Monday, December 31, 2018

இவர்கள் சிறந்த பதிவுகள் இங்கு இருக்கும்

புத்தாண்டே வருக புதுப்பொலிவைத் தருக

புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

புதியதொரு ஆண்டு
பிறக்கட்டும் நாளை
சந்தோஷக் கதவுகளைத்
திறக்கட்டும் காலை

மக்களை நேசிக்கும் அரசு
நாட்டில் மலரட்டும்
மணக்காத மலர்களெல்லாம்
மண்ணில் வாடி உலரட்டும்

வாழ்த்துங்கள். வாழுங்கள்.




Sunday, December 30, 2018

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
 ✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
 ✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
 ✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
 ✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
 ✳விவரங்கள் சொல்லுங்கள்.

*எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) களைவது எப்படி?*

🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

*எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) களைவது எப்படி?*

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

Saturday, December 29, 2018

எங்கும் இருப்பவனே


அல்லாஹ் அளவற்ற கருணை உள்ளவன்

இந்துத்துவக் குறுமன வெறியர்களின் எதிர்ப்பை ஒட்டி நோய்டா Sector 58 ல் உள்ள பொதுப் பூங்காவில் இதுகாறும் நடந்து வந்த வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்று தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தின் மேல்மாடியைத் தன் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகை நடத்தத் திறந்துவிட்டன.

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

Marx Anthonisamy
பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவின் மனைவி. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.

இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது

Wednesday, December 26, 2018

படித்தால் மட்டும் போதுமா?

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது - காணொளி

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

Tuesday, December 25, 2018

ஊருக்காகக் கொடுப்பவர்


செள - யென் - பேட் ( Chow Yun-fat ) ஹாங்காங் சினிமாவின் முன்னோடி நடிகர். ஆஸ்கார் விருது பெற்ற " Pirates of the Caribbean" " A better tomorrow" ஆகிய திரைப்படங்களின் மூலம் மேற்குலகில் எண்ணற்ற இரசிகர்களைப் பெற்றவர்.

Crouching Tiger, Hidden Dragon போன்ற திரைப்படங்களின் வழி பெரும் புகழ் சேர்த்தவர்.

இந்தச் செய்திகள் முக்கியமானவை அல்ல. ஆனால், இவர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புத்தான் மிகவும் முக்கியமானது.

" எனது இறப்பிற்குப் பிறகு, எனது சொத்து முழுவதையும் நன்கொடையாகத் தருகிறேன்" என அறிவித்துள்ளார்.

பைசல் கான்

by.dr.Vavar F Habibullah






பைசல் கான்
தம்பி பைசல் கான் திருவனந்தபுரம்
நெய்யாற்றங்கரையில் அமைந்த
புகழ்பெற்ற நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையின் மேனேஜிங்
டைரக்டர் ஆவார்.

சமீபத்தில்
அவரது மருத்துவமனையின்
சோலார் எனர்ஜி செயல்பாட்டுக்காக
ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டு
தல்களை பெற்ற அவருக்கு சில
நாட்கள் முன்பு நமது இந்திய
ஜனாதிபதியிடம் இருந்து ஒரு
சிறப்பு அழைப்பிதழ் வந்தது.

மாலத்தீவு அதிபர் கலந்து கொள்ளும்
ராஷ்டிரபதி மாளிகை முக்கிய
விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை நமது ஜனாதிபதி அழைத்து இருந்தார்.சரியாக
முப்பது விருந்தினர் மட்டுமே கலந்து
கொண்ட அந்த நிகழ்ச்சியில் நமது
நாட்டின் பிரதமரும் கலந்து சிறப்பித்தார் என்பது மிகவும் இனிப்பான செய்தி.

Sunday, December 23, 2018

மானமும் மார்க்கமும் எங்களுக்கு இரு கண்கள்

NET தேர்வெழுத சென்ற முஸ்லிம் மாணவிகளிடம் தலையை மறைக்க அணிந்திருந்த ஹிஜாபை களைய கூறிய அதிகாரிகளிடம் எங்களுக்கு இவ்வுலகின் தேர்வு மதிப்பெண்ணை விட மறுமையின் கண்ணியம் உயர்ந்தது என்று தேர்வை புறக்கணித்து வெளியேறிய கோவா மற்றும் டெல்லி கல்லூரியில் முதுகலை பயிலும்இரு முஸ்லிம் மாணவிகளின் கம்பீர உணர்வு...

Saturday, December 22, 2018

வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமானது .

வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமானது ...

ஊரிலிருந்து வந்த அலுப்பின் காரணமாக நேற்று வெளியே எங்கும் போகவில்லை.
இரவு நேரத்தில் சும்மா வெளியே கொஞ்ச நேரம் நடந்து வரலாம் என்று கிளம்பினேன்.
என் பேத்திகள் நாங்களும் கூடவே வருவோம் என்று அடம் பிடிக்க அழைத்துச் சென்றேன்.
பக்கத்திலேயே ஓரு பெரிய சூப்பர் மார்க்கெட்.
ஏதாவது வாங்கலாம் என்று உள்ளே
நுழைந்தேன்.
நமக்குத் தேவையான தேவையில்லாத
எல்லாப் பொருட்களும் அங்கே இருந்தன.

தோற்று போனால் வெற்றி கிடைக்கும் ....

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

Friday, December 21, 2018

Singapore:Ameen visited Bhatkal and met Nawayath community in karnataka

Ameen Singapore:
I and Haja(prince tower Nazar mama son) visited many places of Andra, Telungana, karnataka, Kerala historical places. Insha Allaah I will sent you the videos and photos and information of it. Very interesting historical places and facts
Tippu Sultan mosque in bhatkal in karnataka which was built by Tippu Sultan




Tippu Sultan mosque in bhatkal in karnataka which was built by Tippu Sultan

Tuesday, December 18, 2018

அபு ஹாசிமாவின் ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீடு



"மனதிற்கு மகிழ்சியான நிறைவான நிகழ்வு"

அதிர்வு!

தாங்கி நிற்கத் தளமு மின்றி

தொங்கிக் கொள்ள கயிறு மின்றி

அண்ட வெளியில் அந்தரத் தில்

சுழலும் பூமி அதிரும் போது


தன்னில் தழைத்த இயற்கை வளமும்

மனிதன் அமைத்த செயற்கை யாவும்

குளித்தக் குருவி சிலுப்பும் உடல்போல்

சிலிர்த்து   பூமி, உதிரும் போது

நானொரு மாதுளைப் பழத்தின் இதயத்தில் வசித்து வந்தேன்.

நானொரு மாதுளைப் பழத்தின்
இதயத்தில் வசித்து வந்தேன்.

ஒரு விதை சொன்னது,
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன்.
காற்று என் கிளைகளுக்கிடையில்
ராகம் பாடும்,
கதிரவன் என் இலைகளின் மேல்
நடனம் புரியும்,
எல்லாக் காலங்களிலும் நான்
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்."

சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்

டிசம்பர் 17.சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்.அல் பாத்திஹா.

1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ஆவார். மிகவும் பிரபலமான கவிஞர் மட்டுமின்றி விற்பனையிலும் சிறந்து விளங்கிய படைப்புகளைக் கொடுத்தவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் சில சமயங்களில் இவர் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். இவருடைய கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் பரவலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும், பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றும் சிறப்படைந்துள்ளன. துருக்கி, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவரது படைப்புகள் மிகவும் பிரபலம்.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது


அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
-குர்ஆன்:17:23.

குர்ஆன்17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி



 அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:
 ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

சிற்றின்பமும் ... பேரின்பமும்....*

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?

Thursday, December 13, 2018

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்

by சேயன் இப்ராகிம்

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்


வடஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) வந்தவாசிக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. 22.01.1760 அன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப்போரில் அயர்புட் தலைமையிலான ஆங்கிலேயக் கம்பெனிப்படை, தாமஸ் ஆர்தர் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது. 
இப்போரின் மூலம் இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. அவர்கள் படிப்படியாக இந்தியாவிலிருந்த அனைத்து பெரிய, சிரிய அரசர்களை வென்று முழு இந்தியாவையும் தங்களது குடையின் கீழ் கொண்டு வந்தனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் தவிர, தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் இந்நகருக்குப் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியுள்ளனர். இந்நகரில் பிறந்த சமூதாயச் சேவையாளர் ஜனாப் கே.ஏ. வகாப் அவர்களைப்பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.

Who will cry when you die in Tamil

Wednesday, December 12, 2018

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

அப்பா

அப்பா

அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .

தந்தி டி.வியை. விட்டு விலகியது ஏன்? Rangaraj Pandey Quits Thanthi TV

��������Why thousands of Palestinian refugees are moving out of Lebanon | Al...

Al Jazeera English | Live

கடந்த வாரம் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 10/12/18 | BBC Tamil TV News 10/...

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? – லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி

Monday, December 10, 2018

இறைவனை பழிக்காதீர்!!!


 Colachel Azheem
***************************
இறைவன் படைப்பினில்
இயற்கை சிறந்தது.
மனிதனின் சுயநலம்
நாநிலம் நசிந்தது.
காற்று சுழல்வதும்
நிலங்கள் அதிர்வதும்
புயலும் பெருமழையும்
இறைவன் சக்தியே!

ஜெர்மனியரின் இஸ்லாமிய தமிழாய்வு

ஜெர்மனியரின் இஸ்லாமிய தமிழாய்வு
WRITTEN BY நூருத்தீன்.

ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டாக்டர் டார்ஸ்டன் (Torsten Tschacher). இவரது பாடத்துறை இஸ்லாம். தெற்காசியாவில் குறிப்பாக ‘தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாம்’ என்பதில் தனது கவனத்தைச் செலுத்தி ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார்.

தூய்மை - 100%

தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்

புழக்கத்திலுள்ள நாணயமாற்று விகிதத்தை இந்தத் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிட்டே நிலைநிறுத்துகின்றன. இப்படிப்பட்ட விலையுயர்ந்த மதிப்புமிக்க உலோகம் 100க்கு 100 தூய்மையுடன் நமக்குக் கிட்டுவதில்லை. ஒரு துண்டு தங்கத்தை நாம் எத்தனை வகையான ரசாயன சுத்திகரிப்புக்கு அதி கவனத்துடன் உட்படுத்திய போதினும், காற்றில் மிதக்கும் தூசு, உருக்கும் கருவியிலுள்ள அழுக்கு அல்லது புழுதி அதில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. எனவேதான், தங்கக் கட்டிகளை ‘பிஸ்கட்’டாக (Biscuit) வடித்து விற்கும் ஸ்விட்ஸர்லாந்து நாட்டு ரசாயனக்கூடம், ஒவ்வொரு துண்டும் எத்தனை கிராம் எடை என்பதை அதன்மீது பொறிக்கும்போதே, அது 99% தூய்மையுடையது என்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். அதாவது 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியில் 99 கிராம் மட்டுமே தங்கம்; மீதி 1 கிராம் வேறு அன்னியப்பொருள் என்பது விளக்கம். இன்னம் சற்றுத் தெளிவாகச் சொல்வதென்றால், 1 கிலோ எடையுள்ள தங்க ‘பிஸ்கட்’ கட்டிகளை வாங்க நாம் கொடுக்கும் பணம், 990 கிராம் தங்கத்துக்கும் 10 கிராம் அழுக்குக்கும் செலுத்தப்படுகிறது என்னலாம். எனவே, 100% தூய்மையான தங்கம் எங்கும் கிடைக்காது; கிடைக்க வழியுமில்லை.

Monday, December 3, 2018

தினம் ஒரு செய்தி - 145 | பகுதி - 02

இந்த ஒரு நிமிட வீடியோவைப் பாருங்கள். நாம் தமிழர் கட்சி யூடியுபில் நாகூர் ரூமியின் தன்னம்பிக்கை வாசகங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதுவும் உலகப் புகழ் பெற்ற மேலை நாட்டு அறிஞர்கள் வரிசையில்.

Arabic Sulaimani Tea Recipe in Tamil | அரபிக் சுலைமானி டீ |Hot & Cold | ...

Sunday, December 2, 2018

அனைவரையும் கலங்கடித்த பிரகாஷ்ராஜ் பேச்சு...Prakash Raj Emotional speech ...

#பூவாது_காய்க்கும்_மரம் #கவி_கா_மு_ஷெரிப்

Abu Haashima
20 hrs ·
#பூவாது_காய்க்கும்_மரம்
#கவி_கா_மு_ஷெரிப்

கா.மு.ஷெரிப் ...
இந்த வார்த்தை தமிழ் இலக்கிய உலகின் கவித்துவம் பொங்கும் கல்வெட்டு வார்த்தை.

கவி. கா.மு. ஷெரிப் உன்னதங்கள் நிறைந்த கவிஞர்.
ஆன்மிக சிகரங்களில் வாழ்ந்தவர்.
ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர்.
தனக்குள் வற்றாத கவிதைச் சுனையைக் கொண்டிருந்தவர்.
பண்பாளர்
தாயுள்ளத்தோடு படைப்பாளிகளைப் பாராட்டும் பேராண்மை கொண்டவர்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை."
"பாட்டும் நானே பாவமும் நானே"
என்பது போன்ற காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல திரைப்படப் பாடல்களை எழுதி காற்றையும் மணக்கவைத்தவர்.

சிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்


வணக்கம் புரிபவரை விட ஓர் அறிஞரின் சிறப்பு நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும். அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகள். இறைத்தூதர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை அனந்தரப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் “இல்ம்” என்ற ஞானத்தைத்தான். அதை எடுத்துக்கொண்டவர் மாபெரும் நற்பங்கை அடைந்துகொண்டார் என்று மார்க்க அறிஞர்களின் சிறப்பை அகிலத்துக்கு உணர்த்தியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். (அபூதர்தா(ரலி), அபூதாவுது) அந்த அறிஞர்களின் பத்து அடையாளங்கள் இதோ…
Ø இறை பொருத்தம் பெறும் ஆர்வம்

எம்வழியை ஒளியாக்கு...!


சத்தியசன் மார்க்கமதால்
சாந்திதரும் நோக்கமுடன்
உத்தமநன் நபிவந்தும்
உயர்வடையாதுள்ளோமே!

வேதங்கள் உண்டென்றோம்
விண்ணவரும் உண்டென்றோம்
போதனைகள் பெற்றபின்னும்
பொய்மைகளில் புரள்வதும்ஏன்?

தொழுகைஇலாப் பாவியராய்த்
தொலைவதுவோ? உனக்கஞ்சும்
அழுகையிலாப் பாவியராய்
அழிவதுவோ, அல்லாஹ்வே ....

"நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்"


புதிய விடியல் டிசம்பர் இதழில் பாபர் மசூதி தொடர்பான  
"நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்"

ஒரு வெற்றிச் சின்னத்தின் நிழலில்..! / நிஷாமன்சூர்



நெப்போலியனின் பீரங்கித்துளையிலிருந்து உதிரும்
இரும்புத்துருவை விழுங்கி இனியும் பசியாற இயழாதெனக்
கண்கலங்கியழும் அகழி முதலைகளின்
ஒட்டினவயிற்றைத் தடவிக் கொடுத்தான்
சரபோஜி மாமன்னன்

கோட்டைக் காவலர்கள் கண்ணயரும் வேளை
பூக்கார பேரிளம்பெண்ணின் நைந்துகில் களைந்து
சிறுமுயக்கப் புணர்ச்சி கொண்ட கயல் வணிகன்
இடுப்பாடை இறுக்கிப்பின் வெறுங்கூடை சுமந்தான்

Friday, November 30, 2018

Sydney Storm: Tennis-ball sized hailstones, Three women hit by lightning

Australia experienced hailstones rain fall yesterday. Stone size almost of tennis ball. See video 1.54 mnt as received. Awesome God! Whoever thinks that God can't destroy this earth within a second should revise his/her notes 🙏

Pls watch video

Thursday, November 29, 2018

எனது அன்பு இந்திய வாலிபர்களே இளைஞர்களே உங்களுக்கு தான் இந்த செய்தி :--


1970 முதல் தமிழ்நாட்டின் மக்கள் அரபு நாடுகளாகிய துபாய் அபுதாபி சார்ஜா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா பஹ்ரைன் ஓமன் கத்தார் குவைத்து போன்ற நாடுகளுக்கு ஆரம்ப காலம் முதல் கடந்த சில ஆண்டுகள் வரை பிழைப்பு தேடி போனவர்கள் அதில் நன்றாக சம்பாதித்து வெற்றி கண்டவர்கள் பலர் , வீணா போனவர்களும் சிலர் உண்டு

தற்போது சவூதிஅரேபியா வின் மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருகின்றது இது யாவரும் அறிந்ததே

அரபு நாடுகளுக்கு மாற்றாக வேறு பல இஸ்லாமிய நாடுகள் அதிக பெட்ரோல் வளம் மிக்க நாடுகளும் உள்ளது பலர் இதனை அறியாமல் இருக்கலாம்

தற்போது அதில் சில நாடுகளை அறிந்து கொள்ளுங்கள் :--

Wednesday, November 28, 2018

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

சிலையிலும் படங்களிலும்
அல்லாமல்,
சிந்தனையிலும் செயல்களிலும்
உணர்வுகளிலும் ஒழுங்குகளிலும்
நினைவு கூறப்படும்
சாதனைத் தலைவர்.

மொழிகளை வென்றவர்
நிறங்களை வென்றவர்
இனங்களை வென்றவர்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
நிரந்தர தலைவர்.

உயிர்களும் உடமைகளும்
உதிரமும் உறவுகளும்
தாயும் தந்தையும்
சகலமும் அர்ப்பணமாக்கப்படும்
சாந்தத்தின் சொந்தக்காரர்...

யார் இந்த யூதர்கள்?

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 27/11/18

Special Interview with A.R.Rahman ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

நாளும் ஒரு நபி மொழி ll 17-09-2018 நோய்க்கு, மருத்துவம் செய்தல்

Tuesday, November 27, 2018

நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்


நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும்.

வானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும்.

நன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான்.

நன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான்.

காரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்..

இந்த நன்றியுணர்வை படைத்த இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அது தான் ஒரு மனிதனின் ஈருலக வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும், எண்ணற்ற அருட்பேறுகளை அடையச் செய்திடும், என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.

படைத்தோனுக்கு நன்றி செலுத்துதல்.

படைத்தோனுக்கு செலுத்தும் நன்றி என்பது நம்முடைய நாவு மற்றும் உள்ளம், உடல் உறுப்புக்கள் ஆகியவைகளுடன் தொடர்புடைய ஓர் இபாதத் வணக்கமாகும்.

உள்ளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நன்றி என்பது “நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டுள்ள எல்லாவகையான சிறப்புக்களும், அருட்கொடைகளும் (அதை நாம் நம்முடைய முயற்சியின் மூலமாகவோ, அல்லது உழைப்பின் மூலமாகவோ பெற்றிருந்தாலும் சரியே!) அல்லாஹ்வினால் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும்.

நன்றியுணர்வு: மகிழ்ச்சிக்கு குர்’ஆனிய தீர்வு

உலக செல்வங்கள் அனைத்தையும் பெற்றிருந்தும், குறை கூறிக்கொண்டிருக்கும் ஒருவரை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

ஏழ்மையில் உள்ள ஒரு குழந்தைக்கு யாராவது ஒரு பொம்மை கொடுத்தவுடன் அதன் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படியிருந்தால், பொருட்கள் மட்டும் சந்தோஷத்தை அளிப்பதில்லை, நீங்கள் பார்த்தது அவற்றைப் பணிவுடனும், மகிழ்வுடனும் பெற்றுக் கொள்வதற்கு தயாரான மனநிலை மற்றும்   அசலான மகிழ்ச்சி.

யார் இந்த சென்டினல் மக்கள் ?

ஸ்டாலின் செக் வைகோ பக்

காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள்
திமுக கூட்டணியில் இல்லை
என்று கட்சியின் பொருளாளர் துரை முருகன்
வெளியிட்ட அறிவிப்பு
பல கட்சிகளிடம் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

ரொம்பவும் அப்செட் ஆனவர் வைகோ.
“துரைமுருகனின் அறிவிப்பு என்னையும்
என் தொண்டர்களையும் காயப்படுத்தி விட்டது;
ஸ்டாலின்தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்”
என்று வைகோ சொல்கிறார்.

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 26/11/18 |

இஸ்ரேலில் வதைபடும் தாய்லாந்து தொழிலாளர்கள் - பிபிசி புலனாய்வு

இஸ்ரேல் மற்றும் தாய்லாந்து இடையே உண்டான ஒரு விவசாய ஒப்பந்தத்தின்படி சுமார் 25,000 தாய்லாந்து தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றுகின்றனர்.

அழுக்கடைந்த குடியிருப்புகளில் எலிகளுக்கும் குப்பைகளுக்கும் இடையே மோசமான சூழலில் வாழும் அவர்கள் பிபிசி குழுவிடம் பேசவே அச்சப்பட்டனர்.

இதுவரை அவர்களில் 172 பேர் இறந்துள்ளனர். பலரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

திருமாவளவன் தலைவரான கதை

அணுகுண்டு கதை

சுந்தர் பிச்சையின் கதை | Sundar Pichai Story

Monday, November 26, 2018

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி.

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில் தட்டச்சு செய்து விடலாம்.

அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை உருவாக்கிய பொறியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

போலி அந்தரங்க வீடியோக்களை உருவாக்கும் DeepFake தொழில்நுட்பம் ஓர் பார்வை...




DeepFake (explained in Tamil) எனப்படும் போலி அந்தரங்க வீடியோ தயாரிக்கும் தொழில்நுட்பம் அதீத அறிவாற்றலுடன் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளையும் தீர்வுகளையும். நம்மையும் எப்படி தற்காத்து கொள்வது எனும் விளக்கங்களையும் விவரிக்கிறார் TechTamil கார்த்திகேயன்.

அடையார் சதீதுதீன பாகவியின் அற்புதமான சிறப்புரை

Sunday, November 25, 2018

உலக நாடுகளுக்கெல்லாம்

கதறல் ஆதரவு தேடி

இந்த நீடூரிலிந்து தான்

Nidur AbuAyman
#நாகைமாவட்டம்
மயிலாடுதுறை அருகில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாழும் ஊர் தான்
#நீடூர்_நெய்வாசல்

இந்த ஊரில் பலர் வெளிநாட்டில் பல விதமாக பொருள் ஈட்டியும் பலர் ஊள்ளூரிலும் பொருள் ஈட்டியும் வருகிறார்கள்

இந்த நீடூரிலிந்து தான்
#கஜாபுயலில்_பாதித்த அனைத்து சமுதாய மக்களுக்காவும்
#நீடூர்நெய்வாசல் ஜமாத் சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~

சமூகம் This Scene Can Change Your Life | Whole Life

Saturday, November 24, 2018

மல்லிப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ள காட்சிகள்

மல்லிப்பட்டினம் ஓர் அறிமுகம்

#நன்றி #ராமகிருஷ்ணன் #அவர்களே!

#நன்றி #ராமகிருஷ்ணன் #அவர்களே!

உதவுவாரில் எங்கே பார்த்தாலும்...
குல்லாக்கள்... SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...
"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",
"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".

'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;
'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;
'திணறி நின்றார்கள்' என்றில்லை;
'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!

தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!

காஜா புயலால் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அன்பான வேண்டுகோள் .அவசியம் கேளுங்கள்

காஜா புயலால் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அன்பான வேண்டுகோள் .அவசியம் கேளுங்கள்

Friday, November 23, 2018

இது இந்திய கலாச்சாரம்

குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்

காஜா புயல் வீசிய இடத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்
ஒரு காலம் இருந்தது
அனைத்து இடங்களிலும் கை பம்பில் நீர் வரவைத்து குடித்தார்கள் .அப்பொழுது நிலத்தடி பதினெட்டு அடியில் இருந்தது
அரசும் இந்த மக்களும் தாங்களாகவே நிலத்தடியில் உள்ள நீரை பாதாளம் வரை செல்லும்படி செய்து விட்டனர்
ஆற்றில் இருக்கும் மணலை அடியோடு வாருவது
அந்நிய முதலீட்டார்கள் நீரை விற்க முயன்றது
கேஸ் .பெட்ரோல் இன்னபிறவற்றை எடுக்கும் கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம்
இவைகளால் எறபட்ட பாதிப்புகள் மக்களை இப்பொழுது வேதனையில் சேர்ப்பித்துவிட்டது

ஆப்பிளுடன் உயர்தல் - 1

==ரமீஸ் பிலாலி==

ஆப்பிளுடன் உயர்தல் - 1
 ”மெத்தை அருளல் வேண்டும்” என்னும் கட்டுரையில் பெப்ஸ் மெத்தை வாங்குவதற்காகத் தனக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று சாரு நிவேதிதா எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அதனைச் சுற்றியே சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

சாருவின் இந்த வரிகளைக் கவனியுங்கள்: “என்னுடைய இப்போதைய பிரார்த்தனையை மட்டும் சொல்லி விடுகிறேன். நீ கேட்பியா மாட்டியா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. இப்போது எனக்கு அர்ஜெண்ட்டாக ஒரு மெத்தை தேவை. ப்பூ. இவ்வளவுதானா என்று கேட்காதீரும். இதில் என் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கிறது”

Thursday, November 22, 2018

#TNTJ_நீடூர்_நெய்வாசல்_கிளை சார்பாக கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு

Taxi Mohamed Jubair

#இன்று 22/11/18 வியாழன் #கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு தயாரித்து திருவாரூர் மாவட்டம் மணலி, கச்சனம்,மேலும் நிவாரனம் செல்லாத உள்கிராமங்களில் கொடுக்கப்பட்டது மேலும் கொசு வத்தி,நாப்கின்,பிஸ்கட்,மெழுகு வர்த்தி,திப்பெட்டி, போன்றவைகளும் #முதற்கட்டமாக_கொடுக்கப்பட்டது.

#குறிப்பு:சகோதரர்களே அந்த பகுதி முழுதும் கரண்ட் வரவே 10,15 நாட்கள் ஆகலாம்,இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது, நாம் கொடுக்கு நிவாரனம் சிறிதாக இருந்தாலு அதை வாங்குபவர்கள் ஓவ்வொருவரும் கண்ணீர் மலுக நன்றி கூறுகின்றனர்,அப்போது கல் மனதும் கரைந்து போகும், அவர்களின் துயரம் விரைவாக நீங்க நாம் அனைவரும் ஏக இறைவனிடம் துஆ செய்வோம்

அன்றங்கே ஒரு நாடிருந்ததே........

Tuesday, November 20, 2018

காயிதே மில்லத்தின் கதை | Quaid-e-Millat Story | News7 Tamil

வாடிகனின் கதை | The True Story of the Vatican | News7 Tamil

மருதநாயகம் கான்சாகிப்பின் கதை | கதைகளின் கதை | 15.11.2018

சுந்தர் பிச்சையின் கதை | Sundar Pichai Story | Chief Executive Officer ...

The History of Makkah - 3D Cinematic Version

3D Roller Coaster VIDEO 3D ANAGLYPH RED/CYAN Full HD 1080p POV Ride

நன்றியுணர்வு

மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.

ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .

இது தான் அம்மா ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

"வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.

 இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

Monday, November 19, 2018

Point me at whatever eats look good!

Try me on want-that styles

Try me on want-that styles

#இன்பத்_தமிழ்_நாட்டில் #இனிக்கும்_இஸ்லாம் ... அபு ஹாஷிமா

Abu Haashima

#மக்காவில்_அன்று.....

சூரியனின் வெளிச்சம் பட்டு பொன்னைப்போல் மின்னிக் கொண்டிருந்தது மக்காவின் மணல் பூமி. சூரியனின் வெண்மையைவிட எங்கள் உள்ளம் அதிக வெண்மை என்று எடுத்துச் சொல்வதைப்போல அங்கே கூடிநின்ற ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் ஹாஜிகளின் வெண்ணிற இஹ்ராம்(ஹாஜிகள் அணியும் தையல் இல்லாத வெள்ளாடை) ஆடைகள் மின்னிக் கொண்டிருந்தன.

அகிலத்தின் அருட்கொடையாக வந்துதித்த முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய மகிழ்வோடு இணையற்ற அல்லாஹ்வை போற்றித் துதித்தார்கள்

ஜின்னாதெரு பள்ளிவாசல் சுஹைப் இமாம் அவகளுடைய சிறபான பயான்

மாஷாஅல்லாஹ்
நீடுர் நெய்வாசல் ஜின்னாதெரு பள்ளிவாசல்
சுஹைப் இமாம் அவகளுடைய சிறபான பயான் அல்ஹம்துல்லிலாஹ் \Mohamed Rabeek

Sunday, November 18, 2018

கஜா புயல்


கஜா என்றால் யானையாம்
இலங்கை சூட்டியப் பெயராம்

அந்தமானருகே
குட்டியாய்  ஜனித்த
கஜா

நாகையை மிதித்து
வேதாரண்யம் வளைத்து
பேயாட்டம் போட்டுக்
கதிகலக்கிய
கஜா

Saturday, November 17, 2018

மீலாது சொற்பொழிவு / ஹுதைபிய்யா உடன்படிக்கை /அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buha...

