Saturday, September 26, 2009

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு.

துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது.துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன்  மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.nஇப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

Thanks to:சத்தியமார்க்கம்.காம்

Wednesday, September 23, 2009

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் போது வழங்கப்பட்ட தீர்ப்புகள்

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் போது வழங்கப்பட்ட தீர்ப்புகள்
நீடூர் A.M.சயீத் 
இன்று இந்திய நாட்டில் ஒரு குற்றவாளி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டு, மாநில வழக்கு மன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீட்டில் இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்தால் குடியரசு தலைவரிடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கருணை மனு கொடுக்கலாம். ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண்ணை அரசாங்க தலைமை வர்த்தக ஆணையாளர் கற்பழித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு கல் எறிந்து கொல்லப்படும் மரண தண்டனை மன்னர் அக்பர் விதித்தார்.

(Badayani : Muntakhabul Twarikh Vol.II.P.124, A.L.Srivasfava Akbar the Great Vol.I.P.519)
 பிறர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதன் காரணமாக ஆண்மையை அழித்தல் என்ற தண்டனையுடன் ஒரு குற்றவாளிக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த மகளிர் கருத்தரங்ம் ஒன்றில் பெண்களை கற்பழிக்கும் ஆண்களுக்கு காயடித்தல் தண்டனையை (Castration) தர வேண்டும் என்று ஒரு பெண் ஆவேசமாக பேசினார். ஒரு முஸ்லிம் பெண்ணை தன் வீட்டில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களைக் கொன்று வீட்டிலேயே புதைத்த குஜராத் மாநில ராஜா விக்ரமாதித்சிங் என்பவரின் மகன் கல்யாண் என்பவருக்கு நாக்கு துண்டிக்கப்படும் தண்டனை கொடுக்கப்பட்டது.
மன்னர் ஒளரங்கசீப் ஆட்சிகாலத்தில் நடந்த சுவையான வழக்குகளில் ஒன்று : சிந்து மாநில ஆளுநர் ஒருவர் வசதி படைத்த ஒரு வணிகரின் புதல்வி அறைக்குள் பெண்வேடம் அணிந்து ஓர் இரவு தங்கிய செய்தி அரசருக்கு தெரிய வந்த போது ஆளுநர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு தலைநகர் டில்லி வரை கால்நடையாகவே நடந்து வரும் தண்டனையை கொடுத்தார்.
மன்னர் ஷாஜஹான் அரசு பணியாளர்களை மிகவும் கண்காணிப்புடன் கவனித்து வந்தார். ஒழுக்கங்கெட்ட அதிகாரிகளை மதயானை முன் வீசியயறிந்து அந்த யானை அவர்களை கொல்லும் நிலைக்கும் ஆளாக்கினார். இதன் விளைவாக அர• பணியில் இருப்பவர்கள் ஒழுக்கத்தோடு செயலாற்றி வந்தனர்.
அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் மக்களின் ஒழுக்கத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு ஆகியவற்றை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கவனிப்பதோடு, மது அருந்தாமல் இருக்கிறார்களா? என்பதையும் கண்காணித்து வர வேண்டும்.
2. உடல் நலம் இல்லாதவர்கள் சிகிச்சை பெற தவறாதிருக்கவும், பிச்சை எடுக்காதிருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்களா? கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுங்காக கற்றுக் கொடுக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
4. வேலையாட்களை வைத்திருப்பவர்கள் வேலைக்காரர்களை கொடுமை படுத்தாமல் இருக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
5. நதிகளில் படகு ஓட்டுபவர்கள் அளவுக்கு அதிகமான •மையோடு செல்லாமலும், பருவநிலை ஒத்துவராத போது படகுகளில் பயணம் செய்யாமல் இருக்கவும் கவனிக்க வேண்டும்.
மன்னர், ஜஹாங்கிர் தவறாது நாள்தோறும் நீதிமன்றத்திற்கு சென்று தன் கடமையை ஆற்றிவந்தார். தொழுகை நேரங்களைத் தவிர உடல் நலமில்லாத நேரத்திலும் மக்களின் குறைகளை நேரில் ஆழமாகவும் அமைதியாகவும் கேட்டு வழக்குகளை விசாரித்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் முறையீடு செய்தவர்களுக்கு நியாயமான தீர்ப்பும் வழங்கியிருப்பதாக தம்முடைய குறிப்பேட்டில் பதிய வைத்திருக்கிறார்.
முஸ்லிம் மன்னர்கள் நாள்தோறும் வழக்குகளை விசாரித்தாலும் தீர்ப்பு சொல்வதற்காக ஒரு நாளை ஒதுக்கியிருந்தனர். மன்னர் அக்பர் வியாழக்கிழமையும், மன்னர் ஜஹாங்கீர் செவ்வாய்கிழமையும், மன்னர் ஷாஜஹான் புதன் கிழமையும் தீர்ப்பு சொல்லும் நாட்களாக வைத்திருந்தனர். அரசர்கள் எங்கு சென்றாலும் தீர்ப்பு சொல்லும் நாளில் தவறாமல் தர்பாரில் இருப்பார்கள். மன்னர் ஜஹாங்கீர் இதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மக்கள் நீதிவழங்கும் இடத்திற்கு சுதந்திரமாகச் செல்லலாம். எந்தத் தடையும் இல்லை.
குடிமக்கள் அரசரை நேரில் சந்தித்து தம் கோரிக்கைகளைச் சொல்லலாம். சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு தோட்டக்காரர் வழக்கு இங்கே குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஜஹாங்கீர் காலத்தில் ஆளுநர் முக்ராப்கானின் வேலைக்காரர் ஒரு தோட்டத்தில் நுழைந்து அனுமதியில்லாமல் ஒரு மரத்தை வெட்டியது பற்றி அரசரிடம் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டு உண்மையயன நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியின் கட்டை விரல்கள் இரண்டும் அகற்றுவதற்கான தண்டனை வழங்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சியில் வழக்கறிஞர்கள் இந்தியாவில் வாதிக்கோ, பிரதிவாதிக்கோ பிரதிநிதி என்ற முறையில் வழக்காட அனுமதிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்டப்படி வக்கீல் தொழில் புனிதமான தொழிலாக கருதப்பட்டது. அல்குர்ஆனிலும் வக்கீல் என்ற சொல் காணப்படுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி காலத்திலிருந்து இன்றைய நாள் வரை நீதிமன்றங்களில் ஆஜராகி தம் கட்சிக்காரரின் உண்மையையும் கோரிக்கையையும் நீதிபதியின் முன் பரிந்துரைக்கும் வழக்கறிஞரை வக்கீல் என்று கூறப்படுவதை அறியலாம்.
இஸ்லாத்தின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அடியானைவிளித்து எனக்கும் உனக்கும் இடையில் எவ்விதமான பரிந்துரைகளும் இல்லை என்று அறிவுறுத்துகிற சொல்லாக வக்கீல் என்பது அல்குர்ஆனில் 28:28 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டம் (The All India Muslim Personal Law) பற்றி ...
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளாக இருந்தாலும்,முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் வாழும் நாடுகளாக இருந்தாலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் குடியரசு நாடுகளாக இருந்தாலும், முஸ்லிம்களுக்காக அரசு ஷரீஅத் சட்டத்தை குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டவிதிகளை முஸ்லிம்கள் பின்பற்ற உரிமையளிப்பது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும்.
மாண்புமிகு நீதியரசர்கள் இஸ்லாமிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது இஸ்லாமிய சட்டத்தின் ஆழத்தை நன்கு ஆராய்ந்து, அடிப்படையில் சிதைவு ஏற்படாதவாறு தீர்ப்பு வழங்குவது மிக முக்கியமானதாகும்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்
(The All India Muslim Personal Law Board - AIMBLB) சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. அந்த வாரியத்தின் தலைவர் மவ்லானா முஜாஹிதுல் இஸ்லாம் காஸிமி இஸ்லாமிய ரீஅத்தின் கொள்கை கோட்பாடுகள் கெடாமலும், பாதுகாக்கவும், தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் உறுதியளித்திருக்கிறார். முஸ்லிம் நிறுவனங்கள், உலமாக்கள், புகழ்மிகு அறிவாளிகள் ஆகியோரை ஒன்று கூட்டி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு, இத்தா காலம் முடிந்ததோடு மட்டுமில்லாமல் அவள் வாழும் வரையிலும் பராமரிப்புச் செலவு கொடுத்து வரவேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி விவாவித்து ஒரு முடிவு எடுக்கும் என்று மும்பையிலுள்ள ராஜா கல்விக்கழகம் (The Raja Academy) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மாண்புமிகு அஜித்ஷா, ஜே.ஏ.பட்டீல், திருமதி.ரஜனா தேசாய் ஆகியோர் அடங்கிய நீதிபதிகளின் தீர்ப்பில் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் வழக்கு மன்றங்களுக்கு விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் பராமரிப்புச் செலவு பற்றி விசாரிக்க அதிகார எல்லை இல்லையயன்றும் முஸ்லிம் (பாதுகாப்பு மற்றும் விவாகரத்து) சட்டம்
(Muslim Protection and Divorce Act) இத்தா காலம் முடிவடைந்த பிறகும் வாழ்க்கைத் தேவைகளுக்காக செலவுத் தொகை கொடுக்க வேண்டும், என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது, என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.கல்கத்தா உச்ச நீதிமன்றத்தில் கீலாபர்வீன் என்ற பெண்ணின் வழக்கில் உயர்நீதிபதி வா.தேவபாணிகரஹி வழங்கிய தீர்ப்பில் ரீஅத் சட்டத்திற்கு விரோதமாக திருக்குர்ஆனின் புனித வசனத்தின் ஆழமான கருத்திற்கு அப்பாற்பட்டு இத்தா காலத்திற்கு புதிய விளக்கம் தந்திருக்கிறார். விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்து கொள்ளும் வரை இத்தாகாலம் உள்ளது என்றும், அதுவரையிலும் விவாகரத்து செய்த கணவன் பராமரிப்பு செலவுத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
ஷரீஅத் என்றால் என்ன? என்பதை அறியாதவர்கள், திருக்குர்ஆனின் புனித வசனங்களை அடிப்படையாக வைத்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு அளித்துள்ள விளக்க உரையை ஏற்று தரப்பட்டிருப்பதே இஸ்லாமிய சட்டம் என்பதை தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தங்களை பெரிய அறிவு ஜீவிகளாக எண்ணிக் கொண்டு அதிகமாக விற்பனையாகும் ஆங்கில, தமிழ் நாளேடுகளில் இத்தா வாழ்க்கைப் பராமரிப்பு செலவு பற்றிய கல்கத்தா உச்சநீதிமன்ற தீர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி என்றும் சட்டத்தின் முன்னேற்றமான விளக்கம் என்றும் தலையங்கத்திலும் ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற தலைப்புகளிலும் எழுதி வருகிறார்கள்.இஸ்லாமிய சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அஸ்கர் அலி இன்ஜினியர் என்ற ஒரு ஆங்கில முஸ்லிம் எழுத்தாளர் (
´யா முஸ்லிம்) ஹிந்து ஆங்கில நாளேட்டில் 07.08.2000 தேதியில் முஸ்லிம் பெண்களின் பராமரிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருக்கிற கட்டுரையில் கல்கத்தா மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிட்ட இத்தா பருவகாலம் தாண்டியும் (விதவைப் பெண்ணுக்கு) விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு, கணவன் பராமரிப்பு செலவு கொடுத்து வர வேண்டும் என்பதை நியாயப்படுத்தி எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் "ஷாபானு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 1980-ஆம் ஆண்டில் முஸ்லிம் தலைவர்களும், இஸ்லாமிய சமுதாயத்தினரும் •திர்ப்பு தெரிவித்தது போல கீலா பர்வீன் வழக்கில் கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் சிறந்த எழுத்தாளர், என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை. ஆனால் ரீஅத் பற்றிய அவருடைய கட்டுரைகள் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த மார்க்க அறிஞர்களின் ஒப்புதல் பெறவில்லை. அவர் சார்ந்திருக்கிற
´யா பிரிவு தலைவர்களும் பெரியார்களும் கூட அவரை எதிர்த்து மும்பையிலும், கோயமுத்தூரிலும் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஷரீஅத்திற்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் போதே சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் சட்டங்களோ, விதிகளோ, நிறைவேற்றப்படும் போதே மார்க்க அறிஞர்களும், சமுதாயத் தலைவர்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் எழுத்தாளர்களும், ஜமாஅத் தலைவர்களும், நிர்வாகிகளும் விரைவில் ஒன்று கூடி தீர்மானங்கள் நிறைவேற்றி அர•க்கும் இது தொடர்பான அதிகாரம் பெற்றவர்களுக்கும் அனுப்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மிக முக்கியமான கடமையாகும் •ன்பதை உணர வேண்டும்.
இஸ்லாமியப் பார்வையில் இந்திய சாட்சிய சட்டம்
உரிமை வழக்குகளாக இருந்தாலும் குற்ற வழக்குகளாக இருந்தாலும் சான்றுகளின் அடிப்படையில் தான் வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஆய்வுக்கு வரும் ஆவணங்கள் உறைகள் ஆகியவைகளுக்கு சான்று எனப்படும்.
இந்தியாவில் 1872ம் ஆண்டு இந்திய சாட்சியச் ட்டம் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்தது. இச்சட்டம் சான்றின் வகைகள், சான்று தரப்படும் விதங்கள், சான்றுக்குரிய வரம்புகள் ஆகியவற்றைப்பற்றி விவரிக்கக் கூறுகிறது.
1. எந்த ஆவணத்தை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்தில் சேர்ப்பிக்கிறோமோ அது தலைநிலைச்சான்று
(Primary Evidence) எனப்படும்.2. இது பொது ஆவணமாக (Public Document) இருந்தால் அதனுடைய நகலை நீதிமன்றத்தில் சேர்க்கும் போது அதற்கு சார்நிலைச் சான்று (Secondary Evidence) னப்படும். 3. சான்றாகப் பயன்படும் ஆவணங்கள் ஆவணச்சான்று என்றும்.
4. சாட்சிகளின் உரைகளைச் சான்றாகப் பயன்படுத்தும் போது வாய்மொழிச்சான்று (Oral Evidence) என்றும் சொல்லப்படும்.5. தீர்வுகள், நிகழ்ச்சிகளை நேர்நிலைச்சான்று
(Direct Evidence) என்கிறார்கள். 6. ஒருவர் சொன்ன சாட்சியிலிருந்து அல்லது ஆவணத்திலிருந்து தீர்வுக்குரிய நிகழ்வு
யூகிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் அதை சூழ்நிலைச் சான்று
(Circum stantial Evidence) என்று சொல்லப்படும்.7. ஆவணம் அல்லது பத்திரத்தில் இருக்கும் வார்த்தைகளே சான்றாக இருக்கும் போது அது அகநிலைச் சான்று (Interinsic Evidence) என்றும். 8. அத்தகைய ஆவணத்தின் வாசகத்தை விவரிப்பதற்காகவோ அல்லது ஆவணத்தை எழுதியவர்களின் கருத்து அதிலுள்ள வாசகத்துக்கு மாறானது என்பதைக் காட்டவோ தரப்படும் சான்று புறநிலைச்சான்று என்று சொல்லப்படும்.
9. ஒரு மனிதன் தான் வீடு கட்டுவதற்காகவோ மகளைத் திருமணம் செய்விப்பதற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு தேவைக்காகவோ இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார். அதற்காக கடன் வாங்குபவர் கடன் தொகையை வாங்கியபின் தாங்கள் வேண்டும் போது தங்களிடமாவது அல்லது தங்கள் உத்தரவு பெற்றவர்களிடமாவது வாங்கிய பணத்தை செலுத்துவதற்கு சம்மதித்து இந்த கடன் பத்திரத்தை எழுதிக் கொடுத்திருக்கிறேன், என்று ஒரு ஆவணம் எழுதிக் கொடுப்பதற்கு கடன் உறுதி ஆவணம் அல்லது உறுதிக் கடன் பத்திரம்
(Promissory Note) என்று சொல்லப்படும். வழக்கு முறையில் புரோ நோட்டு என்று சொல்வார்கள். இந்த ஆவணத்துக்கு சாட்சிகளோ பதிவு செய்ய ¼வ்ணடிய அவசியமோ தேவையில்லை. 10. 1881ம் வருடத்திய செலாவணி பத்திரச் சட்டம் அல்லது செலாவணி முறிச்சட்டம்
(Negotiable Instruments Act - 1881) 4Šவது பிரிவில் கடன் உறுதி ஆவணம் என்றால் என்ன என்பது ப்றறி விவரிக்கப்பட்டிருக்கிறது.
திருக்குர்ஆனில் அல்பகறா என்ற இரண்டாவது அத்தியாத்தின் 282வது வசனத்தில் விசுவாசிகளே நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவன் நீதமாக எழுதவும். கடன் வாங்கியவரே வாசகத்தை கூறவும். நீங்கள் சாட்சியாக்கக்கூடிய உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்குங்கள் அவ்வாறு இரு ஆண்கள் ஓர் ஆணுடன் இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். இன்று எழுதப்படும் கடன் உறுதிப்பத்திரம் இந்த இறைவசனத்திற்கு ஒத்தது போல் இருக்கிறது. வட்டி வாங்குவது, கொடுப்பது ஹராம், என்பதால் அது தொடர்பான வாசகத்தை விட்டு விட வேண்டும். (இன்ஷா அல்லாஹ், தொடரும்....) 

