Friday, May 27, 2016

எண்ணம் ....!

எண்ணம் ....!

எண்ணங்கள் இரண்டு வகைப்படும்:

1) நேர்மறை எண்ணம்.
2) எதிர்மறை எண்ணம்.

நேர்மறை எண்ணங்கள் சிந்தனையில் ஊடுருவிச் செல்லும்போது அழகிய முறையில் செயல்களை நேர்படுத்தி செம்மையாக உருவெடுக்கச் செய்கிறது. மலர்ந்த முகத்துடன் ஒவ்வொரு நாளும் சகமனிதனை நேர்கொள்ளச் செய்கிறது. நல்ல நட்புகள் தானாகவந்து சேர்ந்திருக்க வழிகோலுகிறது. நல்ல அணுகுமுறைகளை காட்டித்தருகிறது. சார்ந்தோரையும் சுற்றத்தாரையும் கூட நேர்முறையில் சேர்ந்து செல்ல அனுகூலமான சுற்றுச்சூழலை உருவாகித் தருகிறது. தொடர்ந்து நேர்வழியில் செல்லும்போது வெற்றியை நோக்கி செல்ல வழிவகுக்கிறது.

Thursday, May 26, 2016

காலவிதிகளை தாண்டிவிட முடியாது.

Taj Deen
// என்னை அவன் ஏமாற்ற முயன்றாலும்
காலவிதிகளை தாண்டிவிட முடியாது. 
தப்பித்தவனை மீட்டுவிட்டேன்.
வெற்றியே இனியென 
கேக்கலித்த அவன் சிரிப்பே
பாதமாகி போனது அவனுக்கு 
காலடி நிழலாய் மீட்டு 
இருக கட்டிப் போட்ட வலியுமற
அனுபவ மேதன்மைகளோடு
திக்கெட்டும் நாளை பேசப் போகும் 
யாரும் எழுதாக் கவிதை 
எழுதிக் கொண்டிருக்கிறான்!
தப்பிக்க சான்ஸே 
கட்டிப் போடுதலும் 
இனி அவசியமில்லை அவனுக்கு..!
Taj Deen

Mohamed Ali       Taj Deen


Wednesday, May 25, 2016

கூகுள் வழங்கும் "உள்ளூர் வழிகாட்டி"

டந்த  பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை விரித்து வரவேற்று அரவணைக்கிறது. Win-Win Venture. எனக்கு நீ உதவு; உனக்கு நான் உதவுகிறேன் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.
ஒருவர், தாமறிந்த, நம்பகரமானத் தகவல்களை எளிமையான முறையில் அவரே கூகுளில் இணைத்து, பிறருக்கு உதவுவதே  "உள்ளூர் வழிகாட்டி" (Local guide). இதில் அவர் எழுதும் பிரதான (Key words) வார்த்தைகளே கூகுள் இயங்குபொறிக்கு உணவு. உலக மொழிகள் அனைத்திலும் கோலோச்ச, இப் பிரதான வார்த்தைகளை அந்தந்த மொழி பேசும் நம்பிக்கையானவர்களிடமிருந்தே பெற்று வலுவான இணையத்தை கட்டமைக்கிறது கூகுள்.

Tuesday, May 24, 2016

சிந்தனைக்கு வெளிச்சமிடுகிறேன் ...


படத்தை கண்டதும்
கற்பனை கோர்த்த
வார்த்தைகளை வரிகளாக்குகிறேன் ...
Abdul Gafoor

சோகமான சூழலில்
கடலின் ஓரம்
அமர்ந்திருக்கும் சிறுமியின்
ரணமான நெஞ்சினில்
வறுமையின் ஈரம் ....

அது,வேறொன்றுமில்லை…!

Yembal Thajammul Mohammad 

தொடக்கமென்பது 
வேறொன்றுமில்லை;
மூல ரகசிய
முதல் வெளிப்பாடு.
பிறப்பென்பது 
வேறொன்றுமில்லை;
ஆண்டவன் நாடிய
ஆன்மாவின் வருகை.
வளர்ப்பென்பது 
வேறொன்றுமில்லை;
எச்சம் எப்படி
இருக்க வேண்டுமெனப் 
பெற்றோர் கொள்ளும்
பேரவா.

Monday, May 23, 2016

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்
பயமுறுத்துவதற்கல்ல …
பக்குவப்படுத்த வருபவை அவைகள்

சித்தார்த்தனை புத்தனாக்கியது
நித்திரை இரவு

சித்தர்களையும் சூஃபிக்களையும்
முக்திபெற வைத்ததும் இரவுதான்

Saturday, May 21, 2016

கடன் ....!


கடனில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே நமது தாய் தந்தையாரின் கனவாக இருந்தது. கடன் பட்டோர் இடர் பட்டோராகவே கருதப்பட்டனர்.
கடன் அன்பை வளர்க்காது அது வட்டியைத் தான் வளர்க்கும். வட்டி ஒரு பக்கம் வறுமையை பரவலாக பலரிடம் விதைக்கும். மறுபக்கம் 'செல்வதை' குறுகலாக சிலரிடம் குவிக்கும். சமூகத்தில் சமசீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும். இதனாலேயே அமைதி மார்க்கம் இசுலாம் வட்டியை தடைசெய்துள்ளது.
எம் கடன் பணிசெய்து கிடப்பதே என்று சான்றோர் சொல்வர். ஆனால் இப்போது அரசாங்கமே முன்னின்று 'கடன் மேலா' 'கடன் திருவிழா' போன்றவற்றை நடத்தி மக்களை கடனில் மூழ்கடிக்கும் பணியை செவ்வனே செய்கிறது.

தோல்விகளைவிட ஏமாற்றங்கள் வலியது வலி உடையது;

Yasar Arafat
தோல்விகளைவிட ஏமாற்றங்கள் வலியது வலி உடையது; ஆற்றாமைகளுக்கும் கோபங்களுக்கும் இன்னும் வித்தியாசத்தை இனம் காணாமலே இருந்துவிடுகிறீர்கள் இறந்தும் விடுகிறீர்கள்; உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்குமான மெல்லிய கோடுகளை தொட்டுப்பார்க்காமலே பயணத்தை முடித்துவிடுகிறீர்கள் முடிவெடுத்துவிடுகிறீர்கள்; வருத்தத்திற்கும் சோகத்திற்கும் உண்டான எல்லையை வரையறுக்காமலே விலகிவிடுகிறீர்கள் விலக்கிவைத்துவிடுகிறீர்கள்; சந்தேகத்திற்கும் சங்கடத்திற்கும் உண்டான மூச்சுக்காற்றை எறிந்துவிடுகிறீர்கள் எரித்துவிடுகிறீர்கள்;

Monday, May 16, 2016

கால்சியம் மாத்திரைகளும் மாரடைப்பு நோய் ஆபத்தும்: மருத்துவ ஆய்வில் எச்சரிக்கை

ஐ.ஏ.என்.எஸ்

60 வயது கடந்த பெண்கள் குறிப்பாக மாதவிடாய் முடிந்த பெண்கள் அல்லது கருப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஒரு பெரும் பிரச்சினையாகும்.

இதற்காக இவர்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு எலும்பு முறிவு வாய்ப்புகளை குறைக்கின்றனர். ஆனால் கால்சியம் மாத்திரைகள் இவர்களிடத்தில் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நார்வீஜியன் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

65 வயது பெண்கள் தினப்படி கால்சியம் எடுத்துக் கொள்வதன் மூலம் இடுப்பெலும்பு முறிவு மற்றும் பிற எலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டாலும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Tuesday, May 10, 2016

இந்த வலிகளை உணரும் ஒவ்வொரு மனிதர்களும் ....


Saif Saif
காலையில் 10 மணிக்கு மனைவியை லேபர் ரூம் கொண்டு போனாங்க..
வெளியை வாசல்ல நின்னு என்னாச்சு என்னாச்சு என்று பரிதவிப்போடு உள்ளிருந்து வெளியே வருவோரிடமெல்லாம் கேட்டு கேட்டு பொறுமை இழந்து விட்டது மனசு...
மதியம் வந்தது..மெல்ல மெல்ல மாலை வந்தது..இரவும் வந்தது..
வெளியை பரிதவிப்போடு நின்ற கணவனால் என்ன செய்ய முடியும்..
இப்போ டெலிவரி ஆகி விடும் என்று சொல்லி சொல்லியே இரவு ஆகி விட்டது...
இரவு 9 மணி அளவில் மனைவியை வெளியில் அழைத்து வந்தார்கள்..
இரு நர்ஸ்கள் கைதாங்கலாக அழுது அழுது கண்கள் வீங்கி விட்டது..முகமும் வீங்கி விட்டது..
பார்த்த கணவனுக்கு கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை..
இந்த நிலையில் இனியும் வலி தாங்க கூடிய நிலையில் அவள் இல்லை என்பதை புரிந்து கொண்ட கணவன் டாக்டரிடம் ஆப்ரேஷன் செய்யுங்கள் என சொன்ன போது..
"இப்படி ஒரு
கணவனா இப்படி தான் இருக்கும்..பேசாமல் போங்க ஸார் எங்களுக்குத் தெரியும்" என டாக்டர் மறுத்தார்..

Monday, May 9, 2016

கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா?

நீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா? எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.  நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் எந்த ரூட் சிறந்தது? எதில் ட்ராஃபிக் குறைவாய் இருக்கும்? போன்ற தகவல்களுடன் கையைப் பிடித்துக் கொண்டு உதவிக்குரல் கொடுத்து, செல்ல விரும்பிய கடை வாசல்வரை பத்திரமாய்க் கொண்டு சேர்த்துவிடும் கூகுள் மேப்ஸ் ஆப்.
தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்தி வழிகேட்கும் ஒருவருக்கு வழிசொல்லி, அவர் தெளிவு பெற்று நன்றி கூறி விடைபெறும்போது மனம் நிறைவு கொள்பவரா நீங்கள்? எனில் தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.

Saturday, May 7, 2016

புலம்பெயர் வாழ்க்கை!

கனடாவில்
தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் தெரியவில்லை
கன்னடப் பிள்ளைகளுக்குக்
கன்னடம் தெரியவில்லை
தெலுங்குப் பிள்ளைகளுக்குத்
தெலுங்கு தெரியவில்லை
பாகிஸ்தானிக்கு
உருது தெரியவில்லை
பங்களாதேசிக்கு
பெங்காளி தெரியவில்லை
சீனருக்கு
மாண்டரின் தெரியவில்லை

Friday, May 6, 2016

மருந்து மாத்திரை ...


யாத்திரை 
சென்றாலும்
மாத்திரை ....
நாக்கிற்கு திரையிடாதவரை
உடலுக்கு
நித்திரையென்பது அறைகுறை,,,
அந்நோய் இந்நோய்
எந்நோய் வருவதற்கும் காரணமேதுமில்லை,,,
உணவுக்கட்டுப்பாடு
மனக்கட்டுப்பாடற்றால்
வருமே உடல் 
உபாதைகளின் தொல்லை...
சக்கரையும் கொழுப்பும்
அக்கறையற்றால்
ஆங்காங்கே
அழகு தேகமும் புண்கரைபடுமே..
கல்லும் கட்டிகளும் உருவாகி
கரைத்திட வழிசெய்வதாய்கூறி
காசுபணத்தை
காவுகேட்கும் மருத்துவமே..
அளவுக்குமீறினால்
அமிர்தமும் நஞ்சாம் 
அஃதே மருந்து

Thursday, May 5, 2016

படிச்சு என்ன செய்யப்போறே?

படிச்சு என்ன செய்யப்போறே?
டாக்டராகணும், கலெக்டராகணும்.
இப்படி குழந்தைகள் சொன்னா நாம பெருமைப்படறோம். அதையே உசுப்பி உசுப்பி குழந்தைகள் மனசில் விதைச்சுடறோம்.
டாக்டராகறதும் கலெக்டராகறதுமே முக்கியம் இல்லை. நல்ல மனிதர்கள் ஆகணும். அதை குழந்தைகளுக்கு சொல்ல முடியாவிட்டாலும் டாக்டருக்குப் படிச்சே ஆகணும், கலெக்டருக்குப் படிச்சே ஆகணும்னு விதைக்க வேண்டாமே... உலகில் எல்லாரும் டாக்டர்கள் ஆகிவிட முடியாது. தேவையும் இல்லை. டாக்டர் படிப்புதான் உலகிலேயே சிறந்த படிப்போ அல்லது டாக்டர்கள்தான் உலகில் உன்னத மனிதர்களோ இல்லை. அதுவும் ஒரு படிப்பு, அவ்வளவுதான்.
ஒரு துறையில் ஆர்வம் இருந்தால் அதில் முனைப்புக் காட்ட வேண்டும்தான். அதே சமயத்தில் மாற்றாக வேறொரு துறையையும் தேர்வு செய்ய, மனதளவில் தயார் செய்து கொள்ள குழந்தைகளுக்கு நாம்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சொல்லணும்னு தோணிச்சு.

Shahjahan R
(புதியவன் )

Monday, May 2, 2016

முயற்சி செய்

-முஹம்மது முஸம்மில்.

முயற்சி செய்
விழுந்தாலும் எழு
தடுக்கினாலும் தாண்டு
வழுக்கினாலும் முன்னேறு
வெற்றியெனும் கனல்
கருவிழியில் எறியட்டும்
எதிர்வரும் தடைகளை
பார்வைக் கொண்டு பொசுக்கட்டும்
தோல்வியெல்லாம் தோல்வியல்ல
வெற்றியதுவும் தூரமில்லை
சூரியன் மறைந்தால் - அது
மறைந்ததாகாது
மீண்டும் உதிக்குமென்பதை -உன்
அறிவும் மறவாது

LinkWithin

Related Posts with Thumbnails