Saturday, November 16, 2013

எத்தனை முறை சென்றாலும் திரும்பவும் செல்ல மனம் நாடுதே!

போய் வந்தவர் சொல்கிறார் மீண்டும் போகவேண்டுமென்று
போகாதவர் சொல்கிறார் போய் வரவேண்டுமேன்று

ஒரு முறை வசதியிருந்தால் போவது கடமையானது
அடுத்த முறை போவது அவர்கள் விருப்பமானது

ஏன் இத்தனை முறை செல்ல வேண்டுமென்பார்
ஏன் இத்தனை முறை பொருள் சேர்க்க ஒரே நாடு செல்கின்றார்


வசதி உள்ளதால் மனம் விரும்பியதால் திரும்பவும் செல்கின்றேன் யென்பார்
வசதி இருந்தால் இல்லாதவருக்கு கொடுத்து உதவி விடு யென்பார்

இல்லாதவருக்கு கொடுக்கத்தான் செய்கிறேன்
இல்லாதவருக்கு இன்னும் கொடுக்க இறையருள் நாடி இன்னொருமுறை சென்று வருவேன் யென்பார்

ஒருமுறை செல்வது கடமையானது
மறுமுறை முறை செல்வது விருப்பமானது

போனவர் சொல்வது போய் வர ஆர்வம் அதிகமானது
போய்வர ஆர்வத்தை அதிகமாக்கியதே இறைவனின் செயல்

உடல் நலமற்று போனவரெல்லாம் நலமோடு வந்தார்
உடல்நலத்தை உயர்வாக்கியது அவர் மனதில் பெற்ற உயந்த நோக்கம்

நோக்கம் உயர்வாய் இருக்க செயலும் உயர்வாய் அமையும்
நோக்கத்தின் படியே செயலும் அமையும்

இறை அருள் நாடி நிற்க
இறை நேசம் தானே வரும்

இறுதிக் கடமை நிறைவேற்றி விட்டேன் என்ற நிறைவு மனதில் இருக்க
இறுதிக் குருதி உடலில் ஓடும் வரை இறை இல்லம் சென்று வர தாளாத ஆசை

புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம்
மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி
பைத்துல் முகத்திஸ் (தூய்மையான வீடு) என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா

முதல் இரண்டில் தொழுதேன் மற்றொன்றில் பைத்துல் முகத்திஸ் தொழ துடிக்கின்றேன்
இறைவா அங்கு தொழ உன் அருளைக் கொடு . அங்கு தொழும் பாக்கியத்தைக் கொடு.

அனைத்தும் படைத்து காக்கும் இறைவா
அந்த ஆவலை நிறைவேற்றித் தந்து விடு

No comments: