Sunday, December 27, 2015

கொடூரப் பிம்பங்கள்...!

Hilal Musthafa
எதிர் எதிர் கருத்துகள் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில், அந்த அந்த அணியினர் தாக்கிக் கொள்ளுவது சாதாரணசாதாரணமான நடைமுறை. கொஞ்சம் கூடுதலாகப்போய்க் கொடூரமாக மோதிக் கொள்வதும் நடப்புத்தான். உலக வரறாற்றில் இது வாழைப்பழம் சாப்பிடுவது போல லேசானதாகவே நிகழ்ந்து விடுகிறது.

ஆனால் இச்செயலை ஒரு யுத்த தர்மமாகவும் போர் விதியாகவும் புரிந்து கொள்ளும் போதுதான் ஆபத்தின் தலைவாசலுக்குள் நாம் நுழைந்துவிட நேரிடுகிறது. அதிலும் எத்தகைய போரானாலும் பெண்களை அவர்களின் இருப்பிடத்திலோ அல்லது அங்கிருந்து அவர்களைப் பறித்தெடுத்து வந்தோ சிதைப்பதைத் தர்மமாக்கியதுதான் கேவலமான கொடூரம்.

இரண்டு தத்துவங்களின் கடைபிடிப்பால் போர் நிகழ்வதும் உண்டு.
அப்போதும் இதே தர்மங்கள் சட்டவிதிகள் போலவே கடைபிடிக்கப்
படுகின்றன. நாடு பிடிப்புப் போர்களிலும் இது நடைமுறையாகிறது.
தத்துவப் போர்களிலும் இதுவே தர்மமாகவும் மாறிவிடுகிறது.
எல்லாப் பொழுதுகளிலும் பெண்களே சுரண்டப் படுகிறார்கள்.

Thursday, December 17, 2015

இறைவா

இறைவா

இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!


இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்


இழந்த தெவை என இறைவன் கேட்டான்!


பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்


கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்


காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்


காணாமல் போனாளே அவளை இழந்தேன்


வயதாக ஆக உடல் நலமிழந்தேன்


எதை என்று சொல்வேன் நான்

மகனே... மகனே...
நீ என்ன விரும்பினாலும்
எனைக் கேட்டு மட்டுமே
பெறவேண்டிய சூழல்
ஒரு சமயத்தில்
உனக்கிருந்த போது
பொருட்களின்
விலையினை விட
உன் புன்னகையும்
மகிழ்ச்சியும் மட்டுமே
எனக்கு
விலைமதிப்பற்றதாக
தெரிந்தது..!!

Tuesday, December 15, 2015

அதிகாரமும் அதிகாரிகளும்

சில அதிகாரிகளால் மட்டுமே, சில காரியங்களை துணிச்சலாக செய்ய முடியும்.
அந்த நாட்களில், நான் நெல்லையில் தூய சவேரியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. மாவட்ட ஆட்சித்தலைவராக, அப்போது பசுபதி என்பவர் இருந்தார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டம் அது. ஜோதி வெங்கடாச்சலம் என்ற அம்மையார், அப்போது ஒரு அமைச்சராக இருந்தார். நெல்லை சென்ட்ரல் டாக்கீசில், சினிமா பார்ப்பதற்காக, அரசின் காரில், அமைச்சர் வந்து இறங்கினார். இந்த விஷயம், கலெக்டர் பசுபதியின் காதுகளுக்கு போய் சேர்ந்தது. நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு காரை, அமைச்சர் - தன் சொந்த தேவைகளுக்கு தவறாக பயன்படுத்துவதை கண்டித்தார். அமைச்சரின் கார், உடனடியாக தியேட்டரில் இருந்து அகற்றப் பட்டது.

Monday, December 14, 2015

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!?


காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும்.மறுப்பதற்கில்லை.அதேசமயம் நாகரீகமும்
நவீனங்களும் தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் பன்மடங்கு கூடிவிட்டன.நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெருந்தொகை தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.!

