Friday, December 30, 2016

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -


வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க  இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...

பணம்,

சொத்து,

கௌரவம்???

  நாம் இறக்கும்  போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

வேறு யாருக்காவது  சொந்தமாக!

 மீதி நாம்  நமக்காக விட்டுச் செல்வது  என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!

அந்த மக்கள் மனதில் நிற்கும் !

புத்தாண்டு 2017 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை

 நம்பிக்கையே வாழ்வு.
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
 நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய்து  அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
 ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]இன்புடன் வாழலாம் !

 ( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
 நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
          கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
          பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
          இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

          பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
          அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
          தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
          வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

உலகத்தை நினச்சேன்....சிரிச்சேன்

Dr.Vavar F Habibullah
வாரிசு விவகாரத்தில்... கிரேக்க, ரோம
சாம்ராஜ்யம் தொட்டு அனைத்து உலக அரசியல்
கோபுரங்களும் தலைகீழாக புரண்ட வரலாறுகள் சிந்திக்க தூண்டுகிறதோ இல்லையோ நம்மை வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறது.
மகன், மகா அலக்சாண்டரை பதவியில் அமர்த்த கணவன்.. மன்னன் பிலிப்பை மகாராணியார் ஒலிம்பியா கொன்றாராம்.இளம் வயதிலேயே மாண்டு போன மகனின் வாரிசுகள் எதுவும் அலக்சாண்டரைப் போல் கிரேக்கத்தை கட்டியாள முடியவில்லை.மகாராணியாரை நாட்டு மக்களே கல்லால் அடித்து கொன்றது தான் கிரேக்க சாம்ராஜ்ய வரலாறு.
ரோமில், ஜூலியஸ் சீசர் மன்னனாக முடி சூட பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.நண்பர்களை கொன்றே பதவிக்கு வந்த சீசர்... நண்பன்,
புரூட்டஸ் கரங்களால் கொல்லப்பட்டது தான் வேடிக்கை.சீசருக்கும் அவன் காதலி எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவுக்கும் பிறந்த மகன் ரோமை அரசாள்வான் என்று பார்த்தால்... அவனை கொன்றொழித்து ஆட்சியை கை
பற்றுவதில் குறியாக இருந்தான் சீசரின்
மருமகன் அகஸ்டஸ். கிளியோபாட்ரா தற்கொலை செய்தது வேறு விஷயம்.
ரஷயாவின், ஜார் மன்னனை விட்டார்களா அவனது எதிரிகள். இல்லை... அவனது
வாரிசுகளைத்தான் விட்டு வைத்தார்களா...

நகரத்து தார்ச்சாலை ....!

ஒரு பகல்நேர வேணாவெயிலில்
கொதிக்கும் தார்சாலையில்
கானல்நீர் வழிந்தோடி
வெம்மையின் தணலை
பதம்பார்த்துக் கொண்டிருந்தது
பரபரப்பாக விரைந்தோடும்
வாகனங்கள் வரிசையை
விட்டுவிலக்காமல்
குளிரூட்டலில் வெளிவெக்கையை
அறியாத பயணிகளை சுமந்தபடி
நேர்கோட்டில் பயணிக்கின்றன
பக்கவாட்டுப் பாதையில்
பாதசாரிகள் நடைபோடுகின்றனர்

கொஞ்சம் யோசித்தேன் ...

முயன்றிடு
வெற்றி கொள்வாய் ...
பயின்றிடு
அறிவை பெருக்குவாய் ...
பயிரிடு
அறுவடை செய்வாய் ...
உழைத்திடு
உயர்வை அடைவாய் ...
துணிந்திடு
அச்சம் தவிர்ப்பாய் ...
பணிந்திடு

முஹம்மது அசத் (Leopold Weiss)யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர்

பட உதவி /source
முஹம்மது அசத் - யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இவரின் இயற்பெயர் Leopold Weiss. அரசு தூதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் ஆகிய இவர் தற்போது உக்ரைன் நாட்டில் உள்ள லேம்பெர்க் என்ற பகுதியில் 1900 இல் பிறந்தார். ஜெர்மனி நாட்டில் 1926 இல் இஸ்லாத்தை தழுவிய இவர், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஆனார். தனது 92 ஆம் வயதில், ஸ்பெயினில் இவர் காலமானார். இவர் எழுதிய இரு புத்தகங்கள் பிரபலமானவை:

பட உதவி /source
ஒன்று, The Road to Mecca. மற்றொன்று, The Message of the Quran.
The Road to Mecca 

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம்

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம் என்கிற கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பற்பல கதைகள் ஆதாரமின்றியும், ஆதாரங்கள் போல காட்டியும் உலா வந்தவண்ணமிருக்கின்றன.
இன்னொரு பக்கம்,உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் 'கைப்பேசியில் கிடைப்பது கட்டாயம் ஃபார்வர்டு செய்வதற்கே'என்ற அடிப்படையில் ஒரு கூட்டம் உடனடியாக முன்னெடுத்து அனுப்பிப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது. இவர்கள் தாம் Forward Community ஆக ஆசைப்படுபவர்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சு வை என்று வலுக்கட்டாயப்படுத்தும் வாதச் சிரிப்புகளுக்குக் கூட வாய்கோணிச் சிரித்துத் தொலைத்துவிடலாம், இந்த யூக அடிப்படையிலான கதைகளுக்கேனும் யாராவது கடிவாளம் போட வேண்டியிருக்கிறது.

Thursday, December 29, 2016

நாற்பதுகளை நெருங்குகையில்

நாற்பதுகளை நெருங்குகையில்
நீ மிகுந்த பதட்டத்துடன் உன் உடலை
மீண்டும் மீண்டும் பரிசோதித்துக் கொள்கிறாய்
உன் பால்யகால தோழிகளை
விசேஷ வீடுகளில் சந்திக்க நேர்கையில்
புத்தம்புதிய நோய்களை அறிந்து கொள்கிறாய்
அந்நோய்கள் உன் படுக்கையறைக்குள் பதுங்கியிருந்து
தாக்குவதாகக் கனவுகண்டு
திடுக்கிட்டெழுந்து வியர்த்து விதிவிதிர்க்கிறாய்
இன்னும் முதுமையின் நிழல் படியாத கணவனின்
வேகத்துக்கு ஒத்துழைக்க முடியாத இயலாமை உறுத்த
அவன் வேறுயாரோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும்
திருமணம் செய்துகொள்வதாகவும்
மதியச் சிற்றுறக்கத்தில் பகல்கனவு கண்டு நிம்மதி தொலைக்கிறாய்

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....! .................................கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

சோலையிலே ஓர் ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி.....!
சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந்தோடியது
வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே
வாவென்ற ழைத்துமே கூவுதடி.....!

Tuesday, December 27, 2016

வாழ்த்துக்களால் மனங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதே மனிதச் செயல்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து தர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்த தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த நாடுகளெல்லாம் முஸ்லிம் நாடுகளில்லை.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் உண்டு. அமெரிக்காவே இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தவில்லை.
இங்கேயும் எங்கேயும் நாம் எல்லோரோடும் இணங்கி வாழ வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.
எல்லா நாடுகளும் இஸ்ரேலைப்போல வெறிகொண்டலைந்தால் உலகம் அழிந்தே போகும்.

Saturday, December 24, 2016

சூழலை புரிந்து வாழ்வோம் ...

J Banu Haroon

சூழலை புரிந்து வாழ்வோம் ...
இப்போதுள்ள சூழலில் அடிக்கடியான விழாக்கள் , விருந்துகள் ,ஆடம்பரங்கள் குறைந்து காணப்பட்டாலும் ...என்றுமே கேளிக்கைகளும் ,விருந்தும் ,வெட்டி ஆடம்பரங்களும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நம்மவர்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும் ...
பெரிய பணக்காரர் தேவையில்லாமல் பதினெட்டு வயது நிரம்பாத தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு டூ வீலர் வாங்கித்தந்து வெற்று ஆடம்பரத்திற்காக உலா வர செய்தாரென்றால்....இல்லாதவரும் தன் பிள்ளைக்கு கடன் பட்டு வண்டி வாங்கித்தந்து பதில் ஆடம்பரம் செய்கிறார் ...படிப்பில் கவனம் கொள்ள வேண்டிய வயதில் ஓட்டுனராக்கி அழகு பார்ப்பதில் என்ன ஒரு ஆனந்தம் ...பெற்றவர்களுக்கு !..அறியாமைதான் ....
முதலில் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதீத கவனம் வையுங்கள் .கார் ஓட்டிப்பழகுவதில் வேண்டாம் ...பிறகு தானே தேவைப்படும்போது அதையெல்லாம் கற்றுக்கொள்வார்கள் .

Friday, December 23, 2016

வாசிப்பு - ஒரு கலை !


   
     'வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்' என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது 'வாசிக்கும் கலை' எனப்படுகிறது.

            வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S - Survey ( தேடிப் பார்த்தல்)
Q - Question ( கேள்வி எழுப்புதல்)
R - Read (வாசித்தல்)
R - Retrive ( மீளவும் பார்த்தல்)
R - Review (விமர்சித்தல்)

Thursday, December 22, 2016

யா அல்லாஹ் ....!