Courtesy: www.nidur.info

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்




Why Islam?பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?" என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?" என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும்  திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.

இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".


Why Islam travelsஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்?” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது. இதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. "செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்.  மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.


நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.

அதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.

"இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்
1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.

சான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.

எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

தகவல் : சகோ. நூருத்தீன், சியாட்டில், யூ எஸ்.
Courtesy: SatyaMargam.com

Thursday, September 10, 2009

நேரத்தின் முக்கியத்துவம்,

முஹம்மத் சாஹுல் ஹமீது, Saudi Oger Co., Jeddah
நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை:
1) நேரத்தின் முக்கியத்துவம்,
2) நேரம் வீணாவதற்கான காரணங்கள்
3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
I. நேரத்தின் முக்கியத்துவம்:
நேரம் என்பது என்ன? மனிதன் வாழுகின்ற வாழ்க்கை. நேரம் கடந்து விடும்பொழுது வாழ்க்கையும் நம்மைவிட்டு கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம். சரி, வாழ்க்கை என்பது என்ன? இம்மை, மறுமை வெற்றி எனும் இயக்குகளை உள்ளடக்கியது. இம்மை, மறுமை வெற்றியின் அவசியம் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியம், நேரத்தை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. இன்னும் நேரத்தின் தன்மைகளை விளங்கிக் கொண்டால்தான் அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
நேரத்தின் தன்மைகள்:
1) தீதோ நன்றோ, நலனோ பலனோ, வீணோ விரயமோ நேரத்தை எதில் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் விட்டாலும் நேரமானது சங்கிலித் தொடர் போன்று சீராக நம்மை விட்டு ஒவ்வொரு கனமும் நிற்காமல் கடந்து சென்று கொண்டே இருக்கும்.
2) கடந்து சென்ற காலத்தை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் மீளப்பெற முடியாது. மரித்துவிட்ட, கைசேதம் அடைந்த கெட்ட ஆத்மா கேட்கும் ''இறைவா! எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடு, நான் நல்லது செய்து திரும்புகிறேன்" என்று. ''அவ்வாறு அல்ல, நீ பொய்யுரைக்கின்றாய்" என்று இறைவன் சொல்வான். ஏனெனில் அவன் வாழும் போதே அவன் வாழ்க்கை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும், மரணம் குறித்து உணர்த்தப்பட்டும் இன்னும் அவனுக்கு பல அவகாசங்கள் கொடுக்கப்பட்டும், உணராதவனாகவும், கெட்டவனாகவும் மரித்தவன் ஆவான். ஆகவே தங்குமிடம் நரகம்தான்.
3) பிற பொருட்களைப்போல சேமித்து வைக்கமுடியாது. எதிர்கால தேவைக்கென்றோ அல்லது இப்போது விரும்புவதையெல்லாம் மனம் போன போக்கில் அனுபவித்துவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு சாதிக்கலாம், நல்லது செய்யலாம் என்று பயன் படுத்துவதற்கோ நேரத்தை சேமித்து வைக்க முடியாது.
4) பயன்படுத்தாமல் விட்டால், பனிக்கட்டியைப் போன்று கரைந்தே போய்விடும். இன்றை, இக்கணத்தை, இப்போதே பயன்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் நேரம் கரைந்து காணாமல் போய்விடும்.
5) இரு தருணங்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்தி தொலைவை ஏற்படுத்த முடியாது. நாம் சிந்தித்து, விழிப்போடு நேரத்தை செய்ய வேண்டிய பணியை செய்யாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே! சரி பரவாயில்லை அந்த நேரம் வராமல் ஒரு தடையை ஏற்படுத்தி பணியை முடித்து விட்டு பின்பு தடையை நீக்கி நேரத்தை வரச்செய்வோம் என்று கற்பனையும் செய்ய முடியாது. ''பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்'' - எச்சரிக்கை!
6) நேரத்தை விலைக்கு வாங்கவோ விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. நமது தேவைக்குத் தக்கவாறு நேரத்தின் கன பரிமாணத்தை விரிக்கவோ, சுருக்கவோ, கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது அதற்குரிய அளவில்தான் இருக்கும்.
7) கடந்து சென்ற தருணங்களைபாய்ந்து சென்று பிடிக்க முடியாது. ச்சே! கொஞ்ச நேரம் முன்னால் வந்திருந்தால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்குமே, ஃபிளைட் கிடைத்திருக்குமே, பஸ் தவறி இருக்காதே ம்ஹீம்... தருணங்கள் கடந்தது கடந்ததுதான்.
இவை எல்லாவற்றையும் விட நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக்கொண்டது. அதனை விட மிக முக்கியமான விடயம் அந்தக் கால அளவு எவ்வளவு என்பதை எவருமே அறிய முடியாத வகையில் மரணம் எனும் சூட்சுமத்தை இறைவன் வைத்திருக்கிறான். ஆக, நேரம் என்பது முக்கியமானது அல்ல. அதிமுக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் மனதிலே இருத்தியாக வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''. ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.

இன்னும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் முதுமை வருமுன் இளமையை, மரணம் வருமுன் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள் என்ற நேரம் குறித்த பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது. அல்லாஹ்விடத்தில் 2 மணிநேரத்திற்கு உட்பட்டதாகும். ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வாழ்க்கை எனும் கேள்வித்தாளை வழங்கி உலகம் எனும் ஹாலில் பரீட்சை வைத்திருக்கின்றான். இன்னும் முஃமின்களுக்கு இது ஒரு சோதனைக் களமாகவே இருக்கிறது எனச் சொல்லிக்காட்டுகின்றான்.
I.A.S பரீட்சை எழுதுபவனின் துடிப்பையும், பரபரப்பையும், பதபதைப்பையும் எண்ணிப்பாருங்கள். அந்த தருணங்களை அவன் வீணாக்கமாட்டான் என்பது அல்ல, வீணானதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான் என்பதுதான் முக்கியம். அதனைவிட லட்சம் மடங்கு முக்கியமாண வாழ்க்கை எனும் பரீட்சையில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம் வாருங்கள்!
II. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பொதுவாக நேரம் வீணாவதற்கான காரணங்களை நாம் அறிவோம். என்றாலும் அதனை பகுத்து ஆய்ந்தால்தான் வீணடிப்பதிலிருந்து விடுபட முடியும். ஆகவே நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். 1) நேரமானது எப்படி வீணாகிறது? 2) ஏன் அவ்வாறு வீணாகிறது?
நேரம் வீணாவதற்கான காரியங்கள்:
இதில் முதல், முதலில்... இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % நன்மையைப் பெறுவதற்காக 95% கெட்டு நாசமாகிறோம். அதுவும் நல்ல விஷயத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் ஷைத்தான் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பவர்களுக்கு அதுவும் இல்லை. இன்னும் அந்த 5% நன்மையை, தீமையில் குறைவான பங்கு வகிக்கக்கூடிய பிற மீடியாக்களின் வாயிலாக நாளிதழ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். T.V -யைப் பயன்படுத்தாமல் இருப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நட்டம் உறுதி. அதுமட்டுமல்ல நாம் விரும்பாத நாசத்தையும் வா, வா என்று வலிய அழைத்து விருந்துவைக்கும். இதன்கூடவே இதன் அக்காவையும் சொல்லியாக வேண்டும். அதுதான் சினிமா.
சின்னத்திரையும் வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லிமாளாது. குடும்ப கட்டமைப்பை, தனிமனித ஒழுக்கத்தை, சமூக கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது. பிஞ்சு உள்ளங்களில் காமம், கயமை, குரோதம், வக்கிரம், திகில் என எல்லாவிதமான நஞ்சையும் விதைக்கிறது. மனித இனத்தின் முன்னேற்றமான, பகுத்தறிவான சிந்தனை போக்கையே மழுங்கடித்து, மறக்கடித்து, சிதைத்து, திசைதிருப்பி, மனிதத்தின் புனிதத் தன்மைக்கு பெரும் தீங்கிழைக்கிறது.
கிரிக்கெட் - அறிவாளிகள் மத்தியில் இது ஒரு சிறந்த விளையாட்டா? என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும், இதற்கு இருக்கக்கூடிய மோகம், இல்லையில்லை வெறி.... சூதாட்டம் போல் ஆகிவிட்ட இதில் நமது நேரத்தை செலவிடுவது பெரிய அறிவீனம்.
அரட்டை - முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடைய பெருவரியான நேரங்களை சாகடிப்பது இந்த அரட்டைத்தான். மனம் சலிக்காது, கண்கள் துஞ்சாது, நடு நிசியிலும் பிரிய மனம் இல்லாது செய்த அரட்டையினால் சாதித்தது எனன்? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அறிவுள்ள புத்தகங்களை விடுத்து அனாச்சாரமும், வீணும், விளையாட்டும் நிரம்பிய வார, மாத, வாரம் மிருமுறை இதழ்களுக்கென்றே வாழ்க்கையை அர்பணிப்பது. இவ்வாறு பரவலாக காணப்படுகிற சில முக்கியமான நேரத்தை வீணடிக்கும் காரியங்களை எடுத்துக்கூறியுள்ளேன். இவை போன்று ஊர் சுற்றுதல், தேவையற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனையோ உள்ளன. கட்டுரையின் பக்கங்களைக் கருதி, விரிவஞ்சி சுருக்கித்தருகின்றேன். இதுவரை காரியங்களைப் பார்த்தோம். இனி இவ்வாறு நாம் வீணர்களாக இருப்பதன் காரணங்களை ஆராய்வோம்.
நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பயனுள்ள காரியத்தை விடுத்து பயனற்ற காரியத்தை நோக்கி நமது மனோ இச்சை செல்வதற்கும், அதிலேயே லயித்து நேரம் வீணாவதற்கும் பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன.
மனக்கட்டுப்பாடின்மை, சோம்பல், தோல்வி, பயம் பிறகு செய்யலாம் என்ற எண்ணம், பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் மனப்பான்மை, அலட்சியப் போக்கு, தேவையற்ற மன உளச்சல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், திறமையின்மை, சீரான, உறுதியான முயற்ச்சியின்மை நிதானமின்மை... என்று பல வகையான உளவியல் பிரச்சினைகளே நேரம் வீணாவதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. மேற்சொன்ன காரியங்கள் அனைத்துமே இதன் வெளிபாடுகள்தான். சரி இந்தப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நேரத்தை வீணடிக்கிறார்களே என்றால் அவர்கள் வாழ்வில் இலட்சியமோ இலக்கோ அற்றவர்கள் ஆகவே அவர்களும் வீணர்களே. வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க, யாரும் விரும்பி நேரத்தை வீணடிப்பதில்லை. இருப்பினும் தங்களது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறுதியின்மை போன்ற மேற்சொன்ன சில அல்லது பல காரணங்களால் காரியங்களை தள்ளிப்போடுகிறோம். பிறகு செய்யாமலேயே விட்டுவிடுகிறோம், தோல்வி பயத்தால் நடுநடுங்குகிறோம், இலக்கின்றி வாழுகின்றோம். இதனால் வாழ்வில் விரக்தி, நேரத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனை மறக்க, அல்லது நேரத்தை போக்க மனம் எண்ணுகிறது. ஷைத்தான் இந்த தருணத்தை கன கச்சிதமாக பயன்படுத்துகின்றான். எவையெல்லாம் தீமையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மனதுக்கு இதம் அளிப்பதாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் காட்டுகின்றான் விளைவு அழிவுப்பாதை...
நாளை வரும், நமது கவலைகள் தீரும், இன்பக்கடலில் நீந்துவோம் என்று இன்றை மறந்து இக்கணத்தை துறந்து நாளை கனவில் மூழ்குபவர்களுக்கு அந்த நாளை என்பது வரவேயில்லை, வரவும் செய்யாது.
என்ன ஆகிவிட்டது நமக்கு! வாழ்வு குறித்த சரியான கண்ணோட்டம் இல்லை, லட்சியம் இல்லை, லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று கொப்பளிக்கும் ஆர்வம் இல்லை, திட்டம் இல்லை, கொள்கை இல்லை, கடந்து விட்ட நாட்கள் குறித்து நமக்கு கவலையில்லை, இனிவரும் தினங்கள் குறித்தும் அக்கரையில்லை, ஏன் இன்றைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவும் கூட நம்மிடம் ஒரு செயல் திட்டமில்லை. இதே நிலை நீடித்தால் சாதிக்க முடியாது என்பது இருக்கட்டும், தோல்வியை தவிர்க்க முடியாது என்பது நினைவில் நிற்கட்டும். சரி! வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய? வாருங்கள் வெற்றி பெறுவோம்.

III நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
நேரம் வீணாவதைத் தடுத்து, நல்ல பயன்பாட்டில் அதனை வீரியப்படுத்தி வெற்றி பெற்றிட செய்ய வேண்டியது என்ன? முதலில் நேரம் குறித்த விழிப்புணர்வு நம்முள் ஆழமாக வேர் விடுவது மிக மிக அவசியம். நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்று விரக்தியுடன் அமர்ந்துவிட்டாலும் அது நேரத்தை வீணாக்கிவிடும். அதேபோல எதிர்காலத்துக்கு திட்டமிடலாம், ஆனால் எதிர்காலத்தை இப்போதே பயன்படுத்த முடியாது. ஆகவே இன்று, இக்கணம், இதைத்தான், இப்போதே பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.
நாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.
முதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சீரான பழக்க வழக்கங்களுக்கான பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நமது அன்றாட அலுவல்களை ஒரு பெரிய அறுவை சிகிச்கை செய்து, தேவையற்றதை நீக்கி, அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். நான், எனது விருப்பம், எனது திட்டம் என்று இல்லாமல் குழு உணர்வு, கூட்டுணர்வு வேண்டும். பல்வேறுபட்ட மக்களையும் அனுசரிக்க, அரவணைக்க, புரிதலுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இது குறுகிய காலத்தில் இலகுவான வெற்றியைப் பெற்றுத்தரும்.
நமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தான் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலைகளையும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும் அதற்கொப்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்விதமாக தாஃவா சென்டர் மூலம் ஏன் அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடாது? என்கிற சிந்தனை புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டும்.

நமது இலக்குகளை, பணிகளை நீண்டகால, இடைக்கால, குருகியகால திட்டங்களாக தீட்டி, ஒருங்கிணைத்து. ஒழுங்குபடுத்தி, எளிதாகச் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். புதிது புதிதாக சோதித்துப் பார்ப்பதைவிட வெற்றிகரமான அனுபவங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். அவ்வப்போது ஆய்வும், சுயமதிப்பீடும் அவசியம் செய்தாக வேண்டும். மறுமைச் சிந்தனை இம்மை குறித்த விழிப்புணர்வை ஊட்டவல்லது. ஒரே நாளில் நாம் நம்மை சீராக்கிவிடமுடியாது. தேவை சிறந்த பயிற்ச்சியும், தொடர்ந்த முயற்ச்சியும்தான். இன்ஷாஅல்லாஹ்!
இன்று நமதாகட்டும்!
நாளை நம்பிக்கையாகட்டும்...

courtesy:islamkalvi.com

Saturday, September 5, 2009

வெற்றியின் ரகசியம்!

வெற்றியின் ரகசியம்! Print E-mail
நிஸார் பானு
அன்பு காட்டுங்கள்
ஆனால் அடிமையாகி விடாதீர்கள்
இரக்கம் காட்டுங்கள்
ஆனால் ஏமாந்து போகாதீர்கள்
பணிவாய் இருங்கள்
ஆனால் துணிவை இழந்து விடாதீர்கள்
கண்டிப்பாய் இருங்கள்
ஆனால் கோபப்படாதீர்கள்
வீரனாய் இருங்கள்
ஆனால் போக்கிரியாய் இராதீர்கள்
சுறுசுறுப்பாய் இருங்கள்
ஆனால் பதட்டப்படாதீர்கள்
தர்மம் செய்யுங்கள்
ஆனால் ஆண்டியாகிவிடாதீர்கள்
பொருளை தேடுங்கள்
ஆனால் பேராசைப்படாதீர்கள்
உழைப்பை நம்புங்கள்
ஆனால் இறைவனை மறந்துவிடாதீர்கள்

அன்னையின் மடல்

அன்னையின் மடல்
    

  என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என
வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.

என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை   தெரியாது.  மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்   மீண்டு வரமாட்டார்.  அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!

என் செல்லமே!உன் தாயின் முகத்தைப்பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் -  உன் தாயின் விழிகளில்தெரிவதைப் பார் மகனே!

மூன்று விஷயங்களை கண்களால்   காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு,  இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!



Mother.pps View Download 

  parentswish.pps View Download

Tuesday, September 1, 2009

இஸ்லாமியச் சட்டம் (11) --- நீடூர் A.M.சயீத்

இஸ்லாமியச் சட்டம் (11)


நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி



மறுக்கப்படும் மனித உரிமைகள்



மனித உரிமைப் பார்வை என்பது சாதியப் பார்வையுமல்ல வர்க்கப் பார்வையுமல்ல. பாலியல் பார்வையுமல்ல அது ஒரு மனிதப் பார்வை. மனித உள்ளங்கள் காயப்படுகின்ற போது, மனித மாண்பு சிதைக்கப்படும் போது அங்கே இணைந்து குரல் கொடுப்பது இம்மனித பார்வைதான்.



கடமை உணர்வில்லாத உரிமையோ உரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.



கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.



பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.



ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.



மெளலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலகிலுள்ள மதங்கள் குறித்து அதைப் பற்றி சிந்தித்து நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. மதத்துக்கு மதம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. ஒரே குறிக்கோளுக்கு பல வழிகள். அந்த வழிகளில் சிறந்தது உங்களிடம் இருக்கிறது. அதனை முறைப்படி பின்பற்றுங்கள். அது போதும் அந்த வேறுபாடுகளையயல்லாம் அழிக்க நினைத்தால் அது இயலாது, என்று சொன்னார்கள்.

குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பல ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது. எந்த அளவிற்கு அத்தண்டனை கடினமாக்கப்படுமோ அந்த அளவு மனித உரிமைகள் அதிகம் பேணப்படுகிறது என்று பொருள். இக்கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும் அவைகள் மூலம் மனித உரிமைகள் அதிகம் பேணப்பட்டது, பேணப்படுவது போன்ற வேறு சட்டங்கள் மூலம் பேணப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.



இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நாட்டில் எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் சிறைகளில் சிறை அதிகாரிகளாலும், சக கைதிகளாலும், பெண் கைதிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். 1987ம் ஆண்டு பெண் கைதிகள் அமெரிக்காவில் ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் 1985ம் அண்டில் இருந்ததை விட இது மூன்று மடங்கு அதிகம். இங்கிலாந்து மனித உரிமைக் கழகம் இது பற்றி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பெண் காவலர்கள் குறைவு என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



நம்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வுத்துறை இயக்குனர் கார்த்திகேயன் 02.03.1999ல் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது ஒரு வருடத்திற்கு மனித உரிமை குற்ற முறையீடுகள் 40 ஆயிரம் வருவதாகச் சொன்னார். கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பேரிலும் புகார்கள் அதிகமாக வருவதாகச் சொன்னார். குற்றம் செய்பவர்களை தண்டிப்பது என்பதை விட திருத்துவது என்பது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அவர் அறிவுரை கூறினார். புலனாய்வுத் துறை என்பது ஒரு புனிதமான கடமைப் பொறுப்பு என்பதால் அது களங்கப்படாமலிருக்க அரசியல்வாதிகளின் தொடர்போ குறுக்கீடோ இல்லாதிருக்க வேண்டும் என தெரிவித்தார்.



அனைத்துலக பொது சபை 10.12.1948 (General Assembly) உலகளாவிய தேசிய ஒருமை உறுதிமொழி பறையறிவிப்பை ஏற்றுக் கொண்டது. 30 விதிகளைக் கொண்ட அந்த அறிவிப்பு அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான தேசிய உரிமைப் பற்றிய விதியை அறிவித்தது. தற்போதிருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் 56வது விதியும் மனித உரிமையைப் பற்றி குறிப்பிடுகிறது.

இந்திய அரசியல் நிர்ணயசாசனப்படி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தங்களுடைய நியாயங்களையும் உரிமைகளையும் வலியுறுத்தவும் பெரும்பான்மை வகுப்பினர் அறிந்தோ அறியாமலோ விளைவிக்க முற்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கவும் தங்களுடைய மதம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதை செயல்படுத்தாத சமுதாய சூழ்நிலை உருவானது.



மனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்



1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)



2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் -1994,

3. மாநில மனித உரிமைகள் பொறுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,



4. Universal Declaration of Human Rights - 1948.5. Basic Internation Human Rights Instruments. ஆகியவை அரசாங்கத்தில் இயற்றப்பட்டன.



இந்திய அரசியல் சாசன சட்டத்தில் 3வது, 4வது பகுதியின் முன்னுரை, Universal Declaration of Human - 1948 என்பதன் அடிப்படையை வைத்தே, அமைக்கப்பட்டிருந்தது.

இந்திய குடியரசு சட்டம் 25(1)ல் பொது அமைதிக்கும் ஒழுக்கத்துக்கும், சுகாதாரத்துக்கும் இப்பிரிவின் மற்ற ரத்துக்களுக்கும் உட்பட்ட முறையில் அனைவருக்கும் தங்கள் மனசாட்சிபடி நடக்கவும் தங்களுக்கு விருப்பமான மதத்தை தாராளமாக அனுசரிக்கவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு.



சீக்கியர்கள் கிர்பான வைத்துக் கொள்ள தடையில்லை என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொதுத்துறையிலோ தனியார் துறையிலோ பணியாற்றினாலும் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தலைப்பாகை தாடி போன்றவற்றை கடைபிடிக்காமலிருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. மிக முக்கியமான சுன்னத்துகளைக் கூட அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவதில்லை. அது பற்றி சங்கை மிகு மார்க்க அறிஞர்கள் அறிவுரை கூறினால் ''சுன்னத்துதானே'' என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்.

