Showing posts with label எய்ட்ஸ் விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label எய்ட்ஸ் விழிப்புணர்வு. Show all posts

Tuesday, November 26, 2013

எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இதில் பங்கேற்றுப் பேசிய நடிகை அனுஷ்கா பேசும்போது,

"சினிமா காட்சிகளால்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி, எய்ட்ஸ் நோயாளிகள் பெருகுகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எச்.ஐ.வி. பாதிப்பு என்பது அவரவர் நடத்தையைப் பொறுத்தது. சினிமாவில் எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பான கதைகள் வராததற்கு எனக்கு காரணம் தெரியாது. திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை" என்று நடிகை அனுஷ்கா தெரிவித்தார்.