Monday, April 30, 2012

நாம் அனைவரும் சமமாக இல்லை!


  பணம் பணம் பண்ணுகின்றது. முதலில் பணத்தை சேர்த்துக் கொள் பின் அனைத்தும் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். பணம் பத்தும்  செய்யும். பழம் உள்ள மரத்தினை நாடி பறவைகளும் பறந்து வருவது போல் பாசமும், அன்பும் மற்ற அனைத்தும்  பணம்  வரும்போது உன்னுடன் ஓடி வரும்.
பணம் வந்தது நேர்மையான உழைப்பினால் மட்டும் வந்தது என்பது உண்மையாக இருக்க முடியாது. பணம் வர தவறான பல வகைகளும்  கையாளப்படுகின்றன. பணத்தினால் நல்ல செயல்களும் மற்றும் பாவமான செயல்களும் செய்யப்படுகின்றன. பணம் வந்த வழியினை கேட்டால் உண்மையை யாரும் சொல்லமாட்டார்கள். அது தனது திறமையால் வந்தது என பெருமை பேசுவார்கள். பணம் பேசுவதால் அதனை 'ஆமாம்' போட்டு ஒத்துக் கொள்வார்கள்.
தவறான வகையில் ஈட்டிய பணத்தினை தர்மம் செய்வதாலும் மக்களிடையே புகழை அடைய விரும்புகின்றார்கள் மற்றும் யாருக்கும் தெரியாமல் வணக்கதளத்திலுள்ள உண்டியில் போட்டு இறைவனது அருளை நாடுகின்றார்கள்.(இறைவன் ஒன்றும் அறியாதவன் என்ற நினைப்புடன்) வாழ்கையில் வெற்றி பணத்தினால் மட்டும்தான் கிடைக்கும்
என்ற குறிக்கோளுடன் தேடும் வழி தவறானது  என்பதனைப் பற்றி சிந்திப்பதில்லை.பணம் வந்த வழி எப்படி இருந்தால் என்ன அது கிடைத்த பின் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் குறிக்கோள்.
பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமையுடையது பணம்தான். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

 அனைவரும் சமமாக இல்லை. ஒருவனுக்கு இருக்க இடமில்லை மற்றவன் மாளிகையில் வாழ்கின்றான்.   ஒருவன் பசியுடன் இருக்கும் பொழுது மற்றவர் இனிப்பு உண்பதனை தடுக்கப்படும்  காலம் வருவதனை இந்த பணப் பேராசைக்காரர்கள் தடுக்க முடியாது. பணம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.அது நேர்மையான வழியில் ஈட்டப்படவேண்டும் அது சட்டங்களால் மட்டும் வந்து விடாது. மார்க்க வழி கடைப்பிடிப்பதால் அல்லது மனதின் மாற்றங்களால் வரலாம். இல்லையென்றால் மறுமலர்ச்சி போய் புரட்சி வழி வகுத்துவிடும்   


வெற்றி பெற்றவர்கள்
 நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104

ஆயிஷா

கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.  இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
Read more: http://alaiyallasunami.blogspot.com/#ixzz1tVS2ch4Z

 ஆயிஷா கதையினை தமிழில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இரா.நடராசன் எழுதிய ஆயிஷா கதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே உணர்வு படம் பார்க்கும்போதும் ஏற்படும் விதத்தில் அருமையாக குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.அனைவரின் பாராட்டினையும் பெற்ற ஆயிஷா குறும்படத்தினைத் தயவுசெய்து பொறுமையாகப் பாருங்கள்.

Saturday, April 28, 2012

இரவும் பகலும் இனிமையாக இருக்க "சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன"

 இனிய இரவு முதல் இரவு கணவனும் மனைவியும் இணைந்த இரவு.

 கொடிய இரவு தம்பதிகள் பிரிந்திருக்கும் இரவு.. 

 இவைகள் மனோநிலைகளால் மாறுபடுகின்றன இரவின் நிலா ஒளியினால் மாறும் காட்சியைப்போல், இரவும் பகலும் வருவது ஒளிக்கீற்றின் மாற்றத்தினால். சூரியனும் நட்சத்திரத்தில் ஒன்றுதான் சூரியன் அதன் ஒளி அதிகமாக கிடைக்க  பகலாக, வெளிச்சமாக  உள்ளது நெருங்கி இருப்போரின் நட்பைப் போல், அதைவிட அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரத்தின் ஒளி குறைவாக கிடைப்பதைப் போல் தூரச் சென்றவர்களின் அன்பும் ,பாசமும் நட்பும் நன்மை தூரமாக்கிவிடுகின்றது, பார்வையை விட்டு அகன்றோர் இனிய இதய பாசத்திலிருந்து காலப்போக்கில் காணாமல் போய்விடுவதனை உணரலாம்  இரவு பகலைப் போல்  ஒரு தொடர்ச்சி எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரே பகலாக இருந்தாலும் கொடுமை தொடந்த இரவாக இருந்தாலும் அது வேதனை. நம் நன்மைக்காகவே இரவும் பகலும் மாறி மாறி வந்து மகிழ்வைத் தருகின்றது.

 சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன – திருகுர்ஆன் 55:05

சூரியனை ஒளி அளிப்பதாகவும் நிலவை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் அவனே ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு பல படித்தரங்களை உண்டாக்கினான். தக்க காரணங்கள் இன்றி ஏக இறைவன் இவற்றைப் படைக்கவில்லை. அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். திருகுர்ஆன் 10:05

Friday, April 27, 2012

எங்கு அழைத்தாலும் வருவார்கள்..!

 எங்கு அழைத்தாலும் வருவார்கள் ஆனால் என்னோடு வா சுவனம் புகலாம் இந்த மாயையான வாழ்கையை விட்டு நிலையான வாழ்வைத் தேடி சுவனம் போகலாம் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள் . வரமுடியாமைக்கு ஒரு காரணம் சொல்லி தப்பிக்கவும் செய்வார்கள்.தம்பி "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" விட்டு விடு என்னை.வீண் கற்பனையை .செய்யாதே என்பார்கள்.  பார்த்து வந்து பார்த்துத காட்சிகளையும் அனுபவித்த மகிழ்வையும் நேரில் வந்து சொல் அப்பொழுது  அதனைப் பற்றி யோசிக்கின்றேன்  என்பார்கள்.

 "தாயின் மடியில் சுவனம் உள்ளது" என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை. மாறாக  தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை  சுவனம் செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்குமோ! இதில் தாயின் கடமையும் உள்ளடக்கம் .    தாய் வர மறுப்பது,மகன் மீது எல்லை இல்லா அன்பு கொண்டாலும் அவன் மாண்டால் தானும் அவனோடு சேர்ந்து உயிர் விட மறுப்பது தனக்கு உயிர் மேல் உள்ள ஆசையல்ல மாறாக நீண்ட காலம் வாழ்ந்து இறைவனைத்   தொழுது அவனது இறையருள் அதிகமாகப் பெற வேண்டும் என்ற வேட்கையாகவே இருக்க முடியும். நாம் டார்வின் கண்டுபிடிப்புபோல் குரங்கிலிருந்து வரவில்லையே .நம்மை இறைவன்  இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.
 
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து (மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்)
 
 குரங்கு தன் குட்டி கிணற்றில் விழுந்து விட்டால் அதனை காப்பாற்ற தானும் பாயும் நீர் அதன் காலளவு இருந்தால் குட்டியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும், நீர் ஊற மார்பளவு வந்தால் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும் அதற்கு மேல் நீர் ஊருமானால் குட்டியை  தூக்கிப்  போட்டு விட்டு தான் பாய்ந்து தப்பித்துக் கொள்ளும். நம் தாய் அந்நிலை வந்தால் தான் இறந்தாலும் தன் குழந்தையை காப்பாற்றிவிடுவாள்  . இதுதான் தாய்பாசம்.     

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, with hardship [will be] ease.

Surat Ash-Sharĥ (The Relief) - سورة الشرح
 

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (குர்ஆன் 94-1)
Did We not expand for you, [O Muhammad], your breast?

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்
(குர்ஆன் -94-2).
And We removed from you your burden
 

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. (குர்ஆன் 94-3)
Which had weighed upon your back

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
(குர்ஆன் 94-4)
And raised high for you your repute.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.(
குர்ஆன் 94-5)
For indeed, with hardship [will be] ease.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(குர்ஆன் 94-6)
Indeed, with hardship [will be] ease.

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், (
குர்ஆன் 94-7) வணக்கத்திலும்) முயல்வீராக.
So when you have finished [your duties], then stand up [for worship].

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

( குர்ஆன் 94-8)
And to your Lord direct [your] longing.
Source : http://quran.com/94

அமெரிக்காவில் முஸ்லிம்- அமெரிக்கன் முஸ்லிம் அமெரிக்காவில் இஸ்லாம்


  அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்

 

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 
இதற்கான பதில் -
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   
காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி: 

அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Source : http://onlyoneummah.blogspot.in/2011/09/blog-post_10.html

Thursday, April 26, 2012

ஆடை வாழ்வின் ஒரு பகுதி

                                              அரபிய மணப்பெண்ணின் ஆடை
 ஆடை வாழ்வின் ஒரு பகுதி. தன்னைத்தானே சுத்தமான அழகிய ஆடைகளால் அழகு படுத்திக் கொள்வது மனித இயல்பு அதிலும் பெண்களுக்கு இதில் தனி ஆர்வம் உண்டு. ஆண்கள் உடைக்காக  செலவு செய்யும் பணம் குறைவுதான். பெண்கள் உடுத்தும் ஆடை விலை உயர்வாகவே இருந்தாலும்  அவர்களுக்கு அதிகப்படியான உடையும் தேவைப்படுகின்றது.

ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது.

 "தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை ஆடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, 'இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் பிரிந்தது'' என்றார்கள். (நூல்: புகாரி)

 சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!”


 'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7:26)

கருப்பு ஆடை இஸ்லாமியர் ஆடையா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen ஆடை நனையும் போது ஒரு சிலருக்கு ஏற்படும் மகிழ்வு.யாருக்கு? பாருங்கள்


 ருமேனியாவில் உலகின் மிக நீளமான திருமண ஆடையை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.

முன்னைய 2 488 மீட்டர் நீளம் கொண்ட ஆடையின் சாதனையை முறியடித்து 2 750 மீட்டர் நீளம் கொண்ட ஆடையாக தைத்து சாதனை படைத்துள்ளனர்.

