Showing posts with label நினைவு. Show all posts
Showing posts with label நினைவு. Show all posts

Thursday, September 11, 2014

அம்மாவின் கல்யாணப் பட்டுப்புடவை

காலப்பெட்டகத்தின் சீரான
நினைவு அடுக்குகளை
வரிசைப்படுத்துவது போல
மடிப்பாக..
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
அந்தப் பட்டுப்புடவை!

மாப்பிள்ளையைத் தேடியதற்குச்
சற்றும் குறையாமல்
தேடி வாங்கிய புடவையென
எடுக்கும் போதெல்லாம்
பெருமிதத்தோடு அம்மா சொல்வாள்!

எத்தனை வருடம் ஆனாலும்
அதை அணியும்போதெல்லாம்
அம்மாவின்
நினைவுகளிலும்,நடத்தையிலும்
ஒரு மணமகள் வந்து
கூச்சத்தோடு அமர்ந்துகொள்கிறாள்!

கடந்து செல்லும்
காலத்தின் மீதான
மிச்சம் இருக்கும்
காற்றின் வாசமாய்
அந்துருண்டைகளையும்
வாசனைத் திரவியங்களையும்
தன் மேல் சுமந்து அவள்
நினைவுகளுக்கு நறுமணமூட்டுகிறது!

அம்மாக்களின்
கல்யாணப் புடவைகளைப்
பார்க்கும் ஒவ்வொரு முறையும்...
அப்பாக்களின் பட்டுவேட்டிகளை
நாம் பார்த்ததே இல்லை என்ற
உண்மை சற்று ஓங்கி
அறைந்துவிட்டுச் செல்கிறது!

Thursday, February 20, 2014

வண்ணப் பெண்புறாவை சின்னப் புறாக்கள் மொய்த்தும்....



வண்ணப் பெண்புறாவை
சின்னப் புறாக்கள் மொய்த்தும்
ஈயாடவில்லை
ஏக்கம்கொண்ட விழிகளில்
ஏனெனில்
ஏந்திலையின் நெஞ்சுக்குள்
ஏகந்தத்தின் நினைவுகள்
சூழ்ந்து சூரையாடிக்கொண்டிருந்தன
சுகந்தத்தின் கண்விழித்த
சொப்பனத்தில்
சொல்லடி என்னவென்று
செல்லக்கிளியே-உனை
சொக்கவைத்தது யாரென்று...

ஏறெடுத்துப் பார்க்கும் பார்வையில்
எட்டடுக்கு கேள்விகள்,
தொடுக்கிறாள் இவள்
துள்ளித் துவழ்கிறான் அவன்.

Tuesday, December 17, 2013

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்


குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். வேனிற்காலத்தின் வியர்வை அருவிகளுக்கிடையே குளத்தின் ஞாபகத்தை உதறி விரித்து அதில் ஈரத் துளிகளை இழுத்தெடுக்க முயல்கின்றனர்.

Friday, November 29, 2013

இது ஒரு மந்திரமா !

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!

ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது

விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்

Monday, August 13, 2012

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்)

எனது கற்பனை,  என்னைப் பொறுத்தவரை,  ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு! 

 நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்

Wednesday, June 20, 2012

இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது

   இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
ஆய்வின்படி செடியின் நல்ல வளர்ச்சிக்கு நல்ல இசையை கேட்கச் செய்கின்றனர்.இசையைக் கேட்டு மரம் செடி கொடிகள் கூட   நன்கு வளர்கின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மென்மையான இசையைக்  கேட்டு மகிழ்வதாகவும் அதனால் அந்த பிறக்கப் போகும்  குழந்தைக்கு இசை ஓரளவு உதவி செய்வதாகவும் சொல்கின்றனர். கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

மென்மையான  நல்ல இசையை கேட்கும்போது நமது மூளையின் பல பகுதிகள்  தூண்டப்பட்டு உற்பத்தி அதிகரிக்க   நினைவுகளை நிறுத்தி வைக்க  உதவுகின்றது .அதற்கு இந்த விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.