Saturday, June 25, 2016

மரணத்திற்கு அப்பால்... (strictly for the people who believe in afterlife)


Vavar F Habibullah

மனித இனம் அனைத்தும் ஒரே ஆத்மாவில் இருந்து படைக்கப்பட்டதாக திருகுர்ஆன் அறி விக்கறது. அது போலவே ஒவ்வொரு ஆத்மா வும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்றும் சான்று பகர்கிறது. அப்படியென்றால் மரணத்தை சுவைப்பது யார்? மனிதனா அல்லது அவன் ஆத்மாவா!
மரணம் மனித உடலை அழித்து விடும். உடல் அழிந்தால் மனமும் அழிந்து விடும். ஆனால் ஆத்மா என்றும் அழிவதில்லை. ஆத்மா நேரடியாக இறைவனை சென்றடைகிறது என்பது பெரும்பாலான மதங்களின் கருத்து.
அதனாலேயே இறந்த மனிதனின் ஆத்மா சாந்தியடையவும், இறைவன் திருவடி நிழலில் இழைப்பாறவும் வேண்டி பிற மனிதர்களால் இன்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.சில மதங்கள் இதை ஆமோதிக் கின்றன. சில மதங்கள் வேறு படுகின்றன.

அன்பான பெற்றோர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..


Saif Saif


மகனோ,மகளோ ஆசைப் பட்டு கேட்கிறாங்கன்னு சொல்லி தயவு செய்து மொபைல் போன் வாங்கி கொடுத்து விடாதீர்கள்...
காலையில் எழுந்ததுமே முதல் வேலை அவர்கள் மொபைலில் கண்விழிப்பது தான்..
காலை கடன்களை முடிக்கிறார்களோ,
இல்லையோ போனோடு தனியாக போய் அமர்ந்து விடுகிறார்கள்..
வாட்ஸப் சாட்டிங்,பேஸ்புக்,கேம் என மாறி மாறி போய் கொண்டேயிருக்கிறார்கள்..
வாட்ஸப் சாட்டிங்கில் அவசியமில்லாத சப்பை கேள்விகளை கேட்டு பதில் சொல்கிறார்கள்..அது இரவு எத்தனை மணியாக இருந்தாலும் சரிதான்..
அப்படி லைனில் இருக்கா விட்டால் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் இமேஜை அது தகர்த்து விடுவதாக கருதுகிறார்கள்..
எல்லா நண்பர்களும் லைனில் இருக்கும் போது தான் மட்டும் இருக்கா விட்டால் நண்பர்கள் மத்தியில் அவர்களுக்கு ஒரு Shame ஆகப் போய் விடுகிறது...
இதில் முக்கியத்துவம் கேமுக்குத் தான்..விளையாட்டை யார் முதலில் முடிப்பது என்பது தான் இவர்களின் போட்டி..ஆனால் இப்போது வந்துள்ள Minitia என்ற கேம் முடியா ஒரு கேம்..

Sunday, June 19, 2016

அன்புத்தொல்லை

அப்துல் கையூம்

 நான் விடுமுறையில் ஊர் போக திட்டம் போட்டிருந்தால் என் தந்தையிடம் முன்கூட்டியே அறிவிப்பதை தவிர்த்து விடுவேன். டார்ச்சர் என்றால் டார்ச்சர் அப்படியொரு டார்ச்சர். நானும் எவ்வளவுதான் பொறுத்துப் பார்ப்பது..? இந்த மாதக் கடைசியில் ஊர் வருகிறேன் என்று நான் முதல் வாரத்திலேயே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அவ்வளவுதான். நான் எப்பொழுது டிரைவிங் செய்கிறேனோ அந்த நேரம் பார்த்துதான் என் தந்தை போன் பண்ணுவார்.
“ஹலோ,..!  நான்தாம்பா பேசறேன். ஊர் வருகிறேன்னு சொன்னியே ..அது இந்த மாசம் 28-ஆம் தேதிதானே..?”
“ஆமாம். இந்த மாசம்தான். அதுதான் நான் அன்னிக்கே சொன்னேனே..?  மிஸ்ட் கால் கொடுத்தால் போதும் நானே பண்ணுவேனே..? ஏன் உங்க காசை வேஸ்ட் பண்ணிக்கிட்டு. இப்ப நான் டிரைவிங் பண்ணிக்கிட்டு இருக்கேன், அப்புறமா போன் பண்ணுறேன். நீங்க போனை வைங்க”
காரில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் கூட போயிருக்க மாட்டேன். மறுபடியும் போன் மணி ஒலிக்கும்.

