Wednesday, November 6, 2013

இன்று ஸர் [Sir]சி.வி.ராமன் பிறந்த நாள்

ஸர் [Sir]சி.வி .ராமன்

இன்று ஸர் [Sir]சி.வி .ராமன் பிறந்த நாள்

மயிலாடுதுறை நகராட்சி பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் தலைமை ஆசிரியர் சேசகிரி அய்யர் அவர்கள் தலைமையில் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்றோம் .அதில் பெங்கலூரில் ஸர் [Sir]சி ,வி .ராமன் அவர்களை சந்தித்தோம். மாணவர் வரிசையில் இரண்டாவதாக நான் (முகம்மது அலி )


ஸர் [Sir] சந்திர சேகர வெங்கட் ராமன் FRS (7 நவம்பர்  1888 – 21  நவம்பர் 1970)
(1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றவர் )

சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார்.

1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

No comments: