Friday, August 31, 2018

இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை)Forgive Me - Ahmed Bukhatir (with lyrics subtitle)

Together we are better

Fajila Azad - Life Coach & Hypnotist

Every problem has a Solution

இடம் மாறிப் பார்ப்போம்… (இறையன்பு)

இடம் மாறிப் பார்ப்போம்…

(இறையன்பு)

ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது “ஏன் இவ்வளவு தாமதம் ” என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் “என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை ” என்றார்.

Wednesday, August 29, 2018

முகமது அலி ” இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை!”

இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

- தன்னம்பிக்கை கதை

ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், 1964-ம் வருடம், முதன்மையான குத்துச்சண்டை வீரர் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள். போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகவே நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோச‌மாக குத்துக்களை விட்டார்.

Sunday, August 26, 2018

Today's Reality..இன்றைய யதார்த்தம் ..

பள்ளிவாசல் நிர்வாகம்- பழைய வரலாறும் புதிய பார்வையும்-

Yembal Thajammul Mohammadபள்ளிவாசல் நிர்வாகம்-
பழைய வரலாறும்
புதிய பார்வையும்-
---------------------------------------------------------------------------------
என்ற தலைப்பில்

தொடராகவோ குறிப்புகளாகவோ எழுதவேண்டும்...

அதுவும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தாம் நிறுவிய பொதுநல அரசின் சார்பில் முன்மாதிரியான அருளாட்சி செய்த மதீனாவிலிருந்து தொடங்கி எழுத வேண்டும்
என்று அடிக்கடி தோன்றுகிறது...

இறையில்லம் யாருடைய காணியாட்சிக்கும் உட்பட்டதா? அல்லது யாரோ சிலரின் உள்நோக்கங்களை நிறைவேற்றி நிலை நாட்டுவதற்கு உரிய இடமா?அல்லது பொதுமக்களின் ஆன்மீக லௌகீக நலனை முன்னிறுத்தி அவர்களை முன்னேற்றும் இடமா?அல்லது நமக்குத் தெரியாத பயன்பாடுகள் ஏதும் பள்ளிவாசல்களுக்கு உண்டா? என்பன போன்ற பல ஐயங்கள் எனக்கு வாழ்வில் எத்தனையோ முறை வந்து சென்றுள்ளன.

அதிகம் கல்லாத பேர்களை விட அதிகம் கற்றவர்களுக்கே கவனப்படுத்த வேண்டிய நிலை சிற்சில நேரங்களில் ஏற்படுவதை என்னைப் போலவே பலரும் (ஏக்கத்துடனோ,வருத்தத்துடனோ) யோசித்திருக்கக் கூடும்....

இதுபோல எத்தனையோ எண்ண ஓட்டங்கள் ...

நன்மையை நாடி எழுதினால், எங்காவது-யாருக்காவது பயன்படும் அல்லவா?

இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....

ஏரி மீன்கள் ....

அப்துல் கபூர்
ஏரி மீன்கள் ....உகாண்டா தேசத்தை நீர்த் தொட்டிலில் சுகமாய் தாலாட்டுகிற விக்டோரியா ஏரியில் வாலாட்டுகிற திலாபியா (Tilapia) மற்றும் நைல் பர்ச் (Nile Perch) என்கிற இரு பெரு வகை மீன்கள் வேகமாய் நீந்துகிறது ....

உகாண்டா மீனவர்கள் மீன் பிடிக்கிற வலைகளோடும் மீன்கள் கிட்டுமா என்கிற கவலைகளோடும் தினமும் படகுகளை இயக்கி ஏரியின் முக்கிய பகுதிக்கு சென்று சிக்கிய மீன்களை கரைகளுக்கு கொண்டு வந்து விற்கிறார்கள் ...

மீன் பிடி ஏரிமுகமான 'GABA Beach' என்றழைக்கப்படும் பிராதான ஏரிக் கரைக்கு நம்மவர்கள் பலர் விடுமுறை நாட்களில் தவறாமல் விஜயத்து வீட்டு தேவைகளுக்கு துள்ளி நெளிகிற மீன்களை ஏலத்தில் அள்ளி வாங்குவார்கள் ...

மேலும் உகாண்டாவின் சில்லறை வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி நகரில் ஆங்காங்கே அமைந்திருக்கும் கடைகளிலும் பரப்பி விற்பார்கள் ...

Saturday, August 25, 2018

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும்
குறித்து வைத்துக்
கொள்ளுங்கள்.
பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட
அதே தவறை இன்னொருவருக்கு
செய்து விடக்கூடாது என்பதற்காக...

யாரையும் பரிகாசமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக்
கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது
ஒன்று கண்டிப்பாக
இருக்கும்.

பிறர் குறைகளை
மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள்..
நிறைகளையும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்..

தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எடுத்தெறிஞ்சு பேசாதீர்கள்..பிறருக்கு கொஞ்சமாவது தெரியும்
என்று நினைக்கவும் மறந்து விடாதீர்கள்..

நமக்கு பிடிக்காதவராகவே
இருந்தாலும் அவரின்
சிறு வெற்றிக்கு
மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்.

அடுத்தவரை திட்டுவதையும்,
சபிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்.
வாழ்த்துக்களையும்,
புன்னகைகளையும் வீசி செல்லுங்கள்..

'என்ன
வாழ்க்கைடா இது'
என்று நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்..

மற்றவர்கள் என்ன
நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை விட அவர்கள்
அளவுக்கு நாம் ஒன்றும்
தாழ்ந்து விடவில்லை என்று தன்னம்பிக்கையோடு இருங்கள்..

நீங்கள் நேசிப்பவர்கள்
பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள்
நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு
என்பது அதுதான்..

சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் உங்களை
தேடி வரும்..

பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..

உண்மையான
அன்பில் சந்தேகம் கொள்ளாதீர்கள்..உங்கள் அன்பும் பிறரால் சந்தேகிக்கப்படும்..

எதிரே வருபவரின் தகுதியை பாராமல் ஒரு சிறு புன்னகை
உதிர்த்தபடி கடந்து செல்லுங்கள்..உங்கள் தகுதி ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை..

பிறர் உங்களை நினைக்கவில்லை என்பதை விட நீங்கள் அவர்களை நினைக்க தவறவில்லை
என்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்..

உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக நீங்களும் ஒதுங்கி விடுங்கள்..

#வாழ்க்கையில் இம்முறைகளை கடைபிடிக்கும் நல்ல எண்ணங்களை இறைவன் அனைவருக்கும் தந்தருள்வானாக..!

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்

அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.ஆமீன்..!

#அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமகிழ்வோடு கூடிய தியாகப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

Saif Saif

Friday, August 24, 2018

ஜூம்மா சொற்பொழிவு / படப்பிடிப்பு அபு அய்மன்

I am Madras | Fully

வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பா ? உதவிக்கரம் நீட்டும் தமிழக வழக்கறிஞர்

வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பா ?
உதவிக்கரம் நீட்டும் தமிழக வழக்கறிஞர்

சென்னை : வெளிநாட்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக வழக்கறிஞர் சமியுல்லா முன் வந்துள்ளார்.

Thursday, August 23, 2018

நரை முடி

நரை முடியை பற்றி
நிறைய பேர் கவலைப் படுகிறார்கள்.
அதை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறார்கள்.
ஆனால் ...
#நரை_என்பது_வரம்
என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் முதன் முதலில்
நரை முடி தோன்றியது
#இப்ராஹீம்_நபிக்குத்தான்.
ஒருநாள் தன்னுடைய நீண்ட தாடியை
விரல்களால் கோதி விட்டபடி ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார் இப்ராஹீம் நபி.

இந்து கோவிலில் நடந்த பெருநாள் தொழுகை....

கேரள பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் திருச்சூர் மாவட்ட கொச்சுகடவு ஜமாஅத் ஜும்ஆ பள்ளிவாசல் முற்றிலும் சேதமானதுடன் பள்ளி வாசல் செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது..
பெரும்பாலான வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த இடமில்லாமல் கவலைப்படும் தகவல் கேள்விப்பட்ட எரவத்தூர் புரப்பள்ளிக்காவு ரத்னேஷ்வரி கோவில் நிர்வாகம் கோவில் வளாகத்தில் உள்ள பஜனை ஹாலில் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதுடன் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்..
இந்த மனித நல்லிணக்கம் சார்ந்த உயரிய செயலுக்கு காரணமாக இருந்த கோவில் நிர்வாகி பி. கே. பாபு வுக்கு பாராட்டுகள்...
Colachel Azheem

Wednesday, August 22, 2018

வைட்டமின் வழிகாட்டி!

SENTHIL
சுவை அறிந்து சாப்பிடுவதைவிடச் சத்து அறிந்து உணவைச் சாப்பிடுவதே நோய் நொடியில்லாமல்  உடலை வைத்திருக்க உதவும்.  உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும்  வைட்டமின்களும், தாது உப்புக்களும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.

வைட்டமின்களில் கொழுப்பில் கரையக்கூடியன நீரில் கரையக்கூடியன என்று இரண்டு வகைகள் உண்டு. வைட்டமின் A,D,E,K-ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியன.  இவை தேவைக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

B1, B2, B3, B5, B6, B9, B12,  வைட்டமின் C ஆகியவை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். அதனால் காய்கறி மற்றும் பருப்பு வகைகளில் இவை உண்டு.  அதனால், அதிகம் கழுவக்கூடாது. இவை தேவைக்கு அதிகமாக உடலில் சேர்ந்து விடுமோ என்றும் பயப்படத்தேவை இல்லை. கூடுதலாக உள்ளவை சிறுநீரில் வெளியேறிவிடும்.

தியாகப் பெருநாள் சிந்தனை

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

Present situation in Kerala

Sunday, August 19, 2018

கடன் வாங்குதல் -Tamil Bayan Hazrath Shadeeduddin

அறிவின் தலைவாயில் அலி (ரலி)-

அறிவின் தலைவாயில் அலி (ரலி)-

மௌலவி M. முஹம்மது அபுதாஹிர் பாகவி

moulavi abdul rahman hazrath

உங்கள் சுவனமும் நரகமும் உங்கள் பெற்றோரின் பாதத்தடியில்தான்!''.


ஒரு மனிதன்

- எப்படி வாழ்வது

- எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது

- மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிசரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.

- அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது

- ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது

- வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.

- எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது

இப்படிப் போன்ற எல்லா விடயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.

கருணை நபி நடந்து வந்தால்.

சுபுஹு பயான்-2

ஆரோக்கிய ஆத்திச்சூடி

துபாய் மக்களை நெகிழ்சியில் ஆழ்த்திய துபாய் காவல்துறை அதிகாரியின் மனித நேயப்பணி..!

துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி...

ரஷீடியா போலீஸ் நிலையத்தின் உயர் அதிகாரி லெப்டினென்ட் அப்துல் ஹாடி, இன்று காலை நீதிமன்ற அலுவலகத்தில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மூச்சிறைக்க ஓடி வந்த ஒரு நபர் என் மனைவியைத் தயவு செய்து காப்பாற்றுங்கள். என் மனைவி சிறைக்குச் செல்லக் கூடாது.

எங்கள் 7 மாதக் குழந்தை தாயின்றி தவித்துப்போய்விடும் என்று கதறினார்.

அந்த நபரை சமாதானப்படுத்திய அப்துல் ஹாடி, பதற்றப்படாமல் முழு விவரத்தைச் சொல்லுங்கள் என்று கூறினார்....

அந்த நபர் விவரிக்க தொடங்கினார்.

அரபா தினமும் அரபா நோன்பின் சிறப்புகளும்


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

புனிதமான துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாம் நாளான அரஃபா தினத்தின் மாண்புகளும், அரஃபா நோன்பின் சிறப்புகளும் பற்றிய நினைவூட்டல்

​​
♣ அரஃபா என்றால் என்ன?

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹஸ்ஸாம் அவர்களும் முதன் முதலாக சந்தித்த இடம் அரஃபா ஆகும். இதனால்தான் இந்த இடத்திற்கு அரஃபா என்று பெயர் சொல்லப்படுகிறது, வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமான கூறப்படுகின்றது.

Saturday, August 18, 2018

ஒற்றுமையாய் நாம் வாழனும் || ISAI MURASU E.M.HANIFA

எல்லோரும் ஹஜ் செய்யலாம்... வல்லோனின் கஹ்பாவை காணலாம்.

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் நம்மோடு_இருக்கின்றான்

அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்
சுபுஹுபயான் நிடூர் நெய்வாசல் பெரியப்பள்ளி இமாம் முஹம்மது இஸ்மாயில் பாகவி

உங்கள் வீட்டில் அல்லாஹ்வின் அருள் இறங்க இதனை செய்யுங்கள்

Thursday, August 16, 2018

ஈடிணையற்ற இறைவா!

ஈடிணையற்ற இறைவா!(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)

அல்லாஹ்!

ஊனுருகி, உடல் குறுகி,

உயிரொடுங்கி, உளம் நடுங்கி,

வணங்கிட ஒருவன்...

அவனைத் தவிர யாருமில்லை !உயிர்த்திருக்கும் அவன்

என்றும் நிலைத்திருப்பவன்;

உணர்வுகளில் நித்தம்

மிகைத்திருப்பவன்!


தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது இறைவனுக்கு இணை வைப்பதா?

#அன்புடன்#இஸ்லாம்

கொடியைத் தொழுது துவாச் செய்யாதபோது, அது கூடாததாகாது.

தாயை மதிக்கிறோம்
தந்தையை மதிக்கிறோம்
தாய் மண்ணை மதிக்கிறோம்
தாய் நாட்டை மதிக்கிறோம்
தாய் மொழியை மதிக்கிறோம்
ஆசிரியர்களை மதிக்கிறோம்
தலைவர்களை மதிக்கிறோம்

ஆன்மீகம் என்பது உங்கள் ஆன்மா சார்ந்த விஷயம்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து அதை ஆன்மீகம் என்று முடிவு செய்து விடாதீர்கள். ஏனென்றால் ஆன்மீகம் என்பது உங்கள் ஆன்மா சார்ந்த விஷயம். 

நீங்கள், உங்கள் வெளியே மாற்றங்களை செய்யத் தொடங்கினால், அது உங்கள் உள்ளே எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஆனால் நீங்கள் உங்கள் உள்ளே மாற்றங்களை ஏற்படுத்தினால் உங்கள் வெளியே தானே மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். 

காரணம், உங்கள் வெளிப்புறம் என்பது உங்கள்  " நிழல்" 

வெளிப்புறம் மாற்றங்கள் செய்து அதை, அதுதான் உண்மையான ஆன்மீகம் என ஆன்மீக வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் வாழ்வை வீணடித்து கொள்கிறார்கள். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்


என்ன செய்தார் வாஜ்பாய் ? http://www.puthiyathalaimurai.com/news/

Wednesday, August 15, 2018

லட்சியக் கவிஞர் அல்லாமா இக்பால் (ரஹ்)

லட்சியக் கவிஞர் அல்லாமா இக்பால் (ரஹ்)
 அறிவியல் அறிஞர் இக்பாலின் வரிகள்
=============================================

'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்

''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''

இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.

அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.

சிறந்த தர்மம்

பிரபல தொழிலதிபர் (LuLu) யூசுப்அலி அவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் 2.65 மில்லியன் திர்கம்ஸ்(50 மில்லியன் ரூபாய்கள்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வாழ்த்துக்கள்.....

கோடிகளில் புரளும் பண முதலைகள் இவரைப் பார்த்தாவது மனம் இளகட்டும்.

Yousuf Ali, chairman and MD of LuLu Group has announced Rs50 million (Dh2.65 million) donation to the Kerala chief minister’s relief fund. Apart from this he had donated R20 million (Dh1.06 million) to the prominent newspapers in Kerala last week for their flood relief initiatives.
-Gulf news
13-08-2018
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் lulu(லுலு), கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரண தொகையாக 50 மில்லியன் ரூபாய், இந்திய மதிப்பில் ரூ.26 கோடியை நிவாரணமாக வழங்கி உள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.

------------------------------------------------------

நபி(ஸல்) அவர்கள் பற்றி கலைஞர் |

Tuesday, August 14, 2018

எது மகிழ்ச்சி??

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை.

பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.

பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

*என்னை நெகிழ வைத்த பதிவு*

  என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.

அடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.

பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.

என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன இது? என்று கேட்டார்.

பொறுங்கள் என்றார் அவர் நண்பர்.
சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.

Any suspended coffee என்று கேட்டார்.

Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.

வலிமை கேட்டேன் ........./ வா வந்து பார்

நான் வலிமை கேட்டேன் .........
நான் வலிமை கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.

நான் அறிவு கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.

இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் ......... இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்.. ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் ......... ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

Thursday, August 9, 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!
சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.

Asma Ul Husna with Tamil Meaning by Moulavi Raisudeen Qari -Gelioya

Wednesday, August 8, 2018

மு கருணாநிதி முழு குடும்பம் | M Karunanidhi Family Tree Full Details

துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து :

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன..? - துரைமுருகன் விளக்கம்

*புரட்சிகள் செய்த பூமான் நபி!*


 
*பூமான் நபிபோல் புரட்சிகள் செய்தவர் பூமியில் யாருமில்லை*
*புதுமைக் கருத்தால் உலகை மாற்றிய புண்ணியர் எவரும் இல்லை*
*சாமான்யருக்கும் சமத்துவம் தந்த தலைவர் எவருமில்லை*
*சாதிகள் பேதங்கள் தகர்த்தே எறிந்த சாதனை எங்குமில்லை*

*உழைப்பவர் கைக்கு முத்தம் தந்து உழைப்பின் உயர்வைச் சொன்னார்கள்*
*ஊழியர் வியர்வை உலரும் முன்னே ஊதியம் அளிப்பீர் என்றார்கள்*
*தாயின் காலடி சுவர்க்கம் என்று தாய்மைக்கு மதிப்பு தந்தார்கள்*
*முதன் முதலாக விதவையை மணந்து விதவைக்கு விடியல் கண்டார்கள்*

Monday, August 6, 2018

கலைஞருடன்....

கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம்
(கல்லூரியில் உடன் puc லிருந்து B.L வரை படித்தவர்.கூடவே இருந்தவர் ) அதனால் நான் முரசொலி அலுவலகம் செல்வதுண்டு .

கலைஞரின் நேரம் போதாமையால் தினமும் தம்பிக்கு எழுதும் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது ..இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை

ஆறு மனமே ஆறு


நண்பர் ஒருவர் இறந்து விட்ட
தகவலை மற்றொரு நண்பர்
சொன்னார்.இறந்த நண்பரை
எனக்கு தெரியும். தகவல்
அறிந்ததும் நண்பருடன் அவரது
வீட்டுக்கு சென்றேன்.

இறந்த அவர் உடலை பார்க்க
நான் வந்திருப்பதை.. அவரால்
நிச்சயம் உணர முடியாது.
என்னை தெரிந்த பல நண்பர்கள்
அவரது உடலை சுற்றிலும் அமர்ந்து
இருக்க ஒருவர் அவரது முகத்தை
திறந்து காட்டினார்.அமைதியான
ஆழ்ந்த நித்திரை நிலையில் இருந்த
அந்த நண்பர், உலகப் பயணத்தை
முடித்துக் கொண்டு நிம்மதியாக
மறுமை பயணத்திற்காக தன்னை
தயார் நிலையில் வைத்திருந்தார்.

Saturday, August 4, 2018

உண்மையின் சிறுதுளி..! #நிஷாமன்சூர்

உண்மையின் சிறுதுளி..!

துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும்
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ

பின் நேர்மையின் தடயங்களைச்
சிறு காகிதப் படகாக்கினாய்

பின் இக்கட்டான தருணங்களில்
அணிந்திருந்த நம்பிக்கைகளைத்
துடுப்பாக்கினாய்

பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை
மிதக்கும் ஒரு மரமாக்கிப் படகிலேறினாய்

அல்லாஹ்வின்_அழகிய_படைப்பு /ப்டப்பிடிப்பு Nidur AbuAyman

" உன்னதமான, உறவுகள் "* *" Best Relationships "* ⏬

* "சிறந்த உறவுகள்" *" உன்னதமான, உறவுகள் "*


இப்போது என்ன நடக்கிறது .. Instagram, பேஸ்புக், சென்டர், ட்விட்டர், Snapchat, [மற்றும் மற்ற சமூக ஊடக தளங்களில் மக்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்

சொந்த வாழ்வில், வேலைகள், குடும்பங்கள், நட்புகள், இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவாக உள்ளது எத்தனை முறை விலையுயர்ந்த நேரத்தையும் ஆற்றல் சிந்தனையையும் வெளியேற்றினீர்கள்,


 நம்மைவிட அதிகமாய் மற்றவர்கள் நம்மை நேசிக்கிறார்கள், ஆனால் நாம் அவர்கள் கருத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை -

அன்புடன் முகம்மது அலி ஜின்னா

LinkWithin

Related Posts with Thumbnails