மீலாது சொற்பொழிவு / ஹுதைபிய்யா உடன்படிக்கை /அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari

வீடியோ உதவி Abdul Rahman

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

மீலாது சொற்பொழிவு / ஹுதைபிய்யா உடன்படிக்கை /அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buha...

ஹுதைபிய்யா உடன்படிக்கை


 அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் , அதிரை அஹ்மது
::::: தொடர் - 22 :::::
‘வளர்ச்சிக்கான வாயில்’ என்று நபி வரலாற்றில் ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டுமாயின், அது ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’தான் என்றால், அது மிகையாகாது. மக்கத்துக் குறைஷியருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த இந்த ஒப்பந்தத்தை மேலோட்டமாகப் பார்த்தால், முஸ்லிம்களுக்கு அது ஒரு பின்னடைவுதான் என்று நினைக்கத் தோன்றும்.

தற்பெருமையும் ஆணவமும்!


உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: –

இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

 “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)

மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)

அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: –

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: –

ஹாரிஸா இப்னு வஹப்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” .  (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!

அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: –

அனாதை யாருமில்லை அவனேதான் தந்தை

#மாநிலமெங்கும் #மாநபி_வாசம் ... ! அபு ஹாஷிமா


Abu Haashima
December 17, 2012
#மாநிலமெங்கும்
#மாநபி_வாசம் ... !
அபு ஹாஷிமா

தமிழ் நாட்டின் ஒரே ஒரு 
#சதாவதானி
குமரி மண் பெற்றெடுத்த பாவலரேறு #சதாவதானி_செய்குத்_தம்பிப்_பாவலர் அவர்கள் எழுதிய 
#நபிகள்_நாயக_மான்மிய_மஞ்சரி யிலிருந்து ஒரு பாடலை குமரி மாவட்ட இஸ்லாமிய இசையருவி 
#குமரி_அபூபக்கர் அவர்கள் 
நமக்காக பாடுகிறார்.

அபுபக்கர் அண்ணனின் சொந்த ஊர் 
குமரி மாவட்டத்திலுள்ள 
#காஞ்சாம்புரம்.

ஏன் பிறந்தேன்!

Vavar F Habibullah


இன்று காலையில்...
தம்பி டாக்டர் தனசிங் சாத்தூரில் இருந்து போன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் நகைச்சுவை கலந்து பேசும் நல்ல அரசு மருத்துவர் அவர்.

சார்..பிறந்த நாள் என்றாலே அது
நம் நாட்டில் அரசியல் தலைவர்களை போற்றி புகழ் பாடும் நாளாயிற்றே..!
தொண்டர்கள் புகழ்ந்து பேசினால்
அண்ணாவாக இருந்தால் தம்பி என்பார்.
கலைஞர் என்றால் உடன் பிறப்பே என்பார்.
எம்ஜிஆர் என்றால் ரத்தத்தின் ரத்தமே என்பார்.

*அழகிய வினாக்கள்; அற்புதமான பதில்கள்*

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
📝 *01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?*
👉 நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
📝 *02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?*
👉 தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
📝 *03) நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?*
👉 ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
📝 *04) நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.*
👉 ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
📝 *05) நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?*
👉 நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."

Yembal Thajammul Mohammad

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."
*******
மதீனா முனவ்வராவில் கடுமையான மழையின் காரணமாக வைகறை - ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும்போது "Hayya allal Falah"- என்று சொல்வதற்குப் பதிலாக

"Assalahtu fee Rihalakum" என்று கூறப்பட்டது.

இதன் அர்த்தம் "தங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்பதாகும்.

இது நபி பெருமானார் (Saws - Peace be upon him) அவர்களின் நன்னடைமுறைகளில்- சுன்னத்துகளில்- ஒன்றாகும்.

*முஹம்மது நபி* *(ஸல்)* *அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்!*


1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …

2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத வீடு என்றும் பிள்ளைபிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்

3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
அத்திப்பழம் சுவர்க்கத்துக் கனியாகும் இது மூல நோய்களுக்கு உகந்தது

4. திராட்சைப் பழம் –Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மிகவும்விரும்பிச் சாப்பிட்ட திராட்சைப் பழம்,
ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு கிட்னியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உயர்ந்தது

5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: வயிற்றுப் போக்குள்ளவர்கள் தேனை சுடு நீரில் கலந்து சாப்பிடுவது நல்லது இதை காலையில் இளம் சூடான நீரில் கலந்து குடிப்பது நன்மை
பயக்கும்

6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத் தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள பிள்ளைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று ….

7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: பால் இதயத்தின்சூட்டைத் தணிப்பதோடு, மூளை பார்வையை புதுப்பிப்பதோடு மறதியையும் போக்கச் செய்கின்றது.

Friday, November 16, 2018

Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | IBC Tamil

The Message Tamil Islamic Movie நபிகள் நாயகம் வரலாற்று படம்

The Message 1977 Movie English Full

அருள் மணக்குது"

மாற்று மத அன்பர்களும் விரும்பும் நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பிரபல கவிஞர் நாகூர் சலீம் எழுதிய "அருள் மணக்குது" என்ற பிரபலமான பாடல்..

நபியின் சிறப்பை கண்ணியப்படுத்தும் அற்புதமான வரிகள் அடங்கிய பாடல் இது..

பாடலின் ஒரு சில வரிகள்..

"உலக நெஞ்சில் 
நபியின் தியாகம் 
மறைய முடியுமா..!?"

"இருளிலிருந்தது இழிவிருந்தது நபி பிறக்குமுன்னே..."

"இன்று அரிய உந்தன் மார்க்கம் கண்டு அகிலம் வியக்குதாம்..!"

"இறைவா உந்தன் 
தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

"ஒப்பில்லா இறைவா உந்தன் தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

#மலையாள சகோதரி ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்..

நிர்வாகப் பதவிக்கு ஆசைபடுகின்றீர்களா...!?


7148. இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப்
பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை
நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி
(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்..
(புகாரி Volume :7
Book :93)

இதெல்லாம் எப்படி நடந்தது - 26


இறுமாந்த கவிஞன் - கவிஞர் திலகம்!!!

முப்பதைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு , கூத்தானல்லூரில் ஒரு தெரு (பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது)

அடி பைப்பில் தண்ணீர் அடித்து, ஒரு மனிதர் தெருவில் குளித்து கொண்டிருந்தார்.

நான் பார்க்க ஆசைப்பட்ட அந்த மனிதர்தான் அவர் என்று எனக்கு அப்போது தெரியாது.

ஆனால் அவரைத் தேடித்தான் அந்தத் தெருவிற்குள் நுழைந்தேன்.

அறிவின் மாணவன் தினமும் கற்றுக் கொள்ள நினைக்கிறான்

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
சூல்

 அறிவின் மாணவன் தினமும் கற்றுக் கொள்ள நினைக்கிறான்

தாவோவின் மாணவன் தினமும் கற்றதைக் கழித்துவிட நினைக்கிறான்

அதிகமாக தெரிந்து கொள்ளும் ஒருவன்

தன்னுடைய இருப்பை இழக்கிறான்

அவன் ஒரு தகவல் குப்பையாகிப் போகிறான்

தாவோவின் மாணவன்

சுமையை தினமும் கழித்துக் கொண்டே வருகிறான்

ஒரு முனிவரிடம் போவது என்பது

கற்றதைக் கழிக்கத்தான்

சஹீஹ் முஸ்லிம் & அல் குர்ஆன்



http://www.satyamargam.com/muslim

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 சூல்

பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை அனுப்பச் சொல்லித் தகவல் அனுப்பி வைத்தார்.

பண்டைய ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன். கிரேக்க வம்சாவளியைச் சார்ந்தவர். கிரேக்கர்களின் காலனியாகத் திகழ்ந்த பைஸாந்தியப் பகுதியில் ஏகாதிபத்தியக் குடியிருப்புகளைப் புதிதாக உருவாக்கி அந்நகருக்கு, “கான்ஸ்டன்டினோபிள்” என்று தம் பெயரையே சூட்டிவிட்டார். அதுதான் இன்றைய இஸ்தன்புல். இவர் கி.பி. 312ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவ, அதன்பின் உலக அரங்கில் கிறிஸ்தவ மதம் விரிவடைய ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவியது.

ஜெருசல நாயகனின் வீர வரலாற்றை முதல் பகுதி PDF நூலாக/ MP3 Player வடிவில்

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி - இந்த ஜெருசல நாயகனின் வீர வரலாற்றை சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com) இணையதளத்தில் எழுதி வருகிறேன்.

அதன் முதல் பகுதி PDF நூலாக வெளியாகியுள்ளது. வாசகர்கள் ஒருசேர வாசிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதனை இணைத்துள்ளேன். வாசியுங்கள். பகிருங்கள்.

உங்களது ஆலோசனைகளும் கருத்துகளும் மெருகேற்றிக்கொள்ள உதவும். பகருங்கள்.

அன்புடன்,
-நூருத்தீன்
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம், சத்தியமார்க்கம் தளத்தில் MP3 Player வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வேறு பக்கங்களைப் பார்வையிடும்போது தடையின்றி தொடர்ச்சியாகக் கேட்க தனி Tab இல் திறக்க இங்கே க்ளிக் செய்யவும். சத்தியமார்க்கம்.காம்

(நன்றி: www.tamilaudioislam.com )

இன்பத்_தமிழ்_நாட்டில் #இனிக்கும்_இஸ்லாம் ....

Abu Haashima

(படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்காக )

பெயர் காரணம்

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர்,[1] உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர்.மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே லப்பை என்றானது.