Monday, March 31, 2014

ஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மாதிரி உணர்வுப்பூர்வமான நிஜக்கதை கட்டாயம் இருக்கிறது.

2006 டிசம்பர். விராத் கோஹ்லி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முந்தைய நாள் ஆட்டத்தின் கடைசியில் நைட் பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தார். ஹோட்டல் அறைக்கு அதிகாலை மூன்று மணிக்கு போன் வருகிறது. படுத்த படுக்கையாய் இருந்த அப்பா பிரேம் கோஹ்லி மரணம்.

மறுநாள் களத்தில் மட்டையை பிடிப்பதா அல்லது அப்பாவின் இறுதிச்சடங்குகளுக்காக ஊருக்குப் போவதா என்று குழப்பம். ஆஸ்திரேலியாவில் இருந்த தன்னுடைய பயிற்சியாளரை தொடர்பு கொள்கிறார்.

வாசனைகள் அனுபவங்கள் உணர்வுகள்.


-நிஷா மன்சூர்

சில வாசனைகள் நம் ஆழ்மனதுக்குள் பதிந்து அந்தநேர அனுபவங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றன.
உதாரணமாக எனக்கு கிட்னி ஸ்டோன் வலி மிகைத்துத் துடித்த நாளில்
சாப்பிட்ட கொத்தவரங்காய் கூட்டு, அதற்குப்பிறகு வலியைத்தான்
நினைவூட்டுகிறது,இப்போதெல்லாம் கொத்தவரங்காயைப் பார்த்தாலே அடிவயிற்றில் வலிப்பதுபோன்ற ஒரு உணர்வு.

அதேபோல
குளிக்கும்போது காதுக்குள்ளே நீர் புகுந்துவிட்டால்
சின்ன வயதில் கிணற்று நீச்சல் பழகும்போது ஏற்பட்ட உணர்வுகள்
மீண்டும் தோன்றி மறையும்.

வாழ்க்கைத்துணைவி முடிவாகி உறுதிப்படுத்தப்பட்டபோது
தூத்துக்குக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குள் நுழைந்துகொண்டிருந்தேன். அப்போது காற்றில் மிதந்த மல்லிகை வாசனையோடு அந்த தகவல் மனதில் பதிவாகி உள்ளது,
இப்போது மல்லிகை மணக்கும்போது அந்த நினைவும் மலர்வதைத்
தவிர்க்க முடியவில்லை.

Saturday, March 29, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்

யாசர் அரஃபாத் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) யாசர் அரஃபாத் அவர்களின் பக்கம்
  என் பக்கம்
 Yasar Arafat
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

Thursday, March 27, 2014

மருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்

By பாலமுருகன் - சென்னை,

தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள்

இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல,

ரொம்ப காலமெல்லாம் இல்லை... கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இந்துக்கள் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல, தங்கள் சொந்த ரத்தத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள் என்ற உணர்வும், உண்மையும் அறிந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை இங்கிருக்கும் இஸ்லாமியர்களை எங்கிருந்தோ வந்தவர்களாக பார்க்கும் புதிய போக்கு உருவாகியிருக்கிறது. இதற்கு இன்றைய தலைமுறை இந்துக்கள்தான் காரணமா என்று கேட்டால் நிச்சயமா இல்லை... சர்வ நிச்சயமாக சத்தியமாக இஸ்லாமியர்கள் சிலரின் நடவடிக்கைகள்தான் காரணம்!

Wednesday, March 26, 2014

பயமோ பயம் !




பயமே மனிதனின் ஆதி உணர்வு,
எல்லா நவீன முன்னேற்றங்களுக்கும் பயமே தூண்டுகோல்..!!


பசியிலிருந்து விடுதலை பெற்றாலும்
பயத்திலிருந்து விடுதலை பெறமுடியவில்லை..!!


பாசம் பயத்தாலும் வரும்,
பயம் பாசத்தாலும் வரும்...!!

மரணருசி

 “வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”

‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோதரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.

மறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”

மரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.

என்ன இது நெஞ்சே

என்ன இது நெஞ்சே
என்னை விட்டு விட்டு செல்ல துணிந்தாயோ!
எண்ணங்களை கொன்று கொன்று
எனை சேரத் தவித்தாயோ!

என்ன இது மாற்றம் நெஞ்சில்
உள் நெஞ்சை பிசைகிறதே
உள்ளம் அந்த வலியை தாங்க
உன்னை தினம் நினைக்கிறதே

Tuesday, March 25, 2014

இதுவும் தேர்தல்தான் ...


இதுவும் தேர்தல்தான் ...
பிரச்சாரமில்லை
போட்டியில்லை
வாக்கு சேகரிப்பு இல்லை
லஞ்சம் இல்லை
ஊழல் இல்லை
ஜாதி இல்லை
மதம் இல்லை
கலவர பயமில்லை
கூட்டணி இல்லை
லாப நஷ்ட பேரமில்லை
ஒருவர் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற
குறுகிய மனமில்லை
போட்டியிடும் அனைவரும்
வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு
அதற்குத்தான் ...
உள்ளமெல்லாம்
ஒன்று கூடி வாழ்த்துரைக்குது
தேர்வெழுதும் உனக்கு !
வெற்றி !
வெற்றி !
என்றே முழங்கட்டும் மனசு
வரவேற்க நாங்களிருக்கிறோம்
துணிந்து நீ
தேர்வெழுது !
                          Abu Haashima Vaver  அபூ ஹாஷிமா

கடந்து செல்..!!


கடந்து சென்றால்
காணலாம் என்றனர்
கடவுளை.

கடந்தகாலத்தைக்
கடக்க முடியவில்லை

கடந்தகால காயங்களைக்
கடக்க முடியவில்லை

கால்வாயைக் கடந்தால்
ஆற்றில் சிக்கிக் கொள்கிறோம்

ஆற்றைக் கடந்தால் பெருநதியின் சுழலில்
மாட்டிக் கொள்கிறோம்

பெருநதியைக் கடந்தால்
அலைகளின் ஆர்ப்பாட்டங்களில் அமிழ்ந்து போகிறோம்

Saturday, March 22, 2014

ஜஸ்வந்த் சிங் கண்ணீர் மல்க பேட்டி ..காணொளியுடன்

நீலச்சாயம் வெளுத்துப்போச்சு ......

போலிகளின் பிடியில் பாஜக சிக்கியிருப்பதாக கட்சி தலைமை மீது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் குற்றம்சாட்டினார்.

கட்சியிலிருந்து விலகப் போவதாக கண்ணீர் மல்க பேட்டி -

Rafeeq Sulaiman

  Upset over not getting seat of his choice, Jaswant Singh breaks do...

Wednesday, March 19, 2014

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனும்

by. ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

மக்களவைத் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வருகின்றனர்.  மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மக்களின் கருத்தை அறியும் முயற்சி இதுவரை செய்யப்பட்டதாகத் தொ¢யவில்லை.  ஊடகங்களும் இதில் பொ¢ய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  தேர்தல் அறிக்கைகளில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக எவையெல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க எந்த வகையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் பரிசிலீனைக்கு பின் வரும் பட்டியலை அளிக்க விரும்புகிறேன்.

Tuesday, March 18, 2014

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் விளம்பரம் செய்ய Advertisement Tariff

Advertisement Tariff for 1 Month(30 Days)
Sl.No     Size (Pixels)     Position     Rate/Month
1     468 x 60     Top(Header)     Rs. 6,000/-
2     300 x 250     Content Right     Rs. 5,000/-
3     300 x 250     Content(Center)     Rs. 10,000/-
4     550 x 85     Bottom(Banner)     Rs. 4,000/-

விளம்பரதாரர் கவனத்திற்கு:-

1. சினிமா, புகை, போதைப் பொருட்கள், சூதாட்டம், வட்டி போன்ற சமூக சீர்கேடுகளைத் தூண்டும் விளம்பரங்கள் இந்நேரம்.காம் இணைய தளத்தில் இடம்பெறாது.

2. விளம்பரங்களில் ஆபாசமான படங்களோ, வார்த்தைகளோ இடம்பெறாது.

3. விளம்பரக் கட்டணம் முன்தொகையாக செலுத்தப்பட வேண்டும்.

4. விளம்பர இமேஜ்கள் மேற்கண்ட அளவுகளில், விளம்பரதாரரே செய்து தர வேண்டும்.

தொடர்புக்கு:

விளம்பர மேலாளர் : +9486053501
Mailto : nidurali@gmail.com

வளைகுடா : +971505144765

பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் :


வாக்களிப்பது என்பது நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ஜனநாயக உரிமையுமாகும்.வாக்குரிமையே நம்மை இந்நாட்டின் மைந்தர்களாக நமது அதிகாரபூர்வ உரிமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நாடு சீர்படுவதும், சீர்கெடுவதும் நாட்டு மக்களால் அளிக்கப்படும் வாக்குச்சீட்டு தான் தாங்கி நிற்கிறது. இன்னும் சொல்வதானால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி வாக்குச்சீட்டுக்குத்தான் உண்டு. என்று கூடச் சொல்லலாம்.

அத்தனை பலம் மிக்க இந்த வாக்களிப்பின் நோக்கம், பயன் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மிகத்தெளிவாய் யோசித்து யாருடைய நிர்பந்தமுமில்லாமல் நம்மனதிற்க்கு மனசாட்சிக்கு தமது அனுபவத்தில் ஏற்ப்பட்ட நாட்டு நிலைமைகளை மனக்கண்முன் கொண்டுவந்து யாருக்கு வாக்களிப்பதென்ற நிலைபாட்டினை மனதினில் நிலைபடுத்திக் கொள்ளவேண்டும்.

வட்டார வழக்கில் கதை எழுதும்போது* ....

எழுத்துப் பிழைகளைக் கூடிய மட்டும் தவிர்க்கவும். மற்றக் கதைகளை விட வட்டார வழக்கில் எழுதும்போது எழுத்துப் பிழை படிப்பவர்களுக்கு அதிகக் குழப்பங்களை ஏற்படுத்தும். எது வழக்குச் சொல் , எது பிழை என்று ஆசிரியருக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால் படிப்பவர்களில் பெரும்பாலான பேர் வேறு வட்டாரத்து ஆட்கள். தவிர வட்டார வழக்கு தாய்ப்பால் போல. அதில் களங்கம் வரக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு...

இரண்டு வகை வட்டார வழக்குக் கதைகள்/எழுத்துகள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன.

உயிர் வருக்கம்

1 றம் செய விரும்பு.
2 றுவது சினம்.
3 யல்வது கரவேல்.
4 வது விலக்கேல்.
5 டையது விளம்பேல்.
6 க்கமது கைவிடேல்.
7 ண் எழுத்து இகழேல்.
8 ற்பது இகழ்ச்சி.
9 யம் இட்டு உண்.
10 ப்புரவு ஒழுகு.
11 துவது ஒழியேல்.
12 வியம் பேசேல்.
13 அஃகஞ் சுருக்கேல்

 விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
நன்றி  Source: http://www.aramseyavirumbu.com/

Thursday, March 13, 2014

கட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .

தேர்தல் காலங்களில் விரும்பாத கட்சிகளை அதிகமாக சாட, ஏசி பேச  அந்த கட்சிகளுக்கு  செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .
அடுத்தவரை மரியாதை குறைவாக பேச அதுவே உங்கள் மீதும் திரும்பும்
அடுத்தவனை கேவலப் படுத்துபவன் தானும் கேவலப்படுத்தப் படுவான் என்பதனை அறிய வேண்டும் .
அது உடனே நிகழும் அல்லது சில நாட்கள் சென்று நிகழும் .

ஒரு கட்சியை ஆதரிப்பவர்கள் உங்கள் கட்சியின் குறிக்கோள்,திட்டம்,கடந்த கால சேவைகளைப் பற்றி  சொல்லுங்கள். .
தேர்தலில் மட்டும் உங்களைப் பற்றியே பேச வேண்டிய கட்டாயம் .
அது தேவை .அது பெருமை அல்ல .

Wednesday, March 12, 2014

டெல்லியில் மவுன யுத்தம்


 


தேர்தல் அறிவிப்பால் கட்சிகளிடம் சுறுசுறுப்பு. கூட்டணிகள் இழுபறியாக இருப்பதால் மக்களிடம் பரபரப்பு. இந்த சந்தடியில் முக்கியமான ஒரு விஷயம் பின்வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடந்த மல்லுக்கட்டு.

இரண்டு அவசர சட்டங்கள் பிறப்பிக்க அரசு விரும்பியது. ஜனாதிபதி கையெழுத்து போட்டால்தான் சட்டம் செல்லுபடி ஆகும். கையெழுத்து போட பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். இதுதான் மவுனமாக நடந்த மல்யுத்தத்தின் சாராம்சம்.

சம்பந்தப்பட்ட எல்லோருமே பெரிய தலைகள். வீட்டுக்குள் நடந்தது வெளியே தெரியக்கூடாது என்று விவேகமாக அமுக்கிவிட்டனர். என்னதான் கூட்டிப் பெருக்கினாலும் துடைப்பத்தின் இழைகளில் சிக்காமல் அங்கும் இங்குமாக சில தும்பு தூசி தங்கிவிடும்தானே. அப்படி சிதறிக் கிடந்த தகவல்களை சேகரித்து அலசியபோது வெளிப்பட்ட விஷயங்கள் அசாதாரணமானவை.

ஒன்று, ஊழல் தடுப்பு திருத்த சட்டம். அடுத்தது, பொருட்கள் மற்றும் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கும், அவை தொடர்பான குறைபாடுகளுக்கு உடனடி நிவாரணம் பெறுவதற்கும் பொதுமக்களுக்கு உரிமை வழங்கும் சட்டம்.

ஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார்! இன்னொருவர் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார் !

அன்பே சிவம்

அது கல்லூரியில் படித்த பொன்மாலைக் காலம் !
PUC ... கல்லூரியின் முதல் வருடம்.
எனக்கு தமிழ் கற்பித்த அறிஞர்களில் முக்கியமானவர் பேராசிரியர் டி.என். மகாலிங்கம் அவர்கள்.
அற்புதமான தமிழறிவுக்கு சொந்தக்காரர்.
அருமையாக தமிழ் சொல்லித் தருவார். பின்னாளில் அவரது தமிழுக்கு ரசிகனாகவே நான் மாறிப்போனேன்.
அந்த வருட இறுதியில் நடந்த கல்லூரி விழாவில் " நாவுக்கரசர் " என்ற பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன். சந்தோசமாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் நண்பர்களைப்போல பழகினோம் .
அந்த ஒரு வருடத்தோடு என் தமிழ் பாடம் முடிந்து போனது. அதன் பிறகு படித்ததும் " படித்ததும் " வேறு !
டி.என்.மகாலிங்கம் அவர்கள் பொது விழாக்களிலும் கலந்து கொண்டு பேசுவார். ஆன்மீக விழாக்களிலும் பேசுவார். ஏ.பி.நாகராஜனின் தமிழைப்போல் அவர் பேசும் தமிழ் அத்தனை இனிமையாக இருக்கும். அந்த விழாக்களுக்கு என்னையும் அழைப்பார். நானும் கலந்து கொள்வேன்.
அதே கல்லூரியில் மற்றொரு தமிழ் பேராசிரியரும் பணி புரிந்தார். அவரது பெயரின் முடிவிலும் லிங்கம் இருக்கும்.
இருவருக்குமே முஸ்லிம் மாணவர்களிடம் அலாதி பிரியம் இருந்தது. அதற்குக் காரணம்... முஸ்லிம்களுக்கு தமிழின் மீது இயற்கையாகவே இருந்த காதல் !
காலங்கள் காற்றைப்போல் கடந்துபோக மாற்றங்கள் மரங்களைப்போல் முளைத்தன.
மகாலிங்கம் அய்யா எல்லோருக்கும் நல்லவராகவே வாழ்ந்தார். எல்லா மத மக்களுக்கும் நண்பராகவே திகழ்ந்தார். மற்றோருவரோ புகழ் போதையினாலோ பண போதையின் காரணமாகவோ ஒரு தீவிர இந்து அமைப்பில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அனலை கக்கினார் .

Tuesday, March 11, 2014

சலாதீனின் சீரிய ,அரிய சிறந்த வரலாறு The Rare and Excellent History of Saladin

ஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம்

மீட்டெடுக்கப்பட்டு அது முஸ்லிம்கள் வசமாகியிருந்த காலம் அது. அப்படி அங்கு வந்தவரை, “மன்னர் அழைக்கிறார் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்கள்.

அவரது மார்க்க ஞானத்தையும் எழுத்தாக்கங்ளையும் முன்னமேயே நன்கு அறிந்து அவர்மீது பெரும் நன்மதிப்பு வைத்திருந்தார் மன்னர். அதனால் ஜெருசலம் வந்திருந்த அவரை என்னுடன் தங்கிவிடுங்கள்; பணி புரியுங்கள் என்று அன்பான பலவந்தத்துடன் தம்முடன் அமர்த்திக்கொண்டு படையினருக்குத் தலைமை நீதிபதியாக பதவியும் அளித்துவிட்டார் அந்த மன்னர் - ஸுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. பொறுப்பேற்றுக் கொண்டார் பஹாஉத்தீன் இப்னு ஷத்தாத். கூடவே அவர்கள் இருவர் மத்தியில் தொடங்கி வளர்ந்து உறுதியடைந்தது ஆழமான நட்பு.

Monday, March 10, 2014

புன்னகையை விற்பவளின் கதை

பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

Sunday, March 9, 2014

வெளிநாட்டில் நான்..

சோகங்களைச் சொந்தமாக்கி
இதயத்தைப் பாரமாக்கி
இருட்டினில் நாம்
வெளிநாட்டில் நான்!

அன்புக்குச் சேதாரமாய்
உன் புகைப்படம் மட்டும்
தற்போது ஆதாரமாய்!

சில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது

வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவர்த்தியை அணைத்துவிடு,
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது..!!

-மெளலானா ரூமி

உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறது
-மெளலானா ரூமி

பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு...!!

Thursday, March 6, 2014

குமர்கள் குப்பைகளா?

குமர்கள் எல்லோரும் குப்பைகளா?
கூளங்களா?
படைத்தவனே! எம்மிறைவா!
பாவையர்கள் ஆடவரின்
'பயிர்நிலம்' என்றல்லவா
பகர்ந்திட்டாய் உன்மறையில்;
விவசாயிகள் தாமே விளைநிலங்களை
விலைக்கு வாங்கிடுவர்.
திருமணச் சந்தையில்...
விளைநிலங்கள் அல்லவா விவசாயிகளை
விலைக்கு வாங்கும் விபரீதம் நடக்கிறது!'

Wednesday, March 5, 2014

விக்கிபீடியா - மகிழ்ச்சியான தருணங்கள்...'பிஸ்மில்லாஹ்' குறித்த கட்டுரை



                                                                   Picture source


அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த சில நாட்கள் என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. விக்கிபீடியாவில் இஸ்லாமிய கட்டுரைகளை பதிவேற்றும் முதல் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதே இதற்கு காரணம். பலதரப்பட்ட மக்களும் பார்க்ககூடிய தளமாக விக்கி உள்ளது. ஆனால் அதிலுள்ள பல இஸ்லாமிய தகவல்கள் தவறானவையாகவும், இஸ்லாமிய மூலங்களுடன் முரண்பட்டவையாகவும் இருக்கின்றன. இப்படியான சூழலில் தான், சில சகோக்களுடன் ஒருங்கிணைந்து விக்கிபீடியாவில் சரியான இஸ்லாமிய தகவல்களை பதிவேற்றுவோமே என்று நோக்கத்தோடு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

இதன் முதல் முயற்சியாக 'பிஸ்மில்லாஹ்' குறித்த கட்டுரை சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்க:  
இங்கு கிளிக் செய்யுங்கள் https://ta.wikipedia.org/wiki
சமீப காலங்களில் என்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்ட திட்டமும் இதுவே. இறைவனின் மாபெரும் கிருபையால் முதல் பணி இனிதே முடிவுற்றது மிகுந்த மன அமைதியை தருகின்றது. விக்கிபீடியாவில் எழுத விக்கி நிர்வாகமும் ஊக்குவிக்கும் இத்தருணத்தில் சகோக்கள் எழுத முன்வருவது நம் எதிர்கால சந்ததிகள் பயனடைய உதவியாய் இருக்கும். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Tuesday, March 4, 2014

தொடங்க வேண்டிய கடமை

தொடங்க வேண்டிய கடமை

புல்லரித்தது அதை வாசிக்கும்போது.

‘ஃபத்வா என்ற பெயரில் மத குருக்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அத்தகைய உத்தரவுகளால் எந்த தனி நபர் பாதிக்கப்பட்டாலும் இந்த நீதிமன்றம் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டி காப்பாற்றும்’.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சந்திரமவுலி குமார் பிரசாத், பினாகி சந்திர கோஸ் சேர்ந்து வெளியிட்ட பிரகடனம் இது.

ஃபத்வா என்பது அரபு மொழியில் ஒரு சொல். கருத்து என்று அர்த்தம். பெரும்பாலும் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய சட்டம் மற்றும் நெறிகள் பற்றியும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு முஸ்லிம் குருமார் அளிக்கும் விளக்கத்தை ஃபத்வா என்பார்கள்.

கண்மணியே கவனி!

கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2

வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்…
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!

எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?

கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
‘சேடை’ பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!

ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?

Monday, March 3, 2014

தினம் என் பயணங்கள்

Author: ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
தினம் என் பயணங்கள் – 1

. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய [Read More]

இப்படியும் தோன்றும்

அரசியல் கோட்பாடு அலையாகிறது
அரசியல் வித்தகர்களால் விலையாகிறது

தேர்தலில் கண்ட கட்சி காளான்கள்
தேர்தல் முடிவில் காணாமல் மறையும்

இப்படியும் தோன்றும்

காக்கா பிடிப்பதினிலே தேர்தல் நேரத்தினிலே - உமக்கு
ஜாதி நிறம் தோன்றுவதில்லையே கட்சிக்காரா

பார்க்கும் இடங்கில் எல்லாம் - உந்தன்
உண்மை நிறம் தோன்றுதையே கட்சிக்காரா

கேட்கும் ஒளியில் எல்லாம் - நின்றன்
கட்சி இசை பாடுதடா கட்சிக்காரா

தீக்குள் விரலை வைத்தால் கட்சிக்காரா - உன்னை
தீண்டும் அச்சம் தோன்றுதடா கட்சிக்காரா

Sunday, March 2, 2014

அன்புடன் புகாரி கவிதைகள், கட்டுரைகள் காணொளிகளின் இணைப்புகள் - Links

  

இதயம் மீறும் எண்ணங்கள்      View     
     இதயம் மீறும் எண்ணங்கள்         View
        View
        10 மரணம் உன்னைக் காதலிக்கிறது         View
        10 மரணம் உன்னைக் காதலிக்கிறது         View
    மறப்பதற்காக என்று              View
    தமிழை மறப்பதோ தமிழா     View
    வேணுமுங்க ஒங்கதொணை         View
    தீம்பாவழி தீபவொளி வாழ்த்துக்கள்         View
    இன்றுக்குள் சிறகுகள் விரிக்க     View
    ஹஜ் பெருநாள்          View
    இந்த வாழ்க்கையில்          View
    தொலைந்தே போகட்டும்     View
    ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்         View
    கொல்லாப்பாவம் View
    நீ அழுக்கா புனிதமா?         View
    85 ஆண்களுக்குப் 15 பெண்கள்     View
    அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி...     View
    யார் யார் எத்தனை சதவிகிதம்?         View
    பொற்கனவே பூந்தளிரே         View
    ;-)     இதயம் மீறும் எண்ணங்கள்     View
    நம் கண் குட்டைகளின்         View
    ஏனோ இந்த Internet கசப்பதே இல்லை View
    இ     08 இதயம் மீறும் எண்ணங்கள்         View
    நம்பு     07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்,    View
    அவள் அவளை அவளாகவே திறக்கும்வரை...       View
    பர்தா அணி என்று முஸ்லிம் பெண்களைக் கட்டாயப்படுத்துவதை குர்-ஆன் கண்டிக்கிறது     View
    முஸ்லிம் பெண்களின் தலைத்துணியும் குர்-ஆன் வசனம் 24:31 View
    முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை     View
    குறிஞ்சியும் பூதான்         View
    கனவுகளும் View
    முஸ்லிம்களில் சிலர் தொப்பியும் தலைத்துணியும் ஏன் அணிகிறார்கள்?     View
    நதியலை              View
    பெண்களின் உடை         View
    ஞான வெளிச் சொர்க்கம் எது?     View
    முஸ்லிம் தீவிரவாதிகள்    View
    அவன்தான் மனிதன்         View
    இஸ்லாத்தின் பிறப்பிடம் சவுதி அரேபியாவா?        View
    அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்         View
    பூரண பூரிப்பில் வாழவே     View
    முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?     View
    உன் உள்ளம் தொட்ட என்            View
    கணினிக்குள்         View
    ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?        View
    அதோ பெரிதினும் பெரிய      View
    இதுதான் இஸ்லாம்         View
    பாவ அழிப்பு          View
    வாலி வாழி        View
   

பதிவர்கள் அறிமுகம்

புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .



1. நீடூர் சீசன்


              முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு .

சில பதிவுகள் :

1. லேனா ஓர் ஆச்சரியம்

2. காதல் தோழி !

3.கணினியும் கன்னியும் வைரஸ்



==========================================================================

தமிழன் மட்டும் ஏன்..?

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே... பாடல் வரிகளை நெஞ்சிலிருந்து அழித்துவிட எவராலும் முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் தோழமையின் மேன்மைக்கு தினந்தோறும் துதிபாட அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிர்மாணித்த கவிதாலயம் அந்தப் பாடல்.

இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தின் 15வது மக்களவை கடைசி முறையாக வெள்ளியன்று உற்சாகத்துடன் கூடி, நெகிழ்ச்சியுடன் பேசி, கனத்த இதயத்துடன் கலைந்த நேரத்தில் இரண்டாவது தேசிய கீதமாக அதுதான் இசைக்கப்பட்டிருக்கும்.

மன்மோகன் சிங்கின் கண்ணாடியில் ஈரம் படர்கிறது. அத்வானி கர்சீப் எடுத்து கண்களை துடைக்கிறார். சோனியாவை வாயார புகழ்கிறார் சுஷ்மா. அத்வானியை அவையின் தந்தை என்கிறார் மார்க்சிஸ்ட் வாசுதேவ் ஆச்சார்யா. இன்னொரு அடி மேலே தூக்குகிறார் முலாயம் சிங் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகளை சமர்ப்பிக்கிறார் சுஷில் குமார் ஷிண்டே.

தமிழ்நாட்டில் வாழும் நம்மை பொருத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகள்.

இணைப்புகள் 10 - Links 10

    யாசித்தல் இறைவனிடம் மட்டும்             View
    செயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில்
        View
    முகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது     View
    மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்         View
    மனதில் பட்டதை பட்டென சொல்வேன்         View
    அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.         View
    தேடும் படலம் தொடர்கின்றது         View
    "நாங்கள் மருத்துவராக மட்டும் இருக்க விரும்பவில்லை"         View
    தலைவன் இறைவன் (மட்டுமே         View
    ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது          View




Saturday, March 1, 2014

”பருவம்” (பாடலுடன் கவிதை)



   முந்தியப்  பருவம் கருவறை வளர்ச்சி
    **** முதன்முதற் அங்குதான் சுழற்சி
    தந்தையும் தாயும் இறையவ னருளால்
    ****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
    பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
    ****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
    வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
    *******வளமையும் இளமையும் தேயும்!

    இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
    ****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
    வளமையில் இறையை மறந்ததை யோசி
    ****வறுமையின் புயலதும் வீசி
    உளமதில் பருவ மாற்றமும் வந்து
    *****உறுதியும் குலைந்துநீ நொந்து
    களமதில் மாறும் காட்சியாய் உருவம்
    ******கரைந்ததும் காலமெனும் பருவம்!