது நாட்டமும். இயற்கை நம்முடன் விளையாடும்பொழுது நாமும் அதனுடன் விளையாடி மகிழ்வோம்.

"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று.

Monday, February 6, 2012

‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’

 ‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’
[ குழந்தைகள் அன்பை சொறிவதில் சலிப்படைவதே இல்லை, சோர்வடைவதே இல்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பின்றி நேசிக்கும் கலையில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
தாம் நேசிப்பவை தம்மை நேசிக்கிறதா என்று அவை சந்தேகப்படுவதில்லை. தாமும் மற்றவைகளால் நேசிக்கப்படுவதாகவே குழந்தைகள் நம்புகின்றன. நாம் தான் இந்தக் கலையை வளர்ந்த பிறகு மறந்துவிட்டோம்.]
ஆண் - பெண் எனும் இரண்டு கழித்தல் கோடுகள், இல்லறக் கணக்கில் சமக்குறியாக இணை சேரும். பின்னர் கோடுகளின் தீண்டல்களில் கூட்டல் வரும், சரியான தப்பான பெருக்கல் வரும், இரண்டு புள்ளிக் கண்களோடு ஒற்றைக் கோடாக, வகுத்தல் குறி போலக் குழந்தை வரும், அந்த வகுத்தலுக்குப் பிறகே அந்த இணையர்க்கு ஈவும், இரக்கமும் வரும்.
கையடக்கப் பவுர்ணமி,

மின்னல் முளைத்த சின்னப் புன்னகை,
தாலாட்டின் இசைக் குறியீடு,
தென்றலால் செய்த விசிறி,
பளிங்கும், நுங்கும் சரிவிகிதத்தில் பிசைந்து செய்த உயிர்ப் பதுமை,
அன்னத்தின் தூவியில் எலும்பு,
அனிச்சம் பூவில் நரம்பு,
வெல்வெட்டுத் தங்க உடம்பு,
சந்தனத் தந்தக் கால்கள்,
பூரித்து இறங்கி வரும் புன்னகை அருவி,
ரோஜாத்தீ வாய்,
உள்ளங்கை பிஞ்சுப் பிறை விரல்,
பிளம்கனி உட்கார்ந்திருக்கும் வெனிலா ஐஸ்கிரீம் கண்கள்,
அதனைச் சப்புக்கொட்டும் உதடுகளாய் மினி இமைகள்,
சொர்க்கப் பூஞ்சிறகுகளாய் இரு செவிகள்,
பாலாடை வாய்,
தாய்ப்பால் குமிழியாய்த் ததும்பிடும் மூக்கு,
கையில் அள்ளினால் காஷ்மீரத்து வெண்பணி,
நொடியில் உயிர் கழுவும் துளிப் பூஞ்சிரி.
வறட்டுத் தரிசினை வசந்தப் பரிசாக்கும் இந்தக் குழந்தைகள் தான் எத்தனை அழகு! (-பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்)

Wednesday, February 9, 2011

குழந்தை பிறப்பின் புதிய முறை !



விஞ்ஞான வளர்ச்சி ஜெட் வேகத்தில் பயணிக்கும் காலம் இது தமது சொந்தபந்தங்கள் யாரென தெரியாத காலம் இது தனது உடன்பிறப்பு மேல்மாடியியில் குடி இருந்தாலும் சந்திக்க நேரம் கிடைக்காமல் இணையதளத்தில் ஏதேனும் சமூகதளதிநூடாகவே சந்திக்கின்றனர்.


தொலைதூர தொடர்புகளுக்காக கண்டுபுடிக்கபட்ட தொடர்பு சாதனங்கள் தற்போது அருகில் இருப்போரையும் தொலைத்துவிடும் காலமாக மாறிவிட்டது காரணம் இணையத்திலே தமது தேவைகள் அனைத்தையும் மனிதன் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான் . தகவல் பரிமாற்ற சாதனமாக இருந்த இணையம தற்போது வாழ்க்கை பரிமாற்ற ஊடகமாக மாறிவிட்டது..
சகோதரனின் திருமணத்திற்கு இணைய அட்டை ,காதலிக்கு பரிசாக இணைய ரோஜா ,அன்னையர் தினத்திற்கு இணைய வாழ்த்து , இப்படி நேரில் தமது வாழ்த்துக்களை சொல்லாமல் இணையத்தோடு எல்லாத்தையும் முடித்துக்  கொள்கின்றனர் .

இணைய காதல் ,இணைய வரன் பார்த்தல் ,இணைய திருமணம் என நாளுக்கு நாள் இணைய புரட்சி செய்யும் மனிதன் இணையவழி குழந்தை புரட்சி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை .




 இணையவழி குழந்தை 

 .






Saturday, February 5, 2011

பெண்களின் இன்றைய நிலை

முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலை - மவ்லவியா ஆரிஃபா
இல்லத்தரசிகளின் கடமைகள் - குழந்தைகள் மீதான கடமைகள் - சகோதரி மிர்ஷாதுல் நிஷா ஆலிமா


இல்லத்தரசிகளின் கடமைகள் - கணவன் மீதான கடமைகள் - சகோதரி மிர்ஷாதுல் நிஷா ஆலிமா

Sunday, December 19, 2010

குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்த நோய்



மன அழுத்தம்லண்டன்: குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10-11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர். அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.
 (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=107068)
ஒபாமா மகள்களுடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இருமகள்களான மாலிமா(12) மற்றும் சாஷா(9) ஆகிய இருவரும் பொழுது போக்கிற்காக கேபிள் டி.வி., பார்ப்பதில்லை என ஒபாமா அமெரிக்க டி.வி., சானல் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். ஆனால் இருவரும் நியூஸ் சானல்களை விரும்பி பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதை‌ய சூழலில் சிறுவ, சிறுமிகள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்‌காக கேபிள் டி.வி., நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்ற சூழலில் அமெரிக்க அதிபரின் மகள்கள் இருவரும் நியூஸ் சானல்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 (http://www.dinamalar.com/district_detail.asp?id=135434)

கனிமொழி
கனிமொழி எம்.பி., பேசியதாவது:பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்..............

 .............நிறைய படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
(http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17223)
  
Byரபீக்  சுலைமான் 








ரபீக்  சுலைமான்  தலைவர் அப்துஸ்ஸமது அவர்களுடன்