Monday, November 11, 2013

ஏற்றுமதி உலகம் வெற்றிப்படிக்கட்டா? கற்றுத்தருகின்றது ஒரு வலைப்பூ !

ஏற்றுமதி உலகத்தில்
நடப்புகளை தெரிந்து கொள்வது
மிகவும் முக்கியம்.
அந்த உலகத்தை
உங்களுக்கு
எளிதான தமிழில்
உங்களுக்கு வாரா வாரம்
எடுத்து கூறவே இந்த வலைப்பூ.

http://sethuramansathappan.blogspot.com

SETHURAMAN SATHAPPAN , AGM Operations,  Scotiabank, Mumbai, India

இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் நடைபெறுகிறது. இதில் மஹாராஷ்டிராவின் பங்கு 55 சதவீதம் ஆகும். என்பதே இவரது முதல் பதிவு.

பெயர்!
தனது தந்தையார் பெயரையும் தன் பெயரின் முன்பு இணைத்துக் கொண்டிருக்கும் சேதுராமன் சாத்தப்பன் அவர்களை யாரிடமும் அறிமுகப்படுத்தும் போது சாத்தப்பன் என்று கூறினால் உடனடியாகத் பலருக்கும் தெரியாது. ஆனால் சேதுராமன் சாத்தப்பன் என்றால் உடனடியாகத் தெரியும். ஏனெனில் அந்தப் பெயரில் தான் தமிழ்நாட்டில் அவர் பிரபலம்.

பதவி!
சேதுராமன் சாத்தப்பன். மும்பையில் உள்ள கனடவைச் சேர்ந்த ஸ்கோஷியா வங்கியில் உதவிப் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
எழுத்து!
தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் எழுதும் கட்டுரைகள் தினமலர் நாளிதழில் கடந்த பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. இது தவிர பல பத்திரிக்கைகளிலும் எழுதியுள்ளார்.
சேமிப்பு, வர்த்தகம், பங்குச் சந்தை, ஏற்றுமதி / இறக்குமதி ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர்.
தமிழில் இவர் எளிமையாக எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அதிகம். கடந்த 12 ஆண்டுகளாக பத்திரிக்கைகளில் எழுதி வரும் இவர் இதுவரை சுமார் 1000 கட்டுரைகளுக்கு மேல் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.
எழுதிய புத்தகங்கள்!
தமிழ்நாட்டின் தமிழில் பல இடங்களில் ஏற்றுமதி சம்பந்தமாக கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். ஏற்றுமதி, சேமிப்பு சம்பந்தமாக தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். இவரது தமிழ் புத்தங்கங்களை கோவையை சேர்ந்த விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் வெளியுட்டுள்ளது.
கருத்தரங்குகள்!
ஏற்றுமதியில் ஆவணங்களுக்காக உலகளவில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி சம்பந்தமாகவும், ஏற்றுமதி டாக்குமெண்ட்கள் சம்பந்தமாகவும் பல கருந்தரங்களில் சிறப்பு பேச்சாளராக இருப்பவர். ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்றுமதி ஆவணங்கள் சம்பந்தமாக கருத்தரங்குகள் நடத்துவதற்கு அந்த நாட்டு அரசங்கத்தால் கடந்த பத்து வருடங்களாக அழைக்கப்பட்டு வருபவர். இது தவிர இந்தியாவின் பல நகரங்களிலும் ஏற்றுமதி சம்பந்தமாக கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.
தமிழ் கருத்தரங்குகள்!
மிழ்நாட்டில் ஏற்றுமதியாளர்களில் பலர் ஆங்கில புலமை இல்லாதவர்கள் என்ற நிலையில் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழில் ஏற்றுமதிக் கருத்தரங்குகளை, தினமலர் பத்திர்க்கைக்காக திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளார். கரூர் கருத்தரங்கில் சுமார் 1700 பேர் கலந்து கொண்டது ஒரு முக்கியமான நிகழ்வு.

பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் அதிகம் செய்யப்படுவது எது தெரியுமா?  ஆப்பிள் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்ற எண்ணமும், வேறு ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு சென்றால் போது அது தொந்தரவு இல்லாதது என்ற எண்ணமும் தான். இந்தியா 2011ம் வருடம் மட்டும் 162000 டன்கள் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளது. அதாவது 16,20,00,000 கிலோக்கள் (16 கோடியே 20 லட்சம் கிலோக்கள்). சைனா, அமெரிக்க, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மற்ற பழங்களில் பியர் 18,000 டன்களும், ஆரஞ்சு 10,000 டன்களும், கிவி 3200 டன்களும், கிரேப் 2600 டன்களும், பிளம் 670 டன்களும் இறக்குமதி செய்துள்ளோம்.

வேறு வீடுகளுக்குச் செல்லும் போது ஏன் இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாகும் பழங்களை உடம்புக்கு கெடுதல் இல்லாத பழங்களை வாங்கி செல்லக் கூடாது? அதாவது கெய்யா, பப்பாளி, திராட்சை போன்றவை. ஆப்பிள் இறக்குமதி குறையுமே?

பழங்களைப் பற்றி நிறையப் பேசி டயர்டாக இருக்கு., ஒரு ஆப்பிள் ஜுஸ சர்க்கரை குறைத்து போடுப்பா!!!!
தொடர்பிற்கு :-sethuraman.sathappan@gmail.com


http://sethuramansathappan.blogspot.com/

http://www.tamilspeak.com/?p=587
நன்றி : http://mudukulathur.com/

No comments: