Saturday, May 31, 2014

வாடகைக்கு இருக்கும் வீட்டில் ..!(நடந்த ஒரு உண்மை சம்பவம்)

நான் ஒரு இரண்டு வருடகாலமாக ஒரு சீன பெண்மணி வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றேன்.
அந்த வீட்டில் நான்கு அறைகள் இருக்கின்றன.
அதில் ஒரு அறையை மட்டும்  நான் வாடகைக்கு எடுத்து இருக்கின்றேன். மற்ற  "ரூம்"களுக்கு யாரும் குடி வரவில்லை.
எனக்கு  வாடகைக்கு  இடம் தந்துள்ளவர் ஒரு சீன 85 வயது வந்த மூதாட்டி. அச் சீன மூதாட்டிக்கு பிள்ளைகள் இல்லை. கணவரும் இறந்து விட்டார்.  அம் மூதாட்டி மட்டும் தான் .
அம் மூதாட்டி தனது  உறவினர்  விட்டில் கோலாலம்பூரில் தங்கிக் கொண்டு  தனக்குள்ள  ஐந்து வீடுகளையும் வாடகைக்கு விட்டு  அதில் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்வை மகிழ்வாக கழித்து வருகின்றது  அந்த ஐந்து விட்டில் ஒரு விட்டில் தான் நான் வாடகைக்கு இருக்கிறேன்.

Friday, May 30, 2014

அண்ணன் ஹிலால் முஸ்தபா அவர்கள் அன்புடன் எனக்கு(முகம்மதலி ஜின்னா) எழுதியது

   முகம்மதலி ஜின்னா அவர்களே! Mohamed Ali

முகம்மதலி ஜின்னாவின் ஆளுமையை அண்ணாந்து பார்க்கக் கூடியவர்களில் நானும் ஒருவன்.

முகம்மதலி ஜின்னாவோடு நேரடித் தொடர்பு கொண்ட தமிழக முஸ்லிம் குடும்பங்களில் உள்ள ஒரு குடும்பத்தின் வாரிசு நான்.

திருநெல்வேலி பேட்டை எம்.முகம்மது இஸ்மாயில் சுதந்திர இந்தியாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், காயிதே மில்லத் என்ற தகுதி பெற்றும் இருந்த தலைவர் எனக்கு தாதா முறை வேண்டும்.

பெருவிரல்கள்


உயில்ப் பத்திரங்களின் அடியில்
நேசத்தின்
உயிர்ப் பதிப்பாய் இருந்தன
தாத்தாக்களின்
பெருவிரல் பதிவுகள்.

தண்ணீர் இறைக்கும்
சணல் கயிறுகளின் இழைகளில்
ரேகைகளைத்
தொலைத்து நின்றன
அம்மாக்களின் பெருவிரல்கள்.

பீடி சுருட்டியும்
பட்டாசு திணித்தும்
பெருமூச்சுகளின் அழுகுரல்களாகின
உழைக்கும் வர்க்கத்தின்
பெருவிரல்கள்.

Monday, May 26, 2014

அப்பனாவது விளையாட்டா ! பிரசவ நேரத்தில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக அலைந்துக் கொண்டிருப்பார்.

ஹீரோயினுக்கு பிரசவம் என்றால், லேபர் வார்டு வாசலில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக நகம் கடித்தபடி அலைந்துக் கொண்டிருப்பார்.

நிஜவாழ்க்கையில் இப்படியா நடக்கிறது, இன்னும் ஏன் இந்த இத்துப்போன சீனை எல்லா படத்திலும் வைக்கிறார்கள் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இதே நேரத்தில் நானும் அப்படிதான் அலைந்துக் கொண்டிருந்தேன். வயிற்றை தள்ளிக்கொண்டு, என் கையைப் பிடித்து அழுத்திவிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே பரிதாபமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த மனைவியின் முகம் பிரேம் போட்ட படமாய் நெஞ்சில் அப்படியே இன்னும் மாட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரைமணி நேர பரிதவிப்பு. கதவை திறந்துக் கொண்டு நர்ஸ் ஒருவர் டென்ஷனாய் வெளியே வந்தார். ஏதாவது சொல்வார் என்று எழுந்து நின்று அவரது முகத்தை பார்க்கிறேன். என்னை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்துச் சென்றார். “ஏதேனும் சிக்கல் ஆயிட்டிருக்குமோ?” என்று படபடவென மனசு அடித்துக் கொண்டது.

மனதில் தோன்றிய எண்ணங்கள்

மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)


முஹம்மது அலி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை

மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..


இறைவன் அருளால் என்னால் முடிந்த அளவு நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றேன்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே.அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

Saturday, May 24, 2014

வாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற வெற்றிக்கு

வாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற வெற்றிக்கு

வெற்றி கிடைத்து உள்ளது உங்கள் உழைப்பிற்கு

மருத்துவராய் வருவதா ???

பொறியாளராய் வருவதா ????

என்று பட்டி மன்றம் போடுவதை விட

மனதில் மனித நேயம் துளிர் விட

யோசிக்க கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே !!!!

முதலாளித்துவத்தை எப்படி புரிந்துகொள்வது?

இது நடந்து பத்து, பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். அப்போது சகோதரியின் திருமணத்துக்காக நிறைய கடன் வாங்கியிருந்தேன். சம்பளத்தின் பெரும்பகுதி அலுவலகத்தில் வாங்கிய லோனில் கழிந்துக் கொண்டிருந்தது. வெளியே வட்டிக்கு வாங்கிய கடன், நகை அடகு வைத்தது என்று கழுத்து நெறிபட்டுக் கொண்டிருந்தது. எனவே கூடுதலாக சம்பாதிக்கும் பொருட்டு, வலிந்து நானாக ‘ஓவர்டைம்’ செய்துக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேர வேலைக்கு போக மீதி நேரம் செய்யும் வேலையெல்லாம் ஓ.டி.யில் ஒன்றரை மடங்கு கூடுதல் சம்பளமாக கிடைக்கும். தொடர்ச்சியாக முப்பத்தியாறு மணி நேரமெல்லாம் கண்விழித்து ஓ.டி. செய்திருக்கிறேன்.

'என் தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் நான் ஏதும் செய்ததில்லை.'- பதிவரின் ஆற்றாமை


 காலை சாப்பாடு முடிந்தால் மதிய சாப்பாட்டிற்குதான் வீட்டிற்கு போவேன். மதிய சாப்பாடு முடிந்து வெளியானால், மாலை டீ குடிக்கத்தான் மீண்டும் வீடு. டீ சாப்பிட்டு கிளம்பினால் இரவு சாப்பாட்டுக்குத்தான் வீடு. அதன் பின்னாவது வீட்டில் இருப்பேனா என்றால் அதுவும் கிடையாது. மறுபடியும் வெளியாகி இரவு 11 மணிக்குத்தான் படுக்க செல்வேன். இதுதான் என் அன்றாட வாடிக்கை.
என்றாவது ஒரு நாள் வீட்டில் படுத்திருந்தால் ஒன்று உடம்பு சரியில்லை என்று அர்த்தம். அல்லது கையில் காசில்லை என்று அர்த்தம்.
அப்படித்தான் அன்றும் வீட்டில் படுத்திருந்தேன். என் தந்தை வீட்டில் நுழைந்ததும் ஏன்டா இப்படி படுத்திருக்கே என்றார். நான் சும்மாதான் என்றேன்.
ஏன் உடம்பு சரியில்லையா என்றார் அக்கறையுடன்.
இல்லத்தா என்றேன்.
அப்படின்னா காசு இல்லையா என்றார் கனிவுடன். நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
உடனே என் அம்மாவை அழைத்தவர் ஏப்பா பய வீட்டிலேயே தங்க மாட்டானே. ஏன் இப்படி படுத்திருக்கான். பாவம் கையில் காசு இல்லே போல. இந்தா இதை அவனிடம் கொடுத்துடு என்று நூறு ரூபாயை எடுத்து நீட்டுவார். உடனே என் அம்மா...
இப்படி காசு கொடுத்தே அவனை கெடுத்து வைங்க என்பார்.
விடுப்பா. அவனுக்கு நம்மதானே கொடுக்கனும் என்பார்.

Friday, May 23, 2014

தாயே உன் புன்னகைப் பரிமாறலில் என் முகவரியும் கூட சேர்ந்தே மண மணக்கும்

அத்தனையும்
இனிக்கும்
அக்கறையாய்
அன்பினையும்
சேர்த்து
பெற்றவள்
பரிமாறும்
உணவுக்கு
முன்னால்
முக்கனியும்
சுவைத்தோற்கும்
முன் நாக்கில்
தேனூறும்

பிட்சாவும்
பர்கரும்
குறைப்பிரசவ
கோழி வறுவலும்
பேச்சுக்கு
மட்டுமே
மணக்கும்

Thursday, May 22, 2014

பக்க தாளம் போட்டு போற்றுபவர்கள்

யார் வெற்றி பெற்றார்
எப்படி வெற்றி பெற்றார்
எதற்காக வெற்றி பெற்றார்
வெற்றி பெற்று விட்டார்

பெரும் செல்வந்தர்களுக்கு வெற்றியே குறிக்கோள்
வெற்றி பெற்றவருக்கு பக்க தாளம் போட்டு போற்றுவார்கள்
இருக்கும் செல்வம் இல்லாமல் போக காபந்து செய்வதற்க்கும்
இருக்கும் செல்வத்தை பல மடங்கு ஆக்குவதற்கும் போற்றிப் புகழ்வதில் அவர்கள் தயங்குவதுமில்லை .கூச்சப் படுவதுமில்லை

தொழிலிலேயே உயர்வான தொழில் ஆடைகள் தயாரிப்பது


சிலருக்கு ஆடைகள் பொருத்தமாக அமையும்
சிலருக்கு சில நிற ஆடைகள் பொருத்தமாக அமையும்
சிலருக்கு அனைத்துமே பொருத்தமாக அமையும்

சில விளம்பர நிறுவனங்கள் பொருத்தமான ஆடைகளை அணிவிக்க
சில ஆடைகளை அணிவித்து விளம்பரம் செய்வார்கள்
சில பொருத்தமான ஆட்களைத் தேடி (அதிலும் பெண்களை )
அணிவித்து விளம்பரம் செய்வார்கள்
பெரும்பாலும் பெண்களை காட்சிப் பொருளாக்க விரும்புகிறார்கள்
பெண்கள் கவர்ச்சிப் பொருளாகி காட்சிப் பொருளாவது பொருத்தமா !

Monday, May 19, 2014

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு என்பதைக் காட்டுகிறது!’
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா, 21 வயதில், “காதலா, கடமையா?’ நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் என்று எழுதி வைத்திருக்கிறார். அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.

இந்தியா மதச்சார்புள்ள நாடாக மாறிவிட்டதாக கூறுவது அபத்தம்


இத்தேர்தல் முடிவுகளின் மூலம் இந்தியா மதச்சார்புள்ள நாடாக மாறிவிட்டதாக சிலர் பதிவிட்டதை கண்டு மனம் வருத்தமே அடைந்தது. ஆகையால் சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகின்றேன். இத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வாக்கு சதவிதம் 31% மட்டுமே. அதாவது மூன்றில் ஒரு இந்தியர் மட்டுமே பாஜகவிற்கு தன் வாக்கை செலுத்தியுள்ளார். அதிலும், பாஜகவிற்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் இந்துத்துவாவிற்கு ஆதரவானதாக கருத முடியாது. கணிசமான வாக்குகள் மாற்றத்திற்காக விழுந்திருக்கின்றன என்றே புரிந்துக்கொள்ள முடியும். பத்து கோடிக்கு மேலாக வாக்குகளை பெற்றும், பாஜகவுடன் ஒப்பிடும் போது சுமார் பதினோரு சதவிதம் பின்தங்கி இருந்தும் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் 44 மட்டுமே. ஆக, பெற்ற ஓட்டுக்கள் கணக்கில் பாஜகவுடன் நெருங்கி நின்றாலும் தொகுதிகள் கணக்கில் காங்கிரஸ் பின்னுக்கு சென்றுவிட்டது.

மதச்சார்பற்ற இயக்கங்கள் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இப்போதிலிருந்தே ஈடுபட வேண்டும்.

காமன் சிவில் கோட், ஆர்ட்டிக்கிள் 370 நீக்கம், ராமர்கோயில் போன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படையான கருத்தாக்கங்களை மோடி அரசாங்கம் செயல்படுத்த முனையுமேயானால் அதற்கு நேரெதிரான கருத்துகளை கொண்ட சக்திகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வலுபெறும்.

காங்கிரஸ் இவற்றுக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பினை முன்வைக்குமென்று தோன்றவில்லை. இந்த விஷயங்களில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்னவென்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இந்தி பெல்ட் வடமாநிலங்களில் பாஜகவை ஆம் ஆத்மியால் மட்டுமே சமாளிக்க முடியுமென்று தோன்றுகிறது.

Sunday, May 18, 2014

படியாதவன் படித்தப் படிப்பு..!

இதெல்லாம் எப்படி நடந்தது - 36
படியாதவன்
படித்தப் படிப்பு..!


என்னுடைய தாதா தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிப். இன்று அவர்கள் இல்லை. தென் தமிழகத்தில் அநேகமாக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மத்தியில் சொன்ன உடனே புரிந்து கொள்ளக்கூடிய பிரபல்யம் பெற்று இருந்தார்.

பேணுதலான இஸ்லாமிய நெறிமுறை வாழ்வை இறுதிவரை முடிந்த அளவு கடைபிடித்து வாழ்ந்தவர்கள். தமிழறிவு நன்றாகக் கைவரப் பெற்றவர். அவர் இளமைக் காலத்தில் இண்ட்டர்மீடியட் படித்து இருந்தார். ஆங்கில அறிவும் அவருக்கு நிறைந்து இருந்தது.

முஸ்லிம்களுக்கு அன்று இருந்த தனித்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நெல்லையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

என் தாதாவுக்கு என்னைத் தமிழ்ப் படிக்க வைக்க தீவிர ஆசை இருந்தது. காரணம், திருக்குறலினுடைய 1330 குறட்பாக்களையும் எந்த இடத்திலும் எவ்விதத்தில் கேட்டாலும் உடனே சொல்லக் கூடிய மனன சக்தி அவருக்கு இருந்தது. நன்னூல் இலக்கண அறிவும், நிகண்டுகள் பரிட்சயமும் நிரம்பப் பெற்றவர்.

எங்கள் தாதாவின் மனைவியார் ஜமால் ஃபாதிமா பீவி. இவர் ஆடுதுறை ஜமால் முகம்மது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லா சாஹிபின் முதல் மகளார். ஆடுதுறையின் அருகில் உள்ள திருவாடுதுறை மடத்தின் புலவர் எங்கள் தாதியின் இல்லத்திற்கு வந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். எங்கள் தாதிக்கும் 1330 குறலும் அத்துப்படி. நன்னூலும் நிகண்டுகளும் நன்கு அறிமுகம். சீறாப்புராணத்தில் முழுமையான பாண்டித்தியம் இருந்தது.

இந்த காரணங்களால் என்னைத் தமிழ்ப் புலவராக்க என் தாதா ஆசைப்பட்டார்.

Friday, May 16, 2014

மனிதநேயம் வேண்டும்

மனிதநேயம் வேண்டும்
மனிதநேயத்திற்கு என்று ஒரு கட்சியா வேண்டும் ?

இஸ்லாம் ஒரு வாழும் வழிதான்
இஸ்லாத்திற்குள் பல பிரிவுகளும் இல்லை
இஸ்லாத்தை வழி நடத்த பல கட்சிகளும் இல்லை

மனிதனால் உண்டாக்கிய பிரிவுகள்
மனிதனால் உண்டாக்கிய பல கட்சிகளாய் பிரிந்து நிற்கின்றன

கருத்துகள் மாறுபடலாம்
கொள்கைகள் மாறுபடலாம்
விளக்கங்கள் மாறுபடலாம்
அவைகள் பிரிவுகளை உண்டாக்கக் கூடாது

Tuesday, May 13, 2014

பச்சோந்திபோல் பல நிறங்கள்

இடிக்க முடியும்
கட்ட முடியாது

சேர்க்க நினைப்பாய்
சேர்க்க முடியாது

சொல்ல முடியும்
சொன்னது நடக்காது

உயிரை போக்குவாய்
உயிரை கொடுக்க முடியாது

சட்டம் இருக்கும்
சட்டத்தை மதிக்க மாட்டாய்

நேர் முகமில்லை
மறைமுகம் உண்டு

பச்சோந்திபோல் பல நிறங்கள்
பச்சோந்திபோல் பல ஜாதிகள்

ஒரு கேள்வியும், ஒரு பதிலும் சில மழுப்பல்களும்...!!

ஒரு கேள்வியும், ஒரு பதிலும் சில மழுப்பல்களும்...!!

-நிஷா மன்சூர்

அரவிந்தன் நீலகண்டன்,
உங்கள் தமிழ்ஹிந்து தள கட்டுரைகளையும் தமிழ்பேப்பர் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்,
உங்கள் வாசிப்பும் உழைப்பும் மதிக்கத் தக்கது.
உங்களுக்கு தர்க்க ஞானமும்,எந்தக் கருத்தையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அபார திறமையும் வாய்த்திருக்கிறது.

எந்தக் கருத்தை முஸ்லீம்கள் முன்வைத்தாலும் அதை திசைதிருப்பி
அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி நீங்கள் விரும்பும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.

Monday, May 12, 2014

விலை குறைவு என்று சொன்னால். அவர்கள் நம்புவதில்லை

எங்கள் கடையில் தயாரித்த பொருளை
புகழ் பெற்ற பெரிய நிறுவனம் வாங்கி
அவர்கள் தயாரித்த பொருளாக விற்பார்கள்

அங்கு விலையோ அதிகம்
அங்கு பொருள் வாங்க வருபவர்களிடம்
இதே பொருள் அங்கு சென்று வாங்குங்கள்
விலை குறைவு என்று சொன்னால்.
அவர்கள் நம்புவதில்லை

Sunday, May 11, 2014

தங்கை நிலவுக்கு


போகட்டும் விட்டுவிடு
தங்கை நிலவே
உனை கரியமில வாயுவால்
கறைப்படுத்திட முடியாது

மனம் தின்றுப்போனவனை
பிணம் திண்ணியென்றென்னி
குணம் மாறு மகளே
உனை குறை கண்ட கண்ணுக்கு
குறையுள்ளதென்றெண்ணி
மனம் மாறு மகளே

Saturday, May 10, 2014

கேட்டது கிடைக்கவில்லை எனினும் தேவைப்பட்டது கிடைத்தது.

நான் கேட்டது கிடைக்கவில்லை ...
நான் கேட்காதது கிடைத்தது .

நான் கேட்டது குறைவு
நான் கேட்டதை விட கிடைத்தது அதிகம்

அதிகமாக கிடைத்ததை அடுத்தவர் கேட்டார்
அதிகமாக கிடைத்தது எனக்கு
அதனை அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லை

அதிகமாக கிடைத்ததின் நிறைவு நீடிக்கவில்லை
அதிகமானதை அதிகமாக்க வழி தேடினேன்

எனக்கு நேற்று நடந்த நிகழ்வு வியப்பைத் தந்தது!.

