Tuesday, April 30, 2013

உறவு மேம்பட ஊடல் வேண்டும்

தொடர்பு துவங்கியது
தொடர்பு தொடர்ந்தது
தொடர்பு காதலாக தொடர்ந்தது
தொடர்பு உணர்வோடு ஒன்றியது
தொடர்பு முகநூல் வழியே உருவானது
தொடர்பு உறவாக மாறியது
தொடர்பு கணவன் மனைவியாக சேர்ந்தது
தொடர்பு ஊடலை உட்கொண்டது
ஊடல் உறவை வலுப்படுத்தியது
ஊடல் கட்டியவளுடன் ஓட்டச் செய்தது

கோபம் வந்தது பிரிக்க முயன்றது
காதல் வந்ததை பிரிக்க முயன்றோர் தூபம் போட்டனர்
கோபம் அறிவை மங்கச் செய்தது
ஊடல் உறவை கூட்டச் செய்தது

ஊடல் வேண்டும் உறவோடு ,உணர்வோடு ,
உடலோடு ஒட்டிய மனைவியோடு
உறவு மேம்பட ஊடல் வேண்டும்

Sunday, April 28, 2013

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை நீங்கள் !

எந்தத் தாயும் பெற முடியாத

அழகானக் குழந்தை நீங்கள் !

*******************

தங்கள் கண்களை விட

கருமையான

அழகானக் கண்கள் இல்லை !

எந்தத் தாயும்

தங்களை விட

அழகானக் குழந்தையை

பெற்றதில்லை !

***

தாங்கள்

குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள் ....

தாங்கள் எப்படிப் படைக்கப்பட

விரும்புவீர்களோ

அப்படி !

***

தங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது ...

கஸ்தூரியை விட அதிக மணத்தோடு !

தங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது !

தங்கள் கரம் பெரிய கடலை விட தாராளமானது !

தங்கள் தர்மம் ஓடும் நதியைப் போன்றது !

தங்களைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள்

பொறாமைத் தீயிலேயே வெந்து கொண்டிருப்பவர்கள்

ஆகியோரிடமிருந்து

அல்லாஹ்

தங்களை பாதுகாக்க வேண்டும் !

***

Saturday, April 27, 2013

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்... 

சோமாலிய கடற்கொள்ளையர்கள்...கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்...

    "நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)"

ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பின்னால் ஒரு மாபெரும் சோகக்கதையே இருக்கிறது. ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்?

இந்த பதிவில் இவர்கள் இன்றைய நிலைக்கு வந்த காரணங்களை காணவிருக்கிறோம்...இன்ஷா அல்லாஹ்...

சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்பது மில்லியன் (90 லட்சம்). மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு. இந்திய கடலையும், எடேன் வளைகுடாவையும் (Gulf of Aden) கொண்ட நாடு. 1991 முதல் கடுமையான சிவில் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடு. மீன்பிடி தொழில் தான் அவர்களது முக்கியமான தொழில். அந்த தொழிலுக்கே ஆபத்து வந்தால்?


சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்தன. அதாவது, அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டுவந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும் பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. கொஞ்சநஞ்சமல்ல, பெரிய அளவில் கழிவுகள். ஐ.நா சுற்றுசுழல் அமைப்பு அதிர்ச்சியில் உறைந்தது.                       

Thursday, April 25, 2013

அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்

 பெண்கள் மனதை கவரும் அழகும்,அறிவும்,திறமையும் இருந்தால் நாடு கடத்தப்படலாம்
துபாய் நாட்டை சேர்ந்த உமர் போர்கன் அல் காலா(Omar Borkan Al Gala) ஃ பேஷன் புகைப் படக்கலை கலைஞர் , நடிகர் , கலைஞர் பெண்கள் மனதை கொள்ளை கொள்வார் என்பதால் இவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளார்
 மேலும் ஆங்கிலத்தில் படிக்க
இங்கு கிளிக் செய்யுங்கள் http://blog.asiantown.net/
         picture source

Tuesday, April 23, 2013

இதுவும் கல்யாணம்தான்!

அமைந்தகரையில் கல்யாணம். அமெரிக்க மாப்பிள்ளைக்கு லீவு இல்லை. அதனால் என்ன.. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்திவிடலாம். இண்டர்நெட்தான் இருக்கே?
மணக்கோலத்தில் பூனம் சவுத்ரி நியூயார்க்கில் மதச்சடங்குகள் செய்யும் அந்த அறையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு லேப்டாப். இண்டர்நெட்டில் ஸ்கைப் சாட்டிங் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தன்வீர் அகமது பங்களாதேஷில் ஒரு கல்யாண மண்டபத்தில் உறவினர் புடைசூழ அமர்ந்திருக்கிறார். கல்யாணம் செய்துவைக்கும் மதகுருமார் மந்திரங்களை ஓதுகிறார். அங்கும் ஒரு லேப்டாப், ஸ்கைப் சாட்டிங். அவ்வளவுதான். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சட்டப்படி பங்களாதேஷில் பதிவும் செய்யப்பட்டு விட்டது.

தகவல் தொழில்நுட்பத்தின் லேட்டஸ்ட் புரட்சி இந்த ‘ப்ராக்ஸி திருமணங்கள்’. மணமகனுக்கும், மணமகளுக்கு பல்லாயிரம் மைல் இடைவெளி இருக்கலாம். கல்வி, வேலை என்று பல காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயம். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகமுடியுமா என்ன?

Sunday, April 21, 2013

உரக்க கதறிய ஒலி ஓயும்

உரக்க கதறிய ஒலி ஓயும்
உயர்ந்த வரிகள் உயர்வைத் தரும்

எழுதுகோல் மையற்றுப் போனது
எழுற்சி தரும்  வரிகள் வந்து விழவில்ல

வானம் மேகமற்றுப் போனது
மழை பொழியா பூமி வறண்டுப் போனது

மனதில் எழுற்சி வர வரிகள் நிறைய வேண்டும்
மழைகள் கொட்ட பூமி செழிக்கும்

உணர்ச்சியின் உந்துதல் சப்தத்தை கிளப்பின
உணர்ச்சியும்  ஓசையும் அடங்கிப் போயின

இடிகளின் முழக்கம் பயனளிக்கவில்லை
உரத்த குரல் பயனற்றுப் போகும்

வரிகளின் வேகம் நிலைத்து நிற்கும்
மனதின் வேகமும் தொடர்ந்து செயல்படும்

Friday, April 19, 2013

பிரபலங்கள் வரிசையில் தாருல் இஸ்லாம் பா.தாவூத்ஷா அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நூருத்தீன்

நூருத்தீன்

N.B. அப்துல் ஜப்பார், பல்கீஸ்பீ தம்பதியருக்கு, 1965ஆம் ஆண்டு பிறந்தவர் D.A. நூருத்தீன் அஹ்மத். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் கணினி மென்பொருள் துறையில் பட்டச் சான்றிதழும் பெற்று, அமெரிக்காவிலுள்ள ஸியாட்டில் நகரில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

ஆனந்த விகடன், முஸ்லிம் முரசு, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதில் இவரது எழுத்தார்வம் துவங்கியது. இந்நேரம்.காம் எனும் தமிழ் இணையச் செய்தித் தளத்தில் ‘மனம் மகிழுங்கள்’ என்ற தொடர் வெளியாகி அது வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சத்தியமார்க்கம்.காம் எனும் இணைய இதழில் சஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தோழர்கள்’, ‘தோழியர்’ எனும் தலைப்புகளில் தொடராக எழுதி வருகிறார். இவற்றுள் ‘தோழர்கள்’ முதல் பாகம், மனம் மகிழுங்கள் ஆகியன நூலாக வெளிவந்துள்ளன.


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947 இதழ் சிறிது சிறிதாகப் பதிவாகி வருகிறது. தங்களது பார்வைக்கு - http://www.darulislamfamily.com/di-magazine-t/magazines.html

அப்பக்கத்தில் அக்டோபர் 1947 என்பதை க்ளிக் செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும் -
http://www.darulislamfamily.com/di-magazine-t/118-oct-1947.html

இன்ஷா அல்லாஹ் படித்துப் பாருங்கள்; கருத்திடுங்கள். பிறருக்கும் தெரிவியுங்கள்.

அன்புடன்,
-நூருத்தீன்

Tuesday, April 16, 2013

பிரபலங்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்


'தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். கைபேசி எண் : +91 9944345233 dindiguldhanabalan@yahoo.com

Occupation
ISO 9000 Consultant & Business- ' - திண்டுக்கல் தனபாலன் 
-----------------------------------------------------------------

வலைத்தளம் வலைப்பூ நடத்துவோர், படித்து அறிவைப் பெறுவோர் பேரன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன்  அவர்களை அறியாதோர் யாருமில்லை.
அவர் நடத்தும் வலைப்பூ அவர் ஊரோடு அவர் பெயரையும் இணைத்து இருக்கிறது .
திண்டுக்கல்  ஹல்வாவைப்  போன்று  மிகவும் ருசிதான் .
'திண்டுக்கல் தனபாலன்' இதுதான் அவரது வலைப்பூ திண்டுக்கல் தனபாலன்
பல உண்மையான கருத்துக்கள்..,சிறப்பான தொகுப்புகள் .பலருக்கும் உதவும் என்பதால் பகிர்கிறார் ஆனால் ஒன்றையும் தூக்கிச் செல்லாதவாறு பாதுகாப்பாய் வைத்துள்ளார் காப்பி குடிக்க தருவார் காப்பி மற்றும் பேஸ்ட் பண்ண முடியாது .
இறைவன் அவருக்கு கொடுத்த அறிவை மக்களுக்கு வழங்குகின்றார். 'உங்களில் உயர்ந்தோர் தாம் பெற்ற அறிவை மற்றவருக்கு கற்பிப்பவர் ஆவார்' என்பது நபிமொழி
  'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
 ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13
 உங்களில் உயர்ந்தவர் யார் என கேட்கும் போது 'பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றிவைத்தவர் உங்களில் உயர்ந்தவர்' என நபிகள் நாயகம் நவின்றார்கள்.
 புகழுக்காகவும் ,பொருள் நாடியும் எழுதுவோர் இருந்தும் மக்கள் பயனடையவேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் நம் முன்னோர்கள் .அது மட்டுமல்ல அறிவை பகிர்ந்துக் கொள்ள முடியாமல் ஆன்றோர்களால் இருக்க முடியாது.அறிவு உங்களுடன் அடைந்துக் கிடக்கும்போது ஒரு பயனுமில்லை. அது வெளியே வந்துவிட்டால் பொதுவுடமையாகி விடுகின்றது

Sunday, April 14, 2013

பொற்காலம் திரும்புகிறது

என்னுடைய சீனியர் கருணாகரன் சார் ரெண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது. முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி நேரத்துக்கு அவர் வசிக்கும் ஏரியாவில் கரண்ட் கட். பையனோடு ஜாலியாக விளையாடியிருக்கிறார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுவரில் முயல், நரி, பாம்பு என்று உருவங்களை நிழலாக்கி விளையாடும் விளையாட்டு. கரண்ட் கட் என்று ஒன்று இருக்காவிட்டால் தகப்பனும், மகனும் இதுபோல இப்போது விளையாட வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. டிவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று பெருகிவிட்ட சாதனங்கள் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் இடைவெளி பற்றிய ஓர்மை நமக்கு எந்தளவுக்கு இருக்கிறது?

Saturday, April 13, 2013

ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…

பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !

பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !

படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !

வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !

சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !

 -அதிரை மெய்சா

Tuesday, April 9, 2013

தந்தை…. (கொச்சகக் கலிப்பா)

தந்தை…. (கொச்சகக் கலிப்பா)

அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்னாளின் செல்வமென  எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

முழுமைபெற்ற மாந்தர்களை முற்றுபெற்ற இலக்கியத்தை
பழுதின்றித் தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவின்றி வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்திங்கு தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

Thursday, April 4, 2013

உனைக் காண நெஞ்சம் நெகிழும்

அழகாய் வீடு கட்டினேன் வாரிசுகள் வாழ
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்

தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!

கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க  வெளிநாட்டில் நான்

அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்

உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்

LinkWithin

Related Posts with Thumbnails