Wednesday, October 31, 2012

'வெற்றிகரமான திருமணம் வாழ்க்கையின் ரகசியம்!'

வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில்.நடைபெறுகின்றதா?

வெற்றிகரமான திருமணம் சொர்கத்தில் நடைபெறுகிறது என்ற  காரணம் சொல்லி திருமணத்தில் மனநிறைவு அடையாதவர்கள் மற்றும் மனநிறைவு அடைந்தவர்களும் சொல்வது இயல்பு .
வெற்றிகரமான திருமணம் நமது சரியான முயற்சியில் உள்ளதை நாம் மறந்து விடக் கூடாது. திருமணம் திடீரென்று நடக்கும்  நிகழ்வாக நினைத்து பொறுப்பற்ற நிலையில் இருத்தல் தவறு . முறையான முயற்சி மேற்கொண்டு தகுதியானவர்களை  பொருத்தமாக தேர்ந்தெடுக்க வேண்டும் .பணத்துக்காக அல்லது அழகுக்காக மட்டும் முதலிடம் தராமல் முதலிடம்  குணத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் .திறமை,கருணை ,ஒத்துழைப்பு இவைகள் இதற்கு அவசியமாகின்றது .
 இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் :

முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090மேற்கொண்டு அதன் முக்கியத்தை அறிய இந்த காணொளி காணுங்கள்

Thursday, October 25, 2012

வாழ்த்துகள் To கலைமகள் ஹிதாயா ரிஸ்வி.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கலையோடு கலந்த ராகம்அன்பு ( பூ) மலரும் போதும்
மனதில் நட்பு மணக்கும் போதும்
தென்றலாய் கொஞ்சம் வாசம்
வீசுகிறது..!-

Tuesday, October 23, 2012

சிந்திக்க வைக்கும் சீனா!


 கி. பி. 7வது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் சீனாவில் பரவியது. சீனாவின் ஹுய், உய்கூர், தாதார், கர்கஸ், ஹசாக், உஸ்பெக், துங் சியாங், லாசா, பாவ் ஆன் முதலிய சிறுபான்மை தேசிய இனத்தின் 1 கோடியே 80 லட்சம் மக்களிடையே, ஏகப்பெரும்பாலோர் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றனர். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் கான் சு, சிங் ஹாய், யுன் நான் முதலிய மாநிலங்களிலும் சீனாவின் முஸ்லிம்கள் முக்கியமாக குழுமி வாழ்கின்றனர். தற்போது சீனாவில் 30 ஆயிரத்துக்கு அதிகமான மசூதிகள் அமைந்துள்ளன. 40 ஆயிரம் இமாம்கள் உள்ளனர்.

நபிகள் நாயகம் (கி.பி.570 – 632) மறைந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 651-ல் சீனாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, சில மாநிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களால் வரவேற்பும் பெற்றது. அந்தக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கட்டிலில் இஸ்லாமியர்கள் பங்கெடுத்து திறம்பட நிவாகமும் செய்தனர். சில குறுநில மன்னர்களது படைகளுக்கு தலைமை தாங்கி, வெற்றிகளையும் ஈட்டித் தந்தனர். என்றாலும், இஸ்லாமியர்களின் இந்தப் புகழும் கீர்த்தியும் சீனாவின் ஒரு சில மாகாணங்களோடு முடிந்த கதையாகிவிட்டது..  --- ஜே.எம்.சாலி

முஸ்லிம்கள் மற்றும் சீன இடையிலான தொடர்புகள் மிகவும் ஆரம்ப காலத்திலேயே இருந்தன. அரபு வியாபாரிகள் சீனாவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே பட்டு வியாபாரத்தில்  தொடர்பு வைத்துள்ளனர்   .
சீன முஸ்லீம் திருமண மிகவும் அருமையானது  ஜாதகம் படித்தல் போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளை  தவிர்க்கிறது.  இஸ்லாமிய திருமண சடங்குகள் வாசிக்க சாட்சிகளுடன் திருமணம் நடைபெறும். காதல் திருமணஅடிப்படையாக இருந்தாலும் இஸ்லாமிய வழியில்தான் திருமணம் நடைபெறும்.

சீனாவில் இஸ்லாம்

Saturday, October 20, 2012

வேதம் படித்தோர் வீம்பு செய்தனர் ! வேண்டாத விவாதம் செய்தனர்!

 நீ விரும்பியும் நீ விரும்பாமலும் வந்திருப்பேன் .
உதைத்தேன் சிரித்தேன் உணர்ந்தாய்  மகிழ்ந்தாய்
கொடுத்த இடம் பத்து மாதம் தான் அதற்கு மேல் தரமாட்டாய்
அதிகம் இருந்தால் அறுத்து தள்ளிவிடுவாய்

விழுந்தேன் அழுதேன் அரவணைத்தாய் அடங்கினேன்
வளர்ந்தேன் ஓடினேன் விளையாடினேன்
பறந்து வந்து கொசு ஊசி போட துயருற்றேன்
மருத்துவர் வந்து   ஊசி போட்டும் துயருற்றேன்
போட்ட  ஊசி பயனில்லை மாண்டுபோனேன்

பிறக்கும்போது அழுதேன் போகும்போது அழவைத்தேன்
போட்டு அமுக்க இடம் நாடிச் சென்றனர்
இங்கு இடமில்லை என்றனர் சிலர்
வாழவும் முடியவில்லை  வீழ்ந்தபின் இடம் கொடுக்க நாதியற்றேன்
எனக்காக அழுகின்றார்கள்....எனக்காக சிரிக்கின்றார்கள் ..எனக்காக சண்டையும்  போடுகின்றார்கள்..
பிறக்கும்போது போது அம்மா கயிரை அறுத்துப் போட்டாள்
இறக்கும்போது உற்றார் உறவினர் ஊரார் உறவினை அறுத்துப் போட்டார் 

வேதம் படித்தோர் வீம்பு செய்தனர் .
வேண்டாத விவாதம் செய்தனர்
வேதமும் வேண்டாம் விவாதமும் வேண்டாம் என வேடிக்கைப் பார்த்தனர்
விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடினேன்
விளையாட்டுப்  பொருளாக என்னை வைத்து விளையாடுகின்றனர்

Friday, October 19, 2012

தீன் கலை அறிவியல் கல்லூரி

                                   தீன் கலை அறிவியல் கல்லூரி
             தீன் கலை அறிவியல் கல்லூரி

தீன் கல்லூரி நாகை மாவட்டத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு உள்ள ஒரே கல்லூரி. பெண்களுக்கு தனி வகுப்புகள் உண்டு.

தீன் கல்லூரி இயற்கையான, காற்றோட்டமான, பசுமையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. தீன் கல்லூரி அமைந்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தான் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி அமைந்துள்ளன. மேலும் ஆடுதுறை நெல் ஆராச்சிநிலையம், திருநள்ளாறு மற்றும் நவக்கிரகத்தலங்கள் அருகாமையில் உள்ளன.

தீன் கல்லூரியில் கல்வி பெறுவதன்மூலம் அறிவு மற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு சிறந்த எதிர்கால வாழ்க்கையை நோக்கி நடைபோடலாம். சகமனிதர்களிடையே மகிழ்ச்சியையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வழிகாணலாம்.

வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

மெதுவாக, மென்மையாக,கனிவாக மற்றும் மென்மையாக பேச வேண்டும்.

 “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்;" - குர்ஆன்  31:19.

நடையில்  தாழ்மை வேண்டும்.
உண்பதில் கவனம் வேண்டும். உண்பதனை மெதுவாக ரசித்து அது இறைவன் கொடுத்த அருளாக நினைத்து உண்ணவேண்டும்

 மூச்சு விடுவதிலும் உள்வாங்குவதிலும் முழுமையாக இழுத்து செயல்பட வேண்டும்

போதுமான தூக்கம் கிடைக்க தேவையான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்

உடை உடுத்துவதில் ஒரு 'மிடுக்கு ' தேவை அத்துடன் அது சுத்தமாக இருக்க வேண்டும்

தொடர்பு கொள்பவர் நமக்கு மன நிம்மதி தருபவராய் இருத்தல் நல்லது

பலரிடம் பழக ஒரு சிலரிடம் நெருக்கம் தேவை     

பயமில்லாமல் செயல்படுவதில் பயம் வருவதை தவிர்க்க வேண்டும்

பொறுமையாக வேலை செய்யும்போது பொறுமையும் கவனமும் தேவை

உண்மை பேசுதல் உயர்வை தரும்

நம்பிக்கை அற்ற வாழ்வு உயர்வு தராது.மாறாக கவலைதான் தரும்

முறையான திட்டம் தேவை

நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் அதனை அறிவோடு செலவிட வேண்டும் அத்துடன் சேமிக்கவும் செய்ய வேண்டும்

தியாகம் செய்வது ஏமாரத்தை தவிர்க்கும்

இறை  வழிபாடு அற்ற வாழ்வு நிம்மதி தராது

பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில் நாமும் மகிழ்வோடு இருக்கலாம் மற்றும் அதுவே நமக்கு நம் பிள்ளைகளிடமிருந்து நமக்கு கிடைக்கும் 
 “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்). - குர்ஆன்  14:41

அண்டை வீட்டாரை மதித்து அன்போடு பழக வேண்டும்

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு" என்றார்கள். (புகாரி ஹதீஸ் 2259.)

Wednesday, October 17, 2012

என்றும் என் நினைவில் இன்று அதிகமாக.

என்றும் என் நினைவில் இன்று அதிகமாக.

"நீடூர்  என்றால் சையத் , சையத் என்றால் நீடூர்" இவ்வாறு  அன்புமிகு எனது உடன்பிறந்த அண்ணன் வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் சி. ஈ. முகம்மது சஹீத்  அவர்களைப் பற்றி  பலர் சொல்வார்கள் .

அவர் என்றும் என் நினைவில் இன்று அதிகமாக. மற்றவர்களோடு அவருக்காகவும் 'சுவனத்தைக் கொடு அல்லாஹ்' இறைவனிடம் வேண்டாத நாளில்லை. அவர் ஆற்றிய பணிகள் அதிகம் .தன்னலம் பாராமல் உழைத்தவர். 
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்.,வழக்கறிஞர்.அவரைப் பற்றி அறிய

நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார். அதில்...

"முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு -- அங்கு
சென்று விடத்தான் நினைப்பு"

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!
--------------------------------------
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!"


பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2)

ஹாங்காங்  விமான ஒடும்பாதும் பாதை மிகவும் குறைவான தூரம். உலகில் மிகவும் செயல்பாடு விமானதளத்தில் இதுவும் முக்கிய இடம் வகிக்கின்றது நான் சைகொனிலிருந்து  ஹாங்காங் வந்த போது விமானம் இறங்கும்போது அதனை அனுபவித்தேன் .

பிரயாணத்தில் மற்றொரு அனுபவம் வானத்தில் விமானம் பறக்கும் போது விமானம் குலுங்கியது .விமானத்தில் பல உணவு பொருள்கள் சிதறி  கொட்டின . எனது உடல் சில நொடி மேல் நோக்கி இறங்கியது . காற்றில்லா வெற்றிடத்தில் விமானம் பறக்க முடியாதாம் .மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது .அனுபவித்தேன் 
-------------------------------------------------------------------------------------------------------

That was about old Hong Kong's Kai Tak airport. In 1997 when British leave Hong Kong they build a very big airport for ten billion dollars. They build it at Lantau island full of mountains and green forests. There are three hanging bridges as big as San Fransisco bridge to connect main Hong Kong. Because the British want to spend the reserve money for people and leave with high reputation. That's why Hong Kong still loves the British rule.

 In fact, during the closing time for few weeks Hong Kong people bring their children to show the historic old airport. The above photo was taken at that time.

  ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்..

 

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -1)

 

Sunday, October 14, 2012

காட்சியைக் கண்டு மகிழ்வு! நன்றி உங்களுக்கே!


பார்த்ததை பிடித்தேன்.பிடித்ததை போட்டேன் . நினைத்ததை எழுதினேன்   நெகிழ்வு அடைந்தேன்
எதையாவது நல்லதை செய் உள்ளம் கெடாமல் இருக்க .இதுதான் வயதானோர் வழி .
இளம் வயதினருக்கு ஏதாவது ஒரு நல்ல குறிகோளுடன் கூடிய வெறி இருக்க வேண்டும் .இல்லாமல் இருந்தால் அவர் மனதை நல்வழி படுத்த திருமணம் செய்து வைப்பது உயர்வு .

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்

சிலநாட்களுக்கு முன்பு “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலைப் புகழ்ந்து அந்த பாட்டின் மகிமையை, அப்பாடல் மக்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்பை சிலாகித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். இணையதளத்தில் – குறிப்பாக குழுமங்களிலும், பிற வலைப்பதிவுகளிலும், முகநூல்பக்கங்களிலும் அந்த பதிவுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது.

இதோ அந்த சுட்டி : அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் பாடலில்?

அப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர் என்ற விஷயத்தையும் நாம் அப்பதிவில் கண்டோம். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் அப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.

வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

Saturday, October 13, 2012

அவசியம் பார்க்கவேண்டியதொரு காணொளி

சகோ. நீடூர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது வலைப்பக்கத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஓடையில் நமது Dr.கேவிஎஸ் ஹபீப் முஹம்மது கலந்துகொண்ட நேர்படப் பேசு  நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.http://seasonsnidur.blogspot.in/2012/09/blog-post_19.html

மேலும், அவசியம் பார்க்கவேண்டியதொரு காணொளி

சகோ. ஆளூர் ஷாநவாஸ் பேசிய உரை:


 H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

உங்கள் தேடுதலை எளிமையாக்க சில முக்கிய இணையதளங்கள் ! Here are some links to simplify your search!

இணைப்புகள் - Links

கல்வி களஞ்சியம்

தமிழ் இஸ்லாம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஆங்கிலம் கற்க 
ஆங்கிலம் கற்க (Spoken English)
ஆங்கிலம்-தமிழ் அகராதி
அரபிக் படிக்கலாம்
தமிழ் இணையம் 
தமிழ் டைப்பிங் 
ஆன்லைன் தமிழ் - இங்கிலீஷ் - டிக்ஸ்னரி 
போட்டித் தேர்வுகள் (Competitive Exams) 
தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்
பயனுள்ள மென்பொருட்கள்

FEW GOLDEN WORDS TO HELP YOU IN YOUR JOURNEY..., உங்கள் பயணம் உங்களுக்கு உதவ சில உயர்வான வார்த்தைகள் ...,

FEW GOLDEN WORDS TO  HELP YOU  IN YOUR JOURNEY...,
உங்கள் பயணம் உங்களுக்கு உதவ சில உயர்வான வார்த்தைகள் ...,


Courtesy : Dr.Shankar Raman. M.B.B.S.,M.S., Mayiladuthurai.

Friday, October 12, 2012

வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்...

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (தினமணியில் வெளியானது)

 உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.

தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் வெளியான "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் "இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ "எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.

வாழ்வின் கடைசியில் வருவேன் !


படத்தில் முதலில் இருக்கும் நான் வாழ்வின் கடைசியில் வருவேன்.

என்னிடத்தில் வரும்போது அனைவருக்கும் ஒரே (மௌத் ) பெயர்தான்.

ஒரே வெண்மையான  துணிதான் .பஞ்சு மெத்தை,தலையணை பட்டாடை  இன்னபிற ஏதும் கிடையாது

படத்தின்  முதலில் இருப்பது
பல பேரை சுமந்தது. அது நன்றாக இருக்கவேண்டும் . இதில் சுய நலமுண்டு. என்னையும் அது சுமக்கப் போவது. நீடூர் நெய்வாசல் அழகிய பழைய ஜாமியா பள்ளிவாசலில் உள்ளது .புதிய ஜாமியா பள்ளிவாசலிலும் அதே சுமக்கும் சந்தாக்தான் . பாருங்கள் அதன் உழைப்பை .பள்ளிவாசல் மாறினாலும் எனது உழைப்பை தொடர்வேன் என்று தொண்டு செய்கின்றது . உயர்வான சேவை செய்கின்றது . நல்லவர், கெட்டவர்,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் .பணக்காரன்,ஏழை ஆண் ,பெண் என்ற பாகுபாடு கிடையாது அனைவருக்கும் ஒரே மாதிரி சேவைதான்.


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி ஹதீஸ் 2748.)

Tuesday, October 9, 2012

பல்வகை போர்கள்!யார் இந்த கொடுமையினை செய்தவர் ?

பல்வகை போர்கள்

போரில் பலவகைகள் இருக்கின்றன . இப்பொழுது நடப்பது பொருளாதாரப் போர் . அதைவைத்தே அடுத்த நாட்டின் மீது மறைமுக ஆக்கிரப்பு நடை பெறுகின்றது . தமிழ்நாட்டில் வாழ்வே 'போரா'கிவிட்டது மின்சாரத்தினால்.

போரில் உயர்வானது மனதை அடக்கும் போர் . அனைத்து வகை போரிலும் நன்மை தீமைகள் அடங்கியுள்ளன,

மனதை அடக்கி ஆள்வதிலும் சில தீமைகள் இருப்பினும் அது சில அவசிமாக உள்ளது . சில தேவையற்றதாகவும் இருக்கின்றது . இயற்கை உபாதைகளை அடக்குவதால் பல தீமைகள் வருகின்றன . மிருகம் நினைக்கும்போது சிறுநீர் கழிக்கின்றது.  ஆனால் மனிதன் அதனையும் அடக்கி தொல்லைக்குள்ளாகின்றான்  

Monday, October 8, 2012

தலையில் அடித்து நொறுக்கும் நிலையில் பையன் கதறுகின்றான் "khalas" "நிறுத்துங்கள்" "போதும்"

வீடியோ: ஜெருசலேம் அல் அக்சா அருகில்  இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீன பையனின் தலையை தரையில் அடித்து நொறுக்கும் கொடுமை
தலையில் அடித்து நொறுக்கும் நிலையில் பையன் கதறுகின்றான்  "khalas"   "நிறுத்துங்கள்"  "போதும்"
அந்த பையனின் தாய் கதறுகிறாள் தனது பையன் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை அவன் வீட்டுக்கு வெளியில்  நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தான் அவன் அல் அக்ஸா பள்ளிப் பகுதியில் இருக்கவுமில்லை  பதினைந்து இஸ்ல்ரேலிய படைவீர்கள் அநியாயமாக அவனை கதற கதற அடித்தனர் . நான் அவர்களை தடுக்க முயன்ற போது என் முகத்தில்  எரிவாயு தெளிக்கப்படச் செய்து என்னை அப்புறப்படுத்தி விட்டார்கள்   தனது மகனை  ரஷியன் கூட்டு விசாரணை மற்றும் மேற்கு ஜெருசலேம் தடுப்பு மையத்திற்கு மாற்றிவிட்டார்கள்  என்று கூறினாள்

Sunday, October 7, 2012

நெல்லை சந்திப்பில் அன்புடன் புகாரி பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB


உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்
 Source : http://anbudanbuhari.blogspot.in/

Saturday, October 6, 2012

சக்தியையும் ஆற்றலுள்ள வளங்களையும் விழுங்கும் அமெரிக்கா!

Picture source
உலகில் ஐந்து விழுக்காடுள்ள அமெரிக்க மக்கள் ஐம்பது விழுக்காடு உலகிலுள்ள சக்தியையும் ஆற்றலுள்ள வளங்களையும் விழுங்குகின்றது .சோவியத் ஒன்றியம் தகர்ந்தது அமெரிக்காவின் ஆற்றல் மிக்க தந்திரத்தால் .அதே நிலை அமெரிக்காவுக்கும் வர அதிக காலமில்லை

உன்னையல்லால் யாரைக் கேட்போம்!

இறையோனுக்கு இணையுமில்லை துணையுமில்லை
இறைஞ்சுவோனுக்குஇணையுமுண்டு  துணையுமுண்டு
ஆளுகை செய்கிறவன் அவன்
பேணுதல் செய்கிறவர் மனிதன்

இறையோனாய் இருப்பவன் இறைவன்
இறைஞ்சுவோனாய் இருப்பவன்  மனிதன்
வேண்டுபவனாய் இருப்பவன் இறைவன்
கேட்பவனாய் (வேண்டல் ) இருப்பவன் மனிதன்

இறைவனை நாடி சான் போனால்
நம்மை  நாடி முழம் வருவான்
அவனை நாடி முழம் போனால்
நம்மை  நாடி பாகம் வருவான்

கருணையால் நம்மை பிறக்க வைத்தான்
தொழுகையால் அவனை நேசிக்க வைத்தோம்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்

Friday, October 5, 2012

சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் சந்திப்பு:

சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன்  சந்திப்பு:

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய அவதூறு திரைப்படம் பற்றி கருத்து பரிமாரிக்கொள்வதற்காக சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன்  03 -10 -2012 அன்று காலை 11 .30 மணிக்கு  மக்காப்பள்ளியில்  நேரில் சந்தித்தனர். சந்திப்பில் கலந்து கொண்ட தூதரக அதிகாரிகள் ; டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),மத்தேயு .கே .பேஹ்(அரசியல் &பொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது .அப்போது நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்;

Tuesday, October 2, 2012

நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?

நீங்கள்  நல்லவரா? அல்லது கெட்டவரா?
நான் மிகவும் நல்லவன் .அனைவருக்கும் உதவி செய்வேன் .
உனக்கு பாதகம் செய்தவனுக்கும் ,தொல்லை  கொடுப்பவனுக்கும்  உதவுவீரா?
அது எப்படி முடியும். எனக்கும் ஒரு மனம் ஒன்று உள்ளதே! பழி வாங்க மாட்டேன் ஆனால் உதவ மாட்டேன். துஷ்டனைக் கண்டால் காத தூர போய்விடுவேன்.
அப்படி என்றால் நீங்கள் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு  கெட்டவனில்லையே!  அவனைக் கண்டு ஒதுங்கி விடுவேன்.
உங்கள் செயல் உயர்வாக ஆக அனைவருக்கும் நன்மையை நாடி உதவுவதுதான் உயர்வு. அவிதம் செய்தால் கெட்டவரும் நல்லவராகி விடுவார் அல்லவா!
நல்லவனுக்கு நல்லவனாக இருப்பது  ஒன்றும் புதுமையில்லை . கெட்டவனுக்கும் நல்லவனாக இருப்பதுதான் உயர்வு.
அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார்.

அதுதானே நபி காட்டிய வழியாக உள்ளது .
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி

நாயகத்தின் மீது குப்பையை கொட்டிய மூதாட்டி
ஒரு யூத மூதாட்டி அல்லாஹ்வின் தூதர் அதிகாலை நேரங்களில் சுபஹ் தொழுகை முடித்து திரும்பி வரும்வேளைகளில் அவர் மீது தினமும் தவறாமல் குப்பையைக் கொட்டி மகிழ்ந்திருந்தாள் .ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதனை சகித்துக் கொண்டிருந்தார்கள் ஒருநாள் அந்த மூதாட்டியை காணாது போகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அந்த மூதாட்டியை தேடிச் சென்று பார்த்தார்கள் அந்தமூதாட்டி நலக்குறைவால் படுக்கையில் இருந்தால் அந்தப் பெண்மணிக்கு அல்லாஹ்வின் தூதர் ஆறுதல் கூறி திரும்பினார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.

Adhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.


'பாங்கு' முழங்கி  தொழுகைக்கு அழைத்தல்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.

ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூ

அ . ஆஷிக் அஹ்மத் அவர்களின் எதிர்க்குரல்  தளத்தை பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...


இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை   தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.

தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு  ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த வலைப்பூவின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்

இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்...

பதிவுகளின் பட்டியல்:

Monday, October 1, 2012

இஸ்லாமிய பாடல்கள் - கலந்துரையாடல்

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது.

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன்.

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குரான் ஓதுதல் இசை.
பாங்கு சொல்லுதல் இசை.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.

நன்றி :  {அன்புடன் இஸ்லாம்}அன்புடன் புகாரி

LinkWithin

Related Posts with Thumbnails