Friday, June 17, 2016

புத்திசாலித்தனம்....!

புத்திசாலித்தனத்தை பொதுவாக புத்தகத்தைப் பாராமல் படித்து அதிக மதிப்பெண் வாங்குவதையும் ஆக்கிலம் பேசத் தெரிந்து இருப்பதுமே என்றே பலரும் எண்ணுகிறோம்.
மனப் பாடம் செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டியதில்லை.
புத்திசாலித்தனம் எனபது திறமை சார்ந்த செயல்படு திறன் என்று சொல்லலாம்.
சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவை துரிதமாக எடுத்து செயல்படுத்தி அதில் வெற்றி பெறுவதையும் புத்திசாலித்தனம் எனலாம்.

Thursday, June 16, 2016

இந்த முகநூலில் ஒரு பிரச்சினை என்னன்னா...

சுஹைனா மஜ்ஹர்
இந்த முகநூலில் ஒரு பிரச்சினை என்னன்னா...
நாம் தவ்ஹீதை தாக்கி ஏதேனும் பதிவிட்டால் உடனே தர்ஹாவாதிகள் நெருங்கி வருவார்கள்.
தர்ஹாவாதிகளை தாக்கி ஏதேனும் பதிவிட்டால் உடனே தவ்ஹீதுஇயக்கவாதிகள் நெருங்கி வருவார்கள்.
அத்தகையோரிடமிருந்து நிறைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும். பல நேரங்களில் என் அனுபவத்தில் உணர்ந்தது இது.
ஆனா நான் எந்த வாதியுமல்ல வியாதியுமல்ல. பிறந்ததில் இருந்தே தப்லீக்குடைய பாசறையில் வளர்ந்தவள். 35 வருடங்களாக தீன்பணியாற்றி வரும் பழுத்த தப்லீக்வாதி என் தந்தை. தீனுக்காக சொந்த காசில் பல நாடுகள் சுற்றி நிறைய தியாகங்கள் செய்தவர். இப்பவும் அவர் அப்படித்தான். அதனால் சின்ன வயதில் இருந்தே ஹலால் ஹராம் பேணுதலுடன் வளர்க்கப்பட்டேன். மார்க்க சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு அறிந்திருக்கும் காரணமும் அது தான். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, June 14, 2016

தலையை காட்டிவிட்டு வரணும்....!

தலையை காட்டிவிட்டு வரணும்....!

இது உறவினர் மற்றும் நண்பர்களை காண அவர்களது இல்லத்திற்கு அல்லது வீட்டு விசேசங்களில் கலந்து கொண்டதாக சென்று வருவதைக் குறிக்கும் எங்களூர் கோட்டாற்றில் புழங்கும் 'வட்டாரசொல்'.

தலையை காட்டிவிட்டு வருவதற்கும் சென்று இருந்து அளவளாவி மகிழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நாகரீக யுகத்தின் அதிவிரைவு உலகில் அவசர கதியில் தலைகாட்டுவதே பெரும் சிரமமாகத்தான் இருக்கிறது.

நம்மோடு வந்து சேரும் நன்மையை சேர்த்து வைத்தால்


இருந்த இடம் இடிந்தாலும்
இருக்குமிடம் உயர்ந்தாலும்
இருந்த இடம் இதயத்தில்
இனிமையாய் நிலைத்து நிற்கும்
வந்த இடம் புதுமையானது
புதிய இடம் புகழைத் தந்தது
வந்தவர்கள் புகழை நாடி வந்தனர்
வந்தவர் வாயார வாழ்த்திச் சென்றனர்
வந்து போனவர் மனதில் உள்ளதனை நான் அறியேன்
வாழ்த்துச் சொன்னதில் உள்ளம் உவகைக் கொண்டது

Saturday, June 11, 2016

நினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை

நினைத்துப் பார்க்கிறேன்

1999 கனடா வந்தேன். வந்தநாள் முதலாக இணையத் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டேன்.

தமிழ்  உகலம் என்னும் யாஹூ குழுமம்

இங்கே கொட்டியத் தமிழ் மடல்கள் எண்ணிலடங்கா. இவர்கள் நல்ல தமிழில் மட்டுமே உரையாட உலகத்தோரை அழைத்தவர்கள். ஆஸ்தான கவிஞன் என்ற உயர்வை எனக்குத் தந்தவர்கள். இங்கேதான் உலகின் எந்த மொழியிலும் நிகழாத ஒரு புதுமை நிகழ்ந்தது.

அன்புடன் இதயம் என்ற என் கவிதைத் தொகுப்பை இணையத்திலேயே வெளியிட்டார்கள். மாலன் அதற்கான தலைவர்.

இங்கே நான் சந்தித்த தமிழ் நேசர்களைப் பட்டியலிட்டு எழுதத் தொடங்கினால் ’தமிழ் உலகம் தந்த என் உலகம்’ என்ற நீண்ட தொடர் எழுத வேண்டி வரும். அதெல்லாம் நான் பணி ஓய்வு பெறும்போது பார்த்துக்கொள்ளலாம்.

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப் பாராட்டுவோர்
பலர் பலர்

நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத்  தூற்றுவோர்
சிலர் சிலர்

நானொரு வெளிநாட்டுவாசி என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றை வியப்போர்
பலர் பலர்

Friday, June 10, 2016

இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

Raheemullah Mohamed Vavar 

இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
எங்கும் நிரம்பித்தான் இருக்கிறது வீசும் காற்று, அதில் சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் எப்போதும்போல் நிறைந்துதான் இருக்கிறது. எனினும் மூச்சுவிடும் மனிதனுக்கு அதே காற்றிருந்தும் காற்றை இழுத்து சுவாசிக்கும் மூக்கிருந்தும் அதை உள்வாங்கிக் கொள்ள நுரையீரல்கள் இரண்டிருந்தும் பிராணவாயு கிடைக்காமல் போவது எதனால், மூச்சு முட்டிப் போவதும் முடிவு ஏற்பட்டு போவதும் எதனால்?
மருத்துவத்தில் சாவுக்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்வார்கள்-

LIVE: Muhammad Ali Funeral Procession and Memorial Service in Louisville, Kentucky

FULL COVERAGE: Muhammad Ali Funeral - Janazah (Jenazah) Muslim Prayer Service in Louisville, KY

Wednesday, June 8, 2016

இறைவேதத்தில் இலயிக்கிறாய்;


Yasar Arafat


இறை வணக்கத்தில் மிதக்கிறாய்;
சஹருக்கு என்ன வேண்டுமென்கிறாய்;
அடுப்பங்கரையை உருட்டுகிறாய்;
நீயேதான் எழுப்புகிறாய்;
திக்ருகளில் மூழ்குகிறாய்;
உறக்கத்தை தொலைக்கிறாய்;
இஃப்தாருக்கு என்ன வேண்டுமென்கிறாய்;
சலிக்காமல் சமைக்கிறாய்;
தியாகத்தில் ஜொலிக்கிறாய்;
வீட்டு நோன்பாளியின் மொத்த
நன்மையையும் எடுக்கிறாய்;
சிரமமா என்றால் சிரிக்கிறாய்;
சுவனம் என பூக்கிறாய்!
‪#‎பெண்கள்‬..
.
Yasar Arafat

நோன்பின் மாண்பு - சில குறள்கள்

Fakhrudeen Ibnu Hamdun

நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்.

ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப(து) அறிவு.

வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு.

வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு.

மிடுக்கு, துடுக்கு, எடக்கு.........

மிடுக்கு, துடுக்கு, எடக்கு.........
நிரம்ப வேண்டாம் ஒரு 5 நாட்கள் மட்டும்.......
என்னைப்பார் என் அழகைப் பார் என்று சொல்லாமல் சொல்லி தலையை நிமிர்த்தி; போகும் பாதையில் உரக்க தட்டி நடந்து, மண்ணில் உழல்வோரை சிறிதும் பொருட்படுத்தாமல், நான்தான் நானேதான் என்று சொல்லியும்......
மெல்லிய இதழில் முத்தமிட்டால் துள்ளும் அவள் உதடுகள் துவண்டு போகுமென்று எப்படி ஒத்தடம் கொடுப்பதென்பதை அறியாமல் மாதங்கள் பல கடந்து விட்டனவே என்று கைசேதப்படும் கைதேர்ந்த கவிகளும்........
நாளைக்கா மிக முக்கியமான வேலை இருக்கிறதே, இனியொருநாள் முயற்சிக்கிறேன் என்று ஏழை வீட்டு விருந்தை அவமதிக்கும் ஆணவ மூளை கொண்டிருப்போரும்........

Sunday, June 5, 2016

ரமளானே வருக ....

ரமளானே வருக ....

Abdul Gafoor 

வானகத்து இல்லங்களில்
பிறை வடித்திடவும்
மனித உள்ளங்களை
புனிதக் கூண்டுகளில்
சிறை பிடித்திடவும்
ரமளானே வருக ....
சுவர்க்கத்தை காட்டிடவும்
நரகத்தை பூட்டிடவும்
தீமைகளை போக்கிடவும்
சுமக்கும் பாவங்களின்
சுமைகளை நீக்கிடவும்
ரமளானே வருக ...
இறை அச்சத்துடன்
நேர்த்தியான முப்பதில்
நோன்புகளை நோற்கவும்
திட்டமிடும் சைத்தானின்
சூழ்ச்சிகள் தோற்கவும்
ரமளானே வருக ...

Wednesday, June 1, 2016

வாய்ப்புகள் ....!

வாய்ப்புகள் ....!
நல்ல வாய்ப்பும் வசதியும் வரவேண்டுமென என்று எண்ணாதவர் ஒருவரேனும் இவ்வுலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.
பொருள்சார் சமூக கட்டமைப்பை காலங்காலமாய் கட்டிக்காத்து வரும் ஆட்சியரசியலின் வெற்றியென்றே இதைக் கூறலாம். வசதிகளைத் தேடிச்செல்லும் மனிதன் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறானா என்றால் சிலருக்கே அந்த வாய்ப்பு வருகிறது அதிலும் வேகுசிலரரே வந்த வாய்ப்பை பற்றிப் பிடித்து முன்னேறிச் செல்கின்றனர்.
வாய்ப்புகளைக் கோட்டை விட்டுவிட்டு அல்லல்பட்டு ஏங்கித்தவிக்கும் அநேகர்களை நாமும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது. அதுபோலவே வந்த வாய்ப்பை தக்க வைத்து முன்னேறிச் செல்கையில் தன்னை சார்ந்தோரையும் உயர்த்திவைக்கும் நல்லோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கழிந்த ஞாயிறு மாலைநேரத்து நகர் உலாவின்போது இருவரைக் காண்கிறேன். அதன் விளைவாக வந்த எண்ண ஓட்டத்தை உங்களோடு பகிர நினைத்ததால் எழுதியதே இந்த பதிவு.

மனம் ஒரு குழந்தை

ஆட்டிவைக்கும்
அழுது புலம்பும்
வாட்டிவதைத்துன்னை
தன்வழிக்கே வரவழைக்கும்
வேண்டியவைக் கிடைப்பதற்காய்
விழிக்குள்ளும் விரல் நுழைக்கும்
வேண்டாதார் மனம் புகுந்து
வெட்டிக்கதையளக்கும்
ஆத்திரம் கொள்ளவைக்கும்
பிறர் அன்பினால் துள்ளவைக்கும்

பள்ளிக்கூடங்கள் திறந்தாச்சு ....

Abdul Gafoor 

பள்ளிக்கூடங்கள் திறந்தாச்சு ....
சீருடைகள் அணிந்த
இளவரசர்களும் இளவரசிகளும்
புத்தகங்களோடு புறப்பட்டாச்சு ....
கற்கும் கல்விதனை
அறிவெனும் உளியெடுத்து
செதுக்கிடும் சிற்பிகள்
வல்லரசாகும் இந்தியாவின்
பாதைகளை சீரமைத்து
வலுவாக்கும் மேதைகள் ....
தேர்வு விடுமுறைகளில்
அள்ளிக் குவித்த
ஆனந்த நினைவுகளோடு
பள்ளிகளுக்கு செல்கிறார்கள் ....