Tuesday, November 12, 2013

பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.

உடல் நன்றாக இருக்க இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் கோளாறு ஏற்படின் உடல் பாதிப்பு ஏற்படும் .ஊர் ஒற்றுமை உடலின் இதயம் போல் . உலகமே நம் கையில் கிடைத்தாலும் இதயம் கெட்ட பின் பயனில்லை.
ஒற்றுமை பற்றி நிறைய பேசி சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் எல்லா முயற்சிகளும் எடுத்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் .விட்டுக்  கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. '.ஊர் இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம் ' என்பது அனைவரும் அறிந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

   பதவிக்கு வருமுன்பு அந்த பதவிக்கு வருபவர் தான் அந்த பதவிக்கு தகுதியானவரா! என சிந்திக்க வேண்டும் . அவர் சேவை செய்யும்  மனமுடையவராகவும் அதனை திறம்பட செயல்படுத்தக் கூ டியவராகவும் இருக்க வேண்டும் . பதிவியினை ஒருவருக்கு கொடுத்த பின் அவருக்கு மதிப்பளித்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது.

இஸ்லாம் பரம்பரை பதவிக்கு முக்கியம் கொடுக்காமல் மக்களின் ஒற்றுமையுடன் தேர்ந்ததெடுப்பதனையே விரும்புகின்றது. நாயகம் காலத்திற்கு பின்பு முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி)  அவர்கள் பெரும்பான்மை சஹாபாக்களின் ஆதரவுடன் தலைமை பொறுப்பினை எடுத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய முறையே ஜனநாயக முறைதான் . இதனையே அனைவரும் பின்பற்ற வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.
பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும்பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள்விசாரிக்கப்படுவாள்.
பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்''
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு)
நூல்: புகாரீ

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.   ( அல் குர் ஆன் 6:165.)

'நிச்சயமாக உங்களுடைய பொறுப்பாளர்கள் அல்லாஹ்வும் அவனது தூதுவரும் ஈமான் கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ருகூவின் நிலையில் ஸக்காத்தும் கொடுத்தார்களே அவர்கள் தாம்.                                       (சூரா மாயிதா:55)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
(நூல் - புகாரி - 6496)

பதவி நமக்கு இறைவனால் அருளப் படும்போது அதனை ஏற்க மறுப்பது கூடாது. பதவிக்கு வந்த பின் அந்த பதவியினை முறையாக செயல்பட   முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு நீங்கி விட வேண்டும்.

(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
( அல் குர் ஆன் - 17:21)

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(நூல்: புகாரி)
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
( அல் குர் ஆன் - 17:21)

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(நூல்: புகாரி)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
(நூல் - புகாரி - 6496)

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
அல் குர் ஆன்(5:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.
அல்குர்ஆன் (35:10)

No comments: