தெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது
சரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மை கடமையாக உள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக் கூடாது. எனினும், உண்மையில் சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்.
இதுதான் பெண்ணின் பெருமை.
"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம் மூன்று பேரித்தம் பழங்கள் கொடுத்தேன். அத்தாய் தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம் கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று எடுத்து சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய் தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள்.
No comments:
Post a Comment