காதல் என்பது மன ஒற்றுமையினால் ஏற்படும் ஈடுபாடு
எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி நிறைவோடு அமையவேண்டும் என்பது ஒவ்வொரு காதலர்களின் விருப்பம்.
பூமியின் ஈர்ப்பு சக்தி நாம் நிற்பதில் ,நடப்பதில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கின்றது .
பாசத்தின் பிணைப்பில் உருவான காதலின் ஈர்ப்பு வாழ்வில் நெருக்கத்தை தருகின்றது
அறிவு ,அழகு,கல்வி ,பொருள் இவைகளால் உந்தப்பட்டு வரும் காதல் அதன் கருவின் ஈர்ப்பில் வந்தது அதில் நேசம் என்னும் பாசம் பிணைக்கப் படாமல் உடைந்து போகும்
காற்று வேகமாக வீசுகிறது
காதல் வேகமாக பேசுகிறது
மனம் மென்மையாக பாதிக்கிறது
மானம் போக்க மற்றவர் பேசுகின்றனர்
காதல் செய்வதில் குறை வேண்டாம்
காதல் கொள்வதில் முறை வேண்டும்
காதல் கொண்ட மனைவி நிறைவாவாள்
காதல் கொண்ட மனமும் நிறைவாகும்
கண்டதும் காதல் சுனாமியாக அழிக்கும்
கண்டு கணித்து நேசித்து காதல் கனிவது இனிக்கும்
காதல் இல்லை சாதல் ஒரு பேத்தல்
காதல் ஒரு பிறப்பு அது வளரும் மடியும்
” காதலை கண்டோர் அரிது. காதல் என்பது சாதல் தண்மை…காதலுக்குள்ளே காமம் இருப்பினும் காமம் என்பதில் காதலே இல்லை. காமம் என்பதில் காதலே இல்லை. காமம் என்பது தேகம் கலத்தல். அறிவு, உணர்ச்சி, ஆன்மாவினோடு கலந்து போவதே காதல். காதலின் குணத்தை சொல்வது கடினம். அனுபவம் ஒன்றே அறியக்கூடும்.உடலைப் பற்றிய உணர்ச்சியே அல்ல. அழகை மட்டும் ஆசிப்பதும் அல்ல. நிறத்தைக் கண்டு நிற்பதும் அல்ல. அறிவை மெச்சி அடைவதும் அல்ல. இளமையை எண்ணி இருப்பதும் இல்லை. புகழோ,இகழோ பொருட் படுத்தாது . இன்பமோ துன்பமோ இணைபிரியாது. அழுகின உடலையும் அணைத்து நிற்கும். உலக சுகங்களை உதறித் தள்ளும். செல்வமோ, வறுமையோ சேர்ந்தே வாழும். குற்றம் நேர்ந்திடினும் குறை சொல்லாது. ஒட்டியிருந்து உயிரையும் உதவும். பற்றியது ஒன்றில் பற்று விடாது. தன்னை வெறுக்கினும் தான் வெறுக்காது. விரும்பிய பின்னர் விலக என்னாது. ஊனையும்,உணர்வையும், உயிரையும் தாண்டி அப்பால் தொடரும். அன்பே காதல், காதல் முறிந்தால் சாதல் கருதும்”.
- நாமக்கல் கவிஞர்
No comments:
Post a Comment