பலமுறை ஹஜ்ஜுக்கு சென்ற சில சகோதரர்களிடத்திலும் சுன்னத்தான தாடியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி போட்டு தொழுவதுகூடி தேவையில்லை என்று சொல்லும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.



இதன் காரணமாக காவல்துறையிலோ இன்னபிற. உயர்ந்த அரசுப் பணியிலோ அபூர்வமாக நியமிக்கப்படும் முஸ்லிம் சகோதரர்கள் நிரந்தரமாக தாடி வைப்பதற்கோ, தொப்பி அணிவதற்கோ முடியாமல் பெரும்பாலும் தடுக்கப்படுகிறார்கள்.



1957ம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனர், முஸ்லிம்களைத் தவிர மற்ற காவல் அதிகாரிகள் தாடி வளர்க்க அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். முஸ்லிம்கள் வைக்கும் தாடியும் ஒழுங்கான முறையோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.



07.08.1986ம் ஆண்டு அப்போதைய நீதியரசர் மோகன் தன்னுடைய தீர்ப்பில் 1957ம் ஆண்டு ஆணையில் திருத்தம் கொடுத்து நான்கு மாதங்கள் மட்டுமே அனைத்து மதத்தைச் சார்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தாடி வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.



ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தின்படி தாராளமாக நடக்க இந்திய குடியரசுச்சட்டம் முழு உரிமை அளித்த பின்பும் இங்கு மனித உரிமை மீறல் தென்படுகிறது. சீக்கியர்களை விட பன்மடங்கு நாம் பல்கிப் பெருகி இருந்தும் கூட இந்த உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்க இதுவரை துணியவில்லை. நமது துணிவின்மைக்கு மார்க்கக் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் அனைவரும் பின்பற்றாமல் இருப்பதும ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்க்கையின் நட்சத்திரங்கள் எரிந்து விழலாம். ஆனால் உயிரினும் இனிய நம் ஈமானின் நம்பிக்கைள் எரிந்து விழக்கூடாது.



திருடினால்...



இந்தியாவில் உள்ள அனைத்து சமய இனமக்களுக்கும் பொதுவான ஒரு சட்டவியல் குற்றத் தொகுப்பு அவசியம் என்ற கருத்தின் அடிப்படையில் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.



511 பிரிவுகளைக் கொண்ட இத்தண்டனைச் சட்டத் தொகுப்பு 378வது பிரிவிலிருந்து 382வது பிரிவு வரை சொத்துக்களைப் பற்றிய குற்றங்கள் : திருட்டு என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 17வது அத்தியாத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



இந்திய தண்டனைச் சட்டம் 379-வது பிரிவின்படி ''திருட்டுக்குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 380வது பிரிவின்படி குடியிருப்பதற்காக பயன்படும் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



இந்திய தண்டனைச் சட்டம் 381வது பிரிவின்படி ஒருவரிடம் பணியாளராக அல்லது எழுத்தாளராக பணிபுரியும் ஒரு நபர், தம்முடைய முதலாளியின் பொருளைத் திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.



382வது பிரிவின்படி திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிக் கொள்வதற்காக அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றிற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



இப்படி மூன்றாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு தண்டனை ஏற்படுத்தப்பட்ட போதிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற சிறைச்சாலைக்கு செல்பவன் சிறைப் பறவையாக வெளிவருகின்றானே தவிர அவன் திருடுவதை நிறுத்தவில்லை.



பழந்தமிழ் நாட்டில் திருட்டுக் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் விதித்து வந்தார்கள். முதலில் திருடியவர்களுக்கு சில நேரங்களில் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு கையை துண்டிப்பது திருட்டுக்குற்றத்தின் தண்டனையாக இருந்தது. இரண்டாவது முறை திருடினால் ஒரு காலைத் துண்டித்தார்கள். இதனால் பழந்தமிழ் நாட்டில் திருட்டுக்குற்றங்கள் குறைவாக இருந்தன. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி என்ற வேறுபாடு இல்லாமல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் அமுலில் இருந்தது. (இது இஸ்லாமிய சட்டத்திற்கு நெருக்கமானது என்பது தெளிவான வியம்) குற்றத்திற்கான தண்டனை இஸ்லாமிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற மற்ற உலக நாடுகளிலும் கடுமையாக இருப்பதால் அங்கு குற்றப்பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.



டான்லால் தாஸ்வானி என்ற அறிஞர் ''குற்றச் செயலுக்கான நீதி இஸ்லாமிய சட்டத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எல்லாக் காலத்திற்கும் சமமான தண்டனையே அது வழங்குகிறது. சவூதி அரேபியா மன்னராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாத நபராக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை அனைவருக்கும் சமமாகவே இருக்கின்றது'' என்று கூறி இருப்பது நினைவு கூறத்தக்கதாகும்.

உழைப்பை வலியுறுத்தி, உழைக்கும் கரங்களை மதிக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.



இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனுடைய கரங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.



1. உழைக்கும் கரம் : -இதை இஸ்லாம் மதிக்கின்றது.



2.பலனற்று இருக்கும் கரம் : இதனைக் கொண்டு எப்படி தொழில் செய்யலாம் என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது.



3. பலஹீனமான கரம் : இதற்கு இஸ்லாம் உணவளிக்கின்றது.



4. சமூகத்தில் கொடுமையாக விளையாடும் கரம் : இதைத் துண்டித்துவிட ரீஅத் சட்டங்களை பிறப்பிக்கின்றது. அதற்காக கண்மூடித்தனமாக கையை வெட்டக் கூறவில்லை.

ஒருவன் திருடினான் என்று குற்றவாளிக் கூண்டிலல் நிறுத்தப்பட்டடால் சாட்சியங்களோடு அது நிரூபிக்கப்பட வேண்டும். நியாய விரோதமாக கரத்தை வெட்டினால் 50 ஒட்டகையை இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.



ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இச்செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடை யோனுமாக இருக்கிறான் (அல்குர்ஆன் 5:38) என திருக்குர்ஆன் வசனம் திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை பற்றி தெளிவாகக் கூறுகிறது.



''உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு ஜீவராசியும் பூமியில் இல்லை'' என்று திருமுறையில் (11:6) தூயவன் அல்லாஹ் வாக்களிக்கின்ற போது மனிதன் வறுமைக்கு அஞ்சியும், பொருளாசை காரணமாகவும் திருடும் தீயசெயலில் ஈடுபடுவது முறையாகுமா?

ஒரு பொருள் திருடப்படுவதன் காரணமாக பொருளை இழந்தவனுடைய மன உளைச்சலும் பேரிழப்பும் மிக அதிகமாக இருக்கின்றன.



உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நம் கவனத்தில் கொள்வோம்.



திருமணமான ஒரு பெண் தனிமையில் ரயிலில் பயணம் செய்தாள். திருடன் ஒருவன் அப்பெண்ணின் பணப்பையைத் திருடிச் சென்றுவிட்டான். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தபோது, இத்துயரச் சம்பவத்தை அப்பெண் விளக்கிச் சொல்லியும் அப்பெண்ணை சிற்றூரின் ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். சமூக விரோதிகள் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு மிருகவெறி மேலோங்கி அப்பெண்ணை கற்பழித்து விட்டார்கள். கற்பிழந்தபின் வாழ்வெதற்கு என்று அந்தப் பெண் ஏங்கி தற்கொலை செய்து கொண்டாள்.



திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது காட்டு மிராண்டித்தனம் என்று கூச்சலிடுகின்ற விவேகமில்லாத விமர்சர்கள் இந்த நிகழ்ச்சியை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.



ஒரு ரயில் பயணச்சீட்டுத் தானே திருடப்பட்டிருக்கிறது! ஆனால் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரல்லவா பலியாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கவனங்களினால்தான் திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் விதிக்கிறது.



உன்னுடைய குழந்தை என்னுடைய சகாக்களிடம் அகப்பட்டுக் கொண்டது. எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுத்திப் பொருள்பறித்த குற்றமாக கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால் தான் இந்தக் குற்றம் கொள்ளை ஆகும்.



390வது பிரிவில் கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பறித்தல் என்பது பற்றிய மேற்குறிப்பிட்ட உதாரண நிகழ்ச்சி தரப்பட்டிருக்கிறது.



பொதுவாக அசையும் பொருள்களை அனுமதியின்றி எடுக்கும் போது அது திருட்டுக்குற்றம் என்று சொல்லப்பட்டாலும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அனுமதியின்றி உபயோகித்தாலும் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.



தமிழ்நாட்டில் 1985ம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாரியம், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதற்காக D.K.K முதலியார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 378வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றம் இல்லையயன்றாலும் இந்திய மின்சாரச் சட்டம் 1901ன் 39வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 379வது பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (T.N.Electricity Board - V.D.K.K. Mudaliyar 1985 Cr.II 561(Mqd)



ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதை திருட்டு என்று கூறுகின்றோம்.

உதாரணமாக ஒருவருடைய தோட்டத்தில் உள்ள மரத்தை ஒருவன் வெட்டுகிறான். நாணயமற்ற முறையில் அப்படி வெட்டப்பட்ட மரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் செயல்பட்டால் மரம் வெட்டிய உடனேயே திருட்டுக் குற்றம் நிறைவேறி விடுகிறது.



ஒரு நபருடைய நூலகத்திலிருந்து அவருடைய சம்மதம் பெறாமலும் அவர் அங்கு இல்லாத போது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதனைப் படித்துவிட்டு திரும்பத் தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் புத்தகம் எடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தை அப்படி எடுப்பதற்கு நண்பர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது திருட்டுக் குற்றம் ஆகாது.



திருட்டுக் குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும் ஒருவன் தனது தாங்க முடியாத பசிக்காகவோ, இன்றியமையாத தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால் பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று ரீஅத் சட்டம் கூறுகிறது.



நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டக் கூடாது என்று உலகப் புகழ்பெற்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

மெத்தப் படித்தவர்களும் சில நேரங்களில் நவீனகால சூப்பர் மார்க்கெட் என்று சொல்கிற பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருளை திருடியிருக்கிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. லண்டன் மாநகரில் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இத்தகைய குற்றத்தைச் செய்ததை அங்குள்ள தொலைக்காட்சி காட்டிக் கொடுத்துவிட்டது.



இத்தகையவர்கள் இளம் வயதில் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளும் போத பெற்றோர் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதன் விபரீத விளைவுகள்தான் இது.



வீட்டில் நம் பிள்ளைகள் திருடும் போது சிறு பிள்ளை என்றும் நம் வீட்டில்தானே எடுத்தான் என்றும் காரணம் கூறி கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம்.



இப்பழக்கம் அவர்களிடம் ஊடுருவி பெரிய வயதான பின்னரும் எவ்வளவுதான் வசதி பெற்றாலும் அடுத்தவர்களின் பொருள்களைத் திருடுகிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களை மட்டமாக மதிப்பதைக் காண்கிறோம், என்று வேலூர் மல்லானா க்ஷி.கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.



www.nidur.info

இஸ்லாமியச் சட்டம் (2)

இஸ்லாமியச் சட்டம் (2)


நீடூர் A.M.சயீத், ரஹ்மதுல்லாஹி அலைஹி



முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்



ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.



கணவன், மனைவி இருவரும் தத்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி, ஒருவர் மற்றவரது உரிமைகளை மதித்து நடப்பவர்களானால் மணமுறிவுக்கு அவசியமே ஏற்படாது. இதில் யார் தவறு செய்தாலும் பிரச்சினை தான். பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல், அது பெரியதாகி விவாகரத்து வரை கொண்டு போய்விடும்.'மனைவியை அன்போடு நடத்த முடியாமல் பிரச்சினை முற்றினால், நல்ல முறையில் அவளைப் பிரித்து விடு' என்பது இஸ்லாத்தின் கட்டளை.



தகுந்த காரணங்களில்லாமல் திருமண இழப்பு ஏற்படக் கூடாது. இதனால் தான் 'அனுமதிக்கப்பெற்ற செயல்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமாக செயல் திருமணம் முறிவு தான்' என அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: இப்ன உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ , ( நூல் : அபூதாவூது)



சிறிய பிரச்சினைகளைத் தமக்குள் தம்பதிகள் தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாத போது பெற்றோர், அல்லது உறவினர் மூலமாக சமரசம் செய்து கொள்ள வேண்டும். சமரசத்திற்கு இடமின்றி, இனிமேல் அவன் அவளோடு வாழவே முடியாது என்ற நிலையில் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யலாம். இதை விடுத்து



அவளோடு இணக்கமாக வாழாமலும், பிரிந்து போக அனுமதிக்காமலும் துன்புறுத்தலாகாது. அவ்வாறு துன்புறுத்தினால் மனைவி திருமண இழப்புக் கோரலாம்.



இதற்காகத்தான் 1939 மார்ச் 17-ல் 'முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது. முஸ்லிம் ஒருவன் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விவாகரத்துச் செய்ய மறுத்து, பிணக்கின் காரணமாக மனைவியைத் துன்புறுத்திக் கொண்டிருந்தால், திருமண இழப்புக் கோர மனைவிக்கும் அனுமதி தர வேண்டும் என்ற நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றைக்காட்டி, திருமணமான ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.



1. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் போன இடம் தெரியவில்லை; கடிதமும் இல்லை; தகவலும் இல்லை; இந்நிலையில் 6 மாத காலக்கெடு கொடுத்து, திருமணம் முறிந்து விட்டதாகத் தீர்ப்பளிக்கப்படும். இதற்கிடையில் கணவன் திரும்பி வந்து மனைவியோடு வாழ விருப்பம் தெரிவித்தால் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்தாகி விடும்.



2. ஒருவன் தன் மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கைப்படி ஜீவனாம்சம் கொடுக்கத் தவறினால், மனைவி விவாகரத்துக் கோரலாம்.



3. கணவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்தால்.



4. தக்க காரணமேதுமின்றி கணவன் தன் கடமைகளை 3 ஆண்டுகள் வரை நிறைவேற்றத் தவறினால்,



5. கணவன் ஆண்மையிழந்தவனாக இருந்தால்



6. கணவனுக்கு பைத்தியம், தொழு நோய், பால்வினை நோய் ஆகியன ஈராண்டு காலமாக நீடித்தால்.



7. 18 வயது நிறைவடைவதற்கு முன்பு தந்தையாலோ, காப்பாளராலோ திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, உடலுறவு நிறைவு பெறாத நிலையில் 18 வயதுக்குள் அத்திருமணத்தை ஏற்க அவன் மறுத்திருந்தால்.



8. கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டால்



9. இஸ்லாமிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேறு காரணங்கள் இருந்தால்.



மனைவி திருமணத்திற்குப் பிறகு முஸ்லிம் கணவனோ, மனைவியோ மதம் மாறினால், அந்த நேரத்திலேயே இஸ்லாமிய சட்டப்படி திருமண ஒப்பந்தம் முறிந்து விடும்.



கணவன் மதம் மாறியதால், மனவூவி வேறொரு முஸ்லிமை மணந்து கொண்டால்; இதை அறிந்த முதல் கணவன் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து, தன் மனைவி மறுமணம் செய்த குற்றத்திற்காக வழக்கும் தொடர்ந்தான் என்றால், மனைவி குற்றமற்றவள் என்றே தீர்ப்பு வழங்கப்படும். கணவன் மதம் மாறியதால் மண ஒப்பந்தம் முறிந்து விட்டதே காரணம்.



இஸ்லாமிய சட்டப்படி மனைவி மதம் மாறினாலும் திருமண ஒப்பந்தம் முறிந்து விடும் என்பதே முடிவாகும். ஆனால் 1930-ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் 4-வது பிரிவின்படி, மனைவி மதம் மாறினாள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் முறிந்து விடாது. மாறாக அவளோடு வாழ கணவன் மறுத்ததால், 2-வது பிரிவில் தரப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றைக் காட்டி, அதை நிரூபிப்பதன் மூலம் தீர்ப்பினை பெற முடியும். இதுவே இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டமாகும்.



ஜீவனாம்சமும் ஷாஹ்பானு வழக்கும்



திருக்குர்ஆன் கூறுகின்றது:



'உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள். தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின், உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கோனுமாவான்.' (2:240)

'இன்னும் 'தலாக்' சொல்லப்பட்ட பெண்களுக்கு (இத்தா வரை கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும்.'(2:241) கணவன் மனைவி இடையே மணமுறிவு (



'தலாக்') ஏற்பட்டுவிட்டால், மனைவி 'இத்தா' இருக்கும் நாள்களில் கணவன் அவருக்கு பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) தர வேண்டும் என்பதை இவ்வசனம் தெளிவுப்படுத்துகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டே ‘இந்திய இஸ்லாமியர் சட்டம்' வாழ்க்கைப்படி எவ்வாறு தர வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஏற்கனவே 'மஹர்' தொகை கொடுக்கப்படாமலிருந்தால் உடனடியாக அதனையும் கொடுத்து விட வேண்டும் என்பது சட்டம்.

மனைவிக்கும் வாழ்க்கைப்படி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஹனபி, ஷாபிஈ, ஒயா ஆகிய சட்டப்பிரிவுகளிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஹனபி சட்டப்பிரிவின்படி கணவன், மனைவி இருவரின் அந்தஸ்துக்கு தக்கபடி வாழ்க்கை செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஷாபி சட்டத்தில் கணவனின் தகுதிக்கேற்பவும், ஒயா பிரிவில் மனைவியின் தரத்திற்கேற்பவும் நிர்ணயித்தல் வேண்டும்.



மணமுறிவுக்குப் பிறகு குழந்தைகள் 18 வயதை அடையும் வரை அவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பு தந்தையுடையதாகும். மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், தந்தையின் பொறுப்பு நீங்கிவிடுகிறது. இருந்தாலும் மகள் விதவையாகி வந்து நின்றால், அவளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தந்தையே ஏற்க வேண்டும்.



இந்தியாவில் 1898ல் குற்றவிசாரணைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் 488-வது பிரிவிலிருந்து தான், 1973-ல் உருவாக்கப்பட்ட 125, 127 ஆகிய பிரிவுகள் தோன்றின. அதன் விபரம் பின்வருமாறு.



சி.ஆர்.பி.சி.125-வது பிரிவு கூறுகிறது; 'போதுமான வசதி படைத்திருந்தும் எவரேனும் தன்னைப் பேணிக்காத்துக் கொள்ள முடியாத மனைவி, அல்லது அத்தைகய புறக்கணிப்பு, அல்லது பேணிக்காக்க மறுத்தல் ஆகியன மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், ஒரு முதல் வகுப்புக் குற்றவியல் நடுவநர், அந்த நபருடைய மனைவி, குழந்தை, தாய் அல்லது தந்தை ஆகியோரைப் பேணிக்காப்பதற்காக மாதந்தோறும் ஒரு தொகையினை அவர்களுக்கு அவர் அளித்து வரவேண்டும் என்று உத்தரவிடலாம். அத்தொகை மொத்தத்தில் மாதம் 500 ரூபாய்க்கு மேற்படலாகாது. குறிப்பு:- மனைவி என்பதில், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பின்னரும், அல்லது விவாகரத்து செய்து கொண்ட பின்னரும் மறுமணம் செய்து கொள்ளாதவளும் அடங்குவாள்.'



சி.ஆர்.பி.சி.127 (3-A) வது பிரிவு கூறுகிறது. 'கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண், அத்தகைய உத்தரவுக்கு முன்போ, பின்போ தன் கணவனிடமிருந்து குல வழக்கப்படியோ, அல்லது சொந்த சட்டப்படியோ விவாகரத்தின் போது அளிக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டார் என்று தோன்றினால் (1) அத்தொகை அந்த உத்தரவுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருப்பின் கணவன் அவளுக்கு அந்த மாதாந்திர தொகையை அளிக்க காலம் முடிவடைந்த தினத்திலிருந்தும் அந்த உத்தரவை ரத்து செய்யலாம்.' 1973 ஆகஸ்ட் 18-ம் நாள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து 'முஸ்லிம் பெண்களுக்கு இதில் விதிவிலக்கு வேண்டும்' என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டது.முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது என இந்திரா உறுதியளித்தார். அத்தோடு இன்றைய மத்திய அமைச்சர் ஆர்.என். மிஸ்ரா 18.12.1973ல் குற்ற விசாரணைச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது' என அறிவித்தார். இஸ்லாத்தில் திருமணம் என்பது பரியக் கூடிய கூட்டாகும். எனவே, திருமணம் செய்து வைப்பதோடு மகளைப் பராமரிக்கின்ற பொறுப்பு நிரந்தரமாக முடிந்து போவதில்லை. கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் மகளுக்கான பெற்றோர்களின் பொறுப்புப் புதுப்பிக்கப்படுகிறது.’ என டாக்டர் தாஹிர் 1984 ஆகஸ்டில் பம்பாயில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார்.



ஷாஹ்பானு வழக்கு



உச்சநீதிமன்றத்தில் ஷாபானு வழக்கு நடந்த போது டாக்டர் தாஹிரின் பேச்சு நகலும் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகளும் உச்சநீதிமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டன. அன்றைய தலைமை நீதிபதி சந்திரசூட் தமது தீர்ப்பில்; 1843-ல் ஐரோப்பியரான எட்வர்ட் லேன் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு தவறான முடிவுக்கு வந்தார்.



தலைமை நீதிபதிக்கும் அவரது உதவியாளர்களுக்கும் சட்ட நிபுணர் அமீர் அலி அவர்களின் 'வீக்ஷிசி றீPணூயூணூவீ நுய் ணூறீஸிபுனி' என்ற அற்புதமான நூல் கிடைத்திருந்தும், அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை. இதில் 'இஸ்லாத்தின் பெண்கள் நிலை' என்ற தலைப்பில் ஒரு முழு அத்தியாயமே உண்டு.

மேற்கண்ட திருவசனத்தில் (2:241) இடம் பெற்றுள்ள 'மதாஉ' என்னும் சொல்லுக்கு 'னிபுணூஹிவீசிஹிபுஹிளீசி' என மொழி பெயர்த்ததே கோளாறுக்கு காரணம். மெய்ன்டனன்ஸ்' என்பதற்கு வாழ்க்கைச் செலவுத் தொகை, பராமரிப்பு, பேணுகை ஆகிய பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. இதை வைத்து, 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணுக்கு, அவள் மறுமணம் செய்து கொள்கிற வரை வாழ்க்கை முழுவதும் ஜீவனாம்சம் தர வேண்டும் எனத் தீர்ப்பளித்தார் சந்திரசூட்.



(இன்ஷா அல்லாஹ், தொடரும்)



www.nidur.info

நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சி






இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.



தேவையான பொருட்கள்.



சிக்கன் (அ மட்டன் கீமா - 100 கிராம்

பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் - முக்கால் டம்ளர்



பச்ச பருப்பு - இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது) வெங்காயம் - ஒன்று பெரியது



தக்காளி - ஒன்று



தயிர் - ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி



கேரட் - அரை துண்டு

பச்ச மிளகாய் - ஒன்று



மிள்காய் தூள் - அரை தேக்காண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி



உப்பு - தேவைக்கு எண்ணை - ஒரு தேக்கரண்டி



நெய் (அ) டால்டா - ஒரு தேக்கரண்டி தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி



பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று



வெந்தயம் = கால் தேக்கரண்டி



கொத்து மல்லி தழை - சிறிது புதினா - சிறிது





செய்முறை



1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.



குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.



அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.



வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)



இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.



தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.







தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.



தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.



நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.



குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.



ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.



சுவையான நோன்பு கஞ்சி தயார்.







இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.



குறிப்பு.



குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.



இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.



நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.



இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.



Courtesy: allinalljaleela.blogspot.com



Thanks to=        nidur.info