ராஜா வாவுபிள்ளை
பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யாஅல்லாஹ் !
வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ் !
பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ் !
புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் !
உனது கட்டளைகளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே
சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ் !

பெண்ணீயம் என்கிற பித்தலாட்டம்

'பெண்களுக்கு சம உரிமை வேண்டும்’ என்று நம் நாட்டில்
சில சமூக அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதில் சேலை கட்டிய ஆண்களும் பேண்ட் போட்ட பெண்களும்தான் அங்கம் வகிக்கின்றார்கள்.
சில அரசியல் இயக்கங்களும் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வப்பொழுது இதைக் கையில் எடுத்து கொண்டு ஆர்ப்பரித்து வருவதையும் காண்கிறோம்.
உண்மையில் சிந்தித்துப் பார்த்தால்,
நமது தேசத்தில் பெண்களுக்கு இயல்பாகவே தரப்படும் அன்பும் மரியாதையும் பாசமும் நேசமும் ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை விட அதிகம்.
பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும்தான் நாமெல்லோரும் பார்க்கிறோம்;நினைக்கிறோம்.

Monday, December 19, 2016

கைக்கடிகாரம் ....!

கையில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளவேண்டும் என்பது நடுநிலைப்பள்ளி மாணவனாக இருக்கும்போது பதிமன் பருவத்து இயல்பான ஆசைகளில் ஒன்றாகும்.
வயது இருபதை தொட்டு வேலையிலும் சேர்ந்துவிட்டால் விதவிதமான கைக்கடிகாரம் வாங்கியணிந்து அழகு பார்ப்பது எண்பதுகளில் இளைஞர்களுக்கு ஒரு ஆடம்பர மோகமாக இருந்தாலும் அதில் தீங்குகள் ஏதுமில்லை.
மேற்சொன்ன அந்த ஆனந்த நிகழ்வுகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் பாருங்கள், எண்பதுகளில் உகாண்டாவின் பாதுபாப்பு சூழ்நிலைகள் அச்சுறுத்துவதாக இருந்தது. பலமுறை வன்முறை சாவுகளை நேரில் பார்த்தும், துப்பாக்கி முனையில் கணங்களை கழித்தும் உண்டு.

Thursday, December 15, 2016

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்

அந்த வழியில் கீழுள்ள எனது காணொளிகளை HD வடிவில் மாற்றி  Youtube ல் இணைத்தேன். காணொளிகள் சிறப்பாக இருந்தன. கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. இணைத்த காணொளிகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். பார்த்துப் பயனடையவும்.

32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை பயன்படுத்தும் முறை.
How to teach  "32 Tamil Teaching Cards - HD"

Wednesday, December 14, 2016

மறுநாள் காலையில்

மறுநாள் காலையில்
----------------------------------
நேத்து காலை 11 மணிக்கு போன மின்சாரம் இன்னும் வரல. கொசுவோட ராத்ரி பூரா போராட்டம். தூக்கம் போச்.
விடிஞ்சதும் விடியாததுமா சிடி ரவுண்ட்ஸ். எங்க பாத்தாலும் மரங்கள். வேரோடு சாஞ்சு கெடக்கு. எங்க ஏரியால மட்டும் 60 மரத்துக்கு மேல டவுன். பார்க்ல யாரோ ராட்சசன் சடுகுடு ஆடின மாதிரி இருக்கு.
பக்கத்துல குஷ்பு வீடு. தெரு முனைல இருந்து பாத்தா வீரப்பன் காடு மாதிரி தெரிஞ்சுது. அடுத்தாப்ல மினிஸ்டர் ஜெயகுமார் இருக்கார். அதனால அந்த நேரத்துக்கே ஆபீசர்ஸ் ஆஜர்.
எம்.எஸ்.வி வீட்டுக்கு எதிர்ல ஒரு தெரு. சாந்தோம் ஐரோடையும் ராமகிருஷ்ண மடம் ரோடையும் லிங் பண்ற மந்தவெளி தெரு. எண்ணிகிட்டே போனா 29 மரம் சாஞ்சிருக்கு. அது பெருசுல்ல. 51 மரம் அப்டியே நின்னுது. ஒரு தெரு இப்டின்னா மொத்த சிட்டி ஊகிச்சுக்கலாம்.
எல்லா தெருவுலயும் டீம் டீமா வந்த ஆளுங்க பெரிய எலக்ட்ரிக் பிளேடு வச்சு மரத்த வெட்டி ஓரமா தள்ளிட்டு போய்ட்டே இருந்தாங்க. ஆட்கள் நடக்கவும் டூவீலர் போகவும் கேப் கிடைச்சா அதோட போயிட்றாங்க. க்ளீனப்புக்கு அடுத்த டீம் வரும்னு ஒரு ஆபீசர் சொன்னார்.
பால் சப்ளை பாதிக்காதுனு மினிஸ்டர் சொன்னதா தந்தி பேப்பர் நியூஸ். ஆனா பால் வராம பல இடங்கள்ல கூட்டம் கூச்சல். மின்சாரம்கூட ராத்திரியே குடுத்துருவோம்னு இன்னொரு மினிஸ்டர் தந்தில சொல்லிருந்தார். சொல்லி 18 மணி நேரம் தாண்டியும் வரல.

Tuesday, December 13, 2016

ஆறுதலாய் ஆயிஷா ரஃபீக் எழுதிய அருமை வரிகள்.

இதுதான் ஆயிஷா ரஃபீக் எழுதிய  வரிகள்....
"அடித்த காற்றில், அருகிலிருந்த மரங்ககளில் அயர்ந்திருந்த பறவைகள் தூக்கிவிசப்பட்டது. எனக்கு வீடிருக்கு... பாதுகாப்பாய் இருக்கிறேன். பாவம் அந்த பறவைகள். எங்குதான் செல்லும்? அழுகை வந்தது. அதற்கு ஆறுதலாய் எழுதினேன்....."
                                  ஆயிஷா ரஃபீக்                               Rafeeq Sulaiman 
                       

பிறவிப் பயனை அடைவேன்....!


விழித்தே இருந்தேன்
உயிர்ப்பெறும் கனவுகள்
கண்டிருந்தேன்

உழைத்தே இருந்தேன்
வியர்வையின் வலியை
அறிந்தேன்

நடந்துகொண்டே இருந்தேன்
நல்வழிகள் பலவும்
கண்டேன்

Friday, December 9, 2016

COPY AND PASTE

Dr.Vavar F Habibullah
எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரை சில விசயங்களில் காப்பி அடிக்கிறோம்.அது இயற்கை.
நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் நம் அருகில் உள்ளோரிடம் இருந்தே முழுமையாக கற்றுக் கொள்கிறோம்.குழந்தைகள் தங்கள்
பெற்றோரிடம் இருந்தே வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விசயங்களை கற்று தேர்கின்றன.
நம் கல்வி அறிவும் பிறர் கருத்துக்களை
கேட்டறிந்தே விருத்தியடைகிறது. பிறரது படைப்புகளை ரசிப்பது மேற்கோள் காட்டுவது எல்லாம் அறிவு வளர துணை புரிகின்றன.
பிறரது அயராத உழைப்பின் பலனே நாம் இன்று கட்டி காக்கும் பொக்கிஷங்கள், நாம் காணும் பண்பாடுகள், நாகரீகங்கள் புதிய கண்டு பிடிப்புகள் தொழில் நுட்பங்கள் எல்லாம் ஆகும்.

Thursday, December 8, 2016

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம்

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம் என்கிற கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பற்பல கதைகள் ஆதாரமின்றியும், ஆதாரங்கள் போல காட்டியும் உலா வந்தவண்ணமிருக்கின்றன.
இன்னொரு பக்கம்,உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் 'கைப்பேசியில் கிடைப்பது கட்டாயம் ஃபார்வர்டு செய்வதற்கே'என்ற அடிப்படையில் ஒரு கூட்டம் உடனடியாக முன்னெடுத்து அனுப்பிப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது. இவர்கள் தாம் Forward Community ஆக ஆசைப்படுபவர்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சு வை என்று வலுக்கட்டாயப்படுத்தும் வாதச் சிரிப்புகளுக்குக் கூட வாய்கோணிச் சிரித்துத் தொலைத்துவிடலாம், இந்த யூக அடிப்படையிலான கதைகளுக்கேனும் யாராவது கடிவாளம் போட வேண்டியிருக்கிறது.

ஊடகங்களின்_காழ்ப்புணா்ச்சி!!தமிழக முதல்வா் செல்வி ஜெயலலிதா அவா்கள் உடலுக்கு #முன்னாள்_தமிழகத்தின்_கவர்னர்_பாத்திமா_பீவி அவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். நான் அதனை பார்த்தேன். ஆனால் ஒரு மீடியா கூட பெயரை உச்சரிக்கவில்லை்
இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் முதல் பெண் தலைமை நீதிபதி பாத்திமா பீவி அவர்கள். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தமிழக கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது. அவ்வளவு சாதாரணமா இவர்களுக்கு ஆகிவிட்டது. அவர்கள் பெயரை உச்சரிக்க கூட முடியவில்லை. இதுவெல்லாம் காழ்ப்புணர்வின் உச்சம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

*நமது முதல்வரின் உண்மையான முகம்.*

*நமது முதல்வரின் உண்மையான முகம்.*

இந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.

Rendezvous With Simi Garewal என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், ஒரு சராசரிப் பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்க்கலாம். தன் இளைமைக்காலம் முதலான சுயசரிதம் பற்றி பேட்டியாளரான அவரது தோழியும் அவர் காலத்து இந்தி நடிகையுமான சிமி க்ரேவல் என்பவரிடம் அவரே கூறும் பேட்டி இது...

இந்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

Wednesday, December 7, 2016

பிறகும் தொடரும் தீவின் மழை

மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.

 -எம்.ரிஷான் ஷெரீப்,

பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்


-----------------------------------------------------

Monday, December 5, 2016

வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்


உமது புகழ் காலமெல்லாம் தொடரும்
முதல்வரின்  ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
செய்த சேவைகள் ,மக்கள் தரும் வாழ்த்துகள் உமது நன்மைகளாக உம்மை
உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .
அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது
இந்தியாவில் மறக்க முடியாத
வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்
நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது

Friday, December 2, 2016

தங்கங்களே...

தங்கம் குறித்த சட்டத்தை கேலி செய்ய வேண்டாம், என்று இன்பாக்சில் ஆலோசனைகள் வருகின்றன. உங்களிடம் வருமானத்துக்கு அதிகமான தங்கம் இருக்கிறதா? இல்லை என்றால் பிறகென்ன கவலை என்று கேள்விகள் வருகின்றன.
என்னிடம் கவலைப்பட வேண்டிய அளவுக்கு ஏதும் கிடையாது. (வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதை மீட்க அரசு ஏதாவது உதவி செய்யுமானால் மகிழ்வேன்.) புழக்கத்திலிருக்க வேண்டிய பணத்தை தங்கமாக முதலீடு செய்வது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிற தத்துவங்கள் எனக்கும் தெரியும். வாயைக் கட்டி சேமித்து வாங்கும் தங்கத்தை ஒரு ஃபால்பேக் ஆப்ஷனாகவே மக்கள் கருதுகிறார்கள் என்கிற நடப்பும் தெரியும்.
அவ்வளவு ஏன், என் மனைவிக்கு மாமானார் கொடுத்த 10 பவுன் தங்கத்தை விற்றுத்தான் சென்னையில் மனை வாங்கினேன். அந்த மனையை விற்றுத்தான் இப்போதைய தொழிலுக்கு முதல் லேசர் பிரின்டர் வாங்கினேன்.
அதுவல்ல இப்போதைய விஷயம்.

Thursday, December 1, 2016

தருணங்களின் தலைவர்...! ( ---3--- )


Hilal Musthafa
எம். ஏ. லத்தீப் சாஹிபின் மாணவப் பருவம் தி.மு.க. சார்புடையதாக இருந்தது.பின்னைய நாள்களில் தி.மு.க. அமைச்சராக இருந்த அக் கட்சியின் இன்றைய மூத்த தலைவர் துரைமுருகன் இவரின் சட்டக் கல்லூரி மாணவத் தோழர். நீடூர் செய்யது அண்ணன் சகோதரர் முகமது அலி
சாஹிபும், லத்தீப் சாஹிபிற்குச் சட்டக் கல்லூரித் தோழர்தான்.
துரைமுருகனும், லத்தீபும் சந்திக்கும் போதெல்லாம் வாடா போடா என்று ஒருமையில் பேசிக் கொள்வார்கள். நட்பிலும் தோழர்கள். தி.மு.க. அபிமானத்திலும் கொஞ்சம் அணுக்கமானவர்கள்.
இதற்காக எவரும் லத்தீப் சாஹிபைக் குற்றம் பிடிக்க முடியாது.
முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் பலரும் , காயிதெ மில்லத் உட்பட, காஙகிரஸ்காரர்களாக இருந்து முஸ்லிம் லீகர்களாகப் பரிணாமங் கண்டவர்கள்தாம்.
காயிதெ மில்லத்தின் தம்பியும், தாய்ச்சபையின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான K.T.M. அஹமது இப்றாஹிம் சாஹிப் மட்டும் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் லீகர்.
காயிதெ மில்லத்தைப் பற்றி நகைக் சுவைக்காக் குறிப்பிடுவார். " இவர் பழைய காங்கிரஸ்காரர். நான் மட்டும்தான் எல்லாக் காலத்திலும் முஸ்லிம் லீகன்" என்று கே.டி.எம். குறிப்பிடுவார்.
மீண்டும் வாணியம்பாடி தொகுதியில் லத்தீப் சாஹிப் வெற்றி பெற்றார்
இந்தக் கால கட்டங்களில் எல்லாம் முஸ்லிம் லீகின் அனல் தெறிக்கும்
மேடைப் பேச்சாளராக வீரியம் பெற்று விட்டார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகள் தோறும், பட்டிணங்கள் நகரங்கள் அனைத்தும் லத்தீப் சாஹிப் மேடை அணிவகுத்தன. தமிழகத்தைத் தாண்டியும் அண்டை மாநிலங்கள்
வெளிநாடுகள் பலவற்றுள்ளும் பலப்பல முறைகள் அவரின் மேடைகள் அதிசயங்கள் நிகழ்த்தின.
இறைவன் அவருக்கு மிகப் பெரிய அருள் வழங்கி இருந்தான், பல மொழி களைச் சரளமாகப் பேசும் ஆற்றல்தான் அது.
சுமார் ஒன்பது மொழிகளுக்கு மேல் பேசக் கற்றிருந்தார். ஒரு முறை அவரும் கவிஞர் தா.காசிமும் இஜட். ஜபருல்லாஹ்வும் நானும் மேல் விசாரத்திற்குப் பொதுக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம்.
வழியில் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம். சர்க்கரை
நோய்க்காரர். காரை சாலை ஓரமாக ஒதுக்குப் புறத்தில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றது. உபாதை கழித்து விட்டு வந்தார்.
காரில் ஏறும் போது சில நரிக்குறவச் சிறுவர்கள் காசுக்குக் கூடிவிட்டார்கள்.
லத்தீப் சாஹிப் அந்தச் சிறுவர்களுடன் அவர்கள் மொழியில் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குப் படு குஷி. சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது.
மீண்டும் காரில் புறப்பட்டோம். கவிஞர் தா.காசிம் , கேட்டார் " இது எப்போது.? இந்த மொழியும் பேச ஆரம்பிச்சிட்டாங்களா "? என்று.
லத்தீப் புன்முறுவலுடன் சொன்னார். " அது ஒன்னுமில்ல கவிஞரே! என் வீட்டுப் பக்கம் (சென்னை ) இவர்கள் வசிக்கிறார்கள்.சில நேரம் அவர்களுடன் பழகிப் பேச ஆரம்பிச்சுட்டேன் " என்று.
இதன் பின் நரிக்குறவர் பற்றி ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியில் துறை அறிஞர் பேராசிரியர் டாக்டர் திண்ணப்பனாரிடம் நரிக்குறவர் மொழி பற்றிக் கேட்டேன். அவர் சொன்னது இன்னும் ஆச்சர்யம் கலந்திருந்தது. அதைத் தனிப் பதிவில் போடுகிறேன்.
லத்தீப் சாஹிப் இறுதியாக் கற்ற மொழி அநேகமாக அதுவாகத்தான் இருக்க முடியும்.
மகத்தான பேச்சாளர். என் போன்றோர் அவர் பேச்சில் பிரமித்திருக்கிறோம்.
ஆனால் அவற்றால் சமூகம் பெற்றிருந்த ஆக்கப் பூர்வமான நன்மைகள் எத்தனை?
சதா சமுதாயப் பணிகள் ஆற்றியிருக்கிறார். பேச்சினால் புரிந்திருக்கிறாரா?
ஒரு கட்டத்தில் பேரணாம் பேட்டைத் தொகுதிக்குள் இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தோல் தொழிலும் அது சம்பந்தமான தொழிலும் செய்து வந்தனர். வசதியும் பரவாயில்லை என்ற நிலைதான். தலித்துகள் தொண்டுத் தொழில் செய்து வந்த பாமர மக்கள் . இவர்களுக்கு மத்தியில் சமூக விரோதிகள் விஷத்தைக் தூவி விட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தலித் பெருமக்களைக் கலவரத்துக்குத் தூண்டி விட்டார்கள்.
முஸ்லிம்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வயல் வெளிகளில் தீ நர்த்தன மாடியது.
அந்தக் கலவரப் பகுதிக்கு உடனே நேரடியாகச் சென்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் சாஹிப்தான். பேரணாம் பேட்டை அவர் தொகுதி இல்லை. ஆனாலும் அங்கே பாய்ந்து சென்றார்.
இரு பக்கத் தலைவர்களையும் அழைத்து சமாதனம் பேசிக் கொண்டிருந்தார். சமாதானக் கூட்டம் இரவு 8 - மணிக்குக் கூடியது.
பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. இரவு 12--மணிக்கு நல்ல விதமாகச் சமாதானதக் கூட்டம் முடிவு அடைந்தது.
அந்த நேரத்தில் முஸ்லிம்கள் சிலர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். வயல் வெளிகளில் தீப்பற்றி எரிவதாகக் கதறுகிறார்கள்.
செய்தி கேட்டு லத்தீப் சாஹிப் அந்தப் பகுதிக்கு விரைந்து செல்லத் துடிக்கிறார் . சமாதானக் கூட்டத்தார் இருபாலரும் நிலைமை உணர்ந்து
லத்தீப் சாஹிபைத் தடுக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் அருகில் நின்றிருந்த எவருடைய சைக்கிளையோ படீரென்று எடுத்துக் கொண்டு தானே ஓட்டிக் கொண்டே தனியாக விரைந்து விட்டார். அங்கிருந்தவர்கள் பயந்து விட்டார்கள். நள்ளிரவு 12--மணிக்கு மேல் சைக்கிளில் தனியே செல்கிறார்.
நின்றிருந்த சில போலிசாரும் இன்னும் சிலரும் நிலைமை அறிந்து புறப்பட்டனர். தூரத்தில் சிறு கூட்டம் வருவதைப் பார்த்து சமூக விரோதிகள் ஓடியே விட்டார்கள். மீதி வயல்கள் பாதுகாக்கப் பட்டன.
லத்தீப் சாஹிபிற்கு முன்னரும் பின்னரும், இன்றுவரை எந்த ஒரு சமுதாயத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியதில்லை.