 ருமேனியா Bucharest எனும் இடத்தில் இவ் ஆடையை அணிந்த மாடல் அழகி வெப்ப காற்று பலூனில் பறக்கவிடப்பட்டார். மொத்தம் 100 நாட்களில் 1,857 ஊசிகள் பயன்படுத்தப்பட்டு தைத்து முடித்திருக்கிறது Andree Salon எனும் நிறுவனம்.
Source

உலகின் மிக நீளமான திருமண ஆடை - கின்னஸ் சாதனை - படங்கள்

 

தனது திருமணத்தில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்று விரும்பிய Li Kuo(வயது 25) என்ற பெண், திருமணத்தின் போது மிக நீளமான ஆடையை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இவரது கணவர் Xie Tao(வயது 27) கலை அருங்காட்சியகத்தில் பணிபுரிகிறார். இந்த ஆடை 520 மீற்றர் நீளமும், 50 கிலோ கிராம் எடையும் கொண்டது. இதனை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆனது. மேலும் இதன் விலை 5000 பவுண்ட்டுகள் ஆகும். இதுகுறித்து Li Kuo கூறுகையில், எனது திருமணத்தில் ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும் என்று கருதினேன், அதன்படி நிகழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
 Source

ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க  வீடியோ காட்சி.

 

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?
தம்புள்ளையில் நடந்தது என்ன?

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

“ரங்கிரி விகாரையை மையமாகக் கொண்ட தம்புள்ளைப் புனித பூமியில் ‘சட்டவிரோதமாக’ நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயில் மற்றும் ஹிந்துக் கோவில் என்பவற்றை இடித்துத் தகர்த்து, புனித பூமியைத் தூய்மைப்படுத்துவோம், சிங்கள பௌத்தத்தைக் காக்க அணி திரள்வோம், அந்நிய சக்திகளை வெளியேற்றுவோம்” எனும் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி பேரணியாளர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்தப் பேரணி இடம்பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் பள்ளிவாயிலை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்று எறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவரமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ரத்து செய்யப்பட்டது. தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பேரணியாளர்கள் முஸ்லிம் பள்ளிவாயிலை இடித்துத் தகர்க்கும் நாசகாரப் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினரும் விசேட பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு, தம்புள்ளை கைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை மூடி “சீல்” வைத்தனர்.

வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த இனவாத பௌத்தர்கள் முன்னிலையில், ஒரு முன்னணி பௌத்தப் பிக்கு, “இதற்குப் பின் இந்தப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில், பௌத்தப் புனிதப் பிரதேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் எந்த ஓர் இடத்திலும் வேறு எந்த ஒரு சமய வழிபாட்டுத்தலமும் இருக்கக்கூடாது. இந்த நாட்டின் சட்டமோ நாட்டின் அதிபரோ உடன்படாவிட்டாலும், நாம் இந்தச் சட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவோம்!” என்று துவேஷம் பொங்கும் குரலில் பிரகடனப்படுத்தியபோது, “சாது! சாது!” என்று கூட்டத்தினர் கத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சிப் பிரவாகத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, இங்குள்ள காளி கோவிலுக்கு மேற்படிக் குழுவினரால் சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து இந்தப் பேரணியைத் தலைமை தாங்கி நடாத்திய தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமைப் பிக்குவிடம் இப்பிரதேசவாசியான ஹிந்துப் பெண்மணி முறையிட்டபோது, “கூடிய விரைவில் இங்குள்ள ஹிந்துக் கோவில் முற்றாக உடைக்கப்படும். அதன் பின், நீங்கள் அனைவரும் இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும்” என்று அவர் அப்பெண்மணியை  அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் 
சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

Source : http://www.inneram.com/

dambulla masjid attacked by buddhist ( BBC TAMIL )

"உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்" - அறிஞர் அண்ணா

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா


தமிழகத்தில் இஸ்லாம்
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை!

இந்திய விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் வளர்ச்சியின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் பற்றும் பரிவும் கொண்ட நேர்மையான தலைவர்கள் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று மக்களுக்காகவே அற்புதமான திட்டங்களைத் தீட்டினார்கள். அதை செயல்படுத்துவதில் உண்மையான முனைப்புக் காட்டினார்கள். அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி வேகம் மிதமாக இருந்தாலும் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டார்கள். ஏனெனில் இந்திய விடுதலை என்பதே வெள்ளையரின் சுரண்டலிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்கும் இலட்சியத்திலிருந்துதான் பிறந்தது.
இந்தியாவின் இந்த நிலையான வளர்ச்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் நீடித்த வாழ்வும் நிலையான வளர்ச்சியும் நமது சுரண்டலுக்கு என்றைக்குமே ஆபத்து என்று உணர்ந்து இந்தியாவின் முக்கியமான துறைகளில் தங்களுக்கு சாதகமான ஆட்களை அமர்த்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான முன்முயற்சியைச் செய்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
 

Wednesday, April 25, 2012

உண்மையும் பொய்யும் கலந்த கலவை!


கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம்.  "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த
பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது. 
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு

நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்..


நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (
குர்ஆன் 6:159)


(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.
(
குர்ஆன்   21:93)


ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
(
குர்ஆன்    23 : 53)


இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
(
குர்ஆன் 3:103)


இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(
குர்ஆன் 8:46)


உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
(
குர்ஆன் 3:154)


(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
(
குர்ஆன் 4:113)

Source : http://quran.com/


 உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.

பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.

Tuesday, April 24, 2012

நாகூரின் மண்ணின் மைந்தன் அப்துல் கையும்

 உன் எழுத்தில் அழகும் உண்டு. “வெள்ளியிலே தகடு செய்து ஏய்ப்போர்” என்று கூறும் தைரியமும் உண்டு.
நாகூர் மண்ணை சுவைத்து பின் அசைபோட்டு ரசிக்கும் நீதான் நாகூரின் மண்ணின் மைந்தன். நீ மலராகி மணம் வீசும் போது மற்றவர்கள் ரசிக்கிறார்கள். நீ கிரெசன்ட் பள்ளியில் மொட்டாக இருக்கும்போதே  நான் ரசித்தேன். நீ முளையிலேயே தெரியும் விளையும் பயிர்.
உன்னை கவிஞர்கள், நண்பர்கள்,  நீ அடையாளம் காட்டிய அனைவரும் பாராட்டுகிறார்கள்  ஆனால் உன் ஒவ்வோர் அசைவிலும் ஆனந்தம் கண்ட உன் பாட்டி – என் தாயார் – உன்னைப் பார்த்து மகிழ, பாராட்ட இல்லாதது உன் துரதிஷ்டமே …! 
என்ன..  உன் கண்ணீர் கன்னத்தில் உருண்டோடி வாய்க்குள் விழுந்து இனிக்கிறதா ..? அது பாசத்தின் கண்ணீர். இனிக்கத்தான் செய்யும். எனக்கும் அது இனிக்கிறது..
டாக்டர் அ.அப்துல் ரஜாக்

நாகூரில் பிறந்த கவிஞர் அப்துல் கையூம் ‘அந்த நாள் ஞாபகம்’ எனும் பெயரில் தன் இளமைக் கால நினைவுகளை கைச்செண்டு கவிதைகளாய்க் கொண்டு வந்துள்ள பாங்கு போற்றுதற்குரியது. ஊர்க்கதைகளை நதி போலவோ, சிற்றாறு போலவோ சொல்லாமல் ஊற்றுச் சுரப்பாக கவிஞர் சொல்லியிருப்பதில் எளிமையும் இனிமையும் பீரிடுகிறது.

வீட்டை கட்டிப் பார் கல்யாணம் செய்துப் பார்!

                 வீட்டை கட்டிப் பார்  கல்யாணம் செய்துப் பார்!
  மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
   
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

  இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள்  உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு.   இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.
வீடு கட்டவில்லையென்றால் வாடகை வீட்டிற்கு குடிபோய் விடும் நாட்டம் வரும். வீடு கட்டி முறையாக மற்றவர்கள் தவறாக பேசாதபடி  விரைவில் குடிபோய் விடலாம் என்ற உண்மையையோ அல்லது பொய்யையோ மனைவியை சமாதானம் செய்து சமாளிப்பவர்கள் ஏராளம்.
  சிங்கப்பூர் வாழும் சீனர்கள் படிக்க வைப்பதோடு சரி பின்பு அவரே வேலை தேடிக் கொள்ளவேண்டும். திருமணம்  ஆன   பின்பு தனிக் குடித்தனம் சென்று விடுவார்கள். வாரம் ஒரு முறை ஒன்று  கூடி ஓரிடத்தில் இருந்து மகிழ்வார்கள். அதனால் அவர்கள் அன்பு தொடர வாய்புகள் அதிகமாக உள்ளது.நாமும் அந்த முறையைக் கையாலாம்.

முஸ்லீம் ஃபேஷன்: 'யார் இந்த உடைகளை அணிய முடியாது'

முஸ்லீம் ஃபேஷன்: 'யார் இந்த உடைகளை அணிய முடியாது'
இஸ்லாமிய உடைகளான  'துப்பட்டி' 'புர்கா' , , ‘ஹிஜாப்’,'அபயாஸ்' ,  'ஜிப்பாஸ்',  அணிவதில் என்ன அனுகூலக் குறைவு?

ஏன் முஸ்லீம் பெண்கள்  தலை தாவணி அணிந்து கொண்டிருக்கிறார்கள் ?
‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும்.
 இஸ்லாமிய சரியத் படி,‘ஹிஜாப்’ அவர்களின் கண்ணியத்தை மற்றும் தன்மானத்தினை பாதுகாக்கும் மற்றும் அவர்களுக்கு மரியாதையும் மற்றவர்கள் மத்தியில் தருகின்றது  இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு ஆடை குறியீடு உள்ளது. எவரும் பாலியல் கவனத்தை ஈர்ப்பது போன்ற உடலின் வடிவம் கொடுக்கும் துணிகள் அணிய கூடாது. எனவே ஆடை உடல் நெருக்கமாக ஒட்டி இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் சிகை அலங்காரம் ஒரு முக்கிய பகுதியாகும் ஆனால் அது கவர்ச்சியை சேர்க்கக் கூடும்.

  உறவினர் ஆண்கள் முன்னிலையில் பொருந்தக்கூடியவை. குடும்ப வட்டத்தில் உள்ள அவரது இரத்தத்  தொடர்புடைய உறவினர்கள் முன்னிலையில்  ஒரு பெண் தன் தலையை மூடி இல்லாமல் தோன்றுவது தவறில்லை.

மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)

 முஸ்லீம் பெண்கள் அவர்கள் ஒரு பெண் வடிவம் (பொதுவாக பருவமடைந்த துவங்கின போது) உருவாக்க ஆரம்பிக்கும் போது மேலே இஸ்லாமிய ஆடை குறியீடு கடைபிடிக்கின்றன தொடங்கும்.

 நிகாப்  பற்றி என்ன?

முஸ்லீம் பெண்கள் ஆடை இரண்டு நிலைகள் உள்ளன; முதல் முகம் மற்றும் கைகளை தவிர, அனைத்து உடலை மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது இது ஹிஜாப் ஆகும்.

‘ஹிஜாப்’ என்றால் மறைத்தல், தடுத்தல் என்று பொருள்படும்.

இரண்டாம் நிலை கைகள் இல்லாமல் முகம் மற்றும் அனைத்து உடலையும்  மூடிக்கொள்ளும் முறையைக் குறிக்கிறது. முகத்தை மறைப்பது இஸ்லாமிய மார்க்க கடமையல்ல

 தலை தாவணியை அணிவது முஸ்லிம் சமுதாயத்தில் மட்டும் நடைபடுத்தப் படும் ஒரு செயலாக சிலர் கருதுகின்றனர். மாற்றாக பல சமுதாய மக்களாலும் நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கமே ஆகும்

 தலை தாவணி அணிந்த வெற்றிகரமான முஸ்லீம் பெண்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறந்த உதாரணங்கள்  உள்ளன.

தலை தாவணியை அணிவது  இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டின்  தயாரிப்பு ஆகுமா ?

நிச்சயமாக இல்லை.  மூன்று படங்களை பாருங்கள்முதலில்  கன்னி மேரி , இரண்டாவது  திரேச அம்மையார்  ,மூன்றாவது முஸ்லீம் பெண். அவர்கள் மூன்று பேருக்கும் இடையே பொதுவான விஷயம் உள்ளதனைப் பார்க்கலாம்.

  இது சுய மரியாதை, கௌரவம் மற்றும் பெண்களுக்கு மரியாதை தந்து மற்றும்  அவர்களை   மேம்படுத்துவதன் மூலம்  பாலியல் அற்ற  முன்னேற்றங்கள் காண வழிவகுக்கும் , இஸ்லாமிய நிலை  ஒரு தற்காப்பு நடவடிக்கை அடையாளமாக உள்ளது.சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் இது சரியான பாதுகாப்பு என்பதை அறியலாம்.

Monday, April 23, 2012

விரிவடையும் பிரபஞ்சம் + யுனிவர்ஸ் 2 அளவு பாருங்கள்!

      وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)

நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

    நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.

    எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு  குழுவாக  வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய  குழுக்கள் பலவற்றை  உள்ளடக்கி  இருக்கும் இந்த விண்மீன்  குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.

    “………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.”
    “உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.

Sunday, April 22, 2012

அழகிய வீடு ஆனந்தத்தின் திறவுகோல்!

   அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், "நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்".
 எங்கள் தந்தை வீடு  கட்டும்பொழுதே தொழுகை அறை  ஒன்று வைத்து கட்டினார்கள்.
 இதுவும் மிகவும் அவசியம் என்பது என் கருத்து.  
உங்களது இல்லங்களை கபர்களாக, மண்ணறைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்டதன் பொருள் வீட்டிலும் தொழுக வேண்டும் என்பதுதான். ஃபர்ளு அல்லாத, ஃபர்ளுக்கு முன் தொழக்கூடிய சுன்னத்துல் வக்ரா" 12 ரக் அத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலேயே தொழுதார்கள்.
 நாம் ஒரு வீட்டிற்குச் சென்றால் அழகுடன் அமைக்கப்பட்ட கூடம் ,படுக்கை அறை.அடுப்பங்கறை  குளியலறை மற்றும் கழிவறைகளை அழகுபடுத்திருப்பதனைக் காட்டி மகிழ்வார்கள் ஆனால் அந்த வீட்டில் ஒரு தொழுகை அறை இல்லாமல் செய்து விட்டார்களே என்ற  வருத்தம் வந்தாலும் அதனை சொல்லி அவர்கள் மகிழ்வைக் குறைக்காமல் வருவதுண்டு. தொழுகை அறையில் அவர்கள் தொழுவதற்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையலாமல்லவா! மற்ற விருந்தினர்கள் வந்தாலும் அதனைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் அது ஒரு  ஒளிவிளக்காக  ('நிப்ராசாக; 'லாந்தராக') ஜோளிக்கும்,அதன் நிமித்தமாக நன்மைகளும் அனுகூலங்களும்  (பரக்கத்தும்) கூடும்.வீட்டின் அழகு மனதினைச் சார்ந்தது. குடும்ப மகிழ்வு இறை அருளின் பாக்கியம். அந்த இறைவனைத் தொழ அவசியம் ஓர் அறை அவசியம் தேவை.
எங்கு சென்றாலும் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து உண்டு உறங்கினால்தான் நிம்மதி என்பதனை அனைவரும் அறிவர் அப்படியான நிலையில் வீடு கட்டும் போது சிலவற்றினை நம் மனதில் முன்னிறுத்தி வீடு கட்ட ஆரம்பிப்பது நல்லது.  அழகிய வீடு கட்டுவோர் தமது தேவையை முன்னிறுத்தித்தான் வீடு கட்டவேண்டும்.

பிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுலா வழிகாட்டி

 பிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுலா வழிகாட்டி


  பிரயாணங்கள் மேற்கொள்வது பல காரணங்களால் இருக்கக் கூடும். பிரயாணங்களில் விமானப் பிரயாணமும் அடங்கும். விமானப் பிரயாணம் மேற்கொள்ளும்பொழுது சில அடிப்படையான விஷயங்களை நாம் அறிந்துக் கொள்வது நமது பயணத்தினை எளிதாக்க வழிவகுக்க இந்த விளக்கப்படம் உதவியாக இருக்கும்.  நாம் பயணம் செய்யும் போது 
எடுத்துச் செல்லும் 'கேரி-பேக்கில்' எந்த பொருள்களை எடுத்து செல்லலாம் எதனை கொண்டு செல்லக் கூடாது என்பனவற்றை நாம் தெரிந்துக் கொண்டால்  விமான நிலைய பாதுகாப்பு வளையத்தில் ஒரு தொந்தரவும் இருக்காது.


நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.


“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.


பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக அத்துத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக அத்தில் குல் யா அய்யு அல் காபிரூன்  இரண்டாவது ரக அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்  ஓதுவது சுன்னத்தாகும்.

 தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷி யையும் லி ஈலாபி குரைஷி யையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத் தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.

நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.

அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு

 வீட்டில் இருந்து வெளியேறும் போது

பிஸ்மில்லாஹி  தவகல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி

ஆதாரம்: திர்மிதி

வாகனத்தில் செல்லும் போது

ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்

அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூ தாவுத்

வினோதமான வைத்தியங்கள!

வேடிக்கையான உலகத்தில் வைத்திய வேடிக்கையும் அதிகம். படங்களைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆய்வில் இறங்கிவிட வேண்டாம்.
  இந்தோனேஷியாவில் சிலரது நம்பிக்கை. ரயில்வே தண்டவாளங்களில் தலையை வைத்து படுத்திருக்கும்போது அது அவர்களின் உடல்கள் வழியே ரெயின் வருகின்ற அதிர்வின் காரணத்தினால்  குறைந்த மின்னழுத்த மின்சாரம் ஏற்பட  பல்வேறு வகையான நோய்களையும் அவர்களை குணப்படுத்தும் என்ற  நம்பிக்கை. மீன் சிகிச்சை
மீன் சிகிச்சையின் மூலம் ஆஸ்துமா நோய் குணப்படுத்த முடியும் என நம்புகின்றார்கள். இது ஹைதெராபாத்தில் நடை பெறுவதாகச
சொல்கின்றார்கள் மோக்சிபஸ்டியன் மருத்துவம் 
மோக்சிபஸ்டியன் குத்தூசி மருத்துவம் நிபுணர் பயன்படுத்தப்படும் ஒரு மென்மையான மற்றும் சுவாரசியமான நுட்பமாகும்.மோக்சிபஸ்டியன், பொதுவாக வியட்நாம், கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, மற்றும் திபெத் போன்ற ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ நுட்பமாகும். இது பொதுவாக இந்த சிகிச்சை நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது. மோக்சா என்று "mugwort" மூலிகை, இதற்கு தேவைப்படுகிறது. மோக்சிபஸ்டியன் சிகிச்சை ஒரு குச்சியால் ஒரு மூலிகை வைத்து தொடர்ந்து நோயாளியின் தோலில் நேரடியாக செலுத்தப்படுகின்றது சிரிப்பதினால் நோய் விட்டுப்போகும் வைத்தியம். பல நபர்கள் ஒன்று கூடி விடாமல் அதிக சப்தமிட்டு சிரிப்பதினால் நோய் விட்டுப்போகும் முறையை கையாள்வது

Saturday, April 21, 2012

உங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்!

 இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் இதில் தொடர்வது போலியாகிவிடும்.  ஆனால் இறைவன்  தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன்  அவசியம் என்று  நம்பினால்,  இறைவன்  உள்ளதையும்  நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது   மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில்  இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.

இறைவன் மீது  முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.

 “…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)
 

நிலையற்ற பொருள்களின் மீது பற்று வைக்கக் கூடாது. நீக்கமற நிறைந்துள்ள இறைவன்   மீதுதான் பற்று வைக்க வேண்டும்.
 

 “எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்”  (65:3)


“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)

 

அனைத்து மார்க்கமும் நல் வழிக்கே  ஊக்கமும் ஆக்கமும் தருகின்றது.அவைகள் நேர்மை, உண்மை, பெருந்தன்மை ஆகிய   நடத்தையின் ஒரு அம்சமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு பொருளை எடுத்துக்கொண்டு  அது எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் ஈடுபடும் பொழுது அதன் ஆரம்பம் இறைவனால் அருளப்பட்டது என்பதனை அறியவரலாம்.

உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து  வந்தது .அரிசி நெல்லிருந்து  வந்தது  ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.

Friday, April 20, 2012

மூன்று விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்!


 நாம் மனதில் உள்ளதனை மற்றவர்களிடம் சொல்லி மன ஆறுதல் பெற முனைவதுண்டு. அதற்கு நாம் தேர்ந்தேடுப்பவர்கள் மீது கவனம் வேண்டும். 
 பேசுவதை கேட்பவர்கள் பலவிதம். 

அதில் மூன்று  விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
1- இவரிடம் யார் கேட்டது நம்மிடம் ஏன் இதனைச் சொல்கின்றார் என்பவர்.
2 - நல்ல செய்தி கிடைத்து விட்டது மற்றவர்களிடம் பரப்ப  என நினைப்பவர்.
3- இவருக்கு இந்த சிரமமும் வேண்டும் இதைவிட அதிகமாகவும் வேண்டும்  என்று விரும்புவர்.


'மனம் திறந்து பேசுங்கள் - ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள் ... சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்' உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 

"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42

Thursday, April 19, 2012

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,...

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
Surat Al-Jumu`ah (The Congregation, Friday) - سورة الجمعة
 Surat Al-Jumu`a
 

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.86:13

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: -
"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்."

 
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்

 62:10 பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
 
62:11 இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

மோடிக்கு டா-டா சொன்னது டைம் 100....

 
டைம் இதழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தன் இறுதி (உலகில் 100 அதிக  செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில்) பட்டியலில் இடம் கொடுக்காமல் டா-டா சொல்லிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். சர்ச்சைக்குரியவர்களுக்கு ஒரு பகுதி வைத்து அதில் சிரிய அதிபர் பஷர் அசாத் மற்றும் தாலிபான் தலைவர் முல்லா உமர் போன்றவர்களுக்கு இடம் கொடுத்த டைம், அதில் கூட மோடிக்கு இடம் கொடுக்காமல் கைவிரித்து விட்டது. என்னாமா விளம்பரம் பண்ணுனாங்க எல்லாமே போச்சு. அது சரி, மோடியை சேர்க்கலாமா என்று டைம் கேட்டதுக்கே குதியாய் குதித்த ஊடகங்கள் மோடியை "போயிட்டு வாங்க" என்று டைம் சொன்னதை இன்னும் (பலரும்) சொல்லவே ஆரம்பிக்க வில்லையே ஏன்? 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். 

டைம் இறுதி பட்டியலை பார்க்க http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2111975,00.html
இதுகுறித்த செய்தியை பார்க்க http://twocircles.net/2012apr18/modi_voted_out_times_poll.htmlhttp://news.outlookindia.com/items.aspx?artid=760097

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Wednesday, April 18, 2012

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

   ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி) - குர்ஆன்
குர்ஆன் - மக்கீ, வசனங்கள்: 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
96:1    اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2   خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3   اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4   الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5   عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6   كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7   أَن رَّآهُ اسْتَغْنَىٰ
96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8   إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9   أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10   عَبْدًا إِذَا صَلَّىٰ
96:10. ஓர் அடியாரை – அவர் தொழும்போது,
96:11   أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ
96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12   أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13   أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
96:14   أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15   كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16   نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17   فَلْيَدْعُ نَادِيَهُ
96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18   سَنَدْعُ الزَّبَانِيَةَ
96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19   كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
96:19. (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

Source : http://www.tamililquran.com/qurandisp.php?start=96

ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !

by: வழக்கறிஞர் சயீத் B.A.B.L
என் இனிய சகோதரர்கள் இணையதளம் ஆரம்பிப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும்.  மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நன்றி http://niduronline.com/

Tuesday, April 17, 2012

அமீரகத் தமிழ் மன்றம் நடத்தும் அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான கட்டுரைப் போட்டி

                       அமீரகத் தமிழ் மன்றம்

                                                            நடத்தும்

                                 அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான

                                        கட்டுரைப் போட்டி

தலைப்பு

‘பெண்ணியம் எனது பார்வையில்’
 
 • ·         மொழி: தமிழ்
 • ·         கட்டுரை அளவு: A4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 • ·         15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம்
 • ·         கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
 • ·         கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20 ஏப்ரல் 2012 இரவு 12 மணிக்குள்
 • ·         வீட்டிலேயே எழுதி சமர்ப்பிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் atmuae@gmail.com அல்லது 04 3908737 (Attn: Jazeela) என்ற தொலைநகலில் (ஃபாக்ஸ்) அனுப்பவும்.
 • ·         கட்டுரையாளர் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி/ கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
 • ·         போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு ‘நாளை நமதே’ பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே மாதம் 4 ஆம் தேதி 2012 நடைபெறவிருக்கும் விழாவில். சிறப்பு விருந்தினர் கையால் பரிசு பெறும் அரிய வாய்ப்பு.
Ameeraga Thamiz Mandram

organizes

Essay Writing Competition

for Tamilians residing in UAE only

Title
Penniyam Enathu Paarvaiyil’ (Feminism in my view)
 • ·         Language: Tamil
 • ·         Size: Not more than 8 pages if hand written in A4 sheet and 6 pages if typed in A4.
 • ·         Both male & female of age above 15 years can participate.
 • ·         The writing should be your own creation.
 • ·         Last date of submission: before 20 April 2012 midnight 12
 • ·         You can write from home and submit through email atmuae@gmail.com or fax in 04 3908737 (Attn: Jazeela)
 • ·         Please mention your name, Contact number and email id while sending your essay.
 • ·         The winners will be announced in Women’s Day celebration Friday the May 4th 2012
 •           The lucky winner will get the prize from the Chief Guest.
by mail from  (ஜழீலா) Jazeela

Monday, April 16, 2012

எல்லாம் அளவாகவே இருக்கட்டும்.உண்ணுங்கள் ,பருகுங்கள், குடியுங்கள்  ஆனால்  எல்லாம் அளவாகவே இருக்கட்டும்  எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உண்பது பெரிய பிரச்சனையாக உருவாகிவிடும். அரை வயறு உணவு ,கால் வயறு நீர் மீதி  வெற்றிடம் (காற்று) இதுவே சரியான முறை . தினமும் பழங்கள்,  காய்கறிகள்  சாப்பிடுவது  நல்லது. வயறு நிரம்ப சாப்பிட்டுவிட்டால் அது செரிமானம் ஆகாமல் விரயமாகும் நிலைதான்.
வயதிற்கு தகுந்ததுபோல் உணவு முறையிலும் மாற்றம் இருக்க வேண்டும். வயதானதன் காரணமாக நம் பற்கள் குறைய ஆரம்பிக்கும் ஆனால் நாம் பற்களை கட்டிக்கொண்டு கடினமான உணவுகளை உண்டு அவதிக்கு உள்ளாகி மருத்துவரை   நாடுகின்றோம் .        எடுத்ததற்கு எல்லாம் ஊசி மருந்துகளை போடும் போது மருந்தே வேலை செய்வதில்லை.  நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது.
இயற்கையே நமக்கு நம் உடலின்  மாற்றங்களை தெரிவிக்க அதனை அலட்சியப்படுத்துகின்றோம்.   இறைவன் நம் உடலில் எத்தனை பாதுகாப்பு தந்துள்ளான் அதனை நாம் கண்டு கொள்வதில்லை . கண்களில் இருக்கும் நீர் நம் கண்களை பாதுகாக்கின்றது ,வாயில் உள்ள உமிழ் நீர் நமக்கு நமது உணவினை செரிக்க வைக்கிறது . அது நன்றாக மென்று மெதுவாக உண்ணும்பொழுதுதான் நமக்கு தேவையான உமிழ்நீர் கிடைக்கும். எதிலும் அவசரம் . உண்பதில் கூடவா அவசரம் !  உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களை நினைவு கொள்ளுங்கள் .இறைவன் நமக்கு தந்த அருளை ரசித்து அருந்துங்கள் .

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை,


முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள் ,கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ ,முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே …இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .
எனது குளிர்ந்த கை  மீது மற்றவரின் உள்ளங்கை  வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .
அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது.
(ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால்  அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது .)
காலமெல்லாம்  உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது   அதிகமாகவே   உணர்கின்றேன்.
“நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்” என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான்  அவளுக்கு கொடுத்த ஆறுதல் ….!
அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை… மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து  என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .

Sunday, April 15, 2012

பள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு செய்வோர் கவனத்திற்கு!

பள்ளிவாசளில் மார்க்க  சொற்பொழிவு செய்வோர் கவனத்திற்கு!
பொதுவாக மார்க்க சொற்பொழிவு செய்வோர் நல்ல மார்க்க அறிவு பெற்றவராகவே மற்றும் இறைபக்தியுடையவராக  இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. நான் கேட்டதும் அதனால் பெற்ற ஞானமும் அவர்கள் ஆற்றிய  சொற்பொழிவினால் கிடைத்த பெரும் பயன்தான். சம்சுல்ஹுதா ஹழ்ரத்  அவர்கள்  நீடுர் -நெய்வாசல்  பெரிய பள்ளிவாசல்  இமாமாக இருந்து சிறந்த சேவைகள் செய்தார்கள். அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் மறக்க முடியாதாவைகளாக எக்காலத்திலும்  மனதில் நிலைத்து நிற்கக் கூடியதாக  இருப்பதனை அனைவரும் அறிவார்கள். அவர்கள்போல் இன்னும் பல மார்க்க அறிர்களும் இருக்கின்றனர்.

ரூபாய் 6000/= மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொருள் முற்றிலும் இலவசமாக

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்
 முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway சென்
று சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில முட்டைகள் காணப்படும் அதில் ஒவ்வொரு முட்டையாக கிளிக் செய்து சரியான  முட்டையில் மறைந்து இருக்கும் DVD Copy Pro மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 டவுன்லோட் செய்தவுடன் அதில் உள்ள லைசன்ஸ் கீயை காப்பி செய்து இதனை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 
 وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)
 Regards 
Ansar (U.L)


 by mail from தாரிக்  அஹ்மத்  

LinkWithin

Related Posts with Thumbnails