Tuesday, December 18, 2018

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது


அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
-குர்ஆன்:17:23.

குர்ஆன்17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:
 ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

சிற்றின்பமும் ... பேரின்பமும்....*

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?

Thursday, December 13, 2018

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்

by சேயன் இப்ராகிம்

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்


வடஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) வந்தவாசிக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. 22.01.1760 அன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப்போரில் அயர்புட் தலைமையிலான ஆங்கிலேயக் கம்பெனிப்படை, தாமஸ் ஆர்தர் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது. 
இப்போரின் மூலம் இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. அவர்கள் படிப்படியாக இந்தியாவிலிருந்த அனைத்து பெரிய, சிரிய அரசர்களை வென்று முழு இந்தியாவையும் தங்களது குடையின் கீழ் கொண்டு வந்தனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் தவிர, தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் இந்நகருக்குப் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியுள்ளனர். இந்நகரில் பிறந்த சமூதாயச் சேவையாளர் ஜனாப் கே.ஏ. வகாப் அவர்களைப்பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.

Who will cry when you die in Tamil

Wednesday, December 12, 2018

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

LinkWithin

Related Posts with Thumbnails