Sunday, May 30, 2010

செம்மொழி மாநாடு: 1 இலட்சம் தமிழ் மென்பொருள் சிடிகள் இலவசம்!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்க் கணினி கண்காட்சிக்காக 2 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, கண்காட்சிக் கூடமும், அரங்குகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையதள வசதியுடன் அமைக்கப்படும் 123 அரங்குகளிலும் மத்திய-மாநில அரசுகளின் துறை சார்ந்த இணையதளங்கள், தமிழ்ச் செய்தி மற்றும் பருவ இதழ்கள் இணையதளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ்க் கணினிகள், தமிழ் மின் கருவிகள், தமிழ் பல்லூடக மென்பொருள்கள், தமிழ் விக்கிபீடியா மற்றும் வலைப்பூக்கள் பயிற்சி அரங்குகள், முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மத்திய அரசின் சார்பில் சி-டேக், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ நிறுவனங்களின் தமிழ் மென்பொருள் பயன்பாடுகள் நேரடி செயல் விளக்கம் மற்றும் எச்.சி.எல். டி.சி.எஸ். விப்ரோ போன்ற நிறுவனங்களின் நவீன மென்பொருள் தொழில்நுட்பச் செயல் விளக்க அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்திய மற்றும் தமிழகத்தின் முன்னணி தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்கின்றன. யூனிகோட் தமிழ் எழுத்துருக்கள், அரசுத்துறையில் வளர்ந்துள்ள நவீன மென்பொருள்களில் தமிழ் எழுத்துக்களின் பயன்பாடுகள், விஷுவல் மீடியா துறையில் பயன்படுத்தப்படும் .
தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துக்களை ஒலியாக மாற்றும் நவீன எழுத்துருக்கள், நூலகங்களில் பார்வையற்றோர் தமிழ்ப் புத்தகங்கள் படிக்க உதவும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் இவைகளை பார்வையாளர்களுக்கு விளக்கும் செயல் அரங்குகள் இடம்பெறுகின்றன. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய சுமார் 1 லட்சம் சி.டி.க்கள் இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதுதவிர கண்காட்சியில் பங்கேற்கும் பல நிறுவனங்கள், தங்கள் தமிழ் மென்பொருள்களின் இலவச சி.டி. பதிப்புகளை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளன.
தமிழில் முன்னணியில் உள்ள செய்தி மற்றும் ஊடக இணையதளங்கள், இ-பேப்பர் முறைகள், யூனிகோட் தமிழில் சிறப்பாக செயல்படும் இணையதளங்கள் ஆகியவைகளின் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இத்தகவலை தமிழ் கணினி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சொ. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Sourcehttp://www.inneram.com/201005308620/1-lakh-tamil-software-cds-free-for-wctc
செம்மொழி மாநாடு: 1 இலட்சம் தமிழ் மென்பொருள் சிடிகள் இலவசம்!

அரிய புகைப்படங்கள் (விடியோவுடன்)


இந்திய விடுதலை - . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்கும் நேரு
                                              அண்ணாவுடன் காயிதே மில்லத்

   
முகம்மது அலி (நீடூர்அலி ) திரு .முரசொலி செல்வம் , மான்புமிகு துரைமுருகன் அவர்கள்.

Friday, May 28, 2010

ஷாரூக்கான் – எனது புதிய நூல்

பதிப்பகத் துறையில் புதிதாய்க் காலடி எடுத்து வைத்திருக்கிறது “பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்” எனும் நிறுவனம். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட உத்தேசித்திருக்கும் அந்த நிறுவனத்துக்காக நான் எழுதியிருக்கும் நூல்களில் ஒன்று ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி.
ஒரு நடிகரைப் பற்றி நான் எழுதுகின்ற முதல் நூல் இது தான். வெறுமனே ஷாரூக்கானின் சினிமாக்களைக் குறித்து அலசாமல் அவருடைய பன்முக ஆளுமையைச் சொல்ல முயன்றிருக்கிறேன். நிழல் உலக தாதாக்கள், மிரட்டும் சிவ சேனா, ஐபிஎல், விளம்பர மோகம் என பல கிளைகளில் பயணிக்கிறது இந்த நூல்.
நூலின் அட்டையில் பதிப்பகத்தார் இப்படிச் சொல்கிறார்கள்.
“சினிமா வாசனையே இல்லாத பின்னணியிலிருந்து வந்து சினிமாவைப் பிரமிக்க வைத்தவர் ஷாரூக். நூறு திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற பரபரப்பான திருப்பங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கையும், காதலும். ஷாரூக்கின் வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான நம்பிக்கை டானிக்”
வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் கருத்துச் சொல்லுங்கள்.
பக்கங்கள் : 160
விலை : 130 ரூபாய்கள்
பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்
எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு,
ஆலந்தூர் , சென்னை – 16
9600086474

http://sirippu.wordpress.com/2010/05/24/shahrukhkhan/

ஷாரூக்கான் – எனது புதிய நூல்

வாழ்க்கையின் இலக்கு.
காட்டில் வாழும் முயலைப் பிடிக்க எண்ணியவன் அந்த முயலை எய்து வருவதைவிட, பெரிய யானையைக் கவர முயன்றவன் எய்த அம்பு பிழைத்து வெறுங்கையுடன் வந்தாலும் அது தான் சிறப்பு என்பதை,


'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்பர் வள்ளுவர்.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

வாழ்வியல் இலக்கைக் கூறும் புறப்பாடல் ஒன்று,

கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தான்.

வடக்கிருத்தல் என்பது,
ஊர்ப்புறத்தே தனியிடத்தில் அறம் கூறும் சான்றோர் சூழ புல்லைப்பரப்பி அதன் மீதமர்ந்து உண்ணா நோன்பு இருத்தலாகும். இப்படி இருப்பதால் வீடுபேறும், மீண்டும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது அற்றைக் கால நம்பிக்கையாகும்.


வடக்கிருத்தலால் வீடுபேறு கிடைக்காது என்றும், மீண்டும் பிறவாநிலையென்பது கிடைக்காது என்ற கருத்தினரும் சங்க காலத்தில் இருந்தனர்.

யாவரையும் பார்த்து கோப்பெருஞ்சோழன் சொல்கிறார்...

அறம் செய்வதையே நம் வாழ்க்கைப் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர்.

யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு.
சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு.

“சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா?“

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும்.

அறவழியே (நேர்வழி) வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும்.

பிறப்பு என்னும் நோயிலிருந்து “ மீண்டும் பிறவா நிலை“ அடையலாம்.
(பிறவி என்பதே நோய் – பிறவிப்பிணி. நாம் செய்த பாவத்தால் தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என்பது தமிழர்தம் நம்பிக்கை)

இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். பாடல் இதோ,

“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10 மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே
(புறநானூறு -214)

சொர்கம், நரகம், மறுபிறப்பு போன்றன இருக்கிறதா? இல்லையா என்ற கருத்து சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது.

இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மனித நம்பிக்கையே இதற்குக்காரணம்.

மனிதனைப் பண்படுத்தவே இவையெல்லாம் தோன்றின. நல்லபடி அடுத்தவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் இறந்த பின்பு சொர்ககம் இல்லாவிட்டாலும் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்பது சங்கத்தமிழர் கண்ட உண்மை.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும்.
2. சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது.
3. மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
4. அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_30.htmlவாழ்க்கையின் இலக்கு.: "

இலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடான விவாதம்

வாஷிங்டன்: சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் "சர்வதேச சமூகத்தில்" உள்ளடக்கப்பட்டவையல்ல எனவும் அதனால் "என்ன செய்ய வேண்டும்" என்று எமக்குக் கூறுவதற்கான தார்மீக உரிமையை அவை கொண்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ் அங்கு ஒபாமா நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.சர்வதேச நெருக்கடிக்குழு, மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற குழுக்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுவதுடன், உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென அழைப்புவிடுத்துள்ளன. இந்த அமைப்புகளை பேராசிரியர் பீரிஸ் சாடியுள்ளார்.
"சர்வதேச சமூகத்தின் ஒவ்வொருவருமே கதைக்கின்றனர்சர்வதேச சமூகம் என்றால் என்ன? ஐ.நா.வில் 196 நாடுகள் உள்ளன. ஐ.நா.வின் பொருத்தமான இடத்தில் இந்த விடயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்த விடயத்தை ஆராய்ந்திருந்தது. அங்கு 6 கண்டங்களின் பிரதிநிதிகள் மற்றும் 29 பேர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைத்தனர். 11 நாடுகள் வேறுமாதிரியாகச் சிந்தித்தன. 6 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. ஓரிரு அரசசார்பற்ற நிறுவனங்களைச்
சர்வதேச சமூகமென உள்ளடக்க முடியாது%27 என்று பீரிஸ் கூறியதாக "மைநியூஸ்%27 இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்புச் சபை, பொதுச் சபை, மனித உரிமைகள் பேரவை என்பன "ஆம்%27 என்று கூறினார். அங்கு இந்த விடயங்களைக் கொண்டு செல்ல நாம் ஆயத்தமாக இருக்கிறோம். ஆனால், ஏனைய இடங்கள் என்றால் "இல்லை%27 என்றும் பீரிஸ் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச நெருக்கடிக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் அமைச்சர் பீரிஸ், "பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டோ அல்லது ஊறுவிளைவிக்கப்பட்டோ இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்ணக்கானோர் எனில் 10 ஆயிரமா? 20 ஆயிரமா? 90 ஆயிரமா? வார்த்தையானது தனித்துவமான அடையாளத்தைக் கொண்டதாக இல்லை. கனடிய நீதிபதியால் அந்த அறிக்கை எழுதப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது%27 என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் புலிகளால் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ள பீரிஸ், சிங்கள உயிர்களை மட்டும் தான் குறிப்பிடவில்லை என்று தமிழர்களும் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கதிர்காமர் சிங்களவரா? நீலன் திருச்செல்வத்துக்கு என்ன நடந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் அமைத்த பல்வேறு ஆணைக்குழுக்கள் மனித உரிமை அமைப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகம் தெரிவித்து மன்னிப்பு சபை பிரதிநிதி கேள்வி எழுப்பியபோது, யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் மட்டுமே கடந்திருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலைகளில் ஏனைய நாடுகளின் அனுபவங்களைப் பாருங்கள். சிலநாடுகளுக்கு 36 வருடங்கள் எடுத்தன. ஏன் இரண்டு விதமான நிலைப்பாடுகளைப் பிரயோகிக்கிறீர்கள்? உலகளாகவிய ரீதியில் இதே விதமான நிலைப்பாட்டை சர்வதேச மன்னிப்புச் சபை ஏன் எடுக்கவில்லை? ஏன் இலங்கையை மட்டும் வேறுபடுத்துகிறீர்கள். ஏனென்றால் இலங்கை வறிய நாடு. அதனை உதைபந்து போன்று சுற்றிவர உதைத்துத் தள்ளிவிட முடியும்? இதற்கு நிச்சயமாக நாம் இடமளிக்க மாட்டோம். மன்னிப்பு சபையோ வேறு எவருக்கோ நாம் இடமளிக்கமாட்டோம் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை எமக்குக் கூறுவதை நாம் விரும்பவில்லை. அதற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?
ஐ.நா.தலையிடத் தவறிவிட்டது உலக நீதி அரசியல் மயம்
மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு
சர்வதேச நீதி அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை விமர்சித்திருக்கிறது.வருடாந்த அறிக்கையிலேயே மன்னிப்பு சபை இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 111 நாடுகளில் இடம்பெற்றுள்ள சித்திரவதையை வருடாந்த அறிக்கையில் மன்னிப்பு சபை ஆவணப்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியான சுய நலன்களுக்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் நீதியை தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தமது நேச அணிகள் கண்காணிப்புக்குட்படுத்தப்படாதவாறு கவசமிட்டு காப்பாற்றுவதாகவும் மனித உரிமைகள் குழுவான மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான போர் குற்றச்சாத்தியப்பாடு குறித்தும் மன்னிப்பு சபை தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.தலையிடுவதற்கு ஐ.நா. தவறியமை குறித்தும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போதான பொது மக்கள் இழப்புகளையிட்டு அத்தருணத்தில் "இரத்தக் களரி%27 யென்று ஐ.நா.வின் பேச்சாளர் விமர்சித்திருந்தார். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் "அதிகாரம் விளையாடியதாக%27 மன்னிப்பு சபை கூறுகிறது.இலங்கை அரசு சமர்ப்பித்த தீர்மானத்தை உறுப்பு நாடுகள் அங்கீகரித்திருந்ததுடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததை பாராட்டியுமிருந்தன.
"வருட முடிவில் போர்க் குற்றங்கள் மற்றும் இதர துஷ்பிரயோகங்கள் குறித்து மேலும் ஆதாரங்கள் இருந்த போதும் எவரும் நீதியை ஏற்படுத்தியிருக்கவில்லை%27 என்று மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் கிளாடியோ கோர்டோன் கூறுகிறார்.மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தோரை பதிலளிக்க வைக்கும் கடப்பாடு முழுமையாக தோல்வி கண்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலளிக்க வைக்கும் கடப்பாட்டை வலியுறுத்துவது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலுக்கு கவசமாக இருக்கும் நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சூடானிய ஜனாதிபதி ஓமர் அலி யாசிருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்ததை மன்னிப்பு சபை பாராட்டியுள்ளது. போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட கைதாணை குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வு என்று மன்னிப்பு சபை தெரிவித்திருப்பதாக பி.பி.சி.செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
 http://www.inneram.com/201005288551/2010-05-28-03-47-57
இலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடான விவாதம்

Thursday, May 27, 2010

எங்கும் ஒரே மொழியில் தொழுகைகுர்ஆனின் மொழி அரபு மொழி. அதன்
சொற்களைக்கொன்டு தொழுவார்கள்.
அதனால் ஒரு முஸ்லீம் உலகில் எந்த
பள்ளிவாசலிலும் தொழலாம்.

தொழுகையில் ஓதப்படும் அரபுச்சொற்களின்
அர்த்தங்களை அறிந்து தொழவேண்டும்.

150க்கு மேற்பபட்ட மொழிகளில் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.

தொழுகை முடிந்ததும் தனது தனிபட்ட
வேண்டுதலை இறைவனிடம் எந்த
மொழியிலும் கேட்கலாம்.

மக்காவிலுள்ள காபாவை நோக்கி எந்த
சுத்தமான இடத்திலும் தொழலாம்.

பள்ளிவாசலுக்கு அருகே வசிப்பவர்கள்
 அந்த பள்ளிவாசலில் தொழுவார்கள்.
 பெரிய கூட்டம் இருக்காது.

வெள்ளிக்கிழமை பகல் தொழுகையை
தனிமையாகத்  தொழக்கூடாது.
அவ்வேலையில் பள்ளிவாசல்களில்
 கூட்டம் நிறைந்து இருக்கும்.

ஒரு முஸ்லீமின் முழு வாழ்க்கையும்
இறைவணக்கமாக இருக்கவேண்டும்.

உண்மை பேசவேண்டும்,
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,
அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்.
குறிப்பிட்ட நேரங்களில் தொழவேண்டும்.

vvvvvvvvvvvvvvvvvvvvvvv

Dr எ. மன்சூர் மரைக்கான், Ph. D
ஆ. முஹம்மது ரியாளுதீன்
From  : Dr Mansoor from Kuala Lumpur

நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.

எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலி’ என்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.

வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்; இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும் இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.

விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.

நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது

நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.

எங்களில் சிலர் மரித்தோம்; ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்; வாழ்வதற்காக பிள்ளைகளிடம் போரிட்ட நினைவுகளும் எங்களுடன் வாழ்ந்தது. போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை. பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.

எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.

ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்

தமிழில் : தோழர் கவின் மலர்

(20-05-2010 அன்று சென்னையில் நடந்த பானுபாரதியின் ‘பிறத்தியாள்' கவிதைத்தொகுப்பு வெளியீட்டில் வாசிக்கப்பட்டது)
Source : http://www.luckylookonline.com/2010/05/blog-post_2917.html
நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!:

சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!

மே 26  அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மினைப் பார்த்து பலரது புருவமும் சற்றே உயர்ந்தன. காரணம் அவர் படித்த பள்ளி. திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடம் பெற்று தனது பள்ளிக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ  சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள்  ஜாஸ்மின்.
தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
Source :  http://www.inneram.com
சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!

பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.
நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.
ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
 • ரேசன் கார்டு
 • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
 • வாக்காளர் அடையாள அட்டை
 • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
 • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
 • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
 • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
 • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
 • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
 • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
 • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)Wednesday, May 26, 2010

உன் தொட்டில் ஞாபகங்கள்

 
அவனே பூமியை உங்களுக்குத்ப் தொட்டிலாக அமைத்தான். (திருக்குர்ஆன் 20:53)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன் 43:10)

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78:67)
 

 "Jumaana" Syed Ali
http://www.jsyedali.com/profile/poems_thottil.php
தொட்டில் ஞாபகங்கள்

Tuesday, May 25, 2010

எஸ்.எஸ்.எல்.சி. 2ஆம் இடம் பிடித்த நால்வர்!

பத்தாம் வகுப்பு தேர்வில் நான்கு தேர்வர்கள் 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களின் மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98


ஆங்கிலம் - 97


கணிதம் - 100


அறிவியல் - 99


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494


2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 99


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 97


மொத்தம் - 494


3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 96


ஆங்கிலம் - 98


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494


மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 98


கணிதம் - 98


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494

Sunday, May 23, 2010

ஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு.

'இருப்பவன் இரும்பை தின்பான்' சித்த மருத்துவ பழமொழி.

உயிரோடு இருந்து ஆரோக்கியமுடன் வாழ விரும்புகின்றவர்கள் இரும்பை (அ) இரும்புச் சத்தினை நாடுவார்கள் என்பதே இதன் கருத்து.

உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது..

ஏனெனில் குருதியில் நம் உயிருக்கு ஆதாரமாகிய பிராண வாயுவை ஏற்றிச் செல்லும் வேலை ரத்த சிவப்பணுக்களுக்கு உரியது. இந்த சிவப்பு அணுக்களின் (RBC) ஜீவனாக விளங்குவது 'ஹுமோகுளோபின்' என்ற இரும்புச் சத்து அடங்கிய சேர்மானமாகும். எனவேதான் உடலின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து தேவையாக இருக்கிறது.

இந்த சத்துக் குறைந்து போனால் முகம், உடல் வெளுத்து, ஜீவகளை குன்றி, சோம்பல், மூட்டு வலி, உடல்வலி, படபடப்பு, மூச்சு வாங்குதல், தலைசுற்றல் என்பன போன்ற பல அறிகுறிகள் தோன்றி நம்மை பாடுபடுத்தக்கூடும். Anaemic Pallor என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த நிலையை வெளுப்பு நோய் என்பர் நம் முன்னோர்.

சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இந்த வெளுப்பு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாயினால் இது பெண்களிடையே அதிய அளவில் ஏற்படுகின்றது. இதற்காக டானிக்குகளையும், மாத்திரைகளையும் வாங்கி விழுங்குவதைவிட உணவு முறை மாற்றம் செய்து கொள்வது நிரந்தர தீர்வை தரும்.

1. இரும்புச் சத்தானது பெரும்பான்மை பழங்களிலும், கீரைகளிலும் அசைவ உணவு வகைகளிலும் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் தேவைபடுகின்றன. எனவே, இவைகளும் கிட்டும் வகையில் உணவை அமைத்துக் கொள்ளவேண்டும்.

2. அரிசி கோதுமை வகைகளை நன்கு பாலிஷ் செய்து உண்பதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அரசியில் மீதியிருக்கும் சத்து கிடைக்காமல் போகும். இதற்கு பதிலாக அடிக்கடி கைக்குத்தல் அரிசி, அவல் ஆகியவற்றை கஞ்சி, பாயாசம் போல செய்து பருகலாம். இதனால் இதன் இரும்பு மற்றும் வைட்டமின் சத்து கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, கார் அரிசி ஆகியவையும் இதில் சிறந்தன.

3. வாரம் 3 நாட்கள் கண்டிப்பாக கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக முருங்கைக் கீரை, பசளை, வெந்தய கீரைகளில் இரும்புச் சத்து அதிகம். இவைகளை பகலுணவில் கைப்பிடி அளவு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மேலும் இவற்றின் நார்ச்சத்தினால் மலம் சிக்கலின்றி கழியும்.

4. கருவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. எனவே, இவற்றை துவையலாக அரைத்தும், மோரில் கலந்தும் பருகலாம். இதனால் நல்ல செரிமானம் கிட்டும்.

5. மாதத்தில் 2 நாட்களாவது காயகல்ப கீரைகளாகிய பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை ஆகியவற்றை உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். (அ) இந்தக் கீரைகளை மண்தொட்டிகளில் வளர்த்து தினமும் 1-2 இலையை காலை வெறும் வயிற்றில் உண்டுவரலாம்.

6. பழவகைகளில் மாதுளை, திராட்சை, சப்போட்டா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பல்வேறு வைட்டமின்களும் உள்ளன. எனவே, மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணலாம். பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

7. உலர்ந்த பழவகைகளான சீமை அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கர்ஜுர்க்காய் ஆகியவற்றிலும், உலர்ந்த கொட்டைகளாகிய முந்திரி, பாதாம், அக்ரோட்டு ஆகியவற்றில் இரும்புச் சத்துடன் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைகளை இரவு தூங்கச் செல்லும் முன் உண்ணலாம்.

8. அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்டு ஈரல், எலும்பு மஜ்ஜை மிகவும் சிறந்தன. வெள்ளாட்டின் நெஞ்செலும்பை 'சூப்' போல செய்து பருகினால் நோயினால் மெலிந்த உடலும் கூட தேறிவிடும். தவிர ஆட்டுக்கால், மாமிசம், மீன் ஆகியவற்றை அவரவர் தேக நிலை, வயது, காலத்திற்கேற்ப உண்டு வர 'சோகை நோய்' ஏற்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல எப்போதும் 'in the pink of health'இல் இருக்கலாம்..

Dr. ருக்மணி வேங்கடேசன்

Source : http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_11.html

மாநில தேர்தல் ஆணையராக முனீர் ஹோடா நியமனம்!


தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையராக சையது முனீர் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பணிபுரிந்த டி.சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

தற்போது சையது முனீர்ஹோடா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்து கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

சையது முனீர்ஹோடா மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நாள் முதல், 2 ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் பணிபுரிவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மின்விசை நிதிக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் முனீர் ஹோடா தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்ற உயர் அதிகாரி ஆவார்.

1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையது முனீர்ஹோடா தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது போன்ற பல மொழிகளை பேசும் சிறந்த புலமை மிக்கவர்.

மிகவும் எளிமை, நேர்மை, கண்டிப்பு, கடின உழைப்பு கொண்ட அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பி.சி.அலெக்சாண்டர், பீஷ்மநாராயண சிங் ஆகியோர் ஆளுநர்களாக இருந்த போது அவர்களது செயலாளர், தமிழக அரசில் மக்கள் நல்வாழ்வு துறை, உள்துறை, போக்குவரத்து துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆகிய துறைகளின் செயலாளர் பொறுப்பு உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

முதல்-அமைச்சராக தற்போது கருணாநிதி 5-வது முறையாக பொறுப்பேற்ற போது, அவரது முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

Saturday, May 22, 2010

வணங்காமுடி பதில்கள் (18-05-2010)

ஈராக், ஆப்கன் போர்கள் முடிவுக்கு வந்து விட்டால் அமெரிக்கா என்ன செய்யும்? -ரவி

இருக்கவே இருக்கிறது ஈரான்.

அதுவும் முடிந்தால் வடைகறி...... ஸாரி வடகொரியா.


திரைப்படம் அற்ற இந்தியா எப்படி இருக்கும்? -கமலா

பெருமளவிலான வரி வசூலிக்க வழியில்லாமல் அரசு தள்ளாடும்.

ரசிகமகா ஜனங்கள் சின்னத்திரைத் தொடர்களில் முழ்கி விடுவர்கள்.

முன்னாள் நடிகர்களும் நடிகைகளும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கடை திறந்து விடுவார்கள்.

அல்லது அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம் எல் ஏக்களாகவும் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.திமுக.விலாவது சகோதரர்கள் இருக்கிறார்கள், தலைவருக்குப் பின் அடித்துக் கொள்ள? அதிமுக.வில் தலைவிக்குப் பிறகு என்னாகும் அக்கட்சியின் கதி? -ராஜா முகம்மது

பெரியாரிடமிருந்து விலகி, தி.மு.கழகத்தை உருவாக்கிய அண்ணாதுரை, கட்சியைக் குடும்பமாகக் கருதித் தாம் அண்ணனாக இருந்து கழகத் தம்பிகளை வளர்த்தார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் எம்ஜியாரின் தயவால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கருணாநிதி, தி.மு.கவின் தலைவரான பின் தம் குடும்பம்தான் கட்சி என்று உருமாற்றிவிட்டார். அதனால்தான் நீங்கள் வினா எழுப்ப நேர்ந்தது.

ஜெயலலிதா குறித்த வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் இங்கே பார்வையிடுங்கள்.


அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யாரை தலைவராக பார்க்கிறீர்கள்? - கண்ணன்

ஜெயலலிதா ஓர் ஆலமரம்.

ஆலமரத்தின் கீழ் வேறு எதுவும் வளராது.

ஆனால் அவரின் கட்சியில் யாராவது உருவாவார்கள். எம்ஜியாரின் மறைவிற்குப் பின் ஜெயலலிதாவைத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதைப்போலப் புதிய தலைவரையும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அத்தலைவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

என் பார்வையில் அப்படி ஒரு தலைவர் இப்போதைக்கு அக்கட்சியில் இல்லை


மின்சாரப் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை இல்லாத தமிழகம் உருவாகுமா? - ஜோஸப்

"UTOPIA"

நாட்டின் பொருளாதார, தொழில் வளார்ச்சிகளுக்கேற்பவும் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்பவும் தொலைநோக்குடன் சரியாகத் திட்டமிட்டு நவீனத் தொழில் நுட்பத்திறனுடன் முயன்றால் மின் மற்றும் நீர்ப் பற்றாக்குறை இல்லாத் தமிழகம் உருவாகலாம்.மணிரத்னமும் ஷங்கரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? - வினோதன்

இருவரும் என்னென்ன கதாப்பத்திரங்கள் ஏற்று நடிக்கப் போகிறார்கள் என்று தெரியாதவரை நான் இதில் என்ன கருத்துச் சொல்ல முடியும்?


அதிராம்பட்டணத்துக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? - கோமளா

காங்கேயம் காளை, ராஜபளையம் நாய், மணப்பாறை மாடு போல அதிராம்பட்டினக் கழுதை என்று சொல்ல எந்தத் தொடர்பும் இல்லையே?

ஒருவேளை அவ்வூரார் நிறையப் பொறுப்புகளைச் சுமப்பவரோ-- கழுதை பொதி சுமப்பதுபோல்..?


நடிகையின் மூக்கு, இடுப்பு இவற்றையெல்லாம் ஒப்பிடச் சொன்னால் பதில் அளிப்பீர்களா? - அருணா

நடிகையின் மூக்கு, இடுப்பு மட்டுமல்ல -- யாருடைய மூக்கையும் இடுப்புடன் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் இருவிதப் பணிகளும் நிலைகளும் உள்ளன.

ஆப்பிளை ஆப்பிளுடனும் ஆரஞ்சை ஆரஞ்சுடனும் ஒப்பிடுவதுதான் அறிவு.எம்.ஜி.ஆர் இன்று உயிருடன் இருந்திருந்தால் கருணாநிதிக்கு இத்தனை விருது கிடைத்திருக்குமா? - ராஜன்

ஏதோ கருணாநிதிக்கு விருதுகள் கிடைப்பதைத் தடுக்கும் ஆற்றல் எம்ஜியாருக்கு இருந்ததைப்போல ஒரு மாயை தெரிகிறது உங்கள் வினாவில்.

எம்ஜியார் உயிருடன் இருந்து முதல்வராக நீடித்திருந்தால் கருணாநிதிக்கு இத்தனை எண்ணிக்கையில் விருதுகள் கிடைத்திருக்குமா என்பது உங்கள் வினாவாக இருந்தால்,
"கிடைத்திருக்காது" என்பதே விடை.
இப்போது கருணாநிதிக்கு வழங்கப்படும் விருதுகள் அனைத்தும் எம்ஜியாருக்கு வழங்கப் பட்டிருக்கா.
ஏனெனில், எம்ஜியார் கொடுத்துப் பழக்கப் பட்டவர். விருதுகளைக் கேட்டு வாங்க மாட்டார்.


பெரியார்தாசனைப் பின்பற்றி வீரமணியும் இஸ்லாத்தைத் தழுவினால் பெரியார் கட்சி என்னாகும்? - விச்சு

இப்போதும் பெரியார் உருவாக்கியபடி எக்கட்சியும் இல்லை.

ஒருவர் தம் நம்பிக்கையை மாற்றிக் கொள்வதால் ஒரு கட்சி காணாமல் போகும் என்று சொல்வது அதீதக் கற்பனை..
ஏதோ பெரியாரின் கொள்கைகளை இவ்விருவர் மட்டும்தான் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதுபோன்று நீங்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளீர்கள்.

 
http://www.inneram.com/201005208428/vanangamudi-answers-18-05-2010

LinkWithin

Related Posts with Thumbnails