கவிதைச்சிறுமியவள்

Suhaina Mazhar
 added 7 new photos.
கவிதைச்சிறுமியவள்
"கவிதைன்னா என்னன்னு தெரியுமா? யாராச்சும் நாளைக்கு ஒரு கவிதை எழுதிட்டு வாங்க..."

சொன்னது 2nd STD E Section... பார்வதி டீச்சர்.

அந்த சிறுமி தன் தாய்மாமனிடம் ஓடிச் சென்று கொஞ்சி கெஞ்சி கவிதை கேட்டாள். மாமனோ ஊர்க்காரர்களால் செல்லமாக "இருமொழிப் புலவர்" என்று அழைக்கப்படுபவர்.

ஓதுவீராக என்று சொல்லி ஓத வைத்த ஜிப்ரீலை போல... "என் வார்த்தை முத்துக்களை பொறுக்கியெடுத்து நீ கோர்த்துக் கொள்" என்றார் அவர்.

எழுதுவதும் அடிப்பதும் திருத்துவதும்... திருத்தப்படுவதுமாக ஒரு அழகிய கவிதையொன்று ஒய்யாரமாக உருப்பெற்றது...

"‪#‎தமிழெங்கள்_இன்னுயிரை_தாங்கும்_மூச்சு‬" என்று ஆரம்பிக்கும் கவிதை அது. (பார்க்க படம் 2)

பென்சிலில் கிறுக்கப்பட்ட கவிதை சமர்ப்பிக்கப்பட்டது. யாருடையதென்ற கேள்விக்கு... மாமனின் கருத்து தன் விரல் வழியே வழிந்ததென்றாள் அச்சிறுமி.

Sunday, December 13, 2015

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது


சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது
தகவல் :  : பண்பாட்டு விருது பெறும் சாலி
 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

அத்தா...

சொச்ச வரிகளில் எழுதமுடியா
கணம் நிறைந்த கனமான புத்தகம்;
தூரத்திலிருந்து ஓர மன கண்ணில்
காதலிக்கும் அற்புதம்;

அம்மாக்களை எழுதித்தீர்த்த
மை என்றாலும் சிரிப்பாய்;
அம்மாதான் எல்லாம் என்றாலும்
பற்கள் தெரிய ஜொலிப்பாய்;

Saturday, December 12, 2015

அன்பேவழி....!

பூமியினில் புனிதமாய்
ஆதிமுதல் வாழ்வதற்கும்
அந்தமாய் வானுலகம்
சேர்வதற்கும் அன்பேவழி

பால்புகட்டும் தாயிக்கும்
பசியுணரும் சேயிக்கும்
காதல்செய்யும் தம்பதியர்க்கும்
உலகில்வாழ அன்பேவழி

காசுபணம் கேட்க்காது
பிரதிபலன் பார்க்காது
அடைக்கும் தாளில்லாது
கொடுதுப்பெற அன்பேவழி

எனக்கான ஞாயிறு எப்போதும் ஏது ?..

நான் அகமுடையாள் ...
எனக்கான ஞாயிறு எப்போதும் ஏது ?...
தினத்துக்கும் ஒருவேலை ...
இன்றுமே அப்படித்தான் ...
அதுவும் அதிகமான வேலைகள் ..
வறுத்து ,பொறித்து ,காய்ச்சி இறக்கி ...
வக்கணையாகப் பரிமாறி ..
களைக்குமளவு உண்ணக்கொடுத்து ..
உபசரித்து நான் களைத்து ...
ஒரு கப் டீயுடன் சோபாவில் சரியும்போது ,
உண்டுக்களைத்தவர்கள் எல்லாம் ..
கண்கள் சுழல உறங்கப் போவார் !....

Thursday, December 10, 2015

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க் !

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி
 
மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Wednesday, December 9, 2015

மழையில் பொங்கிய மனிதநேயம்! - ஜூனியர் விகடன்


மழையில் பொங்கிய மனிதநேயம்!

முகம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகிறார்கள். குடிசைவாசிகளோடு உணவைப் பிரித்து உண்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள்’ எனக் குரல்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் விளிம்பு நிலை மனிதர்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவளித்தார்கள். மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. காவடி தூக்கியவர்களும், பால் குடம் எடுத்தவர்களும், மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் எங்கே போனார்கள்?

சவப்பெட்டி தூக்கிய இஸ்லாமியர்கள்..!

‘எங்கள் பாட்டி இறந்துவிட்டார். உடலைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம். உதவி செய்யுங்கள்’ - மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க-வினருக்கு சூளைமேடு ஏரியாவில் இருந்து வந்தது இப்படியொரு தகவல். சூளைமேடு பகுதியில் வசிக்கும் பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ போனில் உதவி கேட்க களத்தில் குதித்திருக்​கிறார்கள் த.மு.மு.க-வினர். அந்தோனி அம்மாளின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சூளைமேடு ஏரியா முழுவதும் கழுத்தளவு தண்ணீர். மருத்துவமனையில் இருந்து உடலை ஸ்டெரக்சரில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தனர் த.மு.மு.க-வினர். மழை அதிகமாக இருந்ததால், அடக்கம் செய்யக் குழிகூட தோண்ட முடியவில்லை. ஒரு நாள் கழித்துத்தான் குழி தோண்ட முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி சவப்பெட்டியில் அந்தோனி அம்மாளின் உடலை வைத்து அடக்கம் செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த த.மு.மு.க-வினர்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டில் இருந்து சவபெட்டியை இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்துபோயிருக்​கிறார்கள்.

Tuesday, December 8, 2015

நமக்குள் ஒரு தலைவன்!

சமஸ்

         படம்: ஆர். செந்தில்குமார்

தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டபோது, ஒரு வாரம் முழுக்க அதைப் பக்கங்களில் நிரப்பியவர்கள், அதற்கு ஏழு மாதங்கள் முன் கென்யாவின் காரிஸா பல்கலைக்கழகத்தில் 148 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது என்ன செய்தார்கள்? ஒரு இந்திய மாணவனுக்கு 12,000 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க அதிபரின் மனைவி பெயர் தெரியும். ஆனால், நம் முடைய எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் சீன/வங்கதேசப் பிரதமரின் பெயர் தெரியாது. காரணம் என்ன?

முக வாசம்

இப்போது,
அரசு நிர்வாகம், காணொளிக் காட்சியாகி விட்டது.
அரசியல் அரங்கம், ஒலி - ஒளி கண்காட்சி சாலையாகி விட்டது.

தலைவர்கள் - நல்ல நடிகர்களாக,
நடிகர்கள் - வல்ல தலைவர்களாக,
அரங்கத்தில் விளையாடுகிறார்கள்.

மழை, புயல், காற்று, பெருவெள்ளம்,
தமிழகம் - உருக்குலைந்து கிடக்கிறது.

மக்களே, மக்களை பேரழிவிலிருந்து
காப்பாற்றும் - உயர் பண்பின் சமரசம்.

ஜாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால்
உறைந்து கிடக்கும் மனித நேயம்..
அறிமுகம் இல்லா, மனித முகங்களால்
மலர்ந்து, வளர்ந்து, பரந்து, விரிந்து செல்கிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் முகங்களை,
தாய் பாசத்தோடு அரவணைத்து கரை சேர்க்கின்ற நேச முகங்கள்.

தண்ணீர் பிரதேசம், பாச முகங்கள் ஒளியில்,
பிரகாசமாய் ஜொலிக்கிறது.

மக்களை காக்க, அரசுகள் இனி தேவை இல்லை.
அதிகாரம் தேவை இல்லை.
அமைச்சர்கள் தேவை இல்லை.
மக்களை வஞ்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேவை இல்லை.
இவர்களின் துணை இன்றியே தமிழகம் தன்னை தற்காத்து கொள்ளும் தகுதியை பெற்றுவிட்டது.

Monday, December 7, 2015

இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்கள- தக்கலை கவுஸ் முஹம்மத் ..

கடந்த ஒரு வாரகாலமாக இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்களை நண்பர்கள் கேட்டுகொண்டதால் உங்களிடையே பகிர்ந்து வருகிறேன்.. இன்று அதன் இறுதி பகுதி மிக சுருக்கமாக !....

பயணம் வந்த முதல் இரண்டு நாட்கள் Mohamed Jeseer Jaleel அவர்களுடன் லண்டன் மாநகரை சுற்றி பார்த்தோம்.. பின்னர் பார்க்காத சில இடங்களை பார்ப்பதற்காக இடைப்பட்ட ஒருநாளில் மீண்டும் லண்டன் மாநகருக்கு வந்தோம்.. Hop on Hop Off ( லண்டன் நகரை பஸ்ஸிலிருந்தவாறு அல்லது் ஒவ்வொரு முக்கியமான சுற்றுலா இடங்களில் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு நாள் முழுவதும் ( காலைமுதல்மாலைவரை அவர்கள் போட்டுள்ள பஸ் ரூட்டில் எல்லா இடங்களையும் பார்த்தோம் !..

Sunday, December 6, 2015

ஓரு தொப்புள் கொடி உறவின் நெகிழ வைத்த பதிவு... நன்றி சகோதரா Ramacrshna Yess

ஓரு தொப்புள் கொடி உறவின் நெகிழ வைத்த பதிவு...
நன்றி சகோதரா Ramacrshna Yess
------------------ 

...உதவுவாரில் எங்கே பார்த்தாலும்...
குல்லாக்கள்... SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...
"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",
"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".
'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;
'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;
'திணறி நின்றார்கள்' என்றில்லை;
'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!

அடுத்தது என்ன?

நீருக்கு வீடுகள் வேண்டும்

தெளிவாகத் தெரிந்துவிட்டதுநீருக்கு வீதிகள் வேண்டும்

ஐயமின்றிப் புரிந்துவிட்டதுநீரின் வீடுகள்

குளங்கள் ஏரிகள் குட்டைகள்

என்று பல

Friday, December 4, 2015

மழையல்ல பிழை

மழை வரும்
மருந்தாகச் சில நேரம்
மாணிக்கப் பரல்களாகச் சில நேரம்
மந்திரத் திறப்பாகச் சில நேரம்
மயக்க மொழிப் பொழிவாகச் சில நேரம்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வோர் அதிசயம்

அள்ளித்தரும்
அன்னை மழையின் மாண்பைச்
சொல்லி மாளாதுதான்

ஆனால்
வான மொத்தத்தின்
ஞானப் பெருநெருப்பையும்
அப்படியே நீராய் மாற்றி
நிலமிறங்கும் பெருமழையே
நீ எவரின் மூளைக்குள்
எவ்வகை நாற்றை நட வந்தாய்?

*

தமிழ்நாட்டில் பத்து நாட்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ...

தமிழ்நாட்டில் பத்து நாட்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி விட்டது.
உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் அலுவலகம், போக்குவரத்து அமைச்சகம், அமைச்சர், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

நான் அனுப்பிய விண்ணப்பத்தை இப்போது வெளியிடுவதில் தவறில்லை என்பதால் பகிர்கிறேன்.
இது தகவலுக்காக மட்டுமே. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நீங்களும் குரல் கொடுக்கலாம். (என் ஆங்கிலத்தில் குறை காணாதிருக்கவும்.)

Thursday, December 3, 2015

கனத்த மழையிலும் இணைத்த மனித நேயம்...

கனத்த மழையிலும்
இணைத்த மனித நேயம்...

அரசியல்வாதிகளின்
சாயத்தைக் குலைத்து;
அரசியலுக்கான முன்னெடுப்புகளின்
முகரையை உடைத்து;
மகத்தான மனிதர்களை வெளிப்படுத்தினாய்;

சாதி மத அரசியலில் முடக்கியிருக்கும்
அரசியல்வாதிகளை அம்மணமாக்கி;
மக்களின் முன் வெளிச்சம்காட்டி;
மரிக்காத மனிதநேய
மகான்கள் யாரென தெளிவுப்படுத்தினாய்;

Tuesday, December 1, 2015

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்


நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

LinkWithin

Related Posts with Thumbnails