THE INTERVIEW

Vavar F Habibullah
THE INTERVIEW
பணத் தட்டுப்பாடு காரணமாக அகில இந்தியாவும், பேஸ்புக் உலகும், மீடியாவும் மக்களும் தங்கள் உள்ளக் குமறலை
தினந்தோறும் வெளிப்படுத்திக்
கொண்டிருக்கும் வேளையில்......
டி.வி பக்கமே போகாத நான், இன்று பட்டனை
தட்டிய நேரம்... என்னை கவர்ந்த ஒரு சினிமா டைட்டில் தான் - "தி இண்டர்வியோ".
தொடக்கமே விரு விருப்பாக இருக்கவே கதை ஓட்டத்தை, வசனத்தை கூர்ந்து கவனிக்க துவங்கினேன்.
இது முழுக்க ஒரு அரசியல் படம்.
நார்த் கொரியாவின் டிக்டேடர் கிம் ஜாங்க் பற்றிய படம்.
அதிபரை இண்டர்வியோ செய்ய அமெரிக்க நாட்டின் இரு ஜர்னலிஸ்ட் வருகிறார்கள்.
சற்று காட்டமாகவே துவங்கும் பேட்டியில் கிம் ஜாங்க் கொடூரமாகவும் கோபமாகவுமே பதில் தருகிறார்.
இண்டர்வியோ பாணியை திடீரென்று மாற்றும் நிருபர்கள், கிம் ஜாங்கின் கடந்த கால இளமை பருவத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களை ஓவ்வொன்றாக விவரிக்க (early days physical and mental abuse especially by the father) வேதனை தாள இயலாத கிம் ஜாங்க் டி.வி.யின் முன் ஒரு குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுகிறார்.
அந்த காட்சியை கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் பார்த்து அதிசயிக்கிறார்கள். முடிவில் பயத்தில் உரைந்து போன கிம் ஜாங்க் சிறுநீரை பாண்டிலேயே கழித்து விடுகிறார். உலகையே அச்சுறுத்தும் கிம் ஜாங்கின் மற்றொரு கோழைமுகம் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.
தன்னை 'கடவுள்' என்று மக்களை நம்ப
வைக்கும் தலைவன் (the cult personality of the leader) கூட பயந்தால் சாதாரண மனிதனைப் போல் தான் சிறுநீர் கழிக்க வேண்டியது வரும்.
வசனங்கள் கேட்க மிகவும் அருமை....
கோடிக்கணக்கான பணத்தை வசூலில் அள்ளி குவித்த இந்த படம் சோனி நிறுவனத்தின் ஒரு மெகா ஹிட் ஆகும்.
டி.வி சேனல்கூட மக்கள் மனம் அறிந்தே சில படங்களை தேர்வு செய்கின்றன.
THE INTERVIEW
பணத் தட்டுப்பாடு காரணமாக அகில இந்தியாவும், பேஸ்புக் உலகும், மீடியாவும் மக்களும் தங்கள் உள்ளக் குமறலை
தினந்தோறும் வெளிப்படுத்திக்
கொண்டிருக்கும் வேளையில்......
டி.வி பக்கமே போகாத நான், இன்று பட்டனை
தட்டிய நேரம்... என்னை கவர்ந்த ஒரு சினிமா டைட்டில் தான் - "தி இண்டர்வியோ".
தொடக்கமே விரு விருப்பாக இருக்கவே கதை ஓட்டத்தை, வசனத்தை கூர்ந்து கவனிக்க துவங்கினேன்.
இது முழுக்க ஒரு அரசியல் படம்.
நார்த் கொரியாவின் டிக்டேடர் கிம் ஜாங்க் பற்றிய படம்.
அதிபரை இண்டர்வியோ செய்ய அமெரிக்க நாட்டின் இரு ஜர்னலிஸ்ட் வருகிறார்கள்.
சற்று காட்டமாகவே துவங்கும் பேட்டியில் கிம் ஜாங்க் கொடூரமாகவும் கோபமாகவுமே பதில் தருகிறார்.
இண்டர்வியோ பாணியை திடீரென்று மாற்றும் நிருபர்கள், கிம் ஜாங்கின் கடந்த கால இளமை பருவத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களை ஓவ்வொன்றாக விவரிக்க (early days physical and mental abuse especially by the father) வேதனை தாள இயலாத கிம் ஜாங்க் டி.வி.யின் முன் ஒரு குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுகிறார்.

Tuesday, November 29, 2016

ஆயிரமாயிரம் எண்ணங்கள் மனதை கசக்கியது

அமைந்தகரை சந்தையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன், யாரோ என் வேட்டியை இழுத்தது போல உணர்வு, திரும்பிப் பார்த்த போது கிழிஞ்சல் ஆடைகளோடு சுமார் 90 வயது மதிக்கத்தக்க எலுமிச்சை வியாபாரம் செய்யும் பாட்டி
"பாய் தம்பி எலுமிச்சம்பழம் வேணுமாய்யா" என்ற ஏக்கமான குரலை கேட்டவுடன் அருகிலேயே அமர்ந்து விட்டேன்,
ஏன் பாட்டி இன்னமும் வியாபாரம் முடியலயா?
"இல்லய்யா. நாங்கலாம் அன்னன்னைக்கு காலைல கடனுக்கு வாங்கி கடை போடுவோம். ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விக்கும். கடனும் வட்டியும் கொடுத்துட்டு வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிக்குவோம். இப்பலாம் வாங்கனது எதுவுமே விக்க மாட்டேங்குது. யாரும் இங்க வர மாட்றாங்க. என் வயசுக்கு வீட்டு வேலைலாம் செய்ய முடியாததால சாக்குல கடை போட்ருக்கேன். " என கூறி முடிக்கும் முன்பே கண்கள் கலங்கியது

Sunday, November 27, 2016

ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த தலைவர் கலைஞரின் கவிதை :

உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!
இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய 'பாடிஸ்டா' எனும் பசுத்தோல் வேங்கை;
அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும்
வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!
பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் -
பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு;
ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த
சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!
தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி
கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு;
நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!
கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்!
கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;
சோதனைகளை சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,
சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,
மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!
'கியூபா' சின்னஞ் சிறிய நாடு

என் எழுத்தும் முகமது அலி அண்ணனும் பின்னே ஞானும் ....!

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் இணைந்து கவிகள் புனைய ஆரம்பித்த காலத்தில் இரண்டு மூன்று வரிகளில் எழுதி ' செந்தமிழும் நா பழக்கம் ' என்பதற்கிணங்க குறும்பாக்களை எழுதி வந்தேன். அண்ணன் முகமது அலிMohamed Ali நீடூர் அவர்கள் எனது படைப்புகளை இனம்கண்டு மேலும் சீரியதாக பெரிதாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுதற்கு அவர்கள் தந்த ஆக்கத்திலும் ஊக்கத்திலும் கொஞ்சம் பெரிதாக எழுத என்னை நானே பழக்கிக் கொண்டேன்.
எனது குறும்பாக்களை தொகுத்து அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து எனக்கு மிகவும் வியப்பையும் நன்றியுணர்வையும் தந்தது.
அன்றுமுதல் நானும் எழுதிவர அவர்களும் ஆதரவு தந்து அழகு பார்க்கும் அன்பை நேசிக்கும் தம்பிகளில் ஒருவன்

ராஜா வாவுபிள்ளை
ராஜா வாவுப்பிள்ளை

Thursday, November 24, 2016

விடியல் வேண்டும் ....!

விடியல் வேண்டும் ....!
சரித்திரம் திரும்பட்டும்
சாதிக் கொடுமைகள் திரும்பவே கூடாது
நாகரீகம் முன்னேறலாம்
பின்னேறி பிரிவினைக்கு வழிவகுக்கலாமோ
உயர்வு தாழ்வில்லை பிறப்பில்
ஏனிந்த கொடுமை சாதீயில்
வாக்குகள் பெற்றதால்
வானரங்கள் வானைத்தொட்டிட முடியுமோ

உழைப்பாளிகளுக்குமரியாதை

பணம் செல்லாது என்ற கவலையோ
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.

நலமாக இருக்கிறாயா அம்மா

நலமாக இருக்கிறாயா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா

Monday, November 21, 2016

ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று .


Priya Thambi

November 14 at 5:39pm ·
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று என்னிடம் செல்லும் நோட்டுக்குள் 316 ரூபாயும், செல்லாத சில ஆயிரங்களும் இருந்தன. இரண்டு நாட்களில் தான் சரியாகி விடுமே அதுவரை டெபிட் கார்டில் பார்த்துக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
மறுநாளில் இருந்து எங்கும், எப்போதும் கார்டு. பிக் பாஸ்கெட் ஆன்லைன் ஆப்பில் தான் கடந்த சில மாதங்களாக மளிகை, பழங்கள் வாங்குகிறேன். கையில் பணம் இல்லாததால் இந்த முறை காய்கறியும். ஆன்லைனில் மொத்தமாக வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக வாங்கும்போது ஒவ்வொரு முறையும் டெலிவரி சார்ஜ் தனியாகத் தந்தாக வேண்டும். கூடவே மினிமம் அளவு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகவே எனக்குத் தேவையானதைத் தவிரவும் அதிகம் வாங்க வேண்டியதாயிற்று.
இன்று மின்னுவுக்கு பள்ளியில் ‘pot painting'. ஒரு பானை வாங்குவதற்காக சனிக்கிழமை ரங்கராஜபுரத்தில் ஒரு கடைக்கு சென்றோம். பானையின் விலை எழுபது ரூபாய். என் கையில் இருக்கும் நூற்று சொச்சத்தை தர பயமாக இருந்தது. குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் கார்டு எடுத்துக் கொள்வதாக கடைக்காரர் சொன்னார். ‘’அந்த பானையில நாலு, இந்த விளக்குல இரண்டு, அந்த சட்டி என்னா விலை’’ என 590 ரூபாய்க்கு மண் பொருட்கள் வாங்கினேன்.
பானையில் அடிக்க பெயிண்ட் வாங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின் பத்து இணைந்த பாக்ஸ் 190 ரூபாய்.. ‘’மினிமம் 300 ரூபாய்க்கு வாங்கினா தான் கார்டு எடுப்போம்’’.. ‘’இரண்டு பிரஷ், ஒரு பென், ஒரு பேட்’’ என நானூறு ரூபாயை இழுத்து வைத்தேன். இதேபோல் எங்கும், எங்கும் ‘’கார்டு எடுத்துப்பீங்களா?’’ என்கிற கேள்வியோடு செலவை இழுத்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு காஃபிக்கு கார்டு எப்படி எடுத்துப்பாங்க, வயிற்றில் இடம் இருக்கோ இல்லியோ... குறைந்தது இருநூறு, முந்நூறு ரூபாய்க்கு சாப்பிடு.... இப்படியாக...

உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?

’காதல் கிறுக்கன்’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்ட ஒருவரின் கேள்வி:
"புகாரி ஸார்,உலகம் போற்றும் ஒரு கவிஞர் நீங்கள்.
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
சில நேரங்களில் அவள் சிரிப்பின் அர்த்தங்களை?"
*
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான்.
புரிந்துகொள்ளவே முடியாது என்று
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான் ;-)
என்று இதற்கு நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்
ஆனாலும் ஒரு வாழ்க்கைச்
சுவாரசியத்தை உங்கள் முன் நான் வைக்கிறேன்
பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்

உண்மையின் திண்டாட்டம் ...!

சுகம் ஒருபுறம்
துக்கம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
சுழலும் வாழ்க்கை ...!
உழைப்பு ஒருபுறம்
சுரண்டல் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வளர்சியின் வேடிக்கை ...!

Friday, November 18, 2016

கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது..

Saif Saif
கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும்
இருக்க முடியாது..
உகாண்டாவிலும் தான்..
இரு நாட்களுக்கு முன்னால் கம்பாலா சென்ற போது அங்கு தங்க நேர்ந்தது...
உறவுகளையும்,
நட்புகளையும்
சந்தித்ததில் மகிழ்ச்சி..
அன்பு,உபசரிப்பு,
பரிவு எதுவும் குறைவில்லை..எப்போதும் போல் சந்தோஷம்..
எப்போது கம்பாலா சென்றாலும் இங்கு தங்குவது தான் வழக்கம்..
இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை வசிப்பது பெரும்பான்மை தமிழ் மக்கள் தான்..
இங்கு தங்கும் போது நமதூரில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது...

Wednesday, November 16, 2016

நம்மன்பில் பிரிவில்லை ....!

நின் கரம் கோர்த்தேன்
நித்தமும் நிம்மதி கொடுத்தாய் 
நின் நினைவாய் இருந்தேன்
நெஞ்சில் ஆசுவாசம் தந்தாய்
நின் ஸ்பரிசம் உணர்ந்தேன்
நம்மில் பிரிவில்லையென அறிந்தேன்
நின் சுகந்தவாசம் சுவாசித்தேன் 
என்னுயிர் உன்வசமென வாழ்கிறேன்

Tuesday, November 15, 2016

கிட்னி கல்லை குணப்படுத்த எளிய வைத்தியம்
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!
சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!

பித்தப்பை கற்கள் (Galbladder Stones)முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.


சாதிக்க தூண்டிய தொட்டில் பழக்கம்..

Colachel Azheem
குழந்தை பருவத்தில் தினமும் தூங்க வைக்க தந்தை சொல்லிக்கொடுத்த ஹதீஸ சார்ந்த சம்பவங்கள் மனதில் ஆழமாக பதிந்ததால் தற்போது இஸ்லாமிய இணைய உலகத்துக்கு ஒரு சாதனையாளராக உருவெடுத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்து #சுமையா_ஃபாறூக்.
பள்ளிப்படிப்பு காலத்திலேயே நபிகள் நாயகம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த பெற்றோர் மீண்டும் கேள்வி கேட்க ஊக்கப்படுத்தியதும், நண்பர்கள் மூலம் கிடைத்த ஆதரவாலும் Taqva.com எனும் இணைய வீடியோ சேனலை உருவாக்கியதாக கூறியுள்ளார் சுமையா..
கடந்த மார்ச் மாதம் வடிவமைக்கப்பட்ட இவரது Taqva.com சேனலில் 15 பிரிவுகளில் சுமார் 1500 க்கும் அதிகமான பிரபல மார்க்க அறிஞர்களின் வீடியோ பதிவுகள் விளம்பர கலப்பில்லாது பார்க்க கேட்க முடியும்..
கூடவே இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வாழ்க்கை முறை குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் வடிவிலும், குர்ஆன் கிராஅத் ஓத பயிற்சியையும் இந்த தளத்தில் காண முடிகிறது..
சகோதரி சுமையா ஃபாறுக் முயற்சி்க்கு பாராட்டுகள்..Colachel Azheem

Sunday, November 13, 2016

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

by அன்புடன் மலிக்கா


கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது

கவிவந்த வழிதனையே!

Saturday, November 12, 2016

காங்கோ பயணக்குறிப்பு ....!


ராஜா வாவுபிள்ளை
குள்ளமனிதர்கள் தொடர்ச்சி.சொல்லில் அடங்காத சுவாரஸ்ய செய்திகளை கொண்டுள்ள குள்ளமனிதர்களின் வாழ்வின் விபரங்களை எழுதிவரும் இக்கட்டுரைத் தொகுப்பில் கழிந்த பதிவில் குள்ளமனிதர் குடும்பத்தில் இளம்வயதினரின் திருமண வைபோகங்கள் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பார்த்தோம்.
இந்த பதிவில் திருமணமான இளம் தம்பதியர் தனியாக தங்கள் இல்லறத்தை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்போமா ?
கோலாகலமாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் மணமகன் மணப்பெண்ணை தனது தாய்தந்தையுடன் வசித்துவந்த பாரம்பரிய வீட்டிற்கு அழைத்துச்சென்று அதன் அருகிலேயே ஒருசிறு குடிலை அமைத்து தமது தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்ணிற்கு மாமியார் குடும்பம் நடத்தும் கலையையும் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் வாழ்ந்துகாட்டுதல் மூலமாக படிப்பித்துக் கொடுப்பார்.

வட நாடு வாழ்கிறது தென்னாடு தேய்கிறது


Vavar F Habibullah
நேற்று ஓரு பழுத்த திமுக அரசியல்வாதியை சந்தித்தேன். சமீபத்திய நாட்டு நடப்பை பற்றி அதிகமாக பேசினார். இன்றும் அண்ணா
சொன்னது தான் சரி என்று வாதாடினார்.
முதலாளிகளின் பிறப்பிடமே குஜராத்தும் ராஜஸ்தானும் தான். ஈஸட் இந்தியா
கம்பெனிக்காரன் வளர்ச்சிக்கு, முதலில் தடை விதித்ததே முகலாய மன்னன் அவுரங்கசீப் தான். இது பொறுக்காம தான் அவனை
பந்தாடினான் வெள்ளக்காரன்.
டாடா, பிர்லா, கோயங்காவை எல்லாம் வளர்த்து விட்டதே ஈ்ஸ்ட் இண்டியா
கம்பெனிக்காரன் தானே.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் காரனும் அவங்க வளரத்தான் துணை செஞ்சாங்க.
ஏமன் நாட்டிலே பெட்ரோல் பங்கிலே வேலை பார்த்த அம்பானியை குபேரனாக்கியதும் அவங்க தான்.பண முதலைகளை வளர
விட்டது எல்லாம் காங்கிரஸ்காரன் தான் சார்.

Friday, November 11, 2016

ஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்....

Shahjahan R
அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்னு சொல்றதை எல்லாம் பார்க்கும்போது குண்டுமணித் தங்கம் வச்சிருந்தவன் கதைதான் ஞாபகம் வருது. அது கிடக்கட்டும்.
இவங்க சொல்றதெல்லாம் லாஜிக்கலா சரிதானா? நிசமாவே பணப் புழக்கத்துக்கேற்ப நோட்டுகள் கிடைக்குதா? இங்கே புலம்பிட்டிருக்கிறவன்லாம் மோடி மேலே வெறுப்பால மட்டும்தான் புலம்பறானா? கொஞ்சம் பார்ப்போமா? (கறுப்புப் பணம் அல்ல, கறுப்புப் பொருளாதாரம்தான் பிரச்சினை என்பது பற்றி இங்கே விவாதிக்கப் போவதில்லை.)

புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது.


Shahjahan R
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது. தேவநாகரி வரி வடிவ எண்களில் ரூபாயின் மதிப்பு தரப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எழுதலாம் என்று ஏற்கெனவே நினைத்தேன். ஆனாலும் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். நேற்று ஹன்சா கேட்டிருந்தார். இன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். :)
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தி. பயன்படுத்த வேண்டிய எண் முறை - சர்வதேச வடிவிலான எண்வடிவம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 343ஆவது பிரிவு வரையறுத்துள்ளது.
The form of numerals to be used for the official
purposes of the Union shall be the international form of
Indian numerals.
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பல இருக்கும்போது, ஒவ்வொரு மொழிக்கும் தனி எண்கள் இருக்கும்போது, ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது அநீதி.

வாழ்வெனும் அமைதிக் கடல்....!

எல்லை இல்லா
எண்ணங்கள்
பாதை இல்லா
பயணங்கள்
இலக்கு இல்லா
செயல்கள்
பரிதவிக்கும் பாசப்
பிணைப்புகள்

Sunday, November 6, 2016

படித் தேன் ருசித் தேன்


"சிரித்துக் கொண்டே தீவினை புரிபவன்
பின்னாளில், அழுது கொண்டே தீவினைகளை
அநுபவிக்க நேரிடும்"

கலிகாலத்தில் இப்படித்தான் நிகழும் என்று உங்கள் வேதங்கள் சொல்லவில்லையா?..

மைசூர் மன்னன் திப்பு சுல்தானின் பதிலை கேட்டு மெய் சிலிர்த்து போனார் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சியார் சுவாமிகள்.

மராட்டிய படைவீரர்கள் மடத்தில் நிகழ்த்திய அத்து மீறல்களையும், கோவில்களில் நடத்திய வன்முறை சம்பவங்களையும் மன்னரிடம் முறையிட்ட சுவாமிகளிடம் தான் தக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மன்னர் திப்பு.

சங்கராச்சாரியார் அறிவுரையின் பேரில் எண்ணற்ற கோவில்களை புணர் நிர்மாணம் செய்வித்தார் மன்னர் திப்பு.

Saturday, November 5, 2016

அஜீஸ் அன்சாரி ...

அஜீஸ் அன்சாரி ...
கொஞ்சம் சுவாரஸ்யமான மேட்டர் இது.
கோட்டாறின் மிக பிரபலமான வி.ஐ.பி.க்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த
பக்ருதீன் ஆதம்.
அதென்ன ஆதம் ?
ஆதம்நபி சொர்க்கத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இடம் குமரி மாவட்டம் என்பது நம்பிக்கை.
அதனால் எங்கள் கோட்டாறு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
ஆதம்
ஆதம்பாவா என்றெல்லாம் பெயரிடுவார்கள்.
பக்ருதீன் ஆதத்தின் வாப்பா பெயர் ...
ஆதம்பாவா !
பக்ருதீன் ஆதம் நாகர்கோயில் கோர்ட்டில்
பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர்.
இவரது மகள் வழிப் பேரன்
அஜீஸ் அன்வர் அமெரிக்காவில்
இன்றைக்கு பிரபல நடிகர்.
அவரைப் பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி தயார் செய்வதில் அமெரிக்க நிறுவனமொன்று
இறங்கி இருக்கிறது.

ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?

Kathir Vel
 ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?
------------------------------------------------

நார்த் கேரலினா மாநிலத்தில் நேற்று தேர்தல் பேரணி. ஜனநாயக கட்சி ஏற்பாடு. ஹில்லரி கிளின்டனை ஆதரிச்சு அதிபர் ஒபாமா பேசுகிறார்.

திடீர்னு ஒரு ஆள் எழுந்திரிச்சு நிக்கிறார். கையில ஒரு போஸ்டர். அதுல குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கும் வாசகம். ’ட்ரம்ப், அமெரிக்காவ மறுபடி நம்பர் ஒன் ஆக்கு!’.

கூட்டம் பூரா கொதிச்சு போச்சு. உக்காரு, பேமானி அது இதுன்னு கூச்சல்.

ஒபாமா அமைதி அமைதின்னு கத்தியும் கூட்டம் கண்டுக்கல. கோரசா கோஷம். போங்கடானு பேச்சை அதோட முடிச்சுகிட்டு போயிருப்பாங்க மத்த தலைவர்கள். ஒபாமா அத செய்யல.

அமைதி அமைதி அமைதி..! ன்னு கூட்டத்தோட கூச்சலுக்கு மேல சவுண்ட் விட்டார். திரும்பத் திரும்ப. விடியோ பாத்தா தெரியும். 50 வாட்டி கத்திருப்பார்.

ஒரு வழியா கூச்சல் அடங்கினதும் ஒபாமா சொன்னார்:

PERFORMERS AND SPECTATORS (The needs of the need)

Vavar F Habibullah
படைப்பாளிக்கு பார்வையாளன் தேவை
தலைவனுக்கு தொண்டன் தேவை
பகவானுக்கு பக்தன் தேவை
நடிகனுக்கு ரசிகன் தேவை
முதலாளிக்கு தொழிலாளி தேவை

ஏமாற்ற ஏமாளி தேவை
நல்லவனை கண்டறிய
தீயவன் தேவை.
வரட்சிக்கு மழை தேவை
வறுமைக்கு பணம் தேவை

Friday, November 4, 2016

தேவதையவள் ....!

இல்லத்தேரினில் அனுதினம்தவறாதே
வலம்வரும் தேவதையவள்
=* கனிந்தேமனம் நெகிழ்ந்தேநிதம்
தருமமுதம் திகட்டாதே
அழகேயுருவாகி ஆனந்ததிருவாகி
ஆட்கொள்ளும் தேவதையவள்
=* காதல்களிப்பூட்டி கூடிஉறவாடி
தேனமுதம் தருவாளே
முகில்கார்குழல் பின்நீண்டுதவழ
என்முன்னிற்கும் தேவதையவள்

பிள்ளைகள் ...

Abu Haashima
ரசம் பூசாமலே
நம்மைக் காட்டும்
அசல் கண்ணாடிகள்!
கண்ணாடிகளால் தர முடியாத
ஸ்பரிச இன்பத்தைத்
தொடத்தரும் நிஜக் கண்ணாடிகள் !
விலகினாலும் உருவம் விலகாமல்
கண் முன் நிற்கும்
ஒளிக் கண்ணாடிகள்!
இமைத்தாலும்
கண்ணுக்குள் சிரிக்கின்ற
உயிரோவியக் கண்ணாடிகள் !
காலங்கள் தோறும்
வம்சத்தின் வரலாறு காட்டும்
குடும்பக் கண்ணாடிகள் !
புறச்சுவர்களில் பெயர் எழுதி
அகச்சுவர்களில் ஒளி வீசும்
அழகுக் கண்ணாடிகள் !

Abu Haashima

தோசையம்மா தோசை ஷாஜஹான் சுட்ட தோசை


தோசை வார்க்கும்போது முதல் தோசை வெற்றிகரமாக வந்து விட்டால் முழுக் கிணறும் தாண்டியாயிற்று என்று அர்த்தம். அடுத்தடுத்த தோசைகளும் வெற்றிதான். உங்கள் பிபி எகிறுவதும், வாயில் கெட்ட வார்த்தைகள் துள்ளித்துள்ளி வந்து விழாமல் இருப்பதும் அநத் முதல் தோசையைப் பொறுத்த்து. முதல் தோசையை கல்லிலிருந்து சுரண்டிச் சுரண்டி எடுத்து குப்பையில் போடாதிருக்க என்ன வழி?
கல்லை அடுப்பில் வைத்தபிறகு சரியான சூடேறும் வரை காத்திருக்க வேண்டும். புரோட்டா மாஸ்டர் தண்ணர் தெளித்துப் பார்ப்பதுபோல ஒரு துளி தண்ணீர் தெளிக்க வேண்டும். ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று தண்ணீர் பொரிந்து துள்ளி மாயமானால் சூடாகிவிட்டதென்று அர்த்தம்.

Monday, October 31, 2016

இனியாவது புத்தி புகட்டட்டுமென

துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும்
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ
பின் நேர்மையின் தடயங்களைச் சிறு காகிதப் படகாக்கினாய்
பின் இக்கட்டான தருணங்களில் அணிந்திருந்த நம்பிக்கைகளை துடுப்பாக்கினாய்
பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை

Sunday, October 30, 2016

சுவைத்துக் கொண்டே இருப்பேன் ....!

வாழ்வில்
அறியாமையை
அகற்ற முயன்று
முடிவில்லா தொடர் கண்ணியில்
அங்கமானேன்
வாழ்வின்
தேடல்களில்
தொடர்ந்து சென்று
மூழ்கிவிடாமல் முழுமூச்சுடன்
நீந்துகிறேன்

Friday, October 28, 2016

நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்./ கிருஷ்ணன்பாலா

நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நல்ல சரவெடி ஒன்றைப் பரிசளிக்கின்றேன்,; இதைப் பத்திரமாகக் கொளுத்திப் போடுங்கள்.
வெடிக்கட்டும் சர வெடிகள்
-----------------------------------------
தேனும் பாலும் ஆறாய் ஓடும்;
திருவாளத்தான் தென்நாட்டில்;
நானும் நீங்களும் நம்புகிறோம்;
நம்தலை வர்கள் சொல்கின்றார்!
மானம் கெட்ட அரசியலை
மாய்ந்து மாய்ந்து தினம் பேசி
நானும் நீங்களுமிருந்து விடில்
நமக்கேன் துன்பம்? சொல் தோழா!

Tuesday, October 25, 2016

திருமறையின் தோற்றுவாய்” -ஓர் அறிமுகம்..../ ஏம்பல் தஜம்முல் முகம்மது
”திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கின்ற திருக் குர்’ஆனின் முதல் அத்தியாயமான ”அல்-ஃபாத்திஹா சூரா”வை முற்றிலும் தழுவி எழுதப்பட்ட ஆக்கம் இது:-
Yembal Thajammul Mohammad---------------------------------------------------------------------------
வெளிச்ச வாசல்….!
===============================================
1.அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...

என் ஆசிரியர் பணி நியமனமும் விலகலும். ..!

Hilal Musthafa
1979--ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆம். அப்படித்தான் நினைவிருக்கிறது.
அந்தக் கால கட்டங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபின் மணிவிளக்கு மாதவிதழில் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். மச்சான் நாகூர் ஜபருல்லாஹ்வும் என்னுடன் துணையாசிரியராகப் பணி புரிந்து வந்தான்.
மணிவிளக்கு அலுவலகம், மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் இருந்தது. அதற்கு எதிர்ப் புறம் ஏழு கட்டிடம் தாண்டி முஸ்லிம் லீகின் தலைமையகம் இருந்தது.மாநில முஸ்லிம் லீகின் தலைமை நிலையப் பணியையும் நாங்கள் கவனித்துக் கொண்டு வந்தோம். மணிவிளக்கில் சம்பளம். தலைமை நிலையத்தில் சமூக சேவை.

மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 2)

Shahjahan R
கட்டுக்கதை-11 : குடும்பத்தில் ஒருவருடைய தந்தைக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது என்பது, அவருடைய தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்த அளவுக்கு ஆபத்துக் காரணி அல்ல.
தாயாருக்கு புற்று நோய் இருந்தது என்பது மகளுக்கு எந்த அளவுக்கு ஆபத்துக்காரணியோ, அதே அளவுக்கு தந்தைக்கு இருந்ததும் ஓர் காரணியாகும். ஆனால், ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மிகவும் அரிதாகவே (ஆயிரத்தில் ஒருவருக்கு) வருகிறது. குடும்பத்தின் பரம்பரை நோய் வரலாற்றை மதிப்பிடும்போது எல்லாருடைய நோய்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை-12 : கருச்சிதைவு செய்து கொள்வதால் புற்றுநோய் ஆபத்து அதகரிக்கும்.
தவறு. பெண்களின் வாழ்வில், பல்வேறு காரணங்களால் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஹார்மோன்களின் மாற்றம் மார்பகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை ஹார்மோன்கள் தூண்டி விடுகின்றன. கருவுறுதல் அல்லது கருச்சிதைவும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், (இயற்கையான அல்லது செயற்கையான) கருச்சிதைவு காரணமாக மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதில்லை என ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.

அறிந்தும் அறியாதது ....!

இருப்பதைத்
தக்கவைத்துக்கொள்ள
அத்தனை முஸ்தீபுகளையும்
அவதானித்தும்
கைவிட்டு
போய்விடும் சிலவும்
இருக்கும் பலவும்
தன்னிருப்பை தெளிவுபடுத்த

மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 1)

Shahjahan R

கட்டுக்கதை-1 : பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
• தவறு. மார்பகத்தின் அமைப்புக்கேற்ப வடிவமைக்கும் (உட்புறம் மெல்லிய இரும்பு அல்லது பிளாஸ்டிக் பட்டைகள் வைத்த) பிரா அணிவதால், அது நிணநீர் கணுக்களை அழுத்துகிறது, அதனால் மாசுகள் உடலுக்குள் தங்கி விடுகின்றன, அதனால் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்ற கதை அபத்தமானது. அறிவியல்ரீதியாக பொருந்தாதது. அணியும் பிராவின் வகை அல்லது அதன் இறுக்கத்துக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப (இறுக்கமாகவோ தளர்ச்சியாகவோ) பிரா அணியலாம், அணியாமலும் இருக்கலாம்.
கட்டுக்கதை-2 : மார்பகத்தில் வரும் கட்டிகள் எல்லாமே புற்றுக்கழலைகள்தான்.

🇴🇳 🇹🇭🇮🇸 🇩🇦🇾 -இது ஒரு உண்மை சம்பவம்...

Saif Saif
கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்து விட்டது..கூடவே பதவி உயர்வு..
ஆனால் அவளுக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியில்லை..ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..
புது ஊருக்குப் போன ஒரே மாதத்தில் அவளுக்கு உடலெல்லாம் எரிச்சல்,தோல் அரிப்பு ..
சூடு, அலர்ஜி என்று கணவர் ஆறுதல் சொல்லி மருந்து வாங்கி கொடுத்தாலும் நாளுக்கு நாள் எரிச்சலும் ,அரிப்பும் அதிகமாகிப் போனது...
வேறு வழியின்றி ஒரு தோல் மருத்துவரை சந்தித்த போது
"தோலெல்லாம் அரிக்குது சமயத்துல துணியெல்லாம் கூட ஈரமாகுது.." அவள் டாக்டரிடம் சொன்னாள்..
அவளுடைய பேச்சில் ஒரு வித கோபமும் ,விரக்தியும் கலந்து கிடப்பதை கண்டு கொண்ட டாக்டர் கேட்டார்.
"என்னம்மா பிரச்சினை..எதையாவது மனதில அடக்கி வச்சிருக்கியா வெளியில சொல்ல முடியாததா..?
அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..

Monday, October 24, 2016

மார்பகப் புற்றுநோய் - கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 3)

by Shahjahan R

 கட்டுக்கதை-16 : பருமனாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம்.
• பருமனாக இருப்பதாலேயே மார்பகப் புற்றுநோய் வருவதில்லை. ஆயினும். உடல் பருமன் அல்லது அளவுக்கு மீறிய எடை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, மாதவிலக்குப் பருவம் கடந்தவர் அல்லது வாழ்வின் பிற்காலத்தில் பருமனானவர் என்றால், நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
கட்டுக்கதை-17 : கருத்தரிப்பு சிகிச்சைகளால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
• மார்பகப் புற்றுநோய்க்கும், பெண்களுக்கே உரிய ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனுக்கும் தொடர்பு உண்டு; எனவே, கருத்தரிப்பு சிகிச்சைகள் புற்றுநோயை உருவாக்கும் என்ற கருத்து உருவானது. ஆனால், ஆய்வுகளில் அதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தக்காரணியை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இத்துறையில் ஆய்வுகள் நடத்துவது அவ்வளவு எளிதான செயலும் அல்ல.

"இந்த வருண்காந்தி யார்?

அப்துல் கையூம்
வருண்காந்தி விஷயம் ஒரேநாளில் உலகம் முழுதும் பரவி விட்டது போலும். இன்று ஒரு அரபி நண்பர் கேட்டார் "இந்த வருண்காந்தி யார்? காந்திஜியின் கொள்ளுப் பேரன்தானே?" என்று. பொதுவாகவே காந்திஜியின் மீது அரபிகளிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. பாவம் காந்தி பெயர் இப்படி நாறுகிறதே என்று நினைத்தேன்.
காந்தி குடும்பத்துக்கும் நேரு குடும்பத்திற்கும் ஒரு எழவு சம்பந்தமும் இல்லை என்று புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது.
ரவீந்தரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் எப்படி எந்த சம்பந்தமும் இல்லையோ அப்படித்தான் இதுவும்.
இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் பெரோஸ் காந்திதானே..?
பெரோஸ் ஜஹாங்கிர் கேந்தி (Feroze Jahangir Ghandy) பார்ஸி சமூகத்தைச் சார்ந்தவர். அவருடைய மதம் Zoroastrianism. ஃபெரோஸ் கான் உடைய தந்தை பெயர் ஃபரீதுன் ஜஹாங்கிர் காந்தி .

மதவெறியோ துவேசங்களோ இல்லாத ஒரு நாடு.

பின்தங்கிய ஒரு நாடு, இன்னமும் பன்னாட்டு உதவிகள் கொண்டு பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் ஒரு நாடும் கூட, தலைநகரில் கூட உள்கட்டமைப்புக்கள் இன்னும் சரிவர உருவாக்க முடியாத ஒரு நாடு, என்றாலும்........
பெண்கள் எல்லாம் அதிகாலையிலும் நடு இரவிலும் சர்வ சாதாரணமாக சுதந்திரமாக தங்கள் பணி நிமித்தமும் இன்னமும் அவசர அவசியங்களுக்கு சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கும் காட்சி இங்கே மிக மிக சாதாரணம்.
தம்பி நஜீமுல்லாஹ்வின் இறப்புக்கு பிறகு இன்று சந்தித்த ஒரு கத்தோலிக்க பாதர்- என் கரங்களைப் பற்றி ஆறுதல் கொள்ளுமாறு பரிந்து பேசி, இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் என்று சொல்லி வைக்கிறார்.
ஆக, கற்பழிப்புக்களோ, பாலியல் வன்கொடுமைகளோ, மிக முக்கியமாக ஒரு நாட்டை முழுவதுமாக சீரழிக்கும் மதவெறியோ இல்லை துவேசங்களோ இல்லாத ஒரு நாடுதான் இந்த உகாண்டா, இப்படி இருப்பதால் நிச்சயம் இந்த நாடு முன்னேறத்தான் செய்யும் !

Raheemullah Mohamed Vavar

Friday, October 21, 2016

இரவு நேரத்தில்

Abu Haashima
இரவு நேரத்தில் 
கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் ....
" நீ சாப்பிடவில்லையா ?" என்று
கணவன் கேட்க ....
" எனக்கு பசியாக இருந்தது . அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன் " என்று சொல்லும்
மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?

சென்ற வருட குவைத் மழை ...

by.J Banu Haroon
சென்ற வருட குவைத் மழை ...
==================================
இன்று ,
மழைக்கு தயாராகி விட்டது வானம் ...
இரண்டு நாட்களாக இரவினில் சாரல் ...
விடிந்ததிலிருந்தே விடியற்காலை தான் ...
பட்டை தீட்டின வெயிலும் போச்சு ...
சூரியனையும் காணவில்லை ...
சந்திரனையும் காணவில்லை ....
இன்னும் இருட்டவில்லை ...தூரவில்லை ...
குடைகளை பத்திரப்படுத்துகிறேன் ....
வானமும் குடை பிடித்திருக்கிறது ....
பனிப்பொழிவுபோல் குளிர் நிறைக்கிறது ...
எப்போது பெய்யும் மழை ?....
அடிக்கடி அண்ணாந்து பார்க்கச் சொல்கிறது ...
சென்ற வருடம் ஐப்பசி இரண்டில் ..
ஆரம்பித்த அடைமழை ....
விடாது பெய்து எங்கும் நிறைத்தது ...
கடலூரை மூழ்கடித்து ....
போக்குவரத்தை துண்டித்து படுத்தியது ...
சென்னையை மூழ்கடித்து ...
எங்கும் போட் விட்டு அலைக்கழித்து ..
அமைதி தொலைக்க வைத்தது ...
நாங்களும் சென்னையில் தான் அப்போது ...

Thursday, October 20, 2016

இருப்பும் பொழைப்பும் ....!

ரோமாபுரிக்குப் போனால் ரோமானியனாக இரு!
இது ஒரு சொல்வழக்கு, வேறொன்றும் இல்லை. இதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் ஒரு ஊருக்கு போனால் அங்குள்ள மக்களோடு அவர்களது கலாச்சாரத்தோடு ஒத்துப்போக வேண்டுமென்பதே யன்றி அவர்களைப் பற்றி குறை சொல்வதற்கல்ல.
எங்கெங்கே போனாலும் அங்கங்கே அப்படி அப்படி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமா?

புதிய வானம் - புதிய பூமி

Dr Vavar F Habibullah
புதிய வானம் - புதிய பூமி

                                                          டாக்டர்.ரெய்ஹான்
புதுமைகள் நிறைந்தது மனித வாழ்க்கை.
பழையன கழிதலும், புதியன புகுதலும்
வார்த்தைக்கு அழகு சேர்க்கலாம்!
வாழ்க்கைக்கு சுவை தருமா?
அநுபவித்தோரால் மட்டுமே இதனை
உணர முடியும்.
டாக்டர்.ரெய்ஹான்....
எனது நெருங்கிய நண்பர்.
பிரபல டெர்மோ காஸ்மடாலஜிஸ்ட்.
புனித மக்கா நகரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
தெய்வீக களை சொட்டும் அருள் முகம். கருணை சுரக்கும் கண்கள், அடர்ந்த தாடி.
தோற்றத்துக்கேற்ற கூரிய அறிவுத்திறன்.
அவர் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருங்கச் சொன்னால் ஒரு பண்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்.
திருகுர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிஸ்.
ஹஜ் காலங்களில் மக்கா மாநகரில் ஹாஜிகள் நலனுக்காக இவர் புரியும் சேவைகள் சொல்லி மாளாது.இந்திய ஹாஜிகளுக்காக இவர் நிகழ்த்தும் பேருரைகள் மிக்க பயனை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்டர் என்று சொல்வதை விட ஒரு பெரிய மார்க்க அறிஞர் என்றே இவர் இன்றும் போற்றப்படுகிறார்.பெரும்பாலான இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.சிறந்த பேச்சாளர்.வளை குடா வாழ் இந்நியர் மத்தியில் மிகவும் பாப்புலராக திகழ்பவர்.

Sunday, October 16, 2016

"காட்சியும் காணமும்"/ தேரிழந்தூர் தாஜுத்தீன்தீனிசைத் தென்றல்,  தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய   தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு
 மிக்க நன்றி.


S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

ஜன்னலை திற காற்று வரட்டும் (TRUE STORY)

Vavar F Habibullah
1980 களின் துவக்கத்தில்....
நான் என் மாமாவின் ஜலால் மருத்துவமனையில் CMO மற்றும்
மெடிகல் டைரக்டராக பணி புரிந்த நேரம்.
ஒரு புகழ்பெற்ற குடும்பத்தை சார்ந்த பெண் டாக்டர் அங்கு பணி புரிய விருப்பம் கொண்டு
என்னை வந்து சந்தித்தார்.அவருடன் அவரது தாயாரும் வந்திருந்தார்.தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சில விபரீதங்கள் காரணமாகவே தன் மகள் இங்கு பணி புரிய ஆர்வம் கொண்டிருப் பதாக அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு முஸ்லிம் பெண் டாக்டர் என்பதால் அந்த ஊர் ஜனங்களுக்கு அவரை மிகவும் பிடித்து போய் விட்டது.
சற்று நாட்கள் செல்ல...

காங்கோ பயணக்குறிப்பு ....!ராஜா வாவுபிள்ளை
காங்கோ பயணக்குறிப்பு ....!


குள்ளமனிதர்கள் (PYGMIES) தொடர்ச்சி.
சொல்லச் சொல்ல சுவாரசியம் குறையாத இந்த நிகழ்வுகளில் தொகுப்பில், கழிந்தவாரம் குள்ளமனிதர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தோம்.
இந்தவாரம் குள்ளமனிதர்களான பட்வா இனத்தவர்களின் திருமண சடங்குகளையும் திருமணவாழ்வையும் பற்றிய நிகழ்வுகளையும் பார்ப்போமா ?
பட்வா இனத்தில் அல்லாது மாற்று இனத்தவரை மணப்பதற்கு அனுமதி இல்லை. பட்வா இளைஞர் இளம்பெண்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முட் வா இளைஞனின் பெற்றோர்கள் நல்ல குணநலன்கள் உள்ள இளவயது பெண்களில் பிடித்தவராகப் பார்த்து தனது மகனுக்கு பொருத்தமான பெண்ணைத் தேர்வுசெய்கின்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோருடைய அனுமதியுடன் பெண்ணின் வீட்டிற்கு பலவகையான கலயம் கலயமாக தேனும், தேனிலிருந்து வடிக்கப்பட்ட ஒருவகை பானமும் பழவகைகளும், பாடம் செய்யப்பட்ட இறைச்சியும் முதற்கொண்ட பரிசில்களுடன் சென்று பெண்கேட்கும் சம்பிரதாயமான சடங்குகளை நிறைவேற்றுகின்றனர்.

LinkWithin

Related Posts with Thumbnails