நான் இருக்கும் இடத்தில் ஒரு நபர் பழக்கம்.
அவர் தையல் கடை தொழில் செய்து வருகிறார். .
அவர் ஒரு வருட காலமாக எனது கடைக்கு அடிக்கடி வரும் நபர்.
அவர் நேற்று என் கடைக்கு வந்தார் .

'வாங்க அண்ணே' என்று அவரை நான் வரவேற்றேன்.
அவர் உடனே 'என்ன அண்ணே தொழுக போகலாமா' என்று கேட்டார்
'ஆமா போகணும் தான்' என்றேன்.
'சரி வாங்க அண்ணே போவோம்.சிறுது நேரம் இதோ வந்து வருகிறேன்' என்று சொன்னேன்.

அதுக்கு அவர் சொன்னார்
'இன்று நடந்து தான் போகணும் நான் பைக் இரவல் வாங்கும் நபர் காணோம் அதனால் நாம் நடந்து தான் போகணும் என்று சொன்னார்'

Friday, May 9, 2014

எந்நிலையும் அவன் வசமே!


சோகம் சூழ்ந்துவிட்டதே
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்

கருணையாளனே!
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?

இதழ்களை உதிரவிட்டு
இதயத்தையேன் வாட்டுகிறாய்!
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாயென
கவலையுற்றுபோது!

படைத்தவன்
பாடம் நடத்தினான்

புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்?
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்?

நீ பட்ட அடிமைத்தனம் களைந்திட துணிந்தே நில்

எதுகை மோனையில்
எழுதிக் கோர்த்தாலும்
மாறுவதில்லையே
மூடன் மனம்

வீரம் கலந்து
உணவைக் கொடுத்தாலும்
ஓடுவதோ
மதுவில் தினம்

மயங்கி அட
அறிவைத்தொலைத்தாய்
சுயத்தின் சுதந்திரம்
கெடுத்தாய்

Thursday, May 8, 2014

ஒரு மேனேஜரின் கதை

:
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பணியாளர் திறனாய்வு எனும் அப்ரைசல் நடக்கும். என்னுடைய டீமில் சுமார் எண்பது பேர். அவர்களை மிகநன்று , நன்று , மோசமில்லை, மோசம் , மிக மோசம் (Excellent, Good, Not Bad, Bad, Very Bad) என்று ஐந்து பிரிவுகளுக்குள் அடக்க வேண்டும். ஐந்துசதவிகிதம் பேரை, "மிக மோசம்" என்ற பிரிவில் ஒதுக்குவதுதான் எந்த மேனேஜருக்கும் மனசாட்சியை மென்று தின்னும் வேலை. ஏனெனில்அந்த ஐந்து சதவிகிதம் பேரின் வேலையும் பறிக்கப்படும். மேனேஜர் என்றவுடன் ஒரு கம்பெனியில் மேனேஜர் என்று ஒரே ஒருவர் இருப்பார் என்று நினைத்தீர்களானால் அது தவறு. ரெண்டு லட்சம் பேர் வேலைபார்க்கும் கம்பெனியில் மேனேஜர்களே ஆயிரக்கணக்கில் இருப்பர். அந்த ஐந்து சதவிகித விதி மேனேஜர்களுக்கும் பொருந்தும். ஆம் மேனேஜர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவர். கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த ஐந்து சதவிகித விதி மிகக்கடுமையாகக் கடைபிடிக்கப்படும்.

இவைகள் ஆரஞ்சு பழங்கள் அல்ல - எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்

இலக்கிய செயல்பாடுகளுக்கும், அதன் தொடர்ச்சியான வரலாற்றிற்கும் பெயர்போன எகிப்தில் பல அற்புதமான பெண் கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அரபுக்கவிதையின் வலிமைமிக்க மொழியை, அதன் சூட்சுமத்தை, நெகிழ்வின் சலனத்தை உள்வாங்கி பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இமான் மெர்ஷலில் கவிதைகளும் முக்கிய இடத்தை பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு இலக்கிய வானில் பட்டுத்தெறிக்கிறது. வாழ்வின் உன்னதங்களை, மகோன்னதங்களை பேசுபவை இமான் மெர்ஷலின் கவிதைகள்.

பாரம்பரிய நதியான நைலின் டெல்டா பகுதியில் மித் அத்லா என்ற கிராமத்தில் வைதீக கிறிஸ்தவ குடும்பத்தில் 1966 ல் பிறந்தார் மெர்ஷல்.  மேலும் அரபு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த மெர்ஷல் 1988 ல் கெய்ரோவிற்கு சென்றார். அந்த தருணத்தில் நவீன அரபுகவிதை குறித்து கெய்ரோ பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியில் 1999 ல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த அவர் அங்குள்ள அல்பர்டா பல்கலைகழகத்தில் அரபு பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அதை தொடர்ந்து வருகிறார்.

பிரபஞ்சத்தின் பார்க்க வேண்டிய அற்புதக் காட்சி


பிரபஞ்சத்தின் விரிவு

பிரபஞ்சத்தின் அற்புத அளவு

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .

பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள்  கணக்கிலடங்காதவை.

விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்

Wednesday, May 7, 2014

எழுதி !எழுதி !!

பாரமிருக்காது என்று நினைத்துத்தான்
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .

தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன

Saturday, May 3, 2014

கடைசி காட்சியில் கலக்கும் கதாநாயகி

கரப்பான் பூச்சிக்கு அடுத்ததாக எந்த பேரழிவையும் தாங்கி நிற்கும் சக்தி கொண்டது எலி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உயிர் பிழைத்துக் கொள்ளும் அறிவு எலிக்கு உண்டு. சர்வைவல் இன்ஸ்டிங்க்ட். ஆனால், எதிர்பாராமல் ஒரு நில நடுக்கமோ, சுனாமி போன்ற வெள்ளப் பிரவாகமோ ஏற்படும்போது, அது என்னவென்று தெரியாத குழப்பத்தில் எலிகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும்.

பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.

Friday, May 2, 2014

உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு

இறைவா நாங்கள் செய்த தவறை மன்னித்து
நிறைவாக உந்தன் அருளை தந்து விடு

நீ படைத்தவைகள்தான் அனைத்தும்
நீ தருபவைகள்தான் அனைத்தும்


எங்கள் பகுதியும் உன் பகுதிதான்
எங்கள் பகுதியில் இருப்பவைகள் அனைத்தும்
உந்தன் அருளால் உருவானவைகள்தான்
நாங்கள் மழை இல்லாமல் வாடுகின்றோம்
எங்களுக்காக படைக்கப்பட்ட செடி ,கோடி, ஆடு ,மாடுகள் இன்னபிறவைகளும்
மழை இல்லாமல் வாடுகின்றன

கோடை மழையில் நனையும் கோட்டாறு !யென
Abu Haashima Vaver  மழையின் அருமையை அனுபவித்து
அருமையான கவிதை பாடுகின்றார்
அபூ ஹாஷிமா வாவர் அவர்கள் கோட்டாறில் பெய்யும் மழையையும்
அழகாக படம் பிடித்தும் போடுகின்றார்

எங்களை பொறாமை எண்ணம் கொண்டவர்களாக ஆக்கி விடாதே
உந்தன் அருளை நாடி உனைத் தொழுது நிற்கின்றோம்
உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு

முகம்மது அலி ஜின்னா  Mohamed Ali

Thursday, May 1, 2014

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்
---------------------------------------------------------
’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.

தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த நாட்டில் வாழ லாயக்கில்லாதவன்.. என்று பலவகையில் தூண்டிவிட்டன. ஆனாலும் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 2009 தேர்தலில் பார்த்த அதே அளவுதான். வாய்கிழிய கத்தினாலும் 27 சதவீத மக்களை ஓட்டுப் போட வைக்க முடியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails