Friday, July 21, 2017

புறக்கணிப்பின் நோவுகள்.!

எனக்குத் தலை வலிக்கிறது என்று
எப்போதாவது உன்னிடம்
சொல்லவரும்போது
உனக்கு எப்போதுமே
தலை வலித்துக் கொண்டிருப்பதாக
அலுத்துக் கொள்கிறாய்
பல்வலிப்பது போலிருக்கிறது எனும்போது
நீ எப்போதுமே பல்வலியோடே
வாழ்ந்து கொண்டிருப்பதாக மாய்ந்துபோகிறாய்

Wednesday, July 19, 2017

Abu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந்திறங்கி பணிகள் துவங்கின ...


இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

அமுதெனும் தமிழால் பண் பாடி உலவும் வெண் தாடி வேந்தருக்கும் எனக்கும் நிலவும் ஆத்மார்த்த அன்பு வலிமை வாய்ந்தது ....

கவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் சமுதாய சிந்தனையாளர் புராதன வரலாற்று ஆய்வாளர் சமூக ஆர்வலர் போன்ற இன்னும் பல வண்ணமய நூல்களால் நெய்த ஏற்றம் மிகுந்த அவதார ஆடைகளை அணிந்து மகிழ்பவர் ...

முகநூல் சுற்றம் பாராட்டும் முற்றம் பத்திரிகை ஆசிரியரான கரீமுல்லாஹ் என்கிற அபு ஹாஷிமா அவர்களை ஊரில் சந்தித்து நான் உரையாடிய தருணங்களில் மகிழ்ச்சியெனும் பேனா எம்மிருவரின் உள்ளக் காகிதங்களில் வர்ணங்களை வரைந்தது ....

Tuesday, July 18, 2017

மன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.

நம் வாழ்வில் நித்தம் எத்தனையோ பிரச்சினைகள், சம்பந்தமே இல்லாதோா்களிடமிருந்தும் தூற்று மொழி, மிகவும் வேண்டப் பட்டோா்களிடமிருந்து காழ்ப்பு மொழி...என்ன செய்வது...தவித்து விடுவோம் ; திகைத்து விடுவோம்.
அடுத்தடுத்த நம் செயல்பாடும் தடைபட்டு விடும்.

ஆர்கானிக் உணவுப் பொருட்கள்! '

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்  பொருட்கள் விற்கப்படும் “மால்”
கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

Sunday, July 16, 2017

என்னிருப்பு ....!

மலரில் மயங்கி 
மனதில் மகிழ்ந்து 
இதழில் புன்சிரியுடன் 
இன்முகம் காட்டி 
நற்குணம் கொண்டு 
உறவுகளுடன் கூடிவாழ்ந்து 
ஆயுளை கூட்டி 
வெறுப்பை துறந்து 
மனிதம் பேணி 
சுகந்தம் சுவாசித்து

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.

என்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க முடியலே.

எனக்கு வேலைப்பளு எப்போதுமே அதிகம், இப்போ ரொம்ப அதிகம். டைப்செட்டிங் செய்யறதுக்கு புதுசு புதுசா புத்தகம் கைக்கு வந்துட்டே இருக்கு. எல்லாமே வெவ்வேறு மொழி நூல்கள். குஜராத்தி-இந்தி, இந்தி-பஞ்சாபி, இந்தி-கன்னடம், இங்கிலீஷ்-இந்தி-போடோ, இங்கிலீஷ்-இந்தி-மணிப்புரி.... இப்படியே நீ........ளு.....து பட்டியல்.
முன்னொரு காலத்தில் இருந்தமாதிரி இப்போ கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கிடைக்கிறதில்லே. அப்படியே கிடைக்கிற ஆட்களுக்கு இந்த வேலையை இப்படிச் செய்யணும்னு நாம எவ்வளவு சொல்லிப் புரிய வச்சாலும் கடைசியில அவங்க அவங்க புரிதல்படிதான் வேலை செய்யறாங்க. 300 பக்க புத்தகத்தைக் குடுத்தா டபுள் ஸ்பேஸ்ல டைப் செஞ்சு 500 பக்கமா கணக்கு காட்டுவாங்க. காசு குடுத்து டைப் செஞ்ச பினனாடியும் அதை சரி செய்யற வேலையும் சேந்துக்குது.

Saturday, July 15, 2017

பெண் பார்ப்பது எப்படி?!

பெண் பார்ப்பது எப்படி?!

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள், நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்,

''அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்.

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

பெண்ணின் வலிமை!


[ வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப் பார்த்து பதறிப்போவாள்.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.

குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.]

அதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு?",

மரண பயம்:
இப்ப ஒரு காஃபி ஷாப்ல நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிட்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பர் மட்டும் தொடர்ந்து தத்துவம் பேசுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

நாம பணக்காரனாகவோ, இல்லை ஏழையாகவோ இருக்கலாம்:
சரி:

உயர்ரக உணவோ, இல்லை நடுத்தர உணவோ உண்ணலாம்:
சரி:

Friday, July 14, 2017

பருவம்

பருவம் :
கோடை தணிந்து 
தென்றல் தவழ்கிறது 
வெடித்து சிரித்த நீ
சட்டென்று
நாணமுற்றதைப்போல்


என் இருளில்
நட்சத்திரங்களை
விசிறிச்சென்றவள்
கொடும் பகலில்
நிழலை 
விரித்து வைத்தவள்
தேவதைகளின் 
வழிவந்தவள்

சிஷேரியன்

நம்பிவந்த
எங்களை பணத்திற்கு
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள்
பணத்தை உருவுகிறாய்!

Thursday, July 13, 2017

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Sunday, July 9, 2017

குற்றப்பத்திரிக்கை

சிறு வயதில், பள்ளியிலிருந்து திரும்பிய பொழுதில், வீட்டின் மாடத்தில் யாரோ வைத்திருந்த ஒரு ரூபாய் என் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு, கடைவீதியில் இருக்கும் லாலா மிட்டாய்க் கடைக்கு ஓடிச்சென்று காராபூந்தி வாங்கினேன்.
வாங்கியவன், அங்கேயே தின்றிருக்க வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு சாப்பிட்டது என் தவறுதான்.
"காராபூந்தி வாங்க காசு ஏதுடா?"- என் அக்கா
"நான் சேத்து வச்ச காசுல இருந்து வாங்கினேன்" -நான்.
உடனே, மாடத்திலிருந்த ஒரு ரூபாயைச் சென்று தேடினாள். சத்தியமாக, அந்த எருமையின் ஒரு ரூபாய் என்று தெரியாது.
"டேய், இங்க இருந்த ஒரு ரூபாயை எடுத்துட்டு போயிதான வாங்குன? உண்மையச்சொல்லு"

Saturday, July 8, 2017

வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது நேசம், நட்பு, உறவு இவைகளால் நிரப்பப்பட்டது. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனதில் வெறுமை தோன்றும். தனிமை நம்மை ஆட்கொள்ளும். இவ்வளவு பெரிய உலகத்தில் நாம் மட்டும் தனியாக தவிக்க விடப்பட்டதுபோல வாழ்வே வெறுப்பாக தோன்றும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதுபோல எண்ணத் தோன்றும்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதுபோல நினைக்கும் மனிதர்கள்கூட, உறவுகளை கவனிக்கத் தெரியாவிட்டால் அவர்களின் சாதனையே செல்லாக் காசாகிவிடும். உலகமே ஒருவரை போற்றினாலும், அவர் உறவுகளால் ஒதுக்கப்படும்போது இனம்புரியாத வெறுமையையே உணர்வார்.

Thursday, July 6, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... இறுதி பகுதி - 6
------------------------------------------------------------
Saif Saif
நபி(ஸல்) அவர்களுக்கு குரைஷிகளால் பல ஆபத்துகள் இருந்தது..சாதாரணமாக ஐந்து வேளை பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுபவராகத் தான் இருந்தார்கள்..எதிரிகள் எப்போதும் கூடவே இருந்தார்கள்..ஆட்சியதிகாரம் கைகளில் இருந்த பிறகும் எளிதில் பிறர் சந்திக்கும் நபராகத் தான் இருந்தார்கள்..இதையறிந்த இறைவனும்,
அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.(5:67)

வித்வான் அபூபக்கர்

Vavar F Habibullah
வித்வான் அபூபக்கர்    
சமீபத்தில் சென்னையில் எனது நண்பர் முன்னாள் ஏடிஜிபி சந்திர கிஷோர் IPS அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றியவர்.குமரி மாவட்ட சம்பவங்களை என்னிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்த போது திடீரென்று
உங்க ஊர் வாத்தியார்....அவர் பெயர் மிஸ்டர் அபுபக்கர் சார் எப்படி இருக்கிறார் என்று கேட் டார்.நான் அவர் மறைந்து விட்ட செய்தியை சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனார்.
அவர் சொன்னார்
அந்த நாட்களில் அபுபக்கர் தான் நாகர்கோவில் முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரட்சனைகளுக்காக என்னிடம் வருவார்.பொதுவாகவே குமரி மாவட்ட காவல் துறைக்கு ஒரு சிறந்த நண்பராக அவர் திகழ்ந்தார்.மிகவும் நல்ல மனிதர்.
சொன்னவர் காவல் துறையின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
வித்வான் அபுபக்கர்
மிகச் சிறந்த தமிழ் அறிஞர் நாஞ்சில் நாட்டில் அந்த நாட்களில் இவர் சொற்பொழிவாற்றாத தமிழ் மேடைகள் இல்லை.இந்துக் கல்லூரியின் தமிழ் மன்றங்களில் இவர் தமிழ் மணம் வீசும்.தமிழில் முதுநிலை பட்டம் தமிழில் வித்வான் பட்டம்.அந்த நாட்களில் பனாரஸ் பல்கலை கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த தமிழ் மாணவர்.
பண்டித சாஸ்தான் குட்டி பிள்ளை தமிழ் அறிஞர் வானமாமலை வித்வான் ஆறுமுகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர் குழாம் ஒன்று இவரை சுற்றி எப்போதும் இருக்கும்.அவர்களின் தமிழ் விவாதங்களில் புதிய தகவல்கள் புதைந்து கிடக்கும்.சேக்ஸ்பியர் கூட ஜெகப்பியர் என்ற தமிழர் தான் என இவர்கள் எழுப்பும் வாதம் கண்டு சில நேரங்களில் நான் மலைத்ததுண்டு.திருக்குறளை படித்து விடலாம் பரிமேலழகர் உரையை படிப்பது கடினம்.தமிழை விட சமஸ்கிருதம் முந்திய மொழி என்று வாதிடும் சக தமிழ் அறிஞர்களை வாதத்தில் கலந்து எதிர் கொள்ள இந்த தமிழர் குழு சவால் விடுக்கும்.

Wednesday, July 5, 2017

இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்

Download


Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download

1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download

பாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் !

 songs

ஹாங்காங் டாக்டர் வாஹித் (தேரிழந்தூர் ) அவர்களுடன் ..

Gajini Ayub

இந்த புகைப்படத்தின் இடதில் இருப்பது இளமைக்கால தோற்றத்தின்
Mohamed Ali Jinnah (   Mohamed Ali  )மாமா அவர்கள் ! ( வலதில் அவரது நண்பர் டாக்டர் வாஹித் ஹாங்காங்)
அறிவார்ந்த சமூகத்தில் முக நூலில் வயது வித்யாசமின்றி ஆயிரக்கணக்கணக்கான நண்பர்களை பெற்றவர்.
சென்னையில் நான் முக நூலில் பிரசித்தம்பெற்ற ரஹீம் கஸாலியை சந்தித்தபோதும் நீடூர் பதிவாளரும் முக நூல் முன்னோடியுமான இவர் எனக்கு தனிப்பட்ட மரியாதைக்குரியவர் என்றார்.
முக நூலில் பழகும் நண்பர்கள் நீடூர் வர நேரிடும்போது முதலில் சந்திக்க தேடுவதும் இவரைத்தான் என்பதும் மகிழ்வான செய்தி.

Tuesday, July 4, 2017

ரசனையும் ரசிப்பும்...!

ஒரு ஆற்றின் படித்துறை அங்கே ஒரு சிற்பி வருகிறார்! கூடவே ஒரு சலவை தொழிலாளியும் வருகிறார்! வந்த இருவரும் படித்துறையில் உள்ள ஒரு படியை நோக்குகின்றனர்! அது உண்மையில் சொல்லப்போனால் கல் அல்ல! அது ஒரு பெண் உருவ சிற்பம்.
அதன் தலைப்பகுதி சிறு சிதிலம் கண்டதால் அதை அப்புறப்படுத்தி கொண்டு வந்து படித்துறைக்கு கல்லாக்கி விட்டனர்! இப்போது அந்த சலவை தொழிலாளி அந்த சிற்பத்தை பார்த்து.. இந்த கற்சிலையை இங்கு கொண்டு ஏன் போட்டனர்! இது சமதளம் இல்லாது மேடும் பள்ளமும் கொண்டு இருப்பதால் துணி துவைக்க கூட முடியாமல் போய்விட்டதே என்று கூறி மிகவும் வருத்தப்பட்டவராக சொன்னார்.
இதைக்கேட்ட சிற்பி.. என்ன இப்படி கற்சிலை என்று வெறுமனே கூறிவிட்டீர்களே! கொஞ்சம் கூட இதன் அழகின் ரசனையை நீங்கள் உணரவில்லையா...? அந்த ரசனையை உணர்ந்து ரசிக்க உங்களுக்கு மனம் வரவில்லையா...?

இஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை - ‘(ஹுத்ஹுத்’ ) அறிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்

மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை. இறைமறை கூறுகிறது:-
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். (27:20)
‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்’ என்றும் கூறினார். (27:21)
'(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.’ தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். ‘ஸபா’ என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறியது.(27:22)
‘நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.’(27:23)
‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்.அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’(27:24)

வரும் மாற்றம் ....!


உப்பு நன் நீருள் வீழ்ந்தால் 
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குறுக்கிடில் அழிந்து போகும்
ஒளியது மறைந்து போக
உறைந்தும் இருளைப் போல
வளர்ந்த நல் உறவும் தேயும்

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 5

இறைத்தூதருக்கென்று சில சட்டத்திட்டங்களை இறைவன் வகுத்திருக்கிறான்.அது மற்றவர்களுக்கு ஒரு போதும் பொருந்தி வராது..
அதில் சில சிறப்புகளை பார்ப்போம்...
மேலும் திண்ணமாக நற்குணத்தின் உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்(68:4)
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக.இது நீர் செய்ய வேண்டிய அதிகப் படியான தொழுகையாகும்.. (இதன் பாக்கியத்தினால்), உம்முடைய இறைவன், ´மகாமம் மஹ்முதா´ என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பலாம்(17:79)

Monday, July 3, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 4

Saif Saif
அன்றைய நபி தோழர்களில் அபூபக்கர்(ரலி) அவர்களும் நான்கு திருமணம் செய்திருந்தார்கள்..
உமர்(ரலி) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்திருந்தார்கள்..
உஸ்மான்(ரலி) அவர்களும்
இரு திருமணங்கள் செய்திருந்தார்கள்..
அறியாமை கால மக்களை திருத்துவது சாதாரணமான விஷயமாக நபிக்கு இருக்கவில்லை..
நபி(ஸல்) எவ்வளவு சிரமங்களை சுமந்தார்கள்.வேதனைகளை பட்டார்கள்..சொல்ல தகுமல்ல..

கவியரங்கம் - கனடா 150

கவியரங்கம் - கனடா 150

கிழக்கே சில்லென்று அட்லாண்டிக்
மேற்கே சிலுசிலுப்பாய் பசிபிக்
இருபெருங் கடல்களுக்கு இடையில்
வடதுருவத்தின் மடியில்
அமெரிக்காவின் தலையில்
விண்வெள்ளி மகுடமாய்
ஜொலிஜொலிக்கும் வனப்பே

நுங்கும் நுரையும் பொங்கும்
நூற்றைம்பதே வருட இளமையே

Sunday, July 2, 2017

வாழ்த்தும் வரியும் ....!


வாழும் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்வை தெரிவித்துக் கொள்வதற்காக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். வாழ்த்தைக் வழங்குபவரும் பெறுபவரும் அன்பால் பிணைக்கப்படுகிறார்கள் , நட்பு உறுதியாகிறது, தொடர்கிறது. இருவருக்குமே இழப்பேதும் இல்லை ஆனால் ஆனந்தம் ஆட்கொள்ளுகிறது, சமத்துவம் நிலைபெறுகிறது.
ஆளும் அரசு நாடாளும் இயந்திரத்தை இயக்குவதற்காக அந்நாட்டில் வாழும் மக்களுக்கு வரிவிதிக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகள் சரமாரியாக விதிக்கப்படுவது வளரும் நாடுகளின் வருடாந்திர விளையாட்டு போலவே நிகழ்த்தப்படுகிறது.

ஈடுதான் ஆகுமா?'

Noor Mohamed

என்னை நீயும் சுமந்'தாய்'!
இன்னல் பலதும் அடைந்தாய்
வந்தேநானும் விழுந்தபோது
நொந்ததை நீயும் மறந்தாய்
சிந்தை மிகவே மகிழ்ந்தாய்
சிறுநகை நீயும் புரிந்தாய்
கூலிகள் எதவும் வேண்டாது
பாலினை எனக்கு வார்த்தாய்
நலம்பெற வேண்டும் நானென்று
நாளும் பொழுதும் தேய்ந்தாய்
உயிரில் நீயும் கலந்தாய்
உணர்வை எனக்குத் தந்தாய்

Saturday, July 1, 2017

இனிவரும் நாட்களில் ஆடிட்டர்கள் அக்கவுண்டன்ட்கள் காட்டில் மழைதான்!

#GST
எழுபதுகளின் துவக்கத்தில்
B Com M Com படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது!யாரைப் பார்த்தாலும் காமெர்ஸ் படிப்பில் சேருவதையே அதிகம் விரும்பினர்!வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட நிலையில் வங்கித்துறையில் பெரும் அளவிலான வேலைவாய ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பினால் எழுந்த ஆர்வமே அதற்குக்காரணம்!அது ஓரளவு உண்மையும்கூட!எனக்கு அப்போதைய சூழ்நிலையில் அருகிலுள்ள மார்தாண்டம் கிரித்தவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவே வாய்ப்பிருந்தது!

டாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch அவர்களுக்கு டாக்டர்கள் தின வாழ்த்துக்கள் !


என் தாய்க்கு தலைமகன் / Abu Haashima
என் அருமை அண்ணன்
டாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch
அவர்களுக்கு
டாக்டர்கள் தின வாழ்த்துக்கள் !
குழந்தைகள் நலத்தில் ஆர்வம் கொண்டு
#HabibChildrensHospital
தக்கலையில் ஆரம்பித்தவர்.
பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்த போது அசோக் நகரில் ஹாஸ்பிடல் வைத்து
மருத்துவ பணி செய்தார்.
பிறகு சவுதி மக்காவிலும் பல வருடங்கள்
பணிபுரிந்தார்.
இப்போது குமரி மாவட்டம்
வெள்ளமடத்தில் உள்ள
ஜெர்மனி நாட்டவர்கள் நடத்தும்
#அகஸ்தியமுனிகுழந்தைகள்மருத்துவனை யில் பணியாற்றுகிறார்.
இரு தினங்களுக்கு முன்னால்
#திட்டுவிளையிலும்  அதன் பிளை திறக்கப்பட்டு
#டாக்டர்_ஹபிபுல்லாஹ் அங்கேயும்
சிகிட்சையளிக்கிறார்.

LinkWithin

Related Posts